Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழும் நானும் (பகுதி 12: குளக்காட்டான் அண்ணா)

Featured Replies

  • தொடங்கியவர்

தூயா,

என்னை மறந்து போனியள்..! :D:D:D

இல்லையே :lol::D:lol::unsure::lol:

  • Replies 235
  • Views 28.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் அதிகம் மதிக்கும் கள உறவுகளில் நீங்களும் ஒருவர். :lol:

அந்த மதிப்பை தொடர்ந்து காப்பாற்ற முயற்சிக்கிறேன். :unsure:

தூயா, நீங்கள் அடிக்கடி உங்கள் லிஸ்ட்டை edit செய்வது போல் தோன்றுகிறது?? :-)

  • தொடங்கியவர்

பகுதி 3

sunrise.jpg

இணைந்தது எப்படி?

ஆரம்ப பகுதியாக, நான் யாழை பற்றி எப்படி அறிந்தேன். எப்படி இணைந்தேன் என்பதை எழுத விரும்புகின்றேன். ஒரு தடவை தாயகத்திற்கு மாமாக்களை பார்ப்பதற்கான சென்றிருந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் என வன்னியில் பல இடங்களுக்கு சென்று கொண்டிருந்த போது, ஒரு மாமா வீட்டில் யாழை பற்றி விவாதித்தார்கள். நான் என் பாட்டில் பக்கத்திலிருக்கும் நெல்லிக்காய் மரத்தில் யாரை கேட்டு நெல்லிக்காய் பறிக்கலாம் என தீவிரமான சிந்தனை செய்து கொண்டிருந்தேன். இடையில் என்னை பார்த்து எனக்கு யாழை தெரியுமா என் கேட்டார்கள். நான் மனசுக்குள்ளே "ஏன் இப்படி கரைச்சல் குடுக்கிறாங்கள், நானே நெல்லிக்காய் எப்படி பறிக்கலாம் என்று யோசிச்சு கொண்டிருக்கிறன்" எனவும் வெளியே சிரித்துக்கொண்டு இல்லை எனவும் பணிவா தலையாட்டி வைத்தேன். அப்பொழுதே ஒரு பேப்பரில் யாழில் இணைய முகவரியை தந்து, வீடு திரும்பியதும் யாழை பார்க்க சொன்னார்கள். நானும் ஒஸ்திரேலியா வந்ததும் யாழுக்கு வந்தேன். பார்த்தால் அனைத்தும் தமிழில். எனக்கு தலைசுத்தாத குறை தான். அந்நாட்களில் எனக்கு இப்போது தெரியும் தமிழ் தெரிந்திருக்கவில்லை. உடனே எனக்கு யாழ் சுவாரசியம் என தோன்றவில்லை. காரணம் மொழியறிவு எனக்கு இல்லாமல் இருந்தது தான். ஆனாலும் வாரத்திற்கு ஒரு முறை வந்து படிக்க ஆரம்பித்தேன். நேர்வேயில் இருக்கும் அத்தானும் யாழில் இருப்பதால், இருவரும் யாழ் பற்றி பேசுவோம். அப்படித்தான் யாழில் என் பயணம் ஆரம்பமாகியது.

என் அறிமுகம்

என் அறிமுகப்பதிவு: பார்க்க இதிலேயே அமுக்கவும் : தூயாவின் வணக்கம்

என் அறிமுகப்பதிவிலேயே களத்து புலிகள் பலரை பார்க்கலாம். முதன் முதலில் என்னை வரவேற்றது கானாபிரபா அண்ணா தான். (நான் இணைவதற்கு 5 நாட்கள் முதல் தான் கானாஸ் இணைந்தார்) ஆனால் நானும் வரும் போது சும்மா வரலையாக்கும். மோகன் அண்ணாவுக்கு என்னை பற்றிய கொஞ்சமா சொல்லி, அவரின் வாழ்த்தோடு தான் முதல் பதிவை எழுதினேன். (களத்தின் பிரமாண்டத்தை பார்த்து ஒரு சிறு தயக்கம் தான்) அப்பதிவில் பார்த்திங்கள் என்றால் இளைஞன் அண்ணா, மதன் அண்ணா என நிர்வாகத்தில் இருந்தும் வரவேற்றிருந்தனர். முதலில் களத்தில் பங்கெடுத்து வந்தார்கள். இப்போது இல்லை என்பது கஸ்டமான விடயம் தான். இதில் சண்முகி அக்கா, இளைஞன் அண்ணா எல்லாம் 2003 இல் இணைந்தவர்கள். இன்றோடு பார்த்தால் 5 வருடங்கள் அவர்கள் யாழோடு பயணித்துள்ளார்கள்.

அரவணைப்பு

யாழைப்பற்றி அறிந்து, நானும் இணைந்தாயிற்று. இதில் எனக்கு நன்மை தான். ஆனால் இங்கிருந்தவர்களுக்கு நன்மையாக இருந்திருக்கும் என எனக்கு தோன்றவில்லை. தமிழில் எத்தனையோ பிழைகள், எழுத்துப்பிழைகள். உடனுக்குடன் சுட்டிக்காட்டினார்கள். அதனால் நானும் பலவற்றை திருத்திக்கொண்டேன். தவிர, வந்த புதிதில் கொஞ்சம் விளையாட்டுத்தனமாகவே என் பதிவுகளும், பதில்களும் இருக்கும். அவற்றை விளையாட்டாகவே பார்த்தார்கள். அதனால் நான் தப்பித்தேன். காரணம் இன்று அவற்றை படிக்கும் போது "தனிமனித தாக்குதல்" போன்றே எனக்கு தோன்றுகின்றது. ஆனால் அதை தாக்குதலாக எடுக்காமல், திருத்தியுள்ளனர். களத்தில் சொல்லி என்னை வருத்தாமல், பல தடவைகள் தனிமடலில் விளக்கிக்கூறியுள்ளனர். தற்போதைய சூழலோடு ஒப்பிடுகையில் அந்த நேரத்தில் உறுப்பினர்கள் குறைவாக இருந்ததால், இப்படியான அரவணைப்புகள் அதிகமாக இருந்ததோ என தோன்றுகின்றது. எப்படியாகினும், நாமும் புதிதாக இணையும் உறவுகளை வரவேற்று, உதவி செய்யணும் என்று மட்டும் முடிவு எடுத்துள்ளேன். ஆனால் எனக்கு அடிக்கடி குருவிபபா சொல்றது நினைவுக்கு வரும். யாரோடு என்றாலும் அளவாக பழகணும் என ஒரு முறை சொல்லியிருக்கார். ஆக ரொம்ப நெருங்காமலும், ரொம்ப தூரமா இருக்காமலும் இருப்பது தான் நல்லது என நினைக்கின்றேன்.

இந்த ஐந்து வருடத்தில் யாழ் தந்த உறவுகளை பற்றியும், அவர்கள் எந்த அளவு என்னுள் பாதிப்புகளை ஏற்படுத்தினர் என அடுத்த பகுதியில் எழுத நினைக்கின்றேன்...

ஒவ்வொருத்தரிடமும்ம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கு என்பதை ஒத்துக்கொண்டேயாகணும். கற்றவை தொடரும்...

Edited by தூயா

தூயா நினைவு மீட்டல் நன்றாக இருகிறது. தொடருங்கள். களத்தில் இணைந்திருந்த பலர் இப்போது வாசகர்களாக எப்பவாவது இருந்திட்டு கருத்தெழுதுவதோட நிறுத்திக்கொள்கிறார்கள். அப்போது இருந்த உறவுகளுக்கிடையே ஏதோ ஒரு வகையில் நெருக்கம் இருந்தது. ஒவ்வொருவரது தவறுகளையும் சுட்டிக்கட்டும் போது அதை புரிந்துணர்வுடன் ஏற்று கொண்டார்கள் என்று நினைக்கிறேன். யாழ் நல்ல நண்பர்களை தந்திருக்கிறது. ஆனால் இப்போது முன்னர் போல அதிகம் யாழுடன் இணைந்திருக்க முடியாதிருக்கிறது. கிடைத்த நண்பர்களுடனும் அதிகம் பேச முடியாதிருக்கிறது. ஆனால் கிடைத்த நட்பு வட்டத்தை இழக்காது பேண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. உங்கள் ஆக்கத்தை தொடருங்கள். ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் டுயா பழையபடி ஆட்டேகிராப்பா??ஆரம்பத்தில் சியாம் எண்ட பெயரிலை வந்து பிறகு சாத்திரியாய் மாறினது நான் தானெண்டு யாழிலையே சொல்லிட்டன். ஆனாலும் சாத்திரியை விட யாழிலை பலபேருக்கு பழைய சியாமைத்தான் பிடிக்கும்.ஏணெண்டால் சாத்திரி ஒரு துன்பம் பிடிச்ச ஆள் எண்டு எல்லாரும் சொல்லினம். :lol:

  • தொடங்கியவர்

ஒய் டுயா பழையபடி ஆட்டேகிராப்பா??ஆரம்பத்தில் சியாம் எண்ட பெயரிலை வந்து பிறகு சாத்திரியாய் மாறினது நான் தானெண்டு யாழிலையே சொல்லிட்டன். ஆனாலும் சாத்திரியை விட யாழிலை பலபேருக்கு பழைய சியாமைத்தான் பிடிக்கும்.ஏணெண்டால் சாத்திரி ஒரு துன்பம் பிடிச்ச ஆள் எண்டு எல்லாரும் சொல்லினம். :lol:

புலம்பலும், நினைவுமீட்டலும் இருந்தா தான் தூயா என ஒத்துக்கொள்கின்றார்கள் ;)

வாழ்த்துக்கள் டூயா பிள்ளை தொடருங்கோ

உங்கள்

அறிமுகப்பதிவு பார்த்தேன் அடியேனின் பழைய பதிவும் உள்ளது ... பழைய ஞாபகம் வந்தது

நன்றிகள்

Edited by sinnappu

  • கருத்துக்கள உறவுகள்

தூயாவுக்கு ஞாபக சக்தி அதிகமாகவே உள்ளது.

வணக்கம் தங்கச்சி..உங்கள் யாழ் அனுபவ பயணத்தில் ஒரு மூலையில் இருந்து நானும் பிரயாணிக்கிறேன் ஆவலுடன் :o ..பயணத்தில் "சடின் பிரேக்" வேண்டாம் சொல்லிட்டன்.. :o

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அந்த மதிப்பை தொடர்ந்து காப்பாற்ற முயற்சிக்கிறேன். :)

:lol: :lol:

தூயா, நீங்கள் அடிக்கடி உங்கள் லிஸ்ட்டை edit செய்வது போல் தோன்றுகிறது?? :-)

களசகோதரன் ஒருவர் சில உறவுகளை நான் தவறவிட்டிருப்பதாக கூறி, மாற்ற சொன்னார். அதன் விளைவு தான் :lol:

ஆனால் கிடைத்த நட்பு வட்டத்தை இழக்காது பேண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இதற்காக தான் இந்த பதிவே குளம்ஸ்.. :)

தூயா

ஆரம்பமே அசத்தலாகவுள்ளது. தொடர்ந்து அசத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அட நானும் இங்க இருக்கிறேன்.மிக்க மகிழ்ச்சி :unsure: தூயா உங்ஙள் அறிமுக பதிவைப்பார்த்தேன்.அப்பவே அது தான் வந்த உடனயே கலக்கின நீங்கள் இப்ப சொல்லவா வேண்டும்.உங்கள் சகல பணிகளும் யாழில் தொடர எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கறுப்பியையும் நினைவில் வைத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க

அழகான நினைவு மீட்டல் தூயா....

எவ்வளவு இனிய நாட்கள் அவை

ஆயிரம் உறவுகளை அள்ளி கொடுத்த யாழ் வாழ்க வாழ்கவே !!!!

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 4 எப்பொழுது வரும் தூயா?

  • தொடங்கியவர்

இன்னும் சில மணி நேரத்தில் கந்தப்பு :D

ஏணெண்டால் சாத்திரி ஒரு துன்பம் பிடிச்ச ஆள் எண்டு எல்லாரும் சொல்லினம். :D

ஆனால் உங்கட பகிடிகளைப்பாத்தா அப்பிடி தெரியேல்ல..

தூயா தொடருங்கோ! புலத்தில பிறந்து இப்படி தமிழ் எழுதுவதென்பது மிகப்பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன்.

பகுதி 4 எப்பொழுது வரும் தூயா?

இன்னும் சில மணி நேரத்தில் கந்தப்பு :unsure:

:unsure::unsure:என்ன தூயாவின் மணிக்கூடு நிண்டிட்டுது போல??? :unsure::unsure:

தூயா நலமா...? யாழைப்பற்றிய அறிமுகம் எல்லாம் அழகா எழுதிருக்குறீங்க.....அடுத்த பகுதியையும் இணையுங்க தூயா...... வாசிக்க ஆவலாயிருக்கு ...! :unsure:

  • தொடங்கியவர்

பகுதி 4

முக்கிய குறிப்பு: இங்கு நான் எழுதவிருப்பது அனைத்தும் நான் அவதானித்த விடயங்கள் / அவர்களுடன் களத்தில் கதைத்த/அறிந்த விடயங்கள் தான். உரியவர்கள் தவறான விபரங்கள் எழுதியிருந்தால், உடன் தனிமடலில் தொடர்பு கொண்டு என்னை திட்டலாம். புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி உறவுகளே. சில உறவுகளை பற்றி அதிகமும், சிலரை பற்றி குறிப்பிட்ட சில விடயங்களை எழுதவுள்ளேன். அதற்கு காரணம் எனக்கு எந்த அளவு தெரியுமோ, அதை எழுத நினைப்பது தான். வேறு எந்த பாகுபாடும் இல்லை.

சென்ற பகுதியின் முடிவில் கள உறவுகளை பற்றி எழுத எண்ணுகின்றேன் என சொல்லியிருந்தேன். அதன்படி எழுதலாம் என எண்ணும் போது தான் யாரில் இருந்து ஆரம்பிப்பது என்ற பெரும் குளப்பம் எழுந்தது. தற்போதைய யாழ்களம் 10 வருடங்கள் கூட வரும் உறுப்பினர்களையும், புதிய உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. பழையவர்களில் இருந்து ஆரம்பிப்பதோ, புதியவர்களில் இருந்து ஆரம்பிப்பதோ நன்றாக இருக்காதே என என்னும் போது தான் யாழ்கள அப்புக்களின் நினைவு வந்தது. அவர்களில் ஆரம்பிக்கலாமே என தோன்றியதை செயல்படுத்தியுள்ளேன்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சி*5 (சின்னப்பு)

143848752842e0e961dfc0b.jpg

அப்புக்கள் இல்லாத யாழ்களம் எந்த காலத்திலும் இருந்ததில்லை. அதிலும் சின்னப்பு யாழ்களத்தில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்து வைத்துள்ளார் என்பதை எவராலும் மறுக்க முடியாது. சின்னப்புவின் கருத்துக்களை பார்த்து களத்தில் இணைந்தவர்கள் பலர் இங்குள்ளனர். சின்னப்புவின் அறிமுகமே கலக்கலான அறிமுகம். வந்த உடனே தன்னை எப்படி அழகாக யாழோடு தன்னை இணைத்துக்கொண்டார் என்று பாருங்களேன்: "சின்னப்பு அறிமுகம்". அதன் பின்னர் 100 கருத்துக்களை ஒரே நாளில் எழுதிவிட்டு அதற்கும் பதிவு போட்ட ஒரே அப்பு, எங்கட சின்னப்பு தான். [ சின்னப்புவின் 100 பதிவு ]

* இணைந்தது: 20-November 04

* சின்னப்பு அதிகம் எழுதிய பக்கங்கள்: வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்,

சமையல், அரட்டைஅரங்கம், பாட்டுக்கு பாட்டு

* குடும்பம்: மனைவி: சின்னாச்சி ; மைத்துனன்: டக்கிளஸ்

* நண்பர்: ஒட்டகப்பால் "முகத்தார்"

* ஒருவரை ஒருவர் மனதார நாங்கள் இன்று அனைத்திற்கும் பாராட்டுகின்றோம். அந்த கலாச்சாரத்தை ஆரம்பித்தது எங்க சின்னப்பு தான். 100 ஆவது பதிவாகட்டும், 1000 பதிவாகட்டும், சின்னப்புவின் வாழ்த்து இல்லாமலா எனும் நிலை இன்றிலிருந்து 3 வருடங்களுக்கு முன்னர் இருந்தது. ஒருவரை பாராட்டுவதற்கும், வாழ்த்துவதற்கும் நல்ல

மனது வேண்டும். எந்த வித பந்தாவோ, பாகுபாடோ இல்லாமால் வாழ்த்த சின்னப்புவிடம் இருந்து தான் படிக்க வேண்டும். அதிலும் அக்கியை வாழ்த்தி ஒரு கவிதை போட்டார் பாருங்கள். எங்கட குருவியையே கலவரப்படுத்திட்டார். "தமிழினி பாராட்டு கவிதை"

* வாழ்த்துவதோடு நில்லாமல் ஒருவர் சிலநாட்கள் களத்திற்கு வரவில்லை என்றால் உடனே தேடும் பழக்கம் சின்னப்புக்கு உண்டு. அதில் தோன்றியது தான் எங்கட "காணவில்லை" பகுதி. 2006 ஆம் ஆண்டு அவர் ஆரம்பித்த இந்த பதிவு இன்று 1300 பதில்களோடு வளர்ந்து நிற்கின்றது.

* யாழில் இன்று நான் இத்தனை சமையல் குறிப்பு எழுதுகின்றேன் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் சின்னப்பு தான். நான் யாழில் இணைந்த புதிதில் சின்னப்பு தான் அதிக சமையல் குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்தார். அதில் மிகவும் சுவாரசியமான சில இணைப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்:

* யாழில் முதன் முதலாக "ரோயல் பமிலி" என ஒரு குடும்பத்தை உருவாக்கிய பெருமையும் சின்னப்புவையே சேரும். அவர்களுக்கென ஒரு இணையதளத்தையும் வடிவமைத்துள்ளார். பார்வையிட விரும்புபவர்களுக்காக: ரோயல் பமிலி

* சின்னப்புவுக்கென இருக்கும் தனித்தன்மைகளில் ஒன்று நகைச்சுவை. இதை அவரில் ஒவ்வொரு பதிவிலும், மறுமொழிகளிலும் இருந்து நீங்கள் பார்க்கலாம். அடுத்த நல்ல குணம் அவரின் தைரியம் தான். நிர்வாகத்தை கேள்வி கேட்பதில் சின்னப்புவை மிஞ்சமுடியாது. அதை நான் சொல்வதை விட, நீங்களே பாருங்கள்: "ஓய் மோகன் என்ன லொள்ளா"

* சின்னப்பு என்றாலே மறக்கமுடியாத பெயர் "இராவணன்". எங்களின் மதிப்புக்குரிய ஒரு மட்டுனத்துனர். சின்னப்பு எழுதுவதும், இராவணன் அண்ணா வெட்டுவதும் யாழில் ஓர் அங்கமாக மாறும் அளவிற்கு இருந்தது. சின்னப்புவோ "வெட்டுறத வெட்டும்மா, நான் எழுதிட்டு இருப்பேன்" என்றும், இராவணன் அண்ணா "எழுதறத எழுது கண்ணா, நானும்

வெட்டிட்டே இருப்பேன்" என்றும் இருந்தார்கள். ஆனால் ஒருவரை ஒரு தாக்கியோ, அல்லது இதை விவாதமாக எடுத்ததோ இல்லை. சின்னப்புவை போல ஒருவரை காண்பது நிச்சயம் இலகுவல்ல.

* சின்னப்புவை எதற்காக நான் சி*5 என் அழைப்பேன் என தெரிந்துகொள்ள இங்கே போய்பாருங்கள். "பெயர்மாற்றம்". அதில் இராவணன் அண்ணாவின் வெட்டையும் பார்க்க தவறாதீர்கள். கிகிகிகிகி

* சின்னப்புவின் 1000 ஆவது பதிவின் கொண்டாட்டம். எங்கட ஆட்கள் எப்படியெல்லாம் கள்ளையும்,மப்பையும் வைத்து அப்புவை வாழ்த்தியுள்ளனர் என்றும் பாருங்கள். ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொரு வைரமுத்து ஒளிந்திருக்காங்கப்பா! "சின்னப்புவின் 1000 பதிவு"

* மேலே நான் குறிப்பிட்டுள்ள சில சொற்கள் யாழில் பிரபலமாக காரணமும் சின்னப்பு தான். அதே போல அந்த சொற்கள் யாழில் தடைசெய்யப்பட காரணமும் சின்னப்பு தான். ஏன் என்றால் நாங்க அனைவரும் அச்சொற்களை சொல்லி சொல்லி, நிர்வாகத்தை கடுப்பேற்றியல்லவா தடை செய்ய வைத்தோம்.

தற்போது சின்னப்பு அதிகம் களத்தில் கருத்துக்கள் எழுதாதது எங்களின் துரதிஸ்டமே. எப்போதோ சின்னப்பு எழுதிய பல கருத்துக்கள் இன்றும் வாய்விட்டு சிரிக்க வைக்க கூடியவை. சின்னப்பு தொடர்ந்து எங்களுடன் யாழில் இருக்க வேண்டும் என இந்த தருணத்தில் கேட்டுகொள்கின்றேன். எங்களில் பலரை சிரிக்க வைத்து; யாழில் எங்கள் ஒவ்வொருத்தரையும் வாழ்த்தி பாராட்டிய சின்னப்புவை இந்த பகுதியில் அனைவரும் வாழ்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

சின்னப்புவிற்கான குறிப்பு: யாழில் எங்களுடன் தொடர்ந்திருங்கள்...வழமை போல் எங்கள் சி*5 ஆகுங்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பி.கு: அப்புக்கள் அனைவரையும் ஒரே பகுதியில் எழுத வேண்டும் என்றே ஆரம்பித்தேன். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பல குணாதிசயங்கள். அவர்களை பற்றி எழுத அதிகம் உள்ளது. அவர்களுக்கான ஒரு நேரமாக இதை கொடுக்க விரும்புவாதால் சின்னப்புவை பற்றி மட்டும் இப்பகுதியில் எழுதியுள்ளேன். நான் புதிதாக இணைந்திருக்கும் வேலையும் சற்றே நேரத்தை சாப்பிடுவதும் அடுத்த காரணம். நேரம் கிடைக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பற்றி எழுதுவேன். நன்றி

Edited by தூயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் சின்னாவை பிடிக்காதவர் யார் இங்கு இருக்கின்றார்கள்.சின்னாவின் இரசிகர்களில் நானும் ஒருவன். :D

எடியே சின்னா உனக்கு உடம்பு முழுக்க மச்சமடி :D

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

சின்னா அப்பு ,நகைச்சுவையான மனிதன் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை. பிரத்தியேகமாக கு. மா அண்ணாவுடன் அடிக்கும் அரட்டை சொல்லி வேலையில்லை.நன்றி தூயா.,நினைவுகளை பகிர்ந்தமைக்கு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

சின்னப்புவா கொக்கா?...............கிகீகிகீ :D:D:D:D

  • தொடங்கியவர்

:D:Dஎன்ன தூயாவின் மணிக்கூடு நிண்டிட்டுது போல??? :D:D

கிகிகிகி வேலைக்கு திடீரென போய்விட்டதால் மணிக்கூடு நின்றுவிட்டது வசம்ஸ் ;)

தூயா நலமா...? யாழைப்பற்றிய அறிமுகம் எல்லாம் அழகா எழுதிருக்குறீங்க.....அடுத்த பகுதியையும் இணையுங்க தூயா...... வாசிக்க ஆவலாயிருக்கு ...! :)

நலம் அனிதா..நீங்க?

உண்மைதான் சின்னாவை பிடிக்காதவர் யார் இங்கு இருக்கின்றார்கள்.சின்னாவின் இரசிகர்களில் நானும் ஒருவன். :)

எடியே சின்னா உனக்கு உடம்பு முழுக்க மச்சமடி :D

எடியேவா? எடேய் தானே? ;)

சின்னா அப்பு ,நகைச்சுவையான மனிதன் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை. பிரத்தியேகமாக கு. மா அண்ணாவுடன் அடிக்கும் அரட்டை சொல்லி வேலையில்லை.நன்றி தூயா.,நினைவுகளை பகிர்ந்தமைக்கு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

அந்த நாட்களில் சின்னா முகத்தாருடன் அடிக்கும் அரட்டைகளும் அதே ரகம் தான்...சிரித்து சிரித்து எங்களுக்கு தான் வயிறு புண்ணாகும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.