Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!

17 Apr 2025, 5:18 PM

priyanka deshpande marraige hits social media

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

GoukWFzW4AAbmDe-edited-1024x576.jpeg

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கர்நாடகாவில் பிறந்தவரான இவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.

அதனைத் தொடர்ந்து தனது நீண்டநாள் நண்பரான பிரவீன் குமாரை கடந்த 2016ஆம் ஆண்டு மணந்தார். எனினும் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிரவீன் குமாரை விவாகரத்து செய்தார்.

GoukWGHWgAADx6R-edited-1024x576.jpeg

விஜய் டிவியின் கலக்க போவது யாரு, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊம் சொல்றியா உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதில் பதிந்தார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்று, அதில் மக்களின் ஆதரவுடன் இரண்டாவது வெற்றியாளர் ஆனார்.

WhatsApp-Image-2025-04-17-at-16.25.53_76

இதற்கிடையே பிரியங்காவின் அம்மா, தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்காக மேட்ரிமோனியில் மாப்பிள்ளை பார்ப்பதாக கூறி வந்துள்ளார். ஆனால் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் தான் நேற்று தனது காதலரான வசி என்பவரை திடீரென திருமணம் செய்துள்ளார். டிஜே மற்றும் ஈவெண்ட் மேனஜராக பணியாற்றி வருகிறார் வசி. இருவீட்டு குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி விமரிசையாக நடந்து முடிந்துள்ளது.

GouCYp9acAAwA9J-edited-1024x576.jpeg

இந்த திருமண விழாவில் அமீர் – பாவனி ஜோடி, நிரூப், சுனிதா, அன்ஷிதா உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சமீபத்தில் தன்னுடைய பக்கெட் லிஸ்ட் பற்றி பிரியங்கா அளித்த பேட்டியில், “பிக் பாஸ் போக வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது.. இனி நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.. என்னை என்னுடைய கணவர் தாங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

தற்போது அவரது திருமணம் நடைபெற்ற நிலையில், அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து குவிந்து வருகிறது.

https://minnambalam.com/priyanka-deshpande-marraige-hits-social-media/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

டிஜே மற்றும் ஈவெண்ட் மேனஜராக பணியாற்றி வருகிறார் வசி

90களின் நடுப்பகுதியில் இருந்து நம்ம கொண்டாட்டங்களின் டிஜேயாக ட்ரிங்கோ வசி இருந்தவர்.. 😃

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் . ....... உங்களின் எண்ணப்படி நிறைய குழந்தைகள் பெற்று நலமுடன் நீடுழி வாழ்க ......... ! 💐

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண வாழ்த்து.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

90களின் நடுப்பகுதியில் இருந்து நம்ம கொண்டாட்டங்களின் டிஜேயாக ட்ரிங்கோ வசி இருந்தவர்.. 😃

இவரா ..அவரு ....கூட்டி கழித்துப் பார்த்தால் ...பயில்வான் சொன்னதுபோல் 60 வயதும் வரு ...☹️

  • கருத்துக்கள உறவுகள்

492143837_700050022419136_79879516354741

இந்திய தொலைக்காட்சி பிரியங்காவை கைபிடித்தார் சம்பந்தர் ஐயாவின் மருமகன்!

பிரபல இந்திய விஜே தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் வசி என்பவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரியங்காவின் கணவர் வசி இலங்கையைச் சேர்ந்தவர் என்ற தகவல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழராவார். இவர் இலங்கை திருகோணமலையை சேர்ந்தவர்.

மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகனாவார்.

அதுமட்டுமில்லாது, இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியும் நடத்தி வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் இலங்கையில் கலைநிகழ்ச்சிகளுக்காகச் சென்று வருவது வழக்கம்.

அப்படிச் சென்று வந்த தருணங்களிலேயே பிரியங்காவுக்கு வசி நண்பராக அறிமுகமாகி, அந்த நட்பே காதலாகி திருமணத்தில் முடிந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

இவரின் முதல் கணவர்: இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்திற்கு மாகபா ஆனந்த் சென்றிருந்தார். இவர்களின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் சந்தோஷமாகத்தான் சென்றுள்ளது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டே பிரிந்து விட்டார்கள் என கூறப்படுகிறது.

அவர்கள் அதற்கு முன்னர் இருந்தே தனியாக இருந்து வந்துள்ளார்கள். அதனால்தான், பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஃபேமிலி வாரத்தில் நடத்தப்படும் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது பிரவீன் குமார் கலந்து கொள்ளவில்லை. பிரியங்காவின் அம்மாவும் தம்பியும் மட்டுமே கலந்து கொண்டனர்.

Monisha Kokul

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18/4/2025 at 15:53, alvayan said:

இவரா ..அவரு ....கூட்டி கழித்துப் பார்த்தால் ...பயில்வான் சொன்னதுபோல் 60 வயதும் வரு ...☹️

நரைய வைத்து வயதை கணிக்கக்கூடாது. 😀

இப்பவெல்லாம் நரை தான் பாஷனாம்....🥰

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

நரைய வைத்து வயதை கணிக்கக்கூடாது. 😀

இப்பவெல்லாம் நரை தான் பாஷனாம்....🥰

பிறந்த திகதிகள் முந்தி பிந்தி. பதிவாதல். தான் நரையை வைத்து வயதைக். கணிக்கப்படுகின்றன 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

492143837_700050022419136_79879516354741

இந்திய தொலைக்காட்சி பிரியங்காவை கைபிடித்தார் சம்பந்தர் ஐயாவின் மருமகன்!

பிரபல இந்திய விஜே தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் வசி என்பவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரியங்காவின் கணவர் வசி இலங்கையைச் சேர்ந்தவர் என்ற தகவல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழராவார். இவர் இலங்கை திருகோணமலையை சேர்ந்தவர்.

மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகனாவார்.

அதுமட்டுமில்லாது, இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியும் நடத்தி வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் இலங்கையில் கலைநிகழ்ச்சிகளுக்காகச் சென்று வருவது வழக்கம்.

அப்படிச் சென்று வந்த தருணங்களிலேயே பிரியங்காவுக்கு வசி நண்பராக அறிமுகமாகி, அந்த நட்பே காதலாகி திருமணத்தில் முடிந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

இவரின் முதல் கணவர்: இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்திற்கு மாகபா ஆனந்த் சென்றிருந்தார். இவர்களின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் சந்தோஷமாகத்தான் சென்றுள்ளது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டே பிரிந்து விட்டார்கள் என கூறப்படுகிறது.

அவர்கள் அதற்கு முன்னர் இருந்தே தனியாக இருந்து வந்துள்ளார்கள். அதனால்தான், பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஃபேமிலி வாரத்தில் நடத்தப்படும் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது பிரவீன் குமார் கலந்து கொள்ளவில்லை. பிரியங்காவின் அம்மாவும் தம்பியும் மட்டுமே கலந்து கொண்டனர்.

Monisha Kokul

அட ..நம்மாளு...பிரியங்கா நமக்கு சம்பந்தி ஆகிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, alvayan said:

அட ..நம்மாளு...பிரியங்கா நமக்கு சம்பந்தி ஆகிட்டார்

ரம்பா, விஜய், பிரியங்கா… என்று, எமக்கு ஏகப்பட்ட சம்பந்திகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வசி அண்ணனுக்கு ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்! (அண்ணனுக்கு புரிந்திருக்கும்)😂

மற்றும்படி என்னுடைய பழைய பல்லவியைத்தான் பாடவேண்டிக்கிடக்கு!

வீணை என்றால் அதனை மீட்டவேண்டும்!

குழல் என்றால் அதனை ஊதவேண்டும்!

உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும்!😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kandiah57 said:

பிறந்த திகதிகள் முந்தி பிந்தி. பதிவாதல். தான் நரையை வைத்து வயதைக். கணிக்கப்படுகின்றன 🤣

வணக்கம் கந்தையர்! ஒரு வயதுக்கு பிறகு 10 வயது வித்தியாசம் கூட பெரிய வித்தியாசமாக தெரியாது.இப்போது சிறு வயதில் ஒரு வயதிற்கும் பத்து வயதிற்கும் இடையில் பெரிய வித்தியாசமாக தெரியும். அதே நபர்கள் 70ம் 80மாக இருக்கும் போது பெரிய வித்தியாசம் தெரியாது. cool

நீங்கள் சம்பந்தமே இல்லாமல் பழையதுகளை வைச்சு கழுத்தறுப்பவர் போல் தெரிகின்றது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ரம்பா, விஜய், பிரியங்கா… என்று, எமக்கு ஏகப்பட்ட சம்பந்திகள்.

இவ்வளவு தானா????

30 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சம்பந்தமே இல்லாமல் பழையதுகளை வைச்சு கழுத்தறுப்பவர் போல் தெரிகின்றது. 😂

இல்லையே,......நானும் இந்த திருமண சங்கத்தில். பதிவு செய்யலாம் என்று இருந்தேன் நீங்கள் என்னை பற்றி இப்படி எழுதி எல்லாவற்றையும் கெடுத்து விட்டீர்கள் 😀

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

அதுமட்டுமில்லாது, இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியும் நடத்தி வந்திருக்கிறார்.

அது வசியின் தமையனின் கொம்பனி .

14 hours ago, தமிழ் சிறி said:

இவரின் முதல் கணவர்: இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்திற்கு மாகபா ஆனந்த் சென்றிருந்தார். இவர்களின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் சந்தோஷமாகத்தான் சென்றுள்ளது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டே பிரிந்து விட்டார்கள் என கூறப்படுகிறது.

வசிக்கும் குடும்பம் ஒன்று இருந்து டைவேர்ஸ் ஆகி விட்டது .இதற்க்கு மேல் இங்கு வேணாம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அது வசியின் தமையனின் கொம்பனி .

வசிக்கும் குடும்பம் ஒன்று இருந்து டைவேர்ஸ் ஆகி விட்டது .இதற்க்கு மேல் இங்கு வேணாம் .

தலை சுத்துது..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ரம்பா, விஜய், பிரியங்கா… என்று, எமக்கு ஏகப்பட்ட சம்பந்திகள்.

சரத்குமாரின் மனைவி ராதிகாவும் இலங்கை தானே.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

சரத்குமாரின் மனைவி ராதிகாவும் இலங்கை தானே.

அவ சம்பந்தி என்பதில் இரட்டை சந்தோசம் பாருங்க..

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

சரத்குமாரின் மனைவி ராதிகாவும் இலங்கை தானே.

அட... ஆமா, நம்ம ராதிகா சித்தியை மறந்து விட்டேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

இவ்வளவு தானா????

newproject83copy3-1711345633.jpg

உங்களின் கனவுக் கன்னி ராதிகாவை மறந்து விட்டேன். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

சரத்குமாரின் மனைவி ராதிகாவும் இலங்கை தானே.

இன்னும் அவ கனவுக்கன்னியாக இருப்பதால் பிரியன் அவரை மறக்கவில்லை . .......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

அது வசியின் தமையனின் கொம்பனி .

வசிக்கும் குடும்பம் ஒன்று இருந்து டைவேர்ஸ் ஆகி விட்டது .இதற்க்கு மேல் இங்கு வேணாம் .

bayilvan-ranganathan-images-10-156542025

பயில்வான் ரங்கநாதனும், அவர்களைப் பற்றி நிறைய சொன்னார். 😂

ஒரு காதால் கேட்டு, மறு காதால்... வெளியே விட்டு விட்டேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

சரத்குமாரின் மனைவி ராதிகாவும் இலங்கை தானே.

ஆமாம் இவை கலை உலகம்,......அரசியலிலும் நல்லுர். எம் பி சிவசிதம்பரத்தின். மகள் ளும். ஈழப்பிரியனின். மகளும். 🤣🙏ஆ. இல்லை இல்லை ஈழவேந்தனின். மகளும். திருமணம். செய்துள்ளார்கள். இன்னும் இரண்டு மூன்று துணை நடிகர்கள் இலங்கையை சேந்தவர்களுண்டு பெயர் மறந்து விட்டேன் மற்றும் நடிகர் கருணாஸ். இலங்கையா. ??

3 hours ago, தமிழ் சிறி said:

newproject83copy3-1711345633.jpg

உங்களின் கனவுக் கன்னி ராதிகாவை மறந்து விட்டேன். 😂 🤣

எப்படி தெரியும் ??? 🤣 சும்மா வதந்தியைப் பரப்பக்கூடாது நான் பெண்களை நிமிர்ந்து பார்ப்பதில்லை 🤣. சில பெண்கள் நிலத்தை பார்த்து நடப்பார்கள். அப்படி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இன்னும் அவ கனவுக்கன்னியாக இருப்பதால் பிரியன் அவரை மறக்கவில்லை . .......... ! 😂

பாரதிராஜா அறிமுகப்படுத்தியதால் பழைய நினைவுகள் இப்போதும் உள்ளது.

நான்கு சுவர்களுக்குள் தயாரித்த படங்களை

கிராமங்களில் மக்களுடன் மக்களாக படம் எடுத்த பெருமை

பாரதிராஜாவையே சேரும்.

18 minutes ago, Kandiah57 said:

எப்படி தெரியும் ??? 🤣 சும்மா வதந்தியைப் பரப்பக்கூடாது நான் பெண்களை நிமிர்ந்து பார்ப்பதில்லை 🤣. சில பெண்கள் நிலத்தை பார்த்து நடப்பார்கள். அப்படி

சரி சரி

வயது அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்

பிரியங்கா, கோபிநாத் விஜய் தொலைக்காட்சியை விட்டு போகிறார்களாம். விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் தொலைக்காட்சி வாங்க உள்ளதாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.