Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 3

08 Dec, 2025 | 03:06 PM

image

நிவாரண பணிகளுக்கு  ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த  அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம்  இன்று திங்கட்கிழமை (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules  விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/232771

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன்... மனிதாபிமான உதவிகளை கொழும்பில் இறக்க,

அமெரிக்கா... விமானத்துடன் பலாலிக்கே வந்துட்டான்.

இதுதான்... அமெரிக்கனுக்கும், இந்தியனுக்கும் உள்ள வித்தியாசம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அமெரிக்க – இலங்கை விமானப்படை கூட்டு மனிதாபிமான நடவடிக்கை

Published By: Vishnu 08 Dec, 2025 | 07:41 PM

image

(இணைளத்தள செய்திப் பிரிவு)

அமெரிக்க விமானப்படை (US Air Force) மற்றும் இலங்கை விமானப்படை (Sri Lanka Air Force) ஆகியன இணைந்து இன்றையதினம் முன்னெடுத்து அதிரடி மனிதாபிமான நடவடிக்கை மூலம், அம்பாறை, யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அவசர நிவாரணப் பொருட்கள் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன.

அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடுகையில், 

இரண்டு Super Hercules விமானங்கள் மூலம் பெருமளவிலான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இலங்கை விமானப்படை தளங்களுக்கு கொண்டுசென்றதாக தெரிவித்துள்ளார்.

“இன்று இரண்டு சூப்பர் ஹெர்குலீஸ் விமானங்கள், 3 மாவட்டங்களுக்கு ஒரே பணி. விரைவான ஒத்துழைப்பின் மூலம் கொண்டு செல்லப்பட்ட பெரும் நிவாரணப் பொருட்களை இலங்கை விமானப்படை தரையணி உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிரும் நடவடிக்கையில் ஈடுபட்டது. உடனடி உதவி தேவைப்படும் மக்களிடம் இப்பொருட்கள் சென்றடைகின்றன” என தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, நாட்டின் பல பகுதிகளில் நிலவிய வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பின் வலிமையை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-12-08_at_19.14.48_b1

WhatsApp_Image_2025-12-08_at_19.14.20_79

WhatsApp_Image_2025-12-08_at_19.14.34_1f

https://www.virakesari.lk/article/232817

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இந்தியன்... மனிதாபிமான உதவிகளை கொழும்பில் இறக்க,

அமெரிக்கா... விமானத்துடன் பலாலிக்கே வந்துட்டான்.

இதுதான்... அமெரிக்கனுக்கும், இந்தியனுக்கும் உள்ள வித்தியாசம்.

சிறிய விமானங்களைத் தவிர வேறு விமானங்கள் பலாலியில் இறங்க முடியாது

என்று இந்தியா இதுவரை சொன்னதெல்லாம் பொய்யா கோப்பாலு.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறிய விமானங்களைத் தவிர வேறு விமானங்கள் பலாலியில் இறங்க முடியாது

என்று இந்தியா இதுவரை சொன்னதெல்லாம் பொய்யா கோப்பாலு.

இதைத் தான் நானும் கேட்கிறேன் பாஸ்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இந்தியன்... மனிதாபிமான உதவிகளை கொழும்பில் இறக்க,

அமெரிக்கா... விமானத்துடன் பலாலிக்கே வந்துட்டான்.

இதுதான்... அமெரிக்கனுக்கும், இந்தியனுக்கும் உள்ள வித்தியாசம்.

தமிழீழத்தை வேட்டையாடிய இரண்டுமே ஓநாய்கள். ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. அமெரிக்காவும் இணைந்தே எம்மை அழிந்தன. எமது தாயகனின் நிருவாகத்தை அழத்துவிட்டு சிங்களத்தை காத்தவாறு தமிழித்துக்கு உதவுவதாக நாடகம் போடுவதன் நோக்கம் தமிழர்கள் மீதான அக்கறையல்ல. சீனாவால் உள்வாங்கப்பட்ட சிறிலங்காவைவிட தமிழர்கள் எதற்கும் இசைவாக்கம் அடையும் இயல்புடையோரான தமிழரைக் கையாள்வது இலகுவானதென்பதை அமெரிக்கா அறியாதிருக்குமா? ஆனாலென்ன தமிழரால் துரத்தப்பட்டோர் போய் இருப்பதையும் விற்காமிலிருந்தால் சிறப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் சி - 130 சிறிய ஓடுபாதையிலேயே இறங்கி ஏறும் ஆற்றல் உள்ளது. அதனாலேயே அமெரிக்கா இந்த விமானத்தை பலாலி விமான நிலைய ஓடுபாதையில் இறக்கி ஏற்றக் கூடியதாக இருக்கின்றது. 2000 தொடக்கம் 3000 அடிகள் வரை நீளமான, ஒழுங்காக செப்பனிடப்படாத ஓடுபாதையிலேயே இந்த விமானம் இறங்கி ஏறும்.

பொதுவாக பெரிய பயணிகள் விமானம் ஏறி இறங்குவதற்கு 5000 அடிகள் அல்லது அதற்கு மேலான மிகச் சிறப்பான ஓடுபாதைகள் தேவையாக இருக்கின்றது.

இந்தியா விமானப்படையிடம் சி - 130 இருக்கின்றது. ஆனாலும் அதை அவர்கள் இலங்கைக்கான மீட்பு நடவடிக்கைகளில் இன்னமும் உபயோகிக்கவில்லை என்று நினைக்கின்றேன்.

சி - 130 க்கு சமனான ரஷ்ய தயாரிப்பு விமானங்களும் உண்டு. அன்டனோவ் - 12. ஆனாலும் ரஷ்யா இலங்கைக்கு இன்னமும் எதையும் அனுப்பவில்லை.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சி - 130 க்கு சமனான ரஷ்ய தயாரிப்பு விமானங்களும் உண்டு. அன்டனோவ் - 12. ஆனாலும் ரஷ்யா இலங்கைக்கு இன்னமும் எதையும் அனுப்பவில்லை.

நிவாரணப் பொருட்கள் வழங்குதல் மனிதாபிமான நடவடிக்கைகள் என்பன புட்டினுக்கு ஒத்துவராதவை. சூறாவளியின் இலங்கை பாதிப்பை பயன்படுத்தி தனது உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு பயன்படுத்த இலங்கை ஆட்களை எப்படி தூக்குவது என்று தான் நினைப்பார். எரிகின்ற வீட்டில் இருந்து என்ன பிடுங்கி எடுக்கலாம் என்று சிந்திப்பவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

இந்தியன்... மனிதாபிமான உதவிகளை கொழும்பில் இறக்க,

அமெரிக்கா... விமானத்துடன் பலாலிக்கே வந்துட்டான்.

இதுதான்... அமெரிக்கனுக்கும், இந்தியனுக்கும் உள்ள வித்தியாசம்.

இலங்கை விடயத்தில் நானே ராஜா நானே ரோஜா என்ற கனவில் மிதக்கும் கிந்தி இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டுது. செம செருப்படி.

2 hours ago, ஈழப்பிரியன் said:

சிறிய விமானங்களைத் தவிர வேறு விமானங்கள் பலாலியில் இறங்க முடியாது

என்று இந்தியா இதுவரை சொன்னதெல்லாம் பொய்யா கோப்பாலு.

இலங்கை தமிழ் பிரதேசங்களில் சீனா அல்லது அமெரிக்க இராச்சியம் நிலை நிற்க வேண்டும் என்பது என் கனவு.வடகிழக்கு பகுதியில் கிந்தியனின் கால் பதிப்பு தமிழர்களின் முதலுக்கே நாசம். இது தமிழ்நாட்டு அரசியல் சித்திரங்களின் அனுபவம்.தடக்கி வீழ்ந்தாலும் டெல்லியை நோக்கி ஓடுகின்றார்கள்.😂

1 hour ago, nochchi said:

தமிழீழத்தை வேட்டையாடிய இரண்டுமே ஓநாய்கள். ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. அமெரிக்காவும் இணைந்தே எம்மை அழிந்தன. எமது தாயகனின் நிருவாகத்தை அழத்துவிட்டு சிங்களத்தை காத்தவாறு தமிழித்துக்கு உதவுவதாக நாடகம் போடுவதன் நோக்கம் தமிழர்கள் மீதான அக்கறையல்ல.

இதையே இன்னும் எத்தனை காலங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கப்போகின்றோம்? எம்மினத்திற்கு வரலாற்று துரோகங்கள் நிறையவே உண்டு.அது வரலாறுகளாகவே இருக்கும். அதையாராலும் அழிக்க முடியாது.மறக்கவும் முடியாது.என்றும் நினைவில் வைத்திருப்போம்.

அது அப்படியே நிற்க....

இன்றைய உலக பூகோள அரசியல் ரீதியில் அடுத்து ஆகவேண்டியதை கவனித்தால் தான் அடுத்த தமிழ் சந்ததி நிம்மதியுடன் வாழ்க்கையை கடத்த முடியும்.

1 hour ago, nochchi said:

சீனாவால் உள்வாங்கப்பட்ட சிறிலங்காவை

இன்று நேற்றல்ல....அன்று தொடக்கம் சீனாவால் உள்வாங்கப்பட்ட நாடுதான் இலங்கை. இலங்கை நாட்டில் தமிழினம் இல்லா விட்டால் சீனா என்றோ முழு நாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் அபிவிருத்தி செய்து வைத்திருக்கும். இதை இன்று சிங்கள பகுதிகளில் தாராளமாக காணலாம்.வேக வீதிகள்,துறைமுக அபிவிருத்திகள் என சீனாவின் கை ஓங்கியே நிற்கின்றது. கிந்தியர்களுக்கு சிங்கள மக்களிடத்தில் பெரு மதிப்பில்லை. கிந்தி பாட்டுக்கள் கேட்பதுடன் சரி.😂

இலங்கை தமிழர்களை வைத்து பிராந்திய அரசியல் லாபம் தேடுவது கிந்திய நரிக்குணம் மட்டுமே வேறொன்றுமில்லை.

கிந்தியாவின் அருகில் இருப்பது ஈழத்தமிழனின் துர்ப்பாக்கியம்.கிந்தியா இருக்கும் வரை அமெரிக்காவையோ,ஐரோப்பாவையோ,ரஷ்யாவையோ நொந்து கொள்வதில் எவ்வித பலனும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அடடே.... நிவாரணப்பொருட்கள் விமானத்தில் பலாலிக்கே வந்து இறங்கிவிட்டதா? அனுரா சொல்லி அனுப்பியிருப்பாரோ, அல்லது யாரும் தமிழரை நினைக்கமாட்டார்கள் என்று அமெரிக்காவே நினைத்து வந்திறங்கி விட்டதோ என்னவோ? இனி தமிழர் ஓரங்கட்டப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு எழாது....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரசோதரன் said:

ஆனாலும் ரஷ்யா இலங்கைக்கு இன்னமும் எதையும் அனுப்பவில்லை.

ஒரு நியாயமான விடுதலை போராட்டத்தை அடக்கி அழித்த இலங்கை இராணுவத்தை இயற்கை அனர்தங்களின் போது காணக்கிடைக்கவில்லை என்ற கவலை யாருக்கும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்கா... விமானத்துடன் பலாலிக்கே வந்துட்டான்

தமிழருக்கு உதவி செய்வதில் அமெரிக்காவுக்குத்தான் எவ்வளவு அவசரம் என்று இதிலிருந்து தெரிகிறது. பெருந்தெருக்கள் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளது, வாகன வசதியும் தற்போது அவசரமாக இயங்க முடியாத நிலையாக இருக்கலாம். தமிழருக்கு தாமதிக்காமல் அவசரமாக உதவி வழங்க அமெரிக்கா நினைத்து, நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த தனது இராணுவ வீரர்களையும் அனுப்பியிருக்கிறது. இது புரியாமல் வந்தவர்கள் பலாலியிலிருந்து இராமேஸ்வரம் எத்தனை கிலோ மீற்றர் என விசாரித்தார்கள் என கதை எழுதவும் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

டொக்டர் அர்ச்சுனா கிளிநெச்சியில் புதிய பாலம் அமைக்கும் வேலை நடைபெற்ற இடத்தில் நின்ற இலங்கை இராணுவ அதிகாரியுடன் சிங்களத்தில் கதைத்து விட்டு சொன்னார் புழுதடைந்த பாலத்தை இலங்கை இராணுவம் அகற்றும் பின்பு இந்திய இராணுவம் தாங்கள் கொண்டு வந்த பாலத்தை பொருத்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcQozka0A_aMJmZ6g9ZagSs

புட்டின் மற்றவர்களைப் போல் உதவி செய்து விட்டு...

படம் பிடித்து காட்டுவதோ, சொல்லிக் காட்டுவதோ இல்லை.

இடது கை கொடுப்பது, வலது கைக்கு தெரியக் கூடாது என்பார்கள்.

புட்டினும் அதே... கொள்கை உடையவர் என்பதில் சந்தேகம் இல்லை.

@குமாரசாமி

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcQozka0A_aMJmZ6g9ZagSs

புட்டின் மற்றவர்களைப் போல் உதவி செய்து விட்டு...

படம் பிடித்து காட்டுவதோ, சொல்லிக் காட்டுவதோ இல்லை.

இடது கை கொடுப்பது, வலது கைக்கு தெரியக் கூடாது என்பார்கள்.

புட்டினும் அதே... கொள்கை உடையவர் என்பதில் சந்தேகம் இல்லை.

@குமாரசாமி

உண்மை. தான் சுவிஸ் இல் ஒருத்தி. முன்னாள். விளையாட்டு. வீரக்கனை. எண்ணிக்கையற்ற. பிள்ளைகளுடன். இருக்கிறார். இன்னும். தெரியமால். உலகம். முழுவதும். எத்தனை. ஆயிரம். இருகிறதோ. ! யாருக்குத். தெரியும்.

On 8/12/2025 at 22:28, விளங்க நினைப்பவன் said:

நிவாரணப் பொருட்கள் வழங்குதல் மனிதாபிமான நடவடிக்கைகள் என்பன புட்டினுக்கு ஒத்துவராதவை. சூறாவளியின் இலங்கை பாதிப்பை பயன்படுத்தி தனது உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு பயன்படுத்த இலங்கை ஆட்களை எப்படி தூக்குவது என்று தான் நினைப்பார். எரிகின்ற வீட்டில் இருந்து என்ன பிடுங்கி எடுக்கலாம் என்று சிந்திப்பவர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

இன்னும். தெரியமால். உலகம். முழுவதும். எத்தனை. ஆயிரம். இருகிறதோ. ! யாருக்குத். தெரியும்.

புட்டின் ரஷ்யாவை கொள்ளை அடித்த பணத்தில் அவர் காதலிகள் மட்டுமல்ல அவர் பிள்ளைகளும் எல்லோ மேற்குலக நாடுகளில் கோடீஸ்வர வாழ்க்கை வாழ்கின்றார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcQozka0A_aMJmZ6g9ZagSs

புட்டின் மற்றவர்களைப் போல் உதவி செய்து விட்டு...

படம் பிடித்து காட்டுவதோ, சொல்லிக் காட்டுவதோ இல்லை.

இடது கை கொடுப்பது, வலது கைக்கு தெரியக் கூடாது என்பார்கள்.

புட்டினும் அதே... கொள்கை உடையவர் என்பதில் சந்தேகம் இல்லை.

@குமாரசாமி

புட்டினின் உதவி,நிவாரணங்கள் பற்றி ஆபிரிக்க/தென்னமெரிக்க மக்களை கேட்டால் தெரியும்.

தனியே மேற்குலக செய்திகளை மட்டும் கேட்டு இன்புறுபவர்களுக்கு அந்த கடவுளிடமே மருந்து இல்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

புட்டினின் உதவி,நிவாரணங்கள் பற்றி ஆபிரிக்க/தென்னமெரிக்க மக்களை கேட்டால் தெரியும்.

தனியே மேற்குலக செய்திகளை மட்டும் கேட்டு இன்புறுபவர்களுக்கு அந்த கடவுளிடமே மருந்து இல்லை. 😂

விளாடிமிர் புட்டின்... தொன் கணக்கில், மனிதாபிமான உதவி செய்துள்ளார். 🥰 ❤️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

புட்டினின் உதவி,நிவாரணங்கள் பற்றி ஆபிரிக்க/தென்னமெரிக்க மக்களை கேட்டால் தெரியும்.

தனியே மேற்குலக செய்திகளை மட்டும் கேட்டு இன்புறுபவர்களுக்கு அந்த கடவுளிடமே மருந்து இல்லை. 😂

இலங்கைக்கு. என்ன. கொடுத்தார். ? இந்தியா. சீனா. பாக்கிஸ்தன். அமெரிக்கா. விமானங்கள். பலாலில். வந்து. இறங்கின்றனவே. .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

புட்டினின் உதவி,நிவாரணங்கள் பற்றி ஆபிரிக்க/தென்னமெரிக்க மக்களை கேட்டால் தெரியும்.

தனியே மேற்குலக செய்திகளை மட்டும் கேட்டு இன்புறுபவர்களுக்கு அந்த கடவுளிடமே மருந்து இல்லை. 😂

உக்ரைனில் விளைந்த தானியங்களை ஏற்றுமதி செய்ய விடாமல் தாக்குதல் செய்து உலக தானிய விலையை வட்டுக்குள் ஏற்றி விட்ட பின்னர், அந்த விலையேற்றத்தைச் சமாளிக்க இயலாத சில ஆபிரிக்க நாடுகளுக்கு கொஞ்சம் கிள்ளிக் கொடுத்தாராம் என்கிறது இந்தச் செய்தி! #தர்மதுரை புரின்😂!

Reuters
No image preview

Putin promises African leaders free grain despite 'hypocr...

Russian President Vladimir Putin on Thursday told African leaders he would gift them tens of thousands of tons of grain despite Western sanctions, which he said made it harder for Moscow to export its

... "When taking out of the market millions and millions of tonnes of grains, it is clear that ... will lead to higher prices," U.N. Secretary-General Guterres told reporters.

"So it's not with a handful of donations to some countries that we correct this dramatic impact that affects everybody, everywhere."

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

புட்டினின் உதவி,நிவாரணங்கள் பற்றி ஆபிரிக்க/தென்னமெரிக்க மக்களை கேட்டால் தெரியும்.

தனியே மேற்குலக செய்திகளை மட்டும் கேட்டு இன்புறுபவர்களுக்கு அந்த கடவுளிடமே மருந்து இல்லை. 😂

ரஸ்யாவிலிருந்து. விமானம். வருகிறது. வாழ்த்துகள். இலங்கை. உலகில் பணக்கார நாடு ஆகப் போகிறது. ஊருக்குப். போகப் போகிறேன். நீங்கள் இங்கே. இருங்கள். சண்டைக்கு. ஆடகளை. பயிற்ச்சிக்கு. காட்டயமாக். இணைக்கப். போகிறார்களம். நீங்கள். அதில். இணையலாம். ரஷயாவுடன். தான். சண்டை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

ஊருக்குப். போகப் போகிறேன்.

ஊரில அறையெல்லாம் சின்னன் என்று எழுதிய மாதிரி இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஊரில அறையெல்லாம் சின்னன் என்று எழுதிய மாதிரி இருக்கே.

இல்லை. லண்டனில். தான்். பழைய. வீடுகள். சின்ன. அறை. கொண்டவை. தயவுசெய்து அமைதியாக. ஆறுதலாக. விளங்கி. வாசியுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.