Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது மலசலகூட அனுபவங்கள்: (எச்சரிக்கை: மூக்கை பொத்திக்கொண்டு படிக்கவும்)

23 members have voted

  1. 1. நீங்கள் கிழமையில் வழமையாக ஏறக்குறைய எத்தனை தடவைகள் பொது மலசலகூடத்தை (PUBLIC TOILET) (பாடசாலை, வேலைத்தளம் உட்பட) பாவிப்பீர்கள்?

    • ஒருபோதும் பாவிப்பது இல்லை!
      4
    • (1 - 3) மிகக்குறைந்த அளவு பாவிப்பேன்!
      13
    • (4 - 5) ஓரளவு பாவிப்பேன்!
      2
    • (6, 6 க்கு மேல்) வழமையாக பாவிப்பேன்!
      4
    • வேறு பதில்!
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

யாழ் இணையம் இன்று தனது பத்தாவது அகவையில் காலடி வைக்கின்றது. இதனை ஒட்டி ஏதாவது எழுதவேணும் எண்டு நினைச்சு இருந்தன். உங்கட கஸ்டகாலமோ என்னமோ, கொஞ்ச நாளா எண்ட மூளையுக்க மலசகூடம் சம்மந்தமான சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருந்திச்சிது. என்றபடியால் இன்று எனது மலசலகூட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். :)

குறிப்பு: இங்குள்ள படங்கள் இணையத்தில் சுடப்பட்டவை. சும்மா பொலிவுக்காக இணைக்கப்பட்டுள்ளன.

onlinetoiletcg0.jpg

அனுபவம் 01: நான் சின்னனில திருகோணமலையில இருக்கேக்க ஒரு வீட்டில வாடகைக்கு இருந்தனாங்கள். அந்த வீட்டில இருந்த சிறப்பு என்ன எண்டால் நாங்கள் செய்யுற நம்பர் 2 ஐ ஒரு வாளியுக்க சேகரித்து ஒவ்வொரு நாளும் வாளியை மாத்துவார்கள். ஒவ்வொரு நாளும் காலம்பற வீட்டுக்கு வரும் ஒருவர் புதுவாளியை வைத்துவிட்டு பழையவாளியைக்கொண்டு செல்வார். முதன்முதலாக வாழ்க்கையில டொயிலட் எண்டால் அரியண்டப்பட்டது இதிலதான்.

stinksm6.jpg

அனுபவம் 02: பிறகு எனது சொந்தக்காரவீட்டில கொஞ்ச நாள் இருக்கேக்க அங்க மலசலகூடம் எப்பிடி எண்டால் ஒரு கிடங்கை வெட்டி அந்த கிடங்குக்கு மேல ரெண்டு மூண்டு பலகைகளை போட்டு இருக்கும். நாங்கள் கவனமாக பலகையில ஏறி தொப்பு, தொப்பு எண்டு நம்பர் 2 ஐ கிடங்குக்க இறக்க வேண்டியதுதான். தப்பித்தவறி கால் வழுக்கினால் அப்பிடியே கிடங்குக்க விழுந்து எழும்ப வேண்டியதுதான். நான் வாழ்க்கையில கண்ட கேவலமான மலசலகூடங்களில இதுவும் ஒண்டு. முக்கியமா இஞ்ச என்ன கவனிக்கவேணுமெண்டால் நம்பர் 2 செய்யும்போது கீழ குனிஞ்சு பார்க்ககூடாது. பார்த்தால் பிறகு வாழ்க்கை வெறுக்கும். சாப்பிடவும் ஏலாது. இந்த மலசகூடத்தில இருக்கிற முக்கிய பிரச்சனை என்ன எண்டால் கழிவுகள் அகற்றப்படுவதில்லை. அப்படியே கிடங்குக்க அது இருந்து உக்கும். மழை பெய்தால் நிலமை மோசம். ஏன் எண்டால் அது திறந்த மலசலகூடம். ஆக நாலு பக்கமும் ஓலையால மறைப்பு செய்யப்பட்டு மட்டும் இருக்கும். :)

iguanatoiletyl3.jpg

அனுபவம் 03: இந்தியாவுக்கு ஒருக்கால் போய் இருக்கேக்க அம்மா என்ன ஒரு துணிக்கடைக்கு கூட்டிக்கொண்டு போய் இருந்தா. எனக்கு நம்பர் 2 சரியா வந்திட்டிது. அம்மாவுக்கு கரைச்சல் குடுக்க ஒரு ஒதுக்குப்புறமா என்னக் கூட்டிக்கொண்டு போனா. அது ஒரு பெரிய ஒரு கோயிலுக்கு பக்கத்தில. அந்த இடம் திருவனந்தபுரம் எண்டு நினைக்கிறன். சரி எண்டு அந்த கோயில் மலசலகூடத்துக்க போனன். ஐயோ... அங்க என்ன பிரச்சனை எண்டால் மலசலம் கழிக்கவேண்டிய இடத்தை என்னால் அணுகக்கூட முடியவில்லை. வாசலிலேயே நம்பர் 2 கழிக்கப்பட்டு இருந்தது. யோசிச்சு பார்த்தன். என்ன செய்யுறது எண்டு தெரியவில்லை. எனது நிலமையும் மோசமாக இருந்தது. நானும் எனது பங்கிற்கு வாசலிலேயே சின்ன கோலம் ஒண்டு போட்டுவிட்டு வந்தன். :)

0514kindiatoiletpm6.jpg

அனுபவம் 04: ஊரில இருக்கேக்க எங்களுக்கு நிறைய காணிகள், வயல், தோட்டம் எல்லாம் இருந்திச்சிது. வீட்டில நான், அண்ணா எல்லாம் பள்ளிக்கூடம் இல்லாத நேரம், மற்றது லீவு நாட்களில அங்கபோய் வேலை செய்யுறது. அங்க வேலை செய்தால் தான் அப்பா எங்களை பின்னேரம் கிரவுண்டுல போய் விளையாடுறதுக்கு அனுமதி தருவார். இல்லாவிட்டால் விளையாட விட மாட்டார். இதால நாங்கள் வேலி அடைக்கிறது, தோட்டம் கொத்துறது, ஆடு, மாடு மேய்க்கிறது, புல்லு புடுங்கிறது, துப்பரவு செய்யுறது, ஓலை கிளிக்கிறது, ஓலை பின்னுறது, பயிருக்கு தண்ணி பாச்சிறது, பயிர் நடுறது.. இப்பிடி எல்லா வித்தைகளும் செய்வம். அங்க என்ன பிரச்சனை எண்டால் மலசலகூடம் எண்டு ஒண்டும் இல்ல. அம்மா, அக்காமார் யாராவது மத்தியானம் சாப்பாடு கொண்டு தோட்டத்தில நாங்கள் என்ன கூத்து அடிக்கிறம் எண்டு எங்களப் பார்க்க வருவீனம். நாங்கள் திண்டுபோட்டு பற்றைகளுக்க போய் நம்பர் 2 கழிக்கிறது. ஆனா அதுக்க ஒரு சின்ன சிக்கல் பாம்புகள் இருக்கக்கூடும். :)

அனுபவம் 05: மகர சிறைச்சாலையுக்க நான் கொஞ்ச நாள் இருக்கவேண்டி இருந்திச்சிது. அங்கையும் மலசலகூடம் எண்டு ஒண்டு இருந்திச்சிது. ஒரு சின்னப்பெட்டி மாதிரி. அதுக்க அந்த ஏரியா முழுவதும் நம்பர் 2 ஆல் கேக் ஐசிங்போல் செய்யப்பட்டு இருந்தது. பலதடவைகள் நம்பர் 1 அல்லது 2 வந்தாலும் கேவலமான அந்த மலசலகூடத்தை நினைத்துவிட்டு எல்லாத்தையும் அடக்கி வச்சு இருக்கிறது. :) நிலமை மிகவும் மோசம் எண்டால் மாத்திரம் அதுக்கபோய் வேதனைப்படுவது. அதுக்க போகேக்க நான் நடக்கும்போது முழுக்காலையும் பாவிப்பதில்லை. ஒவ்வொரு கால் பெருவிரலின் ஒரு சிறிய கீழ்ப்பகுதியை மாத்திரம் நிலத்தில் பதிச்சுக்கொண்டு மிச்சம் எல்லாப் பகுதியையும் நிலத்தில படாமல் தூக்கி வச்சு இருப்பன். அவ்வளவு கேவலம். நான் எண்ட வாழ்க்கையில கண்ட மிகவும் கேவலமான மலசலகூடம் இதுதான்.

207338jetairplanetoiletyk0.jpg

அனுபவம் 06: பிளேனில போகேக்க அதுக்க இருக்கிற டொயிலட்டுக்க மலசலம் கழிப்பது என்பது ஒரு சுவாரசியமான அனுபவம். நான் சின்னனில பிளேனில போகேக்க முதல்தரம் மலசலகூடம் பிளேனுக்க எப்பிடி இருக்கும் எண்டு பார்க்கிறதுக்காக அதுக்க போனன். அந்த பட்டனை அழுத்தியதும் சுர்ர்ர்ர் எண்டு பெரிய சத்தம் கேட்டுக்கொண்டு உறிஞ்சிமூலம் கழிவு சுத்திகரிக்கப்படுவது பார்ப்பதற்கு கொஞ்சம் ஆவலை ஏற்படுத்தியது. எண்டபடியால் அந்த பொத்தானை ரெண்டு மூண்டு தரம் சும்மா அழுத்தி சுர்ர்ர்ர் எண்ட சத்தத்தை கொஞ்சம் கேட்டு ரசித்தேன். பிளேனுக்க பிரேக்பாஸ்ட் குடுத்தாப்பிறகு எல்லாரும் டொயிலட்டுக்கு கியூவில நிக்கிறதப் பார்க்க பாவமா இருக்கும். (ஒரு சின்ன சந்தேகம்: பிளேனுக்க எல்லாரும் ஒருபக்கமா டொயிலட் கழிக்க கூடி நிக்கேக்க பின்பக்கமா பாரம்கூடி பிளேன் பின்பக்கமா சரிந்து ஏதாவது ஆபத்து வராதோ? :) ) இதால சில ஆக்கள் என்ன செய்வீனம் எண்டால் பிளேனுக்க சாப்பாடு கொடுக்கப்பட முன்னமே மலசலகூடத்துக்கு போவீனம். நான் கொஞ்சம் துப்பரவான ஆள். எனக்கு மலசலகூடமோ, குளியலோ உள்ளுக்க போனால் வெளியில வர நேரம் எடுக்கும். வடிவா எல்லாம் துடைத்து, கழுவி வெளியில வர எப்பிடியும் ஒரு பத்து நிமிசமாவது ஆகும். பிளேனுக்க சரியான கியூ எண்டால் மற்றவர்கள் வாசலில அல்லது காற்சட்டையுடன் அசிங்கம் செய்யக்கூடாது எண்டுறதுக்காக விரைவில வெளிய வந்துடுவன்.

funnytoiletsign2lf6.jpg

அனுபவம் 07: 2004 இல நான் யூனிவர்சிட்டியுக்கு சேந்த முதல்வருடம். ஒரே படிப்பு, யோசனைகள். நான் லைபிரரியுக்கு போய்த்தான் படிக்கிறது. அது பத்துமாடிகளைக் கொண்டது. எனது விருப்பத்தேர்வு எட்டாம் மாடி. ஏன் எண்டால் அங்க சனம் கொஞ்சம் குறைவாக இருக்கும். அதுக்க நான் இருந்து படிக்கேக்க நம்பர் 2 வந்திட்டிது. அதுக்க மலசலகூடம் இருக்கிதோ எண்டு தேடிப்பார்த்தன். கண்டுபிடிச்சிட்டன். சந்தோசமா கழிவு அகற்றிவிட்டு வந்திட்டன். திரும்பவும் போனன். கழிவு அகற்றிவிட்டு வந்தன். நான் ஒரு கிழமையால மூண்டாம் தரம் அந்த மலசலகூடத்துக்க செல்லேக்க ஒரு அசம்பாவிதம் நடந்திச்சிது. நான் வடிவா நம்பர் 1 அடிச்சுப்போட்டு கையக்கழுவுவம் எண்டு பைப் அடிக்கு போனால்.. ஐயோ அதுக்க ஒரு பொண்ணு!!! :) அது என்னப்பாத்துப்போட்டு சரியா பயந்து ஹீ.. எண்டு கத்த... நான் என்ன செய்யுறது எண்டு தெரியாமல் மூஞ்சை எல்லாம் விறைச்சு, ஹார்ட் அட்டாக் வந்தமாதிரி நெஞ்சு படக் படக் எண்டு அடிக்க திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டம். பிறகுதான் யோசிச்சுப் பார்த்தால் நான் மூண்டு தரமும் போனது பெண்களின் மலசலகூடம்.

உண்மையில பிழை என்னில இல்லை. எனக்கு ஸ்கூல் அப்போது புது அனுபவம். வழமையாக பெண்கள் பகுதி எண்டால் Female எண்டு போடப்பட்டு இருக்கும். இதவிட பெண்கள் எண்டு காட்டும் ஒரு அடையாளமும் இருக்கும். ஆனா இதில வாசலில W எண்டு மட்டும் எழுதப்பட்டு இருந்திச்சிது. நான் W எண்டதும் WASHROOM எண்டு நினைச்சன். அது உண்மையில WOMEN என்பதற்கான அடையாளம். பிறகுதான் கொஞ்சம் தள்ளிப்பார்த்தால் M எண்டு எழுதப்பட்டு ஆண்கள் பகுதி இருந்தது. நான் வேறு ஒரு பக்கத்தால போனபடியால் M எனது கண்ணில் படவில்லை. எனக்கும் ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாக இருந்திச்சிது பெண்கள் மலசலகூடத்துக்க போனபோது. ஏன் எண்டால் பெடியங்கள் பாவிக்கிற மலசலகூடம் எண்டால் வழமையாக பிளாஷ் பண்ணாமல் நாற்றம் அடித்தபடி ஊத்தையாக இருக்கும். ஆனால் இது மிகவும் துப்பரவாக கிளீன் ஆக இருந்திச்சிது. எண்டாலும் எனக்கு இது பெண்களின் மலசலகூடமாக இருக்குமோ எண்டு சந்தேகப்படமுடியாமல் போய்விட்டது. நல்ல காலம் வேறு விபரீதம் ஒண்டும் நடக்கவில்லை.

எனக்கு சரியான கோவம் வந்திட்டிது. உடனடியாக லைப்ரரி நிருவாகத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினன் என்ன நடந்தது எண்டு சொல்லி. அவர்கள் மன்னிப்பு கேட்டு எனக்கு பதில் அனுப்பி இருந்ததோடு விரைவில் நான் கூறியபடி W, M எண்டு மட்டும் இல்லாமல் ஆண்கள், பெண்கள் படங்கள் கொண்ட அடையாளமும் மலசலகூட வாசலில் இணைக்கப்படுவதற்கு தாங்கள் ஆக வேண்டிய வேலையை செய்வதாக கூறி இருந்தார்கள். சுமார் மூன்று மாதங்களில் லைப்ரரியின் எல்லா 10 மாடியில் இருந்த மலசலகூடங்களுக்கும் W, M எண்டு மட்டும் இல்லாமல் ஆண்கள், பெண்கள் படங்கள் கொண்ட அடையாளங்கள் இணைக்கப்பட்டன.

urinalekv9.jpg

எனக்கும் எப்பவும் வாறகோவம் என்ன எண்டால் ஸ்கூலுக்க மலசலகூடம் பாவிக்க வருகின்ற நா** பிறப்புக்கள் நம்பர் 1 அல்லது 2 ஐ கழித்துவிட்டு துப்பரவு செய்யாமல் போவது. பின்னால வருபவன் தமது கழிவை துப்பரவு செய்வான் என்ற எண்ணமாக்கும். இதைவிட நிறைய மாடுகள் ஸூவிங்கத்தை சப்பிப்போட்டு அதுக்க துப்பி விடுங்கள். ஸூவிங்கம் அதில ஒட்டிப்பிடிச்சு இழுபட்டுகொண்டு இருக்கும். மற்றவனும் மலசலகூடத்தை பாவிக்கவேண்டும், கொஞ்சம் பண்புடன் நடந்துகொள்ள வேணும் எண்டுற சிந்தனை இதுகளுக்கு அறவே கிடையாது. ஆனா ஆக்களப் பாத்தால் மட்டும் அவேண்ட காற்சட்டை என்ன! ரீ சேட் என்ன! சப்பாத்து என்ன...! எல்லாம் ஹொலிவூட் ரேன்ஞ்சில இருக்கும். அடிப்படை ஒழுக்கம் தெரியாத இதுகள் எல்லாம் படிச்சு டிகிரி எடுத்து நாடு எங்க உருப்படுறது? :unsure:

சில ஆக்கள் பொதுமலசலகூடத்துக்க எப்பிடி நம்பர் 2 கழிக்கிறது எண்டால் ஊரில குந்திக்கொண்டு இருக்கிற மாதிரி சப்பாத்துக் காலோட நம்பர் 2 ஐ கழிக்கும் பேசனுக்கு மேல ஏறி இருக்கிறது. எனக்கு ஒருவர் சொன்னார் தான் ஏன் இப்பிடி செய்யுறது எண்டாவாம் தொற்றுநோய்கள் வராமல் இருப்பதற்க்காகவாம். நான் பொதுமலசலகூடத்தில கழிவு அகற்றவேண்டி வந்தால் அந்த பேசன் மேல் பேப்பரை கிழித்து துப்பரவு செய்து பிறகு உள்ளுக்க போட்டு பிளாஷ் பண்ணிவிட்டு பிறகு மீண்டும் தாராளமாக பேப்பரை கிழித்து பேசன்மீதுவிரித்து விட்டு இருப்பது. வேறு வழி இல்லை.

வெளிநாட்டில பிறந்த இல்லாட்டிக்கு வெளிநாட்டுக்கு சின்னனில வந்த ஆக்களுக்கு வாற வழமையான பிரச்சனை என்ன எண்டால் எங்கட ஊர் ஸ்டைலில அவேக்கு குந்திகொண்டு மலசலம் கழிக்கத்தெரியாது. இதவிட ஊர் மலசலகூடங்கள எப்பிடி பாவிக்கிறது எண்டும் தெரியாது. இவர்கள் ஊருக்கு இல்லாட்டி இந்தியாப்பக்கம் போவதென்றால் முதலில் குந்திப்பழகி டிரெயினிங் எடுத்துப்போட்டு போவது நல்லது. :)

உங்கள் மலசலகூட அனுபவங்களையும் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளுங்கள். எனது மிகுதி அனுபவங்களை பிறகு நேரம் கிடைக்கும்போது சொல்கின்றேன். :)

நன்றி!

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

அட காலங்காலத்தால வேலைக்கு போகமுன்னம் ஓருக்கா யாழை எட்டிப்பாத்துட்டுப்போவம் என்றால் இந்த நாத்தம் நாறுது :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத்தனமாக இந்த கதவை திறந்து விட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யகோ என்ன இந்த பக்கமே நாரகாசமாக நாறுகிறது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில டாக்டர்களாக இருந்து பிறகு பென்சனில இல்லாட்டி வேலைய விட்டுப்போட்டு புலம்பெயர்ந்தவை கனபேர் இஞ்ச கலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு தங்களவிட்டாப் பெரியாக்களில்லையெண்டு திரியினம். உவங்கள் ஹவுஸ் ஒப்பிசராய் அல்லது எம் ஓவாய் வேலை செய்த ஆசுபத்திரியளில தங்கட நிர்வாகத்துக்குக் கீழ எப்பிடிக் கக்கூசுகள வச்சிருந்தவை எண்ட சீத்துவம் கனபேருக்குத் தெரியும். அதையும் இந்த இடத்தில ஞாபகப் படுத்தவேணும் போல இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒமோம் வேண்டும் என்று பெண்கள் கழிபறைக்கு போயிட்டு இங்க வந்து பொய் சொல்லாதையுங்கோ சின்ன வயதில இப்படியா ஜோசனைகல் வாரது தான் தவிர்க்க முடியாது அடி வாங்காம வந்தது பெரிய விசயம் இல்லாட்டி அடி விழுந்த படியா தான் இப்படி எல்லாம் எழுத் தொடங்கினீங்களோ யாருக்கு தெரியும் :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா மோகன் அண்ணா ஒருக்கா detol போட்டு யாழ கழுவுங்கோh

எல்லாருக்கும் வணக்கம் யாழ் இணையம் 10 அகவையில் காலடி எடுத்து வைக்கும் இன்றைய நன் நாளிள் எமது குரு அவரின் சொந்த செலவில்..(ஒரு மலசலகூடத்தை யாழ்கள மக்களிற்காக கட்டி கொடுத்துள்ளார் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் :lol: ..(இதனை சுப முகூர்த்தத்திலும் நெடுக்ஸ் தாத்தா அவர்கள் உத்தீயோக பூர்வமாக திறந்து வைத்து உள்ளே நுழைவார் என்பதனை இத்தால் சகலருக்கும் அறிய தருகிறோம்..(எங்கே உங்கள் கரகோஷம்)...நிசமா என்னால முடியல்ல.. :unsure:

யாழ்கள மலசலகூடத்தை பாவிக்கிறவர்கள் எல்லாரும்..(கட்டணத்தை மறக்காம என்னிட்ட தாங்கோ சரியா)...அப்பாடா ஒரு மாதிரி நாம லைவில செட்டில் ஆகிடலாம் போல இருக்கு..(வாற கலக்சனில :lol: )..ம்ம்ம்..மலசல கூட துப்புறவு பணிகளை சுண்டல் அண்ணா செய்வார் என்பதால் ஒருத்தரும் கவலை படாம போயிற்று வரலாம் என்பதனையும் இத்தருணத்தில் சொல்லி கொள்ள விரும்புகிறோம்..

ம்ம்..எல்லாம் சரி இந்த மலசலகூடதிற்கு என்ன பெயர் வைக்கலாம்..(கலைஞன் மலசலகூடம் என்று பெயர் வைப்போமா)..ஒருத்தருக்கும் ஆட்சேபனை இல்லை தானே..(குருவே பார்த்திங்களா உங்க பெயரை யாழ்கள கிஸ்ரியில நிலைக்க பண்ணிட்டேன்)... :o

ம்ம்..சரி எனி மாட்டருக்கு வாரேன் என்ன..நான் வந்து பொது மலசலகூடத்தை கூடுதலாக பாவிக்கிறது இல்லை இருந்துவிட்டு பாவிக்கிறனான்..(ஒரு கிழமையில எத்தனை தரம் என்று எல்லாம் சரியா தெரியாது)..எனி எண்ணி பார்த்து சொல்லுறேன் என்ன குருவே..ஆனா எனக்கு பொதுமலசலகூடத்தை பாவிக்கிறது என்னொவோ பிடிகாது..(உங்க துப்புரவா தான் இருக்கு)..ஆனா என்னவோ அரியண்டம் மாதிரி..(யார் யாருக்கு என்ன வியாதியோ நமக்கும் வந்து தொலைந்தாலும் என்று பயம் தான்).. :)

என்னது மலசலகூடம் அநுபவமா..(இது என்னடா கொடுமையா போச்சு)..சரி சொல்லுறன் பிறகு ஒருத்தரும் ஏச கூடாது சொல்லிட்டன் என்ன..அக்சுவலா நான் வீட்ட மலசலகூடதிற்கு போனா பாட்டு பாடி கொண்டு தான் இருப்பன்..(கழுதை கத்துற மாதிரி இருக்குதோ யாருக்கும் தெரியும் ஆனா நான் பாடுவேன்)..கேட்கிறவன் தான் பாவம் டொயிலட்டில பாட்டு படிக்கிற சுகமே தனி சுகம் பாருங்கோ..

இன்னொரு முக்கிய மாட்டர்..(இலங்கையில இருக்கும் போது)..நேக்கு இரவில டொயிலட் போறது என்றா சரியான பயம்..(ஒருத்தருக்கும் சொல்லி போடாதையுங்கோ என்ன)..மம்மியை தான் எழுப்புறனான் பிறகு பிறகு மம்மியிட்ட ஏச்சு விழ தொடங்கிட்டு..(நமக்கு அது பிக் இன்சல்டா போயிட்டு)..சோ பிறகு நான் தான் தனிய போறனான் இரவில நடந்து போகக்க..(இருட்டில நிழல் எல்லாம் ஆடுற மாதிரி இருக்கும்)..நேக்கு சரியான பயம்..(நான் வாயில வந்த பாட்டை கத்தி படித்து கொண்டு தான் டோயிலட் பக்கம் போவன்)..அதுகுள்ள வீட்ட இருக்கிறவை எல்லாம் எழும்பிடுவீனம்..(நாம சந்தோசமா போயிற்று வருவோமல)..பட் என்ன டாடியிட்ட ஏச்சு விழும்..(அதை எல்லாம் நான் கண்டு கொள்ளுறதில)...நேக்கு தானே என்ட பயம் தெரியும் பாருங்கோ.. :)

இப்ப எல்லாம் அப்படி இல்லை நானே தனிய போவேன் பயப்பிடாம என்றா பாருங்கோவேன் ஜம்மு பேபி எவ்வளவு வளர்ந்திட்டு என்று..

எல்லாத்தையும் விட முக்கிய அநுபவம் இருக்கு சொல்லுறேன் பிறகு என்னை ஏச கூடாது சரியோ..ம்ம் இலங்கையில அவசரமா வந்தா நம்பர் 1 வந்து ஏதாவது மரத்தில அடிக்கலாம் தானே ஆனா உங்க அவுசில அடிக்க ஏலாது தானே பிடித்தா அபராதம் அல்லோ..ம்ம்ம் ஆனா நாம அடித்திருக்கிறோம் அல்லோ அது தான் பெரிய பகிடி பாருங்கோ..(அதை லைவில மறக்க ஏலாது பாருங்கோ :rolleyes: )..

அக்சுவலா சுற்ற போறனாங்க தானே ம்ம்ம் நம்ம சுண்டல் அண்ணாவும் வந்தவர் பாருங்கோ "பரமத்தா" என்று சிட்னியில அதுவும் ஒரு பெரிய சிட்டி மாதிரி...அங்க போய் சாப்பிட்டு விட்டு கார் பார்க்கிங்கில போய் கார் ஏற போறதிற்குள்ள நேக்கு அவசரமா நம்பர் 1 வந்திட்டு..(முன்னால பொலிஸ் ஸ்டேசன் பக்கதிலையே பிரிசின்..(ஜெயில்)..இப்படி இருக்குது சிட்டுவேசன்..(பட் நான் போய் ஆக வேண்டும்).. :o

என்ன செய்தேன் என்றா அங்க ஒரு மரம் இருந்தது நான் போய் பிஸ் அடிக்க ரெடி ஆனா உந்த சுண்டல் அண்ணா "கூ" காட்டி பெரிய ஆக்கினை பாருங்கோ..(பேபிக்கு எவ்வளவு டென்சன் அதில உதில உவரும் கத்தினா எப்படி இருக்கும்)..அப்படி இருந்தும் அடித்து போட்டு வந்தனான் என்றா பாருங்கோ...அவுஸ்ரெலியாவில எல்லாரும் பப்ளிக்கா கிஸ் தான் பண்ணுவீனம் ஆனா பிஸ் அடித்த ஆட்கள் நாம தான் என்றா பாருங்கோ...

ம்ம்ம்..என்ன பார்க்கிறீங்க செய்தது பிழை தான்...(ஆத்திரத்தை வேண்டுமென்றா அடக்கலாம் பட் அதை அடக்க ஏலுமா என்ன குருவே :o )..பக்கத்தில வேற பப்ளிக் டொயிலட் வேற இல்லை..(இருந்த ஒன்று மூடி கிடந்தது அநேகமாக எல்லா பப்ளிக் டொயிலட்டும் இங்க இரவு 8 மணிக்கு லொக் பண்ணுடூவீனம் அல்லோ)..அப்படி என்றா மக்கி பக்கம் தான் போகணும்..(மக்டோனால்ஸ் வரை நடக்க ஏலாம தான் அங்க போனனான் என்றா பாருங்கோ)..

எனிவே அன்றைக்கு தப்பி வந்திட்டேன்..(பட் அப்படி செய்யும் போது தான் லைவில ஒரு திரிலிங்கே இருக்கு ஆனா உந்த பாவி சுண்டல் அண்ணா கத்தினது தான் நேக்கு கொஞ்சம் பயமா போயிட்டு)...

ம்ம்..இப்படி இருக்கு அப்பப்ப உங்களோட பகிர்ந்து கொள்கிறேன்..(அட நான் பேபி தானே வெட்கபடாம பகிர்ந்து கொள்வென் பாருங்கோ)..எனிவே நாளைக்கு யாரும் வெள்ளன வந்து கிளீன் பண்ணி போடுங்கோ இல்லாட்டி இந்த பக்கம் நாறபோகுது..(சுண்டல் அண்ணா வெள்ளன் வந்திடுவியள் தானே :o )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில எல்லாரும் போக வேண்டிய இடங்களிள இதுவும் ஒன்று"

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் வணக்கம் யாழ் இணையம் 10 அகவையில் காலடி எடுத்து வைக்கும் இன்றைய நன் நாளிள் எமது குரு அவரின் சொந்த செலவில்..(ஒரு மலசலகூடத்தை யாழ்கள மக்களிற்காக கட்டி கொடுத்துள்ளார் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் ..(இதனை சுப முகூர்த்தத்திலும் நெடுக்ஸ் தாத்தா அவர்கள் உத்தீயோக பூர்வமாக திறந்து வைத்து உள்ளே நுழைவார் என்பதனை இத்தால் சகலருக்கும் அறிய தருகிறோம்..(எங்கே உங்கள் கரகோஷம்)...நிசமா என்னால முடியல்ல..

யாழ்கள மலசலகூடத்தை பாவிக்கிறவர்கள் எல்லாரும்..(கட்டணத்தை மறக்காம என்னிட்ட தாங்கோ சரியா)...அப்பாடா ஒரு மாதிரி நாம லைவில செட்டில் ஆகிடலாம் போல இருக்கு..(வாற கலக்சனில )..ம்ம்ம்..மலசல கூட துப்புறவு பணிகளை சுண்டல் அண்ணா செய்வார் என்பதால் ஒருத்தரும் கவலை படாம போயிற்று வரலாம் என்பதனையும் இத்தருணத்தில் சொல்லி கொள்ள விரும்புகிறோம்..

என்ன ஜம்மு இப்படியா பழிவாங்கிறது.............. உங்களை நம்பி நானும் யாழ் மலசலகூடத்திற்குள் (புதிதுதானே யாராவது அசிங்கபடுதடுத்த முன்பு போகவேணும் என்டு) போய் அலுவலும் ஆச்சு............

பேபி தண்ணி வருகுதில்லை. கொஞ்சம் அப்லோட் பண்ணுவீர்களா டவுண்லோட் பண்ணகூடியமாதிரி.

என்ன ஜம்மு இப்படியா பழிவாங்கிறது.............. உங்களை நம்பி நானும் யாழ் மலசலகூடத்திற்குள் (புதிதுதானே யாராவது அசிங்கபடுதடுத்த முன்பு போகவேணும் என்டு) போய் அலுவலும் ஆச்சு............

பேபி தண்ணி வருகுதில்லை. கொஞ்சம் அப்லோட் பண்ணுவீர்களா டவுண்லோட் பண்ணகூடியமாதிரி.

அட பாவமே..(என்ன சாப்பாடா கொடுக்கிறாங்க அங்கே :rolleyes: )..முடியல்ல என்னால...சா..சா உங்களை போய் பழிவாங்குவனா என்ன அண்ணா..அட பாவமே உங்க தண்ணி எல்லாம் பாவிக்கிறதில்ல டொயிலட் டிசு இருக்கு அல்லோ அதை தான் பாவிக்க வேண்டும் பாருங்கோ.. :lol: (உங்க தண்ணி எல்லாம் வராது)..வேண்டும் என்றா மினரல் வோட்டர் பொத்தில் ஒன்று வாங்கி தரட்டோ அண்ணா.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ம்ம்..எல்லாம் சரி இந்த மலசலகூடதிற்கு என்ன பெயர் வைக்கலாம்..

பேபிகள் விளையாட்டுதிடல் எண்டு பெயர் வைக்கலாம். இல்லாவிட்டால் கலைஞன் கற்கை நிலையம் எண்டு பெயர் வைக்கலாம்..

பேபிகள் விளையாட்டுதிடல் எண்டு பெயர் வைக்கலாம். இல்லாவிட்டால் கலைஞன் கற்கை நிலையம் எண்டு பெயர் வைக்கலாம்..

நோ..நோ பேபிகள் விளையாட்டு திடல் என்று வைத்தா பெரிய பிரச்சினை ஆகிடும்..(சோ..வேண்டாம் பாருங்கோ :wub: )...ம்ம்ம் கலைஞன் கற்கை நிலையம் நல்ல தமிழ் பெயரா இருக்கு அப்ப தான் கந்தப்பு தாத்தாவும் வருவார்.. :lol: (நமக்கு கலக்சன் அந்த மாதிரி இருக்கும் பாருங்கோ)... :wub:

சரி நான் நாளைக்கு வாரேன் என்ன..(இப்ப நித்தா கொள்ள போறன் :wub: )...யாரும் டொயிலட்டை இடித்து போடாம பார்த்து கொள்ளுங்கோ..(கலக்சன் பத்திரம் சொல்லிட்டன் :lol: )...

அப்ப நான் வரட்டா!!

வன்னியில் பயிற்சியிலீடுபடும் போராளிகள் காட்டிற்குள் தம் காலைக் கடனைக் கழிப்பதுண்டு. அதற்காக அவர்கள் மண்வெட்டி கொண்டு சென்று சிறு குழி வெட்டி கடனை முடித்தபின் மூடி விடுவார்கள். ஆனால் அந்தச் சிறுமண்வெட்டியைக் கையில் வைத்துக் கொண்டே அவர்கள் 'தம்பணி'யைச் செய்வார்கள். காரணம் பாம்புகள். அனேகமாக கிழமைக்கு ஒருமுறையாவது காலைக் கடனை இடை நிறுத்தி பாம்படிக்கும் பணியைச் செய்ய வேண்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்த சாப்பிட்டநீங்கள் இந்த நாத்தம் நாறுது

யாழுக்கு 10 வயதா?

வாழ்த்துகள்!

இந்த டொப்பிக்கை படிக்கும் போது வயிறு கழுவின மாதிரியிருக்கு....... :lol:

சொன்ன விடயம் பெரிசாயில்லாட்டியும்

எதை எதையோ சொல்லுது?

அப்படித்தானே முரளி?

  • தொடங்கியவர்

ஐயோ அஜீவன் அண்ணா, நீங்கள் வேற என்ன வம்பில மாட்டி விடுவீங்கள் போல இருக்கிது. நான் உண்மையா இத இணைச்சதுக்கு வேற உள்நோக்கம் ஒண்டும் இல்லை. சும்ம மனதில இருந்தத எழுதினன்.

ஆனாலும் எல்லாருக்கும் ஒரு விசயம்...

சும்மா மலசலகூடம் எண்டு சொன்ன உடன சிரிக்கக்கூடாது.

இது எங்கட அடிப்படைத் தேவைகளில முக்கியமான ஒன்று. உணவு போல மலசலம் கழிக்காமல் நாங்கள் வாழமுடியாது. மலசலம் ஒழுங்காக போகாவிட்டால் சங்குதான்.

ஒழுக்கம் விழுப்பம் தரும் என்று சொல்வார்கள். நாங்களும் மலசலகூடங்களை துப்பரவாக பாவித்து, பொது இடங்களில் பண்புடன் நடந்து வியாதிகள், நோய், நொடி இன்றி சுகதேகிகளாக வாழ்வோம்!!

எங்கட வீடுகளிலையும், பொது இடங்களிலையும் மலசலகூடம் மிகவும் துப்பரவாக இருக்கவேண்டியது மிகவும் முக்கியம்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் தனது 10வது ஆண்டில் சாக்கடைகளைச் சந்திக்கவேண்டி ஏற்படுவது துர்ப்பாக்கிய நிலையே.

குருவே பார்த்தீங்களோ நம்ம தூயவன் நானாவிற்கு எவ்வளவு பெரும் தன்மை என்று இன்னைக்காவது உண்மையை ஒத்து கொண்டிருக்கிறார்.. :lol:

சந்திபோம் சிந்திபோம்!!

வன்னி மண்ணில நான் வித்தியாசமா இன்னொண்டு கண்டனான் பாருங்கோ..

சதுரமா குழி வெட்டி..மரக்குத்தியள் அடுக்கப்பட்டு நடுவில பீப்பா பரல் தகட்டில செய்த சிறிய புனல் வடிவில ஒரு முனை "U" வடிவில வளைந்திருக்கும் சுத்தவர மண்மூட்டை அடுக்கி காத்து இறுக்கமா இருக்கும்..2 க் கிருந்துட்டு தண்ணியடிச்சிட்டால் "U" ல் தண்ணி தேங்கியிருக்கிறதால உள்ளுக்கிருக்கிறதும் தெரியாது உள்மணமும் வெளியில வராது.

  • கருத்துக்கள உறவுகள்

குருவே பார்த்தீங்களோ நம்ம தூயவன் நானாவிற்கு எவ்வளவு பெரும் தன்மை என்று இன்னைக்காவது உண்மையை ஒத்து கொண்டிருக்கிறார்.. :icon_mrgreen:

சந்திபோம் சிந்திபோம்!!

ஆமாம். முதலே சொல்லியிருப்பேன். உங்களின் மனதை நோகடிக்கக் கூடாது என அப்போது விட்டுவிட்டேன்.

முரளி என்கின்ற கலைஞனின் பதிவுகள் எல்லாம் இப்படியான சம்பவங்களை மையப்படுத்தியே அமைகின்றன. அதில் ஏதும் பிரச்சனையா தோழர்??

ஆமாம். முதலே சொல்லியிருப்பேன். உங்களின் மனதை நோகடிக்கக் கூடாது என அப்போது விட்டுவிட்டேன்.

முரளி என்கின்ற கலைஞனின் பதிவுகள் எல்லாம் இப்படியான சம்பவங்களை மையப்படுத்தியே அமைகின்றன. அதில் ஏதும் பிரச்சனையா தோழர்??

அட என்ன ஒரு நல்ல மனசு உங்களுக்கு..(சா இதை புரிந்து கொள்ளாம போயிட்டனே :icon_mrgreen: )..எனிவே இப்பவாச்சும் புரிந்து கொண்டனே சந்தோசம்..(இப்ப தான் நேக்கு வலிக்குது அது தான் மனசை சொன்னேன் பாருங்கோ :wub: )...

ம்ம்..தோழரே அது வந்து அவர் வாழ்க்கையில பட்ட அவலங்களை எல்லாம் பதிவா தாறார் பாருங்கோ.. :( (சிலருக்கு அது பிடிக்காம இருக்கும் எப்பவுமே உண்மைகள் கசக்கும் என்று யாரோ பெரியவா சொல்லி இருக்கீனம் உண்மையோ)..தோழரே.. :(

சரி தோழரே நேக்கும் அவசரமா வருது போயிற்று வாரேன் என்ன... :(

சந்திபோம் சிந்திப்போம்!!

  • தொடங்கியவர்

ஓம் யமுனா சரியாச் சொன்னீங்கள்...

நான் எனது வாழ்க்கை அனுபவங்களைத்தான் பதிவாகத் தருகின்றேன். எனது வாழ்க்கையில் ஒளிப்பதற்கு அல்லது இரகசியம் எண்டு பெரிசாக ஒன்றும் இல்லை. இதனால் நான் எனது அனுபவங்களை கூறுவதில் பெரிதாக வெட்கப்படுவதில்லை.

மனதில் எண்ணங்கள் ஓடும்போது வசதிவரும்போது யாழில் பதிகின்றேன். சிலவேளைகளில் அவை சுவாரசியமானவையாக இருக்கும். சிலவேளைகளில் அவை துன்பகரமானவையாக இருக்கும். சிலவேளைகளில் அவை இனிமையானவையாக இருக்கும். அது நிலமையைப் பொறுத்தது.

வேறு என்னத்த சொல்லிறது

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பத்தாவது அகவையில் மலரும் யாழ்களத்துக்கு எமது இனிய வாழ்த்துகள் உரித்தாகட்டும். :lol::lol:

குருவே! உடல் அழுக்கு ஒழுங்கா நீங்கினாத்தான் உள் அழுக்கும் ஒழுங்காய் நீங்கும் எனும் போதனைநன்றாகத்தான் உள்ளது. :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னவோ தெரியாது காத்தோட்டமான இடத்திலை குந்தியிருந்தால்த்தான் ................. அதுவும் ஒரு மண்டான் சுருட்டோடை அதிலை இருக்கிற சுகமே தனியப்பா :lol:

மண்டான் சுருட்டு என்றால்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.