Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையம் உருவாக்கிய ஓர் இனிய கலைஞனின் அறிமுகம்!

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!

இண்டைக்கு நான் ஒரு வித்தியாசமான கலைஞரை உங்கள் முன் அறிமுகம் செய்து வைக்கப்போறன். :D

உங்களுக்கு தெரியும் "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!" எண்டு ஒரு பிரபலமான வாக்கியம் இருக்கிது. அதாவது...

கலைஞர்கள் என்பவர்கள் மக்களை மகிழ்வித்து அவர்களை கொஞ்சநேரம் தமது பிரச்சனைகள, துயரங்கள மறந்து அமைதியாக, சந்தோசமாக இருப்பதற்கு உதவுகின்றார்கள். கவுண்டமணி, செந்தில், வடிவேல்.. மற்றது சத்தியராஜ், கமல், ரஜனி, சூரியா, விஜய்... எண்டு சினிமாவில நடிக்கிற ஆக்கள் மாத்திரம்தான் கலைஞர்கள் எண்டு இல்ல. பாட்டு படிக்கிற ஆக்கள், வாத்தியங்கள் வாசிக்கிற ஆக்கள், நடனம் ஆடிற ஆக்கள் இவேள் மாத்திரம்தான் கலைஞர்கள் எண்டும் இல்ல. :D

ஊரில நான் இருக்கேக்க திருவிழாக்காலங்களில அடிக்கடி கோயிலுக்கு நாதஸ்வரம் தவில் கச்சேரிகள் பார்க்கப்போவன். அப்ப அங்க ஒருத்தர் வந்து கச்சேரி செய்யுற மேளகாரருக்கு பக்கத்தில இருந்து மேளம் அடிக்க அடிக்க தாளத்துக்கு ஏற்றபடி விரலயும், கையயும், தலையையும், உடம்பையும் ஆட்டி ஆட்டிக்கொண்டு இருப்பார். எனக்கு தவில் கச்சேரி பார்க்கிறதவிட இவர் என்ன அபிநயங்கள் செய்யுறார் எண்டு பார்க்கிறதில இன்னும் சரியான விருப்பமா இருக்கும். அவர் செய்யுற அபிநயங்கள பார்த்து ரசிச்சிக்கொண்டே இருக்கலாம். அப்பிடி...

மக்களை மகிழ்விப்பது என்பது ஒரு கலை. அதுக்கு ஒரு இசைக்கலைஞராகவோ இல்லாட்டி பாடகராகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்ல. மற்றவர்களை சந்தோசப்படுத்துவது என்பது, மற்றவர்களை கலகலப்பாக வைத்து இருப்பது என்பது எல்லாராலும் ஏலாது. இதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். :) இந்தவகையில...

நான் யாழ் இணையத்தில இணையுறதுக்கு காரணமாக இருந்த ஒருவரை இன்றைக்கு கலைஞர்கள் பட்டியலில உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறன். அதாவது இந்தக்கலைஞர் படைக்கின்ற கலை என்பது..

யாழ் இணையத்தில கலகலப்பாக எழுதி சரவெடிகள் போட்டு... சிந்தனையத்தூண்டும் கேள்விகள் கேட்டு... இப்படி அரட்டை அடிக்கும் கலையில வல்லுனராக இருக்கும் ஒருவர். அரட்டை அடிக்கிறது ஒரு கலையோ எண்டு நீங்கள் கேட்கக்கூடாது. நிச்சயம் கருத்தாடல் தளம் ஒன்றில கலகலப்பான முறையில் கருத்து எழுதுவது என்பது ஒரு கலையே! இந்தக்கலையில் வல்லுனராக இருப்பது என்பது எல்லாராலும் ஏலாது. பலரால் இங்கு எழுதக்கூடியதாக இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் மனங்களை நோகடிக்காது... சரவெடிகள் கொளுத்துவது என்பது எல்லாராலும் முடியாது :D .

இஞ்ச யாழ் இணையத்துக்கு வருகைதருகின்ற பலரும் பொழுதுபோக்கவே வருகின்றார்கள் என்பது மறுக்கப்படமுடியாத ஒரு உண்மை. இங்கு யாழில பலர் கலகலப்பாக அரட்டை அடிப்பதால் அவற்றை வாசிப்பதற்காகவே பல வாசகர்கள் வருகின்றார்கள் என்பதும் மறைக்கப்படமுடியாத உண்மை. யாழ் இணையம் எனக்கும்கூட இந்தவகையில்தான் அறிமுகமாகிக்கொண்டது.

யாழ் இணையம் உருவாக்கிய இந்த இனிய கலைஞரை பற்றி சொல்லது என்றால் சுருக்கமாக இரண்டு வரிகளில் இப்படி சொல்லலாம்:

நான் யாழ் இணையத்தில இணையுறதுக்கு முன்னம் யாழ் வாசகனாக மட்டும் இருக்கேக்க இவர் எழுதுற கருத்துக்கள தேடித்தேடி வாசிப்பன். இவரிண்ட படம் உள்ள கருத்துக்கள் யாழில எங்கையாவது இருக்கிதோ எண்டு பார்த்து அதுகள முக்கியமா முதலில வாசிப்பன். நான் யாழ் இணையத்தில இணையுறதுக்கு இவர் கொஞ்சம் பகிடியா எழுதி.. கலகலப்பாக இருந்தமையும் ஒரு காரணம். சிலர் இவரை சீண்டி விளையாடினாலும், சிலர் இவரை கிண்டல் செய்தாலும்... தான் சோர்ந்துபோகாது.. தொடர்ந்து கலகலப்பாக எழுதி எம்மை மகிழ்விப்பவர்.

எங்க சரியாக ஊகிக்ககூடியதா இருக்கிதோ யார் அவர் எண்டு?

சொல்லுங்கோ....

அவர் யார்?

..........???

அவர் வேறு யாருமல்ல....

சொல்லில் மட்டும் வாழாது செயலிலும் வாழும் உத்தமர்...

நான் குறிப்பிட்ட அந்தநாட்டுக்கு செல்லும்போது முதலாவதாக சந்திக்க விரும்புபவர்...

தனது சுவாரசியமான கருத்துக்கள் மூலம் அடிக்கடி எம்மை ஊருக்கு கூட்டிக்கொண்டு போபவர்...

நேசக்கரம் எண்டு யாழில பணஉதவிகேட்கப்பட்டபோது முதலாவதாக ஓடிவந்து உதவிசெய்தவர்...

தனிப்பட்ட வாழ்வில் இரண்டு வேலைகள் செய்து கடுமையாக உழைத்துக்கொண்டு அதேநேரம் நேரம்கிடைக்குபோது யாழிலும் எம்முடன் இணைந்து இருப்பவர்...

நான் யாழ் இணையத்தில் இருந்து விலகவேண்டுமென நினைத்தபோது எல்லாம் எனது மனக்கண்களில் தோன்றி இப்படியான இனிய ஒரு உறவை இழக்கக்கூடாது என்பதற்காக யாழில் தொடந்தும் என்னை மானசீகமாக நிலைத்து நிற்கச் செய்தவர்...

சரி இவ்வளவு பெருமைக்குரிய யாழ் கலைஞன் யார் எண்டு நினைக்கிறீங்கள்?

ஜொள்ளு மன்னர்...

அன்புக்குரிய எங்கள் அண்ணன்...

சொல்லுங்கோ....

அவர் யார்? ^_^

அவர்..

வேறு யாருமல்ல...

அன்புக்குரிய எங்கள் தாத்தா, பெரியப்பா, அண்ணா குமாரசாமி அவர்களே இந்தப்பெருமைக்குரிய கலைஞன்! :D

இன்றுபோல் என்றும் யாழில் நிலைத்து நின்று ஜொள்ளுகள் விட்டு மக்களை மகிழ்வித்து நீண்ட ஆயுளுடன் சுகதேகியாக வளமுடன் வாழ குமாரசாமி அண்ணாவை இதயபூர்வமாக நான் வாழ்த்தி மகிழ்கின்றேன். :D

உங்களால தமிழ் சினிமாவில வாற பகிடிகளபார்த்து ரசிக்கக்கூடியதாக இருக்கிது எண்டால்... தமிழ்சினிமாவில வருகின்ற ஆக்கள கலைஞர்கள் எண்டு நீங்கள் சொல்லுவீங்களாக இருந்தால் என்னால குமாரசாமி அண்ணாவின் அறுவைகளையும் வாசிச்சு மகிழ முடிகின்றது. யாழ் இணையத்தில் எழுதுகின்ற குமாரசாமி அண்ணாவையும் ஓர் சிறந்த கலைஞனாக என்னால் தரிசிக்க முடிகின்றது. :D

பந்தி பந்தியாக எழுதுபவர்கள்தான் படைப்பாளிகள் என்று சொல்வதற்கு இல்லை. இரண்டு வசனங்களில் துணுக்குகளாக எழுதி எம்மை இன்புறச்செய்யும் குமாரசாமி அண்ணா அவர்களும் எனது கண்களுக்கு ஒரு சிறந்த படைப்பாளியாகவே தெரிகின்றார். :)

**** **

**** **

**** **

**** **

**** **

**** **

அவையஞ்சாமை: குறள் - 722

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்

பொருள்: கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்

123623814843335f5304067.gif

நன்றி! வணக்கம்!

Edited by முரளி

  • Replies 57
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் மாப்பு.நானும் உங்களை மாதிரித்தான் இப்படியான எழுத்துக்களை விரும்பி ரசிப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முரளி:

மக்களை மகிழ்விப்பது என்பது ஒரு கலை. அதுக்கு ஒரு இசைக்கலைஞராகவோ இல்லாட்டி பாடகராகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்ல. மற்றவர்களை சந்தோசப்படுத்துவது என்பது, மற்றவர்களை கலகலப்பாக வைத்து இருப்பது என்பது எல்லாராலும் ஏலாது. இதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். இந்தவகையில...

யாழ் இணையத்தில கலகலப்பாக எழுதி சரவெடிகள் போட்டு... சிந்தனையத்தூண்டும் கேள்விகள் கேட்டு... இப்படி அரட்டை அடிக்கும் கலையில வல்லுனராக இருக்கும் ஒருவர். அரட்டை அடிக்கிறது ஒரு கலையோ எண்டு நீங்கள் கேட்கக்கூடாது. நிச்சயம் கருத்தாடல் தளம் ஒன்றில கலகலப்பான முறையில் கருத்து எழுதுவது என்பது ஒரு கலையே! இந்தக்கலையில் வல்லுனராக இருப்பது என்பது எல்லாராலும் ஏலாது. பலரால் இங்கு எழுதக்கூடியதாக இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் மனங்களை நோகடிக்காது... சரவெடிகள் கொளுத்துவது என்பது எல்லாராலும் முடியாது

நான் யாழ் இணையத்தில இணையுறதுக்கு முன்னம் யாழ் வாசகனாக மட்டும் இருக்கேக்க இவர் எழுதுற கருத்துக்கள தேடித்தேடி வாசிப்பன். இவரிண்ட படம் உள்ள கருத்துக்கள் யாழில எங்கையாவது இருக்கிதோ எண்டு பார்த்து அதுகள முக்கியமா முதலில வாசிப்பன். நான் யாழ் இணையத்தில இணையுறதுக்கு இவர் கொஞ்சம் பகிடியா எழுதி.. கலகலப்பாக இருந்தமையும் ஒரு காரணம். சிலர் இவரை சீண்டி விளையாடினாலும், சிலர் இவரை கிண்டல் செய்தாலும்... தான் சோர்ந்துபோகாது.. தொடர்ந்து கலகலப்பாக எழுதி எம்மை மகிழ்விப்பவர்.

என்னுடைய மனதில் உள்ளதை அப்படியே எழுதியுள்ளீர்கள் முரளி .

குமாரசாமியண்ணை யாழிற்கு வராத நாட்களை ஏக்கத்துடன் பார்ப்பேன் . அவரது பணி தொடர வாழ்த்துக்கள் .

குமாரசாமியண்ணையின் கருத்துக்களை ஒன்றாக திரட்டி ஒரு தலைப்பின் கீழ் கொண்டு வந்த முரளிக்கும் எனது நன்றிகள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கலைஞன்,

இன்னொரு கலைஞனை அறிமுகப்படுத்தும் போது இளைய சமுதாயத்தின் விசாலமான மனசு தெரிகிறது.

யாழ்வாசகியாகமட்டுமே பலகாலம் இருந்தேன். நெடுக்ஸ் அண்ணை, மாப்பிள்ளையென்று உள்நுழைந்து கலைஞனாகி தற்போது இரண்டுமே நான் தான் என்கின்றமுரளி,ஜம்மு இவர்கள் கருத்தெல்லாம் தான் நான் யாழுக்கு உறுப்பினராக மிக முக்கிய காரணம். குமாரசாமி அண்ணையின் கருத்துக்களில் உள்ள தெளிவும் நகைச்சுவையும் கூட எனக்கும் மிகப் பிடிக்கும்.

நன்றி கலைஞா. எப்போதும் ஏதாவது வித்தியாசமாகப் படைத்துக் கொண்டிருப்பதால் "கலைஞன்" என்றபெயரே உங்களுக்கு வெகு பொருத்தம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரட்டைகளின் தலைவன் என்ற பதத்தை வளங்கிக் கௌரவிக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

கு.மா அண்ணாவுக்கும், ஜம்மு பேபிக்கும் இடையிலான உரையாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

கு..சா சுருங்கச் சொன்னாலும் உறைக்குமாறு சொல்வார்..! யாழின் மூத்த குடி அவர்தான்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி முரளி.

எங்களையும் பற்றி இப்படி ஏதும் எழுதமாட்டீர்களோ? எவ்வளவு செலவாகும்...

  • தொடங்கியவர்

அனைவரினதும் ஜொள்ளுப்பரிமாற்றத்துக்கு நன்றிகள்! :)

:lol:முன்பு சின்னப்பு கலக்கிக் கொண்டிருந்தார். இப்போ கு.சா கலக்குகின்றார். என்றுமே கலக்கல் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.:lol:
  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்புவும் கால்பந்து போட்டியோடை யாழ் களத்தில் இறங்கியிருக்கிறார்.

நுணாவிலான்

இப்ப சின்னப்பு வருவதும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை. மிகமிக அருமையாகவே வருகின்றார். முன்பு இராவணன் மட்டுறுத்தினராக இருந்த போது பார்க்க வேண்டுமே. இராவணன் எவரிலும் பாரபட்சம் காட்டுவதில்லை. அதுபோல் இராவணனின் கத்தி எவரையும் விட்டுவைத்ததுமில்லை. சின்னப்புவும் இராவணனைச் செய்யாத கேலியுமில்லை. நிர்வாகமும் கருத்தாளர்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கலகலப்பிற்காக கிண்டல்கள் கேலிகளுடன் ஜாலியாக இருந்த அந்தக் காலம்,

<_< "அது ஒரு கனாக்காலம்" . :icon_idea:

Edited by Vasampu

  • தொடங்கியவர்

நன்றி வசம்பு.

கு.சா அண்ணா வந்து ஒரு வார்தை சொல்லமாட்டீங்களோ? :D உங்களுக்கு விருது எல்லாம் தந்து கெளரவிச்சு இருக்கிறம். வெளிநடப்பு செய்துகொண்டு இருக்கிறீங்கள். <_< இல்லாட்டிக்கு கு.சா அண்ணாக்கு வெக்கம் வந்துட்டுதோ? :icon_idea:

மணமகனே மணமகனே வா வா

உன் வலது கையை தூக்கி வச்சு வா வா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி முரளி இவருடைய பெருமையை எழுதலாம்தானே

வல்லவர் வால்பிடிக்கிறதிலை.

ஜால்ரா போடுறதிலை உலகபிரசித்தம் பெற்றவர்

முக்கியமாக பல வயதுவந்தோர்க்கான இணையங்களுக்கு சொந்தக்காரர்

அப்பு முரளி மறந்துவிடாதையும் பெருமைகளை சொல்லும்

கான மயிலாட கண்டிருந்த .......................

கலக்கல் கு.சா வின் கருத்துக்களுக்கு நான் ரசிகன். குசா தொடருங்கள் உங்கள் பணியை சில வயித்தெரிச்சல்கள் புலம்பும் பெண்ணையர்கள் கதைகளை விட்டவுPடஞ்குளு;

  • கருத்துக்கள உறவுகள்

கு.சாவின் ஆக்கங்களை படித்து சிரிப்பவர்களிள் நானும் ஒருவன்.....அதுசரி முரளி நானும் ஒரு கலைஞன் பாருங்கோ.... காரணம் சிட்னி கோசிப் எழுதுவதால் கீ ..கீ...கீ....கீ

நுணாவிலான்

இப்ப சின்னப்பு வருவதும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை. மிகமிக அருமையாகவே வருகின்றார். முன்பு இராவணன் மட்டுறுத்தினராக இருந்த போது பார்க்க வேண்டுமே. இராவணன் எவரிலும் பாரபட்சம் காட்டுவதில்லை. அதுபோல் இராவணனின் கத்தி எவரையும் விட்டுவைத்ததுமில்லை. சின்னப்புவும் இராவணனைச் செய்யாத கேலியுமில்லை. நிர்வாகமும் கருத்தாளர்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கலகலப்பிற்காக கிண்டல்கள் கேலிகளுடன் ஜாலியாக இருந்த அந்தக் காலம்,

:lol: "அது ஒரு கனாக்காலம்" . :lol:

வசம்பண்ணா..இப்படியெல்லாம் எழுதாதிங்க...."அந்த காலம்" என எழுதி நான் பட்ட அனுபவம் அறிந்துமா இந்த விபரீத ஆசை..

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்

இப்ப சின்னப்பு வருவதும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை. மிகமிக அருமையாகவே வருகின்றார். முன்பு இராவணன் மட்டுறுத்தினராக இருந்த போது பார்க்க வேண்டுமே. இராவணன் எவரிலும் பாரபட்சம் காட்டுவதில்லை. அதுபோல் இராவணனின் கத்தி எவரையும் விட்டுவைத்ததுமில்லை. சின்னப்புவும் இராவணனைச் செய்யாத கேலியுமில்லை. நிர்வாகமும் கருத்தாளர்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கலகலப்பிற்காக கிண்டல்கள் கேலிகளுடன் ஜாலியாக இருந்த அந்தக் காலம்,

:lol: "அது ஒரு கனாக்காலம்" . :lol:

வசம்பு, மீண்டும் அக்காலம் வருமா? அவ்வினிய காலம் எனக்கு கிடைக்கவில்லை என்பதில் கவலை தான். பார்ப்போம்.யாழ் எனும் கப்பலை எவ்வளவு தூரம் கொண்டு செல்லலாம் என.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தான் பாருங்கோ அப்செட்டா இருக்கும் போது வானொலியில ஒரு விளம்பரம் கேட்டேன் அமைதியை தேடுங்கள் என்று அதற்கு தான் வழிகாட்டுவதாகவும் நான் ஓடினன் அவருடைய சொற்பொழிவை கேட்பதிற்கு.

அவர் கூறினார் வாழ்க்கைபூரா கனாகாலமாக இருக்க வேண்டும் என்றால் இறந்தகாலம்,எதிர்காலம் எதையும் சிந்திக்காமல் நிகழ்காலத்தில் வாழ்ந்தால் வாழ்க்கை கனாகாலமாக இருக்கும் என்று.கள உறவுகளே நீங்களும் நிகழ்காலதிற்கேற்ற மாதிரி இருந்தீங்க என்றால் தற்பொழுதையா யாழும் கனகால யாழாகவே இருக்கும். :lol:

வசம்பு, மீண்டும் அக்காலம் வருமா? அவ்வினிய காலம் எனக்கு கிடைக்கவில்லை என்பதில் கவலை தான். பார்ப்போம்.யாழ் எனும் கப்பலை எவ்வளவு தூரம் கொண்டு செல்லலாம் என.

கடல் கன்னி வெடிகள் வெடிக்காமல் இருந்தால் கப்பல் கரையை அடையும் மாலுமியின்ட கெட்டிதனத்தில தான் எல்லாம் இருக்கு நானும் அட்லீஸ்ட் ஒரு உதவி மாலுமியாக இருக்க ஆசைபடுகிறேன். :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா யாழின் ஒரு அழகான கூசா. இது ஒரு தாஜா. :lol:

Edited by nedukkalapoovan

அரட்டை அடிப்பவர்களுக்கு கிடைத்த காலம் குமார்சாமி ஜம்மு இருவருக்கும் கிடைத்த குருசந்திர ஜோகத்தை பாருங்கோ வசம்பர் சொன்ன கனாகாலத்தை தான் நானும் எதிர்பார்கிறேன் அது எப்பொழுது வரும் என்பது தான் என் கேள்வியும் தம்பி கவிதன் வாரும் மீண்டும்

அரட்டை அடிப்பவர்களுக்கு கிடைத்த காலம் குமார்சாமி ஜம்மு இருவருக்கும் கிடைத்த குருசந்திர ஜோகத்தை பாருங்கோ வசம்பர் சொன்ன கனாகாலத்தை தான் நானும் எதிர்பார்கிறேன் அது எப்பொழுது வரும் என்பது தான் என் கேள்வியும் தம்பி கவிதன் வாரும் மீண்டும்

சமீபத்தில்த் தான் இணைந்திருந்தாலும், புதிய மொந்தையில்(பாத்திரத்தில்) பழைய கள் போல, பழைய நினைவுகளையும் உங்களால் அசைபோட முடிவது ஆச்சரியம் தான்!! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நுனாவிலன் .................

தங்களிடம் ஒரு பணிவான கேள்வி ....................யாழ் களத்தில் ஏன்

"கருத்து படம்" இப் போதுவருவதில்லை ???????????

வணக்முடன் நிலாமதி.

  • தொடங்கியவர்

அனைவரினதும் கருத்துக்களிற்கு மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் குமாரசாமி அண்ணாவுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என்று நினைக்கின்றேன்.

கு.சாவின் ஆக்கங்களை படித்து சிரிப்பவர்களிள் நானும் ஒருவன்.....அதுசரி முரளி நானும் ஒரு கலைஞன் பாருங்கோ.... காரணம் சிட்னி கோசிப் எழுதுவதால் கீ ..கீ...கீ....கீ

ஓம் புத்துமாமா. நிச்சயமாக. நான் உங்கட சிட்னி கோசிப்பை தொடர்ந்து ஆர்வத்துடன் வாசிச்சு வாறன். நீங்கள் சுயமாக ஏதோ சிந்திச்சு சொல்லவேணும் எண்டு நினைக்கிறீங்களே, அது பெரிய விசயம். நான் உங்களினதும் ரசிகன் தான். குறிப்பாக முந்தி நீங்கள் அரட்டை அடிக்கும்போது சின்னச் சின்ன துணுக்குகளாக எழுதிற பகிடிகள வாசிக்கிறனான். இப்ப என்னமோ நீங்கள் முந்தி மாதிரி பகிடியா எழுதுறது இல்லை. கொஞ்சம் கடுமையாகீட்டீங்கள் போல இருக்கிது. உங்களுக்க்கு வீட்டில ஏதும் பிரச்சனனயோ தெரியாது. நீங்கள் 100வது சிட்னி கோசிப்பை யாழில் எழுதிமுடிக்கும் போது - சதம் அடிக்கும்போது நிச்சயம் உங்களைப்பற்றி ஏதாவது ஒன்றை யாழில் செய்வேன். :rolleyes: மேலும் யாழில விருதுகள் தந்து கெளரவிக்கப்படுவீர்கள் என்பதையும் தெரிவித்துகொள்கின்றேன். :rolleyes::unsure:

நன்றி!

எல்லாருக்கு ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) :D ..ஒ..ஒ அந்த கலைஞன் நம்ம கு.சா தாத்தாவோ அட அட...அவரை பற்றி சொல்ல வார்த்தைகள் முட்டுது..

நல்லவர்,

வல்லவர்,

பத்தும் தெரிந்தவர்,..(அட எல்லாரும் நாலும் தெரிந்தவர் எண்டு சொல்லுறவை அது தான் நான் கொஞ்சம் வித்தியாசமா :o )..

இப்படியே அவரின்ட பெருமைகளை அடுக்கி கொண்டே போகலாம்.. :D (என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்)..அட எண்ட தாத்தா என்று பொய் சொல்லல்ல நிசமா தான் சொல்லுறனப்பா..அப்படிபட்ட நம்ம கு.சா தாத்தாவை வாழ்த்த வார்த்தைகளை தேடுகிறேன்..(ஒருக்கா போய் தேடிட்டு வரட்டோ)... :o

அச்சோ நான் சும்மா பகிடிக்கு கோவித்து போடாதையுங்கோ என்ன தாத்தா..நம்ம குரு ஞானோதயம் வந்து யாராச்சையும் பாரட்டினா அது சரியா தான் இருக்கும்.. :D (அட குருவே கோவித்து போடாதையுங்கோ)..அந்த வகையில சரியான ஒரு ஆள தான் நம்ம குரு பாராட்டி இருக்கிறார்..

சொல்ல போனா யாழில ஒவ்வொருவரினது எழுத்துக்கள் ஒவ்வொரு வகையில் பிடிக்கும்..எண்டைக்கும் நகைசுவையாக யாழில் பிடித்த எழுத்து எண்டா கு.சா தாத்தா தான்..(அட எழுத வேண்டும் எண்டு போட்டு சொல்லல்ல நிசமாவே பிடிக்கும் அல்லோ).. :D

ம்ம்..காலையில் யாழை திறந்தவுடன் என்னை அறியாமலே என் கண்கள்..(கு.சா தாத்தாவின் எழுத்துகளை தேடும்)...அந்தளவு என்னை மிகவும் கொள்ளை கொண்ட ஒரு நல்ல மனிசன் :D ..முக்கியமா குரு குறிபிட்டது போல நாம் விடும் தவறுகளை கூட நகைசுவையுடன் மனதை புன்படுத்தாதவாறு பதில் அளிப்பார்...(அது அவரில் என்னை மிகவும் கொள்ளை கொண்ட விடயம்)..

அட இருந்து போட்டு நாம வம்புக்கு இழுக்கிறது ஆனா மனிசன் அசராம பதில் எழுதி போடும் பாருங்கோ :D ..நான் யாழில் இணைந்த காலத்தில் இருந்து இன்று வரை எல்லாரையும் உற்சாகபடுத்தி கொண்டிருக்கும் கு.சா தாத்தா நிஜமாகவே ஒர் உன்னத கலைஞன் தான்..

அவரின் இரு வரி கருத்தில் உள்ள ஆழமும்,அழகும்..(கள்ளு அருந்துவதால் தான் வந்ததோ எண்டு பல தடவை யோசித்திருக்கிறன்)..அப்படியா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.