Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

அப்படியா?

பாராளுமன்ற மன்றத்தில் நான் பிரபாகரனின் ஆள் என்றும் நான் பிரபாகரனின் வீரத் தமிழன் என்றும் பேசமுடியும் என்றால் பிரபாகரனுக்கு அஞ்சலி என்றால் சிறை என்பது உங்கள் கற்பனை மட்டுமே.

பிரபாகரனைப்போல மாவீரர் நாளில் விளக்கேற்றி மாவீரர் நாள் பாடலுக்கு அஞ்சலி செய்யமுடியும் தேசத்தில் பிரபாகரனுக்கும் அஞ்சலி என்பது சிறை தண்டனை என்பதும் உங்கள் கற்பனை மட்டுமே.

உண்மையில் உண்மையை தரிசிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை என்பது மட்டுமே உண்மை.

தலைவரின் திருவுருவப் படத்தினை தாயகத்தில் எவர் வைத்து வணக்கம் செலுத்தினாலும் நிச்சயமாக அரசு அவர்மீது தனது கவனத்தைத் திருப்பும். தலைவர் வாழ்ந்த வீட்டினை முற்றாக இடித்தழித்து, அவரது வாழ்வுகுறித்த சிறிய அடையாளங்கள் கூட தாயகத்தில் இருக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அரசு, அவரது திருவுருவப் படத்தினை வெளிப்படையாகவே வைத்து கெள‌ரவிக்க அனுமதியளிக்கப்போவதில்லை என்பது திண்ணம். ஆகவேதான் தாயகத்தில் இதுகுறித்த முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை

ரகுநாதன் உங்களிற்கான பதிலை வழங்கியுள்ளார் வாசித்து புரிந்துகொள்ளுங்கள்

  • Replies 52
  • Views 3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    மாவீரர் நாளினை அனுஷ்ட்டிப்பதை அரசு நேரடியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், போரில் கொல்லப்பட்டவர்களை உறவினர்கள் நினைவுகூர்வதைத் தாம் தடுக்கப்போவதில்லை என்றே கூறுகிறது. போரில் கொல்லப்பட்டவர்கள் என்று கூறும்போ

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தலைவருக்கு வீரவணக்கம் செய்வது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அவர் இப்போது உயிருடன் இல்லை. நானும் புலிகள் தொடர்பில் எழுதத்தொடங்கிய போது - ஆவணங்களில் - 2021ம் ஆண்டு அதைத்தான் எழுதினேன். கோராவில்

  • Justin
    Justin

    கடந்த ஆண்டு மாவீரர் தினத்தில் இருந்தே சில இடங்களில் பிரபாகரன் படமும் வைக்கப் பட்டு அஞ்சலி செய்யப் படும் வழமை ஏற்பட்டிருக்கிறது. பிரபாகரனையும் மாவீரர்களோடு சேர்த்து கௌரவிப்பது தான் முறையாக இருக்கும். அ

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2025 at 07:00, விசுகு said:

அப்படியா?

பாராளுமன்ற மன்றத்தில் நான் பிரபாகரனின் ஆள் என்றும் நான் பிரபாகரனின் வீரத் தமிழன் என்றும் பேசமுடியும் என்றால் பிரபாகரனுக்கு அஞ்சலி என்றால் சிறை என்பது உங்கள் கற்பனை மட்டுமே.

பிரபாகரனைப்போல மாவீரர் நாளில் விளக்கேற்றி மாவீரர் நாள் பாடலுக்கு அஞ்சலி செய்யமுடியும் தேசத்தில் பிரபாகரனுக்கும் அஞ்சலி என்பது சிறை தண்டனை என்பதும் உங்கள் கற்பனை மட்டுமே.

உண்மையில் உண்மையை தரிசிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை என்பது மட்டுமே உண்மை.

உங்கள் பிரச்சினை என்னவென்று புரியவில்லை😂. ரஞ்சித் விளக்கமாக எழுதியிருக்கிறார், அதற்கு விருப்பக் குறி இட்டிருக்கிறீர்கள். ரஞ்சித் எழுதிய அதே விடயத்தை ஏனையோர் சுருக்கமாக எழுதியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது புரட்டு என்று வாதிடுகிறீர்கள்!

நான் நினைக்கிறேன், இன்னும் நீங்கள் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டுமென்ற விருப்பத்தில், வெளியே இருந்து வரும் உங்கள் விருப்பத்திற்கு மாறான தரவுகளை உதாசீனம் செய்து விட்டு ஒரு குமிழிக்குள் அமர்ந்திருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

நீங்கள் முதலில் என்னை பற்றி நீங்களே உருவாக்கக வைத்திருக்கும் பிம்பத்தை விட்டு விட்டு சிந்திக்க முயலுங்கள்.

எனக்கு ஆதாரம் வேண்டும் தெளிவான சான்றுகள் வேண்டும். அதுவரை அது மனதில் ஒரு மூலையில் வதைத்தபடியே தான் இருக்கும். இதனால் மற்றவர்கள் எவருக்கும் எந்த தொல்லையே நட்டமோ கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஆதாரங்களை விடுங்கள். உங்கள் ஒரே கருத்திற்கு இரு வேறு விதமான பிரதிபலிப்பை எப்படி விளக்குகிறீர்கள்? ரஞ்சித் எழுதியது," ஓ..இப்ப புரிஞ்சிடிச்சு" என்ற நிலையா?

உங்களைப் போல பலரின் சந்தேகத்தையும், நம்ப மாட்டேனென்ற அடம் பிடிப்பையும் அப்படியே காசாக்க சுவிசில் இருந்து ஒரு பக்கா மோசடிப் பேர்வழியை இறக்கினார்களே? அதற்குப் பிறகும் இந்த சந்தேகங்களால் "எவருக்கும் நட்டமில்லை" என்கிறீர்களா😂?

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாகவே,

இயல்பாக அரசியலை அவதானிப்போர், கிரமமாக பத்திரிகை வாசிப்போர் என்று சாமான்ய மக்களே புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை புரிந்து கொண்ட நிலையில், தீர்க்க தரிசனமான ஒரு தலைமையின் கீழ் வளர்ந்தோம் என்று பெரிதாக பீற்றி கொள்பவர்கள் சிலருக்கு 2009 ல் நடந்த விடயம் 2025 ல் கூட புரியவில்லை என்பது நல்ல ஜோக் தான்.

தீர்க்க தரிசனம் என்றால் 15 -20 வருடங்களுக்கு பின் நடக்க இருப்பதை இப்போதே தமது நுண்ணறிவின் துணைகொண்டு அனுமானிப்பது. ஆனால், இங்கு தீர்கக தரிசன கோஷ்டிக்கு 16 வருடங்களுக்கு முன் நடந்ததை கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை. இதற்குள் இவர்கள் தமிழ் மக்களுக்கு அரசியல் வழிகாட்ட போகிறார்களாம். சின்ன புள்ள தனமா இல்ல. 😂

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

விருப்பு வாக்கு போடுவது ஏற்றுக்கொள்வதல்ல. அவரது கருத்தை வரவேற்பது. உண்மையில் ரகுவுக்கே தெரியும் அவரால் எந்த ஆதாரத்தையும் தரமுடியாது இல்லை என்பது. அவரது கருத்தை முழுமையாக வாசித்தால் இது உங்களுக்கு புரிந்திருக்கும்.

19 minutes ago, island said:

பொதுவாகவே,

இயல்பாக அரசியலை அவதானிப்போர், கிரமமாக பத்திரிகை வாசிப்போர் என்று சாமான்ய மக்களே புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை புரிந்து கொண்ட நிலையில், தீர்க்க தரிசனமான ஒரு தலைமையின் கீழ் வளர்ந்தோம் என்று பெரிதாக பீற்றி கொள்பவர்கள் சிலருக்கு 2009 ல் நடந்த விடயம் 2025 ல் கூட புரியவில்லை என்பது நல்ல ஜோக் தான்.

தீர்க்க தரிசனம் என்றால் 15 -20 வருடங்களுக்கு பின் நடக்க இருப்பதை இப்போதே தமது நுண்ணறிவின் துணைகொண்டு அனுமானிப்பது. ஆனால், இங்கு தீர்கக தரிசன கோஷ்டிக்கு 16 வருடங்களுக்கு முன் நடந்ததை கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை. இதற்குள் இவர்கள் தமிழ் மக்களுக்கு அரசியல் வழிகாட்ட போகிறார்களாம். சின்ன புள்ள தனமா இல்ல. 😂

உங்களுக்கு பிரபாகரன் சாகணும். பைலை மட்டுமல்ல எல்லாவற்றையும் மூடுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் அண்ணா தெளிவாக சொல்லி இருக்கிறார் என்று நம்புகிறேன்.

வெளிநாட்டில் அஞ்சலி செலுத்துவதை எதிர்ப்பவர்கள் ஒன்று அவர் இருக்கிறார் என்று நம்ப ஆசைப்படும் ஒரு தரப்பினர்

மற்ற தரப்பினர் தங்கள் தனிப்பட்ட நலன்கள் பாதிக்கபட்டுவிடுமே என்று அச்சப்படுபவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2025 at 05:53, Justin said:

பிரபாகரனின் இறந்த உடலின் காணொளி மட்டும் தான் "ஆதாரம்" என்ற வகைக்குள் வருகிறது எனக் கருதுகிறேன். எனவே எந்த ஆதாரமும் இல்லை என்பது சரியல்ல. அந்தக் காணொளியில் இருப்பதை நம்ப மறுப்பவர்கள் இருக்கலாம், ஆனால் அது தான் முடிவு செய்ய உதவியாக இருக்கும் ஒரே ஆதாரம்.

காணொளி ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள கூடிய ஆதாரங்களாக நீதிமன்றங்கள் கருதுவதில்லை, ஆதரவு ஆதாராமாக மட்டுமே எடுக்கப்படும் என கருதுகிறேன்.

தனது இறப்பின் பின்னர் தனது உடல் எதிரியிடம் கிடைத்தாலும் தனது மரணம் வெளிவரவேண்டும் என விரும்பிய ஒருவரின் கடைசி விருப்பிற்கெதிராக அவர் உயிருடன் இருக்கிறார் என பிரச்சாரம் செய்வது மிக தவறான செயலாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2025 at 17:32, Justin said:

ஏன் தனியாக ஒரு நினைவுகூரல் வைக்கிறார்கள் என்று வலுவான விளக்கங்கள் இதை நடத்துவோரிடம் இருந்து இல்லை.

வேறு எதற்கு? ஒன்றில் வருவோரிடம் காசு சேர்த்து கும்மாளம் அடிப்பதற்கு! அல்லது ஏற்கனவே ஏமாற்றி சேர்த்த காசை கரியாக்குவதற்கு! வேறு என்ன உருப்படியாக செய்கிறார்கள் இவர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2025 at 23:53, நன்னிச் சோழன் said:

என்னைப் பொறுத்தவரை தலைவரும் ஆயிரமாயிரம் மாவீரர்கள் போன்று ஓர் மாவீரர்தான். அதே போன்று தான் தலைவருக்கும் நவ. 27இல் தான் ஆண்டாண்டு வீரவணக்கம்

நவ.27 அந்த மேதகு பிரபாகரன் என்ற மாபெரும் தலைவனைப் போற்றுவதற்குரிய உலகின் சிறந்த புனிதமான நாட்களில் ஒன்று. இதுதான் என்வரையிலும் ஏற்புடையது. இதைத்தவிர வேறு எந்தநாளைத் தெரிவு செய்தாலும் அது சிலராலோ அன்றிப் பலராலோ தூற்றப்படும் நாளாகவே அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

வேறு எதற்கு? ஒன்றில் வருவோரிடம் காசு சேர்த்து கும்மாளம் அடிப்பதற்கு! அல்லது ஏற்கனவே ஏமாற்றி சேர்த்த காசை கரியாக்குவதற்கு! வேறு என்ன உருப்படியாக செய்கிறார்கள் இவர்கள்!

வணக்கம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அல்லது ஆதாரங்கள் தேடி இரவும் பகலும் அலையும் உறவுகளுக்கும் உங்கள் பதில் இது தானா???

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகனுக்கு தனிப்பட்ட மாவீரர் அஞ்சலி வைப்பது மிகவும் சந்தர்ப்பவாதம்.

பிரபாகரனையும் மற்றைய போராளிகளையும் அவமதிக்கும் செயல்

பிரபாகரன் புலிகள் அமைப்புக்கு மேலானவர் அல்ல. அதெ போல தமீழீழ தேசத்துக்கு மேலானவரும் அல்ல.

உணர்ச்சி கதைக்கு நான் வரவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் அவர்களின் திரு உருவப்படம் மக்களுக்கு வழங்கப்பட்டது

02.08.2025---சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழீழத்  தேசியத் தலைவர் அவர்களின் வீரவணக்க  நிகழ்வில்  தலைவர் அவர்களின் திரு உருவப்படம்   மக்களுக்கு வழங்கப்பட்டது

காணொளி:

👇🏿

https://methaku.com/home/video_description/77/தலவர-அவரகளன-தர-உரவபபடம-மககளகக-வழஙகபபடடத

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

வணக்கம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அல்லது ஆதாரங்கள் தேடி இரவும் பகலும் அலையும் உறவுகளுக்கும் உங்கள் பதில் இது தானா???

பிரபாகரன் மரணம் , காணாமல் போனோர். இந்த இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை.

காணாமல் போனோர் பற்றி ஒரு தகவலும் இல்லை. அவர்களது உடல்கள் மட்டுமல்ல, அவர்களது உடுதுணிகள் கூட கண்டெடுக்கப் படவில்லை, எனவே அவர்களை உயிரோடிருப்போராகக் கருதித் தேட வேண்டியது அவசியம்.

பிரபாகரனின் உடல் இறந்த உடனேயே காண்பிக்கப் பட்டிருக்கிறது. இதை "பொடி டபுள்" என்று நம்பும் உரிமை யாருக்கும் இருக்கிறது. ஆனால், அதை வைத்து செல்வம் திரட்ட ஒரு குழு அலைவதை அப்படி நம்புவோர் மனதில் இருத்த வேண்டியது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

என்னை நானே கிள்ளி பாக்கிறேன்.

2 hours ago, Justin said:

பிரபாகரன் மரணம் , காணாமல் போனோர். இந்த இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை.

காணாமல் போனோர் பற்றி ஒரு தகவலும் இல்லை. அவர்களது உடல்கள் மட்டுமல்ல, அவர்களது உடுதுணிகள் கூட கண்டெடுக்கப் படவில்லை, எனவே அவர்களை உயிரோடிருப்போராகக் கருதித் தேட வேண்டியது அவசியம்.

பிரபாகரனின் உடல் இறந்த உடனேயே காண்பிக்கப் பட்டிருக்கிறது. இதை "பொடி டபுள்" என்று நம்பும் உரிமை யாருக்கும் இருக்கிறது. ஆனால், அதை வைத்து செல்வம் திரட்ட ஒரு குழு அலைவதை அப்படி நம்புவோர் மனதில் இருத்த வேண்டியது அவசியம்.

ரொம்ப குளம்பி போயுள்ளார். 😇

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

பிரபாகரன் மரணம் , காணாமல் போனோர். இந்த இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை.

காணாமல் போனோர் பற்றி ஒரு தகவலும் இல்லை. அவர்களது உடல்கள் மட்டுமல்ல, அவர்களது உடுதுணிகள் கூட கண்டெடுக்கப் படவில்லை, எனவே அவர்களை உயிரோடிருப்போராகக் கருதித் தேட வேண்டியது அவசியம்.

பிரபாகரனின் உடல் இறந்த உடனேயே காண்பிக்கப் பட்டிருக்கிறது. இதை "பொடி டபுள்" என்று நம்பும் உரிமை யாருக்கும் இருக்கிறது. ஆனால், அதை வைத்து செல்வம் திரட்ட ஒரு குழு அலைவதை அப்படி நம்புவோர் மனதில் இருத்த வேண்டியது அவசியம்.

அந்த வீடியோ மட்டுமே ஆதாரம் என்றால் அதற்கு எதற்காக இத்தனை காத்திருப்பு????

16 வருடங்கள் வரை அதை எவரும் நம்பவில்லை என்பது தான் உண்மை.

தலைவர் இருக்கிறார் என்பதல்ல எனது பார்வை. அவரது வரலாறு முழுமையாக பதியப் படவேண்டும். இத்தனை மெய் பாதுகாவலர்கள் தப்பி வந்தும் கூட ஒரு சாட்சி கூடவா கிடையாது. சரி முடிஞ்சுது விளக்கு வைப்போம் என்பது ஏற்றுக் கொள்ள கூடியதல்ல. டொட்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

"யார்" காத்திருக்கிறார்கள்? உங்களைப் போன்ற கண் முன்னே இருக்கும் ஒரு ஆதாரத்தை, மனத்தில் இருக்கும் கற்பனையால் மறைப்போர் காத்திருக்கிறார்கள்.

"எவரும்" நம்பவில்லை என்கிறீர்கள். உங்கள் உலகம் இந்த விடயத்தில் மிகவும் சிறியது என்று காட்டும் வாக்கியம் இது!

"புறப்பட்டுப் போங்கள், நான் வரவில்லை" என்ற கணக்காக அவரே ஆட்களை அனுப்பி விட்டுத் தனியே மரணத்தை நோக்கிப் போயிருக்கிறார் என்பதாகத் தான் வன்னியில் இருந்து வந்த மக்கள் சொல்லியிருக்கிறார்கள். நடேசன், பாலகுமார் போன்றோரும் கூட, வெள்ளைக் கொடிப் படுகொலை நிகழ்வதற்கு சில நாட்கள் முன்னரே , மக்களோடு வந்து முள்ளிவாய்க்கால் கடற்கரையில் சாதாரணமாக நின்றிருக்கிறார்கள் என்பதையும் அங்கே நின்ற மக்கள் கண்ட சாட்சிகளாக இருக்கிறார்கள்.

இதில் இருந்தெல்லாம் எதையும் உய்த்தறிய முயலாமல், "இருக்கிறாரா, இல்லையா" என்று உங்கள் போன்றோர் குழம்ப, ஒரு கும்பல் அதை வைத்துப் பிழைப்பு நடத்துகிறது. இதை விட என்ன பெரிய அவமதிப்பை பிரபாகரனின் வரலாற்றுக்கு எவரும் செய்து விட முடியுமென நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விசுகு said:

வணக்கம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அல்லது ஆதாரங்கள் தேடி இரவும் பகலும் அலையும் உறவுகளுக்கும் உங்கள் பதில் இது தானா???

இதற்கும் சுவிஸ்ஸில் இந்த நிகழ்வை நடத்தியவர்களுக்கும் என்ன சம்பந்தம்? மாவீரர் நாள் நவம்பர் 27 தான். அந்த மாவீரனின் வீர வணக்க நிகழ்வும் அதேநாளில் நடப்பதே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இறந்து விட்டார் என்பதை இந்தியா ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு அல்லது எப்போதுமே தெளிவுபடுத்த போவதில்லை. அப்படி தெளிவுபடுத்துவதாக இருந்தால் அவர்கள் மே 2009 செய்திருக்க முடியும்.

அவர்களை பொறுத்த வரை தமிழர்களுக்கு இந்த குழப்பம் இன்னும் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகள் அழியும் வரை இருக்க வேண்டும்.

இதை வைத்தே தமிழர்கள் தங்களுக்குள்ள குழுக்களாக மோதி நேரத்தை செலவிடுவது அவர்களுக்கு சாதகமானது.

நாமும் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக அந்த நிகழ்ச்சி நிரலை செய்துகொண்டு இருக்கிறோம்.

02.08. சுவிசில் அஞ்சலிக்கூட்டம் நடத்தியவர்கள் அடுத்து வரும் ஆண்டுகளில் தலைவருக்கும் மாவீரர் தினத்தில் தான் அஞ்சலி செலுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அடுத்த மாவீரர் தினம் இரண்டாக நடந்தாலும் நடப்பதற்கு வாய்ப்புள்ளது.

மே 18 என்பது தலைவருக்கான அஞ்சலி நாளாக அமையாது. அது தமிழின அழிப்பு நாள் என்றே தொடர்ந்து இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தானாக வந்த சொத்துக்களை தம்வசம் வைத்து பாதுகாக்க இன்னும் பல செய்திகள் ஆதாரங்கள் கருத்துக்கள் வரும்.வந்து கொண்டேயிருக்கும்.

இந்த நாடகங்கள் அனைத்தையும் தமிழ் மக்கள் கடந்து சென்று நடக்க வேண்டியதை கவனித்தால் நல்லது.

தலைவர் பிரபாகரன் தமிழினத்தின் உன்னத தலைவர். எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மாறாட்டங்களை தவிர்த்து அடுத்த படிக்கு நகர்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஊர்க்காவலன் said:

02.08. சுவிசில் அஞ்சலிக்கூட்டம் நடத்தியவர்கள் அடுத்து வரும் ஆண்டுகளில் தலைவருக்கும் மாவீரர் தினத்தில் தான் அஞ்சலி செலுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

நன்னிச் சோழன், கடஞ்சா, எப்போதும் தமிழர் ,பஞ்ச் அய்யாவின் நியாயமான விருப்பமும் நிறைவேறிவிட்டது.

8 hours ago, ஊர்க்காவலன் said:

தலைவர் இறந்து விட்டார் என்பதை இந்தியா ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு அல்லது எப்போதுமே தெளிவுபடுத்த போவதில்லை.

அவர்களை பொறுத்த வரை தமிழர்களுக்கு இந்த குழப்பம் இன்னும் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகள் அழியும் வரை இருக்க வேண்டும்.

16 வருடங்கள் குழம்பிய அதிபுத்திசாலி தமிழர்கள் தானே மேலும் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகள் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கொண்டிருக்க கூடியவர்கள் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரண்டு காணெளி பார்த்தேன் முழு காணொளியும் பார்க்க நேரம் இல்லை நண்பர்கள் குறிப்பிட்ட இடங்களை பார்த்தேன் புனர்வாழ்வளிக்கபட்ட போராளி என்று ஒருவர் பேசினார் இனி ஒரு போர் தொடங்குமாய் இருந்தால் அது இலங்கை அரசுடன் இல்லை .அஞ்சலி செலுத்திய கள்ளர்களுடன் அந்த போர் இருக்கும் என்றார்

மற்றவர் பேசினார் ஜேவிபி அரசு நல்லவற்ற தமிழ் மக்களுக்கு செய்ய தொடங்கி உள்ளது இவற்றை குழப்பும் நோக்கத்தில் கொண்டுவரபட்டதே இந்த அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வு.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2025 at 08:48, விளங்க நினைப்பவன் said:

இன்று இரண்டு காணெளி பார்த்தேன் முழு காணொளியும் பார்க்க நேரம் இல்லை நண்பர்கள் குறிப்பிட்ட இடங்களை பார்த்தேன் புனர்வாழ்வளிக்கபட்ட போராளி என்று ஒருவர் பேசினார் இனி ஒரு போர் தொடங்குமாய் இருந்தால் அது இலங்கை அரசுடன் இல்லை .அஞ்சலி செலுத்திய கள்ளர்களுடன் அந்த போர் இருக்கும் என்றார்

மற்றவர் பேசினார் ஜேவிபி அரசு நல்லவற்ற தமிழ் மக்களுக்கு செய்ய தொடங்கி உள்ளது இவற்றை குழப்பும் நோக்கத்தில் கொண்டுவரபட்டதே இந்த அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வு.

தாயகத்தில் ஓர் ஊடகச் சந்திப்பில் இருந்து.....

https://www.facebook.com/share/v/1D8jFnopBx/

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

தாயகத்தில் ஓர் ஊடகச் சந்திப்பில் இருந்து.....

அது அந்த தளத்தின் உரிமையாளரின் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே அதை பார்க்க முடியும் என்று வந்தது

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2025 at 23:03, goshan_che said:

தலைவர் இருந்திருந்தால் இப்ப அவருக்கு 71 வயதாகி இருக்கும்.

இலங்கையில் ஆண்களின் சராசரி ஆயுள் 73.

அவரோ சுகர் வருத்தகாரன். கட்டுப்பாட்டிலும் இருக்கவில்லை என்பார்கள்.

2009 இல் தப்பி இருந்தால் கூட அவர் இப்போ இயற்கை மரணம் எய்தி இருப்பார்.

இன்னும் இதை வைத்து வண்டி ஓட்டாமல் - நடக்கிற காரியத்தை பார்க்கலாம்.

வீரவணக்கம் செலுத்துவதாக இருந்தால் நவம்பர்27 திகதி மாவீரர் நாளில் செய்வதே சரியானது.புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இயற்கை சாவு அடைந்தால் கூட அவர்கள் மாவீரர்கள் என்றே கருதப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படுவதே புலிகளின் வழக்கம்.ஆனால் மாவீரர் நாளுக்கு நாலே மாதங்கள் மட்டுமே இலரக்கும் நிலையில் ஓகஸ்ட் 02 ஆம் திகதி நடத்த வேண்டிய அவசரம் என்ன?அடுத்த மாதம் ஜெனிவா மனித உரிமைச்சபையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வரப்போகின்றது. செம்மணிப் புதை குழிகள் விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தாக்கத்தை மடைமாற்ற வேண்டும்.எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப்பார்த்தால் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிகழ்வு நட்த்தப்பட்டிருக்கலாம். நிச்சயம் இதன் பின்னணியில் பல மறைகரங்கள் இந்திய இலங்கை புலனாய்வு அமைப்புகள் சம்பந்தப்பட்டிருக்கலாம். போலித்துவாராகவை உருவாக்கியவர்களும் இந்த நினைவேந்தலை செய்தவர்களும் ஒரே மறை கரங்களால் இயக்கப்படும் ஆட்களே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.