Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த பயணம் செய்த உலங்குவானூர்தி மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

S Lanka president's chopper shot

A helicopter that had just flown the Sri Lankan president to a ceremony and left him there was hit by gunfire soon after taking off again.

A statement from the army said the aircraft had to make an emergency landing, and was found to have a bullet-hole in one of its fuel tanks.

It is not clear who shot at the helicopter over the Ampara region, in the east of Sri Lanka.

The area is not close to territory held by the Tamil Tiger rebels.

Police say that the incident happened shortly after President Mahinda Rajapaksa had been dropped off at a public rally to re-open a bridge that had been demolished by the 2004 tsunami.

A statement on the Sri Lankan army website said that the Bell 412 helicopter was engaged in "logistic work" when it was attacked, but managed to land safely thanks to a a "timely detection of the technical fault".

Independent state

Meanwhile the International Committee of the Red Cross (ICRC) has withdrawn from the Omanthai crossing point between government and Tamil Tiger lines in the north of the island after what it called an explosion.

The ICRC says that it will resume work as soon as security in the area is assured.

Air force fighter jets had carried out several bombardments in the Vanni area - which includes Omanthai - on Tuesday and local officials said one bomb fell within 500 metres of the crossing point.

The air force says there was some bombing in the area, but it was 5km (three miles) away from the crossing.

Correspondents say that traffic and passenger movements in the area will come to a halt without the presence of the ICRC.

Tamil Tiger rebels have fought for a generation for an independent state for the Tamil minority in the island's north and east.

About 70,000 people have been killed since the civil war began in 1983.

Violence in the island increased after the government formally pulled out of a ceasefire agreement in January.

bbc.com

குடிசார் தகவல்களின் படி ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தப்புவதற்கு விமானி சடுதியாக எடுத்த முயற்சியின் போது மகிந்த ஆசனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதால் சிறு காயங்கள் எற்படதாகவும் கூறப்படுகிறது.

அவசர அவசரமாக பாதுகாப்பிற்காக தரையிறக்கப்பட்ட உலங்கு வானூர்தியில் இருந்து வெளியேறும் போது மகிந்தவும் அவரது சகோதரர்களும் மிகவும் கலக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவிற்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் இது பற்றி வெளியில் தெரிவிக்கக் கூடாது எனவும் குறிப்பாக ஊடகங்களிற்கு தெரிவிக்க கூடாது எனவும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டதாகவும் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

குடிசார் தகவல்களின் படி ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தப்புவதற்கு விமானி சடுதியாக எடுத்த முயற்சியின் போது மகிந்த ஆசனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதால் சிறு காயங்கள் எற்படதாகவும் கூறப்படுகிறது.

அவசர அவசரமாக பாதுகாப்பிற்காக தரையிறக்கப்பட்ட உலங்கு வானூர்தியில் இருந்து வெளியேறும் போது மகிந்தவும் அவரது சகோதரர்களும் மிகவும் கலக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவிற்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் இது பற்றி வெளியில் தெரிவிக்கக் கூடாது எனவும் குறிப்பாக ஊடகங்களிற்கு தெரிவிக்க கூடாது எனவும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டதாகவும் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மகிந்த சீட் பெல்ற் போடாமல் இருந்தாருங்களா சார்.?

அவர் கட்டி இருந்த கோமணத்துக்கு சேதம் ஏதாவது.?

இந்த தாக்குதலை விடுதலைப்புலிகள் செய்திருப்பதாக உலக நாடுகளை நம்பச்செய்து குறிப்பாக இந்தியாவை தன்னோடு வைத்திருக்க மகிந்தவின் திட்டமாகவும் இருக்கலாம். ஏனெனில் எப்போதும் புலி குறி வைத்தால் அது தப்பாது . .

குடிசார் தகவல்களின் படி...........

நீங்கள் எந்த குடியை சொல்லுறிங்கள்? <_<:huh:

பெற்றோல் குறைவதை அறிந்து விமானி விமானத்தை இறக்கியபோது துளை இருந்ததை கண்டதாக சொல்லப்படுகிறது. அதுவரை வெடிப்பட்டதாக தெரியவில்லையாமே? ஏதோ ஒன்றை திட்டமிட்து போல தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா வரும் போது பொத்துவில் செங்காமம் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அகோர எறிகணைத்தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள். 6 பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளனர் . மொத்தமாக 13 பேர் காயப்பட்டுள்ளனர் என விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

3ம் இணைப்பு)மகிந்தவை ஏற்றச்சென்ற உலங்குவானூர்தி மீது கனரகத் தாக்குதல்: உலங்குவானூர்தி கடும் சேதம்

[செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2008, 02:06 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

அம்பாறை மாவட்டம் அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை ஏற்றி வருவதற்காகச் சென்று கொண்டிருந்த உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கனரகத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் உலங்குவானூர்தி மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு கடுமையாக சேதமடைந்துள்ளது.

[4 ஆம் இணைப்பு: வான்படையினரின் கூற்று, இழப்பு விபரம்]

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் அம்பாறையிலிருந்து விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

அம்பாறை அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் இன்று முற்பகல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அங்கு சென்றிருந்தார். அவரது பயணத்தினை ஒட்டி சுமார் 8,000-க்கும் அதிகமான படையினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பாலத்தினை திறந்து வைத்து மகிந்த ராஜபக்ச மக்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பிற்பகல் 1:00 மணியளவில் பொத்துவில் செங்காமம் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமை நோக்கி விடுதலைப் புலிகளால் அகோர எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலினைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து மகிந்த ராஜபக்சவினை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி விரைவதற்காக உடனடியாக அங்கு விரைந்து கொண்டிருந்த உலங்குவானூர்தி மீதும் விடுதலைப் புலிகள் கனரகத் தாக்குதலை நடத்தினர்.

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதிக்கு மேலாக உலங்குவானூர்தி பறந்து கொண்டிருந்தபோது பிற்பகல் 1.20 மணியளவில் விடுதலைப் புலிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலுக்கு இலக்கான உலங்குவானூர்தி சிவப்பு விளக்கை எரிய விட்டவாறே தாழ்வாகப் பறந்து உல்லைப் பாலத்திற்கு அருகில் உள்ள பாடசாலை மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தரையிறக்கப்பட்ட உலங்குவானூர்தியை மக்கள் தற்போது பார்வையிட்டு வருகின்றனர். அது மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு கடுமையாக சேதமடைந்திருக்கின்றது.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பயணத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்த உலங்குவானூர்திகளில் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதனை சிறிலங்கா வான்படையும் ஒத்துக்கொண்டிருக்கின்றது.

இது குறித்து சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்துள்ளதாவது:

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பயணத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்த மூன்று உலங்குவானூர்திகளில் ஒன்று அறுகம்குடா உல்லைப் பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

நிலத்திலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் உலங்குவானூர்தியின் எரிபொருள் தாங்கிப்பகுதியில் சிறிது சேதமேற்பட்டது. இதனையடுத்து உலங்குவானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டது.

முதலில் இயந்திரக்கோளாறு காரணமாகவே உலங்குவானூர்தி தரையிறக்கப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்ட்டபோதும் தற்போது இதுவொரு தாக்குதல் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை உகண இராணுவ முகாமில் எரிபொருளை நிரப்பிவிட்டு அறுகம்குடா நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த உலங்குவானூர்தி தரையிறக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த உலங்குவானூர்தியில் ஏற்பட்ட கோளாறு சீர்செய்யப்பட்டு வருகின்றது.

தரையிறக்கப்பட்ட உலங்குவானூர்தியில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இருக்கவில்லை. அவர் அறுகம்குடா பால திறப்பு விழாவில் அச்சயம் இருந்தார் என்றார்.

இதேவேளை பொத்துவில் செங்காமம் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது சுமார் 30 நிமிட நேரமாக நடத்தப்பட்ட கடுமையான எறிகணைத்தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத்தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 13 படையினர் காயமடைந்துள்ளனர். இதில் 6 பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்

நன்றி புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

"உலங்குவானூர்தி மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு கடுமையாக சேதமடை"யுமாறு வானில் அது பறப்பை மேற்கொள்ளும்போது தாக்கப்பட்டிருந்தால் அது தொடர்ந்து பறப்பை மேற்கொண்டு கட்டுப்பாட்டுடன்(controlled landing) தரையில் இறங்கியிருக்கமுடியாது. மாறாக விழுந்து நொருங்கியிருக்கும் அல்லது டிச் (ditch)பண்ணி தாக்குதல் நடந்த இடத்திலேயே பயணிகளுடன் விழுந்திருக்கும். இலகுரக துப்பாக்கியால் சுடப்பட்டு எண்ணைத்தாங்கியில் மட்டும் சன்னங்கள் துளைத்திருந்தால் உலங்குவானூர்தியை மீண்டும் பயன்படுத்த வாய்ப்புகள் நிறையவே உள்ளது.

இந்த தாக்குதலை விடுதலைப்புலிகள் செய்திருப்பதாக உலக நாடுகளை நம்பச்செய்து குறிப்பாக இந்தியாவை தன்னோடு வைத்திருக்க மகிந்தவின் திட்டமாகவும் இருக்கலாம். ஏனெனில் எப்போதும் புலி குறி வைத்தால் அது தப்பாது . .

அண்ணை நீங்கள் விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ வானொலியான புலிகளின் குரல் செய்தியெல்லாம் கேட்பதில்லை போல கிடக்கிறது.

மகிந்த அறும்பையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பொத்துவில் அதிரடிப்படைத் தளத்தை நோக்கி விடுதலைப் புலிகள் கடுமையான எறிகணை வீச்சை அரை மணிநேரம் நடத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து மகிந்தவை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தித் தொடரணி மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் உலங்குவானூர்தி சேதமடைந்து தரையிறக்கப்பட்டதாகவும் புலிகளின் குரல் செய்தியில் தெரிவிக்கப்பட்டது. அதாவது விடுதலைப் புலிகளே தாக்குதலை நடத்தியதாக விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ வானொலியே உரிமை கோரியிருக்கிறது.

இத்தாக்குதலில் இலக்கை தகர்ப்போம் என்று புலிகள் நினைத்து புலிகள் தாக்குதலை நடத்தியிருக்க மாட்டார். இலகைத் தகர்க்க முயற்சித்திருக்கிறார்கள் என்பது அவர்கள் பயன்படுத்திய ஆயுத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். எம்.பி.எம்.ஜி வகை துப்பாக்கியைப் பயன்படுத்தியே புலிகள் தாக்கியதாக படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. .50 கலிபர் போன்றவையால் ஒரளவு உயரத்தில் பறந்து செல்லும் வான்கலங்களை சுட்டுவிழுத்தலாம். ஆனால் சதாரண துப்பாக்கிகளால் சூட்டு வீழ்த்துவது இலகுவல்ல( புலிகளின் குறி எப்போதும் தப்பாது என்பதற்காக )

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலுக்குள்ளான ஹெலியில் நான்கு துவாரங்களை கண்டேன்

வீரகேசரி நாளேடு - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணித்த ஹெலிகொப்டருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக ஐந்து ஹெலிகொப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. தாக்குதலுக்கு இலக்கான ஹெலிகொப்டரில் நான்கு துவாரங்களை கண்டேன். என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் அஹமது மொஹைதீன் அப்துல் மஜீட் தெரிவித்தார்.

பி.பி.சி.செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சுனாமியினால் பாதிக்கப்பட்ட அறுகம்பை பாலத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை 10.30 மணிக்கு வருகை தருவதாக இருந்தார். எனினும் ஜனாதிபதி 12 மணியளவிலேயே வந்தடைந்தார்..

பாலம் திறப்பு விழாவிலும் அங்கு நடைபெற்ற கூட்டத்திலும் நான் கலந்து கொண்டேன். எனினும் ஜனாதிபதியை இறக்கிவிட்டு சென்ற ஹெலிகொப்டரில் ஒன்று தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக கூட்டம் முடிந்த 15 நிமிடங்களுக்கு பின்னர் எனக்கு தகவல் கிடைத்தது.

அந்த தாக்குதல்களை புலிகளை மேற்கொண்டதாகவும் தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து பொத்துவில் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு ஹெலிகொப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று ஹெலிகொப்டரையும் பார்த்தேன். அந்த ஹெலிகொப்டரில் நான்கு துவாரங்கள் இருந்ததை கண்டேன். துப்பாக்கி சூட்டினாலேயே இந்த துவாரங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கு கடமையிலிருந்த இராணுவ வீரர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார் என்றார்.

பெற்றோல் குறைவதை அறிந்து விமானி விமானத்தை இறக்கியபோது துளை இருந்ததை கண்டதாக சொல்லப்படுகிறது. அதுவரை வெடிப்பட்டதாக தெரியவில்லையாமே? ஏதோ ஒன்றை திட்டமிட்து போல தோன்றுகிறது.

உண்மையில் பெற்றோல் கலன் தாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் உலங்குவானுர்தி வெடித்துச் சிதறியிருக்குமே?? அதை நீங்கள் சிந்திக்கவில்லையா??

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பெற்றோல் கலன் தாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் உலங்குவானுர்தி வெடித்துச் சிதறியிருக்குமே?? அதை நீங்கள் சிந்திக்கவில்லையா??

பெற்றோல் தாங்கி துப்பாக்கியால் சேதமானால் வெடித்து சிதறுவது என்பது சினிமா காட்சிகளில் மட்டுமே சாத்தியம் ,

ஏனெனில் பெற்றோல் தாங்கிக்குள் தொடர்ந்து நெருப்பு எரிவதற்கு தேவையான ஒக்சிஜன் இல்லாமையே காரணம்.

தாங்கி சேதமாகி , எரிபொருள் குறைந்து பிற விழைவுகளால் நெருப்பு பற்ற சந்தர்ப்பம் நிறையவே உண்டு .

இனி மகிந்தர் ஹெலியில போக கொஞ்சமில்ல ரெம்பவும் பயப்படுவார். அப்படியில்ல பறக்கிறதென்றாலும் ஒரு பத்துப் பதினைந்து ஹெலியாவது பறந்து எதில் தான் போகிறேன் என்பது மற்றவனுக்குத் தெரியாமல் பறக்கவேண்டும். அவ்வளவு ஹெலிக்கு எங்கபோறது.?

உண்மையில் பெற்றோல் கலன் தாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் உலங்குவானுர்தி வெடித்துச் சிதறியிருக்குமே?? அதை நீங்கள் சிந்திக்கவில்லையா??

ஒரு ஆள் பத்து நூறுபேருக்கு அடிக்கிற படங்களில வாரதை பார்த்தா இப்படித்தான் எழுதவரும் அண்ணா. இருந்தாலும் கொழும்பில் ஊடகவியாளாரையும் பிரித்தானிய தூதுவராலய அதிகாரியையும் கடத்த நடந்த ஒரு கடத்தல் நாடகத்தை திசை திருப்ப இப்படி ஒரு நாடகம். கீழ இறங்கிய கெலிக்கு நாலு வெடி வைக்கிறது பெரிய வேலையே? அதை நாலுபேரை கூப்பிட்டு காட்டி செய்தி போடுறதும் இன்னொரு வேலையே? மகிந்து அணைச்சு வெருட்டுற ஆள்.

இனி மகிந்தர் ஹெலியில போக கொஞ்சமில்ல ரெம்பவும் பயப்படுவார். அப்படியில்ல பறக்கிறதென்றாலும் ஒரு பத்துப் பதினைந்து ஹெலியாவது பறந்து எதில் தான் போகிறேன் என்பது மற்றவனுக்குத் தெரியாமல் பறக்கவேண்டும். அவ்வளவு ஹெலிக்கு எங்கபோறது.?

அதுக்கு பிறகு போனது எலி வாலிலயா? அடுத்த கெலியலதானே? நாடகத்தை நம்பி செய்தி போட்ட ஆக்கள்???

ஆமா தலைவா,

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணித்த ஹெலிகொப்டருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக ஐந்து ஹெலிகொப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. தாக்குதலுக்கு இலக்கான ஹெலிகொப்டரில் நான்கு துவாரங்களை கண்டேன். என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் அஹமது மொஹைதீன் அப்துல் மஜீட் தெரிவித்தார். "

இந்தாள் இப்படி தெரிவிக்கிறார். புலிகளின் குரல் ஒரு செய்தி சொல்லுது. உதுல நீங்கள் நாடகம் என்றீயள். கதை, வசனம், இயக்குவது எல்லாம் யாருங்கோ?

Edited by Iraivan

உண்மையில் பெற்றோல் கலன் தாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் உலங்குவானுர்தி வெடித்துச் சிதறியிருக்குமே?? அதை நீங்கள் சிந்திக்கவில்லையா??

இப்போதெல்லாம் போர் விமானங்கள் மட்டும் அல்ல சாதாரண விமானங்களுக்கும் பெற்றோல் உபயோகிப்பது இல்லை. பெற்றோல் வேகமாக தீப்பற்றும் என்பதினால் Kerosene Oil எனப்படும் எரிபற்று நிலை குறைந்த எண்ணையே பாவிக்க படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா

நீங்கள் சொல்வதுபோல்தான் ஏற்கனவே 3 உலங்குவானுர்தியில்தான் செல்கின்றனர்????

அதனால்தான் அவர்களது பாதுகாப்பு திட்டங்களைக்குளப்புவதற்காக

ஒரு ஆள் பத்து நூறுபேருக்கு அடிக்கிற படங்களில வாரதை பார்த்தா இப்படித்தான் எழுதவரும் அண்ணா. இருந்தாலும் கொழும்பில் ஊடகவியாளாரையும் பிரித்தானிய தூதுவராலய அதிகாரியையும் கடத்த நடந்த ஒரு கடத்தல் நாடகத்தை திசை திருப்ப இப்படி ஒரு நாடகம். கீழ இறங்கிய கெலிக்கு நாலு வெடி வைக்கிறது பெரிய வேலையே? அதை நாலுபேரை கூப்பிட்டு காட்டி செய்தி போடுறதும் இன்னொரு வேலையே? மகிந்து அணைச்சு வெருட்டுற ஆள்.

விடுதலைப்புலிகளே தாம் தாக்குதல் நடாத்தியதாக அறிவித்துள்ளார்கள். பின்பு ஏன் நீங்கள் கஷ்டப்பட்டு கற்பனையில் செய்திகளை உருவாக்குகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா

நீங்கள் சொல்வதுபோல்தான் ஏற்கனவே 3 உலங்குவானுர்தியில்தான் செல்கின்றனர்????

அதனால்தான் அவர்களது பாதுகாப்பு திட்டங்களைக்குளப்புவதற்காக

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ஒரு சிறந்த பெளத்தன் அதனால் அவர்களுடைய "தெய்யோ" அவரை காப்பாற்றி போட்டார் குண்டு பட்டும் விமானம் எறியாததிற்கு காரணம் புத்தர் குண்டை கையில பிடித்திட்டார். <_<

விடுதலைப்புலிகளே தாம் தாக்குதல் நடாத்தியதாக அறிவித்துள்ளார்கள். பின்பு ஏன் நீங்கள் கஷ்டப்பட்டு கற்பனையில் செய்திகளை உருவாக்குகின்றீர்கள்.

விடுதலைப் புலிகள் கெலிக்கு அடிச்சதாக சொல்லல்யே. அது வேற தாக்குதல். அடிச்சது நிலத்துக்கு. பறந்தது வானத்தில. சொல்லி அடிச்சிட்டாங்க. எல்லாம் மகிந்தவோட சாகசம். இப்போது கெகலியா சொல்லியிருக்கிறார். ஒரு குண்டு மகிந்தவுக்கு பாதுகாப்பு கொடுத்த ஒரு கெலியில் பட்டிருந்தது என்று. யாராப்பா ஒன்றை நாலாக்கினவர். அதுவும் துப்பாகி சூடாம். புலி என்றால் துப்பாக்கியால் சுட்டே இருக்க மாட்டார்கள். பெரிசா.........

மகிந்த ஒரு சிறந்த பெளத்தன் அதனால் அவர்களுடைய "தெய்யோ" அவரை காப்பாற்றி போட்டார் குண்டு பட்டும் விமானம் எறியாததிற்கு காரணம் புத்தர் குண்டை கையில பிடித்திட்டார். <_<

கையால் புடிச்சா ஓட்டை எப்படி வந்தது? புத்தரே வந்து சொன்னதால சரி

Edited by Thalaivan

விடுதலைப் புலிகள் கெலிக்கு அடிச்சதாக சொல்லல்யே. அது

ஹெலிக்கு புலிகள்தான் அடிச்சதெண்டு புலிகளின் குரல் சொன்னதே. உங்கள் கற்பனையை அள்ளிவிட்டதே தப்பு. அதனை சரி கட்ட புலிகள் சொன்னதையே இல்லை எண்டு சொல்லுறியளே அது ரொம்ப தப்பு சார்.

இந்தாங்கோ இந்த இணைப்பிலை புலிகளின் குரலின் செய்தியைக் கேளுங்கோ

http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...0.30%20news.mp3

ஹெலிக்கு புலிகள்தான் அடிச்சதெண்டு புலிகளின் குரல் சொன்னதே. உங்கள் கற்பனையை அள்ளிவிட்டதே தப்பு. அதனை சரி கட்ட புலிகள் சொன்னதையே இல்லை எண்டு சொல்லுறியளே அது ரொம்ப தப்பு சார்.

இந்தாங்கோ இந்த இணைப்பிலை புலிகளின் குரலின் செய்தியைக் கேளுங்கோ

http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...0.30%20news.mp3

ஒருவர் 4 ஓட்டை என்கிறார். ஒருவர் ஒரு ஓட்டை என்கிறார். புலிகள்் பயன்படுத்தவே முடியாது என்கிறார்கள். தாக்குதலுக்கு உள்ளான கெலி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதென்று கெகலிய சொல்றார். எல்லாருமா குழப்புறாங்க. ஏதோ கொஞ்சம் சவுண்டுவுடுற மாதிரி இருக்கு.

உலங்குவானூர்தி மீது சத்தமற்ற தாக்குதலை நடத்திய புலிகள்: அமைச்சர் கேகலிய

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்குடாவில் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் சத்தமற்ற தாக்குதலையே நடத்தியுள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இருந்த பகுதிகளை படையினர் கைப்பற்றியிருப்பது அரசாங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

நெல் விளையும் பாரிய நிலப்பரப்பையே படையினர் இன்று மீட்டுள்ளனர். இது ஒரு வரலாற்று வெற்றியாகவே கருதப்படுகின்றது.

இதுவொரு இராணுவ வெற்றி மட்டுமல்ல, அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

மீட்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இத்தகைய திட்டங்கள் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாண மக்கள் தீவிரவாதத்தை விரும்பவில்லை என்பது உலகிற்கு இத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் உணர்த்தப்படும். அப்படி ஒரு நிலை வருவதை விரும்பாத புலிகள் தற்போது கிழக்கு மாகாணத்தில் ஒரு பதற்றமான நிலையை தோற்றுவிப்பதற்கு முனைகின்றனர்.

அறுகம்குடா பாலத்திறப்பு விழாவுக்குச் சென்றபோது அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினைக் குறிவைத்து உலங்குவானூர்தி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். புலிகள் தன்னை இலக்கு வைத்தால் அதனைச் சவாலாக தான் ஏற்றுக்கொள்வதாக இம் மாநாட்டில் தெரிவிக்கும்படி அரச தலைவர் என்னிடம் கூறினார்.

அரச தலைவர் சென்ற உலங்குவானூர்தி மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை சிலர் வெளியிடுகின்றனர். அதில் உண்மையில்லை.

அரச தலைவரின் பயணத்தின்போது உலங்குவானூர்திகள் செல்வது வழக்கம். அன்றைய நாளும் அரச தலைவரின் பயணத்தினை முன்னிட்டு அப்பகுதியால் சென்ற உலங்குவானூர்தியின் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதையடுத்தே அது தரையிறக்கப்பட்டது. தரையிறக்கிய பின்னர் அதனைப் பரிசீலித்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு அது இலக்காகியிருப்பது தெரியவந்தது.

சத்தமின்றி இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெறுகின்றன. தாக்குதலுக்கு இலக்கான உலங்குவானூர்தியின் எண்ணெய்த் தாங்கி பகுதியில் துப்பாக்கிக்குண்டு ஒன்று பாய்ந்துள்ளது.

தற்போது இந்த உலங்குவானூர்தி கட்டுநாயக்காவில் உள்ள வான்படைத்தளத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புலிகளுக்கு எதிரான போரில் தனது உயிரைப் பணயம் வைத்தேனும் வெற்றியீட்டுவதில் அரச தலைவர் உறுதியுடன் உள்ளார். போரில் வெற்றியீட்டுவதில் அவர் உறுதியுடன் இருக்கிறார். அதற்காக எந்த தியாகத்தையும் அவர் மேற்கொள்ளத் தயாராகவே இருக்கிறார் என்றார் அவர்.

http://www.puthinam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.