Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

13 மே 2025, 05:26 GMT

புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி சற்று முன்பு தீர்ப்பு வழங்கினார். 9 பேர் மீதும் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபித்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரம் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிமுக பின்புலம் இருப்பதாக தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வந்தது, எனினும் அதை அதிமுக மறுத்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியது என்ன?

அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தர மோகன் , பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தர மோகன்

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு வழக்கறிஞர் சுந்தரமோகன், "கைதான 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வயதை காரணம் காட்டி குறைவான தண்டனை வழங்குமாறு குற்றவாளிகள் கேட்டுள்ளனர். அரசுத் தரப்பில் கடுமையான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது அரிதான வழக்கு. பெண்கள் தொடர்பான இந்த வழக்கில் நீதிமன்றம் கடும் தண்டனை வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

இவ்வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 276 (2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய இரு முக்கியமான பிரிவுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் நண்பகல் 12 மணிக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.

"உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெண்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்தார் சுந்தர மோகன்.

இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 பேரும் இறுதிவரை பிறழ்சாட்சிகளாக மாறவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

வழக்கில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். விஞ்ஞானப்பூர்வமாக அடையாளம் காணுதல் உள்ளிட்ட பலவற்றுக்கு வழக்கில் தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதுவரை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேரை விசாரித்ததாக கூறினார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி, நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பிய பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்

வழக்கின் பின்னணி

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு.

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளி ஆக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது.

இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது சகோதரரிடம் அது பற்றி கூறவே, தங்கையை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த அவரது சகோதரர் அவர்களை விசாரித்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளிகள் இருந்துள்ளன.

இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டவுடன் திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்படும் காணொளிகள், பொதுமக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், இதில் அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளும் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,தீர்ப்பையொட்டி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீஸார்

வழக்கு கடந்து வந்த பாதை

* பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்த நாள்: 2019 பிப்ரவரி 12

* முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள்: 2019 பிப்ரவரி 24. அதன் அடிப்படையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

* திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவர், ''தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை'' என வீடியோ வெளியிட்டார். 2019 மார்ச் 5 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

* திருநாவுக்கரசின் ஐஃபோனில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதுவே இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக, திருப்புமுனையாக அமைந்தது.

* வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

* வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப் இந்த வழக்கின் மிக முக்கியமான மற்றொரு ஆதார ஆவணமானது.

* 2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன.

* பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

* சிபிஐ வசம் வழக்கு வந்தபின்பு, இந்த வழக்கில் அருளானந்தம், ஹெரன்பால் மற்றும் பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளானது.

* இந்த 3 குற்றவாளிகள் மீதும் 2021 பிப்ரவரி 22 அன்று இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிக்கை, கோவை மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

* வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபராக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றப்பத்திரிக்கை, 2021 ஆகஸ்ட் 16 அன்று, கூடுதல் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

* இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 48 பேர் மட்டுமே, சிபிஐ அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

* பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானபோது, காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் முதல் விசாரணை அதிகாரியாக இருந்தார். சிபிசிஐடியிடம் மாற்றப்பட்ட பின்பு, எஸ்பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் விஜய் வைஷ்ணவி, ஆய்வாளர் பச்சையம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர்.

* இவ்வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களே முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐஃபோனில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன.

* வாட்ஸ்ஆப் குழுவை தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

* பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் புகார் கொடுக்க அச்சப்பட்டுள்ளனர். இவர்களை அச்சுறுத்துவதற்காக சில ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். விசாரணையின்போது அவை நீக்கப்பட்டன.

* இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கு பதியப்பட்ட நாளிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை.

* பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஏழு பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினர். இவர்களிடம் நீதிமன்ற அறையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

கனிமொழி

படக்குறிப்பு,குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம்

* குற்றப்பத்திரிகைகளில் இவர்கள் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு விசாரைணயில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதார ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

* பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* முதல் குற்றப்பத்திரிகை துவங்கி இறுதிவரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

* இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வருகிறார். இடையில் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

* இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

9 குற்றவாளிகள் யார்?

  • சபரி ராஜன்

  • திருநாவுக்கரசு

  • சதீஷ்

  • வசந்தகுமார்

  • மணிவண்ணன்

  • ஹெரன்பால்

  • பாபு

  • அருளானந்தம்

  • அருண்குமார்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy6482jyjgo

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-62-1.jpg?resize=600%2C300&ss

பொள்ளாச்சி சம்பவத்தில் 09 பேருக்கு ஆயுள்தண்டனை!

கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8 க்கும் மேற்பட்ட பெண்களை காணொளி எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை பொள்ளாச்சி பொலிஸார் முதலில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு மாநில அரசின் குற்றபுலனாய்வுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த 25 தொடக்கம் 28 வயதுக்கிடைப்பட்ட 05பேர் கைது செய்யப்பட்டனர்.

அதை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு மேலும் 04பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் குறித்த வழக்கு மீதான விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட 8 பெண்களும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சாட்சி அளித்தனர்.

வழக்கின் ஒவ்வொரு விசாரணையின்போதும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்து நிகழ்நிலை மூலமாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று (13) அறிவிக்கப்படும் என கடந்த 28ம் திகதி நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் , இந்த வழக்கில் கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வழக்கில் கைதான 9 பேரும் குற்றாவாளிகள் என கோவை மகளீர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில் அவர்களுக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1431749

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மனு, இந்த மனு என தண்டனை குறைக்காமல், மேல்முறையீட்டில் விடுதலை செய்யாமல் - வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழிக்குமாறு உறுதி செய்ய வேண்டும்.

வெளியில் வரும் போது தொங்கி போய் இருக்க வேண்டும். தலை.

  • கருத்துக்கள உறவுகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு... - முழு விவரம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசை வார்த்தை சொல்லி பழகி, பிறகு வீடியோ எடுத்து மிரட்டி, அடித்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்டது ஒரு வக்கிர கும்பல். “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க.” என்று கதறிய ஒரு பெண்ணின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • 2/2

    vikatan%2F2025-05-13%2F9x641jlk%2F100192

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு

  • 1/2

    vikatan%2F2025-05-13%2Fgvy621pv%2F100192

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு

  • 2/2

இந்த வக்கிர கும்பலின் செல்போன்களில் இதுபோல ஏராளமான வீடியோக்கள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அருளானந்தம், ஹேரோன் பால், பாபு ஆகியோர் அதிமுக பிரமுகர்கள். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்தது. பொள்ளாச்சி சின்னப்பம்பட்டியில் பாலியலுக்காக பயன்படுத்தப்பட்ட திருநாவுக்கரசின் பண்ணை வீடு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.

  • 3/3

    vikatan%2F2025-05-13%2Fp88j5ded%2F100192

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு

  • 1/3

    vikatan%2F2025-05-13%2Fmv70bpx5%2F100192

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு

  • 2/3

    vikatan%2F2025-05-13%2Fmqqkmw6y%2F100192

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை காவல்துறை வெளியிட்டது சர்ச்சையானது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கேட்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சொல்லியும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.  பொள்ளாச்சி பாலியல் வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

3 குற்ற பத்திரிகைகள்:

சிபிஐ தரப்பில் சுமார் 3 குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு சார்பில்  50க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள், பாதிக்கப்பட்ட 8 பெண்களின் நேரடி வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

  • 2/2

    vikatan%2F2025-05-13%2Fg2jqo29h%2F100192

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு

  • 1/2

கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு அளித்தார். இதற்காக காலை 5.30 மணியளவில் குற்றவாளிகள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் இருந்து புறப்பட்டு, கோவை நீதிமன்றத்துக்கு 8.30 மணியளவில் அழைத்து வரப்பட்டனர்.

  • 4/4

    vikatan%2F2025-05-13%2Fosiml11e%2FWhatsA

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு

  • 1/4

    vikatan%2F2025-05-13%2Fogq3s2gv%2FWhatsA

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு

  • 2/4

    vikatan%2F2025-05-13%2F9sqxh4xf%2FWhatsA

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு

  • 3/4

    vikatan%2F2025-05-13%2Fkwxisy03%2FWhatsA

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு

இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பூட்டிய அறையில் வாசித்தார். அதில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில், கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்ததை, வரவேற்கும் விதமாக, நீதிமன்ற வளாகத்தில் அனைந்திந்திய மாதர் சங்கம் கோஷமிட்டு வரவேற்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு... - முழு விவரம்

`சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்’ - கோரிக்கை

சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், அருளானந்தம், மணிவண்ணன், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார்.

அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத்தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு... - முழு விவரம்

பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு பாதுகாக்கப்பட்டதால், 8 பேரில் ஒருவர் கூட பிறழ் சாட்டசியாக மாறவில்லை. குறைந்தபட்ச தண்டனை என்றாலே 20 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை வழங்கப்படும். இதில் பெண்கள் தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால், உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.

வயது, ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என எதிர்த்தரப்பு சார்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. 12 மணிக்கு தண்டனை விபரம் வழங்கப்படவுள்ளது." என்றார்.

9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்புத்துள்ளது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவு.

1) திருநாவுக்கரசு - 5 ஆயுள் தண்டனை

2) சபரி ராஜன் - 4 ஆயுள் தண்டனை

3) சதிஷ் - 3 ஆயுள் தண்டனை

4) வசந்தகுமார் - 2 ஆயுள் தண்டனை

5) மணிவண்ணன் - 5 ஆயுள் தண்டனை

6) பாபு - 1 ஆயுள் தண்டனை

7) ஹெரோன் பால் - 3 ஆயுள் தண்டனை

8) அருளானந்தம் - 1 ஆயுள் தண்டனை

9) அருண்குமார் - 1 ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: முழு தண்டனை விவரம்! - Vikatan

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

9 பேரும் குற்றவாளிகள் - யாருக்கு என்ன தண்டனை? பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு முழு விவரம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

13 மே 2025, 05:26 GMT

புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

9 பேரும் குற்றவாளிகள் என்று இன்று காலை 10.45 மணியளவில் தீர்ப்பளித்த நீதிபதி நந்தினி தேவி, தண்டனை விவரத்தை நண்பகல் 12 மணிக்குப் பிறகு அறிவித்தார். அதன்படி, 9 பேருக்குமே சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிமுக பின்புலம் இருப்பதாக தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வந்தது, எனினும் அதை அதிமுக மறுத்தது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

தீர்ப்பின் முழு விவரம்

தீர்ப்பின் விவரங்கள் குறித்து பேசிய அரசு வழக்கறிஞர் சுரேந்திரமோகன், "குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 376 D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 376 (2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, மற்ற பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள், 7 ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என தனித்தனியாகவும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது." என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"சிபிஐ முயற்சி வீண் போகவில்லை. நியாயமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. வழக்கின் தன்மையை பொறுத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். வாய்மொழி சாட்சிகள், மின்னணு சாட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். விசாரணையில் சேகரிக்கப்பட்ட பெரும்பாலான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம். குற்றவாளிகள் மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. பலமான சாட்சிகள் உள்ளன, மேல்முறையீடு சென்றாலும் இந்த தண்டனை நிலைநிறுத்தப்படும் என நான் நம்புகிறேன்" என அவர் தெரிவித்தார்.

"இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 பேரும் இறுதிவரை பிறழ்சாட்சிகளாக மாறவில்லை. வழக்கில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மீட்கப்பட்டன. விஞ்ஞானப்பூர்வமாக அடையாளம் காணுதல் உள்ளிட்ட பலவற்றுக்கு வழக்கில் தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்தது. வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேர் விசாரிக்கப்பட்டனர்" என்றும் அவர் கூறினார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் , பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன்

யாருக்கு என்ன தண்டனை?

  • முதல் குற்றவாளி சபரி ராஜனுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம், 4 ஆயுள் தண்டனை.

  • இரண்டாவது குற்றவாளி திருநாவுக்கரசுக்கு ரூ.30,500 அபராதம், 5 ஆயுள் தண்டனை.

  • மூன்றாவது குற்றவாளி சதீஷூக்கு ரூ.18,500 அபராதம், 3 ஆயுள் தண்டனை.

  • நான்காவது குற்றவாளி வசந்தகுமாருக்கு ரூ.13,500 அபராதம், 2 ஆயுள் தண்டனை

  • ஐந்தாவது குற்றவாளி மணிவண்ணனுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம், 5 ஆயுள் தண்டனை

  • ஆறாவது குற்றவாளி பாபுவுக்கு ரூ.10,500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனை

  • ஏழாவது குற்றவாளி ஹேரன்பாலுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம், 3 ஆயுள் தண்டனை

  • எட்டாவது குற்றவாளி அருளானந்தத்துக்கு ரூ.5500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனை

  • ஒன்பதாவது குற்றவாளி அருண்குமாருக்கு ரூ.5500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனை

'நிச்சயம் மேல் முறையீடு செல்வோம்'

தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட பின் பிபிசி தமிழிடம் பேசிய குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன், ''தீர்ப்பின் நகல் இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை. சில திருத்தங்கள் செய்து கொண்டிருப்பதால் தீர்ப்பு நகல் கிடைத்து, அதைப் படித்துப் பார்த்த பின்பே, எங்களுடைய எந்தெந்த வாதங்கள் ஏற்கப்பட்டிருக்கின்றன என்பதை முழுமையாக அறிய முடியும். அரசு தரப்பு முன் வைத்த 76 குற்றச்சாட்டுகளில் 10 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. தீர்ப்பு பற்றித் தெரிந்த பின், 60 நாட்களில் மேல் முறையீடு செல்வதற்கு வாய்ப்புள்ளது. நாங்கள் கண்டிப்பாக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யவுள்ளோம்.'' என்றார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி, நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பிய பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்

மத்திய இணையமைச்சர் எல் முருகன் பேட்டி

தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், சட்டம் தன் கடமையை செய்துள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என கூறினார்.

வழக்கின் பின்னணி

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு.

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளியாக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது.

இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது சகோதரரிடம் அது பற்றி கூறவே, தங்கையை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த அவரது சகோதரர் அவர்களை விசாரித்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளிகள் இருந்துள்ளன.

இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டவுடன் திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்படும் காணொளிகள், பொதுமக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், இதில் அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளும் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,தீர்ப்பையொட்டி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீஸார்

வழக்கு கடந்து வந்த பாதை

* பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்த நாள்: 2019 பிப்ரவரி 12

* முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள்: 2019 பிப்ரவரி 24. அதன் அடிப்படையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

* திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவர், ''தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை'' என வீடியோ வெளியிட்டார். 2019 மார்ச் 5 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

* திருநாவுக்கரசின் ஐஃபோனில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதுவே இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக, திருப்புமுனையாக அமைந்தது.

* வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

* வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப் இந்த வழக்கின் மிக முக்கியமான மற்றொரு ஆதார ஆவணமானது.

* 2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன.

* பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

* சிபிஐ வசம் வழக்கு வந்தபின்பு, இந்த வழக்கில் அருளானந்தம், ஹெரன்பால் மற்றும் பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளானது.

* இந்த 3 குற்றவாளிகள் மீதும் 2021 பிப்ரவரி 22 அன்று இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிக்கை, கோவை மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

* வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபராக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றப்பத்திரிக்கை, 2021 ஆகஸ்ட் 16 அன்று, கூடுதல் குற்றப்பத்திரிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

* இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 48 பேர் மட்டுமே, சிபிஐ அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

* பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானபோது, காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் முதல் விசாரணை அதிகாரியாக இருந்தார். சிபிசிஐடியிடம் மாற்றப்பட்ட பின்பு, எஸ்பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் விஜய் வைஷ்ணவி, ஆய்வாளர் பச்சையம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர்.

* இவ்வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களே முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐஃபோனில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன.

* வாட்ஸ்ஆப் குழுவை தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

* பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் புகார் கொடுக்க அச்சப்பட்டுள்ளனர். இவர்களை அச்சுறுத்துவதற்காக சில ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். விசாரணையின்போது அவை நீக்கப்பட்டன.

* இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கு பதியப்பட்ட நாளிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை.

* பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஏழு பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினர். இவர்களிடம் நீதிமன்ற அறையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

கனிமொழி

படக்குறிப்பு,குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம்

* குற்றப்பத்திரிக்கைகளில் இவர்கள் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு விசாரைணயில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதார ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

* பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* முதல் குற்றப்பத்திரிகை துவங்கி இறுதிவரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

* இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வருகிறார். இடையில் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

* இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy6482jyjgo

இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் விடியும், மூன்று வேளை உணவு கிடைக்கும், பாலியல் உறவுக்கு சக ஆண் கைதிகள் கிடைப்பர், நித்திரை கொள்ள வசதி கிடைக்கும், இடைக்கிடை சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து போதைப்பொருளும் கிடைக்கும்.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தம் வாழ் நாள்முழுதும் அந்த பாதிப்பில் இருந்து வெளிவர தினமும் போராட வேண்டி இருக்கும்.

ஆகக் குறைந்தது இந்த குற்றவாளிகளுக்கு ஆண்மையகற்றமாவது செய்ய வேண்டும். ஆணுறுப்பை வெட்டி எறிய வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

வெட்டுவதிலும் பார்க்க செயலற்றதாக்க வேண்டும் அண்ணை. சட்டத்திலேயே இது இடம்பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்குச் சாகும்வரை தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கவேண்டும்.

அண்மையில் கிறிஸ்தவ போதகர் ஒருவரும் போக்சோ வழக்கில் கைதாகி இருக்கிறார். அவரை வெளியில் எடுக்க படாதபாடுபடுகிறார்கள். ஒரு 6 வருடங்களின் பின்னர். அவருக்கும் இம்மாதிரியான தீர்ப்பு வரும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையாளர்களை ஈவிரக்கமின்றி பயங்கரவாதிகள்போல நடத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

காலதாமதம் என்றாலும் இப்போதாவது தீர்ப்பு கிடைத்துள்ளது.

வரவேற்கத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

”பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு… கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து” : தலைவர்கள் வரவேற்பு!

13 May 2025, 8:10 PM

tn political leaders welcome pollachi case verdict

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் இன்று (மே 13) உத்தரவிட்டது.

இதனை கட்சி பேதமின்றி தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மனதார வரவேற்று, நீதிமன்ற தீர்ப்பை பாராட்டி வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்.

குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.கழகம், மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம்.

விசிக தலைவர் திருமாவளவன் :

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து. விசிக மனப்பூர்வமாக வரவேற்கிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு 9 பேரும் குற்றவாளிகள் என்ற தீர்ப்பு ஆறுதலை தருவதாக இருக்கிறது.

இந்தியாவில் இப்படி ஒரு கூட்டு பாலியல் குற்றம் நடந்திருக்காது என்ற அளவிற்கு மோசமான சம்பவம் பொள்ளாச்சியில் நடந்தது. சட்டத்தின் படி அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டால் தான் கூட்டுப் பாலியலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அச்சம் ஏற்படும்.

தவெக தலைவர் விஜய் :

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாடும் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்வித சமரசமுமின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் :

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்த வழக்கில் புலன்விசாரணை நடத்திய சிபிஐ, நீதிமன்றத்தில் விசாரணையை கையாண்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் பணிகள் பாராட்டத்தக்கவை. இந்த வழக்கில் 48 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறாமல் கடைசி வரை தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். இந்த வழக்கில் அழிக்கப்பட்ட மின்னணு ஆவணங்களை மீட்டெடுத்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் தடுத்த அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதிகிடைத்திருக்கிறது என்றாலும் இது தாமதிக்கப்பட்ட நீதிதான். 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் போதிய எண்ணிக்கையில் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாததுதான். இந்த வழக்கை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் கூட சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு மிகவும் தாமதமாகத் தான் அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.85 லட்சம் இழப்பீடு போதுமானது அல்ல. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ. 8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மட்டும் தான் இழப்பீடு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குற்றவாளிகளிடம் சிக்கி பல ஆண்டுகள் கொடுமையை அனுபவித்த அவர்கள், அதன்பின் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் :

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உலகமே பாராட்டக்கூடிய ஒரு அதிரடி தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்து இருப்பதைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்க ஒரு விஷயம்.

அதுமட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பும் நீதிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

இந்த வழக்கை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு இனி வருங்காலங்களில் இளைஞர்கள் இது போன்ற தவறுகளை செய்யாமல் கண்ணியதோடு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த தீர்ப்பு சான்றாக இருக்கிறது. கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம்.

தமாக தலைவர் ஜி.கே.வாசன் :

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை செயல் மிருகத்தனமானது. தமிழகத்தையே தலைக்குனிய வைத்த சம்பவம். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க தீர்ப்பு. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்ற ரீதியிலே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தவறான கண்ணோட்டத்தோடு பெண்களை பார்ப்பவர்களுக்கும், சிந்திப்பவர்களுக்கும் இத்தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் இழப்பீடு அறிவித்து இருப்பதையும், குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை வழங்கியிருப்பதையும் தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்கிறது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் :

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. நாம் அனைவராலும் போற்றி வணங்கப்பட வேண்டிய பெண்களிடம் ஈவு இரக்கமின்றி மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்ட மிருகக் குணம் படைத்தவர்களுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், அதற்கு இணையாக தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதை இனியாவது உணரவேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் :

2019-ல் தமிழகத்தையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

2019 பிப்ரவரியில் அம்பலத்திற்கு வந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் வலுவான போராட்டங்களை நடத்திய பின்புலத்தில் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவினர் அதில் சம்பந்தப்பட்டிருந்ததும் துவக்க கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது தாமதத்தையும், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அச்சத்தையும் உருவாக்கி இருந்தது. இதற்கு எதிரான போராட்டங்கள் பெரும் வீச்சோடு நடந்த பின்னரே 16 மாத காலத்திற்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை, தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் 9 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து இருக்கிறார்.

அதிமுக நிர்வாகி அருளானந்தம் என்பவரும் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவர். இந்த தீர்ப்பு பாலின வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி. பாதிக்கப்படும் பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியதுமாகும். இந்த வழக்குகளில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டது பாராட்டத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கின் இறுதிக் கட்டம் வரை உறுதியாக நின்று, சவால்களை எதிர்கொண்டு உறுதியாக சாட்சியம் அளித்தது என்பதும் போற்றுதலுக்குரியதாகும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அக்குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்திட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் :

கடந்த 2019 பிப்ரவரி மாதம் நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்தாக்குதல் மத்திய புலனாய்வு துறை விசாரணை அதிகாரியின் விசாரணையும், சாட்சியங்களையும், ஆவணங்களையும் நீதிமன்ற விசாரணையில் நிலைநாட்டி, குற்றத்தை உறுதி செய்த முறை பாராட்டத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை, குற்றவாளிகளின் மனிதத் தன்மையற்ற ஈனச் செயலை நீதிமன்றத்தில் நிலைநாட்டியதை போற்றிப் பாராட்டுகிறோம்.

குற்றவாளிகள் மீது முன்வைக்கப்பட்ட 76 குற்றச்சாட்டுகளில் 66 குற்றங்களை உறுதி செய்து, நிலைநாட்டிய விசாரணை அதிகாரிகள், சாட்சியளித்தவர்கள், இவைகளை தக்க முறையில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, குற்றங்களை நிரூபித்த மத்திய புலனாய்வு துறை வழக்கறிஞர் ஆகியோருக்கு நன்றி பாராட்டி வாழ்த்துகிறோம்.

பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் கோவை மகளிர் நீதிமன்றம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ 85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியிருப்பது, போராடும் பெண்களுக்கு வாளும், கேடயமுமாக உதவி சிறப்புப் பெறும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் :

பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது.

பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. பாதிக்கப்படும் பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு இது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்சோ வழக்குகளும் தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குற்றமிழைக்க முற்படும் கயவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இத்தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

நீதியை நிலைநாட்ட போராடிய அனைவருக்கும், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய மாண்புமிகு நீதிமன்றத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை :

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேல், துணிச்சலாகப் போராடி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தந்துள்ள பாதிக்கப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும், இந்தத் தீர்ப்பு ஓரளவாவது மன ஆறுதல் அளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன்.

இந்த வழக்கில் நியாயம் கிடைக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிரான வழக்குகளில், தாமதமின்றிச் செயல்படவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும், விரைவாக நியாயம் கிடைக்கவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். https://minnambalam.com/tn-political-leaders-welcome-pollachi-case-verdict/

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சட்டம் தன் கடமையை செய்துள்ளது.

On 13/5/2025 at 08:21, ஏராளன் said:

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிமுக பின்புலம் இருப்பதாக தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வந்தது,

அம்ஷிகாவுக்கு நடந்த கொடுமையின் பின்னணியில் ஜேவிபி கட்சிக்காரர் இருப்பதினால் அவரை காப்பாற்ற அமைச்சர் சரோஜா போல்ரா அம்ஷிகாவை மனநலம் சரியில்லாதவராக காட்ட முயற்சித்த மோசமான செயல் போன்று நடந்திருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, வாலி said:

இவர்களுக்குச் சாகும்வரை தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கவேண்டும்.

அண்மையில் கிறிஸ்தவ போதகர் ஒருவரும் போக்சோ வழக்கில் கைதாகி இருக்கிறார். அவரை வெளியில் எடுக்க படாதபாடுபடுகிறார்கள். ஒரு 6 வருடங்களின் பின்னர். அவருக்கும் இம்மாதிரியான தீர்ப்பு வரும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையாளர்களை ஈவிரக்கமின்றி பயங்கரவாதிகள்போல நடத்தவேண்டும்.

சாகும்வரை சிறை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

496912898_679094418412871_84746641015131

Beltஆல அடிக்காதீங்க அண்ணா..

ட்ரெஸ்ச கழட்டிறேன் அண்ணா"னு..

ஒரு பொண்ணு அலறின வீடியோ முகம் மறைக்கப்பட்டு வெளி வந்தது.

மனசை நொறுங்க வைத்த அந்தக் கொடூரத்தை செய்த ஓநாய்கள்...

சாகும்வரை சமூகத்திற்குள் வரக் கூடாது...

ஜெயிலுக்குள்ளே சாகட்டும்...

Ranjith Priyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துருப்புச் சீட்டான ஐபோன்: குற்றவாளிகளின் ஆயுதமே அவர்களுக்கு எதிராக திரும்பியது எப்படி?

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 14 மே 2025, 02:25 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

2019-ஆம் ஆண்டில் பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கசிந்த வீடியோக்கள் தமிழ்நாட்டையே உலுக்கின. சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வெளியாகியுள்ளது. 9 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்ட உதவிய வீடியோக்கள்தான் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக மாறி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்ததாகச் சொல்கிறார் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன். சிபிஐ திரட்டிய ஆதாரங்களை வைத்து வாதாடி குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தவர் சுரேந்திரமோகன்.

இவ்வழக்கில் சிபிஐக்கு மிகவும் உறுதுணையாக தமிழக காவல்துறையின் பெண் அதிகாரிகள் சிலர் இருந்துள்ளனர். காவல் ஆய்வாளர் பச்சையம்மாள் தலைமையில் சிறப்பு எஸ்ஐ உட்பட 7 பேர் கொண்ட அணி, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆதாரங்களைத் திரட்டி, குற்றங்களை நிரூபிப்பதற்கு பேருதவியாக இருந்ததாகத் தெரிவிக்கிறார் சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

படக்குறிப்பு,சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன்.

சிபிஐ சந்தித்த சவால்களும், வழக்கில் உதவிய வீடியோவும்!

முதலில் தமிழக காவல்துறையால் வழக்கு பதியப்பட்டு, அதன்பின் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட, 2 மாதங்களுக்குப் பின் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்குள் பாலியல் துன்புறுத்தல் வீடியோ ஆதாரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டதாகவும், அவற்றை மீட்டெடுத்ததால்தான் வழக்கில் வெற்றி பெற முடிந்ததாகவும் சிபிஐ தரப்பு கூறுகிறது.

''திருநாவுக்கரசின் ஐஃபோனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன. உள்ளூர் போலீசார் கைப்பற்றிய அதை சிபிசிஐடி போலீசார், மண்டல தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு (RFSL) அனுப்பி வைத்திருந்தனர். சிபிஐ வழக்கை எடுத்தபின்பே அந்த முடிவுகள் வந்தன. ஆய்வக அதிகாரிகளே அதை மீட்டுக் கொடுத்தனர். அந்த ஐஃபோன்தான் இந்த வழக்கின் இதயமாக இருந்தது என்று சொல்லலாம்.'' என்கிறார் சுரேந்திரமோகன்.

End of அதிகம் படிக்கப்பட்டது

பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காண்பதே கடினமாக இருந்த போது, அந்த வீடியோதான் அதற்கும் உதவியதாகத் தெரிவிக்கிறார் அவர். வீடியோவை வைத்து பெண்களை அடையாளம் கண்டு விட்டாலும் யாருமே பேச முன்வரவில்லை என்று கூறுகிறார் வழக்கில் சிபிஐக்காக பிரதான விசாரணை அதிகாரியாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர் பச்சையம்மாள்.

''வழக்கு பதியப்பட்ட போது புகார் கொடுத்த பெண்ணின் பெயரை காவல்துறை அதிகாரி வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. அதே நேரத்தில் சில வீடியோக்களும் வெளியில் பரவிவிட்டன. அதனால் பெண்கள் யாருமே புகார் கொடுக்க முன் வரவில்லை. அவர்களை அடையாளம் காண்பதும், அதற்குப் பின் அவர்களை அணுகுவதும், அவர்களைப் பேச வைப்பதும் பெரும் சவாலாக இருந்தது.'' என்கிறார் சுரேந்திரமோகன்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

வழக்கு தாமதமானதற்கு காரணங்கள் என்ன?

கடந்த 2019 ஆம் ஆண்டில் இதற்கான புகார் பதிவு செய்யப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அதே ஆண்டு மே 24 ஆம் தேதி, வழக்கில் முதலில் கைதான சபரி ராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேர் மீதும் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துவிட்டது. அதற்குப் பின் இதே வழக்கில் கைதான அருள் ஆனந்தம், ஹேரோன்பால் மற்றும் பாபு ஆகியோர் மீது, 2021 பிப்ரவரி 22-ஆம் தேதியும், இறுதியாக கைது செய்யப்பட்ட அருண்குமார் மீது 2021 ஆகஸ்ட் 16-ஆம் தேதியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

''வழக்கை சிபிஐ எடுத்தபின், 2 ஆண்டுகள் கோவிட் பெருந்தொற்றுக் காலம் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்திப்பதும், அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெறுவதும் பெரும் கஷ்டமாக இருந்தது. சிலருடைய வீடியோக்கள் வெளியாகிவிட்டதால், நமது வீடியோவும் வந்து விடுமோ என்று பலரும் பேசவே பயந்தனர். இதற்காக ரகசிய அணியாக நாங்கள் களம் இறங்கினோம். பெற்றோர், பக்கத்துவீட்டார் யாருக்கும் தெரியாமல் அந்தப் பெண்களை சந்தித்து பேசினோம்.'' என்கிறார் பச்சையம்மாள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு மருத்துவ சிகிச்சையும், உளவியல் சிகிச்சையும் வழங்கிய பின்பே, அவர்கள் தங்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு, துணிச்சலாக வாக்குமூலம் கொடுக்க முன் வந்ததாகக் கூறுகிறார் அவர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சந்தித்துப் பேசியதாகக் கூறிய சிபிஐ போலீசார், பாதிக்கப்பட்டவர்களில் 10க்கும் குறைவானவர்களே வாக்குமூலம் தர முன் வந்ததாகத் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

படக்குறிப்பு,காவல் ஆய்வாளர் பச்சையம்மாள்

நுாற்றுக்கணக்கான வீடியோக்கள் இருந்தது உண்மையா?

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் வெளியில் வந்தபோது, நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருந்ததாகவும் தகவல்கள் பரவியிருந்தன. திருநாவுக்கரசின் ஐஃபோன் மற்றும் சபரிராஜனின் லேப் டாப் இரண்டிலும் நிறைய வீடியோக்கள் இருந்ததை ஒப்புக் கொள்ளும் சிபிஐ தரப்பு, இரண்டிலும் பெரும்பாலும் ஒரே மாதிரி வீடியோக்கள் இருந்ததாகவும், சில வீடியோக்கள் மட்டும் லேப் டாப் மற்றும் ஐஃபோனில் வெவ்வேறானதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன், ''நிறைய வீடியோக்கள் இருந்தன. அவற்றில் பல வீடியோக்கள், பணத்துக்காக வந்தவர்கள் மற்றும் விருப்பத்துடன் வந்தவர்களிடம் எடுக்கப்பட்டவை. அவற்றையெல்லாம் கழித்துவிட்டு, உண்மையிலேயே இவர்களால் மிரட்டப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்களை மட்டும் கண்டறிந்து, அவர்களிடம் மட்டுமே வாக்குமூலம் பெறப்பட்டது.'' என்கிறார்.

இவையிரண்டும் இல்லாமலிருந்திருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வழியில்லாமல் போயிருக்கும் என்கின்றனர் சிபிஐ அதிகாரிகள். மின்னணு தடயங்கள்தான் (Electronic Evidence) பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவியதுடன், பிரதான சாட்சியாகவும் இருந்து வழக்கில் வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த ஆபாச வீடியோக்கள் அனைத்தும் ஒரிஜினல் என்பதையும், தொழில்நுட்பரீதியாக எதுவும் மாற்றப்படவில்லை என்பதையும் ஆய்வகம் மூலமாக உறுதி செய்த பின்பே விசாரணையில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் சுரேந்திர மோகன்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

படக்குறிப்பு,பொள்ளாச்சி வழக்கை கையாண்ட சிபிஐ வழக்கறிஞர்களும் அதிகாரிகளும்.

வழக்கில் குற்றத்தை நிரூபிக்க உதவிய முக்கிய சாட்சிகள்!

இந்த வழக்கில் மொத்தம் 160 சாட்சிகளை விசாரித்ததாக பிபிசி தமிழிடம் சிபிஐ போலீசார் தெரிவித்தனர். பக்கத்து வீட்டுக்காரர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், தடயவியல் ஆய்வக அதிகாரிகள், தகவல் பரிமாற்றம் குறித்த சிடிஆர் உள்ளிட்ட ஆதாரங்களை வழங்கிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகள், தமிழக காவல்துறை, சிபிசிஐடி மற்றும் சிபிஐ ஆகிய முகமைகளைச் சேர்ந்த 5 விசாரணை அதிகாரிகளை சிபிஐ தரப்பு சாட்சியாகச் சேர்த்து விசாரித்துள்ளது.

''மொத்தம் 500 ஆவணங்களை சிபிஐ சேகரித்தது. பெண்களை கடத்திச் சென்ற கார்கள், செல்போன்கள், லேப் டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட 50 பொருட்கள் சாட்சிகளாகக் காண்பிக்கப்பட்டன. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் யாரும் விசாரிக்கப்படவில்லை. அந்த பெண்களில் பலருடைய பெற்றோருக்கு இந்த விஷயம் இப்போது வரை தெரியாது.'' என்கிறார் சிபிஐ வழக்கறிஞர்.

பாலியல் வன்கொடுமை நடந்த பண்ணை வீடு!

பெரும்பாலான பாலியல் துன்புறுத்தல்கள், சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில்தான் நடந்துள்ளதாக சிபிஐ கண்டறிந்துள்ளது. அது கிராமம் என்பதால் யாருமே அந்தப் பக்கம் வருவதில்லை என்றும், அங்கே சிசிடிவி எதுவுமில்லை என்றும் சிபிஐ போலீசார் தெரிவித்தனர்.

இந்த பாலியல் துன்புறுத்தல்கள் பெரும்பாலும் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை நடந்துள்ளதாகக் கூறும் சிபிஐ போலீசார், ஆனால் முதல் புகாரே 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில்தான் பதிவானதால் அதற்குள் சிசிடிவி காட்சிகள் தானாக அழிந்திருக்க வாய்ப்புள்ளதால் அவை வழக்கில் சாட்சியாக உதவவில்லை என்றனர்.

''பல பெண்களை நட்பு ரீதியாகவும், காதலிப்பது போன்றும் ஏமாற்றியே அந்த பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அம்மா பார்க்க வேண்டுமென்கிறார், என் சகோதரி உன்னை வீட்டிற்கு அழைக்கிறார் என்று சொல்லியே அந்த பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கே வைத்து அடித்துத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.'' என்று பிபிசி தமிழிடம் கூறினார் சுரேந்திரமோகன்.

போக்சோ வழக்கு பதியப்படாததற்கான காரணம்!

வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த பாதிக்கப்பட்ட பெண்களில் 18 வயதுக்குட்பட்ட எந்தச் சிறுமியும் இல்லாத காரணத்தால்தான் குற்றவாளிகள் யார் மீதும் போக்சோ வழக்கு பதியப்படவில்லை என்று சிபிஐ போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் வேறு விதமான ஒரு சவாலையும் சிபிஐ எதிர் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பேர், பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிப்பது தவறு என்றும், அதற்கெனவுள்ள தனி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்தரப்பில் ஒரு வாதம் வைக்கப்பட்டது. பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கு பாதிப்பு என்பதால், டிஎஸ்பி அந்தஸ்திலான அதிகாரிதான் விசாரிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரி விசாரிப்பதும் தவறு என்றும் எதிர் தரப்பு வாதிட்டுள்ளது.

அதை முறியடித்தது பற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன், ''மணிப்பூர், வாச்சாத்தி போன்று இங்கு குறிப்பிட்ட ஓர் இனம் அல்லது சமுதாயம் குறி வைக்கப்படவில்லை. சாதிய அடிப்படையில் யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி, குற்றவாளிகளிலும் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் இருப்பதை எடுத்துக் கூறி அந்த வாதத்தை உடைத்தோம்.'' என்றார்.

தீர்ப்பில் 9 பேருக்குமே சாகும் வரை ஆயுள் தண்டனை என்றாலும், சிலருக்கு ஓர் ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு 3, 4 மற்றும் 5 ஆயுள் தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது எப்படி என்பது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார் சுரேந்திரமோகன்.

''ஒவ்வொரு குற்றவாளியாலும் எத்தனை பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாயினர் என்பதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு குற்றவாளிக்கும் ஒன்று முதல் 5 வரையிலான ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு ஆயுள் தண்டனை பெற்றவர், விரைவில் விடுதலையாகிவிடுவார் என்று அர்த்தமில்லை. அனைவருக்குமே சாகும் வரை சிறைத்தண்டனை என்பதே இந்த தீர்ப்பு. '' என்கிறார் அவர்.

மேலும் தொடர்ந்த அவர், ''கடந்த 2013 நிர்பயா வழக்கிற்குப் பின் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி, ஆயுள் தண்டனை என்பது, ஒரு குற்றவாளியின் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் சிறையில் இருப்பது என்று மாற்றப்பட்டுவிட்டது. இந்த பிரிவில் குறைந்தபட்ச தண்டனையே 20 ஆண்டுகளாக்கப்பட்டுள்ளது. இந்த குற்றவாளிகள் அனைவர் மீதும் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால், தண்டனைக் குறைப்பு (remission) என்ற பேச்சுக்கே இடமில்லை.'' என்றார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன்

பெண்களுக்கான இழப்பீட்டில் வேறுபாடு ஏன்?

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில், ஒருவருக்கு ரூ.25 லட்சம், இருவருக்கு தலா ரூ.15 லட்சம், இருவருக்கு தலா ரூ.10 லட்சம், ஒருவருக்கு ரூ.8 லட்சம், ஒருவருக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் 7 பேருக்கு மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். இந்த இழப்பீடு எப்படி நிர்ணயிக்கப்பட்டது, அதில் ஒருவருக்கு மட்டும் அதிகமாகவும், மற்றவர்களுக்கு குறைவாகவும் இருப்பது ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

''ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டு இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு பெண் ஒரே நாளில் 9 பேராலும் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார். அதை வீடியோவாக எடுத்து அதைக் காண்பித்து மிரட்டி, ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படுகிறது. அவருக்கு நேர்ந்த கொடுமைக்கு இது ஈடாகாது.'' என்கிறார் சுரேந்திரமோகன்.

''மரண தண்டனையை விட இதுவே சிறந்த தண்டனை!''

இந்த வழக்கு விசாரணை, கோவை மகளிர் நீதிமன்றத்தில் துவங்கிய காலகட்டத்தில், குற்றவாளிகள் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது, அவர்களுக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். அதேபோன்று மே 13-ஆம் தேதி காலையில் நீதிபதி நந்தினி தேவி, ''வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும்.'' என்று அறிவித்த போது, குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென்று பெண் வழக்கறிஞர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

இதுபற்றி விளக்கிய சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன், ''இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் மரணமடையவில்லை. அப்படியிருந்திருந்தால் அதிகபட்சமாக துாக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதையும் விட இதுபோன்று சாகும் வரை ஆயுள் தண்டனைதான் மிகச்சிறந்த தண்டனையாக இருக்க முடியும்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y64ey2vnzo

  • கருத்துக்கள உறவுகள்

பொள்ளாச்சி வழக்கு – சில ஏமாற்றங்கள், துரோகங்கள்!

-சாவித்திரி கண்ணன்

Screenshot_20250515_180456_WhatsApp.jpg

தமிழகத்தை உலுக்கிய இந்த பாலியல் கொடூர வழக்கின் மிக முக்கிய குற்றவாளிகளை காவல் துறையும் சரி, சிபிஐயும் சரி  நெருங்கவே இல்லை. விசாரிக்கப்படவும் இல்லை. இந்த வி.ஐ.பிக்கள் யார்? யார்? இவர்கள் எப்படி தப்பிக்க வைக்கப்பட்டனர். இதன் பின்னணியில் இருப்பது யார்..?

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை தரப்பட்டு இருப்பதும், பாதிக்கப்பட்ட எட்டு பெண்களுக்கு நஷ்ட ஈடு அறிவித்திருப்பதும் தமிழக மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது..! ஆகவே, இந்த தீர்ப்பை முதலில் வரவேற்க வேண்டியது நம் கடமை. வரவேற்றோம்.

ஆனால், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் வெறும் 9 பேர் மட்டும் தானா?

நம் மக்களுக்கு மறதி அதிகம். இது தான் அரசியல்வாதிகளின் வரப்பிரசாதம்…!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பந்தமான செய்திகளை சற்று பின் நோக்கி பார்த்தோமென்றால், இதில் பாதிக்கப்பட்டது எட்டு பெண்கள் மாத்திரமல்ல…!

images-1.jpeg

200-க்கும் அதிகமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை குற்றவாளிகளே 1000-க்கும் மேற்பட்ட வீடியோ படமெடுத்த செய்தியை மறக்க முடியுமா…?

இத்தனை பெண்களை சிறிதளவும் குற்றவுணர்வின்றி துணிச்சலாக தூக்கிப் போனதற்கும், வீடியோ எடுத்தற்கும் இந்த கூட்டத்திற்கு  பின்னணியில் பலமான அரசியல் செல்வாக்கு இல்லாமல் சாத்தியமில்லை.

இந்தக் குற்றவாளிகள் அனைவருக்குமான அந்த அரசியல் பாதுகாப்பாக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன், பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய சகாக்களான ’பார்’ நாகராஜன், கிருஷ்ணகுமார்.. ஆகியோர் பெயர்களே அன்றைய புலனாய்வு பத்திரிகைகளான நக்கீரன், ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பெரிதும் அடிபட்டது. இந்த பாலியல் வழக்கின் குற்றவாளிகள் அன்றைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அப்போது தொடர்ந்து வெளியாயின. செய்தி சேனல்கள் பலவற்றிலும் கூட வெளியானது.

04-10.png

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன், ’பார்’ நாகராஜன்

இந்த வழக்கில் பார் நாகராஜனையும், திமுக பிரமுகர் செல்வராஜின் மகன் மணிமாறனையும் கஸ்டடியில் எடுத்து விசாரித்து விட்டு அரசியல் அழுத்தங்களால் விடுவிக்கப்பட்டனர் என்ற செய்திகள் வெளியாயின.  ஆனால்,  பிரவீன், பொள்ளாச்சி அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை விசாரிக்க கூட முக்கியத்துவம் தரப்படவில்லை. இவர்கள் மீது எப்.ஐ.ஆரும் போடவில்லை. ஆக, இந்த ஆறாண்டு இடைவெளியில் இவர்களை மக்களும் மறந்து விட்டனர், பெரும்பாலான ஊடகங்களும் மறந்து விட்டன.

இப்படி எடுக்கப்பட்ட வீடியோவை கொங்கு மண்டல வி.ஐபிக்களுக்கு அனுப்பி, அதில் இருந்து அவர்கள் செலக்ட் செய்த பெண்களை ’வாளையார் கெஸ்ட் அவுஸில்’ வைத்து மீண்டும் பாலியல் வன்முறை அரங்கேறியுள்ள வகையில், இது வரை எந்த வி.ஐ.பியும் தண்டிக்கப்படவில்லை.

குறிப்பாக இப்படி பலவந்தமாக தூக்கி செல்லப்பட்ட ஒரு பெண் இந்த கொடியவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த வகையில் நடு ரோட்டில் விழுந்து மற்றொரு கார் ஏறியதில் சின்னாபின்னமாகி அந்தப் பெண் இறந்தார் என்பதை நக்கீரன் போட்டோவோடு அம்பலப்படுத்தியது. இந்த வகையில் காணாமல் போன பெண்கள், அவமானத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட பெண்கள் பற்றிய விசாரணைகளே கூட நடக்கவில்லை.

1616881-chennai-05.jpg

பொள்ளாச்சி ஜெயராமன், கிருஷ்ணகுமார்,வேலுமணி

இதில் ஏழை பெண்களுக்கு கடன் தந்து, அதை அவர்கள் திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பதை காரணமாக்கி, அவர்களை தூக்கிச் சென்று சின்னாபின்னப்படுத்தினர் எனும் போது, இதன் பின்னணியில் ஒரு பெரிய நெட் வொர்க்கே இருந்துள்ளதை நாம் அறியலாம்.

இத்தனை அநீதிகளையும், அட்டுழியங்களையும்  குற்றவாளிகள் ஒரே நாளில் செய்து விடவில்லை. இவற்றை தொடர்ந்து அச்சமின்றி அவர்கள் செய்வதற்கு லோக்கல் காவல்துறையின் அனுசரணை இருந்துள்ளது என்பது கோவை எஸ்.பி. பாண்டியராஜன் (police superintendent of coimbatore) குற்றவாளிகளுக்கு வெளிப்படையாகவே, ஆதரவாக இயங்கியதும், பத்திரிகையாளர்களிடம் உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி, குற்றவாளிகளை காப்பற்ற துணை நின்றதையும் ஊடகத் துறையில் உள்ள அனைவரும் அன்று அதிர்ச்சியுடன் பார்த்தோம்.

maxresdefault-1.jpg

கொளத்தூர் தொகுதியில் டெபுடி கமிஷனராக இருக்கும் பாண்டியராஜன்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராடிய பெண்கள் அமைப்புகள், ஜனநாயக இயக்கங்கள் ஆகியவற்றையும் எஸ்.பியான பாண்டியராஜன் மிரட்டினார் என்பதும், இதே போல ராஜேஸ்வரி, நிஷா பார்த்தீபன் என்ற பெண் காவல் அதிகாரிகள் முற்ற முழுக்க குற்றவாளிகளுக்கு ஆதரவாக இயங்கியதையும் கொங்கு வட்டார மக்களும் அறிவர். அனைத்து ஊடகத்தினரும் அறிவர்.

இதிலென்ன துரதிர்ஷ்டம் என்றால், இத்தகைய கொடூர போலீஸ் அதிகாரியாக அறியப்பட்ட பாண்டியராஜன் தான் இன்று இந்த ஆட்சியாளர்களின் செல்லபிள்ளையாக இருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில்  சகல அதிகாரங்களுடன் டி.சி யாக ( ) வலம் வருகிறார்…! இதை நாம் எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.

முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ25 லட்சம் அறிவித்துள்ளார். ஆனால், அதே சமயம் இந்த அட்டுழியங்கள் அனைத்தையும் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பில் இருந்த இந்த காவல் அதிகாரி, அதற்கு அனுசரணையாக இருந்த வகையில் பதவி பறிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்க வேண்டாமா..? என்பது தான் இந்த வழக்கை கூர்ந்து பார்க்கும் ஊடகத் துறையில் உள்ளோர் மற்றும் பெண்கள் இயக்கங்கள் வைக்கும் கேள்வியாகும்.

‘சிபிஐ விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாக்கப்பட்டனர்.  குற்றவாளிகளுக்கு பெயில் தரவில்லை’ என்பது மிகவும் ஆறுதலான விஷயமே. ஆனாலும், குற்றவாளிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர் என்பதும், பாதிக்கப்பட்ட பெரும்பாலான  பெண்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்பதும் மனதை உறுத்துகிறது. சாமானியர்களான நாம்,  ‘நமது ஜனநாயகத்தில் இவ்வளவாவது நடந்திருக்கிறதே..’  என்று திருப்திபட்டுக் கொண்டு, மனதை தேற்றிக் கொள்ள வேண்டும் போல.

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/21544/pollachi-sexual-harrasments-vips/

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பட்ட கொடுமைகளை, தூத்துகுடி கொலையை செய்த எடப்பாடியை அவரின் பிறந்த தினத்தில் வல்லவர், நல்லவர் என புகழ்ந்தார் அண்ணன் சீமான்.

On 14/5/2025 at 06:51, கிருபன் said:

”பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு… கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து” : தலைவர்கள் வரவேற்பு!

13 May 2025, 8:10 PM

tn political leaders welcome pollachi case verdict

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் இன்று (மே 13) உத்தரவிட்டது.

இதனை கட்சி பேதமின்றி தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மனதார வரவேற்று, நீதிமன்ற தீர்ப்பை பாராட்டி வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்.

குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.கழகம், மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம்.

விசிக தலைவர் திருமாவளவன் :

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து. விசிக மனப்பூர்வமாக வரவேற்கிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு 9 பேரும் குற்றவாளிகள் என்ற தீர்ப்பு ஆறுதலை தருவதாக இருக்கிறது.

இந்தியாவில் இப்படி ஒரு கூட்டு பாலியல் குற்றம் நடந்திருக்காது என்ற அளவிற்கு மோசமான சம்பவம் பொள்ளாச்சியில் நடந்தது. சட்டத்தின் படி அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டால் தான் கூட்டுப் பாலியலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அச்சம் ஏற்படும்.

தவெக தலைவர் விஜய் :

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாடும் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்வித சமரசமுமின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் :

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்த வழக்கில் புலன்விசாரணை நடத்திய சிபிஐ, நீதிமன்றத்தில் விசாரணையை கையாண்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் பணிகள் பாராட்டத்தக்கவை. இந்த வழக்கில் 48 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறாமல் கடைசி வரை தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். இந்த வழக்கில் அழிக்கப்பட்ட மின்னணு ஆவணங்களை மீட்டெடுத்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் தடுத்த அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதிகிடைத்திருக்கிறது என்றாலும் இது தாமதிக்கப்பட்ட நீதிதான். 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் போதிய எண்ணிக்கையில் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாததுதான். இந்த வழக்கை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் கூட சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு மிகவும் தாமதமாகத் தான் அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.85 லட்சம் இழப்பீடு போதுமானது அல்ல. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ. 8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மட்டும் தான் இழப்பீடு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குற்றவாளிகளிடம் சிக்கி பல ஆண்டுகள் கொடுமையை அனுபவித்த அவர்கள், அதன்பின் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் :

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உலகமே பாராட்டக்கூடிய ஒரு அதிரடி தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்து இருப்பதைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்க ஒரு விஷயம்.

அதுமட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பும் நீதிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

இந்த வழக்கை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு இனி வருங்காலங்களில் இளைஞர்கள் இது போன்ற தவறுகளை செய்யாமல் கண்ணியதோடு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த தீர்ப்பு சான்றாக இருக்கிறது. கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம்.

தமாக தலைவர் ஜி.கே.வாசன் :

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை செயல் மிருகத்தனமானது. தமிழகத்தையே தலைக்குனிய வைத்த சம்பவம். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க தீர்ப்பு. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்ற ரீதியிலே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தவறான கண்ணோட்டத்தோடு பெண்களை பார்ப்பவர்களுக்கும், சிந்திப்பவர்களுக்கும் இத்தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் இழப்பீடு அறிவித்து இருப்பதையும், குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை வழங்கியிருப்பதையும் தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்கிறது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் :

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. நாம் அனைவராலும் போற்றி வணங்கப்பட வேண்டிய பெண்களிடம் ஈவு இரக்கமின்றி மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்ட மிருகக் குணம் படைத்தவர்களுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், அதற்கு இணையாக தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதை இனியாவது உணரவேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் :

2019-ல் தமிழகத்தையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

2019 பிப்ரவரியில் அம்பலத்திற்கு வந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் வலுவான போராட்டங்களை நடத்திய பின்புலத்தில் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவினர் அதில் சம்பந்தப்பட்டிருந்ததும் துவக்க கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது தாமதத்தையும், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அச்சத்தையும் உருவாக்கி இருந்தது. இதற்கு எதிரான போராட்டங்கள் பெரும் வீச்சோடு நடந்த பின்னரே 16 மாத காலத்திற்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை, தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் 9 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து இருக்கிறார்.

அதிமுக நிர்வாகி அருளானந்தம் என்பவரும் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவர். இந்த தீர்ப்பு பாலின வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி. பாதிக்கப்படும் பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியதுமாகும். இந்த வழக்குகளில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டது பாராட்டத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கின் இறுதிக் கட்டம் வரை உறுதியாக நின்று, சவால்களை எதிர்கொண்டு உறுதியாக சாட்சியம் அளித்தது என்பதும் போற்றுதலுக்குரியதாகும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அக்குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்திட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் :

கடந்த 2019 பிப்ரவரி மாதம் நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்தாக்குதல் மத்திய புலனாய்வு துறை விசாரணை அதிகாரியின் விசாரணையும், சாட்சியங்களையும், ஆவணங்களையும் நீதிமன்ற விசாரணையில் நிலைநாட்டி, குற்றத்தை உறுதி செய்த முறை பாராட்டத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை, குற்றவாளிகளின் மனிதத் தன்மையற்ற ஈனச் செயலை நீதிமன்றத்தில் நிலைநாட்டியதை போற்றிப் பாராட்டுகிறோம்.

குற்றவாளிகள் மீது முன்வைக்கப்பட்ட 76 குற்றச்சாட்டுகளில் 66 குற்றங்களை உறுதி செய்து, நிலைநாட்டிய விசாரணை அதிகாரிகள், சாட்சியளித்தவர்கள், இவைகளை தக்க முறையில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, குற்றங்களை நிரூபித்த மத்திய புலனாய்வு துறை வழக்கறிஞர் ஆகியோருக்கு நன்றி பாராட்டி வாழ்த்துகிறோம்.

பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் கோவை மகளிர் நீதிமன்றம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ 85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியிருப்பது, போராடும் பெண்களுக்கு வாளும், கேடயமுமாக உதவி சிறப்புப் பெறும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் :

பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது.

பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. பாதிக்கப்படும் பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு இது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்சோ வழக்குகளும் தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குற்றமிழைக்க முற்படும் கயவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இத்தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

நீதியை நிலைநாட்ட போராடிய அனைவருக்கும், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய மாண்புமிகு நீதிமன்றத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை :

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேல், துணிச்சலாகப் போராடி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தந்துள்ள பாதிக்கப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும், இந்தத் தீர்ப்பு ஓரளவாவது மன ஆறுதல் அளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன்.

இந்த வழக்கில் நியாயம் கிடைக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிரான வழக்குகளில், தாமதமின்றிச் செயல்படவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும், விரைவாக நியாயம் கிடைக்கவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். https://minnambalam.com/tn-political-leaders-welcome-pollachi-case-verdict/

அதிமுக, நாதக கட்சிகள் கருத்து எங்கே?

2 hours ago, goshan_che said:

இப்படி பட்ட கொடுமைகளை, தூத்துகுடி கொலையை செய்த எடப்பாடியை அவரின் பிறந்த தினத்தில் வல்லவர், நல்லவர் என புகழ்ந்தார் அண்ணன் சீமான்.

கொட நாடு கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியே எடப்பாடி தான் என்பது அனைவருக்கும் தெரிந்த, (ஆனால்) ரகசியம். அவ்வளவு நல்லவர் அவர்.

2 hours ago, goshan_che said:

அதிமுக, நாதக கட்சிகள் கருத்து எங்கே?

'குத்தவைச்சு உட்கார்ந்துட்டு இருந்தவளையா நான் கொண்டு போய் வயக்காட்டில் வைத்து கற்பழித்தேன்' என்று வீறாப்பு பேசும் கண்ணியமற்ற ஒரு தலைவரைக் கொண்ட கட்சி இப்படியான தீர்ப்பு தொடர்பாக எப்படி கருத்து வைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2025 at 14:55, ஏராளன் said:

வெட்டுவதிலும் பார்க்க செயலற்றதாக்க வேண்டும் அண்ணை. சட்டத்திலேயே இது இடம்பெற வேண்டும்.

ஆமாம் எனக்கு தெரியும்,.....நாய்களுக்கு செய்வதுண்டு நான் நேரில் பார்த்து உள்ளேன்

அது நலமடிப்பது என்று சொல்வது உண்டு” இரண்டு கெட்டன்களுக்கு இடையில் விதைகளை வைத்து நெரித்து அதை விதைகளை தண்ணீர் போல் மாற்றி விடுவார்கள் கறுமம். நாய் படும் வேதனையைப் பார்க்க அழுகை வரும் அதன் பின்னர் அது பெண் நாயை. திருப்பி பார்க்காது,..ஆனால் பெண் நாய்கள். வலை. ஆட்டி ஆட்டி. இந்த நாயைச் சுற்றி வரும் வா. வா. என்று அழைப்பது. போலிருக்கும். இப்படி மனிதர்களுக்கு செய்யலாமா?? முடியாது,.....மனித உரிமை மீறல் அப்படி என்று வந்து விடுவார்கள் எனவே வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்கட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

குற்றவாளிகள் என தீர்பளிக்கப்பட்டவர்களுக்கு தான் என்றாலும் அப்பாவிகள் தண்டிக்கப்பட்டால்....

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இப்படி பட்ட கொடுமைகளை, தூத்துகுடி கொலையை செய்த எடப்பாடியை அவரின் பிறந்த தினத்தில் வல்லவர், நல்லவர் என புகழ்ந்தார் அண்ணன் சீமான்.

அவரை நினைக்க தான் பயமாக உள்ளது தீயவற்றையே ஆதரித்து கொண்டு வருகின்றார். இங்கே வரும் பெரிய பாதிப்பு அவர் அட்டுழியம் செய்த குற்றவாளிகள் ஆதரிக்கும் நிலைபாடு எடுத்தால் வெளிநாட்டு ஈழ தமிழர்களும் அவருக்காக அதை சரி என்பார்கள் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

குற்றவாளிகள் என தீர்பளிக்கப்பட்டவர்களுக்கு தான் என்றாலும் அப்பாவிகள் தண்டிக்கப்பட்டால்....

ஆமாம் எப்படிப்பட்ட தண்டனை வழங்கும் போதும் அப்பாவிகள் தண்டிக்கப்பட சந்தர்ப்பமுண்டு ......ஆனால் மரணத்தண்டனை. உண்டு” உடல். உறுப்புக்களை அகற்றும் அல்லது சிதைக்கும். தண்டனைகள். வழங்கப்படுவது உண்டா??,.இல்லை என்று நினைக்கிறேன் இருந்தால் சொல்லுங்கள் எந்த நாட்டில்???? எப்படியான தண்டனை” ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

ஆமாம் எப்படிப்பட்ட தண்டனை வழங்கும் போதும் அப்பாவிகள் தண்டிக்கப்பட சந்தர்ப்பமுண்டு ......ஆனால் மரணத்தண்டனை. உண்டு” உடல். உறுப்புக்களை அகற்றும் அல்லது சிதைக்கும். தண்டனைகள். வழங்கப்படுவது உண்டா??,.இல்லை என்று நினைக்கிறேன் இருந்தால் சொல்லுங்கள் எந்த நாட்டில்???? எப்படியான தண்டனை” ??

சிதைத்தல் இல்லை அண்ணை, நான் சொன்னது செயற்பாடற்றதாக்குவது பற்றியே. சிறிய சத்திரசிகிச்சை மூலமாகவோ ஊசி மூலமாகவோ செய்யலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிரிதானியாவில் பீட்டர் சலவன் எனும் ஒருவர் 38 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.

இப்போ 70 வயதை நெருங்கி உள்ள இவர், அவரின் இருபதுகளில் ஒரு 19 வயது பென்ணை, வன்புணர்ந்து, சித்திரவதை செய்து கொலைசெய்தார் என சிறைக்கு அனுப்பப்பட்டார்.

38 வருடம் கடந்து டின் என் ஏ சாட்சி இதை செய்தது இன்னொருவர் என நிறுவியாதால் வெளியே வந்துள்ளார்.

நினைத்துப்பாருங்கள் இது எந்த பெரிய அநியாயம்?

38 வாழ்வின் முக்கியமான வருடங்களை சிறையில் அநியாயமாக வீணடித்துள்ளார்.

ஆனால்…..

இவருக்கு மரண தண்டனை கொடுத்திருந்தால்? இப்போ அவரை மீள கொண்டுவந்திருக்கவா முடியும்?

அல்லது ஆண்மை பறிப்பு போல மீட்க முடியாத தண்டனையை கொடுத்திருந்தால்?

உலகின் முதல்தர குற்றவியல் நீதி அமைப்பு உள்ள இங்கிலாந்திலேயே இப்படியான தவறுகள் நடக்கும் போது, இந்தியா இலங்கையில் ?

ஆகவேதான் இப்படியான தண்டனைகளை பெரும்பாலும் கொடுப்பதில்லை.

இன்னும் பல காரணங்கள் உள்ளன.

https://uk.news.yahoo.com/peter-sullivan-victim-longest-running-141720495.html?guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly93d3cuZ29vZ2xlLmNvbS8&guce_referrer_sig=AQAAAMrP_qR2PangmUiNQwTTlrAfP9x-Twx44jpSfe4VwxyNorqNopkznGLj8N8pFWH8ZtNqL5PCM2ovuQBKQHDhp0odXPju-dEuYCQid6StxlOb3oyzYi0cDf7g3ZOTqbn7V7o-YYeH6dpX9PRyjSYgi_RXV14sHoKAob5eRbjz_d1-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.