Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணிற்கு வெட்கம் அழகோ..!!

பெண்களுக்கு வெட்கம் அழகோ..?? 25 members have voted

  1. 1. பெண்ணின் நாணம்!!

    • ஆம்
      22
    • இல்லை
      3
  2. 2. இன்றைய பெண்ணிடம் வெட்கம் உளதோ..??

    • ஆம்
      12
    • இல்லை
      13

Please sign in or register to vote in this poll.

Featured Replies

பெண்ணிற்கு வெட்கம் அழகோ..!!

382451730d6834175d0cr4.jpg

எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ணதமிழ் வணக்(கம்) :) ..உங்களை எல்லாம் பார்கக்க எனக்கு வெட்கமாக இருக்குது பாருங்கோ..(என்ன இவனுக்கு என்ன ஆச்சுது எண்டு நீங்க நினைக்கிறது)..எனக்கு விளங்குது..சரி..சரி நான் வெட்கபடாமலே விசயதிற்குள்ள வாரன் என்ன..

அதுக்கு முன்னம் வழமையான "ஜம்" சிந்தனை ஒண்டு சொல்லனும் அல்லோ..இன்றைய "ஜம்" சிந்தனை என்னவெண்டால் பாருங்கோ..

"நாய் எண்டா குரைக்கும்

அதை பார்த்து நாம

குரைக்கலாமோ" :D

இது தான் இன்றைய "ஜம்" சிந்தனை..பிறகு நீங்க தப்பா நினைக்க கூடாது எனக்கும் நாய்களிற்கும் என்னவோ பிரச்சினை எண்டு..சரி என்னை எல்லாரும் ஒரு மாதிரி விளங்குது இதற்கு மிஞ்சியும் நான் அலட்டல்ல பாருங்கோ..

அன்னைக்கு வழமைக்கு மாறாக வேலைக்கு போக கொஞ்சம் நேரம் ஆகிட்டுது..அவசரமா ஓடி போய் "டிரெயினில" ஏறி ஒரு வடிவான பொண்ணிற்கு பக்கத்தில இருந்த சந்தோஷம்...ஆனா என்ன அந்த சந்தோஷம் கொஞ்ச நேரமும் நீடிக்கவில்லை ஏன் எண்டு நீங்க பார்க்கிறது விளங்குது..ஏன் எண்டா நாலைந்து "ஸ்டேசன்" போக எங்கன்ட அப்பு ஏறிட்டார் அல்லோ..

யார் அந்த அப்பு எண்டு உங்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை வேற யார் கந்தப்பு தாத்தா தான்..எண்ட மனசில அடபாவி அப்பு இப்ப பார்த்து ஏறிட்டான் எண்டு நினைத்தாலும்..(அவரை கண்டு சிரித்து கொண்டு குட்மோர்னிங் சொல்ல)..அவர் காலை வணக்கமாம்..(மனசில இருங்கோ அப்பு உங்கன்ட மகள் என்ன சொல்லுறா எண்டு நானும் பார்க்க தானே போறன் எண்டு நினைத்தனான்)..ஆனா சொல்லல்ல...

உடன அப்பு அங்க போய் இருப்போம் எண்டு கூப்பிட நானும் பக்கத்தில இருந்த அழகான பொண்ணை பிரிய மனம் இல்லாமல் பிரிந்தது தான்,அங்க போய் இருந்தா எங்களுக்கு பின்னால் தமிழ் ஆட்கள் தான் எங்கள கண்டவுடன ஒரு "ஆண்டி" சொல்லுறா உவையும் தமிழ் போல தான் இருக்கு ஆங்கிலத்தில கதைகட்டாம்..(இந்த கொடுமை எல்லாத்தையும் கேட்க வேண்டிய நிலை).. :D

ஆனா அப்பு உதை எல்லாம் கவனிக்காம எங்கையோ பார்த்து கொண்டிருக்க..எங்க உவர் பார்க்கிறார் எண்டு பார்த்தா கடைகண்ணால அப்பு பெட்டைகளை பார்க்கிறார்..உடன நான் அப்பு என்ன அப்படி பார்க்கிறியள் எண்டு சொல்ல திகைத்து போன மனிசன் :lol: ..அதுவொண்டுமில்லை உதில நிற்கிற பெட்டையள் யாராச்சிலையும் பெண்மைகுரிய வெட்கம் தெரியுதா பாரும் எண்டு சொல்ல..(இது தான் சாட்டு எண்டு நானும் உற்றுபார்த்தன்)..

உற்று பார்த்ததில எனக்கு வெட்கம் வந்திட்டு எண்டா பாருங்கோ..நானும் உடன அப்பு உவளைவை வெள்ளைகாரி அவையளவையிள போய் வெட்கத்தை பார்க்க சொன்னா எப்படி இருக்கும் எண்டு சொல்ல..உடன அப்பு ஏன் நீர் வெள்ளைகாரியை பார்க்கிறியள்..அங்கால நிற்கிற எங்கள ஆட்களை பாரும் எண்டு.. :lol: (அப்பு அமைதியா இருந்தாலும் எல்லாம் பக்கமும் நோக்கிறார் எண்டு மனதில நினைத்து கொண்டு)..பார்த்தா அவளவைக்கு நாங்க பார்த்தது கூட தெரியாம பசங்க கூட கதை..

உடன கந்தப்பு தாத்தா அந்த காலத்து பெண்களின் வெட்கத்தை ரசிக்கலாம் இதுகளை பார்த்தா என்னத்தை ரசிக்க ஏலும் நான் முந்தி ஊரில டீயூசனிற்கு போகக்க யாழ்கவி எண்டு ஒருவா வாறவா :lol: அவா வெட்கபட்டு நீர் பார்க்கல்ல அது தான் பெண்மைக்கு அழகு..உதுகள் கன்றாவிகளின்ட முகத்தை பார்க்கவே சகிக்கல எண்டு சொல்ல..நாம எங்க காலத்து பொண்ணுகளை விட்டு கொடுக்க ஏலாது தானே..

நானும் எண்ட பங்கிற்கு..கந்தப்பு தாத்தா பொண்ணுகளிற்கு வெட்கம் அழகு எண்டு சொல்ல ஏலாது பாருங்கோ அது உங்க காலதிற்கு பொருத்தமா இருந்திருக்கும்,இப்பத்தையான?? காலதிற்கு பொண்ணுங்க எல்லாம் "சிமார்ட்டா" இருக்கனும் அப்ப தான் பசங்களிற்கு பிடிக்கும் பாருங்கோ.. :wub: (உங்க காலத்து பல்லவியை இப்ப பாடாதையுங்கோ)..எண்டு நான் சொல்ல கந்தப்பு தாத்தாவிற்கு கோபம் வர..(எனக்கு சரியான சந்தோஷம்)..

ஓமோம் "சிமார்ட்டா" இருங்கோ "பராட்டாவா" இருங்கோ பிரச்சினை இல்லை..முதலில பெண்ணிற்குரிய இலட்சணம் வெட்கம் இது இருக்கனும்.இப்ப வெட்கம் கூட செயற்கைதனமா போயிட்டு பொண்ணுகளை பார்த்து பெடியங்க தான் வெட்கபடுறாங்க இந்த கன்றாவி எல்லாத்தையும் பார்க்க வேண்டியதா போயிட்டு எண்டு மனிசன் ரொம்பவே கவலைபட தொடங்கிட்டார் பாருங்கோ..

உடன நான் கேட்டன் அப்பு உது கதைக்க சரிபட்டு வரும் பாருங்கோ..ஆனா நடைமுறையில் எடுத்து கொண்டா பாருங்கோ வெட்கத்தை வைத்து என்னத்தை சாதிக்க ஏலும் எண்டு..??..உடனே அவர் வெட்கத்தை வைத்து ஒன்னும் சாதிக்காதையுங்கோ ஒரு பெண்ணிற்கு அழகு வெட்கமும் தான் எண்டு சொல்ல... :D

நான் சும்மா விடுவனே..அப்ப குஞ்சாச்சி உங்களை பார்த்து வெட்கபட்டதை பார்த்து தான் கல்யாணம் கட்டினியளே??.. எண்டு கேட்க..அதை ஏன் கேட்பான்,நான் பொண்ணு பார்க்க போகக்க குஞ்சாச்சிக்கு பக்கத்தில இருந்த பொண்ணு என்னை பார்த்து வெட்கபட.நான் அது தான் பொண்ணு எண்டு சொல்லி தலையை ஆட்ட இன்று வரையில தலையை ஆட்டினபடியே தான் பாரும்..

எண்டு அவர் தண்ட புலம்பலை ஆரம்பிக்க...அவுஸ்ரெலிய இன்ப தமிழ் வானொலியில் "குட்மோர்னிங் அவுஸ்ரெலியா" நிகழ்சியில் இந்த பாடல் ஒலித்து கொண்டிருந்தது... :wub:

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

தெய்வம் ஏதுமில்லை

நடந்தத்தையே நினைத்திருந்தால்

வாழ்வில் அமைதியில்லை"

அதே நேரம் ..நான் இறங்க வேண்டிய தரிப்பிடம் வர..சரி அப்பு போயிற்று வாரன்..உந்த யாழில பொன்னையா எண்டு ஒருத்தர் வாறார் அவர் யாரும் எண்டு விசாரியுங்கோ எண்டு போட்டு இறங்கினது தான்..

சரி..எனி நான் விசயதிற்கு வாரன் அதாவது நீங்க இதை பத்தி என்ன நினைக்கிறியள்..??..அது தான் பெண்களுக்கு வெட்கம் தேவையா..??..இல்லையா??..மற்றும் இத்தகைய காலத்து பெண்களுக்கு வெட்கம் இல்லை எண்டு நான் சொல்லவில்லை நம்ம அப்பு சொல்வதை பத்திய உங்கள் கருத்துகளையும் ஒருக்கா சொல்லி விட்டு போங்கோ நீங்க ஒருத்தரும் வெட்கபடாமல் பாருங்கோ.. :)

உங்களுக்கு வெட்கமாக இருந்தா மேல உங்கன்ட வாக்கையும் ஒருக்கா குத்தி போட்டு போங்கோ என்ன..(கள்ள வாக்குகளும் வரவேற்கபடுகிறது)..

அப்ப நான் வரட்டா!!

  • Replies 50
  • Views 10.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கோடி அழகு.. அவள் அவளை ரசிப்பவனிடத்தில் வெட்கப்படும் போது மட்டும். :D

யார் சொன்னது வெள்ளைக்காரிகளுக்கு வெட்கம் வராது என்று. வெள்ளைக்காரியை சந்திக்கும் போது கண்ணோடு கண் வைச்சுப் பேசுங்கோ.. அல்லது பாருங்கோ.. அவை அழகா வெட்கப்படுறது தெரியும்..!

அதுமட்டுமில்லாம.. பெண்களுக்கு யாரைக் கண்டால் வெட்கப்படனும் என்றிருக்குப் போல. ஏன்னா அவங்க எல்லாருக்கும் வெட்கப்படமாட்டாங்க. எல்லாத்துக்கும் வெட்கப்படமாட்டாங்க. வெட்கப்படுற மாதிரி ஏதாச்சும் நடந்தா வெட்கப்படுவாங்க.

ஒரு நாளும் ஆணோ பெண்ணோ நல்லாப் பழகினவையிட்ட இலகுவில வெட்கப்பட மாட்டினம். அதால நண்பர்களோட கதைச்சுக் கொண்டு நிற்கிற பொம்பிளப் பிள்ளையள வைச்சு அவை வெட்கப்படுறதில்ல என்று நினைக்கப்படாது.

இன்னொரு விசயம் பாருங்கோ.. ஆம்பிளப் பிள்ளையளட்டையும் கொஞ்சோட்டு பெண்மைத்தனம் இருக்குது. அதில உந்த வெட்கமும் கொஞ்சோண்டு இருக்குது..! :lol:

Edited by nedukkalapoovan

பெண்களுக்கு வெட்கம் இருக்கோ இல்லையோ என்று வாக்கெடுப்பதற்கு ஒரு கதையையும் சுவாரசியமாக சொல்லி வாக்கெடுப்பை அலங்கரிச்சு இருக்கிறியள்

:lol:

பாவம் கந்தப்பு... ஜம்முத்தம்பி எனக்கொரு சந்தேகம். ஏன் கந்தப்புவை இழுக்கிறியள். அவர் வீட்டில் தான் குஞ்சாச்சிட்ட அடி வாங்குறாஅர் என்றால் யாழில் நீங்களுமா.......... பாவம் ல. :lol:

அதை ஏன் கேட்பான்,நான் பொண்ணு பார்க்க போகக்க குஞ்சாச்சிக்கு பக்கத்தில இருந்த பொண்ணு என்னை பார்த்து வெட்கபட.நான் அது தான் பொண்ணு எண்டு சொல்லி தலையை ஆட்ட இன்று வரையில தலையை ஆட்டினபடியே தான் பாரும்..

சரி இப்ப என்ன பொண்ணுகளுக்கு வெட்கம் இருக்கோ என கேட்கிறீங்க அபப்டித்தானே

ஜம்மு அந்தக்காலத்தில் பொண்ணுக எப்படி இருந்தாங்களோ நானறியேன். ஆனால் அவங்க இந்தக்காலத்திலை எது வந்தாலும் தாங்கும் சக்தியும் எதிர்க்கும் சக்தியும் கூடுதலாக நிரம்பி இருக்குது. :lol:

இப்ப இளம் சமுதாயத்தில் பெண்களிடம் வெட்கம் இருந்தாலும் அதை எல்லோரிடமும் எல்லா இடத்திலும் காட்டிக்க முடியாது தானே.

வெட்கம் என்பது ஒரு உணர்வு. அந்த உணர்வு எப்போதும் வராது எல்லார் முன்னிலையிலும் வராது.

அந்த உணர்வும் இடம் பொருள் காலம் பார்த்துதான் தானாக வரும் என்றால் பாருங்கோவன். இந்த வெட்கம் ஒரு பெண்ணுக்கு தான் வரும் என்றில்லை. ஆணுக்கும் வரும். :wub:

உ+ம்:- ஒரு ஆண்கள் பாடசாலைக்கு ஒரு Train Teacher(miss) படிப்பிக்க வந்துட்டா என்று வையுங்களன். ஒரு வகுப்புக்கு அவா பாடம் எடுக்கிறா எனில் அங்கு ஒரு சிலர் அவ்வாசிரியை கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வெட்கப்படுவார்கள். அங்கு அந்த வெட்கபப்டும் ஆணுக்கு அவனின் எண்ணத்தின் சிந்தனையை பொறுத்து வரும் வெட்கம். (சிலவேளை அவன் நினைத்திருக்கலாம் அச்சோ ரீச்சர் என்ன நினைப்பாவோ , அல்லது நான் சொல்லும் விடை சரியோ தெரியாதே, சக மாணவர்கள் என்ன நினைப்பார்களோ) இவ்வாறான காரணங்களாலும் வெட்கம் வரலாம். இதே பெண்களுக்கும் வரும். இது பயம் இல்லை. இதுவும் ஒரு வகையான வெட்கம் தான். :D:wub:

அதே போல ....... தற்காலப் பெண்கள் எடுத்ததுக்கெல்லாம் வெட்கப்படணும் என்றால் அவர்கள் அடுப்பூதும் (அக்காலப்பெண்கள்- எல்லோரும் அப்படியல்ல) பெண்களாக தான் இருக்கணும். ஆனால் இப்போதுதான் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்கின்றனரே. அதுக்காக பெண்களுக்கு வெட்கம் இல்லை என்றில்லை. ஆனால் அது எல்லோரிடத்திலும் வராது. :D

  • கருத்துக்கள உறவுகள்

தூயாவின்ட ஊடாங்சம்பலைத் தான் யம்முவுக்கு சாப்பிடக்குடுக்க வேணும்.

பெண்களுக்கும் மட்டுமல்லா ஆண்களுக்கும் வெட்கம் வரும்.

நானும் ஒரு காலத்தில வெட்கப்பட்டேன்.

அது ஒரு இனிய கனாக் காலம். ம்ம்ம்ம்.....

Edited by கந்தப்பு

உ+ம்:- ஒரு ஆண்கள் பாடசாலைக்கு ஒரு Train Teacher(miss) படிப்பிக்க வந்துட்டா என்று வையுங்களன். ஒரு வகுப்புக்கு அவா பாடம் எடுக்கிறா எனில் அங்கு ஒரு சிலர் அவ்வாசிரியை கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வெட்கப்படுவார்கள்

வெண்ணிலா.......யார் சொன்னது உங்களுக்கு......? :D

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல ....... தற்காலப் பெண்கள் எடுத்ததுக்கெல்லாம் வெட்கப்படணும் என்றால் அவர்கள் அடுப்பூதும் (அக்காலப்பெண்கள்- எல்லோரும் அப்படியல்ல) பெண்களாக தான் இருக்கணும். ஆனால் இப்போதுதான் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்கின்றனரே. அதுக்காக பெண்களுக்கு வெட்கம் இல்லை என்றில்லை. ஆனால் அது எல்லோரிடத்திலும் வராது.

எல்லாத்திலும் அந்தக் காலப் பெண்கள்.. இந்தக் காலப் பெண்கள் என்று இலகுவாக வகுத்திடுறீங்க.. ஆனால் ஆண்களை எந்தக் காலத்துக்கும் ஒரு வகைக்குள்ள தான் வைச்சுப் பார்க்குது இந்த பெண்ணினம்.. அது ஏன்..???!

பெண்கள் கூர்ப்பில கீர்ப்பில பின்னுக்கு நின்றிட்டு.. நேற்றுத்தான் முன்னுக்கு வந்து.. முந்தினவையோ..! :lol:

திறமை எல்லா மனிதரிடமும் இயல்பானது. பெண்களுக்கும் அதை இனங்காட்டி வளர்க்க வேண்டியதும்.. பெண்களையும் சமூகத்தில் அவங்கட தேவையை அவங்களே தீர்க்க வகை செய்விக்கிறதும்.. நவீனத்துவம் அல்ல. அதுதான் இயற்கையின் நியதியே. எங்கேயாவது நான் பெண் என்றிவிட்டு ஏதாவது ஒரு விலங்கு வீட்டுக்க குந்தி இருக்குதா..???!

ஆனால் அப்படிக் குந்தி இருந்திட்டு.. இப்ப அவர்களின் திறமையை அவர்களின் இயற்கையான தன்மையை இனங்காட்டி அவையை செயற்படுங்க என்று சொன்னதை வைச்சு... இன்று செயற்படுறதை அடிப்படையா கொண்டு, பெண்கள்.. ஏதோ அபரிமிதமான மாற்றம் கண்டுட்டினம் என்றது ஒன்றும் அதிசயமான விடயமாகப் பார்க்கப் பட வேண்டியதில்லை.

சிந்திச்சுப் பாருங்க.. இன்றைய உலகில.. அன்றையது போல பெண்கள் வீட்டுக்க உட்கார்ந்திருக்க.. ஆண்கள் தான் எல்லாம் செய்யனும் என்று இருந்திருந்தா.. உலகில் எவ்வளவு சுமையை ஆண்கள் கூடுதலா சுமக்க நேர்ந்திருக்கும் என்று. அதுமட்டுமன்றி பெண்கள் தங்கள் இயற்கையான இயல்பான திறமையைக் கூட இனங்காணாம வாழ்ந்து மடிஞ்சிருப்பாங்க.

இன்று. அந்த இயற்கையான இயல்பைப் பாவிச்சு பெண்கள் சுயமா தங்களைத் தாங்களே கவனிச்சு தேவைகளைப் பூர்த்தி செய்து வாழப் பழகிட்டாங்க என்ற உடன.. தாங்க பெரிய புதிய உலகத்து ஜீவராசிகள் என்றது போல பெண்கள் நடந்துக்கிறது.. ரெம்ப ஓவர். அதுவும் பெண்களைப் பெண்களே தாழ்த்திக்கிறது ரெம்ப ரெம்ப ஓவர்.

இயல்பாவே நடந்துக்குங்க.. நீங்களும் மனிசர் தானே. மனித இயல்புகளை இயற்கையாவே வெளிக்காட்டி வாழப் பழகிக்கிட்டாலே போதும்.. பெண் பெண்ணாகவும்.. மனிதனாகவும் வாழ்ந்திடுவாள். ஆண் ஆணாகவும் மனிதனாகவும் வாழ்ந்திடுவான்..! :D:D

Edited by nedukkalapoovan

வெண்ணிலா.......யார் சொன்னது உங்களுக்கு......? :lol:

:D சேர்மார் அவ்ந்தால் நாம அபப்டித்தானாக்கும். அதை அப்படியே மாத்தி சொன்னனாக்கும் :D

எல்லாத்திலும் அந்தக் காலப் பெண்கள்.. இந்தக் காலப் பெண்கள் என்று இலகுவாக வகுத்திடுறீங்க.. ஆனால் ஆண்களை எந்தக் காலத்துக்கும் ஒரு வகைக்குள்ள தான் வைச்சுப் பார்க்குது இந்த பெண்ணினம்.. அது ஏன்..???!

திறமை எல்லா மனிதரிடமும் இயல்பானது. பெண்களுக்கும் அதை இனங்காட்டி வளர்க்க வேண்டியதும்.. பெண்களையும் சமூகத்தில் அவங்கட தேவையை அவங்களே தீர்க்க வகை செய்விக்கிறதும்.. நவீனத்துவம் அல்ல. அதுதான் இயற்கையின் நியதியே. எங்கேயாவது நான் பெண் என்றிவிட்டு ஏதாவது ஒரு விலங்கு வீட்டுக்க குந்தி இருக்குதா..???!

அந்தக்காலத்து பெண் இக்காலத்துப் பெண் என பெண்ணினம் வரையறுக்கவில்லை.

மாறாக இப்போ இருக்கும் அக்காலத்து ஆணினத்தை கேட்டுப்பாருங்கள் அந்தக்காலத்திலை பொண்ணுக எபப்டி இருந்ததுகள் இந்தக்காலத்துல எப்படி இருக்குதுகள் என என்னமோ இக்காலத்து பெண்கள் அடக்கமின்றி திரியுதுகள் என சொல்லுவினம். சரி இங்கை இருக்கிறவர்களில் உங்கள் தலைமுறையில் எத்தனை வீதமான பெண்கள் வேலைக்கு சென்றிருப்பினம் என சொல்லுங்கோ பார்ப்பம். :lol:

ஆகவே அந்தக்காலத்திலை அடக்குமுறை இல்லாவிடிலும் பெண்கள் தாங்களாகவே அடங்கி போனார்கள்.

இந்தக்காலத்தில் அடக்குமுறை இருந்தாலும் பெண்கள் அடங்கிபோவதில்லை. இவ்வளவுதான் வேற்றுமை

:wub: எங்கேயோ படிச்ச நினைவு... வடிவாக தெரியவில்லை சிங்கத்தில் ஆணினமோ / பெண்ணினமோ எந்த இனமென தெரியவில்லை ஏதோ ஒரு இனம் தானாம் இரைதேட செல்லுமாம் உண்மையோ? :D மற்ற இனம் வீட்டுக்குள்ளை உக்காந்திருக்குமாமே :D

நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு பெண் நாய்(டிங்கி) வளர்க்கினம் அவர்கள் அந்த டிங்கியை வெளியில் விடுவதே இல்லை. ஏன்னா தெருநாய்கள் தம்வீட்டு டிங்கியை விட்டுவைக்காதுகள் நாய்வேலையை காட்டிடுங்களாம். அதனாலை தங்கட டிங்கி நாய்க்குட்டி போடுமாம் இனம் பெருகிடுமாம். அப்படி வளர்க்கினம். அதுபோல அந்த டிங்கியும் வெட்கப்பட்டு வெட்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே இருக்குது, உது தேவையா? உதுல வேறை கள்ளன் வந்தாலும் டிங்கிக்கு தெரியாது. நான் போனாலும் அந்த டிங்கி குரைக்காது :D

உது போல பெண்ணினத்தையும் வீட்டுக்குள் முடக்கலாமோ சொல்லுங்கோ? முடக்கினால் அச்சோ அபப்டியான பொண்ணுக நல்லாக வெட்கபப்டுவினம், ஏன்னா வெளியுலகமே தெரியாது பாருங்கோ.

ஆகவே வீட்டுக்குள் முடங்கியிருக்கும் பெண்ணினமே நல்லவள் வெட்கம் நல்லா வரும். வெளியில் சென்று வேலை தேடுபவளுக்கு வெட்கம் இல்லை. அவள் .............................., நல்ல ஆண்வர்க்கம் பா. :wub::lol::lol::)

வெட்கம் எல்லோருக்கும் பொதுவான ஒரு உணர்வு

இங்கை ஆண் பெண் பெண்ணடிமை , ஆணடிமை என வாதிடாதீங்கோ. வாசித்து வாசித்து அலுத்துட்டுது :)

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலத்து பெண் இக்காலத்துப் பெண் என பெண்ணினம் வரையறுக்கவில்லை.

மாறாக இப்போ இருக்கும் அக்காலத்து ஆணினத்தை கேட்டுப்பாருங்கள் அந்தக்காலத்திலை பொண்ணுக எபப்டி இருந்ததுகள் இந்தக்காலத்துல எப்படி இருக்குதுகள் என என்னமோ இக்காலத்து பெண்கள் அடக்கமின்றி திரியுதுகள் என சொல்லுவினம். சரி இங்கை இருக்கிறவர்களில் உங்கள் தலைமுறையில் எத்தனை வீதமான பெண்கள் வேலைக்கு சென்றிருப்பினம் என சொல்லுங்கோ பார்ப்பம். :D

ஆகவே அந்தக்காலத்திலை அடக்குமுறை இல்லாவிடிலும் பெண்கள் தாங்களாகவே அடங்கி போனார்கள்.

இந்தக்காலத்தில் அடக்குமுறை இருந்தாலும் பெண்கள் அடங்கிபோவதில்லை. இவ்வளவுதான் வேற்றுமை

:wub: எங்கேயோ படிச்ச நினைவு... வடிவாக தெரியவில்லை சிங்கத்தில் ஆணினமோ / பெண்ணினமோ எந்த இனமென தெரியவில்லை ஏதோ ஒரு இனம் தானாம் இரைதேட செல்லுமாம் உண்மையோ? :D மற்ற இனம் வீட்டுக்குள்ளை உக்காந்திருக்குமாமே :wub:

நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு பெண் நாய்(டிங்கி) வளர்க்கினம் அவர்கள் அந்த டிங்கியை வெளியில் விடுவதே இல்லை. ஏன்னா தெருநாய்கள் தம்வீட்டு டிங்கியை விட்டுவைக்காதுகள் நாய்வேலையை காட்டிடுங்களாம். அதனாலை தங்கட டிங்கி நாய்க்குட்டி போடுமாம் இனம் பெருகிடுமாம். அப்படி வளர்க்கினம். அதுபோல அந்த டிங்கியும் வெட்கப்பட்டு வெட்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே இருக்குது, உது தேவையா? உதுல வேறை கள்ளன் வந்தாலும் டிங்கிக்கு தெரியாது. நான் போனாலும் அந்த டிங்கி குரைக்காது :)

உது போல பெண்ணினத்தையும் வீட்டுக்குள் முடக்கலாமோ சொல்லுங்கோ? முடக்கினால் அச்சோ அபப்டியான பொண்ணுக நல்லாக வெட்கபப்டுவினம், ஏன்னா வெளியுலகமே தெரியாது பாருங்கோ.

ஆகவே வீட்டுக்குள் முடங்கியிருக்கும் பெண்ணினமே நல்லவள் வெட்கம் நல்லா வரும். வெளியில் சென்று வேலை தேடுபவளுக்கு வெட்கம் இல்லை. அவள் .............................., நல்ல ஆண்வர்க்கம் பா. :lol:

வெட்கம் எல்லோருக்கும் பொதுவான ஒரு உணர்வு

இங்கை ஆண் பெண் பெண்ணடிமை , ஆணடிமை என வாதிடாதீங்கோ. வாசித்து வாசித்து அலுத்துட்டுது :lol:

என்னைப் பொறுத்தவரை அந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கும் இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கும் இடையில பெரிய வேறுபாடு இருப்பதா தெரியவில்லை.

அந்தக் காலத்தில விவசாயம் பிரதான தொழிலா இருந்திச்சு. பெண்கள் வயலில இறங்கினாங்க.. ஆண்களோட..! இந்தக் காலம் தொழில்நுட்பம் வளர்ந்த காலமாச்சு. கோட் சூட் போட்டிட்டு... ஆபீஸில குந்திட்டாங்க.. பெண்கள்..! இதைவிட எனக்கு பெரிசா எதுவும் தெரியல்ல..!

அன்றும் நிலக்கரிச் சுரங்கங்களில ஆண்கள் பெரும்பாலும் மாரடிச்சாங்க.. இப்பவும் அவங்க தான் மாரடிக்கிறாங்க. அன்றும் எண்ணை அகழ்வுகளில் ஆண்கள் தான் மாரடிச்சாங்க.. இப்பவும் அவங்க தான் மாரடிக்கிறாங்க.

பெண்கள் அன்று இன்றும் உடல் உழைப்புக் குறைந்த வேலைகளைத்தான் அதிகம் செய்யுறாங்க. பல உடல் உழைப்புக் கடினமான வேலைகளில் பெண்கள் இன்னும் ஈடுபடுவதா தெரியல்ல.

கல் குவாரிகளில் வேலை செய்யும் பெண்கள் கூட ஆண்களை விட கடினக் குறைவான வேலையே செய்யுறாங்க.

நிர்வாகத்துறையில பெண்கள் அதிகம் நுழைஞ்சிருக்கினம்.. காரணம்.. அது வியர்வை சிந்தாத தொழில் என்பதால்..! எதிர்காலத்தில் அவற்றை றோபோக்களே செய்யும் நிலை தோன்றும்.

இதே நிலைதான் அன்றும்.. அது வேறு தளத்தில்.. இன்று இன்னோர் தளத்தில். ஆனால் உலகுக்குத் தேவையான மனித வலுவை உலகு பெண்களிடமும் வேலை வாங்கிப் பெற்றுக் கொள்வது மனித சமூகத்துக்கு ஆரோக்கியமான ஒன்றே..!

ஆனால் பாருங்கள் பெண்மை என்பதும் ஆண்மை என்பது மாறுபடுவதல்ல. அது மனிதனுக்கு இயற்கையாக உள்ள இயல்புகள். அதை அகற்றிக்கனும் என்பது அவசியமில்லை. நாணம் கொண்டால்.. வேலைத் திறன் போயிடும்.. வெட்கப்பட்டால்.. மதிநுட்பம் குறைந்திடும் என்று ஒரு தொடர்பு இருப்பதாக காட்டிக் கொள்ளத் தேவையில்லை.

எப்படி பொட்டு வைப்பதால் பெண்களின் வீரம் குறைந்திடும் என்று கருதுகிறார்களோ.. அப்படி ஒரு வகை மூட நம்பிக்கைதான் இதுவும். அன்றை போர்க்களங்களில் வீரத்திலகமிட்டு.. ஆண்களையே போருக்கு அனுப்பி வைத்தனர் துணைவியர். ஆனால் இன்றைய துணைவியர்.. திலகத்தை அணிவது.. வீரக்குறைவு.. திறமைப் பறிப்பு என்று ஓலமிடுகின்றனர்.

நான் இப்படியான போலித்தனமான ஒலங்களையும் பெண்கள் ஏதோ இயலாத நிலையில் இருந்து எழுந்து சாதிப்பதாகவும் காட்டுவதையே வெறுக்கிறேன். பெண்ணுக்கும் ஆணைப் போல எல்லாம் ஆகும். அப்படி இருந்தும்.. அதைப் பயன்படுத்திக்கிறதை.. பெரிசு படுத்தி.. அதையே காரணம் காட்டி பெண்ணுக்குரிய இயல்புகளை அழித்து வாழனும் என்ற அவசியம் இல்லை. அதேபோல் ஆணுக்குரிய இயல்பை இழந்து வாழனும் என்ற அவசியமில்லை என்பதே என் கருத்து.

எந்தத் திறமையும் ஆணோ பெண்ணோ.. நாண வேண்டியதற்கு நாணுவதாலோ.. வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கிப்பதாலோ.. தகர்ந்து போய் விடாது. அது இயற்கையின் இயல்பு. அதை செயற்கையாக அழித்து.. தம்மை.. சக்தி மிக்க.. மனிதர்களாக போலித் தோற்றம் காட்டத் தேவையில்லை என்பது எனது எண்ணப்பாடு.

உங்க டிங்கியை நீங்கள் அடக்கி வைக்காவிட்டால்.. அது இயற்கையின் விதிப்படி ஒழுகும். அதற்கு நீங்கள் குட்டி போடவோ.. அதை வளர்க்கவோ கற்றுத்தரத் தேவையில்லை. மனிதன் தனது தேவைக்காக டிங்கியின் இயற்கை இயல்பைப் பறிக்கிறான். இதையேதான் இக்காலப் பெண்கள் நாம் என்ற தோறணையில்.. போலித்தனமான காரணமற்ற நம்பிக்கைகளூடு பெண்களும் செய்ய விளைகின்றனர்..!

அதைவிடுத்து இயல்போடு.. மனிதராக.. அவரவருக்குள்ள திறமைகளை அறிவுதிறனை... ஆற்றலை வளர்த்து செயற்படுவதே அவசியமானது. அப்படிச் செயற்படும் போது.. இந்த அன்றைய இன்றைய பாகுபாடுகள்.. அர்த்தமற்றவை என்பது உணரப்படும். காரணம்.. அன்றை உலகின் தேவை வேறு. இன்றைய உலகின் தேவை வேறு. இன்றைய உலகில் நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமானது போல அன்றை உலகுக்கு அது கட்டாயம். அதற்காக ஒன்று மற்றதை விட குறைந்தது.. அல்லது பலவீனமானது என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. நாளைய பெண்கள்.. ஏன் மனிதர்கள் இதை விட அதிகம்.. செயற்படு திறனைக் கொண்டிருக்க வேண்டிய நிலை எழலாம். அதற்காக மனிதன் என்பவனுக்குரிய இயற்கையின் இயல்பை இழந்து நிற்கத்தான் வேண்டுமா..??!

பல பெண்கள் சிந்திக்க வேண்டிய செய்தி இது..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுங்க வெட்கத்தை தேட கந்தப்புவுக்கும் யம்முவுக்கம் போட்டியா.

பொண்ணுங்க வெட்கப்படனும். அதுவும் கன்னம் சிவக்க வெட்கப் படனும். ஆனால்........... (கறுப்பிக்கு கன்னம் சிவக்காது)

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுங்க வெட்கத்தை தேட கந்தப்புவுக்கும் யம்முவுக்கம் போட்டியா.

பொண்ணுங்க வெட்கப்படனும். அதுவும் கன்னம் சிவக்க வெட்கப் படனும். ஆனால்........... (கறுப்பிக்கு கன்னம் சிவக்காது)

வெட்கம் நாணம் என்பது இயற்கையான குணவியல்புகள். அவற்றைக் கொன்றால் தான் நவீன பெண் என்பது அர்த்தமல்ல..! அது ஒரு தவறான புரிதல்..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணிற்கு வெட்கம் அழகா?

பெண்ணிற்கு வெட்கம் இருக்கிறது . அவரவர் பார்க்கும் பார்வையில் ?,........(கண்ணோட்டத்தில் )

எந்த காலப்பெண்களிடமும் வெட்க்கம் இருக்கிறது. அது கணவனிடமோ அல்லது காதலனிடமோ காட்டும் நாணம் ரொம்பவே அழகானது :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரிடமும் வெட்கம் உண்டு ஆனால் அவர்கள் அதை காட்டும் இடமும் ஆட்களும் தான் வித்தியாசம் என்று நினைக்கிறேன்.

என்ன ஜம்மு இன்னுமா உங்கட புகையிரத நிலைய சந்திப்புகளை விடவில்லை??? :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெட்கம் என்பது எல்லோரிடமும் உண்டு, சிலபேருக்கு அது குறைவாகவும், அதிகமாகவும் இருக்கலாம். பெண்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் இப்போது ஆண்களுடன் சகஜமாகவே பழகுகிறார்கள். வெட்கத்தனம் அவர்களிடம் குறைந்துகொண்டு வருகிறது என்பது தெரிகிறது, ஏன் என்றால் முன்பெல்லாம் பெண்கள் தெரியாதவர்களுடன் கதைக்கத் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லையே.

ஆண்களிற்கு வெட்கம் மிகவும் குறைவென்று ஓர் கருத்து உள்ளது, ஆனால் இக்கருத்து தவறானது என்று என்னால் அடித்துக் கூற முடியும்! ^^

  • தொடங்கியவர்

கோடி அழகு.. அவள் அவளை ரசிப்பவனிடத்தில் வெட்கப்படும் போது மட்டும்.

யார் சொன்னது வெள்ளைக்காரிகளுக்கு வெட்கம் வராது என்று. வெள்ளைக்காரியை சந்திக்கும் போது கண்ணோடு கண் வைச்சுப் பேசுங்கோ.. அல்லது பாருங்கோ.. அவை அழகா வெட்கப்படுறது தெரியும்..!

அதுமட்டுமில்லாம.. பெண்களுக்கு யாரைக் கண்டால் வெட்கப்படனும் என்றிருக்குப் போல. ஏன்னா அவங்க எல்லாருக்கும் வெட்கப்படமாட்டாங்க. எல்லாத்துக்கும் வெட்கப்படமாட்டாங்க. வெட்கப்படுற மாதிரி ஏதாச்சும் நடந்தா வெட்கப்படுவாங்க.

ஒரு நாளும் ஆணோ பெண்ணோ நல்லாப் பழகினவையிட்ட இலகுவில வெட்கப்பட மாட்டினம். அதால நண்பர்களோட கதைச்சுக் கொண்டு நிற்கிற பொம்பிளப் பிள்ளையள வைச்சு அவை வெட்கப்படுறதில்ல என்று நினைக்கப்படாது.

இன்னொரு விசயம் பாருங்கோ.. ஆம்பிளப் பிள்ளையளட்டையும் கொஞ்சோட்டு பெண்மைத்தனம் இருக்குது. அதில உந்த வெட்கமும் கொஞ்சோண்டு இருக்குது..!

ஓ..அப்படியே நெடுக்ஸ் தாத்தா..அவளை ரசிப்பவனிடத்தில இந்த காலத்து பொண்ணுங்க எங்க தாத்தா வெட்கபடுறாங்க பாருங்கோ..??..(ஏதோ மிருகத்தை பார்த்த மாதிரி அல்லோ அவையின்ட பார்வையே இருக்கு)..பிறகு வெட்கபடுறதோ என்னால முடியல. :icon_mrgreen: .

ம்ம்..நான் வேலையிலும் சரி பல்கலைகழகத்திலும் சரி உந்த வெள்ளைகார பெட்டைகளை வடிவா உற்று பார்க்கிறனான் பாருங்கோ..(பிறகு என்ன தப்பா நினைக்கிறதில்ல)..அவளவை வந்து அலம்ப தொடங்கினா நான் தான் வெட்கபடுறன் தாத்தா..உதுவே எனக்கு பெரிய பிரச்சினையா இருக்கு..

வெட்கபடுற மாதிரி நடந்தா வெட்கபடுறது பெண்ணிற்கு அழகல்ல அல்லோ..பெண்ணின்ற்கு வெட்கமும் ஓரழகு தானே.(அப்படியாயின் அவளின் நாணம் முகத்தில் தெரியணும் அல்லோ)..??..இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள் நெடுக்ஸ் தாத்தா..?? :lol:

ஒமோம் ஆம்பிளை பிள்ளைகளிளுக்கு உந்த வெட்கம் இருக்கு அது எப்ப வரும் எண்டால் பாருங்கோ..தனியே தெரியாத ஒரு பெண்ணை சந்திக்கும் போது..(நமக்கே தெரியாம எதைச்சையா வரும்)..அதுவே கூட்டமா இருந்தா வரவே வராது என்ன தாத்தா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

பெண்களுக்கு வெட்கம் இருக்கோ இல்லையோ என்று வாக்கெடுப்பதற்கு ஒரு கதையையும் சுவாரசியமாக சொல்லி வாக்கெடுப்பை அலங்கரிச்சு இருக்கிறியள்

பாவம் கந்தப்பு... ஜம்முத்தம்பி எனக்கொரு சந்தேகம். ஏன் கந்தப்புவை இழுக்கிறியள். அவர் வீட்டில் தான் குஞ்சாச்சிட்ட அடி வாங்குறாஅர் என்றால் யாழில் நீங்களுமா.......... பாவம் ல.

சரி இப்ப என்ன பொண்ணுகளுக்கு வெட்கம் இருக்கோ என கேட்கிறீங்க அபப்டித்தானே

ஜம்மு அந்தக்காலத்தில் பொண்ணுக எப்படி இருந்தாங்களோ நானறியேன். ஆனால் அவங்க இந்தக்காலத்திலை எது வந்தாலும் தாங்கும் சக்தியும் எதிர்க்கும் சக்தியும் கூடுதலாக நிரம்பி இருக்குது.

இப்ப இளம் சமுதாயத்தில் பெண்களிடம் வெட்கம் இருந்தாலும் அதை எல்லோரிடமும் எல்லா இடத்திலும் காட்டிக்க முடியாது தானே.

வெட்கம் என்பது ஒரு உணர்வு. அந்த உணர்வு எப்போதும் வராது எல்லார் முன்னிலையிலும் வராது.

அந்த உணர்வும் இடம் பொருள் காலம் பார்த்துதான் தானாக வரும் என்றால் பாருங்கோவன். இந்த வெட்கம் ஒரு பெண்ணுக்கு தான் வரும் என்றில்லை. ஆணுக்கும் வரும்.

உ+ம்:- ஒரு ஆண்கள் பாடசாலைக்கு ஒரு Train Teacher(miss) படிப்பிக்க வந்துட்டா என்று வையுங்களன். ஒரு வகுப்புக்கு அவா பாடம் எடுக்கிறா எனில் அங்கு ஒரு சிலர் அவ்வாசிரியை கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வெட்கப்படுவார்கள். அங்கு அந்த வெட்கபப்டும் ஆணுக்கு அவனின் எண்ணத்தின் சிந்தனையை பொறுத்து வரும் வெட்கம். (சிலவேளை அவன் நினைத்திருக்கலாம் அச்சோ ரீச்சர் என்ன நினைப்பாவோ , அல்லது நான் சொல்லும் விடை சரியோ தெரியாதே, சக மாணவர்கள் என்ன நினைப்பார்களோ) இவ்வாறான காரணங்களாலும் வெட்கம் வரலாம். இதே பெண்களுக்கும் வரும். இது பயம் இல்லை. இதுவும் ஒரு வகையான வெட்கம் தான்.

அதே போல ....... தற்காலப் பெண்கள் எடுத்ததுக்கெல்லாம் வெட்கப்படணும் என்றால் அவர்கள் அடுப்பூதும் (அக்காலப்பெண்கள்- எல்லோரும் அப்படியல்ல) பெண்களாக தான் இருக்கணும். ஆனால் இப்போதுதான் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்கின்றனரே. அதுக்காக பெண்களுக்கு வெட்கம் இல்லை என்றில்லை. ஆனால் அது எல்லோரிடத்திலும் வராது.

ஒம்..எங்கன்ட நிலா அக்கா கூட அவதாரில வெட்கபடுறா..(வானத்து நிலா கூட சூரியனை கண்டவுடன வெட்கபட்டு ஓடிடுது அதை போலவோ??) :lol: ..கந்தப்பு தாத்தா வீட்ட அடி வாங்கினாலும் திருந்துறதா தெரியல..அது தான் யாழிற்கும் குஞ்சாச்சியை கூட்டி கொண்டு வாறதிற்கான ஏற்பாடு தான் இதெல்லாம்..இந்த இராணுவ இரகசியத்தை ஒருத்தருக்கும் சொல்லி போடாதையுங்கோ என்ன..

ம்ம்..இந்த காலத்து பொண்ணுகளுக்கு நாணம் இருக்கின்றதோ என்பது தான் எண்ட சந்தேகம் பாருங்கோ..(அடிகடி எனக்கு இப்படியான சந்தேகம் வாறது எண்டு உங்களுக்கு தெரியும் தானே)..இந்த காலத்து பொண்ணுங்க எதையும் தாங்கும் சக்தி உடையவர்களாக பாசாங்கு செய்கிறார்களே தவிர அவர்களாள் எதையும் 100 % எதிர் கொள்ளமுடியும் எண்ட விவாதம் என்னால் ஏற்று கொள்ளமுடியாது.. :)

ஏன் சொல்லுறன் எண்டா இப்பத்தையான் காலத்து பெண்கள்..(குறிப்பா எங்கன்ட பொண்ணுகளையும் எடுத்து கொள்ளுங்கோவன்)..அவர்களின் திறமையை பாராட்டுகிறேன்..ஆனால் அவர்கள் தாங்கள் ஆண்களுக்கு சமனாம இருக்கிறோம் எண்டு காட்டுவதிற்கு எதையும் செய்கிறார்கள்..இது முழு முட்டாள்தனம் எண்டே கூறலாம் எல்லாவற்றையும் செய்து விட்டு..பிறகு அல்லல்படுவது அதையும் காட்டி கொள்ளாமள் உள்ளுகுள் வைத்து குமுறுவது இப்படி தான் நிலைமை இருக்கிறது என்பது என்னுடைய கருத்து.. :D

ஓமோம் ஆண்களுக்கும் வெட்கம் வரும் இல்லை எண்டு சொல்லவில்லை..எல்லோர் முன்னிலையிலும் வெட்கத்தை காட்டி கொள்ள முடியாதவை எல்லாருக்கும் முன்னாலையும் அரைகுறை உடுபோட சுற்றீனம் அதை பத்தி தாங்கள் என்ன நினைக்கிறீங்கள் அக்கா..??

அச்சோ..அக்கா உங்களின் உதாரணம் ஆண்களை பொறுத்தமட்டில் மிகவும் தவறு என்பது தான் என்னுடைய வாதம் ஏன் சொல்லுறன் எண்டால்..குறிப்பாக பெண் ஆசிரியை அதுவும் இளம் ஆசிரியை வந்தால் நாம எல்லாம் அன்னையில இருந்து பள்ளி பக்கம் ஒழுங்கா அல்லோ போவோம்..(என்ன நான் சொல்லுறது சரியோ)..அவா கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் டக்கு..டக்கு எண்டு பதில் வேற வரும்.. :lol:

கடசியா அந்த ஆசிரியை எங்கன்ட வகுப்பிற்கு வராத மாதிரி பண்ணிட்டுவாங்கள்...(இது ஒன்னும் பொய் சொல்லல்ல நான் படிக்கும் போது நடந்தது)..

அச்சோ..நான் எடுத்ததுகெல்லாம் பெண்கள் வெட்படனும் எண்டு சொல்லவில்லை...(முகதிற்கு மூக பூச்சை பூசி மிணுங்குகிறார்கள்)..அதை போல் வெட்கமும் பெண்ணிற்கு அழகு அது தானாக வரணும்..இப்ப எல்லாம் அப்படியான பெண்களை காண்பதே அரிது..அப்படி மாட்டுபடுறது சில பேரும் வெட்கபடனும் என்பதிற்காக வெட்கபடுவீனம் அது கொடுமையிலும் கொடுமை..

எல்லாம் சரி நிலா அக்கா தாங்கள் வெட்கபடுவியளோ..?? :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

தூயாவின்ட ஊடாங்சம்பலைத் தான் யம்முவுக்கு சாப்பிடக்குடுக்க வேணும்.

பெண்களுக்கும் மட்டுமல்லா அண்களுக்கும் வெட்கம் வரும்.

நானும் ஒரு காலத்தில வெட்கப்பட்டேன்.

அது ஒரு இனிய கனாக் காலம். ம்ம்ம்ம்.....

என்ன..அப்பு கோவிக்கிறியள்..அன்னைக்கு நான் குஞ்சாச்சியின்ட சாப்பாட்டையே சாப்பிட்டிட்டன் பிறகு உடாங்சம்பல் எந்த மூளைக்குள்ள :) ..அடடா நீங்களும் வெட்கபட்டனியளே கந்தப்பு தாத்தா..ஏன் தாத்தா வெட்பட்டனியள் அதை கொஞ்சம் சொல்லுங்கோவன்..எனக்கும் உதவியா இருக்கும் அல்லோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

வெண்ணிலா.......யார் சொன்னது உங்களுக்கு......?

அது தானே..தம்பி..(அப்படி யாரும் வகுப்பெடுக்க வந்தால்)..நாம எல்லாம் அன்னைக்கு எவ்வளவு நல்ல பிள்ளைகள் என்ன நிலா அக்காவிற்கு உது எல்லாம் தெரியாது.. :)

அப்ப நான் வரட்டா!!

நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு பெண் நாய்(டிங்கி) வளர்க்கினம் அவர்கள் அந்த டிங்கியை வெளியில் விடுவதே இல்லை. ஏன்னா தெருநாய்கள் தம்வீட்டு டிங்கியை விட்டுவைக்காதுகள் நாய்வேலையை காட்டிடுங்களாம். அதனாலை தங்கட டிங்கி நாய்க்குட்டி போடுமாம் இனம் பெருகிடுமாம். அப்படி வளர்க்கினம். அதுபோல அந்த டிங்கியும் வெட்கப்பட்டு வெட்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே இருக்குது, உது தேவையா? உதுல வேறை கள்ளன் வந்தாலும் டிங்கிக்கு தெரியாது. நான் போனாலும் அந்த டிங்கி குரைக்காது

உது போல பெண்ணினத்தையும் வீட்டுக்குள் முடக்கலாமோ சொல்லுங்கோ? முடக்கினால் அச்சோ அபப்டியான பொண்ணுக நல்லாக வெட்கபப்டுவினம், ஏன்னா வெளியுலகமே தெரியாது பாருங்கோ.

ஓ..உங்கன்ட பக்கத்து வீட்டு நாயிற்கு பேர் "டிங்கியோ"..(நன்ன பேரப்பா)..அப்ப அக்கா டிங்கியை ஊரில இருக்கிற எல்லாம் நாயும் மேயட்டும் அது சரி எண்டு சொல்லுறியளோ..??.. :D

நாங்கள் வீட்டுகுள் அடங்கி இருக்கனும் எண்டு சொல்லவில்லை மாறாக பெண்களுகுரிய சிறபம்சம் பெண்களுக்கு இருந்தால் நல்லது எண்டு கூறினோம்..இப்ப உங்கன்ட சா..சா பக்கத்து வீட்டு "டிங்கியை" எடுத்து கொள்ளுங்கோவன் சில காலதிற்கு முன்னல் டிங்கியின் பரம்பரை..தெருவில சுற்றி கொண்டிருந்திருக்கலாம்.. :lol:

ஆனால் இன்று..

"டிங்கி" வீட்டிற்குள்ள இருக்குது அல்லோ..(அதுக்காக தெருவில இருக்கிற நாய்கள் எல்லாம் உலகம் தெரிந்த நாய்கள்)..வீட்டில இருக்கிற எங்கன்ட "டிங்கி"..சா..சா பக்கத்து வீட்டு "டிங்கி" ஒண்டுக்கும் பிரயோசனமில்லை எண்டு சிந்திப்பதா..??

அவ்வாறு சில பெண்கள் சிந்திக்கிறபடியால் தான்..தெருவில...(அங்கால சொல்ல மாட்டன்)... :lol:

அப்ப நான் வரட்டா!!

பல பெண்கள் சிந்திக்க வேண்டிய செய்தி இது..!

சரியா சொன்னீங்க நெடுக்ஸ் தாத்தா..இவையள் தாங்களே கற்பனை பண்ணி கொள்ளுறது சில விசயங்களை தவிர்க்கும் பட்சத்தில் தாங்களும் ஆண்களுக்கு சமனானவர்கள் எண்டு அதால தான் பல பிரச்சினையே..!! :D

இன்றைய பெண்கள்..(குறிப்பாக எமது சமூக)..அதை படிபீனம் இதை படிபீனம்..பிறகு நல்ல உத்தியோகதிற்கும் போவீனம் அதை மெச்சுகிறோம்..ஆனால் குறிபிட்ட காலதிற்கு பிறகு அவையள் படி படியாக இவற்றில் இருந்து விலகி குடும்பம் எண்டு ஒரு காரணத்தை கூறி கொண்டு ஒதுங்கி விடுகிறார்கள்... :icon_mrgreen:

இதுவும் ஒரு குறையாக தான் பார்கிறேன்..நல்லதொரு விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் தாத்தா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

பொண்ணுங்க வெட்கத்தை தேட கந்தப்புவுக்கும் யம்முவுக்கம் போட்டியா.

பொண்ணுங்க வெட்கப்படனும். அதுவும் கன்னம் சிவக்க வெட்கப் படனும். ஆனால்........... (கறுப்பிக்கு கன்னம் சிவக்காது)

ம்ம்..கறுப்பி அக்கா..கடசியில எனக்கு தான் வெட்கம் வந்திடுச்சு எண்டா பாருங்கோவன்..ஆனா தெரியாத பொண்ணு ஒன்னு தனிய வந்து கதைத்தா..அப்ப நம்மள அறியாம வருமே ஒரு வெட்கம் அடடா..அதை எப்படி தான் சொல்லுறதோ தெரியலப்பா.. :D

ஓ..கன்னம் சிவக்கம் வெட்கபடனுமோ...(பக்கத்தில இருக்கிறவனின்ட கன்னம் சிவக்க இல்ல தானே)..கறுப்பி அக்கா வெட்கபட்டு நான் பார்க்கல்ல.. :lol:

அப்ப நான் வரட்டா!!

பெண்ணிற்கு வெட்கம் அழகா?

பெண்ணிற்கு வெட்கம் இருக்கிறது . அவரவர் பார்க்கும் பார்வையில் ?,........(கண்ணோட்டத்தில் )

ஓ..அப்படியா நிலா(மதி) அக்கா..ஆனா நான் பார்க்கும் போது பெண்கள பார்க்கவே பயமா இருக்குதப்பா :icon_mrgreen: இதில எப்படி நான் வெட்கத்தை காணுறது..அது சரி தாங்கள் வெட்கபடுவியளோ..?? :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

எந்த காலப்பெண்களிடமும் வெட்க்கம் இருக்கிறது. அது கணவனிடமோ அல்லது காதலனிடமோ காட்டும் நாணம் ரொம்பவே அழகானது

ஓ..அப்படியோ செவ்வந்தி அக்கா.. :lol: (ஆனா நான் பார்கக்க ஒரு பொண்ணும் வெட்கபட்டதா தெரியல)..ஒ..அப்ப காதலன் அல்லது கணவனிடம் தான் நாணத்தை காட்டுவீனமோ உதுக்காண்டியாவது

இரண்டு நாளைக்கு யாரையும் காதலிச்சு பார்க்கனும். :D .

அப்ப நான் வரட்டா!!

எல்லோரிடமும் வெட்கம் உண்டு ஆனால் அவர்கள் அதை காட்டும் இடமும் ஆட்களும் தான் வித்தியாசம் என்று நினைக்கிறேன்.

என்ன ஜம்மு இன்னுமா உங்கட புகையிரத நிலைய சந்திப்புகளை விடவில்லை???

அட..அப்படியே இன்னி தங்கச்சி..(அப்ப தாங்கள் வெட்கபடுறனியளோ)...கேட்க நன்னா தான் இருக்கு..சரி..சரி ஏசாதையுங்கோ... :lol:

என்னத்தை விட்டாலும் "ரெயில்வே ஸ்டேசன்" சந்திபுகளை நாம விடவே மாட்டோம் பாருங்கோ...ஏன் எண்டால் எப்பவாச்சும் ஒரு நாள் எண்ட "ரயிலும்" வரும் எண்டு தான் பாருங்கோ..(எனக்கு வெட்கமா இருக்கு).. :lol:

அப்ப நான் வரட்டா!!

வெட்கம் என்பது எல்லோரிடமும் உண்டு, சிலபேருக்கு அது குறைவாகவும், அதிகமாகவும் இருக்கலாம். பெண்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் இப்போது ஆண்களுடன் சகஜமாகவே பழகுகிறார்கள். வெட்கத்தனம் அவர்களிடம் குறைந்துகொண்டு வருகிறது என்பது தெரிகிறது, ஏன் என்றால் முன்பெல்லாம் பெண்கள் தெரியாதவர்களுடன் கதைக்கத் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லையே.

ஆண்களிற்கு வெட்கம் மிகவும் குறைவென்று ஓர் கருத்து உள்ளது, ஆனால் இக்கருத்து தவறானது என்று என்னால் அடித்துக் கூற முடியும்! ^^

ம்ம்..டைகர் பிளேட் அண்ணா..ஒம் இப்ப மாறி ஆண்கள் வந்து பெண்களிடம் கதைக்க வெட்கபடீனம் பாருங்கோ :) ..ஒரு பையன் வந்து பொண்ணோட கதைக்கக்க பார்க்கனும் இங்க நெளிவான் அங்க நெளிவான்..அப்பபா பார்க்க சகிக்க முடியல்ல.. :lol:

எனக்கு வெட்கம் எப்ப வாறது தெரியுமோ..உந்த சொந்தகாரங்க எல்லாம் வீட்ட வரக்க தான்.அப்படி வரக்க எண்டபாடு திண்டாட்டம்..யாருக்கும் என்னை மாதிரி உந்த பிரச்சினை இருக்கோ..??..இல்லாட்டி எனக்கு மட்டும் தான் போல உந்த பிரச்சினை.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

எல்லாம் சரி நிலா அக்கா தாங்கள் வெட்கபடுவியளோ..?? :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

:lol::lol::D:lol: இப்பத்தான் ரொம்ப வெட்கம் வருது ஜம்மு

பெண்ணிற்கு வெட்கம் அழகோ..!!

ரொம்ப முக்கியம்??? :lol:

சரி சரி கோவிக்காதீங்கோ.

பெண்களுக்கு மட்டுமில்லை. யார் வெக்கப்பட்டாலும் ஒரு அழகுதான் போங்கோ. :lol:

ஜம்மு நீங்க வெக்கப்படுவீங்களோ???? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் வெங்காயம் வெட்டும் அழகே தனியழகு :icon_mrgreen:

:icon_mrgreen:என்னத்தைத் தான் சொன்னாலும் சில பெண்கள் வெட்கப்பட்டு, கால் பெருவிரலாலை கோலம் போடிற அழகே ஒரு தனி அழகு!! :lol:
  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen:என்னத்தைத் தான் சொன்னாலும் சில பெண்கள் வெட்கப்பட்டு, கால் பெருவிரலாலை கோலம் போடிற அழகே ஒரு தனி அழகு!! :lol:

அப்படி செய்யும் போது , அடி கள்ளி என்று சொல்லும் போது அவர்களுக்கு வெட்கம் இன்னும் கூடி விடும் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி செய்யும் போது , அடி கள்ளி என்று சொல்லும் போது அவர்களுக்கு வெட்கம் இன்னும் கூடி விடும் . :lol:

ஏன் உண்மையைச் சொல்லிட்டீங்கள் என்பதற்காகவா...! :icon_mrgreen::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.