Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1364376.jpg

‘நாயகன்’ என்ற ஒரு க்ளாசிக் படம் வெளியாகி சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பே இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. பிறகு டைட்டில் டீசர், ட்ரெய்லர், சமூக வலைதளங்களில் ஹிட் அடித்த பாடல்கள் என இப்படத்துக்கு பெரிய ஓபனிங்கை கொடுத்தது. இந்த பெரும் எதிர்பார்ப்பை கமல் - மணிரத்னம் கூட்டணி பூர்த்தி செய்துள்ளதா?

டெல்லியில் கேங்ஸ்டராக இருக்கும் ரங்கராய சக்திவேலுக்கும் (கமல்ஹாசன்), போலீஸுக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் பேப்பர் போடும் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டு இறக்கிறார். இதனால் அவரது மகனான சிறுவன் அமரன் (சிலம்பரசன்) ஆதரவின்றி நிற்கிறார். அவருடைய தங்கை சந்திராவும் காணாமல் போகிறார். பின்னர் அமரனை தத்தெடுத்து தன் சொந்த மகன் போல வளர்க்கிறார். தன் அண்ணன் மாணிக்கத்தின் (நாசர்) மகளின் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்கிறார் சக்திவேல். இதனால் தன்னுடைய பொறுப்புகளை (?) அமரனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார்.

ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன பிறகு தன்னை விட மற்றவர்கள் அமரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சக்திவேலுக்கு நெருடுகிறது. தன் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலுக்கும் கூட அமரன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார். இது இருவருக்கும் இடையே மோதலை உருவாக்குகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பதே ‘தக் லைஃப்’ படத்தின் திரைக்கதை. (படத்தில் இடம்பெறும் சிறிய ஸ்பாய்லர்கள் இதில் அலசப்பட்டுள்ளதால் படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்ளவும்.)

சில நேரம் நாம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செல்லும் படங்கள் நம்மை மிகுந்த ஆச்சர்யத்துக்குள்ளாக்கி நமக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும். வேறு சில படங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் செல்லும் பார்வையாளர்களை ஏமாற்றி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதில் ‘தக் லைஃப்’ இரண்டாவது வகை. காரணம், கமல்ஹாசன் - மணிரத்னம் என்ற இந்திய சினிமாவின் இரு பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இருந்தும் இப்படத்தை ஓரளவுக்கு கூட பார்வையாளர்கள் ரசிக்கும்படி கொடுக்க முடியாமல் போனது பேரதிர்ச்சி.

படம் ஒரு ஃப்ளாஷ்பேக் உடன் தொடங்குகிறது. படத்தின் ஒரு சில நல்ல அம்சங்களில் இந்தக் காட்சியும் ஒன்று. கமலுக்கான டீஏஜிங் தொழில்நுட்பம் அசத்தலான ஆச்சர்யம். இதற்கு முன்பு வந்த படங்களில் இல்லாத நேர்த்தியும், துல்லியமும் இதில் இருந்தது. இளவயது சிம்புவுக்கும் கமலுக்கும் இடையிலான காட்சிகளும், பின்னணியில் ஒலிக்கும் ‘அஞ்சுவண்ண பூவே’ பாடலும் நன்று. ஆனால், இதன்பிறகு சமகாலத்துக்குப் படம் வந்ததும் திரைக்கதை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி தட்டையாக நகரத் தொடங்குகிறது.

அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. மணிரத்னம் படங்கள் என்றாலே வசனங்கள் மூலமாக கதையை சுவாரஸ்யமாக நகர்த்துவதில் வல்லவர் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவர். ஆனால், அதற்காக ‘போதும் போதும்’ என்று சொல்லும் அளவுக்கு எல்லா காட்சியையுமே வசனத்திலேயே நகர்த்தி இருக்கிறார். கமலுக்கும் சிம்புவுக்குமான பிணைப்பு, அதன் பிறகு இருவருக்குள்ளும் எழும் சின்ன ஈகோ, சிம்பு மீது கமலுக்கு ஏற்படும் பொறாமை, நாசருக்கும் கமலுக்கும் அப்படி என்ன பகை என எந்த காட்சியிலும் அழுத்தமோ, மெனக்கெடலோ இல்லை. போகிற போக்கில் வசனத்திலேயே அவரவர் தங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையை சொல்லிவிட்டு போகிறார்கள்.

த்ரிஷா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. த்ரிஷா வீட்டில் இருந்து கமல் தன் வீட்டுக்குச் செல்லும் ஒரு காட்சியில் முகத்தில் வெறுப்பை காட்டுகிறார் த்ரிஷா. அதன் பிறகு இரண்டாம் பாதி முழுக்க கமலை நினைத்து உருகுகிறார். உண்மையில் அந்த கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன, அவர் யார் என எதிலும் தெளிவில்லை. இதே கதைதான் அபிராமி - கமல் இடையிலும். கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்துவிட்டு வந்து கொஞ்சம் எமோஷனலாக பேசியதுமே விழுந்து விடுகிறார் அபிராமி.

17491124081138.jpg

திடீரென சம்பந்தமே இல்லாமல் நேபாளம் செல்கிறார் கமல். அங்கு இடைவேளை வைக்கவேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்ட ஒரு காட்சி. அடிபட்டு, குண்டடி வாங்கி, மலையிலிருந்து கீழே விழுந்து எதுவுமே ஆகாமல் மீண்டும் விழுந்து, பனிப்புயலில் இருந்து தப்பித்து… உஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. ஒருகணம் நாம் பார்த்துக் கொண்டிருப்பது மணிரத்னம் படம்தானா என்ற சந்தேகமும் பல இடங்களில் சற்று அதிகமாகவே வருகிறது.

நேபாளத்தில் இரண்டு வருடம் கமல் தற்காப்புக் கலைகள் கற்றுக் கொள்வதாக காட்டுகிறார்கள். (அதுவும் வசனத்திலேயே வந்துவிடுகிறது) அதற்காக போகும் இடங்களுக்கு எல்லாம் அந்த தற்காப்பு உடையையே அணிந்துதான் செல்ல வேண்டுமா? முதல் பாதியில் ரங்கராய சக்திவேலாக இருந்த கமல், இரண்டாம் பாதியில் ‘இந்தியன்’ தாத்தா மோடுக்கு மாறிவிடுகிறார். படத்தில் இருந்த வெகுசில நல்ல காட்சிகளில் ஒன்றாக கமலும் ஐஸ்வர்யா லட்சுமியும் பேசிக் கொள்ளும் காட்சியை சொல்லலாம்.

ஒரு படத்தின் திரைக்கதை சொதப்பிவிட்டால், அதில் இடம்பெறும் நல்ல விஷயங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் போய்விடும் என்பதற்கு இந்தப் படமே சரியான உதாரணம். கமலின் நடிப்பு, சிம்புவின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், ரஹ்மானின் பாடல்கள், ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு என பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தும் இவை எதுவும் நம்மை படத்துக்குள் இழுக்கவில்லை. இந்தப் படத்தில் எதற்காக ஜோஜு ஜார்ஜ், ‘மிர்சாபூர்’ அலி ஃபஸல், அசோக் செல்வன், சேத்தன் போன்ற நல்ல நடிகர்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.

வழக்கமாக நன்றாக சென்று கொண்டிருக்கும் படத்தில் பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர்களாக வருகின்றன என்று சொல்வோம். ஆனால், இங்கு ஏற்கெனவே தொங்கி துவண்டு போயிருக்கும் படத்தில் ஆங்காங்கே வரும் பாடல்கள்தான் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ‘ஜிங்குச்சா’, ‘அஞ்சுவண்ணப் பூவே’ பாடல்கள் சிறப்பு. சின்மயி வெர்ஷனா, தீ வெர்ஷனா என்ற ரசிகர்கள் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்த நிலையில், உங்களுக்கு இந்த இரண்டு பாடலுமே கிடையாது என்று அதை தூக்கி கடாசியிருக்கிறார் இயக்குநர். மற்றொரு வைரல் பாடலான ‘விண்வெளி நாயகா’ பாடலும் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

முன்பே குறிப்பிட்டத்தை போல கமல் - மணிரத்னம் என்ற இருபெரும் ஆளுமைகள் இருந்தும் கூட இப்படத்தை காப்பாற்ற முடியாமல் போனது சோகம். ‘க்ளாசிக்’ அந்தஸ்தை பெற்றுவிட்ட ‘நாயகன்’ அளவுக்கு இல்லையென்றாலும் கூட ஓரளவு ஜனரஞ்சகமான முறையில் ரசிகர்களை திருப்திபடுத்தி இருந்தால் படத்துக்கு செய்த பிரம்மாண்ட விளம்பரங்களுக்கு நியாயம் கிடைத்திருக்கும்.

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா? | Thug Life Movie Review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

முதல் காட்சி படம் பார்த்தாச்சு... படம் செம மொக்கையா இருக்கு. எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு கமல், மணிரத்னம், ரஹ்மான், சிம்பு, திரிஷா... இந்த பட்டியல் கூட்டணியோடு வரும் படமாக இருப்பதால், பேசப்படும் படமாக இருக்கும் என்ற நினைப்பில் தான் போனேன்.

படத்தை சிம்பு மட்டுமே தூக்கி பிடித்து இருக்கிறார். வேறு பிரமாதமாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

திரைக்கதை - அப்படி எதுவும் இருந்ததாக தெரியவில்லை.

பின்னணி இசை - ரஹ்மான் இந்த படத்தில் வேலை செய்தாரா என்று நினைக்க தோணுகிறது.

பாடல்கள் - ஆடியோவில் கேட்ட எதுவும் திரையில் சோபிக்கவில்லை. முக்கிய பாடல் "முத்த மலை" படத்திலேயே இல்லை.

விண்வெளி நாயகா ... வயலில் களைபிடுங்கும் போது ஒரு பாடலாக வருகிறது...

பால் டபா பாடிய மாறா பாட்டு ஒரு சண்டை காட்சிக்கு BGM ஆகா போட்டு தொலைத்து இருக்கிறார்கள்.

திரிஷா 2 ஆண்களால் அவர்கள் இச்சைக்கு தொட்டுக்கொள்ள பயன்படும் பிச்சையாக இருக்கார்.

பார்த்து பார்த்து எடிட் செய்து வெளியிடப்பட்ட படமாக தோணவில்லை.

சீரியஸ் வசனங்கள் கமல் பேசும் போது தியேட்டரில் சிரிப்பு சத்தம் தான் கேட்டது...

"கமல் சொல்ல என்ன இருக்கு .... நீ திரிஷா ஹூக்கை கலட்டு..."

கன்னடா ரசிகர் காசு தப்பியது, அப்பாவி கனடாகாரன் மாட்டிக்கிட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

வசி நீங்கள் பார்த்தனிங்களோ அற்புதமான படம் என்று சொல்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

விண்வெளி நாயகா ... வயலில் களைபிடுங்கும் போது ஒரு பாடலாக வருகிறது...

படம் பார்த்து நொந்து நூலாகிப் போன சசி வர்ணம், அடுத்து படம் பார்த்து வந்து விம்மி விம்மி அழப் போகும் கிருபன் போன்றோருக்கும் ஒரு ஆறுதலாக இருக்க ஏதோ என்னால் முடிந்தது,

large.IMG_8425.jpeg.0b687eddd37e8679c52c

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

படம் பார்த்து நொந்து நூலாகிப் போன சசி வர்ணம், அடுத்து படம் பார்த்து வந்து விம்மி விம்மி அழப் போகும் கிருபன் போன்றோருக்கும் ஒரு ஆறுதலாக இருக்க ஏதோ என்னால் முடிந்தது,

large.IMG_8425.jpeg.0b687eddd37e8679c52c

நான் ரிக்கெட் புக் பண்ணியதை ஒருவருக்கும் சொல்லவேயில்லையே!🧐

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கமல் - சிம்பு திரைப்படத்தை பற்றி இப்படியும் விமர்சனம் இருக்கின்றது.

https://youtu.be/4YDTEcU3DQo?si=POGG6p2dk8VU-fBc

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு மாதிரியான விமர்சனம்.

https://youtu.be/XA3RttE7fUQ?si=k4QWwuHdZNqYS6Tp

  • கருத்துக்கள உறவுகள்

ரகுமானின் இசைக்கும் சாருலதாவின் பாடலுக்காகவும் (டீயும் சின்மயியும் உட்பட) பார்க்க விரும்புகிறேன்.

12 minutes ago, nunavilan said:

ரகுமானின் இசைக்கும் சாருலதாவின் பாடலுக்காகவும் (டீயும் சின்மயியும் உட்பட) பார்க்க விரும்புகிறேன்.

அந்தப் பாடல் படத்தில இல்லையாம்.

மணி இனி ஓய்வெடுக்கலாம். இல்லையேல் இருக்கும் நல்ல பெயரும் இல்லாமல் போய் விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

அந்தப் பாடல் படத்தில இல்லையாம்.

மணி இனி ஓய்வெடுக்கலாம். இல்லையேல் இருக்கும் நல்ல பெயரும் இல்லாமல் போய் விடும்.

சா சப்பென்றாகி விட்டது. இவ்வளவு கூட்டும் சேர்ந்து என்ன செய்தார்கள்??

ஐயகோ அந்த பாடகியை அவுசில் இருந்து கூப்பிட்டு வைச்சு செய்துட்டாங்கள். முனைவர் பட்டம் எடுத்த பாடகி என்பது தமிழ் திரையுலகின் உச்சக்கட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

ஐயகோ அந்த பாடகியை அவுசில் இருந்து கூப்பிட்டு வைச்சு செய்துட்டாங்கள். முனைவர் பட்டம் எடுத்த பாடகி என்பது தமிழ் திரையுலகின் உச்சக்கட்டம்.

யாரு டீ யா? அவர் ஒரு உயிரியல் விஞ்ஞான பாடத்தில் எம் எஸ் சி வைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

யாரு டீ யா? அவர் ஒரு உயிரியல் விஞ்ஞான பாடத்தில் எம் எஸ் சி வைத்துள்ளார்.

சாருலதா!!!

https://www.youtube.com/isaipayanam

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

யாரு டீ யா?

ஒரு சிறந்த பாடகி முனைவர் பட்டம் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே அவர் அப்படி பொய் சொன்னதும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தலைவன் கழுவி ஊத்துவான்னு நினைச்சேன் ஆனா இப்டி காரி துப்புவான்னு எதிர்பார்க்கலே!!

  • கருத்துக்கள உறவுகள்

சல்லிசல்லியா நொறுக்கீட்டீங்களே.. Thug Life Movie Review in Tamil

6 Jun 2025, 10:30 AM

Thug Life Movie Review in Tamil

ஒரு திரைப்படம் என்பது பலருக்கு வெறும் கேளிக்கை அல்ல; அப்படம் குறித்த முதல் அறிவிப்பு வெளியாவது தொடங்கி, திரையரங்கில் பார்த்தபின்னும் எண்ணமாக, பேச்சாக, தினசரி வாழ்வின் பிரதிபலிப்பாக அதன் தாக்கம் நீண்டுகொண்டே இருக்கும். அதனை மிகச்சரியாகச் செய்த திரைப்படங்களை ‘கிளாசிக்’ என்று சொல்கிறோம்; அதனைத் தந்தவர்களை ஜாம்பவான்களாக கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட ஜாம்பவான்கள் சிலர் ஒன்றிணைகிறபோது உருவாகிற எதிர்பார்ப்பு சாதாரணமானதல்ல.

கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் என்று ஜாம்பவான்கள் பட்டாளமே ஒன்றிணைந்த ‘தக் லைஃப்’ அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கியது. ‘அது போதாது’ என்று படக்குழுவினர் வேறு அதனை மேலும் உயரங்களுக்குக் கொண்டு சென்றனர். ‘கன்னடம்’ குறித்து கமல் பேசியது, ‘தக் லைஃப் படத்தைக் கொண்டாடியே தீர வேண்டும்’ என்கிற எண்ணத்தை அவரது ரசிகர்களிடத்தில் உருவாக்கியது.

இப்போது ‘தக் லைஃப்’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. மலையென உயர்ந்திருக்கிற எதிர்பார்ப்பினை அது பூர்த்தி செய்திருக்கிறதா?

இதுவும் ‘கேங்க்ஸ்டர்’ படம்தான்..!

Thug Life Movie Review in Tamil

‘கேங்க்ஸ்டர்’ கதை என்றால் மும்பை, கொல்கத்தா, சென்னை, கொச்சி, கோயம்புத்தூர் என்று சில நகரங்களைக் காட்டுவது திரையுலகினரின் வழக்கம். அந்த வரிசையில், ’தில்லியில் நடக்கிற கதை இது’ என்று மணிரத்னம் கதை சொல்லத் தொடங்குகிறார். நாமும் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்கிறோம்.

1994இல் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் காட்டுவதில் இருந்து கதை தொடங்குகிறது.

சீட்டுக்கட்டை நிமிர்த்து வைத்தாற் போன்று பழைய கட்டடங்கள். வீடுகள், கடைகள் என்றிருக்கும் அவற்றில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலொரு இடத்தில் இரண்டு கேங்க்ஸ்டர் கும்பல் சமாதானம் பேசுகின்றன.

ஒருபக்கம் மாணிக்கம் (நாசர்), ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) குரூப் இருக்கிறது. இன்னொரு பக்கம் சதானந்த் (மகேஷ் மஞ்ச்ரேகர்) ஆட்கள் இருக்கின்றனர்.

என்ன பேசுகின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், உடன்பாடு ஏற்பட்டதாகச் சொல்லி மாணிக்கமும் சதானந்தும் கைகுலுக்குகின்றனர். அதில் சிறிதும் உடன்பாடு இல்லை என்பது போல முழிக்கிறார் சக்திவேல்.

சதானந்த் சென்றபிறகும் யோசித்துக் கொண்டே இருக்கிறார். ஜன்னல் வழியாகப் பார்த்தால், அவர் எதிரே வந்து கொண்டே இருக்கிறது போலீஸ் படை. இன்ஸ்பெக்டர் சாமுவேல் ராயப்பா (பாபுராஜ்) அதிலொருவராக இருக்கிறார். சதானந்தை பார்த்து சமிக்ஞை செய்தவாறே வருகிறார்.

அடுத்த நொடியே சக்திவேல் உஷாராகிறார். ‘எல்லோரும் தப்பிச்சு போயிடுங்கடா’ எனும் ரேஞ்ச்சில் அவர் அலற, பூட்டப்பட்டிருக்கும் கதவு வழியே ஒரு செய்தித்தாள் வந்து விழுகிறது. உடனே மாணிக்கம் துப்பாக்கியால் சுடுகிறார். ‘வேண்டாம்’ என்று சக்திவேல் சொல்வதற்குள் அது நிகழ்ந்துவிடுகிறது.

செய்தித்தாள் விற்பனை செய்யும் நபர் குண்டடி பட்டு கீழே விழுகிறார். வேறு வீடுகள், கடைகளில் செய்தித்தாளை கொடுக்கச் சென்ற அவரது மகளும் மகனும் ‘அப்பா’ என்று ஓடி வருகின்றனர். அதற்குள், அந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர் போலீசார்.

‘எப்பா.. இவ்ளோ கூட்டம் இருக்கிற இடத்துல ஷூட் அவுட் பண்ணலாமாப்பா’ என்று ரசிகர்கள் சொன்னாலும், திரையில் இருப்பவர்கள் கேட்பதாக இல்லை.

அப்புறமென்ன? செய்தித்தாள் விற்பனை செய்பவரின் சடலத்தைப் பார்த்து அவரது மகன் அழுது கொண்டிருக்கிறார். குண்டு மழைக்கு நடுவே, அவரை தூக்கிக்கொண்டு போகிறார் சக்திவேல். அந்த சிறுவனின் பெயர் அமரன். அவரது தங்கை சந்திரா என்ன ஆனார் என்று தெரியவில்லை.

வீடு சென்றதும், அமரனின் பின்னணியைக் கேட்கிறார் சக்திவேல். ‘யாருமில்லாதவர்’ என்று அறிந்ததும், அவரைத் தானே வளர்க்க முடிவு செய்கிறார். குழந்தை சந்திராவைத் தேடிக் கண்டுபிடித்து தருவதாக உறுதியளிக்கிறார்.

இதன் பிறகு, 2016இல் நிகழ்வதாக கதை தடம் மாறுகிறது.

Thug Life Movie Review in Tamil

மேற்சொன்ன காட்சியை உள்வாங்கிக் கொண்டதும், அந்த சக்திவேல் எப்படிப்பட்ட ‘கேங்க்ஸ்டராக’ இருந்தார் என்பது தெளிவாகிவிடும்.

அவர் இப்போது எப்படியிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழும். அவர் வளர்த்து ஆளாக்கிய அமரனுக்குக் குடும்பத்தில் தரப்படுகிற இடம் என்ன என்ற கேள்வி எழும். சக்திவேல் குடும்பம் மட்டுமல்லாமல், அந்த ‘கேங்க்ஸ்டர்’ கும்பல் அமரை எப்படி நோக்குகிறது என்ற எண்ணம் தலை நிமிர்த்தும்.

‘ரெட்டை தலை பாம்பு மாதிரி இதுக்கெல்லாம் பதில் சொல்லி, ஒரு கேங்க்ஸ்டர் ட்ராமாவை கிளாசிக்கா மணி சார் மாத்தியிருப்பார்’ என்று எதிர்பார்ப்புடன் இருக்கையில் இருந்து முன்னகர்ந்து அமர்ந்தால், ‘பொளேர்’ என்று நெற்றிப்பொட்டில் அடித்து பின்னுக்குத் தள்ளுகிறது திரைக்கதை.

சந்திரா என்ற பெண் சிவப்பு விளக்கு பகுதியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு செல்கிறார் சக்திவேல். அங்கு இந்திராணியை (த்ரிஷா) பார்க்கிறார். ‘நீங்க தேடி வந்த சந்திராவைத்தான் கூட்டிட்டு போவீங்களா. என்ன கூட்டிட்டு போக மாட்டீங்களா’ என்கிறார் இந்திராணி. ‘அவ்ளோதானே’ என்று அவரை அழைத்துச் சென்று தனியே ஒரு வீட்டில் தங்க வைக்கிறார். அவருக்குக் காவலாக ஒரு பெண்ணையும் (வடிவுக்கரசி) பணியமர்த்துகிறார்.

அமரனோ சக்திவேலைத் தனது தந்தையாகக் கருதுகிறார். ஆனால், ‘அண்ணே’ என்று விளிக்கிறார். அவரது குடும்பத்தின் நல்லது கெட்டதுகளில் அவரை விட ஒருபடி அதிகமாக அக்கறை காட்டுகிறார்.

சக்திவேல் மனைவி ஜீவாவோ (அபிராமி), ‘அந்த வீட்டுக்கு போனேல்ல. இங்க ஏன் வந்த’ என்று சக்திவேலிடம் வீராப்பு காட்டுகிறார். ‘உங்கப்பனை அடிக்கறதுக்காக நான் வந்தப்போ, குறுக்கே நின்று என்னை ஒரு அடி விட்டப்போ விழுந்தவன் தான்’ என்று ’பழங்கதை’ பேசி ஜீவாவின் மண்டையைக் கழுவுகிறார் சக்திவேல்.

இவ்வளவும் சொன்னபிறகு, அந்த சதானந்தும் சாமுவேல் ராயப்பாவும் என்ன ஆனார்கள் என்று சொல்ல வேண்டுமே?

’கேங்க்ஸ்டர் வாழ்க்கை போதும்’ என்று சொல்லி, சதானந்த் அரசியலுக்குத் தாவுகிறார். அதனால், சக்திவேலுடன் சமாதானம் பேச மீண்டும் முயற்சிக்கிறார்.

Thug Life Movie Review in Tamil

ஒரு என்கவுண்டரில் குண்டடி பட்டு, படுத்த படுக்கையாகக் கிடக்கிறார் சாமுவேல் ராயப்பா. அவரது ஒரே மகன் ஜெய்யும் (அசோக் செல்வன்) போலீஸ் அதிகாரியாகத்தான் இருக்கிறார். காவல் துறையில் இருக்கிற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, சக்திவேல் பின்னணியைத்தான் அவர் குடைவார் என்பதை தமிழ் சினிமா பார்க்கிற குழந்தையும் சொல்லிவிடும்.

‘சரி, இப்படியொரு கதையில் முரண் எங்கே இருக்கிறது’ என்று கேட்டால், ‘வரும்.. பொறுங்க..’ என்று சொல்லி நிதானமாகக் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மணி ரத்னம். திரைக்கதை முடிச்சுகள், அது அவிழ்க்கப்படுதல் என்று இரண்டாம் பாதியை நீட்டியிருக்கிறார்.

மேற்சொன்ன கதையில் புதிதாக எந்த விஷயங்களும் இல்லை. சுவாரஸ்யம் இருக்கிறதா என்பது அவரவர் முடிவு சார்ந்தது.

முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் கமல், மணி ரத்னம் இணைந்து தந்த ‘நாயகன்’ கூட ‘கேங்க்ஸ்டர்’ கதை தான். நேர்கோடாகக் கதை சொல்லாமல், அதில் ஒரு ரௌடியின் ஐம்பதாண்டு கால வாழ்வு இருந்தது. அந்த கதை சொல்லல் ஒரு கண்ணாடி மாளிகையைக் கவனமாகக் கட்டி எழுப்பியிருக்கும்.

ஏற்கனவே கட்டி வைத்த அந்த மாளிகையின் மீது கல்லெறிந்திருக்கிறது ‘தக் லைஃப்’. ‘இப்படி சல்லிசல்லியா நொறுக்கிட்டீங்களே’ என்று ரசிகர்களான நாம் வருந்துகிற வகையில் இப்படம் அமைந்திருக்கிறது.

அரசு எந்திரம் என்ற ஒன்றைப் பற்றிக் கவலைப்படாமல், ‘தளபதி’யில் சூர்யாவும் தேவாவும் அரங்கேற்றுகிற ரவுடித்தனம் பற்றிய கேள்விகள் எல்லாம் இந்த படத்தைப் பார்க்கையில் விஸ்வரூபமெடுக்கின்றன. அந்த படங்களில் நம்மை வாயடைக்கச் செய்த மணி ரத்னம், ‘தக் லைஃப்’பில் எங்கு சறுக்கியிருக்கிறார். அவரே அசை போட வேண்டிய கேள்வி இது.

உயர் தர பொம்மை!

கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர், அசோக்செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, ஜோஜு ஜார்ஜ், மகேஷ் மஞ்ச்ரேகர், அலி ஃபசல் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர். இன்னும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தணிகலபரணி, பாபுராஜ், பகவதி பெருமாள், வையாபுரி, சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, அர்ஜுன் சிதம்பரம் என்று பலர் இதில் முகம் காட்டியிருக்கின்றனர்.

பெரும்பாலான காட்சிகளில் கமல் தலைகாட்டியிருக்கிறார். மீதமிருக்கிற காட்சிகளில் வந்து போயிருக்கிற அனைவருமே சிறப்பாகத் தோன்றியிருக்கின்றனர்.

ஆனால், ‘உள்ளடக்கம் எப்படி’ என்று கேட்டால் ‘ப்ச்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

Thug Life Movie Review in Tamil

கமர்ஷிலாகவும் கலைரீதியிலும் கவனம் ஈர்த்த படங்களின் நாயகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மீண்டும் கைகோர்க்கிறபோது ரசிகர்கள் எதிர்பார்ப்பு பெருமளவு உயரும். ஆனால், அந்த படம் கமர்ஷியலாகவும் இருக்காது; கலைரீதியிலும் திருப்தி தராது. ஹாலிவுட், பாலிவுட் என்று நாம் பார்க்கிற எந்த மொழிப் படமானாலும் இது போன்றதொரு அனுபவத்தை எதிர்கொண்டிருப்போம்.

அதைத்தான் ‘தக் லைஃப்’பில் மணி ரத்னம் – கமல் கூட்டணி தந்திருக்கிறது. ஒரு உயர் தர பொம்மையைப் போன்று இத்திரைப்படத்தை அமைத்திருக்கிறது.

மேலே சொன்னவாறு இதில் நடிகர் நடிகைகளின் சிறப்பான ‘பெர்பார்மன்ஸ்’ இருக்கிறது. ஒவ்வொரு பிரேமும் உலகத்தரம் என்று சொல்கிற வகையில் ஒளிப்பதிவை அமைத்திருக்கிறார் ரவி கே.சந்திரன்.

ஒளிப்பதிவாளர் சுற்றிச் சுழன்றாடுகிற வகையில் தயாரிப்பு வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் ஷர்மிஸ்தா ராய்.

ஒவ்வொரு காட்சியையும் அதன் தன்மைக்கு ஏற்றவாறு தொகுத்திருக்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.

இன்னும் சண்டைப்பயிற்சி, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று எல்லாமே வியக்கத்தக்க அளவில் திரையில் இடம்பெற்றிருக்கிறது.

சரி, அதனால் கதைக்கும் காட்சி வடிவாக்கத்திற்கும் என்ன லாபம் என்று கேட்டால் எந்தப் பதிலும் கிடைக்காது.

இப்படியொரு உள்ளடக்கதிற்குத் தன் இசையால் உயிர் கொடுக்க முயன்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். வழக்கத்திற்கு மாறான பின்னணி இசை அனுபவத்தை ரசிகர்கள் பெறட்டும் என்று உழைத்திருக்கிறார். ஆனாலும், ’உயர்தர பொம்மையாகவே’ காட்சி தருகிறது ‘தக் லைஃப்’.

சரி, ஏ.ஆர்.ஆர். தந்த 9 பாடல்களையாவது திரையில் பார்த்து மகிழலாம் என்றால் மணி ரத்னம் அதற்கும் இடம் தரவில்லை. ஜிங்குச்சா, சுகர் பேபி, ஓ மாறா பாடல்களின் தொடக்கம் தான் காதில் விழுகின்றன. அதன்பிறகு அவற்றை ரசிக்கிற மனநிலை மறைந்து போகிறது.

அத்தனை பாடல்களிலும் இரண்டுக்கும் மேற்பட்ட காட்சிகள் தலைநீட்டுகின்றன. அதனால், அவை பின்னணியில் ஒலிக்கின்றன; பாதியிலேயே மங்கிவிடுகின்றன.

‘விண்வெளி நாயகா’ பாடல் கிளைமேக்ஸில் வரும் டைட்டிலில் ஒலிக்கிறது. ‘முத்த மழை பாடலை தீ பாடியிருக்க வேண்டுமா? சின்மயி பாடியிருக்க வேண்டுமா’ என்ற விவாதத்திற்கான பதிலை அறியலாம் என்று பார்த்தால், அந்த பாடல் படத்திலேயே இல்லை.

‘நியூ’வில் வரும் ‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா’ மாதிரியான ரசிகர்கள் நினைவில் இடம்பெறத் தக்க ஒரு பாடலாக ‘அஞ்சு வண்ண பூவே’ அமைந்திருக்க வேண்டும். ‘எனக்கு செண்டிமெண்ட்ல நம்பிக்கை இல்லைங்க’ என்று அதனைப் புறந்தள்ளியிருக்கிறார் மணி ரத்னம்.

Thug Life Movie Review in Tamil

சில நிறைகள் ‘தக் லைஃப்’பில் உண்டு. க்ளோஸ் அப்’ ஷாட்களில் தலைகாட்டியிருக்கும் அனைத்து நடிகர், நடிகையரும் தமது திறமையை ‘பளிச்’சென்று காட்டியிருக்கின்றனர். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. அதற்காக மட்டுமே படம் பார்க்க வருபவர்களுக்கு ‘தக் லைஃப்’ நல்லதொரு அனுபவத்தைத் தரும்.

போலவே, ‘மணி சாரும் கமல் சாரும் சேர்ந்து சீனிகம் மாதிரி ஒரு ரொமான்ஸ் படம் பண்ணலாமே’ என்று சொல்ல வைக்கின்றன சில காட்சிகள்.

அதே நேரத்தில், இந்த ஜாம்பவான்கள் பட்டாளம் இப்படிப்பட்ட லாஜிக் மீறல்களுக்கு இடம் தந்திருக்கிறதே என்றும் எண்ண வைக்கின்றன சில காட்சிகள். அவை ‘க்ளிஷேக்களின் உச்சம்’ எனலாம்.

தன்னைத் தொடர்ந்து வந்த ரவுடிகள் வீட்டு வாசலில் காத்துக் கிடக்க, அதற்கடுத்த காட்சியில் ரயில் நிலையத்திற்குச் சென்று அவர்களை கமல் பாத்திரம் பந்தாடுகிற காட்சி அதற்கொரு உதாரணம். இது போன்ற லாஜிக் மீறல்கள், ‘என்ன மணி சார் இது’ என்று கேட்க வைக்கின்றன.

ஒட்டுமொத்தத்தில் ‘நாயகனைத் தாண்டி நிற்கிற ஒரு கிளாசிக்கான கேங்க்ஸ்டர் படத்தைப் பார்க்க வேண்டும்’ என்று தியேட்டருக்கு வருபவர்களைத் தலையில் தட்டி உட்கார வைக்கிறது ’தக் லைஃப்’. அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பவர்களுக்கும், கமல் – மணி காம்பினேஷனை எப்படி மிஸ் செய்வது’ என்பவர்களுக்கும் இப்படம் பிடிக்கக்கூடும்..!

https://minnambalam.com/kamal-haasan-thug-life-movie-review-in-tamil/

  • கருத்துக்கள உறவுகள்

கமலகாசன் கன்னட மொழி பற்ற பேசி பிரச்சனை கொண்டுவந்தது அவரது பட வெளியீட்டிற்காக என்று பெருமாள் இங்கே சொல்லியிருந்தார்.அது உண்மை என்றும் இந்த படத்தைவிளம்பரம் செய்வதற்காக அவர் செய்ததாக இப்போது சொல்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

யாரு டீ யா? அவர் ஒரு உயிரியல் விஞ்ஞான பாடத்தில் எம் எஸ் சி வைத்துள்ளார்.

dhee சிலோன் ஐயர் பிள்ளை எல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

நான் ரிக்கெட் புக் பண்ணியதை ஒருவருக்கும் சொல்லவேயில்லையே!🧐

சொல்லாமலே அறிவார் கிழவர்.

அஜித் படம் போட்டாலே அன்ரிமாரைப் பார்க்கப் போகிற ஒருவர், விண்வெளி நாயகன் படம் போட்டால் பாட்டிமாரைப் பார்க்க கண்டிப்பாகப் போகத்தானே செய்வார். கிருபன் இது உள்ளங்கை நெல்லிக்கனி.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kavi arunasalam said:

சொல்லாமலே அறிவார் கிழவர்.

அஜித் படம் போட்டாலே அன்ரிமாரைப் பார்க்கப் போகிற ஒருவர், விண்வெளி நாயகன் படம் போட்டால் பாட்டிமாரைப் பார்க்க கண்டிப்பாகப் போகத்தானே செய்வார். கிருபன் இது உள்ளங்கை நெல்லிக்கனி.

என்ன ரசனையோ தெரியல (@கிருபன் ஜி)

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு சிறந்த பாடகி முனைவர் பட்டம் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே அவர் அப்படி பொய் சொன்னதும் இல்லை

அவசியம் என்று நானும் சொல்லவில்லை😎.

பொய் சொன்னார் எனவும் சொல்லவில்லை 🤣.

43 minutes ago, குமாரசாமி said:

dhee சிலோன் ஐயர் பிள்ளை எல்லோ?

ஓம்

  • கருத்துக்கள உறவுகள்

சாருவின் விமர்சனம் இது.

சாரு இப்படி எழுதியிருக்கின்றாரே என்பதற்காக இந்தப் படம் வேறு எவருக்கும் இப்படியே தோன்றும் என்றும் இல்லை. முன்னர் சாரு திட்டித் தீர்த்த சில படங்கள் எனக்கு பிடித்தும் இருந்தன. அவர் கொண்டாடிய சில படங்கள் கொடுமைகளாகவும் இருந்தன.

ஆனாலும் எழுத்தில், விமர்சனத்தில் சாரு எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் பிடித்திருக்கின்றது. கமலுக்கும் சாருவிற்கும் ஏற்கனவே ஆகாது. இப்பொழுது புதிதாக என்ன ஆகிவிடப் போகின்றது................

https://charuonline.com/blog/?p=15790

**********************************************

தக் லைஃப் – விமர்சனம்

June 6, 2025


ஒண்ணும் ரெண்டும் ஏழு, ஏழும் ஒன்பதும் இருபத்தைந்து, இருபத்தைந்தும் முப்பதும் தொண்ணூறு என்று ஒருத்தர் கணக்குப் போட்டு நம்மிடம் சொல்லி, கணிதத்தை வேறு திசையில் செலுத்தியிருக்கிறேன் என்று சொல்வது போலிருந்தது தக் லைஃப் படம்.

மணி ரத்னத்துக்கும் கமல் ஹாசனுக்கும் எதார்த்த உலகம் பற்றி எதுவுமே தெரியாதது போல் இருக்கிறது. படத்தில் எல்லா காட்சிகளும், எல்லா பாத்திரப் படைப்புகளும் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தன. சில உதாரணங்களைத் தருகிறேன்.

அமரனை (சிம்பு) சக்திவேல் நாயக்கர் (கமல்) சிறுவயதிலிருந்தே (ஏழு வயது என்று வைத்துக்கொள்லலாம்) வளர்க்கிறார். இருபது இருபத்தைந்து ஆண்டுகள் வளர்த்திருப்பார். அமரனுக்கு ஏழு வயது என்றால் அப்போது சக்திவேலுக்கு முப்பத்திரண்டு இருக்கலாம். அப்படியானால் அது தந்தை மகன் உறவுதானே? ஆனால் படத்தில் அண்ணன் – தம்பி என்று வருகிறது. அதற்கு ஒரு ஆபாசமான காரணம் இருக்கிறது. சக்திவேலின் காதலியான இந்திராணியை (த்ரிஷா) அமரனும் காதலிக்கிறார். தந்தை மகன் உறவு என்றால் சித்தியைக் காதலிப்பது ஆசாரமல்ல, தமிழ் மக்கள் எதிர்ப்பார்கள் என்று அண்ணன் தம்பி உறவு என்று நம் காதில் பூ சுற்றுகிறார்கள்.

இதற்கு ஒரு மூலக்கதை இருக்கிறது. சக்திவேலும் இன்னொரு தாதாவும் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். அதில் இன்னொரு தாதா போலீஸிடம் போட்டுக்கொடுக்கிறான். துப்பாக்கிச் சூடு. அதில் சிறுவன் அமரனைத் தூக்கி வைத்துக்கொண்டு தப்பிக்கிறார் சக்திவேல். அப்போதுதான் அமரனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் இறக்கிறார். அந்தச் சம்பவத்தில் அமரனின் நாலு வயது தங்கை சந்திரா காணாமல் போய் விடுகிறாள். உன் தங்கையைக் கண்டு பிடித்துக் கொடுப்பது என்று சொல்லும் சக்திவேல் பல டான்ஸ் பப்களில் தேடி இந்திராவைக் கண்டு பிடித்துக் கூட்டிக்கொண்டு வந்து தன் காதலியாக வைத்துக்கொண்டு விடுகிறார்.

இந்த இந்திராதான் அமரனுக்கும் சக்திவேலுக்கும் முட்டிக் கொள்வதற்குக் காரணம்.

சக்திவேல் ஊரே நடுங்கும் தாதா. அப்படிப்பட்டவரின் காதலியான இந்திராணியிடம் எவ்வளவு சொத்தும் பணமும் இருக்க வேண்டும்? ஆனால் சக்திவேல் இறந்து விட்டார் என்று நம்பப்படும் காலகட்டத்தில் அமரன் இந்திராணியிடம் “நீ என்னோடு வந்து விடு, இல்லாவிட்டால் போய் விடு” என்று சொல்லும் சமயத்தில் இந்திராணி ஏதோ ஒரு அனாதையைப் போல “நான் எங்கே போவது?” என்று பசப்புகிறாள்.

எப்படி இருக்கிறது கதை? தான் காதலித்த சக்திவேல் இறந்ததாக நம்பப்படும் சமயத்தில் தன்னைப் பெண்டாள நினைக்கும் அமரனை இந்திராணி செருப்பால் அல்லவா அடித்திருக்க வேண்டும்? அப்படி நடக்கவில்லை. சக்திவேல் எப்போது தொலைவார், இன்னொருத்தனிடம் போகலாம் என்று காத்துக்கொண்டிருப்பவளைப் போல் நடந்து கொள்கிறாள் இந்திராணி. நம்பவே கேவலமாக இருக்கிறது.

இப்படித்தான் படம் முழுவதுமே காதில் பூ சுற்றுகிறார்கள். இன்னொரு காட்சி. சக்திவேல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். வெளியே வந்ததும் வீட்டுக்குப் போகாமல் நேராக காதலி வீட்டுக்குப் போகிறார். அங்கே ஒரு வாரம் ஜாலி பண்ணி விட்டு மனைவியிடம் செல்கிறார். அங்கே மனைவி ஜீவா (அபிராமி) தன் கணவன் ஒரு வாரம் காதலி வீட்டில் இருந்து விட்டு வந்திருக்கிறான் என்று தெரிந்து, ஏதோ தன்னை விட்டுவிட்டுத் தனியாக சினிமாவுக்குப் போய் வந்தவனோடு ஊடல் கொள்வது போல் சிணுங்குகிறார். யோவ், நீங்களெல்லாம் என்ன சங்க காலத்திலா வாழ்கிறீர்கள்? சங்க காலத்துத் தலைவிதான் வேசி வீட்டுக்குப் போய் வந்த கணவனோடு அப்படி ஊடல் கொள்வதாக சங்கப் பாடல்கள் சொல்கின்றன.

நிஜத்தில் என்ன நடக்கும் தெரியுமா சினிமா உலக லெஜண்டுகளே? துடைப்பக்கட்டையால் கணவனைப் பின்னி எடுத்து விடுவார்கள். அல்லது, விஷம் வைத்துக் கொன்று விடுவார்கள். மணி & கமல், நீங்கள் இருவரும் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்?

எந்தப் பாத்திரத்திலும், எந்தக் காட்சியிலும் பார்வையாளர்கள் ஒன்றவே முடியவில்லை என்பதற்கு இன்னும் சில உதாரணங்கள் தருகிறேன். சக்திவேலின் அண்ணனுக்கு (நாஸர்) சக்திவேலின் மீது பொறாமை. அதேபோல் சக்திவேலின் அடியாட்கள் நாலைந்து பேருக்கும் அவர் மீது எரிச்சல். சக்திவேல் கைலாஷ் (இமயமலை கைலாஷ்) போகிறார். அங்கே ஒரு மலை உச்சியில் வைத்து அந்த நான்கு பேரும் – அடியாட்களும் அண்ணனும் – சேர்ந்து. நேருக்கு நேராகவே சண்டையிட்டு, துப்பாக்கியால் சுட்டு, என்னென்ன எழவோ செய்து அவரைப் போட்டுத் தள்ளுகிறார்கள். போட்டுத் தள்ளும் முயற்சியின்போது அமரனும் வந்து விடுகிறான். அவன்தான் இந்த சதித்திட்டம் போட்டதே. அவன்தான் சக்திவேலை மலையுச்சியிலிருந்து கீழே தள்ளி விடுவது.

இடைவேளை ஸ்லைட் காண்பிக்கப்படுகிறது.

மீதிக் கதையை நீங்களே யூகித்து விடலாம். எந்த த்ரில்லும் கிடையாது. மீதிக் கதையை யூகித்து விட்டீர்களா?

கீழே விழுந்த சக்திவேல் பிழைத்து எழுந்து வந்து எல்லோரையும் பழி வாங்குகிறார்.

அண்ணன்மாரே, இந்தக் கதை எந்த லெஜண்டின் கற்பனையில் உருவானது?

இன்னொரு பைத்தியக்காரத்தனம், கேளுங்கள். அமரன் தன்னை இருபத்தைந்து ஆண்டுகளாக வளர்த்த தன் தந்தை போன்ற சக்திவேலை ஏன் தீர்த்துக்கட்ட முயல்கிறார் தெரியுமா? சக்திவேலின் அண்ணன் அமரனிடம் “உன் தந்தையைக் கொன்றது சக்திவேல்தான்” என்கிறார். உடனே அமரன் அதை நம்பி சக்திவேலைக் கொலை செய்ய முயல்கிறார்.

டேய், டேய், டேய், காதில் பூ சுற்றுவதற்கும் ஒரு அளவில்லையா லெஜண்டுகளா? ஏன், அமரனுக்கு சுயபுத்தியே இல்லையா? யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் முட்டாப்பயலா அமரன்? கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லா பாத்திரங்களுமே இப்படித்தான் வருகின்றனர்.

ஊரே நடுங்கும் தாதாவான சக்திவேல் இப்படித்தான் தன்னைக் கொலை செய்யத் திட்டமிடும் அடியாட்களைத் தன் வலது கரமாக வைத்துக்கொண்டு திரிவாரா? அமரனைப் போலவே சக்திவேலுக்கும் ஆட்டாம்புழுக்கை அளவுக்குக் கூட மூளை இல்லை என்பது போலவே இருக்கிறது கதையமைப்பு. இதற்கிடையில் ஒரு அடியாள் எப்போது பார்த்தாலும் எல்லா அடியாட்களிடமும் சக்திவேல் பற்றி பொல்லாங்கு சொல்லிக்கொண்டே இருக்கிறான். அமரன் உட்பட. இது சக்திவேலுக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போயிற்று?

சக்திவேல் ஒரு ‘தக்’ என்கிறார்கள். ஆனால் அவரோ ரமண மகரிஷி மாதிரியே நடந்து கொள்கிறார். ஒரே ஒரு காட்சியில் இந்திராணியிடம் லவ்ஸ் பண்ணும்போது மட்டுமே ரமணராக இல்லாமல் நவீன கால சாமியாராக மாறுகிறார். கடைசி காட்சியில் சக்திவேல் நமது வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாராக மாறி விடுகிறார். தாடிதான் வெள்ளையாக இல்லாமல் கருப்பாக இருக்கிறது. அது ஒன்றுதான் வித்தியாசம்.

படத்தில் ஒரே ஒரு ரிலீஃப் என்றால் முத்தமழை பாடல் இல்லாததுதான். எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று நூலில் படித்தேன். எனக்கு எம்.எஸ். பற்றி ஒரு நீண்ட நாள் கேள்வி இருந்தது. இவர் ஏன் காமத்துப் பால் கீர்த்தனைகளை பக்தி ரசமாகப் பாடுகிறார் என்று. அந்த நூலில்தான் என் சந்தேகம் தீர்ந்தது. எம்.எஸ்.ஸின் கணவர் சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் ஒரு உத்தரவு போட்டாராம். “நீ எப்போதுமே – எந்தக் கீர்த்தனையாக இருந்தாலும் – பக்தி ரசம் ததும்பவே பாட வேண்டும்” என்று.

நம் சின்மயியும் அதே பாணியில் முத்த மழை பாடலை பக்தி ரசம் ததும்பப் பாடியதை தக் லைஃப் விழாவில் கேட்டு எனக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. நல்ல காலம். படத்தில் அந்தக் கொடுமை இல்லை. (கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு போன்ற பாடல்களைக் கொடுத்த ரஹ்மானும் மணி ரத்னமுமா இப்படி முத்த மழை போன்ற பக்திப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள்!)

மணி ரத்னமும் கமல் ஹாசனும்தான் திரைக்கதையாம்! ஒரு படத்தில் திரைக்கதை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணமாக விளங்கும்.

சமீபத்தில் செக்டார் 36 என்று ஒரு ஹிந்திப் படம் பார்த்தேன். தெரிந்த கதை. தெரிந்த சம்பவங்கள். தெரிந்த முடிவு. எல்லாமே செய்தித்தாள்களில் அக்கு வேறு ஆணி வேறாக அலசப்பட்ட சம்பவங்கள். ஆனாலும் படத்தில் ஒரு நொடி கூட தொய்வு இல்லை. முப்பதுக்கு மேற்பட்ட சிறார்களை வெட்டிக் கொன்ற சீரியல் கில்லரான ஒரு இளைஞன் போலீஸிடம் தன் தரப்பு நியாயத்தை விளக்குகிறான். அப்போது அவன் பேசும் வசனம், அப்போது அந்த நடிகனின் நடிப்பு இரண்டும் உலகத் தரம். அந்த நடிகரின் பெயர் விக்ராந்த் மாஸே.

செக்டார் 36 திரைப்படக் கலையைக் கற்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கக் கூடியது. ஏனென்றால், இதன் கதை, சம்பவங்கள், முடிவு எல்லாமே செய்தித்தாள்களில் விலாவாரியாக அலசப்பட்டது. இருந்தாலும் கண்ணைக் கூட சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது இதன் திரைக்கதையும், நடிப்பும், வசனமும். நம்முடைய லெஜண்டுகள் பழைய பெருங்காய டப்பாக்களாகி விட்டார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், தக் லைஃப் போன்ற ஒரு கொடூரமான தலையிடி படத்தை சமீப காலத்தில் பார்த்ததில்லை. இன்னொரு குறிப்பும் தர வேண்டும். இந்தப் படத்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் இந்தப் படத்தை மாமனாரின் இன்ப வெறி போன்ற பிட் படங்களோடு ஒப்பிடுகிறார். இந்திராணி விஷயத்தில் அமரன் செய்யும் சேட்டைகளைப் பார்த்தால், மாறன் சொல்வது சரிதான். சந்தேகமில்லை, இது ஒரு மாமனாரின் இன்ப வெறி படம்தான். என்ன, கொஞ்சம் ஆடம்பரமாக எடுத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் வந்ததில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இந்திராணி - அமரனின் சொந்த சகோதரியா?

இந்திராணியை கண்டுபிடித்து சக்திவேல் தன் துணைவியாக வைத்து கொள்ள,

அவர் மீது யாரெனெ தெரியாமல் அமரன் மையல் கொள்கிறார்?

இது இருவருக்கும் தெரிய வருகிறதா?

முடிவு எப்படி கையாளப்படுகிறது?

இதுதான் கதை என்றால் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், அல்லது பழைய பாலசந்தர் இயக்கத்தில் பழைய ரஜனி பின்னி இருப்பார்கள்.

விமர்சனங்களை பார்த்தால் இந்த நெருடலான கதையை பக்குவமாக கையாளாமல், சில்பா ஷெட்டி கணவன் எடுக்கும் “இந்தியன் ஆண்டியும் காலேஜ் பையனும்” ரேஞ்சில் எடுத்துள்ளார்கள் போலுள்ளது🤣.

  • கருத்துக்கள உறவுகள்

நிறை குடம் போலொரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கதுதான் சுபதினம் என்று வாலி எழுதி (அந்த வாலிதான் @வாலி நம் கள உறவோ நானறியேன்) சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலில் ஒரு வரி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் ரசிகர்களுக்கு அந்த சுபதினம் வரவில்லை. அந்த ஏமாற்றத்தையே இந்த படமும் தந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2025 at 10:15, நந்தன் said:

என்ன ரசனையோ தெரியல (@கிருபன் ஜி)

On 6/6/2025 at 09:55, Kavi arunasalam said:

சொல்லாமலே அறிவார் கிழவர்.

அஜித் படம் போட்டாலே அன்ரிமாரைப் பார்க்கப் போகிற ஒருவர், விண்வெளி நாயகன் படம் போட்டால் பாட்டிமாரைப் பார்க்க கண்டிப்பாகப் போகத்தானே செய்வார். கிருபன் இது உள்ளங்கை நெல்லிக்கனி.

த்ரிஷா இருக்கா! அந்த நம்பிக்கையில்தான் படம் பார்க்கப் போகின்றேன்🥰

thrisha-1-1.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.