Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆறுமுகம்.

Featured Replies

அப்பதான் டியூசன் முடித்து வெளியிலை வந்து கொண்டு இருந்தோம்... மாலை ஐந்து மணி ஆறு மணியில் இருந்து ஊரடங்கு நண்பர்கள் எல்லாரும் போகும் வழமையான பாதை... புறப்படும் போது எங்களை தாண்டி ஒரு ஜீப் வேகமாக போகிறது... மச்சான் ஆமியடா விலகி நில்லுங்கட எனும் நண்பனின் குரலுக்கு செவிசாய்த்து எல்லாரும் ஒதுங்கி நிக்கிறோம்....

அந்த மொட்டை ஜீப்பில் போவது எங்களுக்கு கொஞ்சம் பரீட்ச்சியமான முகம்... கப்ரன் ஆறுமுகம்... இந்திய இராணுவத்தின் நுணாவில் படை முகாமின் பொறுப்பதிகாரி... எங்களை திரும்பி பார்த்தது தெரிந்தது அதுக்குள் ஜீப் எங்களை தாண்டி போய் விட்டது...

ஜீப்பின் பின்னால் நாங்கள் எங்களை தாண்டி கொஞ்ச தூரம்தான் ஜீப் போய் இருக்கும்... பெரியதாய் ஒரு வெடியோசை வீதியோரம் இருந்த மருத மர கிளையின் துண்டுகள் எல்லாம் வீதியோரம் சிதற விழுந்தது , வெடியோ எழுந்த புகை மூட்டம் அடங்கத்தான் தெரிந்தது வேகமாக போன ஜீப் அருகில் இருந்த மருதமரத்தில் மோதுப்பட்டு அரவாசி பிரண்ட நிலையில் கிடக்கிறது...

நாங்கள் கிட்டத்தட்ட என்ன செய்வது எண்று அறியாத நிலையில் திகைத்து விட்டோம்... அங்கே ஒருவர் ஓடி வந்து ஜீப்பின் அருகே நிக்க மற்றவர் கோடாலி ஒண்றுடன் வந்து ஜீப்பில் இருந்து எதையோ இழுக்கிறார்..

டேய் குணா அண்ணாக்களடா எங்களோடு அருகில் வந்தவ நண்பன் சொல்லும் போது எங்களை அறியாமல் ஒரு துணிவு... நாங்கள் ஜீப்பில் இருந்து அருகில் என்பதால் ஜீப்பை தாண்டி போவதுதான் ஒரே சிறந்த வளி... வேகமாக முடிவெடுத்து அந்த பாதையால் வேகம் எடுக்கிறோம்...

ஜீப்பின் அருக்கில் வரும் போது எம்மில் ஒருவன் டேய் குணா அண்ணையடா என்கிறான்... அண்றுதான் நான் குணா அண்ணாவை முதலில் பார்க்கிறேன்... அவரின் முகத்தில் ஒரு வெற்றியாக தாக்குதலின் சந்தோசம் இல்லை... ஜீப்பை வெறித்து பார்த்து கொண்டு இருக்கிறார்... மற்ற இரு போராளிகள் வேகமாக ஆயுதங்களை எடுக்கிறார்கள்....

குணா அண்ணாவின் மகிழ்ச்சி இன்மைக்கு ஒருவேளை "கப்ரன் ஆறுமுகம்" அங்கே இறந்து கிடந்தது காரணமாக இருக்கலாம்...

சிலகாலத்துக்கு முன்னம் இப்படித்தான் வளியில் போன எங்களை கப்ரன் ஆறுமுகம் நிறுத்தி டேய் பசங்களா... "கல்வயலுக்கை" தான் உங்கட குணாவும், பரணியும் அலையுறாங்களா மில்லை ...? நாளைக்கு காலையிலை அவங்கள புடிச்சு காட்டுறனா இல்லையா பாருங்க... எண்று எங்களிடம் சவால் விடுவது போல சொல்லிவிட்டு ஒரு புன் சிரிப்பையும் உதிர்த்து விட்டு போனவர்....

அவர் இப்படித்தான் நாளைய சுற்றி வளைப்பை யாரிடமாவது முன்னரே சொல்லி எச்சரித்து விடுவார்... அவருக்கு தெரியும் எப்படியாவது செய்தி போக வேண்டிய இடத்துக்கு போய்விடும் எண்று...

இண்று அந்த ஆறுமுகம் ஜீப் வண்டியில் இறந்து கிடக்கிறார்... ஒரு சரியான சிறப்பான தாக்குதல், பிழையான இலக்கு மீது... ஆனால் தனது கடமையை செய்த திருப்தி குணா அண்ணாவுக்கு இருக்கும்...

(மனதை பாதித்த சம்பவம் என்பதால்)

Edited by தயா

அட அட தலை பபாவும் கதை எழுதுதத் துவங்கீட்டீங்களோ வாழ்த்துகள்.. கதை நன்னா இருக்கிது. :lol:

ஓம் இந்திய இராணுவத்தில நல்ல தமிழ் ஆக்களும் இருந்தவங்கள். ஆனால் எல்லாத்தமிழ் ஆமியும் நல்லவங்கள் எண்டும் சொல்லிறதுக்கு இல்ல. ரவுடிகளூம் இருக்கிதுகள்

  • தொடங்கியவர்

ஆதரவுக்கு நண்றி முரளி...!

ஆறுமுகம் என்பவரை எனக்கு நேர்த்தியாக தெரியாது.... பலர் அவர் பற்றி சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன்... தமிழனை காக்க தன்னால் முடிந்ததை செய்ய நினைத்த ஒரு தமிழனை நினைவுபடுத்த மட்டும்தான் இதை பதிந்தேன்...

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனசை உலுக்கிய நிகழ்வைப் படித்த போது வன்னித்தென்றல் என்ற தளத்தில் சமீபத்தில் வாசிச்ச இந்தக் கதையும் ஞாபகத்தில வந்திச்சு.. பகிர்ந்து கொள்கிறேன்..! படிச்சுப் பாருங்க..!

---------------

கோலங்கள்!

விமானம் யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து கிளம்புகிறது. ஏக்கம் கவ்விய மனதோடு கவின் யன்னலோர இருக்கையில் இருந்து சொந்த தேசத்தின் அவலங்களை பார்த்தபடி பறக்கிறான். என்ன அழகான தேசம், என்ன நேர்த்தியான கட்டுமானங்கள், கட்டம் கட்டமாக வயல்களும் தோட்டங்களும், இன்று அவை இருந்த அடையாளங்கள் சிதைந்து சின்னாபின்னமாகி..காவலரண்களால

் நிறைந்திருக்கின்றன.

காணும் காட்சி கவலையைத் தந்தாலும் ஐரோப்பிய இயந்திர வாழ்க்கைக்குள் செயற்கைச் சூழலுக்குள் கடந்த பதினைந்து ஆண்டுகளாக சுழன்றவனுக்கு சொந்த தேசத்தின் அலங்கோலம் கூட ரசிக்கக் கூடியதாவே இருந்தது.

அன்று ஒரு நாள், அதிகாலை நேரம், சன்னங்கள் வீட்டு யன்னல்களைப் பதம்பார்க்கின்றன. நாய்கள் விடாமல் தொடர்ந்து குரைக்கின்றன. "பூட்ஸ்" சத்தங்கள் வீட்டைச் சுற்றிவளைக்கின்றன. சிறிது நேரம் கழித்து பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. "சலோ சலோ" என்று ஹிந்தியில் சொல்லி சிலர் கத்துகிறார்கள். "அம்மா இந்தியன் ஆமி வந்திருக்கிறான் என்ன செய்யுறது" கவின் சிறுவனாக பயத்தால் குரல் நடுங்கியடி, தாயை அணைத்துக் கொண்டு கேட்கிறான். " பொறு..பயப்பிடாத.. அப்பா போய் என்னென்று பார்ப்பார்.." அம்மா மகனைத் தேற்றியபடி. கணவனைப் பார்த்து "என்னங்க தனியப் போகாதேங்கோ நாங்களும் வாறம்". தகப்பன் முன்னே செல்ல தாயும் கவினும் பின்னே நிற்க, கதவு திறக்கப்பட்டதும் ஹிந்தியில் ஏதோ கத்தியபடி இந்தியன் ஆமி வீட்டுக்குள் நுழைந்து நாலு பக்கமும் சூழ்ந்து கொள்கிறது. அவர்களில் ஒருவன் சென்னைத்தமிழில் " உங்க வீட்டுக்க எல்ரிரிஈ ஆக்கள் பதுங்கி இருக்கிறதா..? சோதனை பண்ணனும்". அவன் சொல்லி முடிப்பதற்குள் வந்த மற்றையவர்கள் வீடு முழுவதும் தட்டிக்கொட்டி சோதனை செய்யும் சத்தம் கேட்கிறது.

தொடங்கிய சோதனை முடிவதற்குள் மீண்டும் அந்த ஆமிக்காரன் தமிழில் " உங்க வீட்டில இருந்துதான் எல்ரிரிஈ சுட்டிருக்கு.. விசாரணைக்கு ஒருவர் வரனும்" அதைக்கேட்ட கவினின் அப்பாவும் அம்மாவும் செய்வதறியாது திகைத்துப் போயினர். " என்ர அவரை தனிய விட ஏலாது நானும் பிள்ளையும் கூட வாறம்" என்று கவினின் அம்மா காட்டமாகச் சொல்ல " எல்லாரும் நட, ஜீப்பில ஏறு" என்று உத்தரவு வருகிறது. நடந்த சம்பவம் தொடர்பாக எதுவும் அறியாத அவர்கள் மூவரும் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு கண்கள் கட்டப்பட்டு நீண்ட பயணத்தின் பின் முகாம் ஒன்றில் இறப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். விசாரணையின் பின் தாய் வேறாகவும் தகப்பனும் சிறுவனான கவினும் சேர்த்து வேறாகவும் பிரிக்கப்பட்டு அடைக்கப்படுகின்றனர். பல மணி நேரம் விசாரணை தொடர்வதாக சொன்னாலும் இறுதியில் கவின் மட்டும் வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறான். பள்ளிச் சிறுவன் என்று காரணம் காட்டி அவனை வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

அந்த நாள் வரை தாயையும் தந்தையும் பிரிந்தறியாத கவின் அன்று அவர்களின் பிரிவால் பெரும் துன்பப்பட்டான். பதட்டம் பயம் ஒரு புறம் பெற்றோறைப் பிரிந்த கவலை மறுபுறம் வாட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவனின் துன்பத்தைப் பாராது விடுப்பு கேட்பதிலேயே அதிகம் அக்கறை காட்டினர். அதுவும் கூட அவனுக்கு மிக வேதனை அளித்தது. பிறர் உதவிகள் ஏதும் இல்லாது தனிமைக்குள் தனித்துவிட்ட சின்னவனான கவின் வீட்டில் அழுதபடி கண்ணீரோடு காலம் தள்ளத்தொடங்கினான். அதுவே தொடர்கதையுமானது. இப்படியே வந்த நாட்கள் சோகமாக கடந்தனவே தவிர தாயும் தகப்பனும் விடுவிக்கப்படுவதாக இல்லை. பின்பு ஒரு நாள் தாயும் தகப்பனும் காங்கேசன்துறை இந்திய இராணுவ வதை முகாமுக்கு மாற்றப்பட்டு அங்கு நீண்ட நாள் காவலில் அடைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் மூலம் அறிந்து கொண்டான். நீண்ட நாள் பெற்றோரின் பிரிவு, அது தந்த விரக்தி, நீதி என்பதே கிட்டாது எனும் போது எழுத்த ஆதங்கம், மனச்சோர்வு இவை தந்த பாதிப்புக்களால் வாழ்கையில் வெறுமைக்குள் சென்ற கவின் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமலே வீட்டை விட்டு வெளியேறி இயக்கத்தோடு இணைந்து செயற்படத் தொடங்கினான். சில காலம் இயக்கத்தோடு செயற்பட்ட பின் அவன் ஐரோப்பாவுக்கு நெருங்கிய உறவினர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டான்.

ஐரோப்பிய மண்ணில் பல வித்தியாசங்களை சந்தித்த போதும் வசதிகள் வாய்ப்புக்கள் இருந்த போதும் அவனால் மனதளவில் அவற்றோடு ஒன்றித்து அவற்றை திருப்தியோடு அனுபவிக்க முடியவில்லை. அவற்றோடு ஒன்றித்து தன்னை வித்தியாசமானவனாக காட்டி போலியாக வாழவும் முடியவில்லை. பெற்றோரின் பிரிவும் அவர்களுக்கு என்ன நேருமோ என்ற ஏக்கமுமே அவனுக்குள் எப்போதும் குடிகொண்டிருக்கும். வீட்டு நினைவுகளால் அவன் அடிக்கடி ஆளப்படுவான். சொந்த மண்ணில் கண்ட அனுபவங்களே அவனை அந்நிய மண்ணிலும் கொள்கைப்பற்றோடு ஒரு தெளிவான வளமான இலட்சியத்தோடு பற்றுறுதியோடு வாழ வழி சொல்லிக்கொண்டிருந்தது. ஐரோப்பாவிலும் அவன் தனிமையையே விரும்பினான். தானும் தன் படிப்பும் வேலையும் அதுவே அவனுக்கு வாழ்வாகிப் போனது. மற்றைய ஊர் ஆட்கள் போல அவனால் சொந்த மண்ணின் அவலங்களை மறந்து சொந்த வாழ்வில் சந்தித்த துயரங்களை மறந்து போலிப் போர்வைக்குள் புகுந்து இயல்பான அடையாளங்கள் தொலைத்து ஐரோப்பியனாக தன்னை அடையாளம் காட்டி போலித்தனத்தனமாக வாழவும் அவனால் முடியவில்லை. அதற்காக அவன் அப்படி வாழும் மற்றவர்களைக் குறை கண்டதும் இல்லை. அவரவர் தங்கள் மனத்துக்குப் பிடித்தது போல வாழ்கிறார்கள்.அது அவரவர் சுதந்திரம் என்றுணர்ந்தும் கொண்டான்.

விமானம் இரத்மனால விமான தளத்தை நெருங்குகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய இராணுவ வதை முகாமுக்குள் விட்டுவிட்டு வந்த பெற்றோரைக் கண்டு, கொஞ்சி மகிழ்ந்த திருப்தியும், சொந்த மண் பெரும் அவலத்தைக் கண்டிருந்தாலும் இன்னும் அழியாது வைத்திருக்கும் சில அழகுகளை ரசித்த திருப்தியும் மனதிற்கு ஒரு சின்ன ஆறுதலை தந்தாலும், வானூர்தியில் இருந்து அவன் அவதானித்த தாய் மண்ணின் கோலத்தையும் சிங்கள மண்ணின் கோலத்தையும் ஒப்பிட்ட பார்த்த போதுதான் தன் தாய் மண்ணின் ஏழ்மையையும் அவள் இன்னும் ஓரவஞ்சனையை சந்தித்துக் கொண்டிருப்பதையும் தெளிவாக உணரமுடிந்தது. மனதில் அதை படமாக்கிப் பதிந்தும் கொண்டான். ஐரோப்பாவிலும் சரி சிங்கள மண்ணிலும் சரி கடனோ சொந்தமோ வசதிகள் என்று வாழ்ந்தாலும் அந்நியத்தனம் என்பது மனதுக்குள் தேடாமல் தேடி வரும் ஒன்று. அதை சொந்த மண்ணில் அவன் உணரவே வாய்ப்பிருக்கவில்லை. வசதிகளால் ஏழ்மை என்றாலும் சொந்த மண் மனதுக்கு தரும் திருப்தியால் என்றும் நிறைவானதுவே." சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல் ஆகுமா"...என்ற கவிவரிகளின் யதார்த்தத்தை அனுபவம் தந்த உணர்வுகளால் உள்வாங்கியபடி கவின் கொழும்பு இரத்மனால விமான தளம் விட்டு வெளியே நடக்கிறான்.

எழுதியவர்: தேசப்பிரியன்

http://vannithendral.com/home/index.php?op...7&Itemid=54

இரண்டும் உண்மைச்சம்பவங்கள். மனதை உண்மையில் பாதிக்கும் கதைகள்.

பொலிகண்டி படுகொலைகளுக்கு காரணமாக இருந்த சர்மா எனப்படும் மலையாளி ஒரு ஈழத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டான் எண்று கேள்விப்படேன். அது இன்னும் வேதனையாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தயா நல்ல படைப்பு தொடருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள் தயா! தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மொட்டை ஜீப்பில் போவது எங்களுக்கு கொஞ்சம் பரீட்ச்சியமான முகம்... கப்ரன் ஆறுமுகம்... இந்திய இராணுவத்தின் நுணாவில் படை முகாமின் பொறுப்பதிகாரி... எங்களை திரும்பி பார்த்தது தெரிந்தது அதுக்குள் ஜீப் எங்களை தாண்டி போய் விட்டது...

ஜீப்பின் பின்னால் நாங்கள் எங்களை தாண்டி கொஞ்ச தூரம்தான் ஜீப் போய் இருக்கும்... பெரியதாய் ஒரு வெடியோசை வீதியோரம் இருந்த மருத மர கிளையின் துண்டுகள் எல்லாம் வீதியோரம் சிதற விழுந்தது , வெடியோ எழுந்த புகை மூட்டம் அடங்கத்தான் தெரிந்தது வேகமாக போன ஜீப் அருகில் இருந்த மருதமரத்தில் மோதுப்பட்டு அரவாசி பிரண்ட நிலையில் கிடக்கிறது...

தயா அண்ணா உண்மை கதை போல உள்ளது. மருதுக்கு கிழ்(ஏற்றத்தடியில்) ஒரே கிடங்குக்குள் மூன்று முறை கண்ணி வெடி வைத்த ஒவ்வொரு முறையும் பல இந்திய இராணுவத்தினர் இறந்தனர் :lol: . பிறகு இந்திய இராணுவத்தின் அட்டகாசம் சொல்ல வார்த்தை இல்லை.

  • தொடங்கியவர்

நண்றி நெடுக்ஸ், புத்தன், கு சா அண்ணா...

தயா அண்ணா உண்மை கதை போல உள்ளது. மருதுக்கு கிழ்(ஏற்றத்தடியில்) ஒரே கிடங்குக்குள் மூன்று முறை கண்ணி வெடி வைத்த ஒவ்வொரு முறையும் பல இந்திய இராணுவத்தினர் இறந்தனர் :unsure: . பிறகு இந்திய இராணுவத்தின் அட்டகாசம் சொல்ல வார்த்தை இல்லை.

அதே மணங்குணாய் மருத மரத்தடிதான்... நான் நினைக்கிறன் ஐந்து முறை அதே கிடங்குக்கை வைத்தவர்கள் எண்று....!! எப்படி அடிச்சாலும் அவங்களுக்கு சுறணையே இருந்து இல்லையாம்...

Edited by தயா

மனதை பாதித்த உண்மை சம்பவங்களை எங்களோடும் பகிர்ந்தமைக்கு நன்றி தயா அண்ணா.

நெடுக்ஸ் அண்ணா கொடுத்த பதிவிற்க்கும் நன்றி.

இந்தியன் ஆமி கதை நான் கேட்டது மட்டுமே.ஆனால் வேறு ஞாபகங்கள் இல்லை.சின்னபிள்ளையாக இருந்ததால்.இப்படி அண்ணா,அக்காமார் கதைகள் தான் கண்டால் வாசித்திருக்கிறேன்.நன்றி

  • தொடங்கியவர்

நண்றி சகி..

அட..தயா அண்ணாவும் கதை எழுத வெளிகிட்டியளோ..?? :wub: ..உண்மை சம்பவத்தை மிகை ஊட்டாமல் கதையாக்கிய விதம் அருமை வாழ்த்துக்கள் :wub: ..தொடர்ந்தும் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..(காதல் அநுபவம் இருந்தா அதையும் சேர்த்து தான்)... :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டும் உண்மைச்சம்பவங்கள். மனதை உண்மையில் பாதிக்கும் கதைகள்.

பொலிகண்டி படுகொலைகளுக்கு காரணமாக இருந்த சர்மா எனப்படும் மலையாளி ஒரு ஈழத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டான் எண்று கேள்விப்படேன். அது இன்னும் வேதனையாக இருந்தது.

நீங்கள் சொல்கிற சர்மா சண்டை தொடங்கிய ஆரம்பத்தில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய படைநகர்விற்கு ஒரு பிரிவிற்கு பொறுப்பாக் இருந்தவன். பின்னர் வடக்குபுன்னாலைக் கட்டுவனில் முகாம் அமைத்து பொறுப்பாகவும் இருந்தவன். அந்தச் சமயம்தான் ஒருத்தியை திருமணம் செய்தான். அது இந்திய ஊடகங்களில் பெரிய பிரச்சாரமாக வெளிவந்தது. ஆனால் திருமணம் செய்த அந்தப் பெண் கைலாயம் போய்விட்டார். நீங்கள் சொல்கிற சர்மாவும் இவரும் ஒன்றாஎன்று தெரியவில்லை. மற்றபடி தயா ஆரம்பத்தில் மெட்ராஸ் ரெஜிமென்ரில் இருந்த தமிழர்கள் பலர் போராளிகளிகளிற்கு உதவிசெய்திரந்தனர். அதன் காரணமாகவே மெட்ராஸ் ரெஜிமென் ஆரம்ப முன் நகர்வு தாக்குதலில் இருந்து நிறுத்தப் பட்டு குர்கா ரெஜிமென்ற் பொறுப்பில் கொடுக்கப்பட்டது. தமிழ் அதிகாரிகள் மொழிபெயர்ப்பிற்காக மட்டும் பாவிக்கப்பட்டனர்.

Edited by sathiri

சிறிய கதையாயினும் மனதைத் தொடும் விதமாக எழுதியுள்ளீர்கள், தயா.

பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்தியன் ஆமியின் அனுபவங்கள் இல்லை.ஆணால் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.தயா மற்றும் நெடுகஸ்சின்

பதிவுகள் மனதை கனக்க வைத்தன.

  • தொடங்கியவர்

உற்சாகப்படுத்தியமைக்கு நண்றி இணையவன், சஜீவன் மற்றும் சாத்திரி அண்ணா...!

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தயாவின் பதிவிற்கு நன்றிகள். இந்திய இராணுவத்தில் சில நல்ல தமிழ் உள்ளங்களும் இருந்தார்கள்.

தேசப்பிரியனின் அருமையான பதிவை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் நெடுக்காலபோவான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.