Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரியை கைப்பற்றிய படையினருக்கு மகிந்த வாழ்த்து தெரிவிப்பு

Featured Replies

கிழக்கு போல் பூநகரியும் புலிகள் போராடி மீட்கவில்லை. இராணுவம் தானாக விலகியதால் புலிகள் 1 ரவை கூட பாவிக்காது பிடித்த இடம். அதற்கு இப்ப நீர்போல் ஆயுதங்களை இறைத்து சிறீலங்கா பிடிக்கிறது. சிறீலங்காவின் பொருளாதாரத்தால் இது முடியாது. எனவே நடப்பவை எல்லாம் பகவத் கீதை சொல்வது போல் நன்றாகவே நடக்கிறது. ஓர்மத்தோடு நாட்டில் சாந்தி சமாதானம் மக்களுக்கு விடிவு வேண்டி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள கோவில்களில் பூசைகள் ஆராதனைக் செய்யுங்கோ.

(கிட்டத்தட்ட 16 மில்லியன் சனத்தொகையை கொண்ட) சிங்களவன் அகல கால்வைக்கிறான். ஒவ்வொரு அங்குலத்துக்கும் துருப்புக்களை நிறுத்தி உந்த இடங்களை காப்பாற்ற முடியாது. புலிப்படைகள் உள்ளுக்கு புகுந்து விளையாடப் போகிறார்கள். அப்பொழுது சிங்களம் பாரிய அழிவைச் சந்திக்கும். விட்டுட்டு ஓடிவிடும் மதவாச்சிக்கு. இயங்கு நிலையில் கனரக ஆயுதங்களையும் அள்ளலாம். பிறகு இலவசமாக பிடிக்கிற இடங்களை 1...2 மில்லியன் தமிழர்கள் பாதுகாக்கப்போகிறார்கள். எப்பிடி எண்டால் அச்சுறுத்தலான இராணுவ கட்டுரைகள் எழுதி காணொளிகள் தயாரித்து.

மோட்டுச் சிங்களவன் கோவணமும் இல்லாது நடு றோட்டில் வந்து நிற்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. நம்புங்கள் நாளை டண்ட னக் டண்ட னக்க

  • Replies 80
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

(கிட்டத்தட்ட 16 மில்லியன் சனத்தொகையை கொண்ட) சிங்களவன் அகல கால்வைக்கிறான். ஒவ்வொரு அங்குலத்துக்கும் துருப்புக்களை நிறுத்தி உந்த இடங்களை காப்பாற்ற முடியாது. புலிப்படைகள் உள்ளுக்கு புகுந்து விளையாடப் போகிறார்கள். அப்பொழுது சிங்களம் பாரிய அழிவைச் சந்திக்கும். விட்டுட்டு ஓடிவிடும் மதவாச்சிக்கு. இயங்கு நிலையில் கனரக ஆயுதங்களையும் அள்ளலாம். பிறகு இலவசமாக பிடிக்கிற இடங்களை 1...2 மில்லியன் தமிழர்கள் பாதுகாக்கப்போகிறார்கள். எப்பிடி எண்டால் அச்சுறுத்தலான இராணுவ கட்டுரைகள் எழுதி காணொளிகள் தயாரித்து.

நான் எழுதியதை முதலில் ஒழுங்காக வாசிச்சு விளங்கிட்டு.. டண்டனக்கா.. டணக்குனக்கா போடுறது நல்லது.

இராணுவம் அதன் வளத்தைப் பரம்பல் செய்கிறது என்பதையே எழுதி இருக்கிறேன். அது போகும் இடத்தை காத்து நிற்காது என்றோ.. அதற்குள் புலிகள் ஊடுருவ முடியாது என்றோ சொல்லவில்லை. இரண்டும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவோ.. அடுத்தவனை.. நோண்டிப்போட்டு.. சி என் என் ரேஞ்சில.. பிரச்சாரம் செய்தா ஈழம் கிடைக்கும் என்றோ.. மலிபன் விசுக்கோத்தை புறக்கணிச்சிருந்தா.. இப்ப பூநகரி.. போயிருக்காது என்றோ.. நான் சொல்லமாட்டன் பாருங்கோ..! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

:) குறுக்கு, நெடுக்கு,

உங்களிருவருக்கும் இப்ப இது தேவைதானா? எப்ப எப்ப சண்டை பிடிக்கிறது எண்டு ஒரு விவஸ்த்தை வேண்டாமோ?? அவனவன் இடிஞ்சுபோயிருக்கிறான், நாங்கள் ஆளாளுக்கு நொட்டித் தள்ளுவம்!

  • கருத்துக்கள உறவுகள்

பின்தளம் இல்லாமல் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது. எனவே அரூஸ் முன்பு எழுதியதுபோல் புலிகள் தங்கள் கவனத்தை இதயபூமியாகிய மணலாற்றில் செலுத்தலாம்..

இரண்டாம் ஈழப்போரில் தவறவிடப்பட்ட ஆனையிறவு மூன்றாம் ஈழப்போரில் மண்டியிட்டதை போல. மூன்றாம் ஈழப்போரில் தவறவிடப்பட்ட இதயபூமி நாலாம் ஈழப்போரில் மண்டியிடப்போவது உறுதி.

அதாவது சிறிலங்கா படைகளின் மணலாறு மீதான படை நடவடிக்கை எதிர்விளைவை கொடுக்கப்போவதுடன். அது மணலாற்றின் மீதான இராணுவத்தின் பிடியையும் முற்றாக தகர்ப்பதற்கே வழிவகுக்கும். மேலும் இதயபூமி மீட்கப்படும் போது இராணுவ வலுச் சமன்பாடுகளில் அதிசயிக்கத்தக்க மாற்றங்களை காணலாம் என்பது உண்மை

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ அடிபடுங்கப்பா! ஆனால் அதெல்லாம் யாழில் இந்த வருடம் இறுதி வரைக்கும் தானாம், என்று..... பட்சி சொல்லுது!

  • கருத்துக்கள உறவுகள்

:lol: குறுக்கு, நெடுக்கு,

உங்களிருவருக்கும் இப்ப இது தேவைதானா? எப்ப எப்ப சண்டை பிடிக்கிறது எண்டு ஒரு விவஸ்த்தை வேண்டாமோ?? அவனவன் இடிஞ்சுபோயிருக்கிறான், நாங்கள் ஆளாளுக்கு நொட்டித் தள்ளுவம்!

ரேக் இற் ஈசி. நாங்கள் இடிஞ்சு என்ன ஆகிறது. நாங்க எல்லாம் சேர்ந்து போராடி இருந்தா.. இப்ப விடிவு கிடைச்சிருக்குமே. அங்க ஆமி போனதிற்கு நாங்களும் தான் காரணம். நாங்க வசதியா வாழனும்.. யாரேன் போராடி ஈழமும் எடுத்துத் தரணும் என்று 100% சுயநலத்தோட இருக்கமே அப்படித்தான் எல்லோரும். அதைச் சிங்களவன் பயன்படுத்திக் கொள்கிறான். மோடன் மோடன் என்று சொல்லி மோடனானது சுயநலவாதியானது தமிழனே..! இதற்காக இடிய முடியுமோ. தவறு எமது. புலிகளதோ.. வன்னி மக்களதோ அல்ல. அவர்கள் தங்கள் இயலுமைக்கு ஏற்பத்தான் போராட முடியும். நாளை அவர்கள் சரணடைந்தால் கூட நாம்.. அதைக் குறைகூற அருகதையற்றவர்கள்.

காசைக் கொடுத்திட்டு.. வெற்றிச் செய்திக்காக கணணிக்கு முன்னால் இருந்தா.. காசு ஆயுதமாகி.. ஆயுதம் போராளியாகி.. போராடுமோ..??! ஆயிரக்கணக்கா வாற படையை எதிர்கொள்ள.. சில நூறு புலிகள்.. இந்த நிலையை ஏற்படுத்திய நாம் தான் இத்தோல்விக்குக் காரணம். பிறகேன் இடிவான்..! :)

Edited by nedukkalapoovan

இங்கு கடிபடுவதனை நிறுத்தி இங்கு போய் எழுதி எமது நியாயத்தை எடுத்து சொல்லுங்கள்..... சுனாமியில் அடிபட்ட கப்பல்களையாக்கும் புலிகளின் கப்பல்கள் என் ஏலம் போட்டு விற்கின்றார்கள்.

Edited by mathuka

.. இதோ இறுதிப் போர் தொடங்குது என்று எம்மவர்கள் பேசிப் பேசியே.. காலங்கழித்ததன் விளைவுகள்..

அது தான் எல்லோரும் உசுப்பேத்தி இருந்த இடங்களையும் பறிகொடுத்தது தான் மிஞ்சம்போல கிடக்குது ???

எங்கட பத்திரிகை உலக நண்பர்களை கட்டி பிடித்து முத்தம் கூடுக்க வேணும்.

சரியாக 15 வருடம் 8 நாட்களிற்கு பின்பு இராணுவம் புநகரியை இராணுவம் மீண்டும் ஆக்கிரமித்துள்ளது .

சிங்களவன் அகல கால்வைக்கிறான். ஒவ்வொரு அங்குலத்துக்கும் துருப்புக்களை நிறுத்தி உந்த இடங்களை காப்பாற்ற முடியாது. புலிப்படைகள் உள்ளுக்கு புகுந்து விளையாடப் போகிறார்கள். அப்பொழுது சிங்களம் பாரிய அழிவைச் சந்திக்கும். விட்டுட்டு ஓடிவிடும் மதவாச்சிக்கு. இயங்கு நிலையில் கனரக ஆயுதங்களையும் அள்ளலாம். பிறகு இலவசமாக பிடிக்கிற இடங்களை 1...2 மில்லியன் தமிழர்கள் பாதுகாக்கப்போகிறார்கள். எப்பிடி எண்டால் அச்சுறுத்தலான இராணுவ கட்டுரைகள் எழுதி காணொளிகள் தயாரித்து.

மோட்டுச் சிங்களவன் கோவணமும் இல்லாது நடு றோட்டில் வந்து நிற்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. நம்புங்கள் நாளை டண்ட னக் டண்ட னக்க

குறுக்கர் எங்களில் பல பேருக்கு இதில தானே பொழுதே போனது ??? பிறகென்ன ??? இப்பி ஆட்களை உசுப்பேத்திறதும் இராணுவ கற்பனை கட்டுரை வரையிறதிலையும் தான் வேற என்னத்தை !

போதும் எங்கள் மக்கள் பட்ட அவலங்கள் என்று நினைகின்றேன். சரி இனி சிங்களப்படைகளாவது வன்னியை கைப்பற்றி சாகிறவர்கள் சாக மீதிப்பேராவது நிம்மதியாய் வாழட்டும்.

கேவலம் இதுக்காகத் தான் இந்தளவு நாளும் இழந்தனாங்களோ ? கருத்து எழுதும் பொழுது கொஞ்சம் யோசிக்ககூடாதோ ? கேவலம் சிங்கள இ.ராணுவம்ஆவத நமக்கு நிம்மதியை தரட்டும் !!! நல்லாயிருக்கு மோனை கதை ! உம்மளப் போல கொஞ்சம் இருக்கிற படியால் தான் நாங்கள்இந்தப் பாடுபடுறம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களோடை இது வரை சேராதவர்கள் எல்லாம் தமிழர்களின் அழிவில் குளிர்காய்கிறார்கள்.. அவர்களை எல்லாம் வந்து சேர வேண்டும் எண்றல் நீங்கள் அவர்களுக்கு எல்லாம் படி அளக்க வேணும்... முடியுமா....???

விடத்தல் தீவு முதல் நாச்சி குடா வரை போனதன் பின்னர் பூநகரிக்கு என்ன கேந்திர முக்கியத்துவம் வந்து விட்டது நீங்கள் கவலை படுகிறதுக்கு.... அங்கை இருந்து பலாலிக்கு செல் போடலாம் என்பதா...???

கவலை படுவதாய் இருந்தால் நீங்கள் மாந்தை வளியால் வந்த ஆமியால் விடத்தல் தீவோ, பாலி ஆறோ, நாச்சிக்குடாவோ, விடு பட்ட போது கவலைப்பட்டு இருக்க வேணும்...

இப்போதைக்கு முக்கியமானது கிளிநொச்சியும் கூட அல்ல A9 பரந்தன் சந்தி... அதை நோக்கித்தான் இராணுவ நகர்வுகள் இருக்கின்றன..,

பூநகரியை பிடித்தால் பரந்தன் சந்திக்கு வருவது ரொம்ப சுலபம் என்பது எந்த முட்டாளுக்கும் தெரியும்

அதனால் தான் பூநகரிக்கு இவ்வளவு முக்கியம் கொடுக்கிறேன் நான்.

மறுக்குறீர்களா???

நகம் போய்விட்டது

விரல் போய்விட்டது என்பதைவிட

கை போய்விட்டது அதிக இழப்பாயிருக்குமல்லவா?????????

அப்ப இனி யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளி சிறைச்சாலை இல்லை. அது தானே மகிந்த பாதை போடுவிடார்?

இப்பத்தானே துண்டில்ல மீன் மாட்டி இருக்கு... 27 தெரியும்.... மகிந்த க்கு எல்லாருமா ஒரு ஓப் போருங்கோ!!!

  • கருத்துக்கள உறவுகள்

தோல்விகள் வெறிகளின் படிகள். மனம் தளராது எமது போராளிகளுக்கும், மக்களுக்கும் .தலைவருக்கும் கைகொடுப்போம். இறுதி வெற்றியை நோக்கி செயல்படுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: ஹாஹாஹா... நல்லாத்தான் எல்லாரும் கண்ணீர் வடிக்கிறீங்கள். உங்களெல்லாருக்கும் ஆமியை யாழ்ப்பாணத்தைவிட்டு துரத்த வேணும் எண்ட நோக்கம் இல்லை போலை..! :)
  • கருத்துக்கள உறவுகள்

முகமாலையில இருந்தும் தொடங்கீட்டினமாம். ஆனையிறவில இருந்தும் நாங்கள் பின் வாங்க வேண்டி வரும். பிறகு வருத்தப்படுறேல்ல. எல்லாம் நன்மைக்கே..! :)

பூநகரியின் வீழ்ச்சி, தமிழர் தரப்பிற்கான பாரிய இராணுவ பின்னடைவு. இதனை ஒட்டி, முகமாலை, பரந்தன் மற்றும் ஆனையிறவு என்பனவும் மீண்டும் ஆக்கிரமிப்புகுள்ளாகும் வாய்ப்பு அதிகளவில் ஏற்படும். அத்துடன் இராணுவம், நிச்சயம், வெற்றிலைகேணி பக்கமாக இன்னுமொரு முனையை திறந்து முன்னேற முயலலாம்.

பதுங்குதலும் பாய்தலும் புலிகளின் இயல்பு ! இங்கு கூடுதலாய் இனங்காக்கவும் வேண்டும் . புலிகளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஆகச்சரியான காரணம் இருக்கும் அது தேச அரசியல் மட்டுமின்றி பிராந்திய அரசியல் நகர்வு சார்ந்தும் இருக்கும்.

:) பொறுத்திருப்போம்

"எம்மண்ணில் பதிக்கும்

ஒவ்வொரு சுவட்டிலும்

உனக்கான சவக்குழியை

உன் சப்பாத்துகள்

வெட்டிக்கொண்டிருப்பது

உனக்கு தெரியுமா பகைவனே ! "

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது என்ன ஆகிவிட்டது?

இவையெல்லாம் எங்கள் தோழர்களின் எதிர்பார்ப்பில் உள்ளவைதானே. ஏதோ இதுவரைகாலமும் போராட்டத்தைப்பற்றித் தெரிந்து கொள்ளாத சின்னப்பிள்ளைகள்போல் பேசுகிறீர்கள்.... எதிரியிடம் எந்திரந்தான் பலம் என்றால் எங்களிடம் தந்திரம் பலமல்லவா....

புலிகள் எழுந்தபின் தமிழன் தாழ்ந்ததாய் சரித்திரம் இல்லை.

நாங்கள் எங்களுக்கான கடமைகளைச் செய்வோம்.

புலத்தின் எழுச்சிகளே களத்தின் பெரும்பலம்.

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரியின் வீழ்ச்சி, தமிழர் தரப்பிற்கான பாரிய இராணுவ பின்னடைவு. இதனை ஒட்டி, முகமாலை, பரந்தன் மற்றும் ஆனையிறவு என்பனவும் மீண்டும் ஆக்கிரமிப்புகுள்ளாகும் வாய்ப்பு அதிகளவில் ஏற்படும். அத்துடன் இராணுவம், நிச்சயம், வெற்றிலைகேணி பக்கமாக இன்னுமொரு முனையை திறந்து முன்னேற முயலலாம்.

நிழலி..

பூநகரி போகவேண்டி வந்தது காலத்தின் கட்டாயம். தமிழர்தரப்பு இரண்டாயிரமாம் ஆண்டில் யாழை நோக்கி மேற்கொண்ட நடவடிக்கை ஒரு கட்டத்துக்கு மேல் கைகூடவில்லை. இந்தியாவின் தலையீட்டினால்தான் போரை புலிகள் நிறுத்தி கைப்பற்றப்பட்ட தென்மராட்சிப் பகுதிகளிலிருந்தும் புலிகள் வெளியேறினார்கள் என்று நாங்கள் கூறிக்கொண்டோம். சிங்களவனோ பாகிஸ்தானிலிருந்து வரவழைத்த பல்குழல் பீரங்கியால்தான் புலிகளின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறிக்கொண்டான். ஆனால் ஒரு பேட்டியில் மறைந்த பிரிகேடியர் பால்ராஜ் அண்ணன் ஆள்வளம் இல்லாத காரணத்தினால்தான் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறியிருந்தார். அப்போதைய நிலையில் அதுவே பெருமளவில் உண்மை.

பின்னர் யாழ் மீட்புக்காக 2006 இல் புலிகள் ஒரு நடவடிக்கையைச் செய்து அது கைகூடவில்லை. நாலாபுறமும் அடைபட்ட ஒரு ராணுவத்தை அழித்தொழிப்பது நாடுகளுக்கு வேண்டுமானால் சாத்தியப்படலாம். ஆனால், முகமாலையை உடைத்துக்கொண்டு அத்தனை ஆயிரம் துருப்புக்களையும் வெல்வது புலிகளுக்கு மிகப்பலத்த சேதத்தை உருவாக்கும் என்பது தெரிந்துவிட்டது.

இப்போது புலிகள் என்ன செய்வார்கள்? முகமாலையில் குந்திக்கொண்டு இருந்தால் யாழில் அவனும் குந்திக்கொண்டுதான் இருப்பான். யாராவது ஒருதரப்பு அணுகுமுறையை மாற்றவேண்டும். இப்போது நடந்து கொண்டிருப்பது அதுதான். மேலோட்டமாக ஒரு பின்னடைவாகத் தெரியும் ஒரு நிகழ்விலிருந்து வெற்றிநோக்கிய ஒரு நகர்வே இது. இதற்கான பாடம் 2006 ஓகஸ்டில் கற்கப்பட்டது.

அரூஸ் போன்றவர்களை , வரிஞ்சு கட்டிக்கொண்டு போட்டுதாக்கிறவர்கள் தான் , இங்கு மாறி மாறி அப்பிடி நடக்கும் இப்பிடி நடக்கும் எண்டு எழுதிக்கொண்டிருக்கினம்.

ஏன் இந்த (***)களம் என்ர கண்ணில பட்டுது?

நிச்சயம் எல்லாம் மாறும்

Edited by பல்லவன்

இழப்புகள் நினைத்தால் கவலைதான் ஆனால் அவையே நிரந்தரமாகிவிடும் என எண்ணி நாம் பலயீனப்படக்கூடாது...

தன்னம்பிக்கையை எந்த சந்தர்ப்பத்திலும் கைவிடக்கூடாது... எல்லாம் ஒரு திடீர் திருப்பங்களில் மாறும்..எப்போது? எப்படி என்பது கள நிலைமைக்கு ஏற்ப இருக்கும்...

இவ்வளவு இழந்து பெற்ற வெற்றிகள் எல்லாம் சும்மா விளையாட்டிற்காகவா?...

காலம் ஒரு நாள் கைகொடுக்கும்....தலைவரை நம்பினோர் கைவிடப்படார்..

தோல்வி நிலை என நினைத்து தமிழன் வாழ்வை இழக்கலாமா?

எல்லாம் ஒரு தோற்றமே...

இடங்களைப்பிடித்தல் நிலங்களைக்கைப்பற்றுதல் வெற்றியல்ல.....

இதை காலஞ்சென்ற அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணா சொன்னது.....

இது ஒன்ரும் பெருசல்ல நாம் மீஇண்டும் எழுவோம் எம் விடுதலையை அடைவோம்.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது நமக்கு நாமே ஆறுதல் சொல்லி தேற்றுவது போல் உள்ளது. -தந்திரமான பின் நகர்வு- இது பற்றி எமக்கு அதிகம் தெரியாது ஆனாலும் இந்த பிரதேசத்து மக்களின் நிலை? ஒரு நண்பர் சொன்னது மாதிரி .. ஒரு சன்னம் இழப்பு இல்லாமல் கைப்பற்றப்பட்ட பிரதேசம் இன்று சிங்களப்படைகள் மழை என பொழிந்து தான் கைப்பற்றுகின்னர்... இதில் இருந்து ஒன்று புலப்படுகின்றது அதாவது ஒரு சன்னம் இழக்காது மீண்டும் இந்த பிரதேசம் கைப்பற்றபடும். பின் மழை போல் சிங்களம் பொழியும். அப்படியே எம் வாழ்வாதாரங்கள் சுடுகாடாகப்படும்?

மிக விரைவில் இதே பூநகரி பாதை வழியாக யாழில் உள்ள சிங்கள இராணுவம் தப்பி ஓடும். அந்த ஓட்டம் மஹிந்தவின் அரசின் கடைசி அத்தியாயமாக இருக்கும்.

நம்புங்கள் தமிழீழம் நாளை.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

மிக விரைவில் இதே பூநகரி பாதை வழியாக யாழில் உள்ள சிங்கள இராணுவம் தப்பி ஓடும்.

:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.