Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா?

Featured Replies

நான் சொல்ல வருவதை சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக படைத்துறைரீதியில் செய்யப்பட்ட எதிர்வுகூறல்கள், ஆய்வுகள் சரியான முறையில் நடக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறிலங்காப் படையினர் வன்னி மீதான படை நடவடிக்கையை ஆரம்பித்த பொழுது, அவர்கள் பூநகரி வரை வருவார்கள் என்று எம்மில் எத்தனை பேர் எதிர்பார்த்தோம்?

கிழக்கை சிறிலங்காப் படையினர் கைப்பற்றுவார்கள் என்பதை ஒரு சிலர் எதிர்பார்த்திருந்தோம். (அதைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களும் இருந்தார்கள்). ஆனால் வன்னியின் நிலைமை இப்படி வரும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.

இத்தனைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரன் அவர்கள் ஒரு உரையின் போது இப்படிக் குறிப்பிட்டார். "வன்னி முழுவதும் படையினர் வந்தாலும் போர் நடக்கும்". (இந்த உரையை தேடிப் பார்த்தேன். என்னால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. கிடைத்ததும் தருகிறேன்)

ஆனால் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாம் இதற்கு தயாராக இருக்கின்றோமா?

வன்னி முழுவதும் படையினர் வந்தாலும், போராட்டத்தை நாம் தொடர்வோம் என்பதில் உறுதியாக இருக்கின்றோமா?

இன்றைக்கும் விடுதலைப் புலிகள் ஒரு பாய்ச்சல் நடத்தி இழந்த பகுதிகளை உடனடியாக மீட்டு எடுப்பார்கள் என்பதைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம். படையினரை விடுதலைப் புலிகளே உள்ளே இழுக்கின்றார்கள் என்றும், அவர்களை அழித்து ஒழிக்கப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே நாம் இருக்கின்றோம்.

எமக்கு எது இனிப்பாக இருக்கிறதோ, அதை மட்டுமே பேசுகிறோம்.

விடுதலைப் புலிகள் வன்னியில் நின்றுதான் போராட வேண்டுமா? இன்றைக்கு இருக்கின்ற ஆட்பலத்தை வைத்துக் கொண்டு இலங்கை முழுவதும் கரந்தடிப் போரை நடத்தினாலும், போராட்டம் முன்னோக்கி நகரத்தானே செய்யும்

இப்படியான ஒரு நிலையில் எமது புலம்பெயர்ந்த மக்கள் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார்களா?

  • Replies 63
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என் பதில்

நிச்சயமாக.

வேறு வழி.............????

யாழ்களத்தில் சபேசனுக்கும் மற்றவர்களுக்கும் தான் ஜாதார்த்தம் தெரியும் நாம் எல்லாம் புலிகள் அணு குண்டு போட போகிறார்கள் என்று காவல் இருக்கிறோம்...

யாழ்களத்தில் சபேசனுக்கும் மற்றவர்களுக்கும் தான் ஜாதார்த்தம் தெரியும் நாம் எல்லாம் புலிகள் அணு குண்டு போட போகிறார்கள் என்று காவல் இருக்கிறோம்...

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நாம் தயாரில்லை என்பதற்காக, அங்கு நடப்பவை நடவாமல் இருக்கப்போவதில்லையே ?!

புலிகள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாம் தயாரென்பதை பலமுறை காட்டியாகி விட்டது. இடையில் ஏற்பட்ட சில ராணுவ நடவடிக்கைகளால் மனம் சோர்வடைந்தாலும் அவர்கள் வழியே நம் வழியும்.

ஆமி வன்னியை பிடிச்சா நாங்கள் வெளிநாட்டிலை இருந்து சண்டை பிடிப்போம்... எவ்வளவோ செய்யுறம் இதை செய்ய மாட்டமா....??

:rolleyes: நாம் தயாரில்லை என்பதற்காக, அங்கு நடப்பவை நடவாமல் இருக்கப்போவதில்லையே ?!

புலிகள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாம் தயாரென்பதை பலமுறை காட்டியாகி விட்டது. இடையில் ஏற்பட்ட சில ராணுவ நடவடிக்கைகளால் மனம் சோர்வடைந்தாலும் அவர்கள் வழியே நம் வழியும்.

சபேசனின் பல கட்டுரைகள் நான் வாசித்துள்ளேன் தெந்தமிழீழம் பற்றி சரியான கனிப்பீடு செய்து இருந்த்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சபேசன் ஜயா!

உங்கள் கேள்வியில் ஒரு சிறு மாற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

அதாவது நான் தயாராக இருக்கின்றேனா? என்று மாற்றியமைத்து பாருங்கள் .

உங்கள் ஆக்கத்தின் தலைப்பு சரியாகத்தான் உள்ளது ஆனால் முடிவில்......

Edited by Valvai Mainthan

வணக்கம் சபேசன் ஜயா!

உங்கள் கேள்வியில் ஒரு சிறு மாற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

அதாவது நான் தயாராக இருக்கின்றேனா? என்று மாற்றியமைத்து பாருங்கள் .

புலிகளை இண்டைக்கும் பொடியல் எண்டு அழைக்கும் எண்ட அம்மம்மாகூட பூநகரீக்க ஆமி வந்த நியூஸ் தெரிஞ்ச உடன சொன்ன முதல் சொல்லு, உவங்கள், உள்ளுக்க இழுத்துவைச்சு அடிக்கப்போறாங்கள் போல எண்டு. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சபேசன் ஜயா!

உங்கள் கேள்வியில் ஒரு சிறு மாற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

அதாவது நான் தயாராக இருக்கின்றேனா? என்று மாற்றியமைத்து பாருங்கள் .

நல்ல கேள்வி? உரியவர்கள் கவனிப்பார்களா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் விடுதலைப் போராட்டம் தமிழீழ மண்ணுக்கே ஆனால் மாறும் கள நிலமைக்கேற்ப சந்தர்ப்பவாதிகள் ஒட்டுமொத்த எமது தேசிய உணர்வுகளை மண்ணுக்குள் போட்டு புதைக்க பலமுறை முயற்சித்து வந்திருக்கிறார்கள். போராளிகள் சமர்களில் வெல்வதும் தோற்பதும் அல்லது நிலத்தை பிடிப்பதும் இழப்பதும் போராட்டத்தின் போக்கில் நடைபெறுவது சாதாரணம். ஆனால் எனது இன்றைய கவலை போராட்டத்தில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்து இன்னலுறும் எமது உடன்பிறப்புகளைப் பற்றியதே.

  • தொடங்கியவர்

"நான் தயாராக இருக்கின்றேனா" என்பது ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்க வேண்டிய கேள்வி. நான் தயாராக இருக்கின்றேன். எந்த ஒரு நிலையிலும், எமது போராட்டத்திற்கு என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். எமது போராட்டத்தில் ஏற்படுகின்ற எந்த ஒரு பின்னடைவும் இந்தப் பங்களிப்பில் எதிர்மறையான தாக்கம் எதையும் ஏற்படுத்தாது. மாறாக என்னுடைய சக்தியை மீறி மேலும் பங்களிப்பை அதிகரிப்பதற்கு என்னை அது தூண்டும்.

ஆனால் நாம் எல்லோரும் தயாராக இருக்கின்றோமா?

அண்மையில் ஒரு பணியாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். "நல்ல ஒரு அடி குடுத்தால்தான், சனங்களிட்ட துணிவாப் போகலாம்" என்று சொன்னார்.

இந்த நிலையை பல இடங்களில் காண்கிறேன். இங்கே யாழ் களத்திலும் சலிப்புற்ற பல கருத்துகளை வாசிக்கின்றேன். போர்முனையில் ஏற்படுகின்ற பின்னடைவுகளை விட, இந்தக் கருத்துக்கள் எனக்கு வேதனையை தருகின்றன.

வன்னி நிலவரத்தை இன்னொரு கண்ணோட்டத்தில் பார்ப்போம்.

யாழ் குடாவில் நாற்பதினாயிரம் படையினரை புலிகள் முடக்கி வைத்திருக்கிறார்கள் என்று நாம் சொல்கிறோம். அதே நேரம் வன்னியிலும் ஆயிரக் கணக்கான புலிகள் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது படையினர் அவர்களை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் இருந்த புலிகளை விடுவித்து அம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைத்தது போல, வன்னியில் உள்ள புலிகளை விடுவித்து இலங்கைத் தீவு முழுவதும் அனுப்பி வைக்கப் போகிறார்கள்.

இப்படியான நிலையில் எமது போராட்டம் மேலும் வீச்சுப் பெறுமே தவிர, குறையப் போவது இல்லை. ஆனால் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாம் சலிப்புற்றுப் பின்வாங்கினால், அப்பொழுது நிச்சயமாக எமது போராட்டம் வீழ்ச்சியை சந்திக்கும்.

இங்கே முக்கியமானது போராட்டத்தை எந்த வகையிலாவது முன்னோக்கி நகர்த்துவதுதான்.

சிறிலங்கா அரசால் கொழும்பை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது. நாம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மீண்டும் கிளிநொச்சி என்று மாறி மாறி போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தியிருக்கிறோம்.

நடிகர் ரஜனிகாந்திற்கு தெரிந்த சிறு விடயம் கூட எமக்குத் தெரியவில்லை.

நாம் இன்னும் வெற்றி பெறவில்லை என்பது அல்ல இங்கே பிரச்சனை. சிங்கள பேரினவாதத்தால் எம்மை வெற்றி கொள்ள முடியவில்லை என்பதுதான் இங்கே முக்கியமானது.

"நீ வன்னி முழுவதும் வந்தாலும் எம்மை வெல்ல முடியாது" என்கின்ற உறுதி எமக்கு வேண்டாமா?

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் (தமிழ்மக்கள்) தெளிவாக இருக்கிறோம் நீங்கள் (சபேசன்) தான் குழம்பி இருக்கிறீர்கள் போலுள்ளது. வன்னி முழுவதும் இராணுவம் வரும் புலிகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து கொரில்லா யுத்தம் நடத்துவார்கள் என்ற கோணத்தில் நீங்கள் அவசரப்பட்டு ஆய்வுகளைச் செய்யப் போய் மக்கள் மனதில் நம்பிக்கையீனத்தை வளர்க்கப் பார்க்கிறீர்கள்.ஒரு தீவிர விடுதலை ஆ(ர்வல) (ய்வாள)ரான நீங்களே இப்படி எழுதினால்!!!!!!!! தயவு செய்து உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பைக் குறைத்து விடாதீர்கள். புலத்தில் இருந்து கொண்டு செய்யும் ஆய்வாளர்களே புலிகள் அதை விடமாட்டார்கள் இதை விட மாட்டார்கள் என்று மக்களுக்கு உசுப்பேத்தியவர்கள். புலிகளுக்கு தெரியும் அவர்களின் எல்லை. அவர்களுக்கு யாரும் பாடம் சொல்லத் தேவையில்லை

"நீ வன்னி முழுவதும் வந்தாலும் எம்மை வெல்ல முடியாது" என்கின்ற உறுதி எமக்கு வேண்டாமா?

ஒவ்வொரு தமிழனிடமும் இருக்க வேண்டிய உறுதி. எம் மண்ணின் விடுதலை என்பது எம் அனைவருக்குமானது. எந்த இடர் வரினும் இழப்புகள் வரினும் நான் என்றும் எப்போழுதும் எம் தலைவனின் வழி நடப்பேன். என்று உறுதி எடுத்துக் கொள்வோமாக. குட்டையைக் குழப்புபவர்களை இனம் கண்டு ஒதுக்கி விடுவதே மேல்.

ஜானா

அப்பிடிப்போடு ஜனா,

என்னதான் சிங்களவன் குத்துக்கரணம் அடிச்சு சுளண்டு வந்து திரிஞ்சாலும் அவங்களோட இனி வாழேலாது.... வாழேலாது..... வாழேலாது.

வன்னி முழுக்க வந்தாவென்ன விட்டாவென்ன...... போராட்டம் நிக்காது... ஆனா அதுவரைக்கு மகிந்த மாமா இருப்பாரோ. அவற்ற மச்சான் சரத்திருப்பாரோ..?

  • கருத்துக்கள உறவுகள்

"நான் தயாராக இருக்கின்றேனா" என்பது ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்க வேண்டிய கேள்வி. நான் தயாராக இருக்கின்றேன். எந்த ஒரு நிலையிலும், எமது போராட்டத்திற்கு என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். எமது போராட்டத்தில் ஏற்படுகின்ற எந்த ஒரு பின்னடைவும் இந்தப் பங்களிப்பில் எதிர்மறையான தாக்கம் எதையும் ஏற்படுத்தாது. மாறாக என்னுடைய சக்தியை மீறி மேலும் பங்களிப்பை அதிகரிப்பதற்கு என்னை அது தூண்டும்.

ஆனால் நாம் எல்லோரும் தயாராக இருக்கின்றோமா?

அண்மையில் ஒரு பணியாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். "நல்ல ஒரு அடி குடுத்தால்தான், சனங்களிட்ட துணிவாப் போகலாம்" என்று சொன்னார்.

இந்த நிலையை பல இடங்களில் காண்கிறேன். இங்கே யாழ் களத்திலும் சலிப்புற்ற பல கருத்துகளை வாசிக்கின்றேன். போர்முனையில் ஏற்படுகின்ற பின்னடைவுகளை விட, இந்தக் கருத்துக்கள் எனக்கு வேதனையை தருகின்றன.

வன்னி நிலவரத்தை இன்னொரு கண்ணோட்டத்தில் பார்ப்போம்.

யாழ் குடாவில் நாற்பதினாயிரம் படையினரை புலிகள் முடக்கி வைத்திருக்கிறார்கள் என்று நாம் சொல்கிறோம். அதே நேரம் வன்னியிலும் ஆயிரக் கணக்கான புலிகள் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது படையினர் அவர்களை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் இருந்த புலிகளை விடுவித்து அம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைத்தது போல, வன்னியில் உள்ள புலிகளை விடுவித்து இலங்கைத் தீவு முழுவதும் அனுப்பி வைக்கப் போகிறார்கள்.

இப்படியான நிலையில் எமது போராட்டம் மேலும் வீச்சுப் பெறுமே தவிர, குறையப் போவது இல்லை. ஆனால் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாம் சலிப்புற்றுப் பின்வாங்கினால், அப்பொழுது நிச்சயமாக எமது போராட்டம் வீழ்ச்சியை சந்திக்கும்.

இங்கே முக்கியமானது போராட்டத்தை எந்த வகையிலாவது முன்னோக்கி நகர்த்துவதுதான்.

சிறிலங்கா அரசால் கொழும்பை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது. நாம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மீண்டும் கிளிநொச்சி என்று மாறி மாறி போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தியிருக்கிறோம்.

நடிகர் ரஜனிகாந்திற்கு தெரிந்த சிறு விடயம் கூட எமக்குத் தெரியவில்லை.

நாம் இன்னும் வெற்றி பெறவில்லை என்பது அல்ல இங்கே பிரச்சனை. சிங்கள பேரினவாதத்தால் எம்மை வெற்றி கொள்ள முடியவில்லை என்பதுதான் இங்கே முக்கியமானது.

"நீ வன்னி முழுவதும் வந்தாலும் எம்மை வெல்ல முடியாது" என்கின்ற உறுதி எமக்கு வேண்டாமா?

இந்தக்கருத்துக்கள்

இந்தப்பழம் புளிக்கும் என நாம்படித்த கதையின் தன்மையைக்கொண்டது

அதாவது கிடைக்காத பொருளுக்கு ஆசைப்பட்டோம் என்றாகிவிடுகிறது

அல்லது கிடைக்காவிட்டால் வருத்தப்படமாட்டோம் என்று எம்மை தேற்றச்சொல்வதென்றாகி விடுகிறது

ஆனால் இதற்குள் நாம் வரமாட்டோம்

ஏனெனில் நாம் சில வாக்குறுதிகளை எம்மக்களுக்கு கொடுத்துள்ளோம்

அதனால் அவர்கள் மிகக்கடினமான உடல் பொருளாதார அவதைகளைப்பட்டுள்ளனர்

என்பதை இக்கட்டுரைகள் எழுதுபவர்கள் எளிதாக மறந்து விடுகின்றனர்

இன்றுகூட வட்டக்கச்சியிலிருந்து மக்கள் வெளியேறியுள்ளனர்

தாம் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்ததாக கூறுவதாக பத்திரிகைச்செய்தி கூறுகிறது

இவற்றை இக்கட்டுரையாளர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதேயில்லை

அதைவிட இன்று மனித உரிமைகள் மையமும் அறிவித்துள்ளது

புலிகள் கடுமையான தடுப்பு முறைகளை அமுல்படுத்தி மக்களைத்தடுத்து வருவதாக.

எனவே நாம் இயக்கத்துடன் தோல்வியின்போது நிற்போம் என்பது தவிர்க்கமுடியாது அது வேறு

ஆனால் இன்று எமக்கு தோல்வி ஏற்படுகிறது

ஏலாமையால்தான் புலிகள் பின்வாங்குகின்றனர் என்பதுவேறு.

ஏலாமையால்தான் புலிகள் பின்வாங்குகின்றனர் என புலிகள் சொல்லாதபோது

அப்படி ஏற்பட்டால் இப்படி ஏற்பட்டால் என்று கேள்வியை வைப்பவர்கள் அதற்கு பதிலையும் தரவேண்டும்

மக்களைக்குழப்புபவர்கள் அதற்கு மக்களுக்கு விளக்கமும் தரவேண்டும்

அது இன்மையால்தான் மக்களும் குழம்பி இன்று இராணுவ பகுதிகளுக்குள்ளேயே செல்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது

. இது மிகவும் ஆபத்தானது

அதையும் மீறி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியை வைக்கும் அளவுக்கு வந்துவிட்டனர் என்றால்.....................???????????

இவர்கள் நம்பிக்கை இழந்துவிடடனர் என்றுதான் அர்த்தம்............................??????????????????????

எனவே இவர்கள் மக்களுக்கு புத்தி சொல்லும்

அல்லது மக்களுக்கு வழிகாட்டும் தகுதியை இழந்துவிடடனர் என்றுதான் அர்த்தம் இல்லையா???????எனவே இந்தப்பழம் புளிக்கும் கதை ஈழத்துக்கு ஒத்துவராது

ஏனெனில் அதை விட்டுவிட முடியாது

ஏனெனில் அது எம்முடையது

அதை பறிக்கும்வேலையை ஒருவரிடம் நாம் கொடுத்துள்ளோம்

அவர்கேட்கும் கருவிகளை மட்டும் ஒழுங்காக கொடுப்போம்

கொடுத்துக்கொண்டே இருப்போம்...........................

முடியுமா

முடியாதா என்பது அவர்வாயால் வருமட்டும்

அவர்கேட்கும் கருவிகளை மட்டும் ஒழுங்காக கொடுப்போம்

கொடுத்துக்கொண்டே இருப்போம்...........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு ஆய்வு! நல்ல கேள்வி சபேசன்!

இங்கே சபேசன் எதை எழுதினாலும் எதிர்க்கவேண்டும் என்று சிலர் எழுதுகிறார்களா என எனக்குப் புரியவில்லை. ஆனால் சபேசன் எழுதிய பலகட்டுரைகளை வாசித்திருக்கிறேன். அவர் எழுதிய பல நிகழ்வுகள் நடந்தன. நடந்து கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் இங்கே அவர் எழுப்பிய கேள்வி அல்லது சந்தேகம் மனதளவில் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தாலும் ஒருவேளை அப்படி நடந்தால் புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்வார்கள் என்ற அடிப்படையில் அவர் எழுதியதை சற்று யோசித்துப் பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

"நீ வன்னி முழுவதும் வந்தாலும் எம்மை வெல்ல முடியாது" என்கின்ற உறுதி எமக்கு வேண்டாமா?

ஒவ்வொரு தமிழனிடமும் இருக்க வேண்டிய உறுதி. எம் மண்ணின் விடுதலை என்பது எம் அனைவருக்குமானது. எந்த இடர் வரினும் இழப்புகள் வரினும் நான் என்றும் எப்போழுதும் எம் தலைவனின் வழி நடப்பேன். என்று உறுதி எடுத்துக் கொள்வோமாக. குட்டையைக் குழப்புபவர்களை இனம் கண்டு ஒதுக்கி விடுவதே மேல்.

ஜானா

  • தொடங்கியவர்

நண்பர்களே!

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். போராட்டம் என்பது வேறு, போர் என்பது வேறு. போர் என்பது போராட்டத்தில் ஒரு பகுதி. இதில் போர் என்று வருகின்ற பொழுது பின்னடைவுகள் தவிர்க்க முடியாதது. ஆனால் போராட்டத்தில் பின்னடைவு வரக் கூடாது.

நாமோ போராட்டத்தைப் போர்க் கண்ணோட்டத்தோடு மட்டும்தான் பார்க்கின்றோம்.

யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகள் விடமாட்டார்கள் என்பதிலும் நாம் உறுதியாகத்தான் இருந்தோம். ஆனால் யாழ்ப்பாணம் போனது. ஆயினும் எமது போராட்டம் மேலும் வீரியம் அடைந்தது.

இடங்கள் எதிரியிடம் வீழ்வதில் எமது போராட்டம் தங்கியிருப்பது இல்லை.

வன்னியின் அரைப் பங்கு எதிரியிடம் அகப்பட்டு விட்டது. இதன் அடிப்படையில் புலம்பெயர் தமிழர்கள் பெரும் சோர்விற்று இருப்பதைப் பார்க்கிறேன். மிகுதியும் எதிரியிடம் சென்று விட்டால், அப்பொழுது புலம்பெயர் தமிழர்கள் என்ன நிலையில் இருப்பார்கள்?

வன்னி முழுவதும் எதிரியிடம் வீழ்ந்து விடும் என்பது அல்ல என்னுடைய கருத்து. வீழாது என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.

ஆனால் போரில் முடிவுகளை நாம் உறுதியாகக் கணிக்க முடியாது. எதுவும் நடக்கலாம். அதே போன்று போராட்டத்தின் கால எல்லைகளையும் யாராலும் வகுக்க முடியாது.

எமது போராட்டம் பல வடிவங்களில் பல தலைமுறைகளாக நீளலாம். இதில்; போராட்டத்தில் நாம் காட்டுகின்ற பற்றுறிதி மிக முக்கியமானது.

பல வடிவங்கள் எடுத்து பல வகைகளில் நீண்டு செல்லக் கூடிய ஒரு போராட்டத்தில் கொஞ்சமும் சலிப்புறாது எமது புலம்பெயர் மக்கள் பங்கெடுக்க வேண்டியது மிக முக்கியமானது.

இதன் அடிப்படையிலேயே என்னுடைய கேள்விகள் அமைகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இதன் உள்அர்த்தம் விபரீதமானது

நாமே தோல்வியை முன்கூட்டியே அறிவிப்பது போலானது

அந்தந்த வேலையை அவரவர் செய்வதே உகந்தது

நாய்க்கேன் போர்த்தேங்காய் என்று நான் கேட்டால் தங்களுக்கு கோபம்வராது என்று நான் நினைக்கிறேன் ஏனெனில் நான் இந்த வேலையை வேறொருவரிடம் கொடுத்துள்ளேன்

அவரது பேச்சுக்காக காத்திருக்கிறேன்

அதற்கிடையில் எவரும் முந்திரிக்கொட்டையாவதை ஆதரிக்கவிரும்பவில்லை

அந்தத்தகுதி அவருக்குமட்டுடk உண்டு

அந்தத்தகுதி அவருக்குமட்டுமே உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

இக்கருத்து அவசியமற்றதும், மக்கள் மனதில் நம்பிக்கையீனத்தையும் வளர்க்க் கூடியது. அப்படி ஒரு நிலை இருக்கின்றது நினைத்து என்று, இப்போது செய்கின்ற பணிகளில் ஈடுபாடு மக்களிடம் குறைந்து விட வாய்ப்புண்டு. சாதாரணமாக எதிரியை எதிர்த்துப் போடுபவனிடம் நாங்கள் கரந்தடியாக மாறப் போகின்றோம்என்றால் அது எதிர்த்துப் போராடுவனின் மனதில் தொய்வு ஏற்படுத்தக் கூடியது.

2வது, கிழக்கில் புலிகள் இல்லை என்றால் அவர்கள் வடக்கில் இருக்கின்றார்கள், அங்கே போய்ச் சேர்ந்து விட்டார்கள் என்றே, சிங்கள அரசு நினைக்கின்றது. வடக்கிலும் ( அப்படி ஒரு நிலை வராது) கிழக்குப் போல அரசாங்க ஆக்கிரமிப்புப் பிரதேசமானால், புலிகள் தங்களின் ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் வாழ்கின்றார்கள் எனச் சிங்கள அரசு நினைத்தால், அது விட்டு வைக்காது.

பல தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, இரகசியமாகக் கொல்லப்படுவார்கள். இப்போது கிழக்கில் எப்படி ஊடக மறைப்பு நடக்கின்றதோ, அப்படி ஒரு நிலையை வடக்குப் பிரதேசத்திலும் சிங்கள அரசு ஏற்படுத்தும். இப்போது செய்திகள் வெளிவருவதற்கான காரணமே தமிழீழ மண்ணில் வருகின்ற ஊடகங்கள் மூலம் தான். அதுவும் இல்லாவிட்டால் 50, 60 வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் எலும்புகளை வைத்துத் தான் தமிழனின் இருப்பினைக் கண்டு பிடிப்பார்கள். அப்போதும் அது சிலவேளை செம்மணி போல, எலி, பாம்பின் எலும்புகளாகக் கணிக்கப்படலாம்.

மீண்டும் 80களுக்குச் சென்று, திரும்பப் போராடுவது என்பது எல்லாம் இலகுவானதல்ல. அப்போது சிங்கள அரசுக்கு முதல் அனுபவம். இனப்பிரச்சனைப் போரைப் பற்றிய அறிவு கிடையாது. ஆனால் கடந்த 30 வருடங்களாக அது பெற்ற அனுபவம், அடுத்த முறை அவ்வாறு நடக்க விடாது.

இப்போது எமக்குப் பின்னடைவு எனக் கருதினால், அதில் எவ்வாறு வெல்வது என்பது பற்றிச் சிந்தியுங்கள். தோள் கொடுங்கள். அது தான் முக்கியம். இப்போது எவ்வளவு தூரம் பங்களிப்புச் செய்து இந்த ஆக்கிரமிப்பு எதிரிக்குப் பதிலளிப்பதை விட்டு விட்டு, தேவையற்ற வாதங்களை வைப்பது தவறானது.

ஒரு கதை சொல்வார்கள். நெப்போலியன் ஒரு இடத்தைப் பிடிக்க முயன்றபோது அங்கே அவனது படைகளால் வெல்லமுடியவில்லை. தொடர்ந்து அப்படி நடந்து தோற்றுக் கொண்டே இருந்தது. இறுதியாக எல்லாப் படைகளையும் சண்டையிட அனுப்பி விட்டு, திரும்பி வரக்கூடிய பாலத்தை நெப்போலியன் உடைத்தான். அதன் பின்னர், தான் அப்படைகள் வென்றார்கள்.

எமக்குத் தமீழீமப் போராட்டத்தைத் தவிர, சிங்கள ஆக்கிரமிப்பைத் தடுத்து வெல்வதைத் தவிர, வேறு வழி ஏதுமில்லை என்று ஒவ்வொருவனும் நினைத்தால், நிச்சயம் வெல்லலாம். இப்போது சபேசன் செய்வது, உடைக்கப்பட்ட பாலத்தைத் கட்டிக் கொடுக்கின்ற வேலை. தேவையான இது?

கரந்தடிப் போர் முறையைச் செய்யலாம் என்று சபேசன் நினைத்தால் அது தவறானது. 80களில் இருந்த காலப்பகுதி இப்போது இல்லை. இச்சமரில் தோற்றால் எமக்கு வேறு வழியில்லை. வரலாற்றில் தமிழன் இப்படி இருந்தான் என்று நினைவு கூர வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். போராட்டம் என்பது வேறுஇ போர் என்பது வேறு. போர் என்பது போராட்டத்தில் ஒரு பகுதி. இதில் போர் என்று வருகின்ற பொழுது பின்னடைவுகள் தவிர்க்க முடியாதது. ஆனால் போராட்டத்தில் பின்னடைவு வரக் கூடாது.

இப்படிச்சொல்வது சுலபம்

ஆனால் மீண்டும் 1983 நிலைக்கு வந்து

எந்தப்பிரதேசமும் கையில் இல்லாமல் நிற்கும் நிலையில்.............

போராட்டம் என்பது வேறுபோர் என்பது வேறு. போர் என்பது போராட்டத்தில் ஒரு பகுதி

என்று கடினமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் போய் பாட்டுப்பாடமுடியாது

மீண்டும்1983 இலிருந்ததுபோல் போராட்டத்தை ஆரம்பிப்பது என்றால்

எவர் எம்மோடு நிற்பார் திரு.சபேசன் அவர்களே

எனவே தேவையில்லாத கேள்விகளை

தேவையற்ற நேரத்தில்

வைத்தது தப்பு என்பதே என் கருத்து

வன்னி சிங்களப்படையின் கையில் வந்தால் போராட்டம் 30 வருடங்கள் பின்னோக்கி நகரும்.

முன்பு போல் கெறில்லா போராட்டம் செய்யலாம் என்ற பேச்சிற்கே இடமில்லை. இதற்கு நல்ல உதாரணம் யாழ்ப்பாணமே. ஏறத்தாள 1000 பேர் இற்கு மேல் காணமற் போய் உள்ளார்கள். ஏதாவது குறிப்பிடத்தக்க தாக்குதல் நடைபெற்று உள்ளதா ? இல்லை.

இதே நிலமை தான் ஈழத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் ஏற்படும். ( கெறில்லா போராட்டம் ஆரம்பித்தால் ). பல்லாயிரம் பேர் காணாமற்போவார்கள். உலகம் பேசாமற் பார்த்துக்கொண்டிருக்கும்.

இறுதியில் ஈழப்போராட்டம் என்பது காடுகளிற்கு அண்மையில் மாததிற்கு ஓரிரு இராணுவத்தை கொல்கின்ற ஒன்றாக மாறிவிடும்.

ச‌பேச‌ன் சொல்வ‌து போல் பால‌குமார் பேசியிருப்பார் என்று என்னால் ந‌ம்ப‌முடிய‌வில்லை. இணைப்பு இருந்தால் த‌ய‌வு செய்து த‌ருவீர்க‌ளா ?

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் போராட்டத்தை மட்டும் செய்தார்கள். அதனால் அவர்கள் நினைத்தபடி தாக்குதல்களைச் செய்து வந்தார்கள். ஆனால் இப்போது, அரசியல் ரீதியில்தான் போராடி வருகிறார்கள். ஆகவே அவர்கள் நினைத்தபடி தாக்குதல்களைச் செய்ய முடியாது. அரசியல் ரீதியாக வெல்லவேண்டுமெனில் அவர்கள் பொறுமை காத்துத்தான் ஆகவேண்டும். அதேபோல் நாங்களும் இன்றைவரைக்கும் தனித்தாக்குதல்கள் மனநிலையிலேயே உள்ளோம். நாங்களும் அரசியல்ரீதியிலான போராட்டம் என்ற மனநிலையிலிருந்து சிந்திக்கும்போது அங்கு நடப்பவை விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடுபட்டு கட்டி எழுப்பிய முப்படைகளையும் கலைத்து விட்டு புலிகள் கரந்தடிப்போர் செய்யும் நிலை வரும் என்று ஊகத்தில் எழுதுவது மகா முட்டாளத்தனமானது. இந்த அளவு பலம் இருக்கும் போதே தமிழர்களுக்கு அரசியல் தீர்வை மறுக்கும் சிங்களம் மீண்டும் 80 இல் இருந்து துவங்கினால் என்ன செய்யும்.மக்கள் தான் ஒத்துழைப்பார்களா? பின்னர் மீண்டும் இந்தப் பலத்தை அடைய தலைவருக்கு 84 வயதாகி விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.