Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2009

இதன்பின்புதான்

தமிழன்யார்?

தமிழ் பேசுபவன்யார்??

தமிழைவைத்துப் பிழைப்பவன்யார்???

என்பதனை அறியமுடிந்தது.

  • Replies 144
  • Views 6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    இதுவும் நீங்கள் நம்பக்கூடியதுதான். ஆனால், புலிகளுக்கெதிரான உங்களது நிலைப்பாட்டில் இருந்து சற்று வெளியே வந்து, (அதாவது 2009 இற்கு முன்னர் நீங்கள் இருந்த நிலைப்பாடு) இதனைச் சிந்தித்தீர்கள் என்றால், புலி

  • ஒரு எடுகோளுக்கு, ஐலண்ட் இஸ்லாமியராகவே இருக்கட்டும் (எவருக்கும் அவரது இன அடையாளம் தெரியாது என்பதே உண்மை). இப்படி ஒரு இனவாதக் கருத்து? அதற்கு பல விருப்பக் குறிகள் வேற! இது போன்ற கருத்துக்களை உங்களைப்

  • நான் முதலில் உங்கள் கருத்தினை சரியாக பார்க்கவில்லை, நீங்கள் குறிப்பிட்ட கோடாரிக்காம்பு என்பதன் மூலம் தமது இனத்தினை தாமே கருவறுப்பவர்களுக்கெதிராக பயன்படுத்தப்படுவதனை ஜஸ்ரின் தவறாக புரிந்து கொண்டாரோ

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சம்பந்தனை அன்றி வேறு எந்த தனிமனிதரையும் பற்றி அல்ல.

போரட்டத்தில் 2009 க்கு பின் தீர்வை அடைய ஒரு அரிய சந்தர்ப்பம் வாய்த்தாதாக இங்கே ஒரு உருட்டு, உருட்டப்பட்டது…

அதை இல்லை என நான் மறுத்து ஒரு வியாபார உதாரணத்தை சொன்னேன்.

அதை ஏதோ பஞ்சமாபாதகம் போல நீங்கள் எழுதினீர்கள்.

அப்படி இல்லை, போராட்டத்தில் வயிறு வளர்தோரே வெட்கம் இல்லாமல் உலாவும் உலகில் இப்படி ஒரு ஒப்பீட்டை செய்வது ஒண்டும் மோசமான செயல் இல்லை என எழுதினேன்.

முதலில் எனக்கு அதை ஏன் எழுத வேண்டும் என்று உங்கள் மனசாட்சி படி சொல்ல முடியாது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

முதலில் எனக்கு அதை ஏன் எழுத வேண்டும் என்று உங்கள் மனசாட்சி படி சொல்ல முடியாது அல்லவா?

Free size என்று ஆடை வடிவமைப்பில் தைக்கப்பட்ட ஆடையை நீங்களாக அணிந்து, அடடா எனக்காக என்னை அளவெடுத்து தைக்கப்பட்டது என்று அடம் பிடிப்பது போல் உள்ளது உங்கள் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

முதலில் எனக்கு அதை ஏன் எழுத வேண்டும் என்று உங்கள் மனசாட்சி படி சொல்ல முடியாது அல்லவா?

மாய்மாலத்துக்கு பதில் சொல்லமுடியாதுதான்….

ஆனால்…

உங்களுக்கு பதில் எழுதும் எல்லாமும் தனிப்பட்டு உங்களை பற்றியதாக இருக்க தேவை இல்லை.

அப்படி தனிப்பட்டு உங்களை பற்றி எழுத விரும்பின் நான் பூடகமாக எழுதவும் மாட்டேன்😂.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

2009

இதன்பின்புதான்

தமிழன்யார்?

தமிழ் பேசுபவன்யார்??

தமிழைவைத்துப் பிழைப்பவன்யார்???

என்பதனை அறியமுடிந்தது.

சூப்பர்! 👏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

மாய்மாலத்துக்கு பதில் சொல்லமுடியாதுதான்….

ஆனால்…

உங்களுக்கு பதில் எழுதும் எல்லாமும் தனிப்பட்டு உங்களை பற்றியதாக இருக்க தேவை இல்லை.

அப்படி தனிப்பட்டு உங்களை பற்றி எழுத விரும்பின் நான் பூடகமாக எழுதவும் மாட்டேன்😂.

பாம்பின் கால் பாம்பறியும் 🙃

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

தமிழர்களும், இஸ்லாமியர்களும் ஒரே மரத்தில் இருந்து வந்தவர்கள் என்கிற கருத்துக்கள் அர்த்தமற்றுப் போய் பல தசாப்த்தங்கள் ஆகிவிட்டன. சிங்கள பேரினவாதிகளின் சூழ்ச்சிகளுக்குட்பட்டு விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை பேரினவாதத்தோடு சேர்ந்து அழிக்கத் துணைபோன காலத்திலேயே இந்த "ஒருமரம், இருகிளை" எனும் சப்பைக்கட்டல்கள் அழிந்துபோயின. தனி அடையாளம், தனிப் பிராந்தியம், தனியலகு, தனிக் கலாசாரம் என்று இஸ்லாமியர்கள் தமிழர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போய்விட்டார்கள். 90 களில் கிழக்கில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான படுகொலைகளில் முஸ்லீம்களின் பங்களிப்பிற்கு அப்பால், போரின் பின்னரான காலத்தில் வாழைச்சேனையில் ஹிஸ்புள்ளா தலைமையில் இடம்பெற்றுவரும் தமிழ் நில அபகரிப்பு, மன்னாரில் இடம்பெற்ற பதிருதீன் தலைமையிலான நில அபகரிப்பு, கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் என்பன சொல்லும் செய்தி முஸ்லீமும் தனியான ஒரு இனம், அது தனது நிலப்பரப்பை தமிழர்களை வ‌ஞ்சித்தாவது பெற்றுக்கொள்ளும் என்பதுதான். இன்று இலங்கையில் இருப்பது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என்று மூன்று இனங்கள் மட்டுமே. அப்படியில்லாமல் முஸ்லீம்களும் தமிழர்கள்தான் என்று இங்கு யாராவது இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களை நீங்களே பேய்க்காட்டுகிறீர்கள் என்று அர்த்தம்.

என்னைக் கண்டிப்பதாக ஆளாளுக்கு போட்டிபோட்டு வருபவர்களுக்கு ஒரு செய்தி. நீங்கள் யார் என்னைக் கண்டிப்பதற்கு? நான் சரியென்று நினைப்பதை நான் எழுதுவதற்கு உங்களின் அனுமதியோ அல்லது அனுசரணையோ எனக்குத் தேவையில்லை.

இத்திரியில் இன்னொருவருக்கு எழுதிய கருத்தில் தானாகப் புகுந்து, எனது கருத்தை கேலியாக விமர்சித்ததற்காகவே அந்த நபருக்கு நான் ப‌தில் எழுதினேன். இத்தளத்தில் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து, தமிழ்த் தேசியத்தை (புலிகளை மட்டுமல்ல, தந்தை செல்வாவிலிருந்து, தமிழரசுக் கட்சியிலிருந்த அனைவரையும் "யாழ்ப்பாணிகள்" என்று விளித்து) கடுமையாக விமர்சித்துவரும் வேற்றினத்தைச் சேர்ந்த ஒருவருக்கான எனது பதிலே அது. யாழ் இணையம் தமிழர்களின் விடயங்களை அலசுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. எமது இனத்துடன் சம்பந்தப்படாத, ஆனால் எமதினத்தின் இருப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய, ஏற்படுத்தி வருகின்ற இன்னொரு இனத்திலிருந்து ஒருவர் எனது கருத்திற்கு கேலியாக பதில் எழுதும்போது வருகின்ற இயல்பான கோபமே எனது பதிலில் இருப்பது, ஆனால் அதிலிருப்பது உண்மையான தகவல்களே என்பது உங்களுக்குத் தெரியும், ஆனாலும் நீங்கள் போடும் கனவான் வேட‌ங்களை அது பாதிக்கும் என்பதால் என்னை வைகிறீர்கள். நீங்கள் என்னைக் கண்டித்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நான் எழுதுவதை மாற்றப்போவதில்லை.

நான் முதலில் உங்கள் கருத்தினை சரியாக பார்க்கவில்லை, நீங்கள் குறிப்பிட்ட கோடாரிக்காம்பு என்பதன் மூலம் தமது இனத்தினை தாமே கருவறுப்பவர்களுக்கெதிராக பயன்படுத்தப்படுவதனை ஜஸ்ரின் தவறாக புரிந்து கொண்டாரோ என நினைத்தேன் பின்னர் உங்கள் கருத்தினை பார்த்த போது நிங்கள்தான் கோடாரி காம்பினை தவறாக பயன்படுத்தியதை உணர்ந்து கொண்டேன்.

நான் உங்கள் கருத்துக்களை எப்போதும் மதிப்பவன் அதனால் அந்த கருத்தில் கொஞ்சம் உடன்பாடில்லாமல் போய்விட்டது, அது ஒரு ஏமாற்றத்தின் விளைவாக எனது கருத்தினை பதிந்துவிட்டேன். நீங்கள் கோவத்தினால் அவ்வாறு கூறியிருந்தாலும் அது உண்மையான நீங்கள் இல்லை என கருதுகிறேன்.

உங்களின் நிலையில் நானிருந்தால் உங்களை விட மோசமாக வினையாற்றியிருக்ககூடும், எல்லோரும் இதே போல நிலைகளை எப்போதும் எதிர்கொள்கிறோம், கடைசியில் இவைகள் வெறும் கருத்துகள் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2026 at 06:06, ரஞ்சித் said:

தமிழர்களுக்கெதிரான சிங்களப் பேரினவாதத்தின் இனவழிப்பிற்குத் துணைபோய், தமிழர்களை சிங்களத்துடன் சேர்ந்து அழித்து, தமிழர்கள் அவலங்கள் ஊடாக ஏதும் அவர்களுக்குக் கிடைத்தாலும் அதில்ப் பங்குகேட்டு, கோடரிக் காம்பாகச் செயற்பட்ட இழிவான இன‌க்குழுமத்தினைச் சேர்ந்த தமிழின விரோதிக்குப் பதில் எழுதி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

இந்த கருத்தை முழுமையாக வாசிக்கவில்லை. மேலோட்டமாக வாசித்து நன்றி இட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன்.

தனிப்பட எனக்கு இசுலாமிய தமிழர்கள் மீது அவநம்பிக்கைகளும் தும்பகரமான நிகழ்வுகளும் இருந்தபோதிலும்

தமிழர்களை மத ரீதியாக பிரிந்து அல்லது இஸ்லாமியர்களை ஒதுக்கி எமக்கான விடுதலை சாத்தியமே இல்லை. இது எனது நிலைப்பாடு. நன்றி.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

என்னைக் கண்டிப்பதாக ஆளாளுக்கு போட்டிபோட்டு வருபவர்களுக்கு ஒரு செய்தி. நீங்கள் யார் என்னைக் கண்டிப்பதற்கு? நான் சரியென்று நினைப்பதை நான் எழுதுவதற்கு உங்களின் அனுமதியோ அல்லது அனுசரணையோ எனக்குத் தேவையில்லை.

யாழ் களத்தின் சக உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து தான் கண்டிக்கிறார்கள். உங்களுக்குச் சரியாகத் தெரியும் ஒரு கருத்து இன்னொருவருக்கு கடைந்தெடுத்த இனக் குரோதக் கருத்தாகத் தெரிந்தால் அவர் நிச்சயம் சுட்டிக் காட்ட வேண்டும். அதைத் தான் செய்திருக்கிறார்கள், "எங்கள் அங்கீகாரம் பெற்றுக் கொண்டு எழுதுங்கள்" என்று யாரும் சொல்ல வரவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

அட சொன்னா நம்புங்கப்பா….

ஐலண்ட் முஸ்லிம் இல்லை…..

ஆனால்…..:

புளொட்……😂

ஸ்டார்ட் மியூசிக்😂😂😂

சிலவேளை முஸ்லிம் புளொட்டாகவும் இருக்கலாம் 😂😂😂.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அட சொன்னா நம்புங்கப்பா….

ஐலண்ட் முஸ்லிம் இல்லை…..

ஆனால்…..:

புளொட்……😂

ஸ்டார்ட் மியூசிக்😂😂😂

சிலவேளை முஸ்லிம் புளொட்டாகவும் இருக்கலாம் 😂😂😂.

நபி காட்டிய பாதையே எனது பாதை ஆனால் தமிழே என் மொழி என்ற கொள்கை கொண்டவராக இருப்பாரோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தமிழர்களை மத ரீதியாக பிரிந்து

தமிழர்களில் இசுலாமிய மதத்தை பின்பற்றுகின்ற தமிழர்கள் மதத்தின் மீதுள்ள வெறித்தனமான பற்று காரணமாக தங்களை அந்த மதத்தின் பெயரை சொல்லி ஒரு இனமாக அறிவிக்கின்றனர்.அவர்கள் நவீனமாக சிந்தித்து மற்றவர்களுடன் இணங்கி போக தாயார் இல்லாததும் ஒரு காரணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/2/2026 at 15:51, island said:

2009 ஆரம்பத்தில் இருந்தே இணைத்தலைமை நாடுகள் உட்பட உலக நாடுகள் எல்லாமே பலதடவைகள் கேட்டது, புலிகள் ஆயுதங்களை கையளித்து உடனடியாக பேச்சுவார்ததைக்கு திரும்புவது மட்டுமே பாரிய மக்கள் அழிவை தடுக்கும் வழி என்பதையே. அது சரியா பிழையா என்பதற்கப்பால் இணைத்தலைமை நாடுகள் புலிகளிடம் இதையே தொடர்ந்து வலியுறுத்தின அதை மேற் கொள்ள புலிகள் தயாராக இல்லாதபோது உங்கள் சம்பந்தர் என்ன எவர் என்னதான் சூட்சுமத்தை கையாண்டாலும் யுத்தம் நிறுத்தப்பட்டிருக்காது என்பதை புரிந்து கொள்ள அது ஒன்றும் சிக்கலான விடயம் அல்ல.

சம்பந்தரின் தரகு இல்லாமலேயே புலிகளால் இதை நேரடியாகச் செய்திருக்க முடியும். நாம் ஆயுதங்களை நிரந்தரமாக கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்ப தயார் என ஒரு பகீரங்க அறிக்கையை புலிகள் விட்டிருந்தாலேயே போதும் யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் சாதாரண மக்கள் எல்லாம் இராப்பகலாக தமது உறவுகளை காப்பாற்ற ஆர்பாட்டங்களில் கலந்து கொண்டிருந்தாலும், அந்த ஆர்பாட்டங்களை ஒழுங்கு செய்த புலிகளின பிரதிநிதிகள் அந்த ஆர்பாட்டங்களை மக்களின் ஆர்பாட்டங்களாக காட்டாமல் புலிகளின் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் என்ற தோற்றபாட்டையே சர்வதேசத்திற்கு காண்பித்திருந்ததையும் இங்கு நினைவிற் கொள்க. இத்தனை தவறுகளும் சேர்த்தே மக்களை அழித்திருக்க நீங்களோ முழுப்பழியையும் சம்பந்தர் என்ற தனி நபர் மீது போட்டு பொறுப்பானவர்களை காப்பாற்ற முயற்சி செய்கின்றீர்கள்.

ஆயுதங்களை ஒப்படைக்க கேட்பதும் ஆயுத போரை கைவிடுமாறு கேட்டதும் நியாயமற்ற கோரிக்கை இனத்தின் தன்மானப்பிரச்சனை என்றும், அப்படி செய்ய முடியாது என்று நீங்கள் கூறுவீர்களானால், கடைசியில் மே மாதம் அதை தானே செய்தீர்கள். அதை ஜனவரியில் செய்திருந்தால் மக்களைக் காப்பாற்றியிருக்கலாம் அல்லவா!

இன்றும் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமென முத்திரை குத்தப்பட்ட இயக்கமாகவே இருக்கின்றது. அதை மனதில் வைத்து கரிக்கருத்துக்களாகவே கொட்டுகின்றீர்கள் போல் இருக்கின்றது.

ஈழ அரசியலில் 2009 அழிவிற்கு பின்னரான காலத்தையும் இன்றைய நிலையும் நீங்கள் அலசத்தயாரில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.

நாங்கள் மாறுவம் நீங்கள் மாறவே மாட்டீர்கள்.😎

உலகில் உள் நாட்டு அரசியலை வல்லமை மிக்க வெளிநாட்டு அரசியல் தீர்மானிப்பதன் அவலங்களை இன்று கண்கூடாக பார்த்த பின்னரும் ......உங்களுக்கு புலிக்காய்ச்சல் தீரவில்லை என்றால்...... அந்த காய்ச்சலுக்கு மருந்தே இல்லை.

23 hours ago, goshan_che said:

இன்னும் 11 மாதம் இருந்தாலும் இதை இந்த ஆண்டின் சிறந்த நகைசுவையாக நான் முன்மொழிகிறேன்.

வணக்கம் ஐயா! நான் எழுதுவது நகைச்சுவைதான். இருந்தாலும் நான் நிற்கும் இடத்தை குறிப்பிடுகின்றேன். ஆனால் நீங்கள் யார் பக்கம் நின்று எழுதுகின்றீர்கள் என எந்த குருவிக்கும் தெரியாது.

சீனடி சிலம்படி சுத்தியடி சுழட்டியடி என்பது போல் யார்பக்கம் ஏன் எழுதுகின்றீர்கள் என்பது புரிவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/2/2026 at 15:51, island said:

நாம் ஆயுதங்களை நிரந்தரமாக கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்ப தயார் என ஒரு பகீரங்க அறிக்கையை புலிகள் விட்டிருந்தாலேயே போதும் யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

இனவாத சிங்கள அரசுகள் விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த உத்தரவாதங்களை மூடி மறைப்பது உங்களுக்கு தெரியவில்லை போலும்....

குறிப்பாக பிரேமதாச ஆட்சிக்காலத்தில் இந்திய ஆக்கிரமிப்பாளர்களை முறியடிக்க புலிகளுடன் செய்த ஒப்பந்தங்கள்.....மற்றும் பல விடயங்கள்.

பட்ட அனுபவங்களே பல முடிவுகளை எடுக்க வைக்கும்.

தலைவர் பிரபாகரன் இனவாத சிங்கள அரசுகளை நம்பக்கூடாது என அன்று சொன்னார்.அவர் சொன்னது போல் சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் நீங்களோ கிழிந்த இசைத்தட்டு போல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இவர்கள் தான் வரலாற்றை உணரணும். ஆனால் அதுக்கு பள்ளிக் கூடம் போகணும் என்று எழுதித் தள்ளுவார்கள் மல்லாக்க படுத்துக்கொண்டு....

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இன்றும் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமென முத்திரை குத்தப்பட்ட இயக்கமாகவே இருக்கின்றது. அதை மனதில் வைத்து கரிக்கருத்துக்களாகவே கொட்டுகின்றீர்கள் போல் இருக்கின்றது.

ஈழ அரசியலில் 2009 அழிவிற்கு பின்னரான காலத்தையும் இன்றைய நிலையும் நீங்கள் அலசத்தயாரில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.

நாங்கள் மாறுவம் நீங்கள் மாறவே மாட்டீர்கள்.😎

உலகில் உள் நாட்டு அரசியலை வல்லமை மிக்க வெளிநாட்டு அரசியல் தீர்மானிப்பதன் அவலங்களை இன்று கண்கூடாக பார்த்த பின்னரும் ......உங்களுக்கு புலிக்காய்ச்சல் தீரவில்லை என்றால்...... அந்த காய்ச்சலுக்கு மருந்தே இல்லை.

இந்த திரி தொடங்கியதில் இருந்து இறுதியுத்த மக்கள் அழிவுக்கு சம்பந்தர் மட்டும் தான் முதன்மை காரணிபோல் வழமையான பாணியில் தேசியர்களால் திரிக்கப்பட்டது. தம்மால் ஏன்ற்கனவே பரப்ப்பட்ட உலக மகா பொய்களை எல்லாம் புலவர் போன்றவர்கள் இங்கு கொண்டுவந்து கொட்டினார்கள். நீங்களும் கனடாவில் இருந்து ஒரு சென்றிமென்ற் நடிகர் தத்துரூபமாக நடித்ததை இங்கு கொண்டுவந்து இணைத்தீர்கள். அப்போதேல்லாம் அது 2009 ல் நடந்த சம்பவங்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா? தெரிந்தும் அவற்றை எல்லாம் ரசித்த உங்களால் அந்த உருட்டுகளை உடைந்து தர்ககரீதியாக கேள்விகளை பல உறவுகள் கேட்க தொடங்கியதும், ஏன் 2009 ல் நிற்கின்றீர்கள் அதற்கு பின்னரான காலத்துக்கு வாருங்கள் என்று புலம்புகினீர்கள். ஏற்கனவே இருந்த அரசியல் பலத்தையும் சிதைத்து சுக்குநூறாக்கி விட்டு ஒன்றுமே இல்லாத ஒரு இருண்ட காலத்தை உருவாக்கி விட்டுருப்பதே 2009 ல் இருந்து இன்று வரை உள்ள நிலை. ஆயுத போர் வரும்வரை தமிழரின் சனத்தொகை அதிகரித்து சென்றது. ஆயுதப் போராட்டம் அதை அழித்தது. இப்போது மீண்டும் வளர்சியடைகிறது. பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலையில் தமிழரை விட்டு சென்ற பிறகு திரும்பவும் அரசியல்ப் பலம் பெறுவது என்பது எனது, உங்களது வாழ்ககைக்காலத்தில் காலத்தில் நடக்கப்போவதில்லை.

எல்லாத்துக்கும் வக்காலத்து வாங்கி புகழ்ந்து பக்கம்பக்கமாக எழுதுவது, அதில் ஒருவன் தவறுகளை சுட்டிக்காட்ட வெளிக்கிட்டால் ஐயோ! பழசை கிளறுறான், மாவீரரை கொச்சை படுத்தி போட்டான் என்று துள்ளி குதிக்கிறது. போராளிகளின் தியாகத்தை உபயோகித்து தமது தரப்பு அரசியல் தவறுகளை மறைத்து அடுத்தவர் மீது பழி போடுவது . இந்த அயோக்கிய அரசியல் தமிழருக்கு விடிவை தராது என்று தெரிந்தும் அதை செய்யும் நீங்கள் எப்படி தாயகத்தில் தமிழரின் அரசியல் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பீர்கள்?

13 hours ago, goshan_che said:

அட சொன்னா நம்புங்கப்பா….

ஐலண்ட் முஸ்லிம் இல்லை…..

ஆனால்…..:

புளொட்……😂

ஸ்டார்ட் மியூசிக்😂😂😂

சிலவேளை முஸ்லிம் புளொட்டாகவும் இருக்கலாம் 😂😂😂.

கோசான், Multiple choice கேள்விகளில் நான்கு பதில்களில் இறுதியாக தேர்வாக “மேற்கூறிய எவையும் இல்லை” என்று ஒரு தேர்வு இருக்கும். நீங்கள் ஏன் அதை இங்கு சேர்ககவில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

கோசான், Multiple choice கேள்விகளில் நான்கு பதில்களில் இறுதியாக தேர்வாக “மேற்கூறிய எவையும் இல்லை” என்று ஒரு தேர்வு இருக்கும். நீங்கள் ஏன் அதை இங்கு சேர்ககவில்லை

இதன் பின்னால் ஒரு உலக மகா உளவியல் இருக்கிறது.

வங்குரோத்து அரசியல் செய்வோருக்கு எப்போதும் ஒரு எதிரி தேவை.

எதிரியே இல்லாவிடிலும் அவர்கள் பொய்யாக ஒரு எதிரியை சிருஸ்டித்த்தாவது கொள்வார்கள்.

பிரெக்சிற் காரருக்கு ஐரொப்பியர், ஹிட்லருக்கு யூதர், சீமானுக்கு தெலுங்கர்…

யாழ்கள அண்ணையளுக்கு நீங்கள்.

உங்களை முஸ்லிம் அல்லது புளொட் அல்லது இரெண்டும் என கடந்து போனால் - நீங்கள் கேட்கும் அசெளகரியமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வராது.

எனது பிள்ளையை அவுஸ்ரேலியாவில் பள்ளியில் கூட சிங்கள இனவாதம் துரத்துகிறது என நாமே (நியாயமாக) அங்கலைத்தாலும், அதே நாம் இன்னொரு கருத்தாளர் கேட்கும் கேள்விக்கு “நீ முஸ்லிம் எனவே நான் பதில் சொல்ல மாட்டேன்” என தெனாவட்டாக எழுத முடிகிறது என்றால் அது உங்களை கற்பனையாகவேனும் ஒரு எதிரி என உருவகித்தால் மட்டுமே சாத்தியப்படும்.

12 hours ago, குமாரசாமி said:

பட்ட அனுபவங்களே பல முடிவுகளை எடுக்க வைக்கும்.

தலைவர் பிரபாகரன் இனவாத சிங்கள அரசுகளை நம்பக்கூடாது என அன்று சொன்னார்.அவர் சொன்னது போல் சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் நீங்களோ கிழிந்த இசைத்தட்டு போல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றீர்கள்.

இப்போ நீங்கள் அனுரவை தவிர வேறு வழி இல்லை என சொல்லி ஐலண்டின் வழிக்குதானே வந்துள்ளீர்கள்.

டக்லசும், ஐலன்டும், சம்பந்தனும் பல வருடம் வந்த வழிக்கு இப்போ வந்த நீங்கள், அவர்களை எப்படி குறை சொல்லலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

எனது பிள்ளையை அவுஸ்ரேலியாவில் பள்ளியில் கூட சிங்கள இனவாதம் துரத்துகிறது என நாமே (நியாயமாக) அங்கலைத்தாலும், அதே நாம் இன்னொரு கருத்தாளர் கேட்கும் கேள்விக்கு “நீ முஸ்லிம் எனவே நான் பதில் சொல்ல மாட்டேன்” என தெனாவட்டாக எழுத முடிகிறது என்றால் அது உங்களை கற்பனையாகவேனும் ஒரு எதிரி என உருவகித்தால் மட்டுமே சாத்தியப்படும்.

உங்களது பிரச்சினைதான் என்ன? எதற்காக என்னை விமர்சித்து வருகிறீர்கள்?

நான் எனக்காக ஒரு எதிரியை உருவாக்கவில்லை. நான் எழுதும் எக்கருத்திற்கும் குதர்க்கமாக பதில் எழுதும் ஒருவருக்கான பதிலே நான் எழுதியது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரஞ்சித் said:

உங்களது பிரச்சினைதான் என்ன? எதற்காக என்னை விமர்சித்து வருகிறீர்கள்?

நான் எனக்காக ஒரு எதிரியை உருவாக்கவில்லை. நான் எழுதும் எக்கருத்திற்கும் குதர்க்கமாக பதில் எழுதும் ஒருவருக்கான பதிலே நான் எழுதியது.

ஒரு பிரச்சனையும் இல்லை.

நானே இங்கு, இருவரை தமிழர் அல்லாதோர் என கூறுபவந்தான். ஆனால் அதற்கு சந்தர்ப்ப சாட்சியாவது கொடுத்துள்ளேன்.

முக்கியமாக, நீங்கள் முஸ்லிம் ஆனால் உங்கள் கருத்துக்கு இதுதான் என் பதில் எனவும் கூறுவேன்.

ஆனால் ஐலண்ட் முஸ்லிம் என்பது அப்பட்டமானதும், ஆதாரமற்றதுமான புரட்டு.

அவர் எழுப்பும் கேள்விகளை இதை மட்டுமே கூறி புறம்தள்ளும் போக்கு ஆபத்தானது.

அதன் பின்னால் உள்ள உளவியலை மட்டுமே மேலே குறிப்பிட்டேன்.

தவிர யாழில் உங்கள் மனம் போனபடி நீங்கள் எழுதலாம், நானும். பரஸ்பர அனுமதியோ, ஆமதிப்போ தேவையில்லை.

பிகு

உங்கள் மகனுக்கு ஏற்பட்டது போன்ற அதே நிலமை எனது மகனுக்கும் அண்மையில் ஏற்பட்டது. அந்த திரியில் அலசபட்டவை பயனுள்ளதாக இருந்தது🙏.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

இந்த கருத்தை முழுமையாக வாசிக்கவில்லை. மேலோட்டமாக வாசித்து நன்றி இட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன்.

தனிப்பட எனக்கு இசுலாமிய தமிழர்கள் மீது அவநம்பிக்கைகளும் தும்பகரமான நிகழ்வுகளும் இருந்தபோதிலும்

தமிழர்களை மத ரீதியாக பிரிந்து அல்லது இஸ்லாமியர்களை ஒதுக்கி எமக்கான விடுதலை சாத்தியமே இல்லை. இது எனது நிலைப்பாடு. நன்றி.

இனிமேல் முழுமையாக வாசித்து பதில் எழுதுங்கள், அது போதும். விருப்புக்குறி எதுவும் வேண்டாம்.

யார் தமிழர்கள்? இஸ்லாமியர்கள் தமிழர்களா? அவர்கள் தம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகிறோம் என்று உங்களிடம் சொன்னார்களா? வடக்குக் கிழக்கு இணைந்த பிராந்தியமே தமிழர் தாயகம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகளும் தமக்கு இருக்கும் பிரச்சினைகளும் ஒன்றாதலால், நாம் சேர்ந்தே போராடி எமக்கான உரிமைகளைப் பெறுவோம் என்று சொன்னார்களா?

அவர்களே தம்மை தனியான இனக் குழுமம், தமக்கான தனியான மாகாணம், தனியான அலகு, தனியான பிரதேச சபை என்று கோரி வரும்போது, நீங்கள் மட்டும் எவ்வாறு அவர்களையும் சேர்த்தே விடுதலை சாத்தியம் என்று கூறுகிறீர்கள்? உங்களது இருப்பிற்கான பாதுகாப்பு என்பது அவர்களின் பங்களிப்பினாலேயே இன்று சாத்தியமற்றதாக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுடன் சேர்ந்தே உங்களின் விடுதலை சாத்தியம் என்று நீங்கள் கருதுவது எங்கணம்?

அண்மைய காலங்களில் இஸ்லாமிய அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் சமூகத் தலைவர்களோ தமிழ் மக்கள் சார்பாக, அவர்களின் உரிமைகள் தொடர்பாக, அவர்களின் தாயகம் தொடர்பாகச் சாதகமாகப் பேசிய ஒரு சந்தர்ப்பத்தை கூறுங்கள் பார்க்கலாம். அல்லது தமிழருடன் சேர்ந்தே தமக்கான விடுதலை சாத்தியம் என்று அவர்களின் எவராவது கூறிய ஒரு சந்தர்ப்பத்தைக் கூறுங்கள்?

அவர்கள் தம்மை தனியினமாகக் கோரி, தமக்கான தாயகத்தை அடையாளப்படுத்தும்போது அதனை ஏற்கமறுக்கும் ஒரு உத்தியாகவே "அவர்களுடன் சேர்ந்தே எமக்கான விடுதலையும்" என்று நீங்கள் கூறுவதாக எனக்குத் தெரிகிறது. அதாவது தமிழர்கள் வாழும் தாயகத்தில் முஸ்லீம்களும் வாழலாம், ஆனால் அவர்கள் தமக்கான தனியான தாயகத்தைக் கொண்டிருக்க முடியாது என்பதே உங்களின் கருத்தில் இருந்து நான் எடுத்துக்கொள்வது.

முஸ்லீம்கள் தனியான இனமா? ஆம், தனியான இனம். அவர்கள் தமிழர்களா? இல்லை, தமிழ் பேசுபவர்கள், சிங்களமும் தாராளமாகப் பேசக் கூடியவர்கள். அவர்களுக்கென்று தனியான தாயகம் வேண்டுமா? ஆம் வேண்டும்.

உங்களுக்கான விடுதலையினை நீங்கள் வென்றெடுங்கள். அவர்களுக்கானதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் உங்களின் பிரச்சினைகளும், அவர்களின் பிரச்சினைகளும் ஒன்றல்ல, ஒரே பேரினவாதத்தினால் பாதிக்கப்பட்ட இரு சிறுபான்மையினங்கள் என்பதைத் தவிர.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

ஏன் 2009 ல் நிற்கின்றீர்கள் அதற்கு பின்னரான காலத்துக்கு வாருங்கள் என்று புலம்புகினீர்கள். ஏற்கனவே இருந்த அரசியல் பலத்தையும் சிதைத்து சுக்குநூறாக்கி விட்டு ஒன்றுமே இல்லாத ஒரு இருண்ட காலத்தை உருவாக்கி விட்டுருப்பதே 2009 ல் இருந்து இன்று வரை உள்ள நிலை. ஆயுத போர் வரும்வரை தமிழரின் சனத்தொகை அதிகரித்து சென்றது. ஆயுதப் போராட்டம் அதை அழித்தது. இப்போது மீண்டும் வளர்சியடைகிறது. பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலையில் தமிழரை விட்டு சென்ற பிறகு திரும்பவும் அரசியல்ப் பலம் பெறுவது என்பது எனது, உங்களது வாழ்ககைக்காலத்தில் காலத்தில் நடக்கப்போவதில்லை.

என் சிறுவயதில் நான் படித்தது. இது உண்மைச் சம்பவம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சிக்கான எடுத்துக்காட்டுகள் நம்மிடமே பல உள்ளன, நம்மைச் சுற்றியும் பல உள்ளன. அவற்றை நாம் கூர்ந்து கவனித்தால் உண்மை மனதிற்கு விளங்கும்.

"ஒரு சிலந்திப்பூச்சியின் விடாமுயற்சி

மாபெரும் படையெடுப்பை தடுத்து, விரட்டியது" என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?...

ஆம் இது உண்மையில் நடந்தது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்காட்லாந்தில், ராபர்ட் தி புரூஸ் என்ற மன்னர் வாழ்ந்து வந்தார். அச்சமயம் இங்கிலாந்து மன்னர் ஸ்காட்லாந்தை கைப்பற்ற முயற்சி செய்தார். ஸ்காட்லாந்து மீது படையெடுத்தார். மிகப் பெரிய படை பலத்துடன் இருந்தது இங்கிலாந்து, ஓரளவுக்கு படைபலத்துடன் இருந்தது ஸ்காட்லாந்து. ஆனால் மன உறுதி மிகவும் அதிகமாகவே இருந்தது.

இங்கிலாந்து ஸ்காட்லாந்தை தன்னுடன் இணைத்துக்கொள்ள போரிட்டது. இங்கிலாந்திடம் ஆறுமுறை போரிட்டு ஸ்காட்லாந்து இங்கிலாந்திடம் தோற்றது. ராபர்ட் தி புரூஸ் மன்னரின் படைகள் சிதறடிக்கப்பட்டன, அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் மறைந்திருக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் தன் நாட்டிற்குள்ளேயே ஒரு மலைக் குகையில் ஒளிந்து கொண்டார். அவர் மனதளவில் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். தன் எதிரியிடம் நாட்டை விட்டு விட்டோமே என்ற நிலையில் மிகவும் குற்றவுணர்ச்சி இருப்பவராய் காணப்பட்டார், மிகவும் வருந்தினார்.

ஒரு சமயம் அந்த குகையில் இருக்கும் பொழுது மழை பெய்து கொண்டிருந்தது. மழையை பார்த்தவாரே ஓரிடத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது ஒரு சிலந்திப்பூச்சி தன் வலையை பின்னுவதற்காக காத்திருந்தது. வலையை கொஞ்சம் கொஞ்சமாக பின்னிக் கொண்டிருந்தது. இந்த குகையில் இருந்து எதிரில் இருக்கும் ஒரு குகைக்கு வலை பின்ன எண்ணியது. அது தன் வலையை வீசி, வீசி பார்த்தது, ஆனால் அந்த குகையில் வலை ஒட்டவே இல்லை. வலையை திரும்பத் திரும்ப வீசியது, அதை பார்த்து ராபர்ட் தி புரூஸ், "பாவம் அந்த சிலந்திக்கு தான் என்ன தெரியும், அந்தக் குகை அவ்வளவு தூரத்தில் உள்ளது. அதனால் எப்படி அடைய முடியும் என்று நினைக்கலாம். பாவம் அறிவில்லாத ஜீவன்" என்று எண்ணிக் கொண்டார். ஆறு முறை சிலந்தி முயற்சி செய்தது. அவ்வாறு செய்தது 6 முறையும் சிலந்திவலை அங்கே சென்று ஒட்டாமல் கீழே விழுந்து கொண்டே இருந்தது. ஆனால் ஏழாவது முறையாக மீண்டும் முயற்சி செய்தது. மிகவும் கச்சிதமாக அந்த சிலந்திவலை அடுத்த குகையில் சென்று ஒட்டிக் கொண்டது. சிலந்தி கூடு கட்ட ஆரம்பித்தது ஆரம்பித்தது. இதைப் பார்த்தவுடன் ராபர்ட் ப்ரூஸ் க்கு ஒரு எண்ணம் தோன்றியது.

தன்னால் முடியாது என்று நினைத்தால் தான் எதுவும் முடியாது, தன்னால் முடியும் என்று நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு சிலந்தி ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

என்னால் முடியாது என்று ஏன் எனக்கு தோன்றியது. என்னால் நிச்சயமாக முடியும்.

அவருக்கு புதிய உற்சாகம் பிறந்தது. ஸ்காட்லாந்தை மீண்டும் கைப்பற்ற முடியும், அது என்னுடைய நாடு என்று எண்ணிக்கொண்டார். தன்னுடைய படை வீரர்களுக்கு இந்த செய்தியை உற்சாகமாக அனுப்பினார். சில நேரத்தில் உற்சாகம் அதிகமான படைவீரர்கள் இவருடன் திரண்ட, கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது. படைகள் பெருகிக்கொண்டே போனது. மீண்டும் போரிட்டார். ஏழாவது முறையில் ஸ்காட்லாந்து வென்றது.

இங்கிலாந்து ஸ்காட்லாந்தை விட்டு வெளியேறுவதற்கான நிர்பந்தம் வந்து விட்டது. இங்கிலாந்து ஸ்காட்லாந்தின் வலிமை மிக்க, மிகப்பெரிய மன்னரிடம் தோற்றது. ஆம் ஸ்காட்லாந்தை ஆள்வதற்கு இவர் தான் சரியான ஆள் என்று இங்கிலாந்தும் விட்டு சென்றது.

இந்த வரலாறு ஸ்காட்லாந்து மக்கள் அனைவருக்குமே தெரியும். ராபர்ட் புரூஸ் என்பவர் மன்னரான பின் ராபர்ட் I ,என்று அழைக்கப்பட்டார். இவர் ஸ்காட்லாந்தை ஆண்ட மன்னர்களில் மிகவும் பிரபலமான, மிகவும் தைரியமான மன்னராவார்.

விடாமுயற்சி என்பது மிகவும் முக்கியம். எதையும் நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். தோல்வியுற்றாலும் செய்து கொண்டே இருக்க வேண்டும், நிச்சயம் ஒரு நாள் வெற்றி தரும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

முக்கியமாக, நீங்கள் முஸ்லிம் ஆனால் உங்கள் கருத்துக்கு இதுதான் என் பதில் எனவும் கூறுவேன்.

எனக்கு அவர் ஒரு முஸ்லீம் என்று தெரியாது. அண்மையில் இக்களத்தில் அவரை ஒருவர் நானா என்று விளித்தபோது அதனை உண்மையென்று நம்பியே எழுதினேன். தமிழ்த் தேசியத்திற்கெதிராக (இப்படிக் கூறுவதால் புலிகளை எதிர்க்கிறார் என்றல்ல அர்த்தம், ஏனெறால் ஒருகாலத்தில் நீங்களும் புலிகளை முற்றாக எதிர்த்தவர், ஆனால் தேசியத்தை நேசிப்பவர்) தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிமுதற்கொண்டு புலிகள் வரை கடுமையாக விமர்சன‌ங்களை முன்வைத்து வந்தவர். சிறிமா பண்டாரநாயக்காவைப் புகழ்ந்து எழுதியவர். ஆகவேதான், இவரை ஒருவர் "நானா" என்று அழைத்தபோது, இவரது தமிழ்த்தேசியத்திற்கெதிரான விஷக் கருத்துக்களைப் அடிப்படையாக வைத்து, இவர் ஒரு முஸ்லீமாக இருக்கலாம் என்று முடிவிற்கு வந்தேன். உண்மையில் இவர் எவ்வினத்தவர் என்பது எனக்குத் தெரியாது.

இவரிடமிருந்து நான் விலகியே இருந்தபோதிலும் பலமுறை எனது திரிகளில் மிகவும் தீவிரமாக என்னை விமர்சித்து, பொய்களையும் புரட்டுக்களையும் எழுதுவதாக கருத்தெழுதி வருபவர் (இன்றுகூட அவரது கருத்தொன்றில் என்னைப்பற்றி, பெயர் குறிப்பிடாது எழுதப்பட்டிருக்கிறது), தமிழர்கள், தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும், இலங்கையராக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்றும் எனக்கான பதிவுகளில் எழுதிவருபவர். பலமுறை இவருக்கான பதில்களை நான் தவிர்த்து வந்தபோதிலும், தவிர்க்கமுடியாமல் சிலவேளைகளில், இவரை மேற்கோள் காட்டாது எனது பதிலைக் கருத்தாக பதிந்திருக்கிறேன்.

என்னைத் தனிப்பட்ட ரீதியில் இந்த மனிதர் தாக்கி எழுதுவது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சிலவேளை புலிகளுக்கு ஆதரவானவன் என்று முத்திரை குத்தப்பட்ட என்மேல் வைக்கப்படும் எந்த விமர்சனமும் உங்களைப்பொறுத்தவரை கடந்துசெல்லப்படவேண்டியவையாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த மனிதருக்கும் எனக்கும் இடையில் நீண்டநாள் பகையொன்று இருக்கிறது. அதனை நீங்கள் பார்க்கத்தவறிவிட்டு, நான் ஒரு இனவாதியாக , மதவாதியாக கருத்துக்களில் விசம் கட்டி எழுதுவதாக விமர்சிக்கிறீர்கள்.

உங்களுக்கும் இன்னொருவருக்கும் இடையே முன்னர் இக்களத்தில் நடைபெற்ற மிகவும் காரசாரமான கருத்து மோதல்களை நாம் அவதானித்திருக்கிறேன். அவர் இப்போது இங்கு இல்லையென்றாலும்கூட உங்களின் கருத்துக்களில் இருந்த கசப்புணர்வு வெளிப்படையானது. தனிப்பட்ட ரீதியில் நீங்கள் தாக்கப்படும்போது பதிலில் கோபம் இருப்பது இயல்பானது. நான் இப்போது செய்வதும் அதுவே. நான் விலகிச் செல்ல எத்தனிக்கும் ஒவ்வொரு தறுவாயிலும் விசமத்தனமாக‌ப் பிந்தொடர்ந்து, எனது கருத்துக்களை விமர்சித்து, தனிப்பட்ட ரீதியில் தாக்கும்போது தவிர்க்கமுடியாமல் நானும் கடுமையாக எழுதவேண்டியிருக்கிறது. ஒன்றில் அவர் என்னைத் தொடர்ந்து, தனிப்பட்ட ரீதியில் தாக்குவதை நிறுத்தவேண்டும், அல்லது நான் அவருக்குத் தனிப்பட்ட ரீதியில் பதிலளிக்க வேண்டி ஏற்படும்.

20 minutes ago, goshan_che said:

அவர் எழுப்பும் கேள்விகளை இதை மட்டுமே கூறி புறம்தள்ளும் போக்கு ஆபத்தானது.

அவர் கேட்பது கேள்வியல்ல, மாறாக மற்றையவர்களின் கருத்துக்களுக்கெதிரான விசமத்தனமான விமர்சனங்களே என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் தேசியத்திற்கும், புலிகளுக்கும் எதிராக எழுதுவதால், அவரது விமர்சனங்கள் உங்களுக்கு கேள்விகளாகத் தெரிகிறது.

குதர்க்கத்தனமான, புலிகளையும், தேசியத்தையும் சீண்டும் விதமான கேலிகளை கைவிட்டு விட்டு, இயல்பாக தனது கேள்விகளை முன்வைக்கட்டும், நான் பதிலளிக்கிறேன். நான் புலிகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவன் அல்ல. முன்னர் ஒருகாலத்தில் அப்படி இருந்தவந்தான், ஆனால் தெளிவு இருக்கிறது இப்போது. தவறைத் தவறென்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறது. ஆகவே சீண்டாமல் முன்வைக்கப்படும் எக்கருத்திற்கும் பதிலளிக்க காத்திருக்கிறேன்.

25 minutes ago, goshan_che said:

அதன் பின்னால் உள்ள உளவியலை மட்டுமே மேலே குறிப்பிட்டேன்.

எனது உளவியலை, எனக்கும் இந்த மனிதருக்கும் இடையே இத்தளத்தில் பகிரப்பட்ட கருத்துக்களின் பின்னணியிலிருந்து பார்த்தால் புரிந்துகொள்வது உங்களுக்குக் கடிணமாக இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

தவிர யாழில் உங்கள் மனம் போனபடி நீங்கள் எழுதலாம், நானும். பரஸ்பர அனுமதியோ, ஆமதிப்போ தேவையில்லை.

இதுகூட என்னைக் கண்டிக்கவேண்டும் என்று சிலர் இங்கே வெளிப்படையாக கருத்துப் பகிர்ந்ததனால் ஏற்பட்டது. ஏனென்றால், என்னை யாராவது கண்டித்துவிடுவார்கள் என்கிற காரணத்திற்காகப் பயந்துபோய் எழுதாமல் நான் இருக்கப்போவதில்லை. எனது கருத்து தெனாவட்டாக வந்திருப்பின் அதற்காக வருந்துகிறேன், எனது நோக்கம் அதுவல்ல.

28 minutes ago, goshan_che said:

உங்கள் மகனுக்கு ஏற்பட்டது போன்ற அதே நிலமை எனது மகனுக்கும் அண்மையில் ஏற்பட்டது. அந்த திரியில் அலசபட்டவை பயனுள்ளதாக இருந்தது🙏

நல்லது. ஆனால் என்னை நீங்கள் உங்களின் இதற்கு முந்தைய பதிவில் மேற்கோள் காட்டி எழுதியிருக்க வேண்டாமோ என்று தோன்றுகின்றது. நான் அன்று எழுதியது எவரினதும் அனுதாபத்தினை எதிர்பார்த்து அல்ல. மாறாக புலம்பெயர்ந்த நாட்டிலும் சிங்களவர்கள் தமது இனக்குரோதத்தினை தமது பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கிறார்கள் என்று குறிப்பிடவே. ஆனாலும் என்ன, அன்றைய நாட்களில் ரஸ்ஸிய உக்ரேன் திரியில் ஏற்பட்ட பிணக்கினால் நான் இதனைக் கற்பனையில் புனைந்து எழுதியதாக உங்களின் "நண்பர்" கப்டன் கூறியதும் நினைவிலிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

எனக்கு அவர் ஒரு முஸ்லீம் என்று தெரியாது. அண்மையில் இக்களத்தில் அவரை ஒருவர் நானா என்று விளித்தபோது அதனை உண்மையென்று நம்பியே எழுதினேன். தமிழ்த் தேசியத்திற்கெதிராக (இப்படிக் கூறுவதால் புலிகளை எதிர்க்கிறார் என்றல்ல அர்த்தம், ஏனெறால் ஒருகாலத்தில் நீங்களும் புலிகளை முற்றாக எதிர்த்தவர், ஆனால் தேசியத்தை நேசிப்பவர்) தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிமுதற்கொண்டு புலிகள் வரை கடுமையாக விமர்சன‌ங்களை முன்வைத்து வந்தவர். சிறிமா பண்டாரநாயக்காவைப் புகழ்ந்து எழுதியவர். ஆகவேதான், இவரை ஒருவர் "நானா" என்று அழைத்தபோது, இவரது தமிழ்த்தேசியத்திற்கெதிரான விஷக் கருத்துக்களைப் அடிப்படையாக வைத்து, இவர் ஒரு முஸ்லீமாக இருக்கலாம் என்று முடிவிற்கு வந்தேன். உண்மையில் இவர் எவ்வினத்தவர் என்பது எனக்குத் தெரியாது.

இவரிடமிருந்து நான் விலகியே இருந்தபோதிலும் பலமுறை எனது திரிகளில் மிகவும் தீவிரமாக என்னை விமர்சித்து, பொய்களையும் புரட்டுக்களையும் எழுதுவதாக கருத்தெழுதி வருபவர் (இன்றுகூட அவரது கருத்தொன்றில் என்னைப்பற்றி, பெயர் குறிப்பிடாது எழுதப்பட்டிருக்கிறது), தமிழர்கள், தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும், இலங்கையராக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்றும் எனக்கான பதிவுகளில் எழுதிவருபவர். பலமுறை இவருக்கான பதில்களை நான் தவிர்த்து வந்தபோதிலும், தவிர்க்கமுடியாமல் சிலவேளைகளில், இவரை மேற்கோள் காட்டாது எனது பதிலைக் கருத்தாக பதிந்திருக்கிறேன்.

என்னைத் தனிப்பட்ட ரீதியில் இந்த மனிதர் தாக்கி எழுதுவது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சிலவேளை புலிகளுக்கு ஆதரவானவன் என்று முத்திரை குத்தப்பட்ட என்மேல் வைக்கப்படும் எந்த விமர்சனமும் உங்களைப்பொறுத்தவரை கடந்துசெல்லப்படவேண்டியவையாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த மனிதருக்கும் எனக்கும் இடையில் நீண்டநாள் பகையொன்று இருக்கிறது. அதனை நீங்கள் பார்க்கத்தவறிவிட்டு, நான் ஒரு இனவாதியாக , மதவாதியாக கருத்துக்களில் விசம் கட்டி எழுதுவதாக விமர்சிக்கிறீர்கள்.

உங்களுக்கும் இன்னொருவருக்கும் இடையே முன்னர் இக்களத்தில் நடைபெற்ற மிகவும் காரசாரமான கருத்து மோதல்களை நாம் அவதானித்திருக்கிறேன். அவர் இப்போது இங்கு இல்லையென்றாலும்கூட உங்களின் கருத்துக்களில் இருந்த கசப்புணர்வு வெளிப்படையானது. தனிப்பட்ட ரீதியில் நீங்கள் தாக்கப்படும்போது பதிலில் கோபம் இருப்பது இயல்பானது. நான் இப்போது செய்வதும் அதுவே. நான் விலகிச் செல்ல எத்தனிக்கும் ஒவ்வொரு தறுவாயிலும் விசமத்தனமாக‌ப் பிந்தொடர்ந்து, எனது கருத்துக்களை விமர்சித்து, தனிப்பட்ட ரீதியில் தாக்கும்போது தவிர்க்கமுடியாமல் நானும் கடுமையாக எழுதவேண்டியிருக்கிறது. ஒன்றில் அவர் என்னைத் தொடர்ந்து, தனிப்பட்ட ரீதியில் தாக்குவதை நிறுத்தவேண்டும், அல்லது நான் அவருக்குத் தனிப்பட்ட ரீதியில் பதிலளிக்க வேண்டி ஏற்படும்.

அவர் கேட்பது கேள்வியல்ல, மாறாக மற்றையவர்களின் கருத்துக்களுக்கெதிரான விசமத்தனமான விமர்சனங்களே என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் தேசியத்திற்கும், புலிகளுக்கும் எதிராக எழுதுவதால், அவரது விமர்சனங்கள் உங்களுக்கு கேள்விகளாகத் தெரிகிறது.

குதர்க்கத்தனமான, புலிகளையும், தேசியத்தையும் சீண்டும் விதமான கேலிகளை கைவிட்டு விட்டு, இயல்பாக தனது கேள்விகளை முன்வைக்கட்டும், நான் பதிலளிக்கிறேன். நான் புலிகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவன் அல்ல. முன்னர் ஒருகாலத்தில் அப்படி இருந்தவந்தான், ஆனால் தெளிவு இருக்கிறது இப்போது. தவறைத் தவறென்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறது. ஆகவே சீண்டாமல் முன்வைக்கப்படும் எக்கருத்திற்கும் பதிலளிக்க காத்திருக்கிறேன்.

எனது உளவியலை, எனக்கும் இந்த மனிதருக்கும் இடையே இத்தளத்தில் பகிரப்பட்ட கருத்துக்களின் பின்னணியிலிருந்து பார்த்தால் புரிந்துகொள்வது உங்களுக்குக் கடிணமாக இருக்காது.

  1. உங்கள் தன்னிலை விளக்க்கத்தை முற்றாக ஏற்று கொள்கிறேன்.

  2. அவருக்கு நானா பட்டம் அளித்தவரும், நான் ஏனைய திரிகளில் சகஜமாக பேசும் உறவுதான் (சீமான் திரி தவிர😀).

  3. உங்கள் மூவர் இடையிலான பல விடயங்களை கண்டும் தலையிடாமல்தான் இருந்தேன். ஆனால் ஒரு ஆதாரமற்ற கருத்து, மீள மீள சொல்லப்படுவதால் உண்மை ஆகி விடக்கூடாது என்பதாலேயே என் கருத்தை பகிர்ந்தேன். தனிப்பட்டு உங்களை சீண்டும் அல்லது கருத்தை முடக்கும் நோக்கில் அல்ல.

  4. அவரும் எனக்கு உங்களை ஒத்த சம தூரத்தில் உள்ள உறவுதான். அவர் தமிழ் தேசியவாதி இல்லை என்பதால் அவர் சில விடயங்களை சொல்லும் தகுதி அற்றவர் என்பதையும், சில இடங்களில் அவர் அளவைதாண்டி விமர்சனம் செய்யும் போது அதையும் விமர்சித்துள்ளேன்( குசா அண்ணை மொழியில் - எல்லா பக்கமும் சுழண்டு சீன அடி 😀) . குறிப்பாக போராடி இருக்கவே தேவையில்லை அல்லது இலங்க அடையாளத்துள் கரையலாம் போன்ற கருத்துக்களை அவர் சொல்லும் போதோ, துரையப்பாவை விதந்துரைக்கும் போது, இப்படி பல சந்தர்பங்களில் என் எதிர்வினை காட்டமாகவே வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

நல்லது. ஆனால் என்னை நீங்கள் உங்களின் இதற்கு முந்தைய பதிவில் மேற்கோள் காட்டி எழுதியிருக்க வேண்டாமோ என்று தோன்றுகின்றது. நான் அன்று எழுதியது எவரினதும் அனுதாபத்தினை எதிர்பார்த்து அல்ல. மாறாக புலம்பெயர்ந்த நாட்டிலும் சிங்களவர்கள் தமது இனக்குரோதத்தினை தமது பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கிறார்கள் என்று குறிப்பிடவே. ஆனாலும் என்ன, அன்றைய நாட்களில் ரஸ்ஸிய உக்ரேன் திரியில் ஏற்பட்ட பிணக்கினால் நான் இதனைக் கற்பனையில் புனைந்து எழுதியதாக உங்களின் "நண்பர்" கப்டன் கூறியதும் நினைவிலிருக்கிறது

மேலே எழுதியதை தயவு செய்து அப்படி விளங்கி கொள்ள வேண்டாம்.

அந்த திரியில் நீங்கள் இத்தனை கெட்ட அனுபவதின் பின்னும் சிங்களவர் மீது தனிப்பட்டு இனக்குரோதம் காட்டாத நபர் என்பதை, பிள்ளைகளை கூட அப்படியே வளர்க்கும் நபர் என கண்டேன்.

ஆனால் வெளிநாட்டில் கூட இங்கே வளரும் பிள்ளை கூட இனக்குரோதியாக வளர்கிறதே எனும் உங்கள் ஆதங்கத்தையும் கண்டேன்.

நானும் இத்தனை கசப்புக்கு பின்னும் தனிப்பட்டு எவரிடமும் இன வன்மம் பாராட்டுவதில்லை, பிள்ளைக்கு அநீதியை சொல்லிகொடுத்தாலும் அது கண்மூடித்தனமாக இன வன்மத்தை வளர்க்க கூடாது என்றும் சொல்லியே வளர்கிறேன்.

அப்படி பட்ட ஒருவர் “ முஸ்லிமுகெல்லாம் பதில் சொல்ல முடியாது” என எழுதுகிறாரே என்பதே நான் சொல்ல வந்தது.

மனம் புண்பட்டால் மன்னித்து கொள்ளவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.