Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாக தாக்கியழிப்பு; புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின: விடுதலைப் புலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: சிங்கள பேரினவாதப் பத்திரிகையான டெயிலி மிரர்ரில் வாசகர்களின் கருத்துக்களை சென்று பார்த்தேன். முதன் முதலில் புலிகளின் விமானம் சுடப்பட்டதாகத்தான் செய்தி வந்திருந்தது.உடனே எல்லாரும் வென்று விட்டோம், புலிகளை வீழ்த்திவிட்டொம், உலகிலேயே பலமான ராணுவம் எமது ராணுவம் தான். பிரபாகரனுக்கு இருந்த ஒரேயொரு தப்பிப் போகும் வழியையும் அடைத்து விட்டோம், நாளைக்கே புலிகளை அழித்து விடலாம்....என்று குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தின் பின் ராணுவத்தில் 12 பேர் பலி, 23 காயம் என்று செய்தி போட்டிருந்தார்கள். உடனேயே சுருதி எல்லாம் குறைந்து அட, எமக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கிறதா? எப்படி வந்தார்கள்? எமது படையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இதை எப்படி "புலிகளின் தாக்குதல் தோல்வியில் முடிந்தது என்று ராணுவம் பேச்சாளர் சொல்கிறார்?" என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்னும் சிறிது நேரத்தின் பின்னர், 10 புலிகளும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று செய்தி வந்தது. உடனேயே , "அப்படியானால் எமக்குப் பலமான இழப்புத்தான் போலிருக்கு, ரெண்டு ராடர்கள் வேறு போயிருக்கு, ரெண்டு இந்தியர்களுக்கும் காயமாமே?, நாம்தான் முன்னோக்கிப் போவதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம், அவர்களுமல்லவா முன்னோக்கி வருகிறார்கள்?" என்று சலிப்புடன் கதைக்கிறார்கள். ஒருவர் இன்னொரு படி மேலே சென்று" பொய்க்காவது புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று சொல்லுங்கள், இன்றைய இழப்புகளால் ஏற்பட்ட சோகத்தை அப்படியாவது ஆற்றிக் கொள்ளலாம்" என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

இது எப்படியிருக்கு ?

  • Replies 96
  • Views 21k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவிலேயே இதுபோன்ற பித்தலாட்டங்கள் நடத்தப்படுகின்றன...............

இது பற்றி புலிகள் இன்னும் ஒரு அறிக்கையும் வெளிவிடவில்லையே...

வீரவேங்கைகளுக்கு சிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள்

வவுனியாவில் உள்ள படைத் தலைமையகத்தில் சிறிலங்கா விமானப்படையினருக்காகக் கடமையாற்றிக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ராடர் இயக்குனர்களும் விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலில் காயமடைந்துள்ளார்கள்.

காயமடைந்த இருவரும் உடனடியாகக் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிய வருகின்றது. படைத்தரப்புத் தகவல்களின்படி பத்துப் படையினரும் பொலிஸார் ஒருவரும் இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர் என்றும் விடுதலைப்புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் பத்து சடலங்களைத் தாம் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தவிரவும் 15 படையினரும் 8 பொலிஸாரும் 5 விமானப்படையினரும் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் போது வன்னியில் இருந்து 115 எறிகணைகளை புலிகள் வீசியதாகவும் அவை அனைத்தும் ஜோசப் முகாம் பகுதியைச் சுற்றி வீழ்ந்ததாகவும் வவுனியாவின் எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முகாம் பகுதியில் அமைந்திருந்த முகாமின் தலைமைக் கட்டிடம், ராடர் நிலையம் என்பன முற்றாக சேதம் அடைந்ததுடன் இலங்கை விமானப்படையின் இரண்டு விமானங்களும் சேதம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை கட்டுநாயக்காவிலிருந்து புறப்பட்ட இரண்டு தாக்குதல் விமானங்கள் வவுனியாவில் குண்டு வீசி விட்டுச் சென்ற புலிகளின் இரண்டு விமானங்களைக் கண்டதாகவும் அவற்றில் ஒன்றை முல்லைத்தீவில் தரையிறங்கும் போது சுட்டு வீழ்த்தியதாகவும் படைத்தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் அவ்வாறாக விமானம் ஏதும் வீழ்ந்ததாக அறியக்கிடைக்கவில்லை என வன்னித்தரப்புச் செய்திகள் தெரிவி;கின்றன. மறுபறத்தில் புதுக்குடியிருப்பில் மக்கள் செறிவாக வாழும்பகுதிகளிலும் பூநகரியிலும் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடாத்தியுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

இதேவேளை புலிகள் அதிகாலை 2.30 மணியளவில் வான் தாக்குதலை நடாத்தியதும் மும் முனைகளிலிருந்து சிறிலங்காவின் படைத்தளத்தை நோக்கி ஆட்லறி செல் வீச்சு புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. புலிகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் விமானப்படையின் இரண்டு விமானங்களும் ராடர் தொகுதியும் சேதமுற்றதாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.

http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

இது பற்றி புலிகள் இன்னும் ஒரு அறிக்கையும் வெளிவிடவில்லையே...

வீரவேங்கைகளுக்கு சிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள்

நடப்பது உரிமை யுத்தம், தர்ம யுத்தம், வாழ்வுக்கான யுத்தம், சொந்த பலத்தில் யுத்தம்... இதில ஆறிக்கை விட்டு போரிடமுடியாது...

இதை எங்கட சனங்கள் சரியா விளங்கி இருந்தா அவங்களுக்கும் அலுப்பில்லை... இந்தக்கேள்வியும் வராது.

எல்லா அறிக்கைகளும் வந்து போகட்டன் தேவைக்கேற்ப புலிகள் அறிக்கை விடுவார்கள்.......

  • கருத்துக்கள உறவுகள்

அந்த றாடரை என்ன செய்யலாம்?

பழைய போத்தல் பித்தளை இரும்பு இருக்கா எண்டு கத்திக்கொண்டு சிலர் பழைய நாட்களிலை யாழ் வீதிகளிலை திரிவார்கள் - அப்படி இப்பவும் இருந்தால் உதைக் கழட்டி கொடுத்து பேரீச்சம்பழம் வாங்கி சாப்பிடலாம்.

அடடா..... . இந்த நேரம் யாழ்கள இலங்கை இராணுவ பேச்சாளர்கள் வருகிறார்களில்லையே. எப்பிடி வருவினம் அவைதான் முக்காடு போட்டுக்கொண்டு குப்புற படுத்திருப்பினம். ஆனால் மீசையிலை மண்முட்டாது.

வரமாட்டங்கள் இப்ப வரமாட்டாங்கள்............. என்னை தனியா புலம்ப வைச்சிட்டாங்களே.

இந்த நேரம் பார்த்து ***** போவார்களை காணம்

வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாக தாக்கியழிப்பு; வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின: விடுதலைப் புலிகள்

[செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2008, 07:07 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வவுனியாவில் அமைந்துள்ள சிறிலங்கா படைத்தலைமையகத்தின் மீது கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் அங்கிருந்த கண்காணிப்பு கதுவீ (ராடர்) முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. வான்புலிகளின் வானூர்திகளும் தளத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளன. படைத்தளத்தின் மீது கேணல் கிட்டு பீரங்கி படைப்பிரிவினர் நடத்திய செறிவான ஆட்லறி தாக்குதலில் படையினருக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் அமைந்துள்ள சிறிலங்கா படைத்தளத்தின் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:

சிறிலங்கா படையினரின் வன்னித்தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படையினரின் வான் கண்காணிப்புக் கதுவீ அல்லது ராடார் நிலையத்தை இலக்குவைத்து இன்று அதிகாலை 3:05 மணிக்கு கரும்புலிகள் அதிரடித்தாக்குதலை நடத்தினர். இதில் அந்த கதுவீ - ராடர் - நிலையம் முற்றாக அழிக்கப்பட்டது.

அதிஉயர் பாதுகாப்புக்கொண்ட சிறிலங்கா வான்படை மற்றும் வன்னி கூட்டு நடவடிக்கை தலைமையகம் உள்ளடங்கிய தளத்திற்குள் கரும்புலிகள் ஊடுருவி உள்நுழைந்து தாக்குதல் நடத்திய அதேவேளை, இவர்களின் உதவியுடன் படைத்தளத்தின் மீது வான்புலிகளின் வானூர்தி தாக்குதல்களும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரின் செறிவான ஆட்லறி பீரங்கித்தாக்குதலும் நடத்தப்பட்டன.

இத்தாக்குதல்களில் சிறிலங்கா படையினர் 20-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். வெடிபொருள் களஞ்சியங்களும் தொலைத்தொடர்புக்கோபுரமும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வகமும் வானூர்தி எதிர்ப்பு ஆயுதமும் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டன. சிறிலங்கா படையினரின் வன்னித்தலைமையகமும் சிறப்புப்படையணியின் வன்னித்தலைமையகமும் பெரும் சிதைவுக்குள்ளாகின.

தாக்குதல் நடத்திய வான்புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின.

இத்தாக்குதல்களில் கரும்புலிகள் பத்து பேர் வீரச்சாவைத்தழுவி தாய்நாட்டின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈகஞ்செய்தனர்.

சிங்கள படைத்தலைமைக்கும் அரசுத்தலைமைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதலில் தாய்மண் விடுதலைக்காக வித்தானவர்களின் விவரம்:

கரும்புலி லெப்டினன்ட் கேணல் மதியழகி

கரும்புலி மேஜர் ஆனந்தி

கரும்புலி கப்டன் கனிமதி

கரும்புலி கப்டன் முத்துநகை

கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ்

கரும்புலி லெப்டினன்ட் கேணல் வினோதன்

கரும்புலி மேஜர் நிலாகரன்

கரும்புலி கப்டன் எழிலகன்

கரும்புலி கப்டன் அகிலன்

கரும்புலி கப்டன் நிமலன் ஆகியோர் வீர காவியமாகினர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Mission on Vanni SF HQ successful, Tiger aircrafts safe - LTTE

[TamilNet, Tuesday, 09 September 2008, 13:24 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) has claimed that their Black Tigers destroyed the Radar installation inside Sri Lankan military's Vanni headquarters at 3:05 a.m. on 09 September, Tuesday. Thereafter, Tamileelam Air Force (TAF) aircrafts and Col. Kittu Artillery formation targeted the Sri Lankan Vanni HQ with the coordination of the Black Tigers, successfully carrying out the operation. LTTE aircrafts safely returned to their bases after their mission, the Tigers said. The communication facility with its tower, engineering facility, anti-aircraft section and the ammunition store were completely destroyed, the LTTE said.

http://www.tamilnet.com/img/publish/2008/09/09-09-08_700.jpg

Black Tigers who attacked the Sri Lankan SF HQ for Vanni with LTTE leader Velupillai Pirapaharan. [Photo: LTTE]

The Vanni headquarters of the Sri Lankan forces, headquarters of the Special Forces (SF) for Vanni sustained heavy destruction in the attack, the Tiger statement issued in Tamil further said.

More than 20 Sri Lankan troopers were killed and many sustained critical injuries.

10 LTTE Black Tigers laid down their lives in the special operation.

Lt. Col. Mathiyazhaki, Major Ananthi, Captain Kanimathi, Captain Muththunakai, Captain Arivuththamizh, Lt. Col. Vinothan, Major Nilakaran, Captain Ezhilazhakan, Captain Akilan and Captain Nimalan were the Black Tigers, the LTTE statement said.

Tamilnet- 09-09-08_700.jpg

ஆகாயஇ தரை மற்றும் கரும்புலித்தாக்குதல்; வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின. புலிகள் அறிவிப்பு

ஜ09 செப்டம்பர் 2008இ செவ்வாய்க்கிழமை 7:00 பி.ப இலங்கைஸ

இன்று காலை வவுனியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் வன்னி தலமையகம் மற்றும் வான் கண்காணிப்பு ரடார் நிலையம் ஆகியவற்றின்மீது ஆகாயஇ தரை மற்றும் கரும்புலித்தாக்குதல் நடத்தியதாகவும்இ தாக்குதலுக்கு சென்ற

வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின என்றும் புலிகள் அறிவித்துள்ளனர்.

அவர்களது அறிக்கை விபரம் வருமாறு:

சிறிலங்காப் படையினரின் வன்னித் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படையின் வான் கண்காணிப்பு ரடார் நிலையத்திற்கு இலக்கு வைத்தும் 09.09.2008 அன்று விடிகாலை 3.05 மணிக்கு கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ரடார் நிலையம் அழிக்கப்பட்டது. தொடர்ந்து கரும்புலிகளின் உதவியுடன் வான் புலிகளின் வானூர்தித் தாக்குதல் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் பீரங்கித் தாக்குதல்களும் இடம்பெற்றன. இத்தாக்குதல்களில் சிறீலங்கா படையினர் இருபதிற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தார்கள்

வெடிபொருள் களஞ்சியங்களும் தொலைத் தொடர்புக் கோபுரமும் தொலைத்தொடர்பு தொழினுட்ப ஆய்வகமும் வானூர்தி எதிர்ப்பு ஆயுதமும் அழிந்தன. சிறிலங்கா படையினரின் வன்னித் தலைமையகமும் சிறப்புப் படையணியின் வன்னித் தலைமையகமும் பெரும் சிதைவுக்கு உள்ளாகின. இத்தாக்குதல்களில் கரும்புலிகள் பத்துப் பேர் வீரச்சாவடைந்து தாய்நாட்டின் விடுதலைக்காக தம் வாழ்வை ஈகம் செய்தார்கள்.

தாக்குதல் நடாத்திய வானூர்திகள் பாதுகாப்பாகத் தளம் திரும்பின

வீரச்சாவடைந்த கரும்புலிகள்.

கரும்புலி லெப்டினன் கேணல் மதியழகி

கரும்புலி மேஜர் ஆனந்தி

கரும்புலி கப்டன் கனிமதி

கரும்புலி கப்டன் முத்துநகை

கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ்

கரும்புலி லெப்டினன் கேணல் வினோதன்

கரும்புலி மேஜர் நிலாகரன்

கரும்புலி கப்டன் எழிலழகன்

கருப்புலி கப்டன் அகிலன்

கரும்புலி கப்டன் நிமலன்

http://www.uthayan.com/pages/news_full.php?nid=45

விடுதலைக்காய் வித்தான கரும்புலிமாவீரர்களுக்;கு எமது வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகாயஇ தரை மற்றும் கரும்புலித்தாக்குதல்; வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின. புலிகள் அறிவிப்பு

ஜ09 செப்டம்பர் 2008இ செவ்வாய்க்கிழமை 7:00 பி.ப இலங்கைஸ

!!!வெற்றித் தாக்குதல்!!....மீண்டும்...

வீரச்சாவடைந்த கரும்புலிகள்.

கரும்புலி லெப்டினன் கேணல் மதியழகி

கரும்புலி மேஜர் ஆனந்தி

கரும்புலி கப்டன் கனிமதி

கரும்புலி கப்டன் முத்துநகை

கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ்

கரும்புலி லெப்டினன் கேணல் வினோதன்

கரும்புலி மேஜர் நிலாகரன்

கரும்புலி கப்டன் எழிலழகன்

கருப்புலி கப்டன் அகிலன்

கரும்புலி கப்டன் நிமலன்<<<

வித்தான வீரக் கண்மணிகளுக்கு எங்கள் வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பத்துக் கண்மணிகளுக்கும் வீர வணக்கங்கள்.

வவுனியாவில் தொலைபேசிகள் எல்லாம் வழமை போல வேலை செய்கின்றன. தாக்கப் பட்ட சிங்கள முகாமுக்கு அருகில் வசிக்கும் ஒருவரின் தகவலின் படி, விமான எதிர்ப்பு வேட்டுகளுக்கு மத்தியிலும் புலிகளின் விமானங்கள் குறிப்பிடத் தக்க அளவு நேரம் வட்டமிட்டு மீண்டும் மீண்டும் குண்டுகள் வீசியதாகத் தெரிகிறது. இப்போதும் நீண்ட இடைவெளியில் எறிகணைகள் வந்து விழுந்த வண்ணம் உள்ளனவாம். இப்போது சிங்களப் படைகளும் பதிலுக்கு எறிகணை வீச்சில் ஈடு பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது. வழமையாக இப்படி ஏதாவது நடந்தால் சிங்களப் படைகள் முகாம் சுற்றாடலில் பெரிய தேடுதல் நடத்துவது வழமை. ஆனால் இன்னும் முகாமுக்குள்ளேயெ தேடிப் பொறுக்கிக் கொண்டிருக்கிறார்களாம், சேதம் அதிகம் இருக்கக் கூடும் என்பதற்கு ஒரு குறி காட்டி இது. எதுவும் தெரியவர இரண்டு நாட்கள் ஆகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவருடன் கரும்புலிகள் எடுத்துக் கொண்ட படத்துடன் பிபிசி/ஆங்கிலம் செய்தி வெளியிட்டுள்ளதுடன்.. விடுதலைப்புலிகள் வழங்கிய செய்திக் குறிப்பையும் மாற்றங்கள் இன்றி பிரசுரித்திருக்கிறது.

அரசாங்க விமானப்படை கோரியது போன்றல்லாது.. தமது விமானங்கள் பத்திரமா தளம் திரும்பியதாக விடுதலைப்புலிகள் அறிவித்த பின் பிபிசி அதன் பிரதான செய்தித் தலைப்பையும் மாற்றிக் கொண்டுள்ளது.

இந்திர இராணுவ ரடார் தொகுதி இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் காயமடைந்ததை இந்திய தூதரகம் ஒத்துக் கொண்டுள்ள அதேவேளை.. சிறீலங்கா இராணுவம் அதையும் மறுதலித்து.. மாட்டிக் கொண்டுள்ளது.

_45001821_45001811.jpg

Heavy losses in Sri Lanka clash

Sri Lanka's military says 12 soldiers and a policemen have been killed during a Tamil Tiger attack on a base in the northern area of Vavuniya.

The Tigers say 10 of their suicide fighters were killed in the raid.

The government says a Tiger plane was shot down, a claim which the rebel group has denied.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7605498.stm

Edited by nedukkalapoovan

தேசிய தலைவருடன் கரும்புலிகள் எடுத்துக் கொண்ட படத்துடன் பிபிசி/ஆங்கிலம் செய்தி வெளியிட்டுள்ளதுடன்.. விடுதலைப்புலிகள் வழங்கிய செய்திக் குறிப்பையும் மாற்றங்கள் இன்றி பிரசுரித்திருக்கிறது.

அரசாங்க விமானப்படை கோரியது போன்றல்லாது.. தமது விமானங்கள் பத்திரமா தளம் திரும்பியதாக விடுதலைப்புலிகள் அறிவித்த பின் பிபிசி அதன் பிரதான செய்தித் தலைப்பையும் மாற்றிக் கொண்டுள்ளது.

_45001821_45001811.jpg

Heavy losses in Sri Lanka clash

Sri Lanka's military says 12 soldiers and a policemen have been killed during a Tamil Tiger attack on a base in the northern area of Vavuniya.

The Tigers say 10 of their suicide fighters were killed in the raid.

The government says a Tiger plane was shot down, a claim which the rebel group has denied.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7605498.stm

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

போரம்மா

உனையன்றி யாரம்மா

போரம்மா

உனையன்றி யாரம்மா

போரம்மா

உனையன்றி யாரம்மா

செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்

தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்

ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம்

அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்

அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்

அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்

இங்கு தமிழ்ஈழமது பொங்கிவர வெல்வோம்

அண்ணன் பிரபாகரனின் கண்ணில் எழும்பொறிகள்

ஆணையிடும் போதினிலே ஆடும் கரும்புலிகள்

ஆடும் கரும்புலிகள் ஆடும் கரும்புலிகள்

வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்

வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்

வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்

எங்களுயிர் தந்தெமது எதிரிகளைக் கொல்வோம்

மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு

வீசும் காற்றின் வேகம் கொண்டு

மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா

மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள்

மண்ணில் வந்த வேங்கையம்மா

அண்ணன்சொன்ன வேதம் கேட்டு

விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி

ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா

ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்

ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்

ஆடும் கரும்புலிகளம்மா

  • கருத்துக்கள உறவுகள்

களமாடி வீர மரணம் அடைந்த மாவீரகளுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் மலர்வதற்காகவும் தமிழன் தலை நிமிர்வதற்காகவும் தமது உயிரை தியாகம் செய்த கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்

வெற்றிகரமாக வான் தாக்குதலை மேற்கொண்ட வான்புலிகளுக்கு வாழ்த்துக்கள்

இந்த தாக்குதலில் சந்தோசப்படுவதா அல்லது எமது கரும்புலிகளை நினைத்து கவலைப்படுவதா?

  • தொடங்கியவர்

வீர மறவர்க்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரமகனின் மைந்தர்களுக்கு வீரவணக்கங்கள். உங்கள் கனவுகள் நிச்சயம் நனவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் மலர்வதற்காகவும் தமிழன் தலை நிமிர்வதற்காகவும் தமது உயிரை தியாகம் செய்த கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்

வெற்றிகரமாக வான் தாக்குதலை மேற்கொண்ட வான்புலிகளுக்கு வாழ்த்துக்கள்

இந்த தாக்குதலில் சந்தோசப்படுவதா அல்லது எமது கரும்புலிகளை நினைத்து கவலைப்படுவதா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதலில் சந்தோசப்படுவதா அல்லது எமது கரும்புலிகளை நினைத்து கவலைப்படுவதா???

இன்றும் ஒரு உயிரைக்கொடுத்து கரும்புலித்தாக்குதல் செய்யவேண்டிய நிலையில் எம்தலைவன் இருப்பதையிட்டு

புலம்பெயர்தமிழர்கள் வெட்கப்படவேண்டும்.......

மனமிருந்தால் இடமுண்டு

களமாடி தம்முயிரை ஈந்த வேங்கைகளுக்கு வீரவணக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளால் இப் படைத் தளத்தினுள் 124 ஆட்டிலறி எறிகணைகள் ஏவப்பட்டுள்ளன. இப்பகுதியில் தரித்து நிறுத்தப்பட்ட இரு வானூர்திகள் சேதமடைந்துள்ளாகவும் இப்படைத் தளத்தினுள் மூன்று பிரிகேடியர் தர உயர் அதிகாரிகளும்இ கேணல் தர அதிகாரி ஒருவரும் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இவங்களுக்கு என்னாச்சு?????கைலாசமா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளால் இப் படைத் தளத்தினுள் 124 ஆட்டிலறி எறிகணைகள் ஏவப்பட்டுள்ளன. இப்பகுதியில் தரித்து நிறுத்தப்பட்ட இரு வானூர்திகள் சேதமடைந்துள்ளாகவும் இப்படைத் தளத்தினுள் மூன்று பிரிகேடியர் தர உயர் அதிகாரிகளும்இ கேணல் தர அதிகாரி ஒருவரும் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இவங்களுக்கு என்னாச்சு?????கைலாசமா?

124 ஆட்டிலறியா ohhhh :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.