Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாங்குளம், குமுளமுனை ராணுவத்தினர் வசம்

Featured Replies

இலங்கையின் வடக்கு பகுதியில் இன்று மாங்குளத்தையும் குமுளமுனையையும் ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவிக்கின்றது.

Sri Lanka troops take two more towns from Tigers: defence ministry

COLOMBO (AFP) – Sri Lankan troops on Monday captured two more strategic towns from Tamil Tiger rebels following fierce fighting in the north of the island, the defence ministry said.

Security forces battling to dismantle the rebels' mini-state entered the town of Mankulam, located just south of the Tamil Tiger political capital of Kilinochchi, government defence spokesman Keheliya Rambukwella said.

Government troops also seized Kumalamunai, a town just south of the key Liberation Tigers of Tamil Eelam (LTTE) base of Mullaittivu, situated on the northeast coast.

"The Task Force Three of the army went into Mankulam junction this morning and they are now consolidating in the town," Rambukwella told AFP. "This morning we also captured Kumalamunai in Mullaittivu district."

The Sri Lankan military said on Saturday it had taken another key town, Pooneryn, on the northern edge of the mainland.

"Mankulam is a psychologically very important place for us to re-establish, because nine years ago the army lost it. The same with Pooneryn," said Rambukwella, who is also a cabinet minister.

The minister did not give casualty figures, but added that a multi-pronged offensive to take Kilinochchi, the political headquarters of the Tigers, was under way.

The LTTE meanwhile said they had beaten back an offensive against their frontlines at Muhamalai on the Jaffna peninsula in the far north of the island.

"Twenty Sri Lanka army soldiers were killed and at least 80 wounded in the fighting," the pro-rebel Tamilnet.com website reported, without giving rebel casualties.

Sri Lankan authorities have restricted access to the embattled areas for journalists as well as for most aid workers, making claims by the two sides impossible to independently verify.

The Sri Lankan government pulled out of a Norwegian-brokered truce with the LTTE in January.

Tens of thousands have died on both sides since the LTTE launched an armed struggle in 1972 to carve out a homeland for minority Tamils in the majority-Sinhalese nation.

http://news.yahoo.com/s/afp/20081117/wl_st.../srilankaunrest

  • Replies 50
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக்கள முனையில் போராளிகள் பல முனைகளில் சண்டையைத் தவிர்த்து தம்மை பின்னிழுத்துக் கொள்கின்றனர் என்பது உண்மைதான். அது வேரொரு வகையில் அவர்களுக்கு உதவக் கூடும்.

ஆனால் அரசபடைகள் யாழ்ப்பாண முன்னரங்க நிலையில் நேற்றுக் கடும் சேதத்தை சந்தித்துப் பின்வாங்கி இருக்கின்றன. என்ற செய்தி இங்கு முக்கியமான தகவலை அரச படைகளுக்குச் சொல்லி இருக்கும் என்பதை நம்பலாம்.

ஏ 9 சாலையில் மாங்குளம்.. ஓமந்தை.. கொக்காவில் என்று போராளிகள் பின்வாங்கியே உள்ளனர்.

வன்னிக்கள முனையில் போராளிகள் பல முனைகளில் சண்டையைத் தவிர்த்து தம்மை பின்னிழுத்துக் கொள்கின்றனர் என்பது உண்மைதான். அது வேரொரு வகையில் அவர்களுக்கு உதவக் கூடும்.

ஆனால் அரசபடைகள் யாழ்ப்பாண முன்னரங்க நிலையில் நேற்றுக் கடும் சேதத்தை சந்தித்துப் பின்வாங்கி இருக்கின்றன. என்ற செய்தி இங்கு முக்கியமான தகவலை அரச படைகளுக்குச் சொல்லி இருக்கும் என்பதை நம்பலாம்.

ஏ 9 சாலையில் மாங்குளம்.. ஓமந்தை.. கொக்காவில் என்று போராளிகள் பின்வாங்கியே உள்ளனர்.

ஆம், உண்மையில் பொறுமையுடன் களத்தினையும் பிராந்திய அரசியலையும் உற்றுநோக்கும் காலமே இது. தாயினும் மேலாய் தமிழ்நிலத்தை போற்றும் புலிகள் கொடுக்கிறார்கள் என்றால் ஆகச்சிறந்த நோக்கம் ஒன்று இல்லாமலில்லை.

தமிழீழ புலிகளின் தாகம் தணிக்க வான்மகள் கருக்கொள்ளும் இருளே இப்பொழுது சூழ்ந்திருப்பது.

போன முரை கிளிநொச்சி பிடிக்காமலே அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது ஆனால் இந்த முறை கெள்விக் குறிகள் அதிகம் ஆகிவிட்டன.

பின்வாங்க வைக்க எதாவது ஊடுறுவி சதி செய்கிறதா?..கால நிர்ணயம் செய்து..

எதிரி வெற்றியின் மேல் வெற்றி மமதையில் மழைகாலம், மாவீரர் தினம் என்பன போன்றவற்றை வைத்து அவசரப்படுகிறான் ..

வெற்றி செய்திகளை தொடர்ந்து சிங்களத்திற்கு, உலகத்திற்கும் சொல்லி மேலும் சிங்கள வாலிபர்களை மேலும் படையில் சேர்த்து அதனைப்பயன்படுத்துகிறான்...

இவற்றிற்கெல்லாம் பதில் பெரும் இழப்புகளை எதாவது ஒருமுனையில் ஏற்படுத்தி மனவலிமையை உடைத்து எறிய வேண்டும்.. அல்லது கைப்பற்றிய பகுதியை மீண்டும் கைப்பற்றி பெரும் அழிவை எதிரிக்கு ஏற்படுத்த வேண்டும்...

எமக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது இழப்பில் தான் விடிவு பிறக்கிறது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து கிடைக்கும் செய்திகள் வருத்தமடையச் / சோர்வடையச் செய்தாலும் தமிழர் படையின் மீது நம்பிக்கை இருக்கிறது.

கல்முனை பகுதியில் புலிகள் விட்டுவிலகவில்லையென்பது உண்மையான செய்தியா

முன்னர் 60000 இராணுவத்தினர் வன்னியை வல்வளைக்க முற்பட்டனர்... அதில் மாங்குளம், ஒட்டு சுட்டான் வரைக்கும் மன்னார் , வவுனியாவீதி கரையோரங்கள் மன்னாரின் அரைப்பகுதி வரை கைப்பற்றி நிண்றனர், அதன்பின்னரான ஒரு கால கட்டதின் பின்னர் தான் போதுமான உதவிப்படைகள் இல்லாது இராணுவம் முன்னேற திணற ஆரம்பித்தது...

இண்று படையில் இருந்து ஓடியவர்கள் எல்லாம் போக 90,000 இராணுவத்தினர் ( கிழக்கு மாகான படையினர் உள்ளடங்காமல்) சண்டை இடுவதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றது.

இராணுவம் தன்னிடம் உள்ள உதவி படைகளை கொண்டு வல்வளைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டு தானிருக்கும் என்பதுக்கு 2 வருடமாக அவர்கள் தொடரும் போர் நல்ல உதாரணம்.

இலங்கை படைகளி தங்களின் போரின் உத்திகளை மாற்றி போரிடுகிறார்கள் , முடிந்த அளவு போராளிகளை காயப்படுத்தி, கொலை செய்வது அவர்களின் முக்கிய நோக்கம், இடங்களை பிடிப்பது அவர்களின் இரண்டாம் பட்ச்சமாக உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

உலக நாடுகளின் பொருளாதார வீட்ச்சிகளை கணக்கில் கொள்ளாது மீண்டும் ஒரு வருடம் போருக்காக மகிந்தர் ஒதுக்கிய தொகை சொல்கிறது மகிந்தர் மகிந்தர் தானாக வீழ்வார், புலிகள் தாக்க தேவை இல்லை என்பதை. ஆனான பட்ட ரஸ்யா சந்திக்காததா.?

புலம்பெயந்தவை தான் இப்போதையை போரின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர்களாகிறர். தாயகத்தவை பொருளாதாரத்தாக் கட்டி எழுப்பிவருவதோடு, அவர்களின் மீதான கொடுமைகளை உலக கவனத்துக்கு கொண்டு வர வேண்டும், இலங்கை மீது அழுத்தங்கள் கொண்டு வர வேண்டும்.

தாயக மக்களின் உரிமை போரையும் அதன் பிரதிநிதிகளையும் அடையாள படுத்த வேண்டியது எல்லா தமிழனினதும் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிந்தாலும்

வேறு என்ன செய்வதாக உத்தேசம்

ஒன்றுமட்டும் நிச்சயம்

நாம் போரைவிரும்பவில்லை

போரை நாடவில்லை

போரைத்தொடங்கவில்லை

போரை நாம் வெறுக்கிறோம்

ஆனால் போர் எம்மீது திணிக்கப்பட்டுள்ளதுபோராடாவிட்டால் நாம் அழிக்கப்படுவோம் என்பதனாலேயே போராடுகிறோம்

வேறு வழி இல்லை எம்மிடம்

வேறுவழியை எமக்கு விட்டுவைக்கவில்லை அவன் எமக்கு

அதை நாம் எல்லோரும் முதலில் அறியவேண்டும்

இதை முதலில் நாம் புரியவேண்டும்

தோல்வி, வெற்றியெண்டு பக்கத்துக்குப்பக்கம் கொடியாட்ட இது ஒன்றும் விளையாட்டில்ல, இது ஒரு இனத்தின் விடுதலை போராட்டம், இது எமது இனத்தின் இருப்பின் போராட்டம். இதில எந்தநிலைவரினும் எம்மால் விட்டு விலகமுடியாது.... வீழ்ந்தாலும் வாழ்ந்தாலும் இது எங்கள் இனம்....

முடியாதவர்கள் நம்பிக்கை இல்லாதவர்கள் மதிமேல் பூனையா இருப்பவர்கள் இதிலேயே தெரியும் அவர்களை நாம் இலச்சியம் செய்யத்தேவையில்லை....

எதுவரை போகுதெண்டுதான் பார்ப்போமே...... இடங்களின் பெயர் என்றும் பெயராகத்தான் இருக்கும் மாறிமாறி ஆக்கள் வந்து போவினம் ஆமிவந்துபோகலாம், இதுக்கெல்லாம் பயந்தா போய்ச்சேர நிறைய குளுக்கள் இருக்கு அங்கபோய்சேர்ரது? பயந்தவன் சோர்ந்தவன் வெற்றியடையமுடியது, விழுகிறவன் விழ எழிகிறவன் வாறீர்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

இடங்களின் பேயர் என்றும் பேயராகத்தான் இருக்கும் மாறிமாறி ஆக்கள் வந்து போவினம் "

நான் நினைக்கிறன் எழுதுப்பிழை என்று ......." பெயர் என்றூம் பெயராகத்தான் இருக்கும் " ஆட்கள் வந்து போவினம் .......என்று வரவேண்டும் சூறாவளி தயவு செய்து கவனிக்கவும் .........

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குளம் சந்தியை மூன்றாம் அதிரடிப் படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை பகுதியை இராணுவத்தினர் இன்று காலை கைப்பற்றியுள்ளதாகத் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் இச்சம்பவம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவல்களும் வெளிவரவில்லை.

www.tamilwin.com

Maangku'lam

[TamilNet, Monday, 17 November 2008, 12:39 GMT]

Sri Lanka Army (SLA) launched another offensive push for the third consecutive day from Jaffna Monday morning. 8 SLA soldiers were killed and 29 wounded when the Liberation Tigers of Tamileelam (LTTE) put up stiff resistance from 5:00 a.m. till 11:00 a.m., thwarting a three frontal attack by the SLA on LTTE Forward Defence Line (FDL) in Mukamaalai, Ka'ndal and Ki'laai, the Tigers said. Meanwhile, the SLA which claimed its forces entered Kumizhamunai near Naayaa'ru lagoon south of A'lampil in Mullaiththeevu district, on Monday said its forces from Vannivi'laangkulam were attempting to occupy Maangku'lam on A9.

The SLA attempt to advance, from Vannivi'laangku'lam towards Maangku'lam and in south of A'lampil towards Kumizhamunai, aims to cut off the access routes between Mullaiththeevu and Vavuniyaa, officials engaged in humanitarian mission said expressing concerns on food and medical supplies to the uprooted civilians of Vanni, now densely populated in LTTE controlled Northeastern territory of Vanni.

In the meantime, Sri Lankan military circles in Colombo anticipate heavy battles in the forthcoming weeks as the SLA was expected to step up the offensive operations and the LTTE to encapsulate its defensive region with stringent combat coordination of its Northern, Western

தமிழ்நெற்

மாங்குளம் சந்தியை மூன்றாம் அதிரடிப் படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை பகுதியை இராணுவத்தினர் இன்று காலை கைப்பற்றியுள்ளதாகத் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் இச்சம்பவம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவல்களும் வெளிவரவில்லை.

www.tamilwin.com

நன்றிகள்

பிரபாகரன் படை வெல்லும்

அவன் பெறும் வெற்றிச் செய்தியை

வரலாறு சொல்லும்

பிரபாகரன் படை வெல்லும்

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுத்திருப்போம் நம்பிக்கையுடன் நண்பர்களே

கடந்த சில ஆண்டுகளாக புலிகளின் வலிந்த தாக்குதல்களை எதிர்பார்த்து சலிப்புற்றுள்ள புலம்பெயர்ந்தவர்களே, காத்தது காக்துவிட்டீர்கள். இன்னும் சில நாட்கள் பொறுங்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாங்குளம், பணிச்சங்கேணி ஆகிய பிரதேசங்களை இன்று திங்கட்கிழமை பிற்பகல் சிறிலங்கா படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

பனிச்சங்கேணி வாகரையில் உள்ளது. மாங்குளத்துக்கு பக்கத்தில் இருப்பது பனிக்கன்குளம்.. வன்னியின் பூகோள அமைப்பு தெரியாமலேயே செய்திகள் வரையப்படுகின்றன.

நேற்று முந்தினம் பூநகரி .... இன்று மாங்குளம் ..... நாளை மறுதினம் புளியங்குளமோ, ஓமந்தை .....

புரியாத புதிர்??????????

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிகள் வரும்போது அளவற்ற ஆனந்தத்தில் துள்ளுகிற நீங்கள் பின்னடைவு (தோல்வி என்று சொல்ல முடியவில்லை) வரும் போது மட்டும் ஏன் ஒரேயடியாக சலிப்படைந்து விடுகிறீர்கள்.நாங்கள் தோற்க முடியாது வெல்லும் வரை போராட வேண்டும்.வேறு ஏதாவது மாற்று வழி உண்டா? இல்லையே!!! தமிழர்களுக்கு இப்பொழுது மிக அவசியமானது மனோபலம் தான் ஆயுதபலம் பொருளாதார பலம் எல்லாம் அடுத்த பட்சமே! உங்களை மன தைரியப்படுத்துவதற்காக புலிகள் என்ன காரணத்திற்காக பின் வாங்கினார்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று ஆய்வுகள் செய்து எதிரியை மேலும் விழிப்புற வைப்பதாகவே அமையும். ஒவ்வொரு பின்னடைவிற்குப் பின்னாலும் வீறு கொணடெழுந்த வரலாறு புலிகளுடையது.

இரண்டு அடி முன்னே பாய வேண்டுமென்றால் பத்து அடி பின்னால் போக வேண்டும் என்பது உண்மை நின்ற இடத்தில் நின்று பாய்வது வெற்றி அளிக்காது.

நம்பிக்கை என்ற ஆயுதத்தைப் போல வேறு எந்த ஆயுதமும் உலகில் இல்லை. அதை எவர் இழக்கிறாரோ அவரின் தோல்வி நிச்சயிக்கப்படுகிறது.

நம் புலிகளின் பலத்தை அறியாதோர் பலர் உள்ளர் போல் தெரிகிறது. யுத்த தந்திரங்களுக்கே புது இலக்கணத்தையே வகுக்கப்போகிறார்கள் புலிகள். Stallin Guard எப்படி வரலாற்றில் பதியப்பட்டதோ அதற்கு இணையாக இதுவும் பதியப்படும். இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள்.

"பொறுத்தவன் பூமி ஆள்வான்."

இன்னும் சிலநாட்களில் கிளிநொச்சி என்ன, ஆனையிறவும் போகலாம்!!!! ஆனால் ............. ....... புரியாத புதிர்!

அவனது பரப்புரைகளில் சில மனவுளைச்சலுகள் ஏனோ வந்து சேர்ந்து விடுகிறது!!!

ஆனால் நாம் ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும், சிங்களவனின் ஊடக பரப்புரைக்கு நாம் ஈடு கொடுக்க முடியாதவராக உள்ளோம் என்பதை!!! சிலவேளை பலவற்றை என்ன ஒன்றையும் வெளியில் சொல்லக் கூடாத தேவை இருப்பது அவனுக்கு அனுகூலமாக போகிறது!!!

அடுத்தது புலத்தில் செயற்பாட்டாளர்களின் குறுகிய தேவைகளுக்கான பரப்புரைகள், நீண்ட காலங்களில் பல தாக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றன.

யுத்த நிறுத்த காலத்தில் எமக்கான வலுவான ஊடகங்களை உருவாக்க முடியவில்லை, அன்றி ஊடக பேச்சாளர் என ஒருவரையும் நியமிக்க கூட முயலவில்லை!! பல காரணங்கள் இருக்கலாம்.

எங்கள் பலருக்கு ஏற்பட்டிருப்பது மனசோர்வே. ஆனால் குறுகிய கால இராணுவ தோல்விகளினால் எமது கனவு, தாகம் எல்லாமாகிய எம்தாயக விடுதலையை விட்டு விடுவோமா?

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது, இந்த புரியாத புதிருக்கு விடைக்காக நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை என்று .............

//ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது, இந்த புரியாத புதிருக்கு விடைக்காக நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை என்று .............//

தெரியாத இராணுவக் கள நிலவரம் தொடர்பாக இது வரை மெளனம் காத்தாலும், உங்கள் புலம்பல்களைக் கண்டு பேசாமல் இருக்க முடியவில்லை, இவ்வளவு காலம் பொறுத்தோம், இன்னும் சிறிது காலம் தான் இருக்கிறது என்று தெரியும் போது , ஏன் புலம்ப வேண்டும்?

இராணுவம் முன் நேறிய வரை படைத்தைப் பார்க்கும் எவருக்கும் , என்ன நடக்கப்போகிறது என்பது ஓரளவு தெளிவாகத் தெரியும் போது, வீணாகக் குழம்பிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் இருக்கும் இடங்களில் என்ன என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யுங்கள், மிகுதி எல்லாம் நடக்க வேண்டிய படி நடக்கும்.இப்போது வேண்டியது எல்லோரதும் ஒன்று பட்ட செயற்பாடு, புலம்பல்கள் இல்லை.

நம்புங்கள் தமீழீழம் நாளை மலரும்.

.

மீண்டும் மீண்டும் எங்களுக்கு நாங்களே நம்பிக்கை மழை பொழியவேண்டுமெண்டு எதிபாராமல், புலத்தில் எம்மாலான எல்லா செயற்ப்பாட்டையும் வேகமாக செய்யவேண்டியகாலம் இது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.