Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30 வருட காலத்தின் பின்னர் பலவீனமான நிலையில் சிங்களப் படை- இதனை சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்: வன்னிக் களம் தொடர்பாக பா.நடேசன் விளக்கம்

Featured Replies

வன்னிப்பெரு நிலப்பரப்பினை சுற்றி சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

இலங்கை அரசும் சர்வதேசமும் ஒரு கணக்கு போடுகின்றனர்

புலிகளும் வன்னி மக்களும் இன்னுமொரு கணக்கை போடுகின்றனர்

எது சரிவரும்?

புலிகளின் கணக்கு சரிவந்தால் தமிழ் குடி மீண்டும் ஈழத்தில் தன் வம்சத்தினை வேர் பாச்சும், நிமிர்ந்து எழும்... வாழும் தகுதி பெறும்

எதிரியின் கணக்கு சரியானால் தமிழ் இனம் இலங்கையில் வாழ்ந்ததாக வரலாறு மட்டும் சான்று சொல்லும்... அடிமைபபட்டே ஒரு இனம் அழிந்ததெனவும் வரலாறு சான்று சொல்லும்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதையே நினைப்போம் 'நிழலி" ..

சத்தியப்போர் தோற்பதில்லை. தர்மம் அழிந்ததில்லை.

வெற்றி நிச்சயம் வரும்..

எத்தனை போராளிகளை இழந்துவிட்டோம் அவர்களின் கனவு பொய்க்காது.

அடிமைகள் போராடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாமில் ஜெனரல் கியாப் என்பவர் இன்றும் வாழ்கின்றார். அவர் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடும் போது சாதாரண போராளியாக இணைந்து ஜெனரலாக வந்தவர். அவர் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். தங்களுடைய இனம் நெருக்கடியைச் சந்தித்தபோது தாம் எப்படி அந்த நெருக்கடிகளை வென்றோமென்றால் ஒவ்வொரு குடிமகனும் ஒவ்வொரு போராளியாக மாறிய போது தான் என்கின்றார். ஒவ்வொரு வியட்நாம் கிராமமும் காவலரண் கொண்ட இராணுவ முகாமாக மாற்றப்பட்டன. இதுதான் அவர்களுடைய வெற்றிக்கு காரணம்

எமது மக்கள் நிறையவே இம்மக்களிடம் இருந்து கற்க வேண்டியுள்ளது.

நடேசன் அண்ணைக்கான யாழ்கள மேதை ஒண்றின் பதில்...

2005 இல் கிழக்கில் சிறீலங்கா படைகள் ஆக்கிரமிப்பு போரை படிப்படியாக அதிகரித்து 2008 இல் கிளிநொச்சிக்கு வரும் வரை சிறீலங்கா படைகளின் பலம் பரவலைத்தான் சந்திக்குதுங்கோ.

தமிழீழத்தின் 70 வீதமான பிரதேசத்தில் தங்கடை பலத்தை பரப்பி வைச்சிருந்த புலிகளும் 3 வருசமா குவிச்சுக் கொண்டுதான் வருகினம்.

இனி வெடிப்பு வந்தவுடனை குவியலுக்காலை பாயப்போகினம் எண்டது பிரச்சனையல்ல தெரிந்த விசையம் தான்.

புலிகள் பாஞ்சு போரிடும் கூர் முனையை மணையாக்கி வளைச்சு சுருட்டி மிச்சத்தை புதைச்சவுடன் ஸை;ராலின் கிறாட் மாதிரி மோட்டுச் சிங்களவன் வள்ளத்தில ஏறி ஒரிசாவுக்கு ஓடப்போறான்.

ஏன் எண்டா பாஞ்சா பிறகு புலிகளின் பலம் பரவி விடும் எண்டு சிங்களவனு தெரியாது.

பிறகொன்ன தமிழர் பாடு குத்தாட்டம் தானே.

:unsure:

தொடர்பு பட்ட பகுதி...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=47581&hl=

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உச்சியில் ஓங்கி அடித்தால் சிதறி ஓடிவிடுவார்கள் என்று இன்னம் சில காலம் யாழ் களத்தில் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

அரசியல் பொறுப்பாளர் போராட்டத்திற்கு இன்னமும் ஆட்கள் தேவை என்பதையே சொல்ல வருகின்றார் என்பதை முதலில் உணரவேண்டும். சகல முனைகளாலும் முன்னேற முயலும் இராணுவத்தை தடுத்த நிறுத்த தற்போதுள்ள உள்ள போராளிகளின் எண்ணிக்கை போதாதனால்தான் தமிழரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் சுருங்கி வருகின்றன. தாக்குதல் அணிகள் மூலம் இடங்கள் மீளக் கைப்பற்றப்பட்டாலும் அவற்றைத் தக்க வைக்கப் பலர் தேவை..

இந்த உலகில் நடந்த விடுதலைப் போராட்டங்களை நாம் விஞ்ஞானபூர்வமாக - யதார்த்தபூர்வமாக - ஆய்வுசெய்து பார்த்தால் எமக்கு ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். உலகத்தில் எங்கேயும் - எந்த நாட்டிலும் - எந்த விடுதலைப் போராட்டத்திலும் - அந்த மக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டும் போராடி விடுதலை பெற்றதாக வரலாறு இல்லை.

எல்லோரும் வெளிநாட்டிற்கும், கொழும்புக்கும் ஓடிவந்து பாதுகாப்பாக இருந்து கொண்டு வன்னி மக்கள் இருந்து பேராளிகளை திரட்டி புலிகள் திருப்பி தாக்க வேண்டும் என நினைப்பது எல்லோரினதும் சுயநலம். என்ன பொருத்தவரை எமது நாட்டில் நாம் அடிமைப்படும் போது அதனை எதிர்த்து நின்று போராடமால் வெளியேறியவார்களை நான் மதிப்பதில்லை.

தற்போது போராடுவதற்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான யாழ், கிழக்கு மற்றும் கொழும்பில் வசிக்கும் தமிழர்களைக் கூடத் திரட்டமுடியாது என்பதையும் கவனத்தில் எடுங்கள்..

இது போன்ற நிகழ்வுகள் அதில் கூறப்பட்ட விளக்கங்கள் விபரங்கள் அவை பற்றிய செய்திகள் முற்றுமுழுக்க போரை எதிர்கொள்ளும் தாயகத்தில் உள்ள மக்கள் நோக்கியது. இதை வெளியுலகிற்கு எமது ஊடகங்களே செய்தியாக்கி எதிரிக்குத்தான் உதவுகிறார்கள்.

இப்படிப்பட்ட செய்திகளை அதன் விபரங்களை உள்ளிருந்து எதிரி தனது மட்டுப்படுத்தப்பட்ட புலநாய்வு சொத்துக்கள் மூலம் எடுக்கும் நிலையில் இருக்க வேண்டும்.

தாயகத்தில் இருந்து வெளியுலகிற்கு புலிகள் வீர தீரமாக போராடுகிறார்கள் தோற்கவில்லை என்று செய்திகளை அனுப்புவர்கள் புலம்பெயர்ந்த மந்தைகளை குசிப்படுத்தும் கோமாளி வேலைகளைத்தான் பாக்கிறார்கள். மன்னிக்கவும் அது புலிகளின் சில பிரிவுகளாக இருந்தாலும். இதனால் 3 வகையான பாதக நிலை தொடர்கிறது இன்று நேற்றல்ல 2005 இல் இருந்து.

-1- எதிரிக்கு பயனுள்ள (பிரச்சாரரீதியில் மற்றும் இராணுவ திட்டமிடல் போன்றவற்றிக்கு ஓரளவும்) தகவல்களை தாயக செய்திகள் என்ற பெயரில் இலகுவாக வழங்கப்படுகிறது அதுவும் சுடச் சுட வழங்கப்படுகிறது.

-2- புலம்பெயர்ந்த பன்னாடைகளை குதிரைப் பந்தையத்தில் காசு கட்டிப்போட்டு ஸ்கோர் நேர்முக வருணனை பார்க்கும் பார்வையாளர்களாக வைத்திருக்கிறது.

-3- இந்த கிளு கிளுப்பான செய்திகள் கிசு கிசுக்களால் சிறீலங்கா அரச பயங்கரவாதம் செய்யும் தமிழ் இன அழிப்பின் தகவல்கள் விபரங்கள் வெளியில் வருவது (மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பாடல் வசதிகளை கவனத்தில் எடுத்து பார்த்தால்) குறைகிறது. அவ்வாறு மிகுந்த பிரயத்தனங்கள் மூலம் வந்தவையும் கோமாளித்தனமாக கிசு கிசுக்களால் புலம்பெயர்ந்த மந்தைகள் திசை திருப்பப்படுவதால் கவனம் பெறுவதில்லை.

இது போன்ற

http://www.yarl.com/forum3/index.php?showtopic=47922

ஆக்கபூர்வமான சிந்தனையை தூண்டும் படைப்புகளும் தாயகத்தில் இருந்து தான் வருகிறது. அதே வேளை இப்படி செய்திகளையும் வெளியிடுகிறார்கள்.

புலம்பெயர்ந்தவர்களை சினிமாகாறர் மாதிரி entertain பண்ணும் வேலையை புலிகள் எப்ப விடப்போகிறார்கள்?

இலங்கை அரசும் சர்வதேசமும் ஒரு கணக்கு போடுகின்றனர்

புலிகளும் வன்னி மக்களும் இன்னுமொரு கணக்கை போடுகின்றனர்

எது சரிவரும்?

புலிகளின் கணக்கு சரிவந்தால் தமிழ் குடி மீண்டும் ஈழத்தில் தன் வம்சத்தினை வேர் பாச்சும், நிமிர்ந்து எழும்... வாழும் தகுதி பெறும்

எதிரியின் கணக்கு சரியானால் தமிழ் இனம் இலங்கையில் வாழ்ந்ததாக வரலாறு மட்டும் சான்று சொல்லும்... அடிமைபபட்டே ஒரு இனம் அழிந்ததெனவும் வரலாறு சான்று சொல்லும்

தற்போது போராடுவதற்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான யாழ், கிழக்கு மற்றும் கொழும்பில் வசிக்கும் தமிழர்களைக் கூடத் திரட்டமுடியாது என்பதையும் கவனத்தில் எடுங்கள்..

நான் இன்றைய நிலையினை மட்டும் குறிப்பிடவில்லை. அப்படி திரட்ட முடிந்தாலும் பெற்றோர்களும், வெளி நாட்டில் உள்ள உறவினார்களும் விட்டுவிடுவார்களா? இங்கு எடுக்கிறோம் இங்கு அது செய்யலாம் இது செய்யலாம் என ஆசை வார்த்தை காட்டி போராட்டத்தில் சேர முன் வெளியில் கூப்பிட முயற்சி செய்வார்கள். போராட்டத்தில் இணைந்தவார்களையே அழுது குழறி அவர்களின் மனதை மாற்றி வெளி நாட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஏன் வன்னியிலே வீட்டுக்கு ஒருவரை இணைத்த போது இங்கு இருந்து அவர்களை வெளியே எடுக்கு எத்தனை உறவினார் முயற்சி செய்தவார்கள்.

நாட்டின் பிரச்சினை கராணமாக எற்பட்ட பொருளதார சிக்கல் மற்றும் இதர கராணிகளினால் வெளிநாட்டுக்கு வந்தவார்கள் தங்களின் குடும்ப உறுப்புனர்கள் அனைவரையும் வெளியே எடுத்ததுதான் என் பார்வையில் பிழை. ஒருவரையாவது போராட்டத்திற்கு விட்டுவிட்டு மற்றவார்களை எடுத்திருக்கலாம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்களை சினிமாகாறர் மாதிரி entertain பண்ணும் வேலையை புலிகள் எப்ப விடப்போகிறார்கள்?

ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேணும். பாடுற மாட்டை பாடிக் கறக்க வேணும். ஒண்டுமே சொல்லாமல் இருந்தா, இப்ப இருக்கிற பங்களிப்பு கூட வராது, புலம்பெயர் தேசங்களில இருந்து. பிறகு உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணாதான்.

புலம்பெயர் தமிழர்கள் அகதி அந்தஸ்தாலயோ, படிப்பையோ, கல்யாணத்தையோ, வேலையையோ காரணம்காட்டித்தான் இங்க வந்திருக்கினம். அப்பவே அவையள் போராட்டத்துக்கு மேலால மற்ற விசயம் எல்லாம் முக்கியம் எண்டு முடிவு எடுத்திட்டினம். அவையளைக் கூடி புலிகள் எதோ ஒரு வகையில போராட்டாத்தில இணைச்சு வச்சிருக்கினம். அதுக்கு இப்படியான செய்திகள் தேவைப்படுது. இதுதான் யதார்த்தம்.

நன்றிகள் குறுக்ஸ் ... இடைக்கிடை சில உண்மைகளையும் தூக்கிப் போடுகிறீர்கள்!

லெனின்கிராட்டையும், வியட்னாமையும், எரிதிரியாவையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே எதிரியை உசாரடையச் செய்ததில், ததே இற்கான ஊடகங்களின் பங்கு அளப்பரியது!! அதற்கு மேல் ஊடகப்போட்டியில் இங்கிருந்து ஒரு தொலைபேசி அழைப்பில் ஏதேனும் களத்திலிருந்து பிடுங்கி விட்டு, கை, கால் வைத்து ஒரு சோடனை விட, அவைகளையே சிங்களம் ஆராய்ந்து ஓட்டைகளை கண்டு பிடிக்கிறது!!

ஏன், தாயகத்திலிருந்து வரும் ஊடகங்கள் கூட இவற்றுக்கு துணை போய் கொண்டிருக்கிறது!!

முன்பெல்லாம் சிங்களம் ஒரிடத்தை பிடித்தால் சுமார் ஆயிரக்கணக்கான இராணுவத்தை வைத்து கொடியேற்றி படம் காட்டுவான்!! தற்போது பத்து, பதினைந்தோடு காட்டுகிறான்!!! இராணுவ வெற்றிகளை வெளியிடுகிறானே தவிர, ஏனையவற்றுக்கு இரும்புத்திரை போட்டிருக்கிறான்.

மேலாக தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கான அரசியல் போராட்டமானது, முற்று முழுதாக கடந்த காலங்களில் இராணுவ போராட்டமாக சித்தரிக்கப்பட்டதின் விளைவையே இன்று ஊடகங்களின் இன்றைய நிலைக்கு காரணம்.

இது போன்ற நிகழ்வுகள் அதில் கூறப்பட்ட விளக்கங்கள் விபரங்கள் அவை பற்றிய செய்திகள் முற்றுமுழுக்க போரை எதிர்கொள்ளும் தாயகத்தில் உள்ள மக்கள் நோக்கியது. இதை வெளியுலகிற்கு எமது ஊடகங்களே செய்தியாக்கி எதிரிக்குத்தான் உதவுகிறார்கள்.

இப்படிப்பட்ட செய்திகளை அதன் விபரங்களை உள்ளிருந்து எதிரி தனது மட்டுப்படுத்தப்பட்ட புலநாய்வு சொத்துக்கள் மூலம் எடுக்கும் நிலையில் இருக்க வேண்டும்.

தாயகத்தில் இருந்து வெளியுலகிற்கு புலிகள் வீர தீரமாக போராடுகிறார்கள் தோற்கவில்லை என்று செய்திகளை அனுப்புவர்கள் புலம்பெயர்ந்த மந்தைகளை குசிப்படுத்தும் கோமாளி வேலைகளைத்தான் பாக்கிறார்கள். மன்னிக்கவும் அது புலிகளின் சில பிரிவுகளாக இருந்தாலும். இதனால் 3 வகையான பாதக நிலை தொடர்கிறது இன்று நேற்றல்ல 2005 இல் இருந்து.

-1- எதிரிக்கு பயனுள்ள (பிரச்சாரரீதியில் மற்றும் இராணுவ திட்டமிடல் போன்றவற்றிக்கு ஓரளவும்) தகவல்களை தாயக செய்திகள் என்ற பெயரில் இலகுவாக வழங்கப்படுகிறது அதுவும் சுடச் சுட வழங்கப்படுகிறது.

-2- புலம்பெயர்ந்த பன்னாடைகளை குதிரைப் பந்தையத்தில் காசு கட்டிப்போட்டு ஸ்கோர் நேர்முக வருணனை பார்க்கும் பார்வையாளர்களாக வைத்திருக்கிறது.

-3- இந்த கிளு கிளுப்பான செய்திகள் கிசு கிசுக்களால் சிறீலங்கா அரச பயங்கரவாதம் செய்யும் தமிழ் இன அழிப்பின் தகவல்கள் விபரங்கள் வெளியில் வருவது (மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பாடல் வசதிகளை கவனத்தில் எடுத்து பார்த்தால்) குறைகிறது. அவ்வாறு மிகுந்த பிரயத்தனங்கள் மூலம் வந்தவையும் கோமாளித்தனமாக கிசு கிசுக்களால் புலம்பெயர்ந்த மந்தைகள் திசை திருப்பப்படுவதால் கவனம் பெறுவதில்லை.

புலம்பெயர்ந்தவர்களை சினிமாகாறர் மாதிரி entertain பண்ணும் வேலையை புலிகள் எப்ப விடப்போகிறார்கள்?

குருக்ஸ் கூறுவது முற்றிலும் உண்மை

எங்களுடைய உடகங்களுக்கு சுயகட்டுபாடு இல்லை. சில செய்திகள் தாயத்திற்க்கு மட்டுமே உரியவை அந்த செய்திகள் புலம்பெயர்ந்தவர்ளுக்கு அவசியமாற்றவை. சமாதன காலத்தில் தளபதிகள் தாயக மக்களை உற்சாகப்படுத்தவும் பரப்புரைக்கும் செல்லும் செய்திகளை இங்கு வெளியிட்டு அவர் இப்படி சொன்னார் அவர்கள் அதை செய்வார்கள் என மக்களை கனவுலகிற்கு இட்டு சென்றவார்கள்.

களத்தில் விழுகின்ற இராணுவத்தின் எண்ணிக்கையினை கொண்டு மக்களை போராட்டத்தினுள் கொண்டுவர நினைக்கும் உக்தி பிழையானது. இந்த வழியில் கவரப்படுபவார்கள் நிரந்தரமற்றவார்கள். பின்னடைவு எற்படும் போது ஒடி ஒளித்து விடுவார்கள் அல்லது தங்கள் எதிர்பார்த்தது கிடைக்க வில்லை என் புலம்புவார்கள். ஒரு வெற்றி கிடைத்ததும் தங்கள் புலி என வந்து முன்னுக்கு நிற்பார்கள். இவர்களின் செயற்பாட்டினால் உண்மையான எந்த காலத்திலும் போராட்டத்திக்கு உழைப்பவார்கள் பாதிக்கப்பட்டுள்ளனார்.

சிங்கள அரசினால் எம்மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளை மக்களுக்கு தெளிவுபடுத்துவதன் மூலம் மக்களை போராட்டத்தில் ஆதரவுள்ளவராக மாற்ற வேண்டும். அதுவே நிரந்தரமானது.

ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேணும். பாடுற மாட்டை பாடிக் கறக்க வேணும். ஒண்டுமே சொல்லாமல் இருந்தா, இப்ப இருக்கிற பங்களிப்பு கூட வராது, புலம்பெயர் தேசங்களில இருந்து. பிறகு உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணாதான்.

புலம்பெயர் தமிழர்கள் அகதி அந்தஸ்தாலயோ, படிப்பையோ, கல்யாணத்தையோ, வேலையையோ காரணம்காட்டித்தான் இங்க வந்திருக்கினம். அப்பவே அவையள் போராட்டத்துக்கு மேலால மற்ற விசயம் எல்லாம் முக்கியம் எண்டு முடிவு எடுத்திட்டினம். அவையளைக் கூடி புலிகள் எதோ ஒரு வகையில போராட்டாத்தில இணைச்சு வச்சிருக்கினம். அதுக்கு இப்படியான செய்திகள் தேவைப்படுது. இதுதான் யதார்த்தம்.

தெருக் கூத்துக்கு கூட்டம் சேர்பது போல் கிளுகிளு செய்திகள் காணொளிகள் படைத்து தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு கூட்டம் சேர்த்து எதுவும் சாதிக்க முடியாது.

-1- சில்லறைக்காசை எறிந்துவிட்டு கூத்துப் பார்ப்பார்கள் பொழுது போக்காட்டுவார்கள். கூத்து சுவார்சியமாக இல்லை என்றால் விலகி வேறு ஏதாவது கூத்தில் போய் பொழுது போக்காட்டுவார்கள்.

-2- கூத்தாடி சேர்க்கும் கூட்டம் சர்வதேச அரங்கில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மைகள் விளக்க முடியாது திண்டாடுவார்கள். பரப்புரை தேசிய ஆதரவு கருத்தியலை உருவாக்க முடியாது அவர்களால்.

-3- தேசிய விடுதலைப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான எமது தேவைகளை நாமே பூர்த்தி செய்யுமளவிற்கான பெரும் பெருளாதார பங்களிப்புகளை எதிர்பார்க்க முடியாது. அத்தகைய பங்களிப்புகள் என்பது கேட்டவுடன் எடுத்துக் கொடுக்கக் கூடியது அல்ல. அதற்கு நீண்ட கால தயாரிப்புகள் தேவை.

இப்படிப்பட்ட கூத்தடிப்பு புலம்பெயர்ந்தவர்களிற்கு பொழுது போக்கு வெளிநாடுகளிற்கு ஓடித்தப்ப முடியாது தாயகத்தில் உள்ளவர்களிற்கு வாழ்வா சாவா என்ற போராட்டம். இந்த 2 இற்கும் நடுவில் புலிகள். இறுதியில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட உயிரிழப்புகள் 22000 மேற்பட்ட மாவீரர்களின் அர்ப்பணிப்புகளிற்கு பதில் சொல்ல வேண்டி நிர்ப்பந்தமும் புலிகளில் தலையில் தான்.

போராட்டம் வழர்ச்சியடைந்து ஒரு நடைமுறை அரசை முப்படைகளை கொண்டுள்ள அளவிற்கு வந்து விட்டது என்றால் அதை தக்க வைக்க பேண தேவையான பங்களிப்புகள் முன்பை விட பல மடங்கானது. அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான ஏனைய கட்டமைப்புகள் (சர்வதேச அரசியல் இராசதந்திர மனிதஉரிமை தொண்டர் ஊடக அலகுகள்) தயார்படுத்தல்கள் தேவைகள் முக்கியமானது. அந்தவகையில் போராட்டம் தற்போதைய நிலையை பேணுவதற்குரிய பங்களிப்பை விட அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான பங்களிப்புகள் இன்னமும் அதிகமானது. இந்த 2 நிலையிலும் இருக்கும் அதிகரித்த பங்களிப்புகள் தேவைகள் பற்றி எந்த கருத்தாடல்கள் அறிவூட்டல்களும் புலம்பெயர்ந்தவர்கள் நோக்கி இல்லை.

இவற்றைப்பற்றிய சிந்தனைகள் கருத்தாடல்கள் தயார்படுத்தல்கள் தான் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இருக்க வேண்டும்.

அங்கு எந்த புதிய படையணி என்ன புதிய ஆயுதம் எந்த சந்தியில ஆமி நிக்கிறான் எந்த பொந்துக்கை புலிகள் பதுங்குறார்கள் என்ற கிசுகிசுக்கள் அல்ல.

புலம்பெயர்ந்தவர்களிற்கு அவர்களது புலம்பெயர்ந்த வாழ்க்கையில் அகதியாக வந்தேறுகுடியாக வேற்று இனத்தவராக இருக்கும் குறைபாடுகள் என்ன, தடைகள் என்ன சிக்கல்கள் என்ன? அவற்றிற்கு தாய்நாடு தரக் கூடிய தீர்வு என்ன என்ற சிந்தனைகள் தான் புலம்பெயர்ந்தவர்களை தமது தற்போதைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு சம்பந்தப்பமடுத்தி ஆக்கபூர்வமாக சிந்திக்க வைக்கும். தமது எதிர்கால அடுத்த சந்ததியின் தேவைகளை உணர வைக்கும் தமது எதிர்காலத்திற்கான முதலீடாக ஆழமான பங்களிற்பிற்கு தூண்டும் இயங்க வைக்கும். தாயகத்தில் அவர்களது உறவுகள் எதிர்கொள்ளும் அவலங்கள் அழிவுகள் என்ன என்பது புலம்பெயர்ந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடுத்த முக்கியமானது.

கிளுகிளுப்பான களமுனை செய்திகள் புதிய படையணிகள் புலிகணை புண்ணாக்கு கணை *** சாகசங்கள் பொழுது போக்கு அரட்டைக்குத்தான் உதவும். உந்த பொழுது போக்கு கூத்துக்களுக்கு புலிகள் தேவையில்லை கருணா குழு பிள்ளையான் குழு டக்கிளஸ் குழு என்று தாராளமாக கனபேர் இருக்கினம்.

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கு,

புலம்பெயர்தேசங்களில் நான்கு வகையான பிரிவினர் உள்ளனர்.

1) தாயகத்தில் என்ன நடந்தாலும் அதைக் காது கொடுத்தும் கேளாதோர்.

2) அப்பப்ப வெற்றிச் செய்திகளில் மட்டும் திளைத்து பியர் பார்ட்டிகளில் களை கட்டுவோர்.

3) உசுப்பேத்தினால் மட்டும் பங்களிப்புகளிலும் போரட்ட நிகழ்வுகளிலும் பங்கு பற்றுவோர்.

4) என்ன நடந்தாலும் போராட்டத்துடன் ஆக்கபூர்வமாக இணைந்துள்ளோர்.

நாலாவது பிரிவைப் பற்றி புலிகள் கவலைப்படப்போவதில்லை. மற்ற மூன்றும்தான் பிரச்சினை. இதில் அவ்வப்போது புலிகள் வெளியிடும் தாயகச் செய்திகள் மூன்றாவது பிரிவினரைக் குறிவைப்பது ஆகும். முதல் இரண்டும் எதற்கும் பிரயோசனம் இல்லாதது.

புலம்பெயர்தேசங்களில் நடைபெறும் கவன ஈர்ப்பு நிகழ்வுகளில் நாலாவது பிரிவினரை மட்டும் வைத்துக்கொண்டு செயல்பட்டால் சிங்களவரின் நிகழ்வு அளவுக்கு கூட வர முடியாது. இப்படியான ஒரு சிக்கலான சூழ்நிலையிலேயே புலிகளின் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நான் இங்கு கூறுவது புலிகள் வெளியிடும் செய்திகள் குறித்து மட்டுமே. எங்கள் ஆ(தொ)ய்வாளர்கள் மற்றும் ஊடகங்களின் செயல்பாடுகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு இல்லை.

எல்லோரும் மற்றவருக்கு இதை செய் அதை செய் என்று சொல்வதில் ஆர்வம் காட்டுவதை காட்டிலும் நான் இப்படி செய்கின்றேன் என்பின்னால் வாருங்கள் அல்லது நான் இப்படி செய்து கொண்டிருக்கின்றேன்.அதை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்வதுதை காணவில்லை

தமிழரென்று ஒரு இனமுண்டாம்.. அதற்கென தனியொரு குணமுண்டாம்..!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றைப்பற்றிய சிந்தனைகள் கருத்தாடல்கள் தயார்படுத்தல்கள் தான் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இருக்க வேண்டும்.

அங்கு எந்த புதிய படையணி என்ன புதிய ஆயுதம் எந்த சந்தியில ஆமி நிக்கிறான் எந்த பொந்துக்கை புலிகள் பதுங்குறார்கள் என்ற கிசுகிசுக்கள் அல்ல.

உண்மை. அரசு எமது ஊடகங்களில் இருந்து தான் பல தகவல்களை பெறுகிறான். எமது ஊடகங்களும் நான் முந்தி நீ முந்தி என பல தகவல்களை அள்ளி வீசுகின்றன.குறிப்பாக பரபரப்பு போன்ற பத்திரிகைகளை குறிப்பிடலாம்.

அப்பப்ப வெற்றிச் செய்திகளில் மட்டும் திளைத்து பியர் பார்ட்டிகளில் களை கட்டுவோர்

இவர்கள் பார்கின்ற சினிமா படங்களுக்கு இணையாக தான் எமது போராட்டத்தை பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:தமிழரென்று ஒரு இனமுண்டாம்.. அதற்கென தனியொரு குணமுண்டாம்..!!

மிகச்சரியான பதில்

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ் சில வேளைகளில் சில கசப்பான உண்மைகளையும் எழுதுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திலை இருந்து புலம்பெயர் தமிழருக்கும் அவை ஏதாவது செய்வினமெண்டு அங்கை அளவுக்கதிமாய் எதிர் பார்த்து பெரியளவிலை தூக்கிப் பிடிக்கிறதும்.இஞ்சை அவையும் கேட்டிட்டினம் எண்டு கூட்டமாய் படமெடுத்து அனுப்புறதும் முதலிலை நிக்கவேணும். அதுக்கடுத்ததாய் பரப்புரைக்கு பொறுப்பானவை பரபரப்புரை எழுதிறதுகளை நிப்பாட்டிப்போட்டு உண்மையான நிலவரங்களை எழுதவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ் சில வேளைகளில் சில கசப்பான உண்மைகளையும் எழுதுகிறார்.

நன்றி புலவர் நீங்கள் கால் கிணறு தாண்டியுள்ளீர்கள். மிகுதியையும் தாண்ட நல்வாழ்த்துக்கள். :)

இது போன்ற நிகழ்வுகள் அதில் கூறப்பட்ட விளக்கங்கள் விபரங்கள் அவை பற்றிய செய்திகள் முற்றுமுழுக்க போரை எதிர்கொள்ளும் தாயகத்தில் உள்ள மக்கள் நோக்கியது. இதை வெளியுலகிற்கு எமது ஊடகங்களே செய்தியாக்கி எதிரிக்குத்தான் உதவுகிறார்கள்..

தமிழீழத்திலை மக்களோடை மக்களாக வேலைசெய்யும் அரசியல் போராளிகள் எல்லாம் குறைஞ்சு போச்சினம், அதனாலை இந்த வேலையை அரசியல் துறையின் தலைமை பொறுப்பிலை இருக்கும் நடேசன் அண்ணை செய்ய வேணும் எண்ட நிலையா போச்சுது எண்டுறீயள்...???

(அங்கை இருந்து இந்த புலநாய்வு செய்தி எப்பிடி வெளியிலை வந்தது எண்டு முதலிலை கண்டு பிடிச்சு அடைக்க வேணும்)

அங்கை இருக்கிற சனத்தின் காதுகளுக்கை மட்டும் கேக்கிற மாதிரி சொல்ல சொல்லுறது மாதிரி எதாவது வளி இருக்குதோ எண்டு கண்டு பிடிக்க வேணும்...!

1- எதிரிக்கு பயனுள்ள (பிரச்சாரரீதியில் மற்றும் இராணுவ திட்டமிடல் போன்றவற்றிக்கு ஓரளவும்) தகவல்களை தாயக செய்திகள் என்ற பெயரில் இலகுவாக வழங்கப்படுகிறது அதுவும் சுடச் சுட வழங்கப்படுகிறது.

2- புலம்பெயர்ந்த பன்னாடைகளை குதிரைப் பந்தையத்தில் காசு கட்டிப்போட்டு ஸ்கோர் நேர்முக வருணனை பார்க்கும் பார்வையாளர்களாக வைத்திருக்கிறது.

எங்கட ஊடகங்கள் சொல்வதை வச்சுத்தான் இலங்கை படைகள் உசார் அடையுது எண்டால் இலங்கை படைகளை ஏமாத்த நல்ல வளி கிடைச்சாச்சுது எண்டு வைச்சு கொள்ளுங்கள்....

NIB இப்ப தமிழ் ஊடகங்களை மட்டும்தான் பாத்து எல்லாத்தையும் கண்டு பிடிக்கும் நிலையிலை இருக்கு, உசாராகுது எண்டது, மோட்டு சிங்களவன் எண்டு நீங்கள் சொல்லாமல் சொல்லுறது புரியுது... :)

எப்பதான் சரியான பாதையிலை உங்களை Upgrade பண்ண போறியளோ..???? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.