Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் ‍ பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி

புலிகளியக்கத்தில் சிறுவயதில் இணைந்ததாகவும், தனது தகப்பனார் ஆற்றங்கரையில் மட்டி சேகரித்தே தம்மை வளர்த்ததாகவும், இளமையில் வறுமையிலேயே வளர்ந்துவந்ததாகவும் தன்னை ஒரு சாதாரண எளிமையான மனிதராகக் காட்டிவந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் இயற்பெயர் கொண்ட, மனிதகுலத்திற்கெதிரான இந்த நச்சுப் பாம்பு சேகரித்து வைத்திருக்கும் சொத்துக்களின் பெறுமதி 588 கோடி ரூபாய்கள்!

சமூகத்தில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்கள் மீதும், வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மீதும் இவனுக்கிருந்த இயல்பான வெறுப்பும், பகையுணர்வும் கருணா எனும் இனத்துரோகியின் பின்னால் இவன் சிங்களப் பேரினவாதத்தின் முகாமினுள் அடைக்கலம் ஆகியபோது அடக்கமுடியாமல் பீறிட்டுக் கிளம்பியது. ஆரம்பத்தில் மட்டக்களப்பில் இயங்கிவந்த வடபகுதியை பூர்வீகமாகக் கொண்ட வர்த்தகர்கள், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் இவனாலும், கருணாவினாலும் குறிவைத்துத் தாக்கப்பட்டோ அல்லது கடத்திச் சென்று கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் கொலைசெய்யப்பட்டும் வந்தனர். பத்திரிக்கையாளர் நடேசனை இவனும் கருணாவும் கொன்றதன் ஒரே காரணம் அவர் வடபகுதியைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான். அவ்வாறே தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கத்தை நத்தார் திருப்பலியில், ஆலயத்திற்குள் இருந்து சுட்டுப்படுகொலை செய்தது அவர் கருணாவின் பிரதேசவாதத்தினை எதிர்த்து, அவன் நடத்திய கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தார் என்பதற்காக மட்டுமல்ல, அவர்கூட வடபகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் தான். பின்னாட்களில் வடபகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் ஒருவர் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு பீடாதிபதியாக வருவதை சகித்துக்கொள்ள முடியாத கருணாவும், பிள்ளையானும் அவரை கொழும்பில் வைத்துக் கடத்திச் சென்று சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்தனர்.

தற்போது பிள்ளையான் எனும் பெயரில் பவனி வந்த மனிதகுலத்திற்கெதிரான இந்த மிருகம் செய்த பாதகச் செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கியிருக்கின்றன.

1. கிழக்கில் பணியாற்றிய வடபகுதியை பூர்வீகமாகக் கொண்ட வர்த்தகர்கள், கல்விமான்கள், பத்திரிக்கையாளர்கள் மீதான கப்பம் அறவிடல், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள்.

2. தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தித் கணக்காளராகப் பணிபுரிந்து வந்த, வடபகுதியைச் சேர்ந்த பிரேமினி எனும் பெண்மீது பிள்ளையானும் பிரதேசவாத வெறிபிடித்த, அவனுடைய இன்னும் ஏழு ஏவல் நாய்களும் இணைந்து நடத்திய கூட்டுப் பாலியல் வன்புணர்வும் அதன்பின்னர் அப்பெண்ணை துண்டங்களாக வெட்டி காட்டிற்குள் வீசியெறிந்தமையும்.

3. பிரேமினியோடு இவனால் இழுத்துச் செல்லப்பட்ட இன்னும் ஆறு வடபகுதியைச் சேர்ந்த புணர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் அவர்களுக்கான புதைகுழிகளை அவர்களே வெட்டும்படி வற்புருத்தப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளின் பின்னர் அடித்துக் கொல்லப்பட்டு அக்குழிகளுக்குள்ளேயே புதைக்கப்பட்டமை.

4. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான ரவீந்திரநாத்தை கொழும்பிலிருந்து கடத்திவந்து கிழக்கின் காடுகளுக்குள் சித்திரவதை செய்து படுகொலை செய்தமை. இவரது படுகொலைக்கான காரணம் இவர் வடபகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு, பிள்ளையானினாலும், கருணாவினாலும் வடபகுதி மாணவிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும், விசாரணைகளைக் கோரியும் வந்தமைதான் என்று சொல்லப்படுகிறது.

5. கடற்படைக் கொலைக்குழுவுடன் இணைந்து பிள்ளையான் நடத்திவந்த கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள் குறித்துத் தகவல்களைச் சேகரித்து அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வேலைகளில் ஈடுபட்டுவந்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜை கொழும்பில் அவர் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது அருகில்ச் சென்று சுட்டுக் கொன்றமை.

6. சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கோத்தாவினால் மிக் வானூர்திகள் கொள்வனவில் செய்யப்பட்ட ஊழல்கள் குறித்து தொடர்ந்தும் பேசிவந்ததனால் அவரைக் கொல்வதற்கு இவனுக்கும் கருணாவிற்கும் கொடுக்கப்பட்ட பணத்தொகை 50 மில்லியன் என்பது குறிப்பிடத் தக்கது.

7. இவனது மாபாதகச் செயல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல அமைந்தது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இவன் தலைமையில் இலங்கையில் பலவிடங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ஆலய மற்றும் விடுதிப் படுகொலைகள். மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கத்தின் படுகொலையில் நேரடியாகப் பங்காற்றியமைக்காக இவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அங்கிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளை கோத்தபாயவின் மீள்வருகைக்கான தாக்குதல் ஒன்றிற்குத் தயார்ப்படுத்தி, சிறைக்குள் இருந்தவாறே அத்தாக்குதல்களை நெறிப்படுத்தி , கோத்தாவின் வெற்றியை உறுதிப்படுத்தினான். இதற்காக இவனுக்கும் இவனது கொலைக்குழுவிற்கும் வழங்கப்பட்ட பணம் 65 மில்லியன் ரூபாய்கள்.

  1. திருகோணமலையைச் சேர்ந்த ஜூட் வர்ஷா எனப்படும் சிறுமியைக் கடத்திச் சென்று கப்பம் கோரி பின்னர் படுகொலைசெய்து சாக்கினுள் அடைத்து வீதியில் வீசிச்சென்றது. பின்னர் இதில் ஈடுபட்டவர்களை பொலீசார் கைதுசெய்தபோது, தனது பெயர் வெளியே வந்துவிடும் என்பதற்காக பொலீஸாருக்கு லஞ்சம் கொடுத்து வாகனத்தில் பயணிக்கும்போதே சுட்டுக் கொன்றது.

  2. மட்டக்களப்பில் இன்னொரு பெண்ணைக் கடத்திச் சென்று கப்பம் கோரி, கிடைக்காது போகவே, அவரைக் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, கொலைசெய்து கிணற்றுக்குள் எறிந்துவிட்டுச் சென்றது.

  3. வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்று வந்த தமிழ் மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு மிரட்டியது. ஆரம்பத்தில் உஇதனை மாணவர்கள் கண்டுகொள்ளாதுவிடவே பிள்ளையானும் அவனது அடியாட்களும் மாணவிகளின் விடுதிக்குள் நுழைந்து மூன்று வடபகுதியைச் சேர்ந்த மாணவிகளைக் கடத்திச் சென்று கூடுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாகி ஏனைய மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் அச்சுருத்தல் விடுத்தது.

  4. இவற்றினை விடவும் இவனாலும், இவனது கொலைக்குழுவான ட்ரிபோலிப் பிளட்டூனினானும் நடத்தப்பட்ட கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள் நூற்றுக்கணக்கானவை. புலிகளியகத்திலிருந்து பிரிந்து பிரதேசவாத வெறியும், பணத்தாசையும் கொண்டு இவன் புரிந்துவந்த மனிதகுலத்திற்கெதிரான செயல்களின் பட்டியல் மிக நீளமானது. ஒரு சில பிரபல பெயர்களையும், சம்பவங்களையும் தவிர பெயர் தெரியாத பல தமிழர்களை இவன் கொன்றிருக்கிறான். ஆனாலும், வடபகுதித் தமிழர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து , கிழக்கு மாகாணத் தமிழர்களை தலை நிமிரச் செய்து, கிழக்கின் விடிவெள்ளியாக இவன் இருப்பதாக நினைத்த கிழக்குத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இவன் சிறையில் இருக்கும்போதே பாராளுமன்றத் தேர்தலில் ஐம்பதினாயிரம் வாக்குகளுக்கு மேலாக வாரி வழங்கி, இவனைத் தமது தமது வரலாற்று நாயகனான முடிசூடி அழகுபார்த்தார்கள். பிரதேசவாதம் கண்களை மறைக்க, அதனை அபிவிருத்தி எனும் வெற்றுக்கோசத்திற்குள் மறைத்து மனிதவுருவில் வலம்வந்த நச்சுப்பாம்பைத் தமது தலைமகனாக ஏற்றி அகமகிழ்ந்தார்கள்.

தாம் மகுடம் சூட்டி, அழகுபார்த்து, உச்சிமோர்ந்து, பரவசமடைந்து, பல்லக்குத் தூக்கிய இந்த மிருகத்தின் கொடுஞ்செயல்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன இப்போது. இனியாவது இவனும் இவனது சகாவான கருணாவும் பேசிவந்த பிரதேசவாதம் என்பது போலியானது என்பதை இவர்கள் உணர்வார்களா?

https://www.youtube.com/watch?v=hQk-7Hp5EFM

https://www.youtube.com/watch?v=p0cZ33gAi4c

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரஞ்சித் said:

ரஞ்சித்

இதற்கெல்லாம் ஆதாரம் இருக்குதா என்று கேட்கப் போகிறார்கள்.

நன்றி ரஞ்சித்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இதற்கெல்லாம் ஆதாரம் இருக்குதா என்று கேட்கப் போகிறார்கள்.

இதற்கெல்லாம் சாட்சியங்கள் இருக்கின்றன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் அண்ணா. அவை தெரிந்துகொண்டுமே இவனுக்கு ஐம்பதினாயிரம் வாக்குகளை வாரி வழங்கினார்கள். பிரதேசவாதத்தினை அபிவிருத்தி எனும் மாயைக்குள் மறைத்துக்கொண்டே இதனைச் செய்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரகாந்தனின் கைதால் பலர் வெலவெலத்து, பரபரப்படைந்து உளறுகிறார்கள். கைதி எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் தருணமிது, அவர்களுக்கு தெரியும்; விசாரணை முறை, அறிக்கை தயாரிக்கும் முறை எப்படியானது, யார் யார் எல்லாம் சிக்குவார்கள் அல்லது சிக்க வைக்கப்படுவார்கள் என்பது. சம்பந்தப்பட்ட எல்லோருமே முடிவை நெருங்கிக்கொண்டு, வாசலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏதாவது வழியில் கைதியை போட்டுத்தள்ளி உண்மையை மறைக்க முயன்றாலும் அதற்கு வழியில்லை. கோத்தா போல் தப்பியோடவும் முடியாது. ஆகவே குற்றவாளிகளில் யாராவது ஒருவர் தான் தப்பிக்கொள்வதற்காக ஒப்புதல் வாக்குமூலமளித்து தன்னை காப்பாற்ற முயற்சிப்பார். இதில் சுரேஷ் சாலே அல்லது சொனிக் சொனிக் யாராவது இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, satan said:

சந்திரகாந்தனின் கைதால் பலர் வெலவெலத்து, பரபரப்படைந்து உளறுகிறார்கள். கைதி எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் தருணமிது, அவர்களுக்கு தெரியும்; விசாரணை முறை, அறிக்கை தயாரிக்கும் முறை எப்படியானது, யார் யார் எல்லாம் சிக்குவார்கள் அல்லது சிக்க வைக்கப்படுவார்கள் என்பது. சம்பந்தப்பட்ட எல்லோருமே முடிவை நெருங்கிக்கொண்டு, வாசலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதனால தான் ரணில் முந்திரி கொட்டை மாதிரி முந்திக் கொண்டு ஓடினார்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

அதனால தான் ரணில் முந்திரி கொட்டை மாதிரி முந்திக் கொண்டு ஓடினார்.

ரணில் நல்ல பிள்ளை மாதிரி நடித்து ஆடிய நாடகமெல்லாம் வெளியில் வரப்போகிறது என்கிற பயமவருக்கு. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை சர்வதேசம் விசாரிக்கக்கூடாதாம். ஏனென்றால், அதை தொடர்ந்து யுத்த போர்க்குற்றத்தையும் ஆராய்வார்களாம். அப்போ.. ஒரு விசாரணை வேறொரு இடத்திற்கு இட்டுச்செல்லும் என்பது யாவருமறிந்ததே. போர்க்குற்ற விசாரணை சர்வதேசம் செய்யக்கூடாதென தற்போதைய அரசாங்கம் கூறினாலும், பட்டலந்த குற்றம் பற்றி சர்வதேசம் விசாரிக்க வேண்டுமாம். இந்த கோரிக்கை கூட நாளை மாறலாம். எங்களுக்கு நீதி கிடைக்காவிட்டாலும் தமிழருக்கு நீதி கிடைக்கக்கூடாது என்பதில் அவர்கள் கட்சி பேதமின்றி உறுதியாக இருக்கிறார்கள். இதனால் ஒருநாள் எல்லோரும் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்து வருந்த நேரிடும். எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையை புதைக்கிறோமோ, அவ்வளவு அது வீரியம் கொண்டெழும். அது எழும்ப முடியாமல் தடுப்பது, இழப்புகளை சந்தித்த இனமே அது மேலெழும்புவதை விரும்பவில்லை. சுயநலம். 

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcQpXU_BqnDlp67No9rnd-V

1606210564-pillayan-granted-bail.jpg

கொத்துக் கொத்தாக கொலைகளை செய்து விட்டு,

திருநீறும், சந்தனப் பொட்டும், வெள்ளை வேட்டியும் கட்டிக்கொண்டு

ஊருக்குள்ளை நல்லவன் மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு திரிந்திருக்கிறான்.

இவனை "என்கவுன்ட்டர்" போட்டு...

பிடித்த இடத்திலேயே சுட்டுக் கொன்று இருக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் நிறுத்தி.. வழக்கு விசாரணை என்று போக... அடுத்த இருபத்தைந்து வருடம் ஆகிவிடும். அப்படியான நிலையில்தான்... நம்மூர் நீதிமன்றங்கள் உள்ளன. இவ்வளவு காலமும் பிள்ளையானை உயிர் வாழ விட்டதே மிக, மிக அதிகம். விளக்கமறியலில் வைத்தாவது இந்த 🐕‍🦺யை போட்டுத்தள்ளுங்க.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் ஒழிப்பு அணி வன்னி

491964549_122114696858820198_11435173985

பிரபாகரன் ஊழல் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்கினார்!

-முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா புகழாரம்

பிரபாகரன் ஒருபோதும் ஊழல் மோசடிகளை ஆதரிக்காத ஒருவராகவே இருந்தார், நிதிமோசடி செய்பவர்கள், துரோகம் செய்பவர்களுக்கு அவர் அதிகபட்சமாக மரணதண்டனை வழங்கினார். கருணாவின் ஊழல்கள் தொடர்பில் அறிந்த பிரபாகரன் அவரை கிளிநொச்சிக்கு அழைத்த போது அவர் கொன்றுவிடுவார் என்று தப்பி ஓடிய நபர்தான் இந்த கருணா. விடுதலைப்புலிகள் அமைப்பில் கிழக்கைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இருந்தார், அவர் கருணாவை விட திறமையானவர், அவருடன் நாம் கிழக்கில் போரிட்டோம்.

பலகல்ல என்ற எமது இராணுவத் தளபதி ஜனாதிபதி சந்திரிக்காவுக்குத் தெரியாமல் கருணாவை கொண்டு வந்து கொழும்பில் ஒளித்து வைத்தார், அதனால் அரசு அவரை பணி நீக்கம் செய்தது.

இதேவேளை பிள்ளையான் 150 பேருடன் சுங்காவில் பகுதியில் முகாமொன்றில் இருந் தார்.நாங்கள் அவர்களை எம்மிடம் சரண டையுமாறு கோரினோம். அவ்வாறு சரண டைந்தவர்களில் 80 பேர் வரையிலானோர் 13 வயதுக்கும் குறைவானவர்களாகவே இருந் தனர்.அவர்கள் ஐசிஆர்சியிடம் ஒப்படைத் தோம். எஞ்சியவர்களை நாங்கள் பாதுகாப்பு வழங்கி பார்த்துக்கொண்டோம். ஆனால் பிள்ளையான் யுத்தம் செய்யவில்லை, ஆட்கடத்தல்கள் செய்துள்ளார். ராஜ பக்ஷ காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கினோம்.

இப்போது இவர்களை வீரர்கள் என்று கம்மன்பில போன்றோர் கூறுகின்றனர். கம்மன்பில எதுவும் தெரியாதவர். யுத்த காலத் தில் எங்கேயே இருந்தவர் இப்போது வந்து ஏதோ கூறுகின்றார். பிள்ளையான்தான் யுத்தத்தில் உத்தரவுகளை வழங்கினாரா? இப்படியான ஒருவரை வீரர் என்று கம்மன்பில போன்றவர்கள் கூறுவது தெற்கில் உள்ளவர்களுக்கே வெட்கமானது.

பிள்ளையானிடம் எவ்வளவுசரி பரித்துக் கொள்வதற்காக நீங்கள் வீரர் என்றும்,உங்களின் சட்டத்தரணி என்றும் கதைக்கின்றனர். இவர்கள் சேட் அணிந்திருந்தாலும் கீழே அணிந்துகொண்டுதான் இவ்வாறு கூறுகின்றனரா? என்று கேட்கவேண்டியுள்ளது

பிள்ளையான் , கருணா இருவரும் ஊழல் செய்துவிட்டு புலிகளுக்கு பயத்தில் அங்கிருந்து ஓடி வந்தவர்கள், இவர்கள் வீரர்கள் இல்லை.

என்று சரத் பொன்சேகா கடந்த கிழமை சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

சமூகத்தில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்கள் மீதும், வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மீதும் இவனுக்கிருந்த இயல்பான வெறுப்பும், பகையுணர்வும் கருணா எனும் இனத்துரோகியின் பின்னால் இவன் சிங்களப் பேரினவாதத்தின் முகாமினுள் அடைக்கலம் ஆகியபோது அடக்கமுடியாமல் பீறிட்டுக் கிளம்பியது.

சில சமயம் நான் நினைப்பது உண்டு ...இந்த பிள்ளையான் போன்றவர்கள் கூறும் கருத்தும் யாழ்களத்தில் எழுதுபவர்களின் கருத்தும் ஒரே மாதிரி இருக்கே ...இவர்கள் எல்லாம் ஒரே பாசறைக்கு சென்றவர்களோ...

ஒரு வித்தியாசம் பிள்ளையான் செயலில் இறங்கினார் ...மற்றவர்கள் கருத்துக்களை எழுதினார்கள் ...

மகிந்தா குழுவினர்,மற்றும் அண்மையில் ரில்வின் சில்வா சொன்னதும் இதே கருத்து ...தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனை இல்லை பொருளாதார பிரச்சனை ...அதுவும் ஒர் பகுதியினரின் கையில் பொருளாதாரம் சென்றுள்ளது மேட்டுக்குடியினரின் கையில்

  • கருத்துக்கள உறவுகள்

கர்மா சாத்திரம் போன்றவற்றை நம்புவதில்லை நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது நம்ப தோனுது.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பெருமாள் said:

கர்மா சாத்திரம் போன்றவற்றை நம்புவதில்லை நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது நம்ப தோனுது.

உண்மை தான் ..அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும் என்றதும் சரிபோல் தெரிகின்றது..

கோத்தாபாயா எவ்வளவு திமிருடன் ஆட்சிக்கு வந்தார் ...முழுமையாக பதவிக்காலம் முடியும் முன்பே அடித்து விரட்டப்பட்டார்..

  • கருத்துக்கள உறவுகள்

பலவீனமான ஒவ்வொரு உயிரினமும் தன்னை பாதுகாத்துக்கொள்ள இயற்கையாக பாதுகாப்பு பொறிமுறைகளை உருவாக்கி அதனை அதன் கூர்ப்பில் வலுப்படுத்திக்கொண்டே வரும்.

வானில் பறக்கும் பறவைக்கூட்டம் ஒரே பாதையில் சீராக பறந்து கொண்டிருக்கும் போது முன்னால் செல்லும் பறவை மின்னல் வேகத்தில் எதிர்புறம் திரும்பினால் அதே போல அனைத்து பறவைகளும் மின்னல் வேகத்தில் திரும்பிக்கொள்ளுகின்றன, அதே போலவே மீன் கூட்டமும் அவ்வாறே செய்கின்றன இது அனைத்து ஜீவராசிகளும் தம்மை பலமாக பேண பயன்படுத்தும் பாதுகாப்பு பொறிமுறை.

தனியாக நின்றால் இரையாகிவிடுவோம் என்பதற்காக இந்த பாதுகாப்பு பொறிமுறையினை அவை உயிரியல் ரீதியாக தலைமுறையாக கடத்தி வருகின்றன, ஆதி மனிதன் காட்டு வாழ்கையிலும் இவ்வாறே இருந்துள்ளது, ஆனால் நவீன உலகில் அதற்கான தேவை இல்லாமல் போய்விட்டாலும் மனிதர்களுக்குள்ளே இருக்கும் சுய பாதுகாப்பு பொறிமுறை இவ்வாறு மதம், சாதி, பிரதேசம் என கூட்டிணைய வைக்கின்றது.

பிள்ளையான், கருணா போன்ற சுயநலமிகள் மக்களின் அறியாமையினை பயன்படுத்தி அவர்களை பிர்த்து அதன் மூலம் தமது இலாபத்தினை அடைகிறார்கள்.

மக்கள் சாதி, மதம், இடம் என பல ப்ரிவுகளாக பிரிந்து மேலும் பலவீனமாகிறார்கள், ஆரம்பத்தில் இந்த வேலையினை கருணா, பிள்ளையான் என தொடங்கினார்கள் புலிகளின் இல்லாமல் போன பின்னர் தமிழ் அரசியல் கட்சிகளும் அந்த கோதாவில் குதித்தார்கள், தற்போது தமிழர்கள் சில்லு சில்லாக உடைந்து பலவீனமாக உள்ளார்கள்.

2 hours ago, putthan said:
  On 20/4/2025 at 09:33, ரஞ்சித் said:

சமூகத்தில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்கள் மீதும், வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மீதும் இவனுக்கிருந்த இயல்பான வெறுப்பும், பகையுணர்வும் கருணா எனும் இனத்துரோகியின் பின்னால் இவன் சிங்களப் பேரினவாதத்தின் முகாமினுள் அடைக்கலம் ஆகியபோது அடக்கமுடியாமல் பீறிட்டுக் கிளம்பியது.

சில சமயம் நான் நினைப்பது உண்டு ...இந்த பிள்ளையான் போன்றவர்கள் கூறும் கருத்தும் யாழ்களத்தில் எழுதுபவர்களின் கருத்தும் ஒரே மாதிரி இருக்கே ...இவர்கள் எல்லாம் ஒரே பாசறைக்கு சென்றவர்களோ...

அவுஸ்ரேலியாவில் இருந்த ஒருவர் அவரது ஊரின் பெயரால் உருவாக்கப்பட்ட தொண்டு அமைப்பினூடாக அவரது ஊருக்கு செய்யப்பட்ட தொண்டு நடவடிக்கைகளை பயன்படுத்தி (அவர் ஊரில் அதன் மூலமான தொடர்பினூடாக) தனது பிள்ளையின் அரங்கேற்றத்திற்கான வாய்ப்பாக (செலவு குறைந்த அரங்கேற்றம் + உல்லாச பயணம்) அவர்களது ஊரில் உள்ள கோயில் நிகழ்வொன்றினை பயன்படுத்தினார், அவரிடம் கேட்டேன் அப்போ அங்கே வழமையாக பாடும் குழந்தைகளின் நிலை என்ன என அதற்கு அவர் கூறினார் அவர்கள் ஒவ்வொரு வருடமும் பாடுகிறார்கள்தானே இந்த வருடம் பாடாவிடால் ஒன்றும் குறைந்து போய் விடாது என அதில் நியாம் இருப்பதாக அவருக்கு இருக்கலாம்.

இப்படி பல மக்களை நாம் நாளாந்தம் சந்திக்கிறோம், இவர்கள் தமது சுயநலத்திற்காக பாவப்பட்ட தமது மக்களையே அறியாமல் சுரண்டுவதால் அதே போல தமது சுயநலனுக்காக செய்த தவறான செயல்களை செய்கின்ற கருணா, பிள்ளையா தமது தவறுகளுக்காக உருவாக்கின சித்தாந்தம்தான் இந்த பிரதேசவாதம், சுய நலன் இருப்பதில் தப்பில்லை ஆனால் அதனால் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்களா என பார்க்காமல் விட்டு விடுகிறோம்.

இந்த தவறிற்கு நானும் விதிவிலக்கில்லை, ஆனால் பெரும்பாலோனோர் இதனை புரியாமல் செய்கின்றனர், இதனை யாரும் குற்றமாக கூறுவதில்லை ஒரு மாற்றத்திற்காக கூறுவதால் அதனை நாம் தான் புரிந்து அது தொடர்பில் கோபம் கொள்ளாமல் சிந்தித்து முன் செல்லவேண்டும்.

ஒரு வகையில் இந்த கருணா பிள்ளையான் போன்றோரின் பிரதேச வாதம் எடுபட காரணமாக இருப்பதற்கான காரணியாக நாமும் இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

பலவீனமான ஒவ்வொரு உயிரினமும் தன்னை பாதுகாத்துக்கொள்ள இயற்கையாக பாதுகாப்பு பொறிமுறைகளை உருவாக்கி அதனை அதன் கூர்ப்பில் வலுப்படுத்திக்கொண்டே வரும்.

வானில் பறக்கும் பறவைக்கூட்டம் ஒரே பாதையில் சீராக பறந்து கொண்டிருக்கும் போது முன்னால் செல்லும் பறவை மின்னல் வேகத்தில் எதிர்புறம் திரும்பினால் அதே போல அனைத்து பறவைகளும் மின்னல் வேகத்தில் திரும்பிக்கொள்ளுகின்றன, அதே போலவே மீன் கூட்டமும் அவ்வாறே செய்கின்றன இது அனைத்து ஜீவராசிகளும் தம்மை பலமாக பேண பயன்படுத்தும் பாதுகாப்பு பொறிமுறை.

தனியாக நின்றால் இரையாகிவிடுவோம் என்பதற்காக இந்த பாதுகாப்பு பொறிமுறையினை அவை உயிரியல் ரீதியாக தலைமுறையாக கடத்தி வருகின்றன, ஆதி மனிதன் காட்டு வாழ்கையிலும் இவ்வாறே இருந்துள்ளது, ஆனால் நவீன உலகில் அதற்கான தேவை இல்லாமல் போய்விட்டாலும் மனிதர்களுக்குள்ளே இருக்கும் சுய பாதுகாப்பு பொறிமுறை இவ்வாறு மதம், சாதி, பிரதேசம் என கூட்டிணைய வைக்கின்றது.

பிள்ளையான், கருணா போன்ற சுயநலமிகள் மக்களின் அறியாமையினை பயன்படுத்தி அவர்களை பிர்த்து அதன் மூலம் தமது இலாபத்தினை அடைகிறார்கள்.

மக்கள் சாதி, மதம், இடம் என பல ப்ரிவுகளாக பிரிந்து மேலும் பலவீனமாகிறார்கள், ஆரம்பத்தில் இந்த வேலையினை கருணா, பிள்ளையான் என தொடங்கினார்கள் புலிகளின் இல்லாமல் போன பின்னர் தமிழ் அரசியல் கட்சிகளும் அந்த கோதாவில் குதித்தார்கள், தற்போது தமிழர்கள் சில்லு சில்லாக உடைந்து பலவீனமாக உள்ளார்கள்.

அவுஸ்ரேலியாவில் இருந்த ஒருவர் அவரது ஊரின் பெயரால் உருவாக்கப்பட்ட தொண்டு அமைப்பினூடாக அவரது ஊருக்கு செய்யப்பட்ட தொண்டு நடவடிக்கைகளை பயன்படுத்தி (அவர் ஊரில் அதன் மூலமான தொடர்பினூடாக) தனது பிள்ளையின் அரங்கேற்றத்திற்கான வாய்ப்பாக (செலவு குறைந்த அரங்கேற்றம் + உல்லாச பயணம்) அவர்களது ஊரில் உள்ள கோயில் நிகழ்வொன்றினை பயன்படுத்தினார், அவரிடம் கேட்டேன் அப்போ அங்கே வழமையாக பாடும் குழந்தைகளின் நிலை என்ன என அதற்கு அவர் கூறினார் அவர்கள் ஒவ்வொரு வருடமும் பாடுகிறார்கள்தானே இந்த வருடம் பாடாவிடால் ஒன்றும் குறைந்து போய் விடாது என அதில் நியாம் இருப்பதாக அவருக்கு இருக்கலாம்.

இப்படி பல மக்களை நாம் நாளாந்தம் சந்திக்கிறோம், இவர்கள் தமது சுயநலத்திற்காக பாவப்பட்ட தமது மக்களையே அறியாமல் சுரண்டுவதால் அதே போல தமது சுயநலனுக்காக செய்த தவறான செயல்களை செய்கின்ற கருணா, பிள்ளையா தமது தவறுகளுக்காக உருவாக்கின சித்தாந்தம்தான் இந்த பிரதேசவாதம், சுய நலன் இருப்பதில் தப்பில்லை ஆனால் அதனால் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்களா என பார்க்காமல் விட்டு விடுகிறோம்.

இந்த தவறிற்கு நானும் விதிவிலக்கில்லை, ஆனால் பெரும்பாலோனோர் இதனை புரியாமல் செய்கின்றனர், இதனை யாரும் குற்றமாக கூறுவதில்லை ஒரு மாற்றத்திற்காக கூறுவதால் அதனை நாம் தான் புரிந்து அது தொடர்பில் கோபம் கொள்ளாமல் சிந்தித்து முன் செல்லவேண்டும்.

ஒரு வகையில் இந்த கருணா பிள்ளையான் போன்றோரின் பிரதேச வாதம் எடுபட காரணமாக இருப்பதற்கான காரணியாக நாமும் இருக்கின்றோம்.

ரொம்ப சரிங்க,

புள்ளைக்கு பதிலா பொறுப்பில் பங்கெடுத்துக்கொண்டிருக்கும் நாம் போயிடலாம் ஜெயிலுக்கு . கொஞ்சம் விஜாரிச்சு சொல்லிடுங்க , ஏங்கினை போய் ரிப்போர்ட் பண்றத்துன்னு

நாலு பேத்தோட அஞ்சாவதாகவோ ஆறாவதாவோ , புள்ளை

பொழை விட்டிடுச்சு .

கம்னு கெடப்பியா , அத்தை வுட்டுட்டு, பெனாத்திட்டிருக்கியே

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

எஞ்சியவர்களை நாங்கள் பாதுகாப்பு வழங்கி பார்த்துக்கொண்டோம். ஆனால் பிள்ளையான் யுத்தம் செய்யவில்லை, ஆட்கடத்தல்கள் செய்துள்ளார். ராஜ பக்ஷ காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கினோம்.

எதற்காக கடத்தல்காரருக்கு பாதுகாப்பு வழங்கினீர்கள்? உங்களிடம் கையளித்த போரில் சம்பந்தப்படாத மக்களை இல்லையென்று ஆக்கிய நீங்கள், இவர்களை மட்டும் பாதுகாத்ததன் நோக்கம் என்ன? போரிட மறுத்த, அல்லது போர்க்களத்திலிருந்து விலகிச்செல்ல முயன்ற இராணுவத்தினரையே சுட்டுக்கொன்ற நீங்கள், இவர்களுக்கு இரக்கம் காட்டியதேனோ? ஏன் அன்று அதை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை தாங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

492385901_1092331559598482_3521232760296

எமது தேசிய வீரர்கள்.... பிள்ளையான்.

-சரத் வீரசேகர.-

விரிவான கட்டுரைக்கு நன்றி ரஞ்சித்.

பிள்ளையான் மிக மோசமான மனிதகுல எதிரி என்பதுடன் இவன் போன்ற படுகொலையாளர்கள் தாம் சார்ந்த சமூகத்திற்கே அழிவுகளை கொண்டு வரக்கூடிய சமூக துரோகிகள்.

இவ்வாறான பேர்வழிகளை ஜனநாயகத்தின் பேரால் தம் தலைவர்களாக தேர்ந்தெடுக்கும் அவலமான செயற்பாடுகளை செய்தவர்கள்/ செய்கின்றவர்கள் கிழக்கு வாழ் தமிழர்கள் மட்டுமல்ல. வடப்குதி தமிழர்களும் தான்.

இந்திய இராணுவத்துடன் தோளோடு தோள் நின்று, பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞ, இளைஞிகளை படுகொலை செய்தும், பல தமிழ் பெண்களை இந்திய இராணுவத்துடன் இணைந்து பாலியல் வல்லுறவு செய்து கொன்றும், தமிழர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்றும் அடாவடித்தனங்கள் புரிந்த அமைப்பின் தலைவர்களாக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், 2009 வரைக்கும் துணை இராணுவக் குழுவாக இயங்கிய ஈபிடிபியின் தலைவர் டக்கிளஸையும் தேர்தல்களில் வெல்ல வைத்த / வைக்கின்றவர்களாக வட பகுதித் தமிழர்களும் உள்ளனர்.

ஒரு முறை சரிநிகர் பத்திரிகை சுரேஸ் பிரேமச்சந்திரனை செய்தி அல்லது பேட்டி ஒன்றுக்காக 90 களில் தொடர்பு கொள்ள, கொழும்பில் உள்ள காரியாலயத்துக்கு தொலைபேசியில் அழைக்கும் போது, அங்கிருந்தவர்கள் சுரேஸ் மட்டக்களப்புக்கு சென்று விட்டார் என்றும், அங்கு அவரை தொடர்பு கொள்ள ஒரு தொலைபே இலக்கத்தை தந்தனர். அந்த இலக்கம், ராசிக் குழுவின் முகாமினது தொலைபேசி இலக்கம். அதாவது சுரேஸ் மட்டக்களப்புக்கு செல்லும் போதெல்லாம், ராசிக் குழுவின் முகாமில் தான் தங்குகின்றவர்.

இப்படியானவர்களைத் தான் வடக்கு கிழக்கு தமிழர்கள் தேர்தல்களில் வெல்லவைக்க முயல்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரச தொலைக்காட்சியின் பிரபல அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியான "ட்ருத் வித் சமுதித்த" எனும் நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்ட சிங்களப் பத்திரிக்கையாளரும் முன்னாள் ஆட்சியாளர்களுடன் பெரிதும் முரண்பட்டு வந்தவருமான கீர்த்தி ரட்நாயக்க எனும் சுதந்திர ஊடகவியலாளர் பல விடயங்கள் குறித்து தான் சேகரித்து வைத்திருந்த தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அவற்றில் சில முக்கியமான தகவல்களை இங்கே பகிர்கிறேன்.

துணைவேந்தர் ரவீந்திரநாத்தைக் கருணாவுடன் சேர்ந்து பிள்ளையான் எதற்காகக் கொன்றான்?

வடபகுதியைச் சேர்ந்த தமிழ் மாணவிகளைக் கடத்திச் சென்று பாலியல்வன்புணர்விற்கு உள்ளாக்கிய பிள்ளையானையும் கருணாவையும் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடுமையாக விமர்சித்து வந்திருந்தார். தம்மீதான விமர்சனங்களை தடுப்பதற்காகவே கருணாவும் பிள்ளையானும் இணைந்து அவரைக் கொழும்பிலிருந்து கடத்திச் சென்று படுகொலை செய்தனர் என்று கீர்த்தி கூறுகிறார்.

கருணா இலண்டனுக்குத் தப்பியோடிய காலத்தில் பிள்ளையான் அடைந்திருந்த அசுர வளர்ச்சி

நேவி சம்பத் என்று அழைக்கப்பட்ட கடற்படை அதிகாரியொருவருடன் சேர்ந்தியங்கிய பிள்ளையான் கொழும்பில் இருந்த பல தமிழ் வியாபாரிகளைக் கப்பத்திற்காகக் கடத்திச் சென்று கொன்றிருக்கிறான் என்று அவர் கூறுகிறார்.

2006 ஆம் ஆண்டில் வனவிலங்கு அதிகாரி எனும் பொய்யான கடவுச் சீட்டுடன் இங்கிலாந்திற்குக் கருணாவை கோத்தா அனுப்பிவைக்க, அவன் அங்கு சில மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது. புலிகளுடன் இருந்த காலத்தில் வெறும் எடுபிடியாளாகச் செயற்பட்டு வந்த பிள்ளையான், அவர்களுக்காக உழவு இயந்திரங்களை ஓட்டுவது, மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வது போன்ற வேலைகளையே செய்துவந்திருக்கிறான். கருணா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கத் தொடங்கியதன் பின்னரே பிள்ளையான் எனும் பெயர் வெளிச்சத்திற்கு வந்தது. மிகவும் கொடூரமானவன் என்று சில காலத்திலேயே பெயரெடுத்துவிட்ட பிள்ளையான் இராணுவ புலநாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கி வந்தான். இலங்கையில் இருந்து கருணா லண்டனிற்குத் தப்பியோடிய இடைவெளியைப் பாவித்துக்கொண்ட பிள்ளையான், தன்னை ராஜபக்ஷ சகோதரர்களுடனும், அவர்களுக்கு நெருக்கமானவர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான். அவ்வாறே இராணுவப் புலநாய்வுத்துறையின் ஒரு பிரிவு இவனைத் தமது தேவைகளுக்காகப் பாவிக்கத் தொடங்கியிருந்தது. கருணா மீளவும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டபோது பிள்ளையான் அடைந்திருந்த அசுர வளர்ச்சி கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது.

மாமனிதர் ரவிராஜை பிள்ளையானும் கருணாவும் எதற்காகக் கொன்றார்கள் ?

கொழும்பிலிருந்த சில தமிழ் வர்த்தகர்கள் அக்காலத்தில் புலிகளுக்கு பணவுதவிகளைச் செய்துவருகின்றனர் என்பதை கோத்தாபய அறிந்துவைத்திருந்தான். ஆகவே நாட்டின் பாதுகாப்பு என்கிற போர்வைக்குள் கொழும்பில் இயங்கிவந்த பிரபல தமிழ் வர்த்தகர்களை இலக்குவைத்து கடத்தல்களில் ஈடுபடுமாறும், கப்பம் கோருமாறும் கோத்தபாயவும், பசில் ராஜபக்ஷவும் பிள்ளையானையும் அவனோடு இயங்கிவந்த கருணா, சாந்த கஜநாயக்க மற்றும் ஹெட்டியாரச்சி எனும் விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகளை பணித்தார்கள். அதன்படியே கொழும்பில் பல தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். சிலர் பாரிய கப்பத்தொகை செலுத்தப்பட்டபின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இராணுவ பாதுகாப்புடன் பவணிவந்த பிள்ளையான் வெளிப்படையாகவே தமிழ் வர்த்தகர்களைக் கடத்திச் சென்றுகொண்டிருக்க, இதனைத் தடுப்பதற்காக பல தமிழ் வர்த்தகர்கள் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுருத்தல்களையும் மீறி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜிடம் பிள்ளையானின் கடத்தல் மற்றும் கப்பம் கோரல்களுடனான படுகொலைகளைப்பற்றி முறையிட்டிருந்தனர். வர்த்தகர்களின் வாக்குமூலங்கள், சாட்சியங்கள், தகவல்கள் அடிப்படையில் முக்கியமான அறிக்கையொன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ரவிராஜ் தயாரித்து வந்திருந்தார். பாராளுமன்றத்தில் ரவிராஜினால் வெளிப்படையாகவே இத்தகவல்கள் வெளிக்கொணரப்படுமிடத்து இக்கடத்தல்களுடனான தமது தொடர்புகள் வெளிவரும் என்று அஞ்சிய கோத்தாபாயவும், பசில் ராஜபக்ஷவும் ரவிராஜைக் கொல்லுமாறு பிள்ளையானுக்கு உத்தரவிடுகின்றனர்.

ரவிராஜைக் கொல்வதற்காக பிள்ளையான் ஆயத்தப்படுத்தி வருகிறான் என்பதை புலநாய்வுத்துறையினரூடாக அறிந்துகொண்ட கீர்த்தி, ரவிராஜைச் சந்திப்பதற்காக பஸ்டியான் மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்று தான் அறிந்தவற்றைக் கூறி, "இன்னும் ஒரு வாரத்திற்குள் பிள்ளையான் உங்களைச் சுட்டுக் கொல்லப்போகிறான்" என்று எச்சரித்திருக்கிறார். இதற்கான சாட்சியாக சத்துரிக்கா ரணவக்க எனும் ரவிராஜின் உதவியாளர் இருக்கிறார் என்றும் கீர்த்தி குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிட்டவாறே சரியாக 8 நாட்களில் பிள்ளையானும், நேவி சம்பத்தும் இணைந்து கொழும்பு நகரில் தனது பிரத்தியேக வாகனத்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்த ரவிராஜை வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்கின்றனர்.

கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனமான கலா ட்ரேடர்ஸின் 5000 கோடி சொத்துக்களைச் சுருட்டிய போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா

கொழும்பில் பிரபலமான தமிழ் வர்த்தக நிறுவனமான கலா ட்ரேடர்ஸின் உரிமையாளரான நடராஜா சிறீஸ்கந்தராஜாவைக் கடத்திச் சென்று படுகொலைசெய்து, அவரது மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, 5000 கோடி பெறுமதியான சொத்துக்களை போர்க்குற்றவாளியான சவேந்திரசில்வா வளைத்துப்போட்டிருக்கிறான் என்று கீர்த்தி கூறுகிறார். பிள்ளையான், கருணா மற்றும் நேவி சம்பத் ஆகியோர் மூலம் இக்கடத்தலினைச் செய்த சவேந்திர சில்வா, தனது பாதாள உலகக் கும்பல் ஒன்றின் தலைவனூடாக வர்த்தகரின் மனைவியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உடபடுத்தினான் என்று கீர்த்தி மேலும் கூறுகிறார்.

அக்குரஸை மற்றும் கெப்பிட்டிக் கொல்லாவைக் குண்டுத்தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியது மகிந்த ராஜபக்சவே

2009 ஆம் ஆண்டு பங்குனியில் தென்மாகாணத்தின் அக்குரசைப் பகுதியில் இடம்பெற்ற இஸ்லாமியர்களின் மத வழிபாடொன்றின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதோடு இன்னும் 35 பேர் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலை நடத்தியது புலிகள்தான் என்று அரசு உடனடியாக அறிவித்திருந்தது. ஆனால் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டு மகிந்தவின் ஆதரவாளரான ஜானக்க பண்டார தென்னக்கோன் எனும் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்திலிருந்தே எடுத்துச் செல்லப்பட்டதாகவும், வன்னியில் நடக்கும் போரின் அகோரத்தைத் திசைதிருப்பவே மகிந்த இத்தாக்குதலை தெற்கில் நடத்தியதாகவும் கீர்த்தி கூறுகிறார்.

2006 ஆம் ஆண்டு ஆனிமாதம் நடந்த கெப்பிட்டிக்கொல்லாவை பஸ் குண்டுத் தாக்குதலை நடத்தியதும் மகிந்தவே

புலிகளை முற்றாக அழிக்க தன்னை உந்தித் தள்ளிய தாக்குதல் இது என்று இத்தாக்குதல் குறித்து மகிந்த பலவிடங்களில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறான். 2006 ஆம் ஆண்டு ஆனி 15 ஆம் திகதி பயணிகள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர்த் தாக்குதலில் பேரூந்தில் பயணித்த 60 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் நடந்தவுடனேயே அமெரிக்காவும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் இத்தாக்குதலுக்குப் புலிகளைக் குற்றஞ்சாட்டியிருந்தனர். பல சர்வதேச ஊடககங்களில் முக்கிய செய்தியாக இது வலம்வந்ததுடன் தமிழர்மீதான முற்றான போரிற்கும் இத்தாக்குதலை ஒரு காரணமாக மகிந்த காட்டிவரத் தொடங்கினான். ஆனால் இத்தாக்குதலே மகிந்தவினாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கீர்த்தி கூறுகிறார். அநுராதபுரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மகிந்தவின் கொலையாளிகள் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், இத்தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே மகிந்தவின் ஆதரவாளர்கள் இத்தாக்குதல் குறித்த தகவல்களை கவலையீனமாக வெளியே கசியவிட்டதாகவும் இதன்மூலமே மகிந்தவின் இத்திட்டம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் கீர்த்தி கூறுகிறார். இத்தாக்குதல் நடந்தபோது தமக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று புலிகள் கூறியது நினைவிருக்கலாம்.

உயிர்த்த ஞாயிறுக் குண்டுத்தாக்குதலுடன் பிள்ளையான் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிறான்

இத்தாக்குதல் நடந்தவுடன் கோத்தாபாயவிற்குச் சார்பான லங்கா கார்டியன் பத்திரிக்கையும், கோத்தாவின் ஆலோசகரான ரொகாண் குணவர்த்தனவும் இத்தாக்குதலை ஐஸிஸ் அமைப்பே நடத்தியதாக கூறியிருந்தனர். அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையினை இப்பத்திரிக்கையும், ரொகான் குணவர்த்தனவுமே காவி வந்தனர். 2021 இல் இவ்வறிக்கை வெளியாகியிருந்தது. ஆனால் இத்தாக்குதலுக்கான முஸ்த்தீபுகள் சில வருடங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இதற்காகத் தயார் செய்யப்பட்ட பிள்ளையானுக்கு மாதம் தோறும் 35 இலட்சம் ரூபாய்களை இராணுவப் புலநாய்வுத்துறை சம்பளமாகச் செலுத்திவந்தது. இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய துணை ராணுவக்குழுவான ஈ.பி.ஆர்.எல். எப் அமைப்பின் அன்றைய முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் உதவியாளராகச் செயற்பட்டு வந்த ஒருவரின் மகனே ஆசாத் மெளானா. இவனுக்கும் இந்தியாவின் ரோ அமைப்பிற்கும் இடையே நெருக்கமான உறவுகள் இருந்திருக்கின்றன. இதனால் இவன் அடிக்கடி இந்தியாவிற்குப் போய்வந்திருக்கிறான். இவனூடாகவே பிள்ளையானை இத்தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கிறது ரோ.. குண்டுத்தாக்குதலுக்குத் தேவையான மேலங்கிகள், குண்டுகள் என்பன இந்தியாவினாலேயே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு இராணுவப் புலநாய்வுத்துறையினரின் உதவியுடன் குறித்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் நடக்கவிருந்த பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் இலங்கையில் நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல்கள் என்பவற்றைக் கவனத்திற்கொண்டே இந்திய ரோ, இலங்கை இராணுவப் புலநாய்வுத்துறை மற்றும் சுரேஷ் சாலேயின் கீழ் வழிநடத்தப்பட்ட பிள்ளையான் ஆகியோர் இணைந்து இத்தாக்குதலினை நடத்தினார்கள். இலங்கையில் கோத்தா ஜனாதிபதியாவைதையும், இந்தியாவில் மோடி மீண்டும் பிரதமராவதையும் உறுதிப்படுத்துவதற்காகவே இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இத்தாக்குதலுடன் ரணில் விக்கிரம‌சிங்கவிற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. கொழும்பில் இதுகுறித்து நடந்த ரகசியச் சந்திப்பொன்றில் ரணில், பிள்ளையானின் அடியாட்களில் மிகவும் கொடூரமானவன் என்று அறியப்படும் இனியபாரதி மற்றும் இராணுவப் புலநாய்வுத்துறையின் சுரேஷ் சாலே ஆகியோர் இத்தாக்குதல் குறித்து பேசியது குறித்தும் தனக்குத் தெரியும் என்றும் கீர்த்தி மேலும் கூறுகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் பிள்ளையானினால் இரு சிறுமிகள் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களுள் ஒருவரான திருகோணமலையைச் சேர்ந்த ஜூட் வர்ஷாவிற்கு வயது 8 மட்டுமே. சுமார் 50 மில்லியன் ரூபாய்கள் கப்பமாகக் கோரப்பட்டு பணம் வழங்கப்படுமுன்னரே இச்சிறுமி கூட்டாகப் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு, சாக்கினுள் கட்டப்பட்ட நிலையில் திருகோணமலையின் வீதியோரக் கால்வாய்க்கு அருகில் கண்டெடுக்கப்பட்டாள் என்று கீர்த்தி கூறுகிறார்.

அவ்வாறே மட்டக்களப்பில் கடத்திச் செல்லப்பட்ட 11 வயதுச் சிறுமியும் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டாள் என்றும் கீர்த்தி மேலும் கூறுகிறார்.

இக்கடத்தல்கள், படுகொலைகளில் ஈடுபட்ட பிள்ளையான் குழு உறுப்பினர்களைப் பின்னர் பிள்ளையானே பொலீஸாரின் உதவியுடன் சுட்டுக் கொன்றான் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதர் தாரக்கி சிவராமைக் கொன்றது இனியபாரதியே - கீர்த்தி ரட்நாயக்க‌

தாரக்கி சிவராம் கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்திருந்த விடுதியில் தனது இரு நண்பர்களுடன் இணைந்து உணவருந்திவிட்டு வீடு திரும்பும் வேளையில் அவரைக் கருணா குழுவினரும் இராணுவப் புலநாய்வுத்துறையும் கடத்திச்சென்று கடுமையான சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்து, பின்னர் பாராளுமன்றக் கட்டடத் தொகுதி அமைந்திருக்கும் தியவன்னா வாவியின் சதுப்பு நிலப்பகுதியில் எறிந்துவிட்டுச் சென்றார்கள் என்று டி.பி.எஸ் ஜெயராஜ் உட்பட இன்னும் சில செய்தியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். தாரக்கியை கருணாவே தனிப்பட்ட ரீதியில் சுட்டுக் கொன்றான் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனாக் கீர்த்தி ரட்நாயக்கவின் செவ்வியில் பிள்ளையானின் அடியாட்களில் ஒருவனான இனியபாரதியே தாரக்கி சிவராமைக் கொன்றான் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் சிவராமைக் கொன்றது கருணா குழுவினர்தான் என்பது உண்மை, ஆனால் இக்கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவன் யாரென்பதில் இதுவரை தெளிவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சாமானியன் said:

ரொம்ப சரிங்க,

புள்ளைக்கு பதிலா பொறுப்பில் பங்கெடுத்துக்கொண்டிருக்கும் நாம் போயிடலாம் ஜெயிலுக்கு . கொஞ்சம் விஜாரிச்சு சொல்லிடுங்க , ஏங்கினை போய் ரிப்போர்ட் பண்றத்துன்னு

நாலு பேத்தோட அஞ்சாவதாகவோ ஆறாவதாவோ , புள்ளை

பொழை விட்டிடுச்சு .

கம்னு கெடப்பியா , அத்தை வுட்டுட்டு, பெனாத்திட்டிருக்கியே

பெனாத்தல் என கருதினாலும் முழுமையாக எனது கருத்தினை வாசித்தும் பின் பெனாத்தல்தானே என வெறுமனே கடந்து போகாமல் அந்த பெனாத்தல் கருத்திற்கு நேரம் எடுத்து பதிலிட்டமைக்கும் நன்றி.

அதிகார உணவுச்சங்கிலியில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் செய்யும் குறுங்கால சுயநல நடவடிக்கைகளும் அதே உணவுச்சங்கிலியில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் தொலைதூர நோக்கின்றி சுயநலனினால் தவறானவர்களை (50000 வாக்குகளால் வெற்றி அடைய செய்தவர்கள்) தெரிவு செய்தமையால் ஒரு சமூகத்திற்கு ஏற்படும் நீண்டகால பாதிப்பு பற்றி கட்டுரை மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளது, அதற்கு பதிலூட்டம் செய்த எனது கருத்தில் சமூகத்தில் அதிகார உயர்மட்டமும் அடிமட்டமும் மட்டும் சுயநலனிற்காக தவறிழைக்கவில்லை அனைத்து மட்டங்களிலும் தவறுள்ளது என்பதே இந்த கருத்தாடல்களின் இரத்தின சுருக்கம் ஆகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ரஞ்சித் said:

உங்கள் நேரத்திற்கும் எழுத்துக்களுக்கும் நன்றி ரஞ்சித்.

தம் சொந்த இனத்தையே அழிக்க துணை போனவர்களை என்னவென்பது? பிரதேசவாதம் எனும் போர்வையில் தம் கண்ணை தாமே குத்திக்கொள்கின்றனர்.

மற்றவர்கள் எதிலும் சழைக்காமல் புலிகளை எதிர்க்கிறோம் எனும் போர்வையில் தமது மலத்தை தமது மூக்கில் வைத்து நுகர்ந்தவர்கள் அதன் பலன்களை இன்று அனுபவிக்க ஆரம்பிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, vasee said:

தவறுகளுக்காக உருவாக்கின சித்தாந்தம்தான் இந்த பிரதேசவாதம்

இந்தியா தமிழ்நாட்டில் சாதி கட்சிகள் போன்று. இலங்கையில் நல்லது ஒன்று சாதி கட்சிகள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2025 at 09:58, விளங்க நினைப்பவன் said:

இந்தியா தமிழ்நாட்டில் சாதி கட்சிகள் போன்று. இலங்கையில் நல்லது ஒன்று சாதி கட்சிகள் இல்லை.

எது விலை போகிறதோ அதனை பயன்படுத்துகிறார்கள், இலங்கையில் மதம், பிரதேசவாதம் போல (தமிழ் தேசியம் கூட அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது) இந்தியாவில் சாதியம் பயன்படுத்தப்படுகிறது, இவை எல்லாவற்றிற்கு பொதுவான ஒற்றுமை சாதி, மதம், பிரதேசவாதம் என்பவை என்ன என்று உய்த்தறிந்து உணரமுடியாவிட்டாலும் அவற்றின் பேரால் மக்களை தம்பக்கம் இழுக்க முடிகிறது அதன் மூலம் அதிகாரத்தினை பெறமுடிகிறது, பின்னர் அதன் பெயரால் அவர்களையே அழிக்க முடிகிறது.

சாதாரணமாக சிந்திக்க முடிந்த மனிதனால் இந்த மூட நம்பிக்கைகளில் வெளிவரமுடியாமல் இருக்கின்றமையால் அதனை அவர்கள் பயன்படுத்தி அனுகூலமடைகிறார்கள்.

இதனை புரிய வைக்க முயன்றால் அப்படி முயற்சிப்பவர்கள் மேல் கோபங்கொள்கிறார்கள், அடுத்த இரண்டு சந்ததிகளின் பின்னர் இவை காணாமல் போய்விடும், ஆனால் என்ன எமது சமூகம் அப்போது உலக ஓட்டத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருப்பார்கள்.

மக்களின் புலம் பெயர்வு புதிய சிந்தனைகளுக்கான அடித்தளமாக இருந்தாலும் புலம் பெயர்ந்தவர்களில் மிகவும் பின் தங்கியவர்கள் இந்த மாற்றத்தினை விரும்பாமல் அதற்கு எதிர்ப்பு கொடி தூக்குவதன் நோக்கம், மாற்றம் வந்தால் கால மாற்றத்திற்கேற்ப தம்மை உயர்த்த முடியாத இவர்கள், தாம் இந்த மாற்றங்களினால் காணாமல் போய்விடுவோம் என அஞ்சுகிறார்கள்.

அது தேவையற்ற பயம், ஊரார் பிள்ளையினை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்பார்கள், பொது நலனில் கூட நாங்கள் விரும்பும் சுயநலம் உள்ளது.

மனிதனை சிந்திக்க தெரிந்த மிருகம் என கூறுகிறார்கள், எமது சமூகம் சிந்திக்க விரும்பாத சமூகம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2025 at 10:26, vasee said:

கருணா, பிள்ளையா தமது தவறுகளுக்காக உருவாக்கின சித்தாந்தம்தான் இந்த பிரதேசவாதம், சுய நலன் இருப்பதில் தப்பில்லை ஆனால் அதனால் மற்றவர்கள்

பிரதேசவாத சித்தாந்தம் போலத்தான் இடது சாரி சித்தாந்தமும் ...மக்கள் மாறிகொண்டே போவார்கள் .இந்த இடதுசாரி சித்தாந்தமும் நிலைத்து நிற்கப்போவதில்லை ..ஐயோ இந்த பழம் புளிக்கிறதே என சொல்லும் காலமும் வரும்...

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, vasee said:

சாதாரணமாக சிந்திக்க முடிந்த மனிதனால் இந்த மூட நம்பிக்கைகளில் வெளிவரமுடியாமல் இருக்கின்றமையால் அதனை அவர்கள் பயன்படுத்தி அனுகூலமடைகிறார்கள்.

நீங்கள் கூறுவது 100% உண்மை ...ஆனால் மனிதன் இன்னும் வளர்ச்சியடையவில்லை.. நீங்கள் நினைப்பது போல வாழ்வதற்கு..பலர் வந்தார்கள் உபதேசம் பண்ணினார்கள் மாற்ற முயன்றார்கள் ஆனால் அவர்களை வைத்தே பல குழப்பங்களை நிறந்தரமாக உருவாக்கி அந்த குழப்பத்தை நிரந்தரமாக மாற்றிவிட்டார்கள்.....

அனுகூலம் அடைவதுதான் மனித இயல்பு என்ற நிலையில் தான் மனிதர்கள் செய்லபடுகின்றனர் ...அதை என்ன விலை கொடுத்தாவது பெற்று கொள்ளலாம் என மனிதர்கள் நினைக்கின்றனர் ...உலக கட்டமைப்பு அப்படித்தான் உள்ளது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.