Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார் படையினர் வசம். புலிகள் விலகல். - அரசு

Featured Replies

ஒரு போராளியின் வித்துடலைக் கையளிப்பதற்கே அரசு எத்தனையோ நிபந்தனைகளை விதிக்கும். இப்போது 25 போராளிகள் என்றால் எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறதோ யாருக்குத் தெரியும். இப்படி ஒரு முடிவும் இல்லாத நிலையில் எப்படி அறிக்கை விடமுடியும். அதோடு, நாங்கள் நினைத்தவுடன் அறிக்கை விடுவதற்கு இளந்திரையன் அண்ணா எங்களைப் போல் கதிரையிலை இருந்துகொண்டு அரட்டையா அடிக்கிறார்? அல்லது அவர் தானாக ஒரு அறிக்கை விடமுடியுமா? எமது செயற்பாடுகள், அறிக்கைகள் என அனைத்தும் மிகவும் அலசி, ஆராயப்பட்டே செயற்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் தயங்குகிறார்கள் எனில், ஏதோ சிக்கல் இருக்கிறது என்று நமக்கு விளங்கவேண்டும். இதை விளங்கிக் கொள்ளாமல் ஒருசிலர், தாங்கள் விளக்கமில்லாமல் இருப்பது மட்டுமின்றி மற்றவர்களையும் குழப்புகிறார்கள். எமது அமைப்பு மீது முழு நம்பிக்கைகள் வைத்திருப்பவர்கள் இவ்வாறு கேள்விகள் எழுப்பமாட்டார்கள்.

  • Replies 53
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ்

சொல்லவாறதெல்லாம் பிழையும் மில்லை... அதுக்காக அதை கேள்விகேட்பதும் தவறில்லை.

தமிழ் மக்களின் நிலைதொடர்பாக அறிக்கை வராதவிடத்து.... மற்றவற்ற அறிகைகளை அவர் பிரசுரிக்கிறார்.

அந்த செய்திகளுக்கு அவர் பொறுப்பாக முடியாது... ஆனாலும் அந்த செய்தியை நியாப்படுத்துவது கொஞ்சம் நெருகல்தான்.

நியாப்படுத்துவது அந்த செய்திகளையா அல்லது அதை இங்கு மீழ் பிரசுரித்தமையா? இதுதான் குழப்பமா இருக்கு.

அதுக்காக எந்த செய்தியையும் உதாசினம் செய்யாது இருப்பது நெடுக்கரின் தனி அழகு.

***

நான் எங்கேயும் போகவில்லை தினமும் இங்கு வந்து வாசிச்சுகொன்டுதான் இருக்கிறன். தேவைபட்டால் மட்டுமே வாய்திறக்கிறேன்.

நெடுக்கால செய்தியை மீள்ப்ரசுரித்ததிலும் ஏன் மொழிபெயர்ப்பு செய்ததிலும் எனக்கு கோவம் இல்லை.

ஆனா போராளியின் உடல்கள் புலிகள் பொறுப்பேற்க்காம உதாசீனப்படுத்தீனம் என்று சொல்லுறது அபாண்டம் இல்லையா?

செய்தி சொல்லுவதற்க்கும் இப்படி அபாண்டம் சுமத்துவதர்க்கும் வேறுபாடில்லையா? ஏன் இப்படி இவர் செய்யணும்?

அடுத்து இளம்திரையன் என்னா தானாகவா சொன்னார்? தலைவர் சொல்ல சொன்னதைதானே அவர் அறிக்கையா விட்டார்? அப்ப இவர் இளம்திரையன் மேலே எறியும் கற்கள் எல்லம் தலைவரை குறிவைத்துதானே?

Edited by இணையவன்
*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

இலுப்பைக்கடவையில் புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்கம்

[ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 06:54 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

மன்னார் மாவட்டத்தில் உள்ள இலுப்பைக்கடவை கோட்டத்தில் நேற்று புலிகளின் குரலின் வானொலி மன்றத்தின் முத்தமிழ் கலையரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வு வெள்ளாங்குளம் பாடசாலையில் நேற்று சனிக்கிழமை இரவு 7:30 மணியளவில் இலுப்பைக்கடவை கோட்ட வானொலி மன்றத்தலைவர் கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பொதுச்சுடரினை இலுப்பைக்கடவை கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயா ஏற்றினார்.

்சொன்னதைச் செய்து இழப்புக்களை ஏற்படுத்துவதை விட,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சூழ்நிலைக்கேற்ப செயல்படுவதே புத்திசாலித்தனம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு போராளியின் வித்துடலைக் கையளிப்பதற்கே அரசு எத்தனையோ நிபந்தனைகளை விதிக்கும். இப்போது 25 போராளிகள் என்றால் எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறதோ யாருக்குத் தெரியும். இப்படி ஒரு முடிவும் இல்லாத நிலையில் எப்படி அறிக்கை விடமுடியும். அதோடு, நாங்கள் நினைத்தவுடன் அறிக்கை விடுவதற்கு இளந்திரையன் அண்ணா எங்களைப் போல் கதிரையிலை இருந்துகொண்டு அரட்டையா அடிக்கிறார்? அல்லது அவர் தானாக ஒரு அறிக்கை விடமுடியுமா? எமது செயற்பாடுகள், அறிக்கைகள் என அனைத்தும் மிகவும் அலசி, ஆராயப்பட்டே செயற்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் தயங்குகிறார்கள் எனில், ஏதோ சிக்கல் இருக்கிறது என்று நமக்கு விளங்கவேண்டும். இதை விளங்கிக் கொள்ளாமல் ஒருசிலர், தாங்கள் விளக்கமில்லாமல் இருப்பது மட்டுமின்றி மற்றவர்களையும் குழப்புகிறார்கள். எமது அமைப்பு மீது முழு நம்பிக்கைகள் வைத்திருப்பவர்கள் இவ்வாறு கேள்விகள் எழுப்பமாட்டார்கள்.

உண்மை :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிராட்டிக்குளம் திடீர் மோதலில் வீரகாவியமான வேங்கைகளின் உடலங்கள் இன்று (29-06-2008) பிற்பகல் 2.30 அளவில் வவுனியாவில் வைத்து ஐ சி ஆர் சியால் பொறுப்பேற்கப்பட்டு வன்னிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதைக் கூட அவங்கட தளத்தில தான் அறிய வேண்டி இருக்குது.

இழப்புக்களைக் கண்ட உடன மாவீரர்களை மறந்திடுவீங்களோ. புதினம் சங்கதி போன்றவை மூச்சுக் கூட விடல்லை..! இதுதான் மாவீரர்களுக்கு செய்யும் மரியாதையா..??!

கொடிய ஆக்கிரமிப்பாளனை எதிர்த்து வீர காவியமான மாவீரப் புதல்வர்களுக்கு வீர வணக்கங்கள். :D

20080629_HOICRC1.jpg

defence.lk

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

இந்த இருவரது கருத்துக்களையும் நீண்டநாளாக வாசித்துவருபவன் என்றரீதியில்

இவர்களது உணர்வுகளை நான் மதிக்கிறேன்

அதேநேரம் சிலவிடயங்களில் முரண்பட்டால் சுட்டிக்காட்டுவேன்.....

எல்லோரும் பொறுமையாக இருக்கவேண்டும் என்பதே என்வேண்டுகோள்???

ஆனால் எல்லோரையும் உடன்பட வைக்க முடியாது அல்லவா???

அவர்களுக்கு சில சந்தேகங்கள் உண்டு???

ஆனால் அதனை என்னால் தீர்க்கமுடியவில்லை??

எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை......

காலம்தான் பதில் சொல்லவேண்டும்............

எல்லா விடயங்களையும் உங்களுக்கு அறிவித்து விட்டுத் தான் செய்ய வேண்டும் என்ற தேவையில்லையே? உங்களுக்கு ஏன் சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் எத்தனை வீதம் உரித்துடையவர்.

போரளிகளின் உடல்களை அவர்கள் வாங்கவில்லை என்றால் நீங்கள் வாங்கி அடக்கம் செய்யப் போகின்றீர்களா?

எந்தக் காலத்திலும் அவர்கள் இழப்புக்களை மறைத்ததில்லை. இந்த இறுக்கமான சூழ்நிலையிலும் சென்ற மாதம் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கையை வெளியிட்டிருந்தார்கள். அதற்கு அவசியமே இல்லையே...

மீண்டும் சொல்கின்றேன். உங்களுக்கு என்ன செய்கின்றோம் என்று பற்றி அறிவிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. அதைக் கேட்கின்ற தகுதி உங்களுக்கும் கிடையாது..

அவர் செய்தியை போடுகிறார்.. இதில் உண்மை பொய் சொல்ல வேண்டியவர்கள் புலிகள்.. அவர்கள் சில பல காரணங்களுக்காக பதிலளிக்காது விடலாம்.. ஆனால் போராட்டத்தைப்பற்றி கேட்க உரிமை கிடையாது என்று சொன்னால் அது சர்வாதிகாரம்.. இது மக்களுக்கான போராட்டம் என்றால் அதனோடு ஏதோவிததத்தில் தொடர்புடையவர்கள் கெட்கத்தான் வேணும்.. அதை உரிமை கிடையாது அது இது என்று சொல்ல பொன்னையரே.. தமிழீழம் கிடைத்து நீங்கள் ஒரு அதிகாரமுள்ள பதவியில் அமர்ந்தால் அவ்வளவுதான்.. அங்கே சுதந்திரம் கிடையாது.. மீண்டும் ஒரு சுதந்திரத்திற்காக போராடவேண்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

கொடிய ஆக்கிரமிப்பாளனை எதிர்த்து வீர காவியமான மாவீரப் புதல்வர்களுக்கு வீர வணக்கங்கள். :D

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

83,84,85 களில் பொன்னையா அண்ணரை போன்றவர்களின் கருத்துக்களினால்த்தான் புலம்பெயர்நாடுகளில் பாரிய எதிர்விளைவுகளை நோக்க வேண்டியிருந்தது.அது இன்றும் நிலைத்து நிற்கின்றது.இங்கு நான் பொன்னையாஅண்ணர் போன்றவர்களுக்கு சொல்ல விரும்புவதெனில் "நாங்கள் நேற்று பெய்த மழைக்கு இன்று முழைத்த காளான்கள்" அல்ல எங்கள் உணர்வு உறவு உள்ளம் உயிர் கனவு எல்லாமே தமிழீழந்தான் :D

யூத மக்களிற்கு 2 ஆம் உலகமா யுத்தம் இஸ்ரேலை அமைப்பதற்குரிய சந்தர்ப்பங்களை வழங்கியது போல்.

2010 பின்னர் மந்தமாகவிருக்கும் உலக பொருளாதார சூழல் தரும் சந்தர்ப்பங்கள் தமிழீழம் அமைப்பதற்கு உதவுமா?

யூத மக்களிற்கு 2 ஆம் உலகமா யுத்தம் இஸ்ரேலை அமைப்பதற்குரிய சந்தர்ப்பங்களை வழங்கியது போல்.

2010 பின்னர் மந்தமாகவிருக்கும் உலக பொருளாதார சூழல் தரும் சந்தர்ப்பங்கள் தமிழீழம் அமைப்பதற்கு உதவுமா?

அண்ணை வணக்கம் நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கடை பதிவைப் பார்க்கிறதிலை மகிழ்ச்சி. ஆனா அண்ணை வேறை எங்கையோ எழுத வேண்டிய கருத்தை இங்கை எழுதிப் போட்டீங்கள் எண்டு நினைக்கிறன். மன்னார் படையினர் வசம் எண்ட தலைப்பில்தான் இங்கே கருத்துக்கள்(கன்றாவிகளும்) வைக்கப்படுகின்றன. அதுதான் கேட்டன்.

இத்தோடு மன்னார் இராணுவ நடவடிக்கைகள் முற்று பெறுகின்றன. ஆதரவுக்கு நண்றி.

  • கருத்துக்கள உறவுகள்

:) மன்னார் இலுப்பைக்கடவையில் புலிகளின் குரல் முத்தமிழ் கலையரங்கம் நடந்திருக்கிறது. இதில் பெருமளவு மக்களும் கலந்து கொண்டுள்ளனர். அப்படியிருக்கும்போது மன்னார் மாவட்டத்தைத் தமது பூரண கட்டுப்பாடில் கொண்டுவந்ததாக ராணுவம் கூறுவதை என்னவென்று சொல்ல ?

சிங்களச்சனத்துக்கு இலுப்பக்கடவை எங்கிருக்கிறது என்று யாரும் சொல்லவா போகிறார்கள் ?

//மன்னார் இலுப்பைக்கடவையில் புலிகளின் குரல் முத்தமிழ் கலையரங்கம் நடந்திருக்கிறது. இதில் பெருமளவு மக்களும் கலந்து கொண்டுள்ளனர். அப்படியிருக்கும்போது மன்னார் மாவட்டத்தைத் தமது பூரண கட்டுப்பாடில் கொண்டுவந்ததாக ராணுவம் கூறுவதை என்னவென்று சொல்ல ?

சிங்களச்சனத்துக்கு இலுப்பக்கடவை எங்கிருக்கிறது என்று யாரும் சொல்லவா போகிறார்கள் ? //

ரகுநாதன் அண்ணா சொல்வது சிந்திக்க வைக்கிறது.

// "அவர் செய்தியை போடுகிறார்.. இதில் உண்மை பொய் சொல்ல வேண்டியவர்கள் புலிகள்.. அவர்கள் சில பல காரணங்களுக்காக பதிலளிக்காது விடலாம்.. ஆனால் போராட்டத்தைப்பற்றி கேட்க உரிமை கிடையாது என்று சொன்னால் அது சர்வாதிகாரம்.. இது மக்களுக்கான போராட்டம் என்றால் அதனோடு ஏதோவிததத்தில் தொடர்புடையவர்கள் கெட்கத்தான் வேணும்.. அதை உரிமை கிடையாது அது இது என்று சொல்ல பொன்னையரே.. தமிழீழம் கிடைத்து நீங்கள் ஒரு அதிகாரமுள்ள பதவியில் அமர்ந்தால் அவ்வளவுதான்.. அங்கே சுதந்திரம் கிடையாது.. மீண்டும் ஒரு சுதந்திரத்திற்காக போராடவேண்டும்."//

சோழியன் அண்ணா சொல்வதிலும் உண்மையிருக்கிறது.

Edited by Thalaivan

என்ன தலை!

உங்களை நல்லா குழப்பிட்டாங்கள் போலகிடக்கு... ஒவ்வொருத்தற்ற செய்தியைபோட்டு எல்லாம் சரிபோலதான் கிடக்கெண்டு நிக்கிறியல்?

எனக்கு ஒன்றுமா விளங்கவில்லை. நீங்க சொல்றதும் சரிதான் Sooravali

Edited by Thalaivan

யூத மக்களிற்கு 2 ஆம் உலகமா யுத்தம் இஸ்ரேலை அமைப்பதற்குரிய சந்தர்ப்பங்களை வழங்கியது போல்.

2010 பின்னர் மந்தமாகவிருக்கும் உலக பொருளாதார சூழல் தரும் சந்தர்ப்பங்கள் தமிழீழம் அமைப்பதற்கு உதவுமா?

ஓகோ 2007 தை 14 இல் இருந்து 2010 இற்கு போயிட்டீங்களே...

...இப்பவே வெளிநாட்டிற்கு ஓடித்தப்பினாதான் அப்பவாவது கருத்தெழுதுவதற்கு உயிரோட இருக்கலாம்!

என்ன சாணக்கியன் சொல்லுறியள் !

2002 புரிந்துணர்வு வந்த பொழுது எங்ட ஆட்கள் சொன்ன கதையள் மறந்து போச்சோ !

1.தொடந்து 05 வருடம் கடைப்பிடிச்சால் சர்வதேசரிதியில பெரிய மாற்றம் தமிழ்மக்கிள்றகு சார்பாக வரும்.

2.அரசாங்கம் புரிந்துணர்வை தூக்கியெறிந்து குழப்பினால் சர்வதேசம் தமிழத்தை உடனேயே அங்கீகரிக்கும் என்றும் கதையள் சொன்னது ஞாபகம் இல்லையோ ???

புதியவன்,

உதுகளை நினைவு வைச்சிருந்தா மண்டை வெடிச்சிடும் பாருங்கோ. உதுகளை சொல்லுறவை எங்கை இருந்து சொல்லுகினம் என்று பார்த்தா விழங்குது நாங்கள் இனி என்ன செய்யவேணும் எண்டு!

எங்கடை சனத்தை மனிசரா எங்கடை சனமே பாக்கிறேலை, இதுக்குள்ள சிங்களவனை குறை சொல்லி என்னத்தை!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன்ப்பா சாணக்கியன் எங்களுக்கெல்லாம் இதுகள பற்றி பேச உரிமை இல்லைப்பா நாங்க வெளிநாட்டில எல்லோ இருக்கம்...

ஓகோ 2007 தை 14 இல் இருந்து 2010 இற்கு போயிட்டீங்களே...

...இப்பவே வெளிநாட்டிற்கு ஓடித்தப்பினாதான் அப்பவாவது கருத்தெழுதுவதற்கு உயிரோட இருக்கலாம்!

ஏன் 2007 தை 14 இக்கு என்ன குறை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது தானே? 2010 இல கொடி ஏத்தப் போறம் எண்டு கதை கட்டப் போறயள் போல கிடக்கு. உப்பிடிப்பாத்தா இஸ்ரேல் 1939 இலேயே உருவாகிவிட்டுதோ?

உங்களை யார் அண்ணை கொழும்பில இருக்க சொன்னவை? உங்கடை திறமை வசதிகளுக்கு ஏற்ப ஓடித் தப்புங்கோ. வன்னியில இருக்கிறவையின்ரை வசதிக்காகவே நீண்டகால தீர்வு தேடப்படாமல் இருக்கும் போது கொழும்பில இருக்கிறவையின்ரை வசதிகளுக்கு ஏற்ப தீர்வு தேடப்படும் எட்டப்படும் எண்டு ஏன் ஏமாறுகிறியள்? போராட்டம் வெண்டால் என்ன தோற்றால் என்ன நீண்ட கால நோக்கில் நிச்சையமற்ற எதிர்காலம் இரண்டும் கெட்டானாக கொழும்பில இருக்கிறவைக்குத் தான் அண்ணை.

அண்ணை வணக்கம் நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கடை பதிவைப் பார்க்கிறதிலை மகிழ்ச்சி. ஆனா அண்ணை வேறை எங்கையோ எழுத வேண்டிய கருத்தை இங்கை எழுதிப் போட்டீங்கள் எண்டு நினைக்கிறன். மன்னார் படையினர் வசம் எண்ட தலைப்பில்தான் இங்கே கருத்துக்கள்(கன்றாவிகளும்) வைக்கப்படுகின்றன. அதுதான் கேட்டன்.

அண்ணை வணக்கம் யுரேகப் இன்ரை புண்ணியத்தாலை கொஞ்சம் பொழுது போச்சு. இப்ப ஊரில இருந்து வாற ஸ்கோருகள் ஒண்டும் அவ்வளவு சரியில்லை. அது தான் இனி விறு விறுப்பா பொழுது போக்க என்ன செய்யிறது எண்ட குழப்பம் கவலையிலை இதுக்குள்ளை மாறி எழுதிப்போட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயினின் வெற்றிக்கு பின் குறுக்ஸ் தலை காட்டியுள்ளார். ம்ம், குறூகஸ் வந்துட்டாரெல்லே? இனிமேல் ஸ்கோருகளை பற்றி அண்ணை எடுத்து விடுவாருங்கோ?

குறுக்ஸ் அண்ணன் ஸ்பானிய டீமில விளையாடினீரா? கேட்கவே பெருமையா இருக்கு.

வணக்கம் பாருங்கோ இஞ்ச நீங்கள் மன்னாரை ஆமி புடிச்சுப் போட்டான் எண்டு புலம்புறியள் அதுவும் பல்குழல் ஆட்லறி கீபிர் தாக்குதலாலை ஆனால் அங்கை மட்டக்களப்பில எண்ணெண்டா பிசுடலால 02 பிள்ளையான் குழுவை சுட்டும் 08 பொலிசுகாரரை சுட்டும் மட்டக்களப்பை இந்தா நாளைக்கு பிடிச்சு கொடியேற்றம் நடக்கபோகுது என்று எங்கட ஆய்வாளார் புலம்புறார்.

வாசிச்சுப் பாருங்கோ !

கோதாரியை

hவவி:ஃஃறறற.வயஅடையெயவாயஅ.உழஅஃய

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.