Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவு

Featured Replies

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவு

[ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2008, 06:42 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அகில இந்திய கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்வரும் வியாழக்கிழமை (02.10.08) நடத்தவுள்ள போராட்டத்துக்கு தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளர் தா.பாண்டியனுக்கு நேற்று சனிக்கிழமை (27.09.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

இலங்கைத் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வலியுறுத்தியும், இலங்கைத் தமிழ் மக்களின் உயிர், உடமை மற்றும் உரிமைகளைப் பாதுகாத்திட வலியுறுத்தியும், தங்கள் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளான 02.10.2008 வியாழக்கிழமை அன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதை தெரிவித்து, அன்றைய தினம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என்றும், அதேபோல் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பங்கேற்று வாழ்த்துரை வழங்க வேண்டும் என்றும் தாங்கள் அழைத்தமைக்கு முதற்கண் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அன்றைய தினம் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையில் உள்ளேன். அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிலையில் 02.10.2008 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான திரு.சு.முத்துசாமி அவர்கள் கலந்து கொள்வார்.

மேலும், தாங்கள் கேட்டுக்கொண்டது போல், மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்வார்கள்.

இலங்கை தமிழர்கள் பிரச்சினைகளை முன்வைத்து தங்கள் கட்சியின் சார்பில் நடத்தப்படவுள்ள உண்ணாவிரதப் போராட்டங்கள் வெற்றிபெற எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியாமைக்கு வருத்தம் தெரிவிப்பு. தனது கழக அமைப்பு செயலாளர் திரு.மு.கந்தசுவாமி அவர்கள் கலந்துகொவார் என அறிவிப்பு.

www.tamiloosai.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அகில இந்திய கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்வரும் வியாழக்கிழமை (02.10.08) நடத்தவுள்ள போராட்டத்துக்கு தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளர் தா.பாண்டியனுக்கு நேற்று சனிக்கிழமை (27.09.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

இலங்கைத் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வலியுறுத்தியும், இலங்கைத் தமிழ் மக்களின் உயிர், உடமை மற்றும் உரிமைகளைப் பாதுகாத்திட வலியுறுத்தியும், தங்கள் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளான 02.10.2008 வியாழக்கிழமை அன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதை தெரிவித்து, அன்றைய தினம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என்றும், அதேபோல் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பங்கேற்று வாழ்த்துரை வழங்க வேண்டும் என்றும் தாங்கள் அழைத்தமைக்கு முதற்கண் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அன்றைய தினம் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையில் உள்ளேன். அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்நிலையில் 02.10.2008 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான திரு.சு.முத்துசாமி அவர்கள் கலந்து கொள்வார். மேலும், தாங்கள் கேட்டுக்கொண்டது போல், மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்வார்கள். இலங்கை தமிழர்கள் பிரச்சினைகளை முன்வைத்து தங்கள் கட்சியின் சார்பில் நடத்தப்படவுள்ள உண்ணாவிரதப் போராட்டங்கள் வெற்றிபெற எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ இணைப்பு

http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267

Edited by forlov

நன்றிகள், ஜெயலலிதாவின் ஆதரவு தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் என்பதே எம் அவா.

பி.கு: தயவுசெய்து தேவையற்ற விமர்சனங்களை இங்கு தொடுக்க வேண்டாம். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற ஆதங்கத்தில் ...

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக ஈழத்தமிழர்களின் விவகாரம் மாற்றமைடவது வரவேற்கத்தக்கது. இது தொடர்ந்து பலமடைந்து மத்திய அரசியல் வரை வழர வேணும்.

கனடாவிலோ அமெரிக்காவிலோ பிரித்தானியாவிலோ பலஸ்தீன விவகாரங்களின் இஸ்ரேலிற்கான ஆதரவு என்பது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதை போன்று ஈழத்தமிழர் நலன் சார்ந்த கருத்தியலை தமிழ்நாடு இந்தியா என்று ஆரம்பித்து ஈழத்தமிழர்கள் அதிக அளவில் வாழும் மேற்குலக நாடுகளிலும் உருவாக்க வேண்டும்.

பனிப்போர் காலம் போன்று இல்லாது இந்தியாவும் மேற்குலகும் தற்பொழுது ஒரு திசையில் ஒத்த நலன்களுடன் பயணிப்பவர்கள். ஈழத்தமிழர்கள் அதிகமாக புலம்பெயர்ந்திருப்பதும் இந்த மேற்குலக நாடுகளில் தான். எனவே இந்திய மேற்குலக ஈழ நலன்களை ஒரு கோட்டில் வைத்து பார்க்கும் மனப்பக்குவத்தை பெற வேண்டும். பழய கசப்பான விடையங்களை கிளறி பகை உணர்வுகளை அணையாது பார்த்துக் கொள்வதால் பாதிக்கப்படுவது நாம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் நன்மைக்கே

எதுவாக இருந்தாலும் வரவேற்போம்

அவர்களது அரசியல் எமக்கு தேவையற்றது

எமக்கு ஏதாவது கிடைத்தால் கெட்டியாகப்பற்றிக்கொள்வோம்

இலக்கே முக்கியம்

ஏறிச்செல்லும் வாகனத்தின் நம்பர் தகடல்ல...............???

ஆகா.., இங்கு பகிரப்பட்ட கருத்துகளை வாசிக்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது... தொடரட்டும் இப்படியான ஆரோக்கியமான கருத்துக்கள்... :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் ஆதரவு எமக்கு மகிழ்ச்சி அழிக்கின்றது .

வைகோ ஐயாவும் இதில் நிச்சயமாக உதவியிருப்பார்.மகிழ்ச்சியான செய்தி இதை மேலும் வளர வைக்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிழ்ச்சிதரும் ஒரு செய்தி ஆனால் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னமும் சந்தோசமாயிருக்கும் :)

ஈழத்தமிழர் விவகாரங்களிலும் மக்கள் நலன் சம்பந்தமான விடயங்களிலும் தமிழக அரசியல் கட்சிகள் தமக்குள் இருக்கும் பாகுபாடுகளை மறந்து செயலாற்றுமானால் அவர்களை யாராலும் சீண்டிப்பார்க்கக்கூட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

:) கருணாநிதியின் மவுனத்தை விடவும் இது எவ்வளவோ மேல்.

அண்ணன் வைக்கோ தொடர்ந்தும் ஜெயலலிதாவுடன் இருப்பதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது !

அனைவருக்கும் நன்றிகள்.

தமிழக மக்களின் நாடித்துடிப்பை அறிந்து காய்நகர்த்தி இருக்கிறார் என்றே நினைக்கிறேன்!

ஆனாலும் ஆதரிப்பது என்று வந்துவிட்டால் தைரியமாக முடிவுகள் எடுக்கக்கூடியவர் என்பதை மறுப்பதற்கில்லை!

எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்!

இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களுக்கு கைகொடுப்பவர்கள் எவரும்

தமிழும் தமிழரும் வாழக் கைகொடுத்தவர்கள் என்று எதிர்கால சரித்திரத்தின் பக்கங்களில் எழுதப்படுவார்கள்!

ஆனாலும் ஒரு நல்ல தமிழ் அறிந்தவர் இந்த சரித்திர வாய்ப்பை தன் கடைசிக் காலத்தில் தவற விட்டுக்கொண்டிருக்கிறார்

என்பதை நினைக்கும் போது தான் கவலையாக இருக்கிறது!

Edited by vettri-vel

தேர்தல் நெருங்கி வருவதால் எல்லாக் கட்சியினரும் இனி வாய் திறக்க வேண்டி இருக்கும்.தேர்தல் கூட்டணி அரசியலக்காகவும்.தொடர் அழுத்தம் எல்லாத் தரப்புக்கும் இருக்க வேண்டும்.இனியும் கலைஞர் வாய் திறக்கா விட்டால் அடுத்த தேர்தலில் திமுகா தோற்பதும் மக்கள் ஆதரவை இழப்பதும் உறுதி.ஆகவே அவர் அநேகமாக இனி வாய் திறப்பார், ஏனெனில் திமுக ஆட்சியின் இறுதிக் காலாம் இது. :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மக்களுக்காய் எழுச்சி கொண்டுள்ள தமிழக மக்களோடு அரசியல் கட்சிகளும் சேர்ந்தே பயணிக்க வேண்டிய கட்டாயம் தோன்றியுள்ள நிலையில்.. தமிழக மக்களின் சகோதரத்துவ எழுச்சி மேலும் மேலும் வலுப்பெறும் போது.. அரசியல் கட்சிகள் தாமாகவே ஈழத்தமிழர் நலன் காக்க முண்டியடிக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.

இந்த மாற்றங்களுக்காக அயராது எதிர்ப்புக்களின் மத்தியிலும் உழைத்த தலைவர்கள்.. தொண்டர்கள்.. தமிழக மக்கள் உண்மையில் பாராட்டி நன்றியுடன் நோக்கப்பட வேண்டியவர்களே..! :)

மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப எழும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபடவும்.... தமிழக மக்களின் எழுச்சியை ஈழத்தமிழர்களும் தமது தேசத்தின் விடுதலைக்காக பலமாக்கிக் கொள்ள வேண்டிய வேளை இது..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதாவது வாய் திறக்க முடிந்ததே நன்றிகள் :):)

இப்போதாவது வாய் திறக்க முடிந்ததே நன்றிகள் :):)
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவிற்கு ஆதரவளிக்கின்றேன் என்று கலைஞரைத் தாழ்த்திக் கதைப்பதும் தவறானது. அவரால் மத்தியரசைக் கட்டுப்படுத்தக் கூடிய சக்தியில்லை. அதனால் தான் பலருக்கு ஏற்பட்ட கோபம்... அவரிடம் எதிர்பார்த்த அளவு ஆதரவு கிடைக்கவில்லையே தவிர, அவர் சிங்கள அரசு கூடச் சோரம் போகவில்லை. அது கூட வரவேற்கப்பட வேண்டியதே.

1500 ஈழத்தமிழ் குடும்பங்கள் தங்கியுள்ள முகாமில் கண்டறியப்படாத வைரஸ் பரவியுள்ளதாக செய்தி ஒன்று கேட்டேன்.

மலசல கூடம் கூட ஒழுங்காக இல்லை என்றும் அந்த செய்தியில் தெரிவித்தார்கள்.

இது யாருடைய தவறு?

  • கருத்துக்கள உறவுகள்

எம்முடைய தவறு. இவ்வளவு புலம் பெயர்ந்து வசதியாகவுள்ளோம். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு உதவியிருக்க முடியும். அதைச் செய்யாமல் இருப்பது எம் தவறு தான்

புலம் பெயர்ந்தவர்களின் அமைப்புக்களோ ஏன் சர்வதேச அகதிகள் அமைக்களோ யுஎன்சிஆர் போன்றவை கூட இந்த முகாம்க்களில் சென்று வேலை செய்வதை இந்திய மத்திய அரசு தடை செய்திருகிறது. நான் அறிந்தவரை ஒரே ஒரு அவுஸ்திரேலிய அரசு சாரா அமைப்பு ஒன்றுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முகாம்களில் வேலை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கினால் புலம் பெயர் தமிழ்ரகளின் அமைப்புக்கள் நிச்சயமாக இந்த மக்களுக்காக வேலை செய்யும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேயின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும் இவ்வேளையில் சந்திரிக்காவுடன் சேர்ந்து கூட்டறிக்கை விட்டதையும் மறக்க முடியவில்லை :D

இங்கே ஏதோ சூட்சுமம் பின்ணணியில் இருக்கின்றது :)

ஏதோ யார் குத்தினாலும் எமக்கு அரிசியானால் சரி :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின் ஊடாக ஏதாவது செய்யலாம் என்றாலும் முயற்சித்துப் பார்க்கலாம். நேரடியாக இறங்கும்போது தான் சிலவேளை சிக்கல்கள் எழக்கூடும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜெயலலிதா கூட்டணி அமைக்கத் தயார் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அதற்காக ஜெயலலிதா செய்கிற அரசியல் நகர்வாக இது இருந்தாலும், கருணாநிதியைத் தனிமைப்படுத்தி ஏனய கட்சிகள் எடுத்துள்ள ஈழத்தமிழர் ஆதரவுப்போக்கு, விரைவில் கருணாநிதியையும் உண்ணாவிரதத்தையோ ஆர்ப்பாட்டத்தையோ செய்யவைக்கும் (அவர் விரும்பாவிட்டாலும்). அதுசரி, தமிழக மக்கள் எங்களுக்கு ஆதரவாய் இவ்வளவும் செய்யும்போது நாங்கள் என்ன செய்கிறோம்? 4 இலட்சம் ஈழத்தமிழர் வாழ்வதாகக் கூறப்படும் கனடாவில் கடந்த வார இறுதியில் நடந்த வீதியோர கவனஈப்பிலும் 26, 27 ம் திகதிகளில் நடந்த அடையாள உண்ணாவிரதத்திலும் எத்தனைபேர் கலந்துகொண்டோம்? செய்திகளில் ஆயிரக்கணக்கில் என்று சொல்லிக்கொண்டாலும் கலந்துகொண்டவர்கள் நுர்று பேரளவில்தான் இருந்தார்ககள். இந்த விடயத்தில் தமிழகத் தமிழர்களைப் பார்த்து நாம் திருத்திக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் ஜெ ஈழத்தமிழர் மேல் மேற்கொண்ட பரிவால் எடுத்த முடிவல்ல இடதுசாரிகளை கூட்டனியில் சேர்க்கா வேண்டும் அதற்க்கு ஜெ விடுகின்ற ஒரு சமிக்கை அவ்வளவுதான் மற்றும் படி பரிவெல்லாம் ஒன்றும் இல்லை தமிழ் நாடை பொறுத்தவரை அதிமுக வா இருந்தால் என்ன திமுக வா இருந்தால் என்ன தங்கள் கட்சி அரசியல் மற்றும் பதவி தான் முக்கியம் அங்கிருந்து ஆதரவு வரும் என்று நாங்கள் எதிர் பார்போமாக இருந்தால் கடசியில் முட்டாள் ஆக போவது நாங்கள் தான்.

முடிந்த வரை எல்லோரையும் அரவணைத்து சென்று வெல்வதே நன்று நன்மையே நடக்கும் என்று நம்புவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.