Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை விடுங்கோ நான் போராடப் போகிறேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு மணி நேரம் முன்னதாகவே வேலை முடிந்த சந்தோசம் வழமை போலவே வெள்ளிக்கிழமை என்றபடியாலும் இரட்டிப்பு சந்தோசத்துடன் டாக்கர் ரவி இன்று இரவு எந்த நாட்டு சாப்பாடு சாப்பிடலாம்;; என்று யோசிக்கும் போது தான் புதிதாக திறந்த அப்கானிஸ்தான் ரெஸ்ரோறன்ருக்கு போகலாம் என்று எண்ணியவாறே வீடு சேர்ந்தார். ரவி வழமை போல் பாதணிகள் வைக்குமிடத்தில் நின்று என்ன கதவு திறக்கும் போதே சுடச்சுட ஆவிபறக்க தேநீருடன் வந்து வரவேற்கும் மனைவி மலரைக் காணவில்லையே என்று சுற்றி சுற்றி பார்த்தார்மெதுவாக பாதணிகளைக் கழட்டி விட்டு படுக்கை அறைக்குப் போய் மலருக்கு பக்கத்தில் இருந்த போது தான் மலர் அழுது கொண்டு படுத்திருப்பது கண்டு சிலையாகிப் போனார்.மெதுவாக எ;னன நடந்தது என்று கேட்பதற்கிடையில் ரவியே அழுதுவிடுவார் போல் இருந்தது.ஒரு மாதிரி தேற்றிக் கொண்ட ரவி மலர் மலர் என்ன நடந்தது என்று இரண்டு மூன்று தரம் கேட்ட பின் தான் ஜனா ஊருக்குப் போக ரிக்கற் எடுக்க போய்விட்டார் என்று ஒரு ஒப்பாரியே வைத்துவிடடார்

இன்று காலை வேலைக்குப் போகும் போது அமெரிக்க நிரந்தர வதி உரிமை பெறுவற்காக சோதனைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த ஜனாவை வெற்றியுடன் திரும்பி வர வேண்டும் என்று முழு மனதுடனும் கட்டியணைத்து வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு போனேனே அதற்குள் என்ன தான் நடந்தது.ஜனா ஏன் போகிறான் இப்போ ஆள் எங்கே என்று திரும்ப திரும்ப கேட்க மலர் இன்னும் இன்னும் கூடுதலான சத்தத்துடன் விக்கி விக்கி அழத் தொடங்கிவிட்டார்.இப்பொ கோபத்தின் உச்சிக்கே போய்விட்ட ரவி சரி கொஞச நேரம் போனால் தானாகவே வந்து சொல்லுவார் என்று எண்ணி பல்கணியில் போய் இருந்து பழைய நினைவில் மூள்கினார்.

ஒரே ஊரில் பிறந்த ரவியும் ஜனாவின் அப்பாவும் பத்தாவது வகுப்பு வரை ஒரே பள்ளியிலேயே படித்தார்கள்.ரவி சிறு வயதிலிருந்தே புத்தக பூச்சியாக இருந்தார்.ஜனாவின் அப்பாவோ சிறு வயது முதல் பள்ளிக்கு போனால் இவரின் புத்தக பையினுள் கொஞ்ச கொப்பிகள் பென்சில்கள் அழிரப்பர்கள் என்று வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார்.பத்தாவது வகுப்பு வரை இப்டியே தொடர்ந்து பத்தாது முடிய ரவி மேல் படிபைத் தொடர ஜனாவின் அப்பா கொழும்புக்கு வந்து அங்கு அவரின் மாமனாரின் கடையில் உள் நுழைந்தார்.சிறிது காலம் போக போக மாமாவின் உதவியுடன் நான்காம் குறுக்குத் தெருவில் வேறு நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் தொடங்கி பின்னர் கொழும்பிலேயே பெயர சொல்லக் கூடியளவு முதலாளியாகிவிட்டார்.இடையே இருவருக்கும் திருமணமாகி ரவிக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஜனாவின் அப்பாவுக்கு ஜனாவும் ஒரு தங்கையுமாக இருந்தார்கள்.ரவியும் படிப்பு முடிந்து டாக்ரராகி சிறிது காலம் யாழ் வைத்தியசாலையில் வேலை செய்து விட்டு பிள்ளைகள ;வளர்ந்ததும் கொழும்புக்கு மாற்றலாகி வெள்ளவத்தையில் ஜனாவின் இப்பா வீட்டுக்க பக்கத்திலேயே தானும் ஒரு வீடு வாங்கி பழைய உறவகளை புதிப்பித்துக் கொண்டு சந்தோசமாக இருந்தார்.ஒரு நாள் இரவு எட்டு மணியளவில் ஜனா துடிக்க பதைக்க ஓடி வந்து ரவி மாமா ரவிமாமா வெள்ளை வான்காறங்கள் அப்பாவைத் தூக்கிக் கொண்டு போட்டாங்களாம் என்று ஓஓவென்று கத்தி அழுதான்;.ரவியும் வெளிக்கிட்டு தனக்கு தெரிந்த தெரியாத செல்வாக்குகளையேல்லாம் பாவித்து ஒன்றுமே பலனளிக்கவில்லை.அந்த வெறுப்பில் தான் அமெரிக்காவுக்கு குடும்பமாக இடம் பெயரந்தார்.கூடவே ஜனாவை தனியே விட்டு போக மனமில்லாமல் தானே யாரையோ பிடித்து முதலே அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டார்.பின்னர் ரவியும் குடும்பமாக வந்து சேர்ந்துவிட்டார்.ஜனாவின் அதிஸ்டம் உடனேயே அரசியல் தஞ்சமும் கொடுத்துவிட்டனர்.இப்போ என்ன தான் நடந்திருக்கும் என்று யோசித்த வண்ணமே இருந்து அதிலேயே சிறிது கண்ணயர்ந்துவிட்டார்

ஜனா விமானச்சீட்டுடன் வந்து ரவிமாமா ரவிமாமா என்று கூப்பிட்ட போது தான் திடுக்கிட்டு கண் விழித்த ரவி தன்னையறியாமலே ஜனாவைக் கட்டியணைத்து என்ன நடந்தது ஏன் ஊருக்கு போகிறாய் என்று தளதளத்த குரலில் கேட்டார்.வாங்கோ கீழே போய் பேசலாம் என்று ரவிமாமாவை மெதுவாக கீழே கூட்டிக் கொண்டு போய் இருத்தி எல்லோருக்கும் நல்ல பால் தேநீர் போடச் சொல்லி மலரிஅன்ரியிடம் சொல்லிவிட்டு பெரு மூச்சொன்றுவிட்டான்.

மாமா இன்றுடன் அமெரிக்கனாகப் போகிறேன் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன்.சோதனையில் என்னென்ன கேள்வியெல்லாம் கேட்பார்கள் என்று புத்தகமும் வாங்கி தலை கரணமாக எல்லாம் பாடமாக்கி வைத்திருந்தேன்.ஒன்றுமே வீண் போகவில்லை.ஆனால் நான் தயார் செய்யாத ஒரு கேள்வியை கேட்டு என்னை மிகவும் திக்குமுக்காட வைத்துவிட்டனர்

வேறென்றுமில்லை எதிர்வரும் காலங்களில் வேற்று நாடுகளுடன் சண்டைக்கு நீயும் ஒரு ராணுவ வீரனாக போக வேணும்..அப்படி ஒரு தேவை வந்தால் என்ன செய்வாய்?போவியா என்று கேட்டனர்.எதிர்பார்க்காக இந்தக் கேள்வியால் சிறிது நிலை குலைந்து போனாலும் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு நிதானமாவும் தீர்க்கமாகவும் முடியாது என்று கூறிவிட்டேன்.என்னை மிகவும் ஏழனமாக பார்த்த அலுவலகர் நீர் மனம்மாறினால் மீண்டும் விண்ப்பிக்கலாம் என்று கூறினார்

வரும் போது தான் இந்த நாட்டுக்காவோ இன்னொரு நாட்டுக்காகவோ சாவதைவிட எனது தாய்க்காக தாய் நாட்டுக்காக போய் போராடலாம் என்று முடிவு பண்ணிவிட்டேன்.அதனால்த் தான் உடனேயே போய் ஒரு வழிப்பாதை பயணச்சீட்டும் எடுத்து வந்துவிட்டேன்.டாக்ரர் ரவியும் மலரும் சேர்ந்து எவ்வளவோ சொல்லியும் ஜனா தனது முடிவில் தளம்பாமல் இருந்தான்.அது மட்டுமல்ல மாமா நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் பிள்ளைகள் போராடப் போய்விடுவார்கள் என்று எண்ணித் தான் கொழும்புக்கு வந்தீர்கள்.ஆனால் நீங்கள் அமெரிக்க பிரஜாவுரிமை சோதனைக்குப் போகும் போது இதே மாதிரி தான் கேட்பார்கள்.நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?நீங்கள் மட்டுமல்ல போராட பயந்து தாங்களும் தங்கள் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு ஓடி வந்த ஏல்லோருக்கும் நீங்கள் இருக்கும் நாட்டில் ஒரு யுத்தம் வந்து யுத்தத்துக்கு அழைத்தால் கசியஸ் கிழே முகமதுஅலியாக மாறிய மாதிர்p நீங்களும் ஒரு அப்துல்லாவோ முகமதாகவோ மாறுங்கள்.அல்லது ராணுவ உடுப்பு போட்டு பிள்ளைகளை போரடிவா என்று அனுப்பவா போகிறீர்கள்?ஆனபடியால் தயவு செய்து என்னை விடுங்கோ நான் போராடப் போகிறேன்.

Edited by eelapirean

நல்ல கதை.

ஆனால் ஜனாவின் இந்த மாற்ரத்துக்கு மலர் இப்ப்டி அழுதிருக்க கூடாது.

நல்ல முடிவு ஜனாவுக்கு வாழ்த்துக்கள்

ஆக்கிய ஈழப்பிரியனுக்கும் வாட்ழ்ஹ்துக்கள்

அட..எங்கன்ட பெரியப்பாவின்ட கதையை வாசிக்கும் போதே..(சும்மா அதிருதில)..வாழ்த்துக்கள் ஈழபிரியன் பெரியப்பா நல்லதொரு கதையை அருமையா தந்துள்ளீர்கள்..ள்.. :unsure:

இது தான் யாழில் தங்களின் முதல் கதை எண்டு நினைக்கிறன்..வடிவாக தெரியாது முதல் கதையே மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்..ள்.. :lol:

ம்ம்..நானும் போராட போறன்..(என்னையும் விடுங்கோ..விடுங்கோ)..ஆனா என்ன..ன யாழ்களத்திள் மட்டும் தான் பெரியப்பா விளங்கிச்சோ..எல்லாம் நன்னா தான் இருக்கு ஆனா "ஜனா" எண்ட பெயரை வாசித்தவுடன கொஞ்சம் பயந்து போயிட்டன் பாருங்கோ.. :o

ஏன் எண்டு மட்டும் கேட்டிடாதையுங்கோ என்ன.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்......இதே கேள்வியை என்னிடம் கேட்டவைகள் ,கேள்வியை கேட்க முதலே ஒம் எண்று சொல்லி போட்டன்.வெளிநாட்டு பிராஜாவுரிமை எடுக்கவேண்டும் என்ற ஆசை தான் ,

இப்ப போராட வேண்டும் என்று ஆசைதான் ஆனால் வயசு போய்விட்டது,கை,கால் எல்லாம் நோகுது, கணனிக்கு முன்னால் இருந்து என்னால்முடிந்தவரை போராடுவேன்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கதை....

நியமாவே இப்படி கேள்வி கேட்பார்களா? நான் இதற்கு முதல்

இப்படி கேள்விப்பட்டதே இல்லை.

புத்தன் அங்கிள், நீங்கள் போராட்டத்துக்கு போய்த் தன் எங்கள்

தாயக விடுதலைக்காக கைகொடுக்கணும் என்று இல்லை. நீங்கள்

இருக்கும் இடத்தில் இருந்தே ஒரு கரம் நீட்டினால் போதும்.

உங்களைப் போல் இப்படி இன்னும் பல புலம்பெயரின் கரங்களும் எங்கள்

தாய்நாட்டிற்கு தேவையாக இருக்கின்றது...

ஒன்றுசேர்ந்தால் உண்டு வாழ்வு!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் நல்லதொரு கதையை இணைத்துள்ளீர்கள்.

எங்களின் மனித வலுவை அடைக்கலம் தந்த நாடுகள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்றெல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்ப்பது குறைவு. சிந்தித்துப் பார்த்தோம் என்றால்......

இத்தோடு நான் ஏற்கனவே கவிப்பூங்காவில் இணைத்த கவிதைக்கான தொடுப்பைக் கொடுக்கின்றேன். இக்கவிதையை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் வருத்தம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=34975

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்ஈழப்பிரியன்! நன்றாகவுள்ளது தொடருங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ஈழப்பிரியன்

தொடருங்கள்......இதே கேள்வியை என்னிடம் கேட்டவைகள் ,கேள்வியை கேட்க முதலே ஒம் எண்று சொல்லி போட்டன்.வெளிநாட்டு பிராஜாவுரிமை எடுக்கவேண்டும் என்ற ஆசை தான் ,

இப்ப போராட வேண்டும் என்று ஆசைதான் ஆனால் வயசு போய்விட்டது,கை,கால் எல்லாம் நோகுது, கணனிக்கு முன்னால் இருந்து என்னால்முடிந்தவரை போராடுவேன்.....

போத்தலும் கையுமாக அலைந்தால் கை கால் மட்டுமா உதறும்

வயது போன கால ஏன் வீரதீர விளையாட்டுக்கள் எல்லாம் என்ன புத்தன் விளங்குதோ

Edited by muneevar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லகதை.இதேபோல் இன்னும் நிறைய கதைகளை எழுதுங்கள் ஈழப்பிரியன் <_<

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நன்னா தான் இருக்கு ஆனா "ஜனா" எண்ட பெயரை வாசித்தவுடன கொஞ்சம் பயந்து போயிட்டன் பாருங்கோ.. :(

ஏன் எண்டு மட்டும் கேட்டிடாதையுங்கோ என்ன.. :rolleyes:

எனக்கும் ஒரு மாதிரித்தான் போய்ட்டுது... ஆனா ஜனா எண்ட பெயரை பாத்ததோட கற்பனைக்கதை எண்டது மட்டும் உடனையே விளங்கிட்டுது. :(

ஏன் எண்டு மட்டும் கேக்காதைங்கோ... :rolleyes:

எனக்கும் ஒரு மாதிரித்தான் போய்ட்டுது... ஆனா ஜனா எண்ட பெயரை பாத்ததோட கற்பனைக்கதை எண்டது மட்டும் உடனையே விளங்கிட்டுது. :D

ஏன் எண்டு மட்டும் கேக்காதைங்கோ... :lol:

ஓ..உங்களுக்குமா மாமா..மா..(அப்ப நான் எப்படி பயந்து போயிருப்பன்) :D ..எண்டு யோசியுங்கோ..??..பின்ன கற்பனை இல்லாம என்னவா இருக்கும்.. :(

நான் கதையை சொன்னான்..உங்களுக்கு விளங்கி இருக்கும்..ம் தானே மாமா..மா..அது சரி மாமோய் யாழில இருந்து நாம இரண்டு பேரும் போராடுவோமோ..மோ..?? :)

உதை பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள்...(இப்பவே யாழ்கள முன்னரங்க பகுதிக்கு நான் போகட்டோ நீங்க கொஞ்சத்தால வாங்கோ வள்வளைப்பு செய்வோம்).. :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை.

ஆனால் ஜனாவின் இந்த மாற்ரத்துக்கு மலர் இப்ப்டி அழுதிருக்க கூடாது.

நல்ல முடிவு ஜனாவுக்கு வாழ்த்துக்கள்

ஆக்கிய ஈழப்பிரியனுக்கும் வாட்ழ்ஹ்துக்கள்

சில குழந்தைகள் விழுந்தால் சுற்றி சுற்றி பாரப்பார்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றால் தாமே தடவிக் கொண்டு திரும்பவும் விளையாடுவார்கள்.யாராவது விழுந்து போனிர்களோ என்று போய்த் தூக்கினால் வீல் என்று கத்தி ஊரையே கூட்டிவிடும்.மலரும் அப்பிடித் தான் அழுகுனி.

.எல்லாம் நன்னா தான் இருக்கு ஆனா "ஜனா" எண்ட பெயரை வாசித்தவுடன கொஞ்சம் பயந்து போயிட்டன் பாருங்கோ.. :lol:

ஏன் எண்டு மட்டும் கேட்டிடாதையுங்கோ என்ன.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

தம்பி மாட்டுப்பட்டுப் போனார்.

தொடருங்கள்......இதே கேள்வியை என்னிடம் கேட்டவைகள் ,கேள்வியை கேட்க முதலே ஒம் எண்று சொல்லி போட்டன்.வெளிநாட்டு பிராஜாவுரிமை எடுக்கவேண்டும் என்ற ஆசை தான் ,

இப்ப போராட வேண்டும் என்று ஆசைதான் ஆனால் வயசு போய்விட்டது,கை,கால் எல்லாம் நோகுது, கணனிக்கு முன்னால் இருந்து என்னால்முடிந்தவரை போராடுவேன்.....

புத்து 40க்கு மேல் கட்டாய ராணுவத்துக்கு கூப்பிடமாட்டார்கள் என்றெ எண்ணுகிறேன்.எனவெ நிம்மதியாக இருங்கோ.

அருமையான கதை....

நியமாவே இப்படி கேள்வி கேட்பார்களா? நான் இதற்கு முதல்

இப்படி கேள்விப்பட்டதே இல்லை.

புத்தன் அங்கிள், நீங்கள் போராட்டத்துக்கு போய்த் தன் எங்கள்

தாயக விடுதலைக்காக கைகொடுக்கணும் என்று இல்லை. நீங்கள்

இருக்கும் இடத்தில் இருந்தே ஒரு கரம் நீட்டினால் போதும்.

உங்களைப் போல் இப்படி இன்னும் பல புலம்பெயரின் கரங்களும் எங்கள்

தாய்நாட்டிற்கு தேவையாக இருக்கின்றது...

ஒன்றுசேர்ந்தால் உண்டு வாழ்வு!

சரனி உலக குத்து சண்டை வீரன் கசியஸ்கிளேயாக இருந்தவர் முகமட்அலியாக மாறியது இதனால்த் தான்.

ஈழப்பிரியன் நல்லதொரு கதையை இணைத்துள்ளீர்கள்.

எங்களின் மனித வலுவை அடைக்கலம் தந்த நாடுகள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்றெல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்ப்பது குறைவு. சிந்தித்துப் பார்த்தோம் என்றால்......

இத்தோடு நான் ஏற்கனவே கவிப்பூங்காவில் இணைத்த கவிதைக்கான தொடுப்பைக் கொடுக்கின்றேன். இக்கவிதையை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் வருத்தம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=34975

நன்றி சகாரா

வாழ்த்துக்கள்ஈழப்பிரியன்! நன்றாகவுள்ளது தொடருங்கள்!!!

நன்றி சுவி

நல்ல கதை ஈழப்பிரியன்

போத்தலும் கையுமாக அலைந்தால் கை கால் மட்டுமா உதறும்

வயது போன கால ஏன் வீரதீர விளையாட்டுக்கள் எல்லாம் என்ன புத்தன் விளங்குதோ

நன்றி முனிவர்.

நல்லகதை.இதேபோல் இன்னும் நிறைய கதைகளை எழுதுங்கள் ஈழப்பிரியன் :lol:

கு சாமி எனது மனதுக்குள் இருந்த பெரிய ஆதங்கம் தான் எப்படி வெளிக் கொண்டுவரலாம் என்று முயன்றேன்.அவ்வளவு தான்.

எனக்கும் ஒரு மாதிரித்தான் போய்ட்டுது... ஆனா ஜனா எண்ட பெயரை பாத்ததோட கற்பனைக்கதை எண்டது மட்டும் உடனையே விளங்கிட்டுது. :lol:

ஏன் எண்டு மட்டும் கேக்காதைங்கோ... :rolleyes:

எப்படி உங்களால் இப்படி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழப்பிரியன் அண்ணா,

நான் இங்கு 9-ஆம் வகுப்பு படித்த ஒருவன் குத்து சண்டை

பயின்று வந்தன். நானும் ஒலு தடவை அதைப் பார்க்கப் போனேன்.

அவன் தனது வழிகாட்டி முபமத் அலி என்று சொல்லியிருக்கிநான்.

அப்போது தான் முதன் முதலில அது யார் என்று தெரிந்து

கொண்டேன். ஆனால் அவர் பற்றிய வரலாறு பெரிதாக தெரியாது. இந்த

பெயர் மாற்றமும் ஒரு அறிதல் தான். இதை எனக்கு தெரியப்படுத்தினதற்கு

என் நன்றிகள்.

இப்பொழுதும் அமெரிக்காவில் இதே சட்டம் தானா??

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை ஈழபிரியன். அமெரிக்காவில் வெளிநாட்டவர்களை இராணுவத்தில் இணைக்க இப்படி தந்திரங்களூம் பண்ணுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி உங்களால் இப்படி

எல்லாம் எங்கட ஜம்மு பேபிய பாத்துதான். :wub:

உங்கை உண்மையிலேயே உப்பிடி ஒரு சட்டம் இருக்கெண்டு தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை உண்மையிலேயே உப்பிடி ஒரு சட்டம் இருக்கெண்டு தெரியாது.

மிகவும் புதிது போல் உள்ளது. என்னால் நம்ப முடியவில்லை.

நல்ல கதை ஈழப்பிரியன். வாழ்த்துக்கள்.

அட..எங்கன்ட பெரியப்பாவின்ட கதையை வாசிக்கும் போதே..(சும்மா அதிருதில)..வாழ்த்துக்கள் ஈழபிரியன் பெரியப்பா நல்லதொரு கதையை அருமையா தந்துள்ளீர்கள்..ள்.. :)

இது தான் யாழில் தங்களின் முதல் கதை எண்டு நினைக்கிறன்..வடிவாக தெரியாது முதல் கதையே மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்..ள்.. :o

ம்ம்..நானும் போராட போறன்..(என்னையும் விடுங்கோ..விடுங்கோ)..ஆனா என்ன..ன யாழ்களத்திள் மட்டும் தான் பெரியப்பா விளங்கிச்சோ..எல்லாம் நன்னா தான் இருக்கு ஆனா "ஜனா" எண்ட பெயரை வாசித்தவுடன கொஞ்சம் பயந்து போயிட்டன் பாருங்கோ.. :)

ஏன் எண்டு மட்டும் கேட்டிடாதையுங்கோ என்ன.. :)

அப்ப நான் வரட்டா!!

நீங்களே காட்டிக் கொடுக்கிறீர்களே யம்மு. :(:D:lol:

இது நிச்சயமா கற்பனைக்கதைதான். சொல்லுறவன் செய்யமாட்டான். செய்யிறவன் சொல்லமாட்டான். அதிலும் இந்த விசயத்திலை, இரகசியமாப் போவினமே தவிர, எல்லாருக்கும் சொல்லிக் கொண்டு போகமாட்டினம்.

Edited by Thamilachchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.