Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நம்புவது நம்பாதது உங்கள் விருப்பம்.

ஹரி ஆனந்தசங்கரி சோழ அரச வம்ச வாரிசு.

ஓலைசுவடியில் நான் படித்து அறிந்தது.

நீங்கள் றீல் விடுகிறீர்கள். 🤣

கனடா ஹரி ஆனந்த சங்கரி, நம்ம கிளிநொச்சி உடும்பு ஆனந்தசங்கரியின் மகன் என்று பலரும் சொல்கிறார்கள். அதன் உண்மைத் தன்மை பற்றி தெரிந்தவர்கள் கூறினால் நல்லது.

சோழ அரச வம்ச வாரிசு என்பதெல்லாம்... உடான்ஸ் சாமியாரின் உருட்டு. 😂

  • Replies 82
  • Views 3.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பிக்கரிங் இல் ஜுனித்தா நாதன் எனும் தமிழ் பெண்ணும் வெற்றி. டிரம்பின் புண்ணியத்தில் மீண்டும் ஆட்சியில் அமர்கிறது லிபரல் கட்சி. நிழலி, வாலி செம அப்செட்டில் இருப்பார்கள் என நினைக்கிறேன்🤣. ரிருடோ வைவிட கா

  • "தம்புவின்" ஆட்சியில் 100 வது நாள் நிறைவுக்கான பரிசு, கனடாவிடமிருந்து😂!

  • நிழலி
    நிழலி

    லிபரல் தான் ஆட்சிக்கு வருவார்கள் என தெரியும். இதனை நான் மார்ச் 16 இலேயே எழுதியிருந்தேன். இந்த திரியில் நான் எழுதிய ஒரு விடயத்தை மட்டும் இறுதி நேரத்தில் செய்யவில்லை. அதாவது பழமைவாத கட்சிக்கு வாக்களிக்க

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள் றீல் விடுகிறீர்கள். 🤣

கனடா ஹரி ஆனந்த சங்கரி, நம்ம கிளிநொச்சி உடும்பு ஆனந்தசங்கரியின் மகன் என்று பலரும் சொல்கிறார்கள். அதன் உண்மைத் தன்மை பற்றி தெரிந்தவர்கள் கூறினால் நல்லது.

சோழ அரச வம்ச வாரிசு என்பதெல்லாம்... உடான்ஸ் சாமியாரின் உருட்டு. 😂

அதென்ன உடான்ஸ் சாமியார் சொன்னா மட்டும் நம்பமாட்டியள்😂.

பிகு

ஓம் கரி, கிளிநொச்சி உடும்பரின் மகந்தான்.

கரி சிறுவனாக இருக்கும் போதே தாய் மனகசப்பில் பிரிந்து விட்டதாயும். 80 களின் முற்பகுதியில் (83 கலவரதோடாக இருக்கலாம்) தாயும் மகனும் சிலகாலம் அயர்லாந்தில் வசித்து பின் கனடா போயினராம்.

உடும்பருக்கும் அவரின் இரெண்டாம் மனைவி யோகம் என்பவருக்கும் பிறந்த பிள்ளைதானாம், கரி எனப்படும் சத்தியசங்கரி.

இவர்களின் உறவான இன்னொரு சங்கரியுடன் நான் இரு வருடம் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தேன்.

விக்கியின் footnotes இல் நான் சொன்னதற்கு முதன்மை ஆதாரம் உள்ளது.

Anandasangaree, born in Jaffna in 1973, is the son of V. Anandasangaree, a leading Sri Lankan Tamil politician,[2] by his second wife, Yogam.[3] His parents separated in 1980 and he and his mother moved to Ireland, where she had relatives.[4] They had planned to return to Sri Lanka in July 1983; but when the Black July anti-Tamil riots broke out,[4]Anandasangaree and his mother travelled to Canada on August 31, 1983.[4][5] Anandasangaree is estranged from his father and has only met him twice since 1983.[4][5]

https://en.m.wikipedia.org/wiki/Gary_Anandasangaree

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2025 at 10:14, goshan_che said:

நிழலி, வாலி செம அப்செட்டில் இருப்பார்கள் என நினைக்கிறேன்🤣.

ஆம் நானும் அப்படி தான் நினைக்கிறேன் 🤣. ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் கனடாக்கு கிடைத்த மிகச்சிறந்த பிரதமர் இவராகும். இப்படி ஒரு பிரதமர் கிடைக்க.

நிழலி. வாலி. .......போன்ற கனடா உறவுகள் உழைத்தது கிடையாது எங்களுக்கு ஒரு பிரதமர் கிடைத்து இருக்கிறார் பாருங்கள் நரம்பு தளர்ச்சி நோயாளர்கள் போல் அடிக்கடி தலையை அட்டியபடி பென்சன். 300 யூரோ கூட்டியள்ளதாய். செய்திகள் சொல்கிறார்கள் ஆனால் நானும் இரண்டு கிழமையாய் வங்கியில் பார்க்கிறேன். பணம் ஒரு சதம். கூட. பென்சன். என்று வரவு வைக்கப்படவில்லை. ...இதைவிடவும் அந்த Afd இன். தலைவி பிரதமர் ஆகி இருந்தால் ரம்ட்ப. போல் எங்களை எல்லாம் இராணுவ விமானங்களில். சங்கிலியால். காலை கையை கட்டி பலாலியில் யாழ்ப்பாண விமான நிலையத்தில் கொண்டுபோய். இறக்கி இருப்பார் 🤣😂🤪

1 hour ago, தமிழ் சிறி said:

ஹரி ஆனந்தசங்கரி நாட்டுப் பற்று உள்ளவர். அத்துடன் திறமைசாலி.

அவர் மீண்டும் அமைச்சராக வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நிச்சயமாக நீங்கள் சொல்வது சரி இவரை விட பிரதமர் சிறந்த ஆளுமையுள்ளவர். ரம்பட். அமெரிக்காவை கனடாவுன். இணைந்து கொள்ளுங்கள் என்று சொன்னாலும் சொல்லலாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள் றீல் விடுகிறீர்கள். 🤣

கனடா ஹரி ஆனந்த சங்கரி, நம்ம கிளிநொச்சி உடும்பு ஆனந்தசங்கரியின் மகன் என்று பலரும் சொல்கிறார்கள். அதன் உண்மைத் தன்மை பற்றி தெரிந்தவர்கள் கூறினால் நல்லது.

சோழ அரச வம்ச வாரிசு என்பதெல்லாம்... உடான்ஸ் சாமியாரின் உருட்டு. 😂

கூகுள் இல். இவரின்  வாழ்க்கை வரலாறு உண்டு” தேடிப். பாருங்கள் ஆங்கிலத்தில் தான் உண்டு”

மற்றும் சோதிடர்மார். சந்தர்ப்பங்களை வடிவாகப். பயன்படுத்துவது உண்டு”

மக்கள் நம்பும்படியாக. சோதிடம். சொல்லி உழைத்து விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

ஆம் நானும் அப்படி தான் நினைக்கிறேன் 🤣. ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் கனடாக்கு கிடைத்த மிகச்சிறந்த பிரதமர் இவராகும். இப்படி ஒரு பிரதமர் கிடைக்க.

நிழலி. வாலி. .......போன்ற கனடா உறவுகள் உழைத்தது கிடையாது எங்களுக்கு ஒரு பிரதமர் கிடைத்து இருக்கிறார் பாருங்கள் நரம்பு தளர்ச்சி நோயாளர்கள் போல் அடிக்கடி தலையை அட்டியபடி பென்சன். 300 யூரோ கூட்டியள்ளதாய். செய்திகள் சொல்கிறார்கள் ஆனால் நானும் இரண்டு கிழமையாய் வங்கியில் பார்க்கிறேன். பணம் ஒரு சதம். கூட. பென்சன். என்று வரவு வைக்கப்படவில்லை. ...இதைவிடவும் அந்த Afd இன். தலைவி பிரதமர் ஆகி இருந்தால் ரம்ட்ப. போல் எங்களை எல்லாம் இராணுவ விமானங்களில். சங்கிலியால். காலை கையை கட்டி பலாலியில் யாழ்ப்பாண விமான நிலையத்தில் கொண்டுபோய். இறக்கி இருப்பார் 🤣😂🤪

உங்கட ஆளும் அதிகம் மோசம் இல்லை.

சொன்னது போல் ஜேர்மனியை மீண்டும் ஒரு இராணுவ தன்னிறைவு நாடாக மாற்றினால் ஆள் கெட்டிக்காரன் என சொல்லலாம்.

பலாலியில் கைவிலங்கோடு இறங்கல் - இப்படி வரலாம் என சொன்ன போது பலர் இங்கே அதை மிகை கற்பனை என்றார்கள்.

ஆனால் டிரம்ப் அண்மையில் ஒரு அமெரிக்கன் சிட்டிசன் குழந்தையை இப்படி நாடு கடத்தியுள்ளார்.

இன்னொரு கொலம்பியனை நீதி மன்ற ஆணையை மீறி அனுப்பி விட்டு, நேற்று ஏ பி சி நிருபர் பேட்டியில் - போட்டோஷாப் படம் ஒன்றை காட்டி அவன் கையில் ஒரு கிரிமினல் பாதாள உலக குழு முத்திரை இருந்தது என மொக்குதனமாக பொய் சொல்கிறார்.

எதிர்த்த இரெண்டு ஜட்ஜுகளை கைது செய்துள்ளார்.

அமெரிக்காவை கிட்டதட்ட முகாபேயின் சிம்பாப்வே போல ஆக்கிவிட்டார் டிரம்ப்.

AfD ஜேர்மனியில் ஆட்சி அமைத்தால், இதை விட பல மடங்கு நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் மார்க் கானி தான் ஒரேயொரு வெளிநாட்டவர் (Canadian, முடிக்கு கீழ் வந்தாலும்), Bank of England இன் கவர்னர் ஆக இருந்தது.

( அந்த நேரத்தில் Bank of England இன் கவர்னர் பதவிக்கு இன்னொருவரும் கருத்தில் எடுக்கப்பட்டார், அனால் , அவர் Australian. அவர் அவருக்கு பதவி நிச்சயம் என்று நம்பி வீடும் பார்க்க தொடங்கினார்)

பதவி மார்க் கானிக்கு.

(இங்கிலாந்து அரச குடும்பத்தில் எந்தவொருவரும் ஆஸ்திரேலியாவில் எப்போதும் நிரந்தரமாக குடியேறவிலை என்பதும்.)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

மார்க் கார்னிக்கு பிரிட்டன் பிரஜாவுரிமையும், அயர்லாந்துப் பிரஜாவுரிமையும் இருந்திருக்கின்றனவே? அவர் பிரதமரான போது தான் இந்த இரு பிரஜாவுரிமைகளையும் துறந்திருக்கிறார். எப்படி வெளிநாட்டவர் என்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

மார்க் கார்னிக்கு பிரிட்டன் பிரஜாவுரிமையும், அயர்லாந்துப் பிரஜாவுரிமையும் இருந்திருக்கின்றனவே? அவர் பிரதமரான போது தான் இந்த இரு பிரஜாவுரிமைகளையும் துறந்திருக்கிறார். எப்படி வெளிநாட்டவர் என்கிறீர்கள்?

இருந்து இருக்கலாம்,

(அனால், அவர் ஒரு கனேடியர் பிறப்பில்.)

ஏனெனில் பிரிதானிய அப்படி ஒரு பிரசாவுரிமை வைத்து இருந்தது. அதாவது, தாய் வழி தொடர்பு இருந்தால், வேறு எங்கு பிறந்து இருந்தாலும்.

எப்போது எடுக்கப்பட்டது என்று இருக்கிறதா?

அந்த பிரசவுரிமை registration (என்றார் நினைக்கிறன்) மூலம் வழங்கப்படும்.

(தேடியதில் 2018 என்று இருக்கிறது, சிலவேளைகளில் honorary ஆக வழங்கப்பட்டு இருக்கலாம்.)

அப்பை அயர்லாந்த்ம் ஐந்து இருக்கிறது, பிரக்ஸிட் வந்த பொது, ஒன்றில் இரத்த அயர்லாந்து தொடர்பு அல்லது திருமண அலியாக அந்த தொடர்பு வழியாக பலர் அயர்லாந்து பிரசாவுரிமை எடுத்தனர்.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தேர்தலில் இலங்கை தமிழர்கள் வெற்றி

வெற்றிபெற்ற ஹரி ஆனந்தசங்கரி சோழ அரச வம்ச வாரிசு

இவற்றை எல்லாம் படித்துவிட்டு ஒருவர் யுரியுப் வெளியிடுகின்றார்

கனடாவில் நடந்த அதிரடி மாற்றம் மகிழ்ச்சியில் தமிழர்கள் கலக்கத்தில் அமெரிக்கா

இதை எல்லாம் பார்த்துவிட்டு இது தான் கனடா சென்று செற்றிலாவதற்கான சரியான நேரம் என்று இலங்கையில் இருந்து தமிழர்கள் நம்பிக்கையுடன் கனடா செல்வதற்கு திட்டமிடாமல் இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அனிதா ஆனந்தையும் சேர்த்து 3 தமிழர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என எமது இணைய தளங்கள் பெருமை கொள்கின்றன. இவர் தமிழ்நாட்டை சேர்ந்த தந்தையையும் பஞ்சாப்பை சேர்ந்த தாயாரையும் உடையவர். கனடாவில் பிறந்தவர்.

என் டி பியின் ஜாக்மிட் சிங் இந்தியாவில் பிரிவினை வாதத்தை ஊக்குவித்தவர். தனது தொகுதியில் தோற்றுள்ளார்.தனது கட்சி தலைமையை விட்டு விலகி உள்ளார். ஜாக் லெயிட்டன் கட்டியமைத்த கட்சியை சுக்கு நூறாக்கி விட்டார்.

பொலிவியரின் கட்சி 144 ஆசனங்களை பெற்ற போதும் கட்சி தலைவர் பொலிவியர் தோல்வி அடைந்துள்ளார். இவருக்கு எதிராக போட்டியிட்டவர்கள் 91 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு மிக நீண்ட வாக்கு சீட்டாக கூட கனடிய வரலாற்றில் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

கனடா தேர்தலில் இலங்கை தமிழர்கள் வெற்றி

வெற்றிபெற்ற ஹரி ஆனந்தசங்கரி சோழ அரச வம்ச வாரிசு

இவற்றை எல்லாம் படித்துவிட்டு ஒருவர் யுரியுப் வெளியிடுகின்றார்

கனடாவில் நடந்த அதிரடி மாற்றம் மகிழ்ச்சியில் தமிழர்கள் கலக்கத்தில் அமெரிக்கா

இதை எல்லாம் பார்த்துவிட்டு இது தான் கனடா சென்று செற்றிலாவதற்கான சரியான நேரம் என்று இலங்கையில் இருந்து தமிழர்கள் நம்பிக்கையுடன் கனடா செல்வதற்கு திட்டமிடாமல் இருக்க வேண்டும்

ஏன??? இலங்கையில் இருந்து சட்டப்படி எல்லா நாட்டுக்கும். வரலாம். சட்டம் அனுமதிக்கும் போது இப்படி பல நாடுகளை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு விசா எடுத்துக் கொண்டு போகிறார்கள் மருந்துவர்கள் பொறியியலாளர்கள். .........போன்றோர் வரலாம்” எனது ஊரை சேர்ந்த இருவர் கனடாவுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் வந்தவர்கள் கனடாவில் காராச். வைத்து இருக்கும் ஒருவர் ஸ்பென்சார். பண்ணி கூப்பிட்டார். .....இப்படி வருவது நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

நான் வசிக்கும் Alberta province ஒட்டோவை கடுமையாக பகைக்கும் முடிவை எடுத்து இருக்கிறது.

Alberta கனடாவில் இருந்து தனியாகப் போக வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் பலமாக கேட்க ஆரம்பித்து உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

கனடா தேர்தலில் இலங்கை தமிழர்கள் வெற்றி

வெற்றிபெற்ற ஹரி ஆனந்தசங்கரி சோழ அரச வம்ச வாரிசு

இவற்றை எல்லாம் படித்துவிட்டு ஒருவர் யுரியுப் வெளியிடுகின்றார்

கனடாவில் நடந்த அதிரடி மாற்றம் மகிழ்ச்சியில் தமிழர்கள் கலக்கத்தில் அமெரிக்கா

இதை எல்லாம் பார்த்துவிட்டு இது தான் கனடா சென்று செற்றிலாவதற்கான சரியான நேரம் என்று இலங்கையில் இருந்து தமிழர்கள் நம்பிக்கையுடன் கனடா செல்வதற்கு திட்டமிடாமல் இருக்க வேண்டும்

மிக அமைதியான நாடு. அமெரிக்கா (நேட்டோ) வுடன் சேர்ந்ததால் பிழையான பெயர் கனடாவுக்கு வரலாம்.

அதே நேரம் அகதிகளை ஏற்கும் நாடுகளில் கனடாவும் முதன்மை பெறுகிறது. எம்மவர்கள் பலர் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை முன்னாள் அமைச்சர்(Bob Ray) ஒருவர் கூறும் போது குறுகிய காலத்த்தில் முன்னேறி நல்ல நிலைக்கு (பணக்காரர்களாக) வந்த ஒரு சமூகமாக குறிப்பிடுகிறார்.

கனடாவின் சுத்தமான நீரே அவர்களின் இலகுவான வருமானம் மிக நீண்ட கால நோக்கில்.

பெற்றோலியம், யூரேனியம் என்பன சொல்லவே தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இவர்களின் உறவான இன்னொரு சங்கரியுடன் நான் இரு வருடம் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தேன்.

அந்த சங்கரி உங்கள் தலை நகரத்தில் தான் வசிக்கின்றார், சந்திக்கவில்லையா? நல்ல பெட்டியன், கதைத்தால் அறுவை தாங்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

Gary Anandasangaree

 is in Scarborough, Toronto.

1d  · 

Over the past ten years, I’ve been given the opportunity to represent #SGRP — and now you’ve given me a fourth term to represent you in Ottawa. I wouldn’t have made it this far without the unwavering support of so many incredible people. ❤️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">

To every single person who believed in this campaign, who volunteered their time, who showed up at events, knocked on doors, made calls, donated, shared our Liberal message, and lifted us up—thank you from the bottom of my heart. Your energy, your belief, and your commitment made this campaign what it is.

This campaign was never just about one person—it was about a shared Liberal vision. It was powered by people who care deeply about their communities, and what happens when threats are made against our sovereignty.

I’ve seen firsthand what we can accomplish when we come together and I couldn’t be more grateful that you’re putting your trust in me again. 🇨🇦" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/taa/1/16/1f1e8_1f1e6.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">

491447556_18499311370005555_444119005604

494654297_18499311373005555_899762526163

491445336_18499311397005555_648450495327

494550200_18499311400005555_752097956686

495022917_18499311412005555_538098992880

ஒவ்வொரு தேர்தல் காலம் வரும் போதும் தமிழர்கள் என்ற காரணத்தினால் என்னால் முடிந்தவரை சில நிபந்தனைகளோடு அவர்களுக்கு தொண்டர் அடிப்படையில் போய் உதவி செய்வேன்..எனது வீட்டுக்கு கிட்டவாகவும் இருந்த காரணத்தினால்,,,,,,,,,,,, இந்த தேர்தல் காலத்தில் இவரது அலுவலகத்தில் சில பணிகளில் பங்கு பற்றியிருந்தேன்.அலுவலத்திற்கு வருவார். அதிகம் யாரோடும் பேச மாட்டார். மிகவும் அமைதியானவர்.யாரையும் ஒரு வார்த்தையால் கூட நோகடிக்க மாட்டார்.புதியவர்களை கண்டால் கொஞ்ச நேரம் பக்கத்தில் வந்திருந்து எங்கள் படிப்பு, வேலை மற்றும் உதவிகள் ஏதாவது தேவையா என்று கேட்பார் போய் விடுவார்.என்னைப் பொறுத்த மட்டில் இலங்கை அரசியல் வாதிகளையும் இங்குள்ளவர்களையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, யாயினி said:

giphy.gif

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

மார்க் கார்னிக்கு பிரிட்டன் பிரஜாவுரிமையும், அயர்லாந்துப் பிரஜாவுரிமையும் இருந்திருக்கின்றனவே? அவர் பிரதமரான போது தான் இந்த இரு பிரஜாவுரிமைகளையும் துறந்திருக்கிறார். எப்படி வெளிநாட்டவர் என்கிறீர்கள்?

அவர் வீட்டில் படுத்திருந்து விட்டைத்தை பார்த்து கதை சொல்லுகிறார் என்றால் அதை எல்லாம் சீரியசா எடுத்தா கேள்வி கேட்பீர்கள்😀.

மார்க்கானி பேங் ஆப் இங்கிலாந்தின் கவர்னர் ஆகும் போது அவரிடம் கனேடிய பிரஜாஉரிமை, மற்றும் பாட்டன்/பாட்டி வழி மூலம் கிடைத்த ஐரிஷ் பிரஜா உரிமை இருந்தன.

அதன்பின் அவர் யூகேயில் 5 வருடங்களை பூர்த்தி செய்து, ஏனையோரை போல citizenship வழிமுறை படி பிரித்தானிய பிரசை ஆனார்.

ஆதாரம் கீழே:

Honorary citizenship எல்லாம் நம்ம கடஞ்சா, கடைந்த பருப்பு துவையல் 😀.

The Standard
No image preview

The Londoner: Carney to become a British citizen

Mark Carney to receive citizenship / Labour figures fail to add up / Michael Caine's hazy memories / Christopher Meyer makes speedy recovery

கொசுறு

  1. கார்னியின் மனைவி பலகாலமாக (பிறப்பில் இருந்தாக இருக்கலாம்) பிரிதானியர்.

  2. கார்னியின் மகள் தஜ்தையை போல ஹாட்வர்ட்டில் படிக்கிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, உடையார் said:

அந்த சங்கரி உங்கள் தலை நகரத்தில் தான் வசிக்கின்றார், சந்திக்கவில்லையா? நல்ல பெட்டியன், கதைத்தால் அறுவை தாங்க முடியாது

அப்படியா? அப்போதே அதிகம் பழக்கமில்லை. என்னை நியாபகம் இருக்குமோ தெரியவில்லை. அவர்களின் இன்னொரு உறவான யோகசங்கரி எம்பியான பின் இவர் பள்ளியில் வந்து சேர்ந்தார் என நினைக்கிறேன். மிகவும் சாதுவான குணம். அப்போ அதிகம் கதைப்பவராக நியாபகம் இல்லை. நானும் விரைவிலேயே பள்ளி மாறி விட்டேன்.

25 minutes ago, யாயினி said:

என்னைப் பொறுத்த மட்டில் இலங்கை அரசியல் வாதிகளையும் இங்குள்ளவர்களையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன்.

நிச்சயமாக.

புலம் பெயர்தேசத்தில் அமைதியாக ஆனால் வினைத்திறனாக ஈழத்தமிழர் விடயத்தில் ஆமான காரியம் செய்பவர்களில் இவரும் ஒருவர்.

தந்தையை இரு தடவை மட்டும் சந்தித்தாதாலோ என்னமோ அவரினை போல் இவர் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

மிக அமைதியான நாடு. அமெரிக்கா (நேட்டோ) வுடன் சேர்ந்ததால் பிழையான பெயர் கனடாவுக்கு வரலாம்.

அதே நேரம் அகதிகளை ஏற்கும் நாடுகளில் கனடாவும் முதன்மை பெறுகிறது. எம்மவர்கள் பலர் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை முன்னாள் அமைச்சர்(Bob Ray) ஒருவர் கூறும் போது குறுகிய காலத்த்தில் முன்னேறி நல்ல நிலைக்கு (பணக்காரர்களாக) வந்த ஒரு சமூகமாக குறிப்பிடுகிறார்.

கனடாவின் சுத்தமான நீரே அவர்களின் இலகுவான வருமானம் மிக நீண்ட கால நோக்கில்.

பெற்றோலியம், யூரேனியம் என்பன சொல்லவே தேவை இல்லை.

பனீர் ஐ விட்டு விட்டீர்களே ..

நேற்று இங்கே மெல்பேர்னில் வாங்கியது , மேட் இன் கனடா , Fried paneer கிலோ $20 .

இலங்கை சமாச்சாரம் நிறைய இருக்கு அந்த கடையில்

அநேகமானவற்றில் லேபிள் சிங்களத்திலும் இங்கிலீஷிலும் மட்டுமே உண்டு , அவற்றினை தவிர்த்து விடுவேன் .

( உப்பிட பேரைப் பார்க்கதேடா மடையா, டேஸ்ட்டை மட்டும் பாரடா .. Mind voice )

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகிடி said:

நான் வசிக்கும் Alberta province ஒட்டோவை கடுமையாக பகைக்கும் முடிவை எடுத்து இருக்கிறது.

Alberta கனடாவில் இருந்து தனியாகப் போக வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் பலமாக கேட்க ஆரம்பித்து உள்ளது

முன்பு ஒருமுறை சர்வசன வாக்கெடுப்பு நடந்து கனடா ஒன்றாக இருக்க வேண்டும் என்று முடிவு வந்தாதக ஞாபகம்

5 hours ago, யாயினி said:

Gary Anandasangaree

 is in Scarborough, Toronto.

1d  · 

Over the past ten years, I’ve been given the opportunity to represent #SGRP — and now you’ve given me a fourth term to represent you in Ottawa. I wouldn’t have made it this far without the unwavering support of so many incredible people. ❤️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">

To every single person who believed in this campaign, who volunteered their time, who showed up at events, knocked on doors, made calls, donated, shared our Liberal message, and lifted us up—thank you from the bottom of my heart. Your energy, your belief, and your commitment made this campaign what it is.

This campaign was never just about one person—it was about a shared Liberal vision. It was powered by people who care deeply about their communities, and what happens when threats are made against our sovereignty.

I’ve seen firsthand what we can accomplish when we come together and I couldn’t be more grateful that you’re putting your trust in me again. 🇨🇦" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/taa/1/16/1f1e8_1f1e6.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">

491447556_18499311370005555_444119005604

494654297_18499311373005555_899762526163

491445336_18499311397005555_648450495327

494550200_18499311400005555_752097956686

495022917_18499311412005555_538098992880

ஒவ்வொரு தேர்தல் காலம் வரும் போதும் தமிழர்கள் என்ற காரணத்தினால் என்னால் முடிந்தவரை சில நிபந்தனைகளோடு அவர்களுக்கு தொண்டர் அடிப்படையில் போய் உதவி செய்வேன்..எனது வீட்டுக்கு கிட்டவாகவும் இருந்த காரணத்தினால்,,,,,,,,,,,, இந்த தேர்தல் காலத்தில் இவரது அலுவலகத்தில் சில பணிகளில் பங்கு பற்றியிருந்தேன்.அலுவலத்திற்கு வருவார். அதிகம் யாரோடும் பேச மாட்டார். மிகவும் அமைதியானவர்.யாரையும் ஒரு வார்த்தையால் கூட நோகடிக்க மாட்டார்.புதியவர்களை கண்டால் கொஞ்ச நேரம் பக்கத்தில் வந்திருந்து எங்கள் படிப்பு, வேலை மற்றும் உதவிகள் ஏதாவது தேவையா என்று கேட்பார் போய் விடுவார்.என்னைப் பொறுத்த மட்டில் இலங்கை அரசியல் வாதிகளையும் இங்குள்ளவர்களையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன்.

நிறைய படங்களுடன். அருமையான தகவல்கள் இவர் மேலும் வளர்ச்சி அடைவார். என நம்புகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

அந்த சங்கரி உங்கள் தலை நகரத்தில் தான் வசிக்கின்றார், சந்திக்கவில்லையா? நல்ல பெட்டியன், கதைத்தால் அறுவை தாங்க முடியாது

சங்கரியின். தகப்பன். வீரசிங்கம். இரண்டு திருமணம் செய்தவர். ஆனந்தசங்கரி முதல் தரம் அவர் தனியாக தான் இருக்க வேண்டும். மற்ற தரத்துக்கு மூன்று பேர் இருக்கலாம் 2003 இல் யோகசங்கரியைப். பார்த்தேன் நான் தங்கி இருந்த வீட்டுக்கு எனது மைத்துனருடன் வந்தார் நாலு ஆமியும் கூட. வந்தார்கள் மற்றவர் பெயர் உமாசங்கரி .......

  • கருத்துக்கள உறவுகள்

(நேட்டோ) வுடன் சேர்ந்ததால் பிழையான பெயர் கனடாவுக்கு வரலாம்.என்பதை தவிர

8 hours ago, nunavilan said:

அதே நேரம் அகதிகளை ஏற்கும் நாடுகளில் கனடாவும் முதன்மை பெறுகிறது. எம்மவர்கள் பலர் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை முன்னாள் அமைச்சர்(Bob Ray) ஒருவர் கூறும் போது குறுகிய காலத்த்தில் முன்னேறி நல்ல நிலைக்கு (பணக்காரர்களாக) வந்த ஒரு சமூகமாக குறிப்பிடுகிறார்.

கனடாவின் சுத்தமான நீரே அவர்களின் இலகுவான வருமானம் மிக நீண்ட கால நோக்கில்.

பெற்றோலியம், யூரேனியம் என்பன சொல்லவே தேவை இல்லை.

👍

7 hours ago, goshan_che said:
8 hours ago, யாயினி said:

என்னைப் பொறுத்த மட்டில் இலங்கை அரசியல் வாதிகளையும் இங்குள்ளவர்களையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன்.

நிச்சயமாக.

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

முன்பு ஒருமுறை சர்வசன வாக்கெடுப்பு நடந்து கனடா ஒன்றாக இருக்க வேண்டும் என்று முடிவு வந்தாதக ஞாபகம்

அது பிரெஞ் மொழி பேசும் கியூபெக் மாகாணத்தில் (மொண்டிரியல் தலைநகர்).

அல்பேர்ட்டா, வான்கூவர் (மேற்கு), ரொடெண்டோ (கிழக்கு) இடையே இருக்கும் மத்திய கனடா மாநிலம், தெற்கு எல்லை அமேரிக்கா.

5 hours ago, Kandiah57 said:

2003 இல் யோகசங்கரியைப். பார்த்தேன் நான் தங்கி இருந்த வீட்டுக்கு எனது மைத்துனருடன் வந்தார் நாலு ஆமியும் கூட. வந்தார்கள்

அண்ணேய் உங்களுக்கு பேய் பிசாசு சகவாசம் இருக்கோ😂.

யோகசங்கரியை ஜூன் 1990 இல் சென்னையில் வைத்து நாபாவோடு இன்னும் பலரோடு புலிகள் போட்டுதள்ளி விட்டார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

(முதலில் நான் சொன்னது சுருக்கமாக.)

மார்க் கானி 2012 பதவியில் வரும் போது பிரித்தானிய பிரச உரிமை இல்லை. இதுவே உண்மை, அன்றைய யதார்த்தம்.

ஒரு பத்திரிகை சொன்னது 300 வருடம் அளவில் மீண்டும் வெளிநாட்டவர். மற்றவை முதல் முறை வெளிநாட்டவர் மார்க் கானி பதவியில் வருகிறார் என்று.

(ஆயினும் (பிரித்தானிய பிரஷை ஆகும் தகமை) இருந்து இருக்கலாம் என்று நான் சொன்னது (மார்க் கானி அதை பற்றி பொருட்படுத்தாமல், மற்றது (உத்தியோகபூர்வமாக) எடுக்காமலும், ஏனெனில் மார்க் கானியின் தாய் வழி பற்றி அன்றும், இன்றும் தெரியாது)).

(சிலருக்கு எல்லா பிரவுரிமையும், தகமையும், பெறும் காலம் ஒன்றாக, பிரித்தானியா பிரசா உரிமையாக தெரிகிறது போல இருக்கிறது.)

மற்றது, மார்க் கானி London இல் கணிசமான காலம் வேலை செய்தவர், Goldman Sachs இல் (அவரின் அயர்லாந்து குடிஉரிமையினால்), வேறு நிறுவனங்களும் இருக்கலாம்.

(மார்க் கானியின் இங்கிலாந்து அரச தொடர்பு அவருக்கே தெரியாமல் , ஏனெனில் அவர்களை பொறுத்தவரையில் அயர்லாந்தில் இருந்தே அவர்களின் மூதாதையர் கனடாவில் குடியேறிதாக)

(இப்படியான ஐரிஸ் - பிரித்தானிய இரத்த உறவு உள்ளோர் இப்போதும் இருக்கிறார்கள். இப்படியானவர்கள் பிரெக்ஸிற் இல் ஐரிஷ் பிரசவுரிமை எடுத்தது, eu வசதிக்காக)

அன்று, உண்மையில், மார்க் கானி, முதல் தெரிவுசெய்யப்பட்ட தொகுதியில் bank of england governor பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை.

பின், அன்றைய UK நிதி அமைச்சர் (இதை Chancellor of the Exchequer என்று UK அரசாங்க மொழியில் சொல்வது), George Osborne, மார்க் கானியை பல சந்திப்புகள் வழியாக விண்ணப்பிக்க சம்மதிக்க வைத்ததாக.

அன்று சொல்லப்பட்டது, கானி விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கோரல் காலம் முடிந்து விட்டதாக.

இதை bank of england க்குள் இருந்து விண்ணப்பித்தோர் எதிர்த்ததாக. இதை bank of england க்குள் இருந்து விண்ணப்பித்தோர் எதிர்த்ததாக, முக்கியமாக Paul Tucker, அன்று bookmakers இன் முதல் தெரிவு bank of england governor யாருக்கு கொடுக்கப்படும் என்பதில்,

இயற்கையாகவே ஒரேயொரு கேள்வி எழுகிறது , ஒரு அரசாங்கம், அந்த நேரத்தில் பிரசை அல்லாதவருக்கு, இவ்வளவு இறங்கி, ஏன் மார்க் கானியை உள்ளுக்கு கொண்டு வந்தது என்று?

(அனால், மார்க் கானி அரச தொடர்பு முன்பே தெரிந்ததா அல்லது பின்பு தெரிந்ததா, முக்கியமாக வெளியில், என்பது தெரியாது.)

(அன்றைய பிரதமர் david cameron உம் பல சந்ததிகள் கடந்த அரச குடும்ப நீட்சி, உறவு )

சொல்ல மறந்து விட்டேன் - மார்க் கானி மனைவி பிறப்பிலேயே பிரித்தானியர் தான், Oxford பல்கலைக்கழகத்தில் இணைந்தார்கள்.

குறிப்பு: நான் காலை எழும்பி, சும்மா பொத்தாம் பொதுவாக சொல்லுவதில்லை.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அது பிரெஞ் மொழி பேசும் கியூபெக் மாகாணத்தில் (மொண்டிரியல் தலைநகர்).

அல்பேர்ட்டா, வான்கூவர் (மேற்கு), ரொடெண்டோ (கிழக்கு) இடையே இருக்கும் மத்திய கனடா மாநிலம், தெற்கு எல்லை அமேரிக்கா.

அண்ணேய் உங்களுக்கு பேய் பிசாசு சகவாசம் இருக்கோ😂.

யோகசங்கரியை ஜூன் 1990 இல் சென்னையில் வைத்து நாபாவோடு இன்னும் பலரோடு புலிகள் போட்டுதள்ளி விட்டார்கள்.

அப்படியென்றால் பெயர் பிழையாகவிருக்கலாம். இவரின் மனைவி யாழ்ப்பாணம் கந்தரோடையாக இருக்கும் மனைவியின் சகோதரி. மொழி பெயர்ப்பளாராக. இங்கே இருக்கிறார் கணவர் விட்டுட்டு ஒடிவிட்டார் ஜேர்மன்காரனை திருமணம் செய்து உள்ளார் அவவிடம். இரண்டு மூன்று மருத்துவ நண்பர்களுணடு விசா நிராகரித்து நாட்டுக்கு இலங்கைக்கு போகுமாறு அறிவிக்கப்பட்ட பலருக்கு விசார். மனநோய் என்று மருத்துவ சான்றிதழ் பெற்று விசா எடுத்து கொடுத்து உள்ளார் ஒவ்வொருவரும் 2000 யூரோ  கொடுக்க வேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.