Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி.சிவராமுடன் சில கணங்கள்: நிழலி

Featured Replies

டி.சிவராமுடன் சில கணங்கள்

*************************

'கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் கொஞ்சி பேச கூடாதா" என்னும் பாடல் அது வந்த நாட்களில் எனக்கு மிக பிடிக்கும். அப் பாடல் நயன் தாரா நடித்த காரணத்தினால் மட்டும் அல்ல.. அதன் இனிமையான இசையாலும் எனக்கு மிக பிடித்த பாடலாக அது இருந்தது. வித்தியாசாகரின் இசையில் வந்த மெல்லிசை பாடல் அது

அன்று இனிமையாக இருந்த அப் பாடலே இன்று(ம்) மனதை அதிரவைக்கும், திடுக்கிட வைக்கும் பாடலாக ஆனது. எங்கு அப் பாடலை கேட்டாலும் எனக்கு கடும் துயரம் அப்பி கொள்ளும் பாடலாகியது.. இப்போது இதனை எழுதும் போது கூட அதே உணர்வை கொள்கின்றேன்...

ஏன்

************************

என் மனைவி பிரசவத்திற்காக ஊர் போயிருந்த காலம் அது....

நான் டுபாயில் இருந்தேன். விடிய ஒரு குறும் செய்தி வந்தது.... மனைவி வழக்கமாக கர்ப்பிணி ஆன காலம் முதல் எடுக்கும் ஒவ்வொரு சத்திக்கும் (Vomiting) எனக்கு குறும் செய்தி (SMS) வரும்

ஆனால் இம் முறை அப்படி வரவில்லை

டி.சிவராமை கடத்தி 'கொண்டு (று) விட்டார்களாம்' என்று அனுப்பி இருந்தா... எனக்கு சரியாக புரியவில்லை... கொண்டா அல்லது கொன்றா..

நான் அவரின் பிரத்தியோக செல்லிடபேசிக்கு டயல் செய்து அழைத்தேன்... அவர் தன் 'ரிங் டோனாக' வைத்து இருந்தது

'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதாம்'

********************************

--மேலும் தொடர்வேன்..--

Edited by நிழலி

உண்மைகள் வாறது எல்லாம் சரி. கடைசியில நம்மப்போல பொல்லுக்குடுத்து அடிவாங்காமல் இருந்தால் சரி. எங்கட வித்துவான்களின்ட விமர்சனத்தை தாங்கக்கூடிய மனப்பக்குவம் இருந்தால் மிச்சம் தொடருங்கோ.

தமிழரின் ஊடகவியல் துறைக்கே ஏற்பட்ட பேரிழப்பு சிவராம் அண்ணாவின் மறைவு. அவரைப் பற்றி நிறைய எழுதிக் கொண்டே போகலாம்.

நிழலி அவர்கள் மூலமாக சிவராம் அண்ணா குறித்த பல விடயங்கi அறிய ஆவலாயுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிழலி!

நான் மன்னிக்கவும் என்னால் நேசிக்கப்பட்ட ஊடகவியளார்களில் மனத்துணிவும், நடுநிலைவாதி என்ற முகமூடி போடத்தெரியாத, ஊடகத்துறைக்கே வரைபிலக்கிணமாக, அகராதியாக விளங்கிய ஒரு தூய மனிதனின் விமர்சனம் அல்லது அவரின் சாதனைகளை பட்டியலிடவுள்ளீர்கள்.

நான் அறியாதவற்றை அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாகவுள்ளேன், நிதானமாக அதாவது முரளி கூறியதைக்கருத்தில்( இதுவொரு கடினமான முயற்ச்சி) கொண்டு தொடருங்கள்.

வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.......வாசிக்க ஆவலாய் இருக்கிறோம்

நல்ல விடயம் சிவராம் அண்ணாவைப்பற்றி தெரியாத விடயங்களை

அறிய ஆவல் தொடருங்கள்.

  • தொடங்கியவர்

இப்போது எனக்கு பயமாக இருக்குது. என்னிடம் இருந்து நீங்கள் நிறைய எதிர்பார்க்கின்றீர்கள் என உணர முடிகின்றது. சிவராமின் உன்னத திறமையும் அவரின் அறிவு சார் புலமையும் அப்படி ஒரு எதிர்பார்ப்பை தோற்றுவிக்கின்றது. தன் திறமை மூலம் மிகப் பிரபலமான ஒருவரை பற்றி எழுதும் போது எழுதுபவர் மீதும் அப்படி எழுதும் எழுத்து மீது பெரிய எதிர்பார்ப்பு வருவது இயற்கை என புரிகின்றது...

ஆனால் என்னால் அப்படி எழுத முடியாது

ஏனெனில், எனது அவருடானான அனுபவங்கள் மிக சாதாரண மானவை. ஒரு திறமையுள்ள மனிதருடன் இன்னொரு நல்ல திறமையுள்ளவர் பழகும் போதே அவர்களிற்கிடையான சம்பவங்கள் ஒரு சிறப்பான நிலையை அடையும். ஆனால் என்னை போன்ற ஒரு மிக சாதாரண பாமரன் பழகும் போது இருவருக்கிடையிலும் நிகழும் சம்பவங்களும் சாதாரணமானவையாகவே இருக்கும். அவற்றை எழுதும் போது சிலவேளை உன்னதமானவர் மீது உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் சரியான பிம்பத்தை கூட உடைத்து விடும் மகா தவறை செய்யும்.

டி.சி யை எனக்கு சதையும், உணர்வும், எலும்பும் கொண்ட ஒரு திறமை படைத்த மனிதனாகவே பழக்கம். ஒரு நண்பனுடன் இருக்கும் ஒரு உறவே எனக்கு இருந்தது. ( 'டி. சி' யை தனிப்பட எனக்கு தெரியும் என்ற ஒரு சின்ன மமதை கூட எனக்கு முன்பு இருந்தது வேறு விசயம்..) அவ் உறவின் போது ஏற்பட்ட அனுபவங்களில் சில அவரின் தனிப்பட்ட வாழ்வின் விடயங்களையும் தொட்டுச் செல்வதால் அதை இன்றைய கால கட்டத்தில் எழுத முடியுமா என அச்சம் வருகின்றது. எனவே இந்த திரியை தொடர்வதா என்று குழம்பி போயுள்ளேன்

இன்று காலையில் என் நண்பர் ஒருவர் சொன்னது வேறு என் பயத்தை அதிகரித்து விட்டது.. அவர் சொன்னது

"நீ எழுத போவது 'தராக்கி' சிவராம் பற்றி அல்ல... மாமனிதர் சிவராம் பற்றி...மிக கவனமாக உன்னால் எழுத முடியுமா"

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்களிடம் உள்ள அந்த பயமே, உங்களால் முடியும் என்பதை நிரூபனமாக்குகின்றது.

ஆகவே துணிவுடன் தொடருங்கள், அதாவது உங்களால் உறுதிப்படுத்தியவையிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

மீண்டும் எனது வாழ்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்களிற்கு சிவராமை பற்றி மட்டுமல்ல எவரைப்பற்றியுமே சுவைபட எழுதும் திறைமை உள்ளது அது உங்களின் எழுத்துக்களிலேயே தெரிகின்றது.எனவே எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"நீ எழுத போவது 'தராக்கி' சிவராம் பற்றி அல்ல... மாமனிதர் சிவராம் பற்றி...மிக கவனமாக உன்னால் எழுத முடியுமா"

மாமனிதர் சிவராம் பற்றி எழுத முடியுமா என உங்களுக்கு ஒரு அதீதமான பயத்தை ஏற்படுத்தியுள்ளார் உங்கள் நண்பர். பயப்பிடாமல் எழுதுங்கள். சிவராம் அவர்கள் தமிழ் பரப்பில் யாராலும் ஈடுசெய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றது உண்மை. ஆயினும் அவர் பற்றிய உங்கள் எழுத்துக்கள் அவரது உன்னதத்தை கெடுக்காது என நம்பலாம்.

சிவராம் அவர்களுக்கு முதல்வன் படம் வந்தகாலத்தில் முதல்வனில் வந்த 'குறுக்குச் சிறுத்தவளே" பாடலும் பிடித்ததாக வானொலியொன்றில் சொல்லியிருக்கிறார். எத்தகைய மகாமேதைக்குள்ளும் சாதாரண மனிதன் ஒருவன் இருக்கிறான்.

ஒரு பத்திரிகையில் ஒரு எழுத்தாளர் சிவராமுடனான தனது அனுபவங்களை எழுதிய போது கள்ளடித்தேன் சிவராமுடன் கூடிக்கோழிக்கிற உண்டேன் என்றெல்லாம் எழுதி தனது அனுபவத்தில் இன்னும் தவிர்க்கப்பட வேண்டிய பல விடயங்களைப் பகிர்ந்திருந்தார். ஆனால் சிவராம் பற்றிய சின்னச் சின்ன அனுபவங்களையே எழுத்தில் ஒருவரால் ஒரு பத்திரிகை ஊடாக கொண்டுவர முடிந்த போது உங்கள் அனுபவங்களை ஏன் கொண்டுவரத் தயங்குகிறீர்கள் ?

தயங்காமல் எழுதுங்கள். ஒரு உன்னதமான ஊடகனுடனான அனுபவங்கள் நிச்சயம் நமக்காக பதியப்பட வேண்டும்.

நீங்கள் கூறுவது போல சிவராம் தமிழ் இனத்தின் ஒரு அற்புத மனிதராக என்னால் பார்க்கமுடியாது. சில சிக்கலுக்கு அவரும் காரணமாகும். தலைவர் மாமனிதர் பட்டம் கொடுத்த பின் அவரின் மறுபக்கம் பற்றி கதைப்பது நல்லதல்ல. ஆனால் என்னுடைய மனதில் அவருக்கு இடமில்லை.

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

உமை, தவறுகள் செய்வது எங்களிடையே எப்போதும் நடக்கிற ஒன்று. ஆனால் எல்லாத் தவறுகளையும் துடைத்தெறிகிற மாதிரி வாழ்வின் ஒரு பெரும் பகுதியை அவர் கழித்திருக்கிறார் என்பது தான் முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

உமை, தவறுகள் செய்வது எங்களிடையே எப்போதும் நடக்கிற ஒன்று. ஆனால் எல்லாத் தவறுகளையும் துடைத்தெறிகிற மாதிரி வாழ்வின் ஒரு பெரும் பகுதியை அவர் கழித்திருக்கிறார் என்பது தான் முக்கியம்.

அனைத்தும் உண்மையே ஜஸ்ரின்.

நீங்கள் கூறுவது போல சிவராம் தமிழ் இனத்தின் ஒரு அற்புத மனிதராக என்னால் பார்க்கமுடியாது. சில சிக்கலுக்கு அவரும் காரணமாகும். தலைவர் மாமனிதர் பட்டம் கொடுத்த பின் அவரின் மறுபக்கம் பற்றி கதைப்பது நல்லதல்ல. ஆனால் என்னுடைய மனதில் அவருக்கு இடமில்லை.

நிழலி ஆரம்பத்தில் குறிப்பிட்ட அச்சம் இத்தகைய எதிர்வினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுமோ என்ற அச்சமாகக்கூட இருக்கலாம். தவறுகளை விடுத்து ஒரு சிறந்த ஊடகன் பற்றி அறிந்து கொள்வோமே உமை.

Edited by shanthy

உமை, தவறுகள் செய்வது எங்களிடையே எப்போதும் நடக்கிற ஒன்று. ஆனால் எல்லாத் தவறுகளையும் துடைத்தெறிகிற மாதிரி வாழ்வின் ஒரு பெரும் பகுதியை அவர் கழித்திருக்கிறார் என்பது தான் முக்கியம்.

எனக்கு தெரிந்த வரை பெரும் பகுதி இல்லை சிறிய பகுதி மட்டுமே. நிழலி நீங்கள் எழுதுங்கள். ஒருவருக்கு பிடித்து மற்றவருக்கு பிடிக்கமால் இருப்பது இயல்பு. சிலவேளை உங்களிடம் இருந்து அவரைப்பற்றி எனது தவறான எண்ணங்கள் மாறலாம். நீங்கள் அவர் செய்த சேவைகளை சொன்னால் தானே எனக்கு விளங்கும்.

Edited by உமை

நிழ‌லி,

முன்பொருமுறை EPDP இன் வராந்த பத்திரிகை ஒன்று சிவராமைப் பற்றி ( அவர் வாழ்ந்தபோது) பல அவதூறுகளை தொடராக எழுதியது.

குறைகளை(?) யாரோ ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். எனவே அந்தப் பாதையில் மீண்டும் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று என் சிற்ற‌றிவு சொல்கிற‌து.

அவர் மக்களுக்காக தன் உயிரை வள‌ங்கியிருக்கிறார். அவர் தமிழர் பிரச்சனைகளை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்கு பட்ட கஸ்டங்கள் எடுத்த Risk போன்றவற்றை அறிய ஆவலாய் உள்ளேன்.

தொட‌க்க‌மே அழ‌காக‌ இருக்கிற‌து. தொட‌ர‌வும். வாழ்த்துக்க‌ள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிவன் சரியில்லை என்று விஷ்னுவை தூக்கிபிடிகல்ல இருவரும் சரியில்லை என்று ஜெசுவை தூக்கிபிடிக்கல்ல நம் சனம் ...இன்றும் சிவனுக்கும் ஆட்கள் இருக்கினம்,விஷ்னுக்கும் ஆட்கள் இருக்கினம் ஜெசுவுக்கும் ஆட்க்கள் இருக்கினம்........தயங்காமல் எழுதுங்கோ ஊடகம் முலம் தமிழுக்கு செய்த நன்மைகளை.

நிழலி

உங்கள் மனதில் உள்ளதை எழுதுங்கள். யாரையும் மகிழ்ச்சிப்படுத்த எழுதுவதை விட உண்மைகளை எழுதுவதே மேல். தொடருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.