Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக வாக்கு அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக "தமிழீழ விடுதலை ஆதரவு" உருவெடுக்க வேண்டும்: இயக்குநர் சீமான்

Featured Replies

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவு என்பதுதான் தமிழக வாக்கு அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானின் பேச்சு மிகவும் அருமை!!!!

உணர்வுள்ள தமிழனின் உள்ளக்குமுறல்

பேச்சு நன்றாக உள்ளது.

ஆனால் ஈழர் தமிழரை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதாக ஆகிவிடக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் சீமான் தொடர்ந்து தமிழ் மீதும் தமிழ் ஈழம் மீதும் பற்றுள்ளவர்.தேசியத்தலைவரின் 50 வது அகவையை முன்னிட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் அவரது ஆக்கத்தினைக் காணலாம். தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக நடைபெறும் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொள்பவர்களின் பெயர்களைக் கவனித்துப்பார்த்தால் அங்கே சீமான் அவர்களின் பெயரைக்காணாலாம். செஞ்சோலைப் படுகொலை கண்டனக் கூட்டத்தில் குரல் கொடுத்தவர் சீமான். அவரது தமிழ் மீதுள்ள பற்றினைப் பார்த்தால் அவர் பேசும் போது ஆங்கிலக் கலப்பின்றி தமிழில் பேசுபவர்.

இயக்குனர் சீமானுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு நன்றாக உள்ளது.

ஆனால் ஈழர் தமிழரை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதாக ஆகிவிடக் கூடாது.

இயக்குனர் சீமான் எமக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார். அவற்றில் சில உதாரணத்துக்கு

1) செஞ்சோலைப் படுகொலை

சிறிலங்கா விமானப்படையின் தாக்குதலில் முல்லைத்தீவில் 61 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று கறுப்புக் கொடி பேரணி நடத்தப்பட்டது.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவர் பேராசிரியர் சரசுவதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், கவிஞர் அறிவுமதி, இயக்குநர்கள் வி.சி. குகநாதன், சீமான், புகழேந்தி உள்ளிட்டோர் கறுப்புக் கொடி, கறுப்பு உடை மற்றும் கறுப்புப் பட்டி அணிந்து பேரணியில் பங்கேற்றனர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=13182

2)திருமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்கள்

திருகோணமலையில் 5 அப்பாவி மாணவர்களை படைகளால் நடுத்தெருவில் படுக்கவைத்து ஈவிரக்கமின்றி காதுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற கண்டன பேரணியிலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் (வி.சி.) அமைப்பின் செயலாளர் தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் ( பா.ம.க.) துணைத் தலைவர் சீ.ஆர். பாஸ்கரன், மறு மலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ( ம.தி.மு.க) நிர்வாக உறுப்பினர் வழக்கறிஞர் அதியமான், கவிஞர் அறிவுமதி, இயக்குநர்களான சீமான், புகழேந்தி தங்கராசு, தமிழர் இயக்க தலைவர் தியாகு, தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் நிர்வாகி சு.பத்மநாதன், தமிழ் மொழி அறக்கட்டளை நிர்வாகி முனைவர் தமிழன்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது ஆழ்மன உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=8697

3) ஜோசப் பராராஜ சிங்கம்

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை

சிறிலங்கா இராணுவ வன்முறைகளைக் கண்டித்து தமிழ்நாட்டின் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் சி.ஆர். பாஸ்கரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி வழக்கறிஞர் அதியமான், கவிஞர் அறிவுமதி, இயக்குநர்கள் சீமான், புகழேந்தி தங்கராசு, தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர் தியாகு, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் நிர்வாகி அ. பத்மநாபன், உலகத் தமிழர் பேரமைப்பின் பொதுச்செயலாளர் பத்மநாபன், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை நிர்வாகி முனைவர் தமிழப்பன், புலவர் கி.த.பச்சையப்பன், மக்கள் புதிய தமிழகத்தின் நிறுவனர் துரையரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=8589

--------------

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டத்தில் தனது பொறுப்பு மிகுந்த பங்களிப்பை அளிக்க தவறக்கூடாது: கருணாநிதிக்கு சென்னை மாநாடு வேண்டுகோள்

இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க. மணி, கவிஞர் அறிவுமதி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான் ஆகியோர் பங்கேற்றனர்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=11189

Edited by கந்தப்பு

சீமான் அவர்கள் ஒரு உணர்வுள்ள தமிழர். கவிஞர் அறிவுமதி அவர்களோடு பக்க பலமாக தமிழுக்காக

போராடுபவர்.

தனது கடைசியாக இயக்கிய படத்திற்கு தம்பி என்று பெயர் வைத்திருந்தார். மாதவன் நடித்தது.

அப்போ ஓரு பேட்டியில் ஏன் தம்பி என பெயர் வைத்தீர்கள் என கேட்ட போது.

தனது ஞாபகத்தில் ஒரு தம்பி தான் தமிழில் இருக்கிறார். அவர்தான் தலைவர் பிரபாகரன்.

அதன் விருப்பாக தம்பி என்று பெயர் வைத்தேன் . ஒரு பேட்டியில் இப்படி புகழாரம் சூட்டி இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை அரசியலாக்கப்பட்டது என்பது உண்மைதான். அதேவேளை இரத்தத்தில் ஊறும் உணர்வுடன் தனது சகோதரன் அடிபட்டு வீழும்போது குமுறி எழும் எமது சொந்தங்கள் இன்னும் அங்கு நிறயப்பேர் இருப்பதுவும் உண்மைதான். அப்படியொரு சொந்தம்தான் இயக்குனர் சீமான். அவரது உணர்ச்சி அரசியலுக்கு அப்பற்பட்டது. ஈழத்தமிழர் விடுதலை பெற்று வாழவேண்டும் என்று மானசீகமாக விரும்பும் ஒரு படைப்பாளி. அவரது படைப்புகளில் நீங்கள் இதை அவதானிக்கலாம். எப்படி பழ நெடுமாறன் ஐய்யாவின் ஈழத்தமிழர் பாசம் உண்மையானதோ அவ்வாறே இன்னும் பல தமிழ் உள்ளங்களினதும் பாசம் உன்மையானது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு இந்திய தமிழனோட ஆதரவும் வேணும் இதுக்குள்ள அதையும் அரசியல் ஆக்க கூடாதென்ட நிபந்தனை வேற...இந்தியாவை பொருத்தவரை எல்லாவற்றுடன் அரசியல் என்பது கலந்திருக்கின்றது...எஙகளால் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்றால் கிடைத்தவிட்டுபோகட்டும் ஆனால் அந்த நன்மை எங்களுக்கு ஆதரவு தருகனி;றார்கள் என்தன்ழூலம் இருக்கட்டும்...

இய்குனர் சீமானின் படங்களை தெரிந்தவர்கள் பட்டியல் இட முடியுமா?

நன்றி

சீமானோட படங்களிலே தம்பி நல்ல படம்.

  • கருத்துக்கள உறவுகள்

இய்குனர் சீமானின் படங்களை தெரிந்தவர்கள் பட்டியல் இட முடியுமா?

நன்றி

பாஞ்சாலக் குறிச்சியும் இவருடைய படங்களில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திராகாந்தி அம்மையார் பலஸ்தீன விடுதலை இயக்கமறைந்த தலைவர் யசீர் அரபாத்துக்கு ,சரியான ஆதரவு கொடுத்தவபாருங்கொ.ஆனால் தனது நாட்டு எல்லையில் ஈழப்பிரச்சனை வரும்பொழுது கொஞ்சம் வித்தியாசமாக தான் சிந்தித்தவ..,....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூய்மையான , அரசியல் கலப்பற்ற தமிழ் உணர்வுள்ளவர்களுள் இயக்குனர் சீமான் முக்கியமானவர் . மக்களுக்காக தன்னலமின்றி போராடிய சே குவாரா, போராடிக்கொண்டிருக்கும் அண்ணன் பிரபாகரன் ஆகியோரை மிகவும் மதிக்கும் குணம் இவருக்கு மட்டும் அல்ல, இவர் குடும்பத்தின் அனைவருக்கும் உண்டு.

இதற்கு ஓர் உதாரணம், அவரது இல்லத்தில் இருக்கும் அண்ணன் பிரபாகரனின் புகைப்படத்தை காட்டி யாரவது இவர் யார் என்று கேட்டால் " என் மூத்த மகன் " என்று தான் அவர் தாய் சொல்லுவர். இதை சமீபத்தில் கூட யார் தமிழச்சி என்ற விடயம் குறித்து கேட்ட போது கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.