Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பாகிஸ்தானின் 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதாக தகவல்!

1361099.jpg

இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள மூன்று விமான தளங்களை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் வானூர்தி ஆணையம் இன்று மாலை 4 மணி வரை தாக்குதலுக்கு உள்ளான விமான தளங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் தரப்பு, இந்திய பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மே 15 வரை இந்த விமான நிலையங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நகரங்களுக்கான விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று (மே 10) அதிகாலை 3.15 மணி முதல் மாலை 4 மணி வரை பாகிஸ்தானில் அமைந்துள்ள தாக்குதலுக்கு உள்ளான மூன்று விமான தளங்களும் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் செயலுக்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்து வருவதாகவும் அந்த நாட்டு ஊடக நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, “இந்திய போர் விமானங்கள் மூலம் வானில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகள் கொண்டு இந்த தாக்குதல் நடைபெற்றது. இருப்பினும் இதனால் விமானப் படையின் சொத்துகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ராவல்பிண்டியில் உள்ள நூர்கான், சக்குவால் பகுதியில் உள்ள முரித், ஜாங் மாவட்டத்தில் உள்ள ரஃப்பிகி விமான தளங்களை இந்தியா தாக்கியது” என கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

வியாழக்கிழமை இரவு இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை இரவும் பாகிஸ்தானின் 400 ட்ரோன்களை வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.hindutamil.in/news/world/1361099-india-attacks-pakistan-three-airbases-sources-from-opponent-1.html

😁😁😁😁😁😁😁😁ஒரே சிரிப்பு

பொய்யை சொன்னாலும் ஹிந்திய‌ன் அத‌ பொருந்த‌ சொல்ல‌னும்....................................

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சார்பாக பதிவுகள் போட்டு தமக்குள் சண்டையிடும் ஈழத்தமிழர்களை பார்த்து அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. பாகிஸ்தான் தமிழ் விடுதலை இயக்கங்களை இந்திய கைக்கூலிகளாக கருதி அவர்களை அழிப்பதற்கு தொடர்ச்சியாக உதவி செய்து வந்தது.

2009 இறுதிப் போரில் விமானங்கள் விமானிகள் குண்டுகளை வழங்கி தமிழர்கள் போராளிகள் அழிவதை வேடிக்கை பார்த்தது.

இந்தியா ஒரு படி மேலே போய் ஆரம்பத்தில் இலங்கை அரசை கட்டுப்படுத்துவதற்கு தமிழருக்கு ஆயுதம் கொடுத்தது. பின்னர் தமிழ் ஆயுத குழுக்களை கட்டுப்படுத்த இலங்கை படைகளுக்கு பயிற்சியும் ஆயுதம் வழங்கி நாடகம் ஆடியது. இதைவிட அதனது கட்டுப்பாட்டை மீறிய இயக்கங்களை அழிப்பதற்கு பல சூழ்ச்சிகளை கையாண்டது.

இறுதி யுத்தத்தில் இலங்கையின் வெற்றியை உறுதி செய்ய வன்னியில் வந்திறங்கி தமிழர்கள் போராளிகள் மீது ஸெல் தாக்குதலில் ஈடுபட்டது. பின்னர் ஜெனீவாவில் சர்வதேச விசாரணை பிரேரணையை தடுத்து வன்னியில் தமிழர்கள் 2 வருடங்கள் முகாம்களில் அடைத்து வைக்க காரணமாகியது.

இப்போது சொல்லுங்கள் இரு நாடுகளும் போர் புரிந்து தமது கர்மவினைப் பயனை அனுபவிப்பதற்கு ஈழத்தமிழர்கள் கவலைப்பட வேண்டுமா?

நன்றி

Dr முரளி வல்லிபுரநாதன்

9.5.2025

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எதனால் உருவானது என்று சிந்தித்தீர்களா?

இதை யாராவது இந்திய அரசியல் தலைமைகள், தலைமைகளுக்கு நெருக்கமானவர்கள் இருப்பின்….

அவர்கள் கண்ணில் காட்டி விடுங்கள்.

குறிப்பாக யாழ் களத்தை நோட்டமிடும் றோ அதிகாரிகள் (ரோ மாமாக்கள் அல்ல அவர்களுக்கு அந்தளவு அதிகாரம் இல்லை) இதை உங்கள் அரசியல் எஜமானார் கண்களுக்கு எடுத்துப்போங்கள்.

ஒரு காலத்தில் நேரு காந்தி படங்கள் தொங்கிய வீடுகள் நம் வீடுகள். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் இயற்கையான உறவாக இருந்த ஒரே இனம் நாமே.

இன்று உலகெங்கும் பரவி வாழும் நிலையில் நாம் இந்தியாவுக்கு மிகபலமானதான ஒரு நட்பு சக்தியாக இருந்திருப்போம். இலங்கையில் எமக்கென ஒரு சுயாட்ட்சி பிரதேசமும் இருந்துருப்பின்.

இன்று நிலைமை தலைகீழானமைக்கு - இந்தியாவின் அணுகுமுறையே பிரதான காராணம்.

இன்னமும் திருந்த இடமும், நேரமும் உண்டு.

7 hours ago, Kandiah57 said:

இப்ப அது தேவையில்லை தானே,...! [ வயது போன காலத்தில் ]. 🤣

செத்தகிளிக்கு சிங்காரம் எதுக்கு🤣

11 minutes ago, கிருபன் said:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சார்பாக பதிவுகள் போட்டு தமக்குள் சண்டையிடும் ஈழத்தமிழர்களை பார்த்து அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை

முரளிக்கு மறை கழண்டு விட்டதா?

நான் பார்க்க அநேகர் இருவரில் எவருக்கும் சார்பாக எழுதவில்லை.

இரெண்டு பக்கமும் இராணுவம் அடி வாங்குவதை பார்த்து குதூகலிக்கிறோம்.

இதை ஒரு தப்பு எண்டு பேசிகொண்டு🤣

4 hours ago, putthan said:

நெற்றியில் துப்பாக்கியை வைத்து வேஸ்டியை கழட்டி பார்ப்பாங்களோ என்ற பயம் தான் ....மற்றும்படி நான் ஒர் பனங்காட்டு நரி...பெயரை மாற்றி சொல்லி தப்பி ஓடிவிடுவேன் ... ...ஆனால் உள்ளாடைக்குள் இருப்பதை பார்த்து சுடுவாங்கள் என்றால் ...என்ன செய்வது

நீங்களும் திருப்பி சுடலாமே🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

செத்தகிளிக்கு சிங்காரம் எதுக்கு🤣

gopal-goppal.gif

செத்தகிளி சிங்காரம் செய்யக்கூடாதா கோபால் ....... ! 😴

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

மோடியின் ஆட்சியின் பின்பு இந்தியா பல முன்னேற்றங்களை கண்டுள்ளது ...அரசியல் மற்றும் ஆயுத உற்பத்தியில்....

பாகிஸ்தான் பயங்கர வாதத்தை வளர்ப்பதற்கு துணை போன நாடு என்பது மேற்கலகு நன்றாகவே அறிந்துள்ளது ..

பின்லாடனை ஒழித்து வைத்திருந்து கொண்டே என் அப்பன் குதிருக்குள் இல்லை என சொன்ன கோஸ்டிகள்...

இஸ்ரேலுக்கும் பல நாசாகார வேலைகளை பாகிஸ்தான் செய்துள்ளது ...

ரிப்பளிக் டிவிக்காக சிட்னியில் இருந்து புத்தன்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

gopal-goppal.gif

செத்தகிளி சிங்காரம் செய்யக்கூடாதா கோபால் ....... ! 😴

செய்யலாம்…

ஆனால் கீதை சொல்வதை மனதில் கொள்ளல் வேண்டும்.

கடமையை செய், பலனை எதிர்பாராதே🤣

  • கருத்துக்கள உறவுகள்

8000 ஆயிர‌ம் X த‌ள‌ம் ம‌த்திய‌ அர‌சால் முட‌க்க‌ப் ப‌ட்டு இருக்கு

இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ , இந்திய‌ர்க‌ளே பாக்கிஸ்தானுக்கு ஆத‌ர‌வாய் செய‌ல் ப‌டுகின‌ம்👍.........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆரம்பத்தில் இலங்கை அரசை கட்டுப்படுத்துவதற்கு தமிழருக்கு ஆயுதம் கொடுத்தது. பின்னர் தமிழ் ஆயுத குழுக்களை கட்டுப்படுத்த இலங்கை படைகளுக்கு பயிற்சியும் ஆயுதம் வழங்கி நாடகம் ஆடியது. இதைவிட அதனது கட்டுப்பாட்டை மீறிய இயக்கங்களை அழிப்பதற்கு பல சூழ்ச்சிகளை கையாண்டது.

இது பற்றி எனக்கு இப்போ ஒரு அய்யா சொன்னார் இந்தியா ஈழத்தமிழர்களை தனக்காக பயன்படுத்திய காலத்தில் யுரியுப்புக்கள் இல்லை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் உங்களுக்கு வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் சொல்னவைகளை இப்ப காட்டலாம். தாங்கள் வாழ்கின்ற மேற்குலநாடு ஒரு கண் என்றால் இந்தியா தான் மற்ற கண் என்பார்களாம் இந்தியா தந்தை நாடு அல்லது தாய் நாடு என்பார்களாம் 😂

1 hour ago, கிருபன் said:

பாகிஸ்தான் தமிழ் விடுதலை இயக்கங்களை இந்திய கைக்கூலிகளாக கருதி அவர்களை அழிப்பதற்கு தொடர்ச்சியாக உதவி செய்து வந்தது.

பாகிஸ்தான் முஸ்லிம் மதவாத நாடு என்கின்றபடியால் அன்பு மதம் என்று வெளிநாட்டு ஈழத்தமிழர்களுக்கு ஒரு பாசம். 😂

இலங்கை சந்துரு என்பவரின்பயண யுரியுப் 30 வருடங்கள் பின் நிற்கும் பாகிஸ்தான் என்று யுரியுப் வட்சப்பில் பார்த்தேன். 2023 ல் எடுத்தது. 2023ல் இலங்கையையும் பார்த்ததிருக்கின்றோம். பாகிஸ்தானை மதத்தை வைத்து எப்படி ஆக்கி எங்கே வைத்து இருக்கின்றார்கள்

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது பற்றி எனக்கு இப்போ ஒரு அய்யா சொன்னார் இந்தியா ஈழத்தமிழர்களை தனக்காக பயன்படுத்திய காலத்தில் யுரியுப்புக்கள் இல்லை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் உங்களுக்கு வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் சொல்னவைகளை இப்ப காட்டலாம். தாங்கள் வாழ்கின்ற மேற்குலநாடு ஒரு கண் என்றால் இந்தியா தான் மற்ற கண் என்பார்களாம் இந்தியா தந்தை நாடு அல்லது தாய் நாடு என்பார்களாம் 😂

பாகிஸ்தான் முஸ்லிம் மதவாத நாடு என்கின்றபடியால் அன்பு மதம் என்று வெளிநாட்டு ஈழத்தமிழர்களுக்கு ஒரு பாசம். 😂

இலங்கை சந்துரு என்பவரின்பயண யுரியுப் 30 வருடங்கள் பின் நிற்கும் பாகிஸ்தான் என்று யுரியுப் வட்சப்பில் பார்த்தேன். 2023 ல் எடுத்தது. 2023ல் இலங்கையையும் பார்த்ததிருக்கின்றோம். பாகிஸ்தானை மதத்தை வைத்து எப்படி ஆக்கி எங்கே வைத்து இருக்கின்றார்கள்

நான் நினைக்கிறேன் இந்தியா ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு த‌ந்தை நாடாக‌ இருந்த‌ கால‌ம் ராஜிவ்காந்தியின் அட்டூழிய‌ ப‌டை ஈழ‌ ம‌ண்ணில் கால் வைக்க‌ முத‌ல்....................பின் குறிப்பு என‌க்கு இந்திய‌ன் ஆமி செய்த‌ அட்டூழிய‌ங்க‌ள் தெரியாது அப்போது நான் குழ‌ந்தை

என‌க்கு மூதாட்டி 2000ம் ஆண்டு ராஜிவ்காந்தி அனுப்பி வைச்ச‌ ப‌டை செய்த‌ அட்டூழிய‌ங்க‌ளை ப‌ல‌ ம‌ணித்தியால‌ம் சொன்னா , அதை கேட்டு திகைச்சு போய் விட்டேன்..................

இப்ப‌ இந்தியா எங்க‌ளுக்கு த‌ந்தை நாடும் கிடையாது எங்க‌ளின் முத‌ல் எதிரி நாடே இந்தியா தான்😡................

ஈழ‌ ம‌ண்ணில் நான் ஆர‌ம்ப‌ க‌ல்வி க‌ற்ற‌ பாட‌சாலையில் 670 பிள்ளைக‌ள் ப‌டிச்சோம் இப்ப‌ 300க்கு குறைவான‌ பிள்ளைக‌ள் தான் ப‌டிக்கின‌ம்....................இந்திய‌ன் ஆமி அந்த‌க் கால‌த்தில் எத்த‌னை ஆயிர‌ம் எம் உற‌வுக‌ளை கொன்று குவித்த‌வ‌ர்க‌ள்...................இத‌னால் தான் இப்போது ஈழ‌ ம‌ண்ணில் ம‌க்க‌ளின் என்னிக்கை குறைவு

அடுத்த‌ பேர் இடி முள்ளிவாய்க்காலில் ப‌ல‌ ஆயிர‌ம் எம் உற‌வுக‌ளை இந்திய‌ அர‌சு உல‌கில் த‌டை செய்ய‌ ப‌ட்ட‌ குண்டுக‌ளை சிங்க‌ள‌வ‌ன் கூட‌ சேர்ந்து போட்டு கொன்று குவித்தவை..........................த‌மிழீழ‌த்துக்காக‌ உயிர் தியாக‌ம் செய்த‌ 35ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ மாவீர‌ர்க‌ள்

ஒரு குடும்ப‌த்தில் 5பேர் ப‌டி பார்த்தால் 35ஆயிர‌ம் ப‌டி கூட்டி பாருங்கோ எங்க‌ட‌ ஈழ‌ ம‌ண்ணில் எத்த‌னை லச்ச‌ ம‌க்க‌ள் இருந்து இருப்பின‌ம் என்று

சிங்க‌ள‌வ‌னால் இந்திய‌னால் கொல்ல‌ ப‌ட்ட‌ ம‌க்களின் என்னிக்கையை பாருங்கோ எவ‌ள‌வு என்று.....................எங்க‌ட‌ ஒரு ச‌ந்த‌திய‌ இந்திய‌னும் சிங்க‌ள‌வ‌னும் அழித்து விட்டார்க‌ள் இல்லையேன் ஈழ‌ நில‌ப் ப‌ர‌ப்பு எங்க்கும் அதிக‌ ம‌க்க‌ள் செல்ல‌ செழிப்பாக‌ வாழ்ந்து இருப்பின‌ம்.................. அனைத்து பாட‌சாலைக‌ள் எல்லாம் குறைந்த‌து 600பிள்ளைக‌ளில் இருந்து 700 பிள்ளைக‌ள் வ‌ரை ப‌டித்து இருப்பின‌ம் இந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில்..........................

2009ம் ஆண்டே விவாதிச்ச‌ நாங்க‌ள் பாக்கிஸ்தான் கூட‌ நேருக்கு நேர் மோத‌ துப்பில்ல‌

உங்க‌ட‌ வீர‌த்தை எங்க‌ளோடு காட்டுறிங்க‌ளான்னு.....................எம்ம‌வ‌ர்க‌ளுக்கு வ‌ந்த‌ ஆயுத‌ க‌ப்ப‌ல்க‌ளை அழித்து எல்லா நாச‌கார‌ வேலைக‌ளையும் செய்து விட்டு தான் , 2009ம் ஆண்டு எம் போராட்ட‌த்தை த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ குண்டுக‌ளை போட்டு அழித்த‌வ‌ர்க‌ள்.....................கோரிலா தாக்குத‌லில் எம் போராளிக‌ளிட‌ம் அடி வேண்டி தோத்த‌வை.....................ச‌ம‌ ஆயுத‌ ப‌ல‌த்தோட‌ எம்ம‌வ‌ர்க‌ள் இருந்து இருக்க‌னும் வ‌ன்னி ம‌ண்ணில் சின்ன‌ அங்குல‌த்தை த‌ன்னும் இவ‌ர்க‌ளால் பிடித்து இருக்க‌ முடியாது................

வாழ்க‌ வாழ்க‌ பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்🙏...............................

  • கருத்துக்கள உறவுகள்

495567533_9878321648881151_7303912173271

இதற்குள்... சினிமாக்காரர்களின் தொல்லை வேறு. 😂

  • கருத்துக்கள உறவுகள்

டிரோன் போர்: இந்தியா - பாகிஸ்தான் மோதலில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமா?

டிரோன் போர், இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,NURPHOTO VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் கண்காணிப்பு டிரோனை இயக்குகிறார்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தெற்காசியாவில் அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகளுக்கு இடையே முதல் டிரோன் போர் வெடித்துள்ளது.

வியாழக்கிழமையன்று, தனது 3 ராணுவ தளங்கள் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியதாக இந்தியா குற்றம் சாட்டியது. இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் உடனடியாக மறுத்தது.

அதற்குப் பிறகு சில மணிநேரத்தில் 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதற்கு இந்தியா பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தது. பல தசாப்தங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் தொடரும் பகையால், தங்கள் எல்லைப் பகுதிகளில் இரு தரப்பினரும் பீரங்கிகளை மட்டுமல்ல, ஆளில்லா ஆயுதங்களையும் பயன்படுத்தத் தொடங்கிவிட்ட நிலையில், தற்போது நிலைமை ஆபத்தான புதிய கட்டத்தை எட்டிவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரு நாடுகளுமே நிதானமாகச் செயல்பட வேண்டும் என்று அமெரிக்கா உள்பட உலக நாடுகள் அனைத்தும் வலியுறுத்தும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் மோதல்கள் தீவிரமாகிவிட்டன. டிரோன்கள், தொலைதூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடியவை. ஆனால் தாக்குதல் நடத்தியதை மறுக்கக்கூடிய வாய்ப்புகளும் இருப்பதால், டிரோன்கள் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவிட்டன.

"டிரோன்களின் சகாப்தத்திற்குள் இந்தியா-பாகிஸ்தான் மோதல் நுழைந்துவிட்டது. 'கண்களுக்குப் புலப்படாத கண்கள்' மற்றும் ஆளில்லாவிட்டாலும் அதிக துல்லியத்துடன் தாக்குதலை நடத்தலாம் என்பது டிரோன்களின் முக்கிய அம்சம். டிரோன் போரில் தேர்ச்சி பெற்ற தரப்பே, தெற்காசியாவின் வான் பகுதியில் போர்க்களத்தையும், போரையும் முடிவு செய்யும்" என்று அமெரிக்க கடற்படை போர் கல்லூரியின் பேராசிரியர் ஜஹாரா மதிசெக் பிபிசியிடம் கூறினார்.

புதன்கிழமை காலை முதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதிலும், எல்லை தாண்டி சுட்டதிலும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும், 57 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறுகிறது. மறுபுறம், பாகிஸ்தானின் ஷெல் தாக்குதல்களில் குறைந்தது 16 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடிய தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா கூறும் நிலையில், பஹல்காம் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என பாகிஸ்தான் கூறுகிறது.

வியாழக்கிழமையன்று, கராச்சி, லாகூர், ராவல்பிண்டி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால், லாகூரில் ஒன்று உள்பட பாகிஸ்தானின் பல வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை செயலிழக்கச் செய்ததாக இந்தியா கூறியது. இந்தியாவின் கூற்றை பாகிஸ்தான் மறுத்தது.

டிரோன் போர், இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வியாழக்கிழமை கராச்சியில் டிரோன் எச்சங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன

லேசர் வழிகாட்டுதலில் இயங்கும் ஏவுகணைகள் மற்றும் குண்டுகள், டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் (UAV) போன்றவை இந்த நவீனப் போரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை, ராணுவ நடவடிக்கைகளின் துல்லியம் மற்றும் செயல்திறனை கணிசமாக மேம்படுத்துகின்றன. வான்வழித் தாக்குதல்களை ஒருங்கிணைக்கவும் இவை பயன்படும். அவற்றில் சில, லேசர் உதவியுடன் இலக்குகளை நோக்கி நேரடியாக ஏவப்படலாம்.

எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றவும், மட்டுப்படுத்தவும் டிரோன்களை பயன்படுத்தலாம். எதிரி ரேடாரை தூண்டுவதற்காக, டிரோன்களை வேண்டுமென்றே பறக்கவிடலாம். இதனால் தூண்டப்பட்ட எதிரி ரேடார் சமிக்ஞைகளை வெளியிடும்போது அதன் இருப்பிடத்தை அறிந்து மற்றொரு தாக்குதல் டிரோன் மூலமோ அல்லது கதிர்வீச்சைப் பின்தொடர்ந்து சென்று தாக்கும் ஏவுகணை மூலமோ அந்த ரேடாரை அழிக்கலாம்.

"யுக்ரேன்- ரஷ்யா போரில் இப்படித்தான் நடக்கிறது. விலை மதிப்பு மிக்க, மனிதர்களால் இயக்கப்படும் போர் விமானங்களை ஆபத்தில் ஆழ்த்தாமல் எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்வதில் டிரோன்கள் இவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கின்றன" என்று பேராசிரியர் மேட்டிசெக் கூறுகிறார்.

பெரும்பாலும் இஸ்ரேலிய தயாரிப்பான IAI சர்ச்சர், ஹெரான் போன்ற உளவு டிரோன்களின் அடிப்படையிலேயே இந்தியாவின் டிரோன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஹார்பி, ஹாரோப் போன்ற டிரோன்கள் முக்கியமானவை. குறிப்பாக ஹாரோப் டிரோன்கள் மதிப்பு மிக்க, துல்லியத் தாக்குதல் போர் முறைக்கு வழிவகுப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் ஹெரான் டிரோன், அமைதிக்கால கண்காணிப்பு மற்றும் போர் நடவடிக்கைகளுக்கு உதவக்கூடிய "வானத்தில் மிக உயரத்தில் இருந்து பார்க்கும் கண்கள்" என்று நிபுணர்கள் கூறுகின்றனர். IAI சர்ச்சர் Mk II முன்கள நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டவை. இந்த டிரோன்கள், தொடர்ந்து 18 மணிநேரம் வரை இயங்கக் கூடியவை. மேலும், அதிகபட்சம் 7,000 மீ (23,000 அடி) உயரம் வரை பறந்து 300 கி.மீ. வரை செல்லக் கூடியவை.

இந்தியாவிடம் உள்ள போர் டிரோன்களின் எண்ணிக்கை "குறைவு" என்று பலர் கருதுகின்றனர். 40 மணிநேரம் மற்றும் 40,000 அடி உயரம் வரை பறக்கக்கூடிய 31 MQ-9B பிரிடேட்டர் டிரோன்களை வாங்க அமெரிக்காவுடன் செய்துள்ள 4 பில்லியன் டாலர் ஒப்பந்தம், தாக்குதல் திறன்களை அதிகரிக்கும் இந்தியாவின் முயற்சிகளைச் சுட்டிக் காட்டுகிறது.

டிரோன்களை ஒரே நேரத்தில் திரளாகப் பயன்படுத்தும் தந்திரோபாயங்களை இந்தியாவும் உருவாக்கி வருகிறது. அதிக எண்ணிக்கையிலான சிறிய டிரோன்களை பறக்க விடுகையில் அவற்றை அழிப்பதிலேயே எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகள் முழு திறனையும் பயன்படுத்த நேரிடும் என்பதால், தனது மதிப்புமிக்க போர் விமானங்கள் போன்றவற்றைப் பயன்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானின் டிரோன் படை, "விரிவானது மற்றும் மாறுபட்டது". இது உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அமைப்புகளை உள்ளடக்கியது என்று லாகூரை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் எஜாஸ் ஹைதர் பிபிசியிடம் தெரிவித்தார்.

டிரோன் போர், இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,ANADOLU VIA GETTY IMAGES

படக்குறிப்பு,வியாழக்கிழமை கராச்சியில் பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்கின்றனர்.

சீனா, துருக்கி மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் மாதிரிகளைக் கொண்ட "ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கள்" பாகிஸ்தானிடம் இருப்பதாக அவர் கூறினார். குறிப்பிடத்தக்க தளங்களில் சீனாவின் CH-4, துருக்கியின் பைரக்டர் அகின்சி மற்றும் பாகிஸ்தானின் சொந்த புராக் மற்றும் ஷாபர் டிரோன்கள் உள்ளன.

பாகிஸ்தான் விமானப்படை (PAF) கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக ஆளில்லா அமைப்புகளை அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக ஹைதர் கூறினார். மனிதர்கள் இயக்கும் போர் விமானங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வடிவமைக்கப்பட்ட "லாயல் விங்மேன் (loyal wingman)" டிரோன்களை உருவாக்குவதிலும் பாகிஸ்தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

"ஹாரோப் மற்றும் ஹெரான் டிரோன்களை வழங்கும் இஸ்ரேலின் தொழில்நுட்ப உதவி இந்தியாவுக்கு முக்கியமானது. அதே நேரத்தில் துருக்கி மற்றும் சீனாவின் டிரோன் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் நம்பியுள்ளது. இது, இந்தியா-பாகிஸ்தான் ஆயுதப் போட்டியை எடுத்துக்காட்டுகிறது" என்று பேராசிரியர் மேட்டிசெக் நம்புகிறார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே சமீபத்திய டிரோன் தாக்குதல்கள் அவர்களின் மோதலில் முக்கியமானதாக இருக்கும். அதே வேளையில், ரஷ்யா - யுக்ரேன் மோதலில் காணப்பட்ட டிரோன்களை மையமாகக் கொண்ட போரிலிருந்து இந்த மோதல் குறிப்பிடத்தக்க வகையில் மாறுபடுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அங்கு, டிரோன்கள் ராணுவ நடவடிக்கைகளின் மையமாகிவிட்டது. இரு தரப்பினரும் கண்காணிப்பு, இலக்கு மற்றும் நேரடித் தாக்குதல்களுக்கு ஆயிரக்கணக்கான டிரோன்களை பயன்படுத்துகின்றனர்.

"போர் விமானங்கள் அல்லது ஏவுகணைகளுக்குப் பதிலாக [நடந்து கொண்டிருக்கும் மோதலில்] டிரோன்களை பயன்படுத்துவது என்பது ராணுவத்தின் மட்டுப்பட்ட தாக்குதல் விருப்பத்தைக் குறிக்கிறது. டிரோன்கள், மனிதர்களால் இயக்கப்படும் போர் விமானங்களைவிட குறைவான தாக்குதல் திறன் கொண்டவை.

எனவே ஒரு வகையில், இதைக் கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்றே கூறலாம். இருப்பினும், இந்த முன்னெடுப்பு விரிவான வான்வழித் தாக்குதலுக்கான முன்னோட்டமாக இருந்தால், கணக்கீடு முற்றிலும் மாறுபடும்," என்று இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் மனோஜ் ஜோஷி பிபிசியிடம் கூறினார்.

ஜம்முவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட டிரோன் தாக்குதலானது, "தூண்டுதல் நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் திட்டமிட்ட செயலாகத் தோன்றுகிறது. இது பாகிஸ்தானின் முழு அளவிலான பதிலடி அல்ல" என்று எஜாஸ் ஹைதர் நம்புகிறார்.

டிரோன் போர், இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமிர்தசரஸின் எல்லைக் கிராமங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணை பாகங்களைப் பார்வையிடும் இந்திய ராணுவ வீரர்கள்

"இந்தியாவுக்கு எதிரான உண்மையான பதிலடித் தாக்குதல் என்பது, அதிர்ச்சியையும் பிரமிப்பையும் உள்ளடக்கியதாக இருக்கும். அது விரிவானதாக, பல தளங்களை உள்ளடக்கியதாகவும் பரந்த அளவிலான நோக்கங்களைக் கொண்டதாகவும் இருக்கும். தற்போதைய 'பழிக்குப் பழி' நடவடிக்கைகளைத் தாண்டி, தீர்க்கமான தாக்கத்தை வழங்குவதாக இருக்கும்" என்று ஹைதர் கூறுகிறார்.

யுக்ரேன் போரில், அடிப்படைப் போர்க்களமே டிரோன்களால் மறுவடிவம் பெற்றுள்ள நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் டிரோன்களின் பங்கு மிகவும் குறைவாகவும் ஒரு குறியீடாகவும் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

"நாம் பார்த்துக் கொண்டிருக்கும் டிரோன் போர் நீண்ட காலம் நீடிக்காது. இது மாபெரும் மோதல் ஒன்றின் தொடக்கமாக இருக்கலாம்" என்று ஜோஷி கூறுகிறார்.

"இது பதற்றத்தைக் குறைக்கலாம் அல்லது அதிகரிக்கலாம். இப்படி இரண்டு சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. நாம் எந்தத் திசையில் செல்வோம் என்பதை நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது."

இந்தியா, தனது துல்லியத் தாக்குதல் கோட்பாட்டிற்கு டிரோன்களை பயன்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது. எல்லையைக் கடக்காமல் தாக்குதல் நடத்துவதற்கு வழக்கமான போர் விமானங்களுக்கான மாற்றாக டிரோன்கள் இருக்கின்றன. இருப்பினும் சில முக்கியமான கேள்விகள் எழுவதையும் தவிர்க்க முடியாது.

"அரசியல் மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைக்கான வரம்பை டிரோன்கள் குறைக்கின்றன. போரை விரிவுபடுத்தும் அபாயங்களைக் குறைக்க முயலும்போது, கண்காணிப்பு மற்றும் தாக்குதலுக்கான வாய்ப்புகளை டிரோன்கள் வழங்குகின்றன," என்று பேராசிரியர் மேட்டிசெக் கூறுகிறார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crmkwrg0y0po

  • கருத்துக்கள உறவுகள்

சாட்டை இப்ப‌ தான் துணிவோட‌ உருப்ப‌டியான‌ காணொளி போட்டு இருக்கிறார்

எம‌து இன‌ம் அழிந்த‌தையிம் சுட்டி காட்டி இருக்கிறார்...................த‌மிழ‌க‌ எச்சை ஊட‌க‌ங்க‌ளுக்கு செருப்ப‌டி காணொளி......................................

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விமானம் வீழ்த்தப்பட்டால், அடுத்த விமானத்தை அனுப்ப பலதடவை யோசிப்பார்கள். அப்படியிருக்கும்போது இந்தியா இத்தனை விமானங்களை தொடர்ந்து அனுப்பியிருக்குமா என்கிற கேள்வி எழுகிறது. அப்படி உண்மையாகவே நடந்திருந்தால், இந்தியாவைப்போல் முட்டாள் இல்லை என்றே சொல்லலாம். இதற்குள் ஒரு றோ படை, பிராந்திய வல்லரசு என்றொரு எகத்தாளம்.

 உண்மையிலேயே ஈழத்தமிழன் மிகவும் பரிதாபகரமானவன். இந்தியன் தனது நலனுக்கு இலங்கையை கையாள ஈழத்தமிழனை நசுக்குகிறான், சிங்களவன் இந்தியா நமக்கு ஏதோ அடைக்கலம் தந்துவிடுமென்று நம்மை அழிக்கிறான், இதற்குள் பாகிஸ்தான் நாம் இந்தியாவின் கைக்கூலிகள் என்று நம்மை அழிக்க உதவுகிறான். காரணமில்லாமல், கேட்க நாதியில்லாமல் அழிகிறான் ஈழத்தமிழன். காஸ்மீர் உண்மையிலேயே பாகிஸ்தானுடனேயே இணைய வேண்டிய பிரதேசம். ஆனால் இந்தியா தேவையில்லாமல் ஆக்கிரமிச்சு காலத்தையும், வளத்தையும், மக்களையும் அழிக்கிறது. அதனாலேயே நாம் சுதந்திரமாக பிரிந்து வாழுவதை இந்தியா தடுக்கிறது. ஐ. நாவில் எமக்கு எதிரான நிலையை எடுக்கிறது. எமது பிரிவை தடுத்தால் தான் காஸ்மீரை ஆக்கிரமிப்பது நிஞாயமானது என நினைக்கிறது. இந்தியா அழிந்தால் ஒழிய நமக்கு விடிவு வர விடாது.

இவனுகள் எல்லாப்பக்கமும் போர் என்று தொடங்கி, மக்களை அழித்து, பஞ்சத்தை ஏற்படுத்தி, உலகை அழிக்கப்போகிறார்கள். ஒவ்வொருவரும் உலகப்போர், அணுவாயுதம் என்று ஒருவரை ஒருவர் அச்சுறுத்தி போட்டுத்துலைக்கப்போகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

:ழத்தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் சீனா இந்தியா மற்றும் மேற்குலநாடுகள் ஆயுத உதவி உட்பட பல உதவிகளைச் செய்தன.இந்த நாடுகளில் இந்தியாவைத் தவிர மற்றைய நாடுகள் தமிழ்ஈழம் என்று ஒரு நாடு அமைவதை எந்த காலகட்டத்திலும் கூர்க்கமாக எதிர்க்கப் போவதில்லை. ஆனால் இந்தியா ஒரு போதும் அதை அனுமதிக்காது.பிராந்திய வல்லரசு என்பதால் இந்தியாவை மீறி எந்த நாடும் அரசியல்ரீதியாக தலையிட வில்லை. ஆனால் இந்த நிலை தொடர்ந்து இருக்குமா என்று சொல்ல முடியாது.ஒரு வல்லரசு நாடு தன் அண்டை நாடுகளை நட்பு நாடுகளை நட்பு நாடுகளாக வைத்திருக்கும். ஆனால் இந்தியாவுக்கு எந்த ஒருநாடும் நட்பு நாடாக இல்லை. இந்தியாவிடம் இலுந்து பல உதவிகளைப் பெற்ற சிறிலங்காவே இந்த யுத்தத்தில் நடுநிலையாக இருக்கப்போவதாகச் சொல்லிவிட்டது. .இந்த நிலையில் இந்தியாவுக்கு இயற்கையிலேயே நட்பாக இருந்த ஈழத்தமிழர்களை இந்தியா பகைத்துக் கொண்டது இந்தியாவுக்கு அதன் வெளியுறக் கொள்கையில் படுதோல்வியாகும். ஒருவேளை புகோள அரசியல் கட்டாயங்களினால் இந்தியாவே சிpலங்காவைப் பிரித்து தமிழீழத்துப்பிரித்துக்கொடுத்தாலும் ஈழத்தமிழர்கள் இந்தியாவை நேசிக்கமாட்டார்கள். ஒருகாலத்தில் மகாத்மா காந்தி யின்படங்கள் எங்கள் வீடுகளில் இருந்தன.இந்திய பாகிஜ்தான் போரின் போது தந்தை செல்வா தொண்டர்படை சேரத்ததாக வரலாறுகள் உண்டு. அதே வேளை சிறிலங்கா பாகிஸ்தான் விமானங்கள் எரிபொருள்நிரப்புவதற்கு இடங்கொடுத்தது..இந்த நிலையில் இந்தியா அடிவாங்குவது ஈழத்தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்கு இந்தியாவே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புலவர் said:

:ழத்தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் சீனா இந்தியா மற்றும் மேற்குலநாடுகள் ஆயுத உதவி உட்பட பல உதவிகளைச் செய்தன.இந்த நாடுகளில் இந்தியாவைத் தவிர மற்றைய நாடுகள் தமிழ்ஈழம் என்று ஒரு நாடு அமைவதை எந்த காலகட்டத்திலும் கூர்க்கமாக எதிர்க்கப் போவதில்லை. ஆனால் இந்தியா ஒரு போதும் அதை அனுமதிக்காது.பிராந்திய வல்லரசு என்பதால் இந்தியாவை மீறி எந்த நாடும் அரசியல்ரீதியாக தலையிட வில்லை. ஆனால் இந்த நிலை தொடர்ந்து இருக்குமா என்று சொல்ல முடியாது.ஒரு வல்லரசு நாடு தன் அண்டை நாடுகளை நட்பு நாடுகளை நட்பு நாடுகளாக வைத்திருக்கும். ஆனால் இந்தியாவுக்கு எந்த ஒருநாடும் நட்பு நாடாக இல்லை. இந்தியாவிடம் இலுந்து பல உதவிகளைப் பெற்ற சிறிலங்காவே இந்த யுத்தத்தில் நடுநிலையாக இருக்கப்போவதாகச் சொல்லிவிட்டது. .இந்த நிலையில் இந்தியாவுக்கு இயற்கையிலேயே நட்பாக இருந்த ஈழத்தமிழர்களை இந்தியா பகைத்துக் கொண்டது இந்தியாவுக்கு அதன் வெளியுறக் கொள்கையில் படுதோல்வியாகும். ஒருவேளை புகோள அரசியல் கட்டாயங்களினால் இந்தியாவே சிpலங்காவைப் பிரித்து தமிழீழத்துப்பிரித்துக்கொடுத்தாலும் ஈழத்தமிழர்கள் இந்தியாவை நேசிக்கமாட்டார்கள். ஒருகாலத்தில் மகாத்மா காந்தி யின்படங்கள் எங்கள் வீடுகளில் இருந்தன.இந்திய பாகிஜ்தான் போரின் போது தந்தை செல்வா தொண்டர்படை சேரத்ததாக வரலாறுகள் உண்டு. அதே வேளை சிறிலங்கா பாகிஸ்தான் விமானங்கள் எரிபொருள்நிரப்புவதற்கு இடங்கொடுத்தது..இந்த நிலையில் இந்தியா அடிவாங்குவது ஈழத்தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்கு இந்தியாவே காரணம்.

நித‌ர்ச‌ன‌ உண்மை👍

ம‌க‌த்மா காந்தின்ட‌ ப‌ட‌ம் ம‌ட்டும் அல்ல‌

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ,

இவ‌ர்க‌ளின் ப‌ட‌ம் என‌து அம்ம‌ம்மா வீட்டில் இருந்த‌து சிறுவ‌ய‌தில் பார்த்து இருக்கிறேன்

ம‌க‌த்மா காந்தின்ட‌ சின்ன‌ சிலை அத்தை வீட்டை இருந்த‌து....................இனி உப்ப‌டியா துருப்புக‌ள் யார் வைத்து இருந்தாலும் தூக்கி குப்பை தொட்டியில் போடுவேன்...........................................

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/p/19HuHVijwK/?mibextid=wwXIfrபிராந்திய / மேற்குலக வல்லரசுகளால் இந்தியா 'பொக்ஸ்' அடிக்கப்படுகிறதா?

என்ற சந்தேகம்தான் தற்போது எமக்கு எழுகிறது.

IMF இன் உதவி என்பது மேற்குலக அதாவது அமெரிக்க லொபியைத் தாண்டி ஒரு நாட்டுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. அதுவும் போர் அறிவிக்கப்பட்ட ஒரு சூழலில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் நேற்று பாகிஸ்தானுக்கு அது கிடைத்திருக்கிறது. இது சொல்லும் செய்தி என்ன?

அடுத்து மேற்குலக ஊடகங்களும் படைத்துறை ஆய்வாளர்களும் பாகிஸ்தானின் உத்திகளையும், இந்தியாவின் படைத்துறை ஓட்டைகளையும் ஒப்பிட்டு இந்தியாவைக் கழுவி ஊத்தத் தொடங்கி விட்டார்கள். இதுவும் ஒரு மேற்குலக லொபிதான்.

அவர்களால் ரபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானால் அழிக்கப்பட்டதையும், அதை சீனத் தயாரிப்பு ஜெட் மூலம் அழிக்கப்பட்டதையும் ஆச்சர்யத்துடன் கூடவே அதிர்ச்சியுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சீனாவின் அதி நவீன ஏவுகணைகள், AI தொழில்நுட்ப படைத்துறை வளங்கள் இந்தியா மீது பாகிஸ்தான் வழியாகச் சோதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது குழந்தைகளுக்குக் கூடத் தெரியும்.

துருக்கியுடன் வளைகுடா நாடுகளினது உதவிகளும் பாகிஸ்தானுக்குத் தாராளமாகக் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.

IMF அதாவது பின்கதவு வழியே மேற்குலகமும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிற்கு வந்து விட்டதா?

2009 இல் தமிழீழம் இதே இந்தியா உட்பட ஒட்டுமொத்த உலகத்தால் 'பொக்ஸ்' அடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஒரு நிலையை நோக்கி இந்தியா இழுத்துச் செல்லப்படுகிறதா?

வரும் நாட்கள் இதற்கான பதிலைச் சொல்லும்.

தமிழின அழிப்பின் முதன்மைச் சூத்திரதாரியான இந்தியா கனவில் கூட எண்ணிப்பார்த்திராத 'பொக்ஸ்' இது.

  • கருத்துக்கள உறவுகள்+

முக்கிய செய்தி ...

போர் நிறுத்தம் வந்தது...

மேலும் ஏவுகணைத் தாகாகுதலில் பாக். வான்படையின் ஒரு சதள முதல்வன் (squadron Leader) உட்பட 4 வான்கலவர் (airmen) கொல்லப்பட்டுள்ளனர், தரையில் வைத்து.


அவ்ளோ தான்...

போர் முடிந்தது ...

https://www.theguardian.com/world/live/2025/may/10/pakistan-says-three-air-bases-attacked-by-indian-missiles-live-updates

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நன்னிச் சோழன் said:

முக்கிய செய்தி ...

போர் நிறுத்தம் வந்தது...

மேலும் ஏவுகணைத் தாகாகுதலில் பாக். வான்படையின் ஒரு சதள முதல்வன் (squadron Leader) உட்பட 4 வான்கலவர் (airmen) கொல்லப்பட்டுள்ளனர், தரையில் வைத்து.


அவ்ளோ தான்...

போர் முடிந்தது ...

https://www.theguardian.com/world/live/2025/may/10/pakistan-says-three-air-bases-attacked-by-indian-missiles-live-updates

இவ்வளவு கெதியாய் ஏன் போர் நிறுத்தம் வந்தது.

வாங்கி வைத்த “பொப் கோன்” எல்லாம் வீணாய் போகப் போகுதே. 😂

  • கருத்துக்கள உறவுகள்+
16 minutes ago, தமிழ் சிறி said:

இவ்வளவு கெதியாய் ஏன் போர் நிறுத்தம் வந்தது.

வாங்கி வைத்த “பொப் கோன்” எல்லாம் வீணாய் போகப் போகுதே. 😂

நான் ஆகக்குறைஞ்சது ஒரு கிழமையாவது இழுப்பாங்கள் என்டு நினைச்சனான். சைக்.... வேளைக்கு நிப்பாட்டிப்போட்டாங்கள் ...

இனி பாருங்கோ... இந்தியன் தனக்குத்தான் வெற்றி என்டு பொய் சொல்லப்போறான்... 😂

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நன்னிச் சோழன் said:

நான் ஆகக்குறைஞ்சது ஒரு கிழமையாவது இழுப்பாங்கள் என்டு நினைச்சனான். சைக்.... வேளைக்கு நிப்பாட்டிப்போட்டாங்கள் ...

இனி பாருங்கோ... இந்தியன் தனக்குத்தான் வெற்றி என்டு பொய் சொல்லப்போறான்... 😂

நாளைய இந்தியச் செய்திகள்.

1) பயத்தில் பதுங்கிய பாகிஸ்தான்.

2) பாகிஸ்தானை பந்தாடிய இந்திய இராணுவம்.

3) இந்தியாவின் அடியை பார்த்து, உலக நாடுகள் பிரமிப்பு.

4) தாடி ஜீக்கு… உலகத் தலைவர்களிடம் இருந்து குவியும் பாராட்டு.

5) சமாதானப் புறாவை பறக்க விட்ட… தாடி ஜீயின் பெயர்…. நோபல் பரிசுக்கு அனுப்பி வைப்பு.

வரும் கிழமை முழுக்க…. பல அலப்பறைகளை தாங்க வேண்டி இருக்கும். நாம எப்படி தாக்குப் பிடிக்கப் போகின்றோம் என்று தெரியவில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

நாளைய இந்தியச் செய்திகள்.

1) பயத்தில் பதுங்கிய பாகிஸ்தான்.

2) பாகிஸ்தானை பந்தாடிய இந்திய இராணுவம்.

3) இந்தியாவின் அடியை பார்த்து, உலக நாடுகள் பிரமிப்பு.

4) தாடி ஜீக்கு… உலகத் தலைவர்களிடம் இருந்து குவியும் பாராட்டு.

5) சமாதானப் புறாவை பறக்க விட்ட… தாடி ஜீயின் பெயர்…. நோபல் பரிசுக்கு அனுப்பி வைப்பு.

வரும் கிழமை முழுக்க…. பல அலப்பறைகளை தாங்க வேண்டி இருக்கும். நாம எப்படி தாக்குப் பிடிக்கப் போகின்றோம் என்று தெரியவில்லை. 🤣

இதை இப்ப‌வே சொல்ல‌ ஆர‌ம்பிச்சிட்டாங்க‌ள்

நீங்க‌ள் நாளைக்கு போய் விட்டிங்க‌ள்......................பார்க்கிஸ்தான் தொட‌ர்ந்து அடிச்சு இருந்தால் இந்தியா ச‌ர‌ன் அடைந்து இருக்கும்

பாக்கிஸ்தானிட‌ம் போதிய‌ ஆயுத‌ங்க‌ள் ம‌ற்றும் ப‌ண‌ங்க‌ள் இல்லை போல் தெரிகிற‌து....................இர‌ண்டு நாளில் முடிவ‌தை எல்லாம் போர் என்று சொல்ல‌ முடியாது

க‌ல் எறிந்து கை ஓய்ந்த‌ க‌தை இது ஹா ஹா.....................

எம்ம‌வ‌ர் 2000ம் ஆண்டு ஆனையிற‌வு ச‌ம‌ர் சில‌ மாத‌ம் எடுத்த‌து தொட‌ர்ந்து ஓயாத‌ குண்டு ம‌ழைக்குள் போர் செய்த‌வை.............................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே உடனடிப் போர்நிறுத்தம் ஏற்பட்டு விட்டது.இந்த போர்நிறுத்தத்தில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் மத்தியஸ்தம் வகித்திருக்கின்றன.இந்தப் போரால் பெரும் பொருளாதார நட்டம் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டு விடும் என்று பயந்தே உலகநாடுகள் தலையிட்டு போரை நிறுத்தின.4 நாட்களில் போரை நிறுத்திய நாடுகளால் ஏன் இஸ்ரேலிய பாலஸ்தீன,உக்கிரைன் ரஸயா தமிழீழம் சிறிலங்கா போரை நிறுத்த முடியவில்லை?உனடியாக செய்ய வேண்டியது காஸ்மீர்,பலூஸ்தான்,பாலஸ்தீனம் ,தமிழீழம் போன்ற தேசிய இனங்களை சுதந்திரமாக பிரிந்து செல்ல அனுமதிப்பதுதான்.சீனாவின் ஆயுதங்களின் வலிமையை பாகிஸ்தான் சிறிதளவு பரீட்சித்துக்காட்டியதும் போர்நிறுத்தத்திற்கு ஒரு காரணமோ!!!!

You tuber களுக்கும் பொப்கோர்ன் வியாபாரிகளுக்கும் தான் பெருநட்டம்.வடை போச்சே!

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தம் இரு நாடுகளுக்கும் இடையில் பிற்பகல் 5 மணிக்கு அமலாகிறது. சவூதி அரேபியா மேற்படி இரு நாடுகளுக்கும் நடுநிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி சட்டு புட்டென்று ஐபிஎல்லை தொடங்குங்கோ.

எனக்கு ஏதாவது ஒரு ஸ்கோரை பார்த்துக் கொண்டே இருக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/v/16RsZva6Ax/?mibextid=wwXIfr

வேலியால எட்டிப் பார்க்கிறதுக்குள்ள சண்டை முடிஞ்சிட்டுதே!

சீனாவின் ஜெட் உற்பத்தியாளரின் பங்குகள் கிடிகுடு என உயர்ந்ததும் இந்த போர்நிறுத்தத்துக்கு காரணம்.

அடுத்து யாழப்பாணத்தில் இருந்து சீனதூதுவர் இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்டது சாபகத்தில் வந்து தொலைக்குது.

https://www.facebook.com/share/v/1AH8qmsTmC/?mibextid=wwXIfr

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.