Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12 APR, 2025 | 01:30 PM

image

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார்.

சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை  தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று சனிக்கிழமை (12) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பாடசாலையொன்றின் சிற்றூழியராக பணியாற்றும் இந்த நபர் விளையாட்டு ஒன்றின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார். இவரிடம் விளையாட்டுப் பயிற்சி பெற்றுவந்த சிறுவர்களில் 16 பேரை அவர் பாலியல்  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த சிறுவர்கள் 10 - 13 வயதுக்குட்டவர்கள் என்றும் இவர்களை பயிற்றுவிப்பாளர் மலசலகூடத்துக்கு அழைத்துச் சென்று  துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலரது நடத்தைகளில் மாற்றமும் கல்வியில் திடீர் பின்னடைவும் அவதானிக்கப்பட்ட நிலையில், சிறுவர்கள் இருவர் மூலமே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு சிறுவர்கள் உட்படுத்தப்பட்ட விடயம் வெளியே தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து, பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

கடந்த புதன்கிழமை பாடசாலைக்குச் சென்ற பொலிஸார் சிறுவர்களை மாலை 4 மணி வரை அறை ஒன்றில் அடைத்து வைத்ததாகவும் அவர்களை பொலிஸ் வாகனத்தில் பொலிஸ் நிலையம் வரை கொண்டுசெல்ல முற்பட்டபோது  சிறுவர்கள் பயத்தில் அழுததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

மாலை நான்கு மணி வரை மதிய உணவின்றி சிறுவர்களை பொலிஸார் பாடசாலையின் அறையில் அடைத்து வைத்ததையடுத்து, பெற்றோர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர். 

“பிள்ளைகள் குற்றவாளிகள் அல்ல, அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், எனவே அவர்களின் மன நிலையை புரிந்துகொண்டு பொலிஸார் நடந்துகொள்ள வேண்டும்” என பொலிஸாருக்கு வலியுறுத்தியதோடு விசாரணைகளுக்காக  பிள்ளைகளை தாமே பொலிஸ் நிலையத்துக்கு  அழைத்து வருவதாகவும் பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்க முடியாது எனவும் பெற்றோர்கள் தெரிவித்த பின்னர் பொலிஸார் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் பெற்றோர்களின் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அத்தோடு, சிறுவர்களின் மன நிலை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து பெற்றோர் இந்த பிரச்சினையிலிருந்து தாமாக விலகிக்கொள்ளும் வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/211887

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அனுரகுமார திசநாயக்கவின்ட ஆட்சி இப்ப‌ என்பதால் நீதி அந்த மாதிரி இருக்கும் என்று பிரசாரம் செயய்கின்றார்களே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விரைந்து செயற்பட்ட கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

அனுரகுமார திசநாயக்கவின்ட ஆட்சி இப்ப‌ என்பதால் நீதி அந்த மாதிரி இருக்கும் என்று பிரசாரம் செயய்கின்றார்களே

பட்டலந்த வதை முகாம் மட்டுமே விசாரணை செய்யப்படும்..

  • கருத்துக்கள உறவுகள்

487402034_1085094726987234_2685040689445

அட... இந்த அலன்டீலன், ஆபிரகாம் சுமந்திரனின் கட்சியாம்.

உப்பிடியானதுகளின் புத்தி, அப்பிடித்தானே போகும். கறுமம் பிடிச்சதுகள். 😡

// Alan என்று அழைக்கப்படும் திரு. அலன்டீலன் கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் 16 மாணவர்களுக்கு எதிராக இடம் பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் அங்கத்தவர். குற்றச்சாட்டின் பாரதூர தன்மையை கருத்திற் கொண்டு அவர் உடனடியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்படுகிறார். //

யாழ்ப்பாணம்.com

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பார் சிறியும் உந்த கட்சியின் செயல்படா தலைவர்தானே🤣.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அதிரடி : தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்

M A Sumanthiran Sri Lanka ITAK

By Raghav 5 hours ago

இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட கிளையின் அங்கத்தவரான சந்தியோ அலன்டீலன் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரினால் வெளியிடப்பட்டள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  “கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் சம்மந்தமான விடயத்தில் நீங்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்.

இலங்கை தமிழரசுக் கட்சி

இந்த குற்றச்சாட்டுக்கள் மிகவும் மோசமானதொன்று. ஆகையால் நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை கட்சி உறுப்புரிமையில் இருந்து தாங்கள் உடனடியாக இடைநிறுத்தப்படுகிறீர்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமந்திரன் அதிரடி : தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர் | Alandeelan Suspended From Itak Party Membership

கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் சந்தியோ அன்டீலன் அண்மையில் கைது செய்யப்பட்டார்

இதனடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் அங்கத்தவரான அலன்டீலனை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://ibctamil.com/article/alandeelan-suspended-from-itak-party-membership-1744793493

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

சுமந்திரன் நடவடிக்கையாவது எடுத்துள்ளார்…

மிக்சர் மாமா பார் சிறி….

ஆழ்ந்த உறக்கத்தில் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சுமந்திரன் நடவடிக்கையாவது எடுத்துள்ளார்…

491328779_1085307466965960_5959988586638 images?q=tbn:ANd9GcT1qmIPkXp-XuIFTkiQVLe

அலன்டீன் மீது சுமந்திரன் மேற்கொண்ட நடவடிக்கைகளை, சுகிர்தன், சயந்தன் மீது மேற்கொள்ளாமை ஏன்?

திருமணத்தின் பின் ஒரு பெண்ணை கள்ளக்காதல் மூலம் ஏமாற்றி அந்த பெண்ணின் வீட்டில் உணவு உண்டு, அவளுடன் இன்பமடைந்து அந்த பெண்ணுக்கு ஒரு பிள்ளையை குடுத்து பின் அந்த பெண்ணை ஏமாற்றி அந்த பெண்ணை தற்கொலை செய்ய வைத்த சுமந்திரனின் வலதுகையான சுகிர்தன் ஏன் இதுவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை?

சுகிர்தனும் பொலீஸால் கைது செய்து விசாரணை செய்யப்பட்டவன் தானே?

அதே போல் மருதனார் மடத்தில் உள்ள விடுதியில் சிங்கள விபச்சாரிகளை கொண்டுவந்து சரக்கடித்து மக்களால் சம்பவ இடத்தில் வைத்தே பிடித்து நையப்புடைக்கப்பட்ட சுமந்திரனின் நெருங்கிய சகா பிரகாசை ஏன் இதுவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை?

குறித்த விபச்சார வழக்கு தற்போதும் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது.

லிப்ஸ்ரிக் புகழ் சயந்தன் சாவகச்சேரியில் ஒரு பெண்ணை வானில் கடத்தி கற்பழிக்க முயற்சித்து மக்களால் பிடிக்கப்பட்டு அடித்து துரத்தப்பட்ட கள்ளன். இதே சயந்தன் கோபிகா என்ற பெண்ணை தன்னோடு வரச்சொல்லி அழைத்த Screenshot ஆதாரங்கள் சமுகவலைத்தளங்களில் 2016 ஆம் ஆண்டுகளில் வெளிவந்திருந்தது. இப்படியாக கேவலம் கெட்ட நபர்களுக்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

சுகிர்தனுக்கும், சயந்தனுக்கும் அப்போது மாவை சேனாதிராசா நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது அதை சுமந்திரன் வேண்டாம் என்று தடுத்திருந்தார்.

இப்படியான சமூக விரோதிகளை கட்சியில் காப்பாற்றி வைத்திருக்கும் சுமந்திரன் இப்போதாவது இந்த பொம்பிளை கள்ளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா?

யாழ்ப்பாணம்.com

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ஏன் எண்டால் சுமந்திரன் தன்ர ஆட்களுக்கு கவர் எடுக்கும் பச்சை கள்ளன்.

நிற்க…

இதெல்லாம் நடந்த போது மிக்சர் மாமா பார் சிறி அதே கட்சியில் பதவியில் இருந்தார்.

இப்போ தலைவர்?

அவர்தான் யோகியன் ஆச்சே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

ஐயகோ…

மிக்சர் மாமா பார் சிறியும் பச்சை கள்ளனா!!!

ஓட்டுமடம்.com

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சுமந்திரன் நடவடிக்கையாவது எடுத்துள்ளார்…

மிக்சர் மாமா பார் சிறி….

ஆழ்ந்த உறக்கத்தில் 🤣

அந்தக் கள்ப்றிட்டிண்ட தோஸ்துதானாம் பார் சிறி! அப்ப மாமா உறக்கத்திலதானே இருக்கோணும்!👀

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

ஏன் எண்டால் சுமந்திரன் தன்ர ஆட்களுக்கு கவர் எடுக்கும் பச்சை கள்ளன்.

நிற்க…

இதெல்லாம் நடந்த போது மிக்சர் மாமா பார் சிறி அதே கட்சியில் பதவியில் இருந்தார்.

இப்போ தலைவர்?

அவர்தான் யோகியன் ஆச்சே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

ஐயகோ…

மிக்சர் மாமா பார் சிறியும் பச்சை கள்ளனா!!!

ஓட்டுமடம்.com

சுத்துமாத்து கள்ளன் சுமந்திரனும்,

அவரின் அல்லக்கை சி.வி.கே. சிவஞானமும் தமிழரசு கட்சியின் பின்கதவால் வந்து..

செயலாளர், தலைவர் பதவியில் இருக்கும் போது...

பதவி எதுவும் இல்லாமல் இருக்கும் ஸ்ரீதரன், கட்சியில் இருந்து ஒருவரை நீக்கும் அதிகாரத்தை எப்படி பெற்று இருக்க முடியும். ஒரு கட்சியின் நடை முறை எப்படி இருக்கும் என்பதைக்கூட அறியாதவரா நீங்கள். தட்டசசு கிடைத்தால்... எதையாவது எழுதி விட்டுப் போவதா?

இனியாவது நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை எழுதப் பாருங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாலி said:

அந்தக் கள்ப்றிட்டிண்ட தோஸ்துதானாம் பார் சிறி! அப்ப மாமா உறக்கத்திலதானே இருக்கோணும்!👀

ஓ….அப்படியா சங்கதி…

பார் சிறி ஆட்கள் இதில் குறுக்கு மறுக்கா ஓடும் போதே நினைத்தேன்…

இந்த அலண்டீலன் பார் சிறியின் ஆளாக இருக்கும் என…

1 minute ago, தமிழ் சிறி said:

சுத்துமாத்து கள்ளன் சுமந்திரனும்,

அவரின் அல்லக்கை சிவஞானமும் தமிழரசு கட்சியின் பின்கதவால் வந்து..

செயலாளர், தலைவர் பதவியில் இருக்கும் போது...

பதவி எதுவும் இல்லாமல் இருக்கும் ஸ்ரீதரன், கட்சியில் இருந்து ஒருவரை நீக்கும் அதிகாரத்தை எப்படி பெற்று இருக்க முடியும். ஒரு கட்சியின் நடை முறை எப்படி இருக்கும் என்பதைக்கூட அறியாதவரா நீங்கள். தட்டசசு கிடைத்தால்... எதையாவது எழுதி விட்டுப் போவதா?

இனியாவது நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை எழுதப் பாருங்கள்.

அப்போ மிக்சர் மாமா எந்த அதிகாரத்தில் தமிழரசு கட்சி சார்பாக கஜனுடன் பேச போகிறார்?

மிக்சர் மாமா இந்த காமுகர்களினை எதிர்த்து ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறாரா?

அறிக்கை விடும் அதிகாரம் கூடவா இல்லை🤣.

இப்படி பதவி கிடைத்தும் வாழாவெட்டியாக இருப்பதற்கு மிக்சர் மாமா ஏன் அரசியலில் இருக்க வேண்டும்.

மிக்சர் மாமாக்கு ரோசம் இருந்தால் ஒன்றில் கட்சிகை கைக்குள் கொண்டு வரவேண்டும் அல்லது வெளியே போக வேண்டும்.

சுமந்திரனையே வெல்ல முடியவில்லை, நஞ்ச பிஸ்கோத்து சிவஞானத்கிடம் பதவியை பறிகொடுத்த மிக்சர் மாமா சிங்களவனிடம் என்னத்தை கிழிக்கப்போறார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

நசுக்கிடாக்கள்ளன் பார்சிறி இதை நசுக்கி அமுக்கிடலாம் எண்டு பார்த்தா சுமந்திரன் குறுக்கமறுக்க ஓடி காரியத்தை கெடுத்திட்டாராம் எண்டு ஊரில பேசிக்கொள்கிறார்கள்..

சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

பொலிஸார் சிறுவர்களை மாலை 4 மணி வரை அறை ஒன்றில் அடைத்து வைத்ததாகவும் அவர்களை பொலிஸ் வாகனத்தில் பொலிஸ் நிலையம் வரை கொண்டுசெல்ல முற்பட்டபோது  சிறுவர்கள் பயத்தில்அழுததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இது போலீசாரின் காட்டுமிராண்டித் தனமான செயல். பாதிக்கப்பட்ட சிறுவர்களை மேலும் துன்புறுத்திய போலீஸ் மீது மனித உரிமை அமைப்புகளிடம் முறைப்பாடு செய்வதன் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தான் ஒரு தடவை விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட விடயத்தையே பாராளுமன்றம் வரை கொண்டு சென்று மூக்கால் அழுத சிறிதரன் குறைந்தபட்சம் கண்டன அறிக்கை ஒன்றையாவது உடனடியாக வெளியிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்த தொகுதியிலேயே பார் அனுமதியை ஊழல் மூலம் பெற்று கொடுப்பது…

சிறுவர் துஸ்பிரயோகிகளுக்கு கவர் எடுப்பது என ஊத்தை வேலை பார்க்கிறார் பார் சிறி.

சுமந்திரனின் சகபாடிகள் மீது கூட பருவம் வந்த பெண்கள்தான் புகார் கூறி உள்ளனர் என நினைகிறேன்.

இதி சிறுவர் நலன் சம்பந்தபட்ட விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வீட்டுக்கட்சிக்காரர்களின் கைங்கைரியம் தான். வெற்றி பெறும்போது ஒன்றாக நிற்பார்கள் இப்படியான பிரச்சினைகள் வரும் போது அவர் அவற்ற ஆள் இவற்ற ஆள் என்று குற்றஞ்சாட்டுவார்கள்.தங்கள் வீட்டுப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதவர்கள் நாட்டுப்பிரச்சுனையை எப்படித்தீர்ப்பார்கள்?அது சரி சுகவீனம் காரணமாக தமிழரசுக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி அந்தப்பதவியை சுமத்திரனுக்கு கொடுத்த சத்தியலிங்கம் எப்போது பாராளுமன்ற பதவியிலிருந்து விலகி சுமத்திரனை பாலாளுமன்றத்திற்கு அனுப்புவார்?

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புலவர் said:

எல்லாம் வீட்டுக்கட்சிக்காரர்களின் கைங்கைரியம் தான். வெற்றி பெறும்போது ஒன்றாக நிற்பார்கள் இப்படியான பிரச்சினைகள் வரும் போது அவர் அவற்ற ஆள் இவற்ற ஆள் என்று குற்றஞ்சாட்டுவார்கள்.தங்கள் வீட்டுப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதவர்கள் நாட்டுப்பிரச்சுனையை எப்படித்தீர்ப்பார்கள்?அது சரி சுகவீனம் காரணமாக தமிழரசுக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி அந்தப்பதவியை சுமத்திரனுக்கு கொடுத்த சத்தியலிங்கம் எப்போது பாராளுமன்ற பதவியிலிருந்து விலகி சுமத்திரனை பாலாளுமன்றத்திற்கு அனுப்புவார்?

உள்ளூராட்சி தேர்தல் முடிந்து, மாகாணசபைத் தேர்தல் வரும் போது… சுமந்திரன், சத்தியமூர்த்திக்கு இடையில் யாருக்கு என்ன பதவி என்ற, புடுங்குப்பாடு சூடு பிடிக்கும்.

சத்தியமூர்த்தியின் செயலாளர் பதவியை… சுமந்திரன் ஆட்டையை போட்ட பின், சத்தியமூர்த்தியின் பேச்சு, மூச்சையே காணவில்லை. அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டு விட்டார் போலுள்ளது.

என்ன செய்வது… சத்தியமூர்த்தி முன்பே சுமந்திரனின் சுத்துமாத்து குணம் தெரிந்து உசாராக இருந்திருக்க வேண்டும். கோட்டை விட்டு விட்டார். அனுபவிக்கட்டும்.

Edited by தமிழ் சிறி

அப்பாவி சிறுவர்கள் பாலியல் வதைக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாலியல் வதைக்குள்ளாகிய சிறுவர்களின் உளவியலிலும், ஆரோக்கியத்திலும் ஏற்படும் தாக்கம் அகல நீண்ட காலம் எடுக்கும். சிலருக்கு அதுவே ஆறாத ரணமாக வாழ் நாள் பூராவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் நாங்கள் அந்த சிறுவர்களைப் பற்றி பெரியளவில் அக்கறைப்படாமல், குற்றம் செய்த காமுகன் எந்த கட்சியில் இருந்தான், எந்த கட்சிக்காரன் அதை மறைத்தான் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றோம். நாங்கள் வெறுக்கும் கட்சியையும் கட்சி உறுப்பினர்களையும் இதனையே சாக்காக வைத்து தூற்றுகின்றோம்.

உண்மையான அக்கறை எமக்கு இருக்கின்றதா என யோசிக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.