Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

Mar 14, 2026 - 08:46 PM

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

பல நாடுகள் தமது வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பிற்காகப் போர்க்கப்பல்களை அனுப்பும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் இராணுவ பலத்தை அமெரிக்கா 100 சதவீதம் அழித்துள்ள போதிலும், அவர்கள் இன்னும் ட்ரோன்கள், கண்ணிவெடிகள் மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதன் காரணமாகவே, ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmmqgvr2d000o356p67w8zxd2

வல்லரசுக்கு வந்த சோதனை!!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தம்பர்….

யூகே தேவையில்லை, நாம் வென்று விட்ட போரில் லேட்டா வந்து சேரமுடியாது எண்டு போன கிழமை சொன்னது என்னாச்சு?

கொஞ்ச நாளைக்கு முதல் ஏனைய நேட்டோ வீரர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் யுத்த முனைக்கு போகவில்லை, பின்னரங்கில் நின்றவர்கள் என நீங்களும், வான்சும் கூவினது மறந்து போச்சோ😂.

நீ தான் பெரிய ரவுடியாச்சே தனியாவே ஹோர்மஸ் நீரிணையை திறக்க்கிறது😂.

  • கருத்துக்கள உறவுகள்

யுவானில் எரிபொருளுக்கு கட்டணம் செலுத்தும் கப்பல்களை ஈரான் கோர்மூஸ் ஊடாக செல்ல அனுமதிக்கும் என கூறியுள்ளதாம்.

https://www.bernama.com/en/world/news.php?id=2534372

பெட்ரோடொலருக்கு மாற்றீடு.

  • கருத்துக்கள உறவுகள்

யான் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம் என்று எல்லோரையும் இந்தப் போருக்குள்ளே இழுத்து விடுவதே இந்த மனிசனின் நோக்கம்.

போர் தொடங்கும் போது இந்த நாடுகளிடம் விருப்பம் கேட்டு தொடங்கவில்லை .இப்போது வேணுமெண்டே எல்லாரையும் கொழுவுப்பட கொழுவுறான். கவனம்.

இந்த நாடுகளில் எங்கட சனங்கள் வாழுதுகள். ஏற்கனவே போர் வடுவைச் சுமந்து.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பர் நெத்தனியாகுவின் கதையை கேட்டு, இரானில் ஆழம் தெரியாமல் காலை விட்டுள்ளார்.

ஈரான், ஈராக் மற்றும் லெபனானில் இரண்டு புதிய போர் முனைகளை துவங்கியுள்ளது.

அமெரிக்காவின் நேசநாடுகள் ஒன்றும் கடந்த கால பட்டறிவில் இருந்தும், தம்பரை நம்பியும் யுத்த களத்தில் இறங்க தயாராக இல்லை.

மற்ற நாடுகள் ஏற்கனவே ஈரானுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கி, எண்ணெய் மற்றும் எல்பிஜி கப்பல்களின் சுமூகமான பயணத்தை உறுதி செய்து வருகின்றன. இன்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டு , இரண்டு கப்பல்களை விடுவிப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, vasee said:

யுவானில் எரிபொருளுக்கு கட்டணம் செலுத்தும் கப்பல்களை ஈரான் கோர்மூஸ் ஊடாக செல்ல அனுமதிக்கும் என கூறியுள்ளதாம்.

நீங்கள் தந்த இணைப்பில் Iran is considering என்றே உள்ளது.

அதாவது இப்படி அனுமதிப்பதை பரிசீலிக்கிறது.

ஆனால் சீனா-ஈரான் வர்த்தகத்தை தவிர வேறு பெற்றோல் விற்கும், வாங்கும் நாடுகள் இதற்கு இணங்குமா? குறிப்பாக இந்தியா, அரபு மத்திய கிழக்கு நாடுகள்?

இன்னொரு விடயம் - ஈரானின் 90% பெற்றோல் வரும் தீவை அமெரிக்கா முடக்கினால் என்ன ஆகும்? ஈரான் தன் வான் பரப்பின் முழு கட்டுப்பாட்டை இழந்துள்ள நிலையில் அந்த தீவில் இருந்து ஈரானின் shadow fleet மூலம் கூட பெற்றோல் செல்ல முடியாது போகும்.

மேலும் ஒரு விடயம் - இந்த நீரிணையை ஓமனோ, அமெரிக்காவோ கூட மூடலாம். ஒன்றில் சகல கப்பல்களும் போக வேண்டும் இல்லை எனில் எவரும் போக முடியாது என்ற நிலையை ஏற்படுத்தினால் - சீனா போன்றவை இதில் தலையிட வேண்டி வரும். இதை நோக்கித்தான் டிரம்பின் இந்த அறிக்கை இருக்கிறது.

ஈரானின் நட்பு நாடுகளுக்கு மட்டும், சீன யுவானில் எண்ணை போகலாம் என்பதை ஐநாவின் தவிர உலகின் பல நாடுகள் ரசிக்காது. நிச்சயமாக மேற்கு நாடுகள்.

மேலும் ஒரு விடயம் - இதில் உலகின் 20% ஒயில் தேவைதான் தங்கி உள்ளது. அதுவும் பெரிதும் ஆசிய நாடுகளுக்கு போகும் ஒயில். சவுதி கணிசமான அளவை - பைப் மூலம் செங்கடலுக்கு திருப்புகிறது.

இதனால் அமெரிக்காவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. சந்தை விலைகூடினாலும் அவர்களே அதிலும் இலாபம் அடைவர். ஐரோப்பாவில் கூட எரிவாயுவுக்குத்தான் கணிசமான பாதிப்பு. ஆனால் இந்தியா, சீனா ஜப்பான் இந்த வழியால் வரும் ஒயிலை 50% அளவில் தங்கி இருக்கிறன.

ஈரானின் இந்த யுவான் யோசனை - கோதாவில் சீனாவை இழுத்து விடும் முயற்சி.

அமெரிக்கா பெற்ரோடொலரை எப்படி பாதுகாக்கும் என நாம் அறிவோம்.

இதற்கு சீனா உடன்பட்டால் - அது கிட்டதட்ட ஒரு பொருளாதார போரின் அறிவிப்பாகவே அமெரிகாவால் பார்க்கப்படும்.

இந்த ரிஸ்குக்கு சீனா தயாரா? அதன் பணத்தின் liquidity இதை தாங்குமா என்பதெல்லாம் பெரிய கேள்விகள்.

பெற்றோடொலரின் பின்னால் அமெரிக்காவின் ஆயுத பலம் மட்டும் அல்ல, இன்னும் பல காரணிகளும் உள்ளன. இவை எல்லாமும் இல்லாமல் சீனா இந்த ரிஸ்கில் இறங்குமா என்பது கேள்வி குறியே.

அமெரிக்காவும்…

ஈரானும்….

சீனாவுக்கு இரு வேறு பட்ட பொறிகளை வைக்கிறன.

சீனா என்ன செய்யும்? என்பது பில்லியன் யுவான் கேள்வி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, vasee said:

யுவானில் எரிபொருளுக்கு கட்டணம் செலுத்தும் கப்பல்களை ஈரான் கோர்மூஸ் ஊடாக செல்ல அனுமதிக்கும் என கூறியுள்ளதாம்.

ஏற்கனவே மூன்றாம் உலகநாடுகள் டொலரை பார்த்து காறி துப்புகின்றது. அதிலும் இந்த அறிக்கை இன்னுமொரு செருப்படி....🤣

17 minutes ago, zuma said:

அமெரிக்காவின் நேசநாடுகள் ஒன்றும் கடந்த கால பட்டறிவில் இருந்தும், தம்பரை நம்பியும் யுத்த களத்தில் இறங்க தயாராக இல்லை.

இன்றைய நிலையில் பைடன் ஆட்சி வெள்ளைமாளிகையில் இருக்குமேயானால் இவையளும் அடிடா புடிடா எண்டு கொட்டன் குறுணி கல்லுகளோட வெளிக்கிட்டிருப்பினம்.இல்லாட்டி நேட்டோ எண்டதை அங்கையும் கொண்டுபோய் இறக்கியிருப்பினம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நந்தி said:

யான் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம் என்று எல்லோரையும் இந்தப் போருக்குள்ளே இழுத்து விடுவதே இந்த மனிசனின் நோக்கம்.

போர் தொடங்கும் போது இந்த நாடுகளிடம் விருப்பம் கேட்டு தொடங்கவில்லை .இப்போது வேணுமெண்டே எல்லாரையும் கொழுவுப்பட கொழுவுறான். கவனம்.

இந்த நாடுகளில் எங்கட சனங்கள் வாழுதுகள். ஏற்கனவே போர் வடுவைச் சுமந்து.

மனிசன் தனது நாட்டு சபைகளிடமே மூச்சுவிடலை.

  • கருத்துக்கள உறவுகள்

President Trump on the Streets as Beggar" Poster for Sale by Linkbekka |  Redbubble

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் போர்க்கப்பல்கள் அனுப்ப வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்து

Published By: Digital Desk 3

15 Mar, 2026 | 10:46 AM

image

மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி விநியோக வழித்தடமான ஹோமுஸ் நீரிணையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கப்பல் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவரவும் போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இந்தப் பணியில் அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் மீதான போர் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஹோமுஸ் நீரிணையில் தொடர்ச்சியாகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பில் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,

"ஈரானின் இராணுவ பலம் 100 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்ட போதிலும், அவர்கள் இன்னும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடும். பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் உடனடியாகப் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும். அமெரிக்கா தொடர்ந்து ஈரானியக் கடற்பரப்பில் தாக்குதல்களை முன்னெடுத்து, நீரிணையை பாதுகாப்பானதாக மாற்றும்."

உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹோமுஸ் நீரிணையைத் தொடர்ந்து முடக்கி வைக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவு மீது அமெரிக்கா மிகக்கடுமையான குண்டுவீச்சை நடத்தியுள்ளது.

இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் நிறுவனங்களின் எண்ணெய் உட்கட்டமைப்புகளை அழிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளதுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள் "நியாயமான இலக்குகள்" என்றும் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு,

பிராந்தியத்தில் கப்பல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நேச நாடுகளுடன் பல்வேறு விருப்பத்தேர்வுகள் தொடர்பில் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

யுத்தம் ஆரம்பித்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரை 16 கப்பல்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக UKMTO தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போது எந்தவொரு நாட்டு கடற்படையும் கப்பல்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லாத நிலையில், சர்வதேச கூட்டுப் படையை உருவாக்குவதே ட்ரம்ப்பின் திட்டமாக உள்ளது.

https://www.virakesari.lk/article/241001

  • கருத்துக்கள உறவுகள்

என்னை சந்தை விலை கூடினால், அமெரிக்க / மேற்கு பொருளாதாரம் படுத்து விடும்.

ஏனெனில். அமெரிக்கா பெற்றோ டாலர் கடனில் (சுருக்கமாக) இயங்குவது

இந்த மாடல் இல்லை என்றால் அமெரிக்கா எப்போதோ இரானின் என்னை வளத்தை தாக்கி இருக்கும்.

ஹோர்மோஸ் நீரிணையில் இரானின் என்னை கப்பல்களை மட்டும் தாக்கி இருக்கும்

அதாவது petro டாலர் என்பது - அமெரிக்காவின் கடனை நிதிவடிவத்துக்கு க்கொண்டு வருவது. இதுவே அமெரிக்கா பொருளாதாரத்தின் அடிப்படை. அது உலகப்பொருளாதாரத்தின் பெரும்பகுதி. pax americana இன் அடிப்படை.

இதில் உள்ள சிறப்பு - அமெரிக்கா கடன் பெற்றோ டாலர் ஆல் நிதிவடிவம் ஆக்கப்பட்டு, மீண்டும் அமெரிக்காவுக்கு முதலீடாக வருவது. அதாவது அமெரிக்கா கடன் முதலீடாக வருகிறது. இந்த வட்டத்தை முறித்தால் அமெரிக்கா படுக்கும். (இதுவும் ஒரு காரணம் அமெரிக்கா பசுமை சக்தி, மற்றும் காலநிலை மற்றம் போன்றவற்றை புறக்கணிப்பது, எதிர்ப்பது) அந்த பெரும் முதலீட்டை செய்வது அரபு நாடுகளே, அமெரிக்கா பங்கு மாற்றம் இதர சந்தைகளில் அந்த பெரும் முதலீட்டை செய்வது அரபு நாடுகளே, அமெரிக்கா பங்கு மாற்றம் இதர சந்தைகளில்

இப்போதைய (போர் , மற்றும் அமெரிக்கா கடன் நிலையில்) நிலையில் இன்னும் கூர்மையானதை இந்த பிரச்சனை

. இது petro dollar உம் ஆக குறைந்தது பகுதியாக படுத்தால்,குறிப்பாக pax americana பகுதியாகவேனும் படுத்துவிடும் படுத்துவிடும்.

பின் அமெரிக்கா / மேற்கு முன்பு இருந்த நிலைக்கு வரமுடியாது.

அமெரிக்கா (எவரின்) எண்ணை வளத்துக்கு அழிவை ஏற்படுத்தினால், இரானின் வலைக்குள் அதுவாக போய் விழுவது.

இதில் இரானும் அரபு நாடுகளின் எண்ணெய் வளம், உற்பத்தி கட்டுமானங்களை தாக்கும்

இங்கு ஈரான் தான் சொல்கிறது யுவானில் விலை குறிக்கப்படும் எண்ணெய்க்கு வழிவிடுவதை பற்றி, அனல் சீனா அதை சொல்லவில்லை. அதாவது அது இரானின் தெரிவு -அமெரிக்கா / மேட்ற்கு பொறுளாதாரத்தை முறிப்பதத்திற்கு, இரானின் பொருளாதாரத்தை அமெரிக்கா / மேட்ற்கு முறித்தது போல.

இதூவும் முக்கிய ஈரான் அமெரிக்கா தளங்களை தாக்குவது - அந்த தளங்கள் பெற்றோ டாலர் அமைப்புக்கு, அரபி நாடுகளுக்கு பாதுகாப்பு - அதனால் அரபுக்கு நாடுகள் பெற்றோ டாலர் அமைப்பை ஏற்பது. அத்துடன் இந்த அரபு நாடுகளும் அமெரிக்கா இரான் தாக்குதலுக்கு பலலவழிகளில் உதவுகின்ன்றன

இதை தான் முன்ப வேறு திரியில் சொல்லி இருந்தேன் - ஈரான் அரபு நாடுகளிடம் அறிவுறுத்தியது, இரான் மீது அமெரிக்க தாக்குதலுக்கு வழிகொலு;வத்துக்கு துணைபோவதை கைவிடல் என்பது.

அமெரிக்கா எப்போது மற்றவரை பார்த்து நடந்தது?

அனால், இபோதையா நிலையில், அமெரிக்கா / மேற்கு ஆப்பிழுத்த குரங்கு என்பதிலும் பாதக நிலை என்பதே பொதுவாக.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

ஏற்கனவே மூன்றாம் உலகநாடுகள் டொலரை பார்த்து காறி துப்புகின்றது. அதிலும் இந்த அறிக்கை இன்னுமொரு செருப்படி....🤣

நகைசுவைக்காணொளியாக போட்டிருக்கிறார்கள், ஆனால் நிலமை மோசமாக போகிறதோ என தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
On 14/3/2026 at 21:25, goshan_che said:

என்ன தம்பர்….

யூகே தேவையில்லை, நாம் வென்று விட்ட போரில் லேட்டா வந்து சேரமுடியாது எண்டு போன கிழமை சொன்னது என்னாச்சு?

கொஞ்ச நாளைக்கு முதல் ஏனைய நேட்டோ வீரர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் யுத்த முனைக்கு போகவில்லை, பின்னரங்கில் நின்றவர்கள் என நீங்களும், வான்சும் கூவினது மறந்து போச்சோ😂.

நீ தான் பெரிய ரவுடியாச்சே தனியாவே ஹோர்மஸ் நீரிணையை திறக்க்கிறது😂.

சீனா. வாராது. தேவையிமில்லை. சீனா. கப்பல்களுக்கு. தடையில்லை. மற்றவர்கள். பலம். இல்லாதவர்கள். புதின். மட்டும். ஒரு. சொல்லில். திறக்கக்கூடிய. மனிதன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, vasee said:

நகைசுவைக்காணொளியாக போட்டிருக்கிறார்கள், ஆனால் நிலமை மோசமாக போகிறதோ என தெரியவில்லை!

மேற்குலகினது ஊடகங்களின் அமைதியான செய்திகளை பார்க்கும் போது இவர்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை போல் தெரிகின்றது. மேற்குலகு கட்டிக்காக்கும் இஸ்ரேலிலும் நல்ல செய்திகள் இல்லை போல் தெரிகின்றது.

முல்லாக்களுக்கு அமெரிக்கா மீது இருக்கும் கோபத்தை விட அரேபிய நாடுகள் மீதுதான் அதிக கோபம் இருக்கின்றது என்பது வெளிப்படையாகவே அவர்களது தாக்குதல்கள் மூலம் சொல்லாமல் சொல்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kandiah57 said:

சீனா. வாராது. தேவையிமில்லை. சீனா. கப்பல்களுக்கு. தடையில்லை. மற்றவர்கள். பலம். இல்லாதவர்கள். புதின். மட்டும். ஒரு. சொல்லில். திறக்கக்கூடிய. மனிதன்.

அமெரிக்காவிடம் இன்னும் சில வழிகள் கைவசம் உள்ளது. ஈரானின் அத்தனை துறைமுகத்தையும் கப்பல் உள்ளே போக இயலாதவாறு சிதைக்கலாம்.

தரை வழியே அயல்நாடுகளில் இருந்து உள்ளே வரும் சாலைகள் அனைத்தின் பாலங்களையும் தவிடு பொடியாக்கலாம்.

அதேபோல் ஈரானில் இருந்து எண்ணையோ வேறு எதுவுமோ வெளி செல்லாதபடி செய்யலாம்.

அப்படி செய்தால் உணவில் தன்னிறைவு இல்லாத ஈரான் உணவுக்காக நீரிணையை திறக்க வேண்டி வரும்.

உணவு பஞ்சம் வரும்போது ஆட்சியின் பொலிஸ் ஆமி கூட அவர்களுக்கு எதிராக திரும்பலாம்.

இந்த போர் இப்போதான் ஆரம்பிக்கிறது.

பிகு

சீனா தாய்வானை சுற்றுகிறதாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

அமெரிக்காவிடம் இன்னும் சில வழிகள் கைவசம் உள்ளது. ஈரானின் அத்தனை துறைமுகத்தையும் கப்பல் உள்ளே போக இயலாதவாறு சிதைக்கலாம்.

தரை வழியே அயல்நாடுகளில் இருந்து உள்ளே வரும் சாலைகள் அனைத்தின் பாலங்களையும் தவிடு பொடியாக்கலாம்.

அதேபோல் ஈரானில் இருந்து எண்ணையோ வேறு எதுவுமோ வெளி செல்லாதபடி செய்யலாம்.

அப்படி செய்தால் உணவில் தன்னிறைவு இல்லாத ஈரான் உணவுக்காக நீரிணையை திறக்க வேண்டி வரும்.

உணவு பஞ்சம் வரும்போது ஆட்சியின் பொலிஸ் ஆமி கூட அவர்களுக்கு எதிராக திரும்பலாம்.

இந்த போர் இப்போதான் ஆரம்பிக்கிறது.

பிகு

சீனா தாய்வானை சுற்றுகிறதாம்.

ஈரான். சீனா. வடகொரியா. சோவியத்யூனியன். இப்படி. பலம். வாய்ந்த. கூட்டாளிகளுண்டு. மேலும். ஈரான். அமெரிக்காவில். தாக்கும். வாய்ப்புகளுண்டா. ?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kandiah57 said:

ஈரான். சீனா. வடகொரியா. சோவியத்யூனியன். இப்படி. பலம். வாய்ந்த. கூட்டாளிகளுண்டு. மேலும். ஈரான். அமெரிக்காவில். தாக்கும். வாய்ப்புகளுண்டா. ?

எந்த கூட்டாளியும் நேரே இறங்க தயார் இல்லை என்பதை அண்மைய நிகழ்வுகள் காட்டுகிறன.

அதேபோல் 130 நாடுகள் அனுசரணையில் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் ஹோர்மஸ் நீரிணையை திறக்க வேண்டும் என தீர்மானித்ததும் அறிந்ததே.

60% செறிவாக்கபப்ட்ட 45 kg யுரேனியத்தை ஈரான் கையளித்தல், மேலும் அணுகுண்டை செய்ய நிரந்தர சோதனை இதற்கு பதிலாக இஸ்ரேல், அமெரிக்க தாக்குதல் நிறுத்தம் என்பதாக உலக நாடுகள், பாதுகாப்பு கவுன்சில் மூலம் ஒரு ஏற்பாட்டை செய்யலாம்.

ஈரானின் எண்ணை ஏற்றுமதி 90% ஒரு தீவில் மட்டுமே. அதே போல் உணவு இறக்குமதியும். இரெண்டிலும் இன்னும் அமெரிக்கா கைவைக்கவில்லை.

அமெரிக்கா வரை போகும் மிசைலோ, கிட்ட போய் அடிக்கும் கப்பல், நீர்மூழ்கி ஈரானிடம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

Mar 16, 2026 - 07:36 AM

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா உதவும் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். 

சீனாவின் 90% எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே வருவதாகவும், அதனால் சீனா இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். 

எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த சீனா ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்படலாம் என அவர் கூறிய நிலையில் அதற்கான காரணங்களை வௌிப்படுத்தியிருக்கவில்லை. 

அந்த சந்திப்புக்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு சீனா நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

சீனா, ஈரானின் எண்ணெய் தயாரிப்புகளில் சுமார் 90 சதவீதத்தை கொள்வனவு செய்கிறது. 

ஆனால், இது சீனாவின் மொத்த எண்ணெய் கொள்முதலில் சுமார் 12 சதவீதம் மட்டுமே ஆகும். 

வொஷிங்டனைச் சேர்ந்த உத்தியோகபூர்வ மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம், சீனாவின் எண்ணெய்ப் போக்குவரத்தில் சுமார் 40% மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmmsjl9s00004356pkmuensmc

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

மேற்குலகினது ஊடகங்களின் அமைதியான செய்திகளை பார்க்கும் போது இவர்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை போல் தெரிகின்றது. மேற்குலகு கட்டிக்காக்கும் இஸ்ரேலிலும் நல்ல செய்திகள் இல்லை போல் தெரிகின்றது.

முல்லாக்களுக்கு அமெரிக்கா மீது இருக்கும் கோபத்தை விட அரேபிய நாடுகள் மீதுதான் அதிக கோபம் இருக்கின்றது என்பது வெளிப்படையாகவே அவர்களது தாக்குதல்கள் மூலம் சொல்லாமல் சொல்கின்றார்கள்.

வளைகுடா போரின் பின்னர் அமெரிக்க விமானப்படை அழித்த அறிக்கையினடிப்படையில், ஈராக்கின் மீதான யுத்தத்திற்கான யுக்தி கூறப்பட்டுள்ளது.

Command, Control, Communication (C3), கட்டளைப்பீடத்திற்கும் படையினருக்கும் இடையேயான தொடர்பாடலை முறித்து ஒரு புலனற தாக்குதல் என்பதே அதன் சாராம்சம், அதில் நாலாவதாக கணனியினையும் இணைத்திருந்தார்கள்.

அந்த யுத்தத்தில் 300 இலக்குகள் அடையாளங்கண்டு தாக்கப்பட்டிருந்தது, ஈரான் யுத்தத்தில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் 2000 இலக்குகள் அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டது இருப்பினும் ஈரான் படையினர் தொடர்பாடல் முறிக்கப்படவேயில்லை, கட்டளைப்பீடமும் படையினரும் தொடர்பிலே காணப்படுகின்றனர், கமேனி கொல்லப்பட்ட பின்னரும் நடவடிக்கையில் தொய்வு ஏற்படவில்லை.

ஈராக் போரின் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க உத்தி மற்றும் இஸ்ரேலின் உத்திகளிற்கு ஏற்ப தமது திட்டங்களை வடிவமைத்துள்ளார்கள்.

பாதுகாப்பான தொடர்பாடல், குறுக்கீடு செய்ய முடியாத சமிஞ்சைகளை பேணுதல், பல அடுக்கு கொண்ட கட்டளைப்பீடங்கள் தனித்தனியே இயங்க கூடியவாறான கட்டமைப்பு என, இதனை மொசைக் பாதுகாப்பு பொறிமுறை என அழைக்கிறார்கள்.

தலியினை வெட்டினால் முடிந்துவிடும் எனவும் ஒரே நாளில் 2000 மேலான செயற்கை நுண்ணறிவு துணை தொழில்னுட்ப தாக்குதல்கள் கூட கட்டமைப்பினை அசைக்க முடியவில்லை.

பலமான எதிரிக்கெதிராக சம்ச்சீரற்ற தேய்மான போரினை தொடுத்தல், அதற்கு மாசே துங்கின் பலமான எதிரியினை வேகமாக அழிக்க தேவையில்லை அவனது பலத்தினை (Materials) சிறிது சிறிதாக சிதைத்து இறுதியில் தோற்கடித்தல் எனும் அடிப்படையில் யுத்தத்தினை தொடர முயலுகிறார்கள்.

இந்த போரினை நீண்ட காலத்திற்கு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகள் அனைத்தும் - தம்பருக்கு கையை விரித்து விட்டன😂.

நல்ல வேளையாக இங்கே கன்சேவேடிவ் கட்சி ஆட்சியில் இல்லை.

இல்லாட்டில் எம்மையும் கொண்டுபோய் இதில் மாட்டி விட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

652079295_1457818072471613_1027819387725

649823701_1490702589086397_4131982873434

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரானின் புதிய எச்சரிக்கை

Mar 16, 2026 - 04:49 PM

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரானின் புதிய எச்சரிக்கை

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹோர்முஸ் நீரிணையை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதால், தற்போது இந்த கடல் வழியாக கப்பல் போக்குவரத்து விசேட நிபந்தனைகளின் கீழ் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு ஈரானிய ஆயுதப் படைகளின் வசம் இருப்பதாகவும், தனது தேசியப் பாதுகாப்பிற்காகத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு ஒரு கடற்கரை நாடு என்ற ரீதியில் ஈரானுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். 

வரலாற்று ரீதியாக இந்த கடல் பாதையின் பாதுகாவலனாக ஈரான் இருந்து வந்த போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

உலகின் எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்த கடல் பாதையை, தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் கடுமையாகத் தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmmt3a9xk000n356p0qi98vj0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹோர்முஸ் நீரிணையை மீள திறக்க ட்ரம்ப் முயற்சி; மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரிப்பு

Published By: Digital Desk 3

16 Mar, 2026 | 12:02 PM

image

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்து முடக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று திங்கட்கிழமை பாரியளவில் அதிகரித்துள்ளது.

சர்வதேச விலையை நிர்ணயிக்கும் பிரெண்ட் மசகு எண்ணெய் இன்றைய நிலவரப்படி 3 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய் 106 டொலரைக் கடந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக மற்ற நாடுகளின் உதவியை கோரிய பின்னர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நீரிணை சர்வதேச மசகு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கொண்டுள்ளது.

இவ்வரையில், ட்ரம்பின் அழைப்புக்கு மந்தமான பதில்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சீனா, ஜப்பான், பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் இதுவரை தங்கள் கடற்படைகளை அனுப்ப உறுதி செய்யவில்லை. ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் திங்களன்று முக்கிய வழித்தடங்களுக்கு கப்பல்களை அனுப்ப திட்டமிடவில்லை என தெரிவித்துள்ளன.

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலாக, நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. சர்வதேச எரிசக்தி நிறுவனம் இதை வரலாற்றில் மிகப்பெரிய இடையூறு எனக் குறிப்பிட்டுள்ளது. போரின் தொடக்கத்திலிருந்து சர்வதேச எண்ணெய் விலைகள் 40% க்கும் மேலாக அதிகரித்துள்ளன, இது உலக பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்னர் நாளொன்றுக்கு சராசரி 138 வர்த்தகக் கப்பல்கள் பயணித்திருந்தன. ஆனால் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி போர் ஆரம்பமானது முதல், இதுவரை ஒரு நாளைக்கு 5 கப்பல்களுக்கு குறைவான போக்குவரத்தே நடைபெற்றுள்ளது. இந்த பகுதியில் குறைந்தது 16 வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன என பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/241083

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, vasee said:

வளைகுடா போரின் பின்னர் அமெரிக்க விமானப்படை அழித்த அறிக்கையினடிப்படையில், ஈராக்கின் மீதான யுத்தத்திற்கான யுக்தி கூறப்பட்டுள்ளது.

11 hours ago, vasee said:

இந்த போரினை நீண்ட காலத்திற்கு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது போல உள்ளது.

இவர்கள் எவ்வளவுதான் புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் வளர்ந்தாலும் போர் நிலையில் இன்னும் எதிரிகளை அல்லது மாற்றுக்கருத்துடையோரை குறைத்து மதிப்பிடுகின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.

ஈரான் முக்கியஸ்தர்கள் ஈராக்கின் தலைவர் சதாம் ஹுசையின் அகற்றப்படும் போதே தம்மை சுதாகரித்திருப்பார்கள். அதே போல் கடாபி கொலை என பார்க்கும் போது ஈரான் தினசரி தம்மை பலப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.அதனால் தான் இன்றும் பலத்துடன் இருக்கிறார்களோ என நினைக்கத்தோன்றுகின்றது.

அமெரிக்க கொள்கையாளர்கள் ஈராக்,லிபியா,சிரியாவில் இலகுவாக வெற்றி பெற்றது போல் ஈரானிலும் அதன் தலைவரை போட்டுத்தள்ளியவுடன் வெற்றிவாகை சூடலாம் என தப்புக்கணக்கு போட்டுள்ளார்கள் என்பதையே அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றது.

டொனால்ட் ரம்ப் ஆட்சியில் மட்டுமல்ல வேறு யார் ஆட்சிக்காலத்திலும் ஈரான் மீதான போர் ஒன்றிற்கு இன்றோ நாளையோ என ஒரு திட்டத்தை அமெரிக்க கொள்கையாளர்கள் வகுத்து வைத்திருப்பார்கள் என நம்பலாம்.மற்றும் படி டொனால்ட் ரம்ப் அவர்களினால் தான் ஈரான் போர் வந்தது என யாரும் கோபப்பட்டால்...... அமெரிக்காவின் ஏனைய தலைவர்களினால் தமக்கு பிடிக்காத நாடுகள் மீதான அத்து மீறல்களையும் போர் அழிவுகளையும் திரும்பி பார்த்தால் நல்லாயிருக்குமென நினைக்கின்றேன்.சில போர்கள் தங்கள் தனிப்பட்ட விடய மூடி மறைப்பிற்காகவே தொடங்கப்பட்டதாக தெரிகிறது.

ஈரானுக்கு பின் பலமாக ஒரு பெரும் சக்தியாக சீனா இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.