Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி திருமாவளவன் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்

Featured Replies

திருமாவளவனின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் உண்ணாவிரதங்களை ஏன் உலகளாவிய ரீதியில் தமிழர்கள் முன்னெடுக்க கூடாது?

  • Replies 56
  • Views 4.6k
  • Created
  • Last Reply

ஏதாவது ஒரு இடத்தில் தொடங்கினால் தான் , மற்ற இடங்களிலும் பார்த்து தொடங்கிவினம்,

நாமும் ஆதரவு உண்ணாவிரதம் இருக்காவிட்டால் , தம்மையே எமக்கா அர்ப்பணித்து செயற்படும் பல

தமிழ்நாட்டு உறவுகளை இழக்க வேண்டிவரலாம்

திருமாவளவனின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் உண்ணாவிரதங்களை ஏன் உலகளாவிய ரீதியில் தமிழர்கள் முன்னெடுக்க கூடாது?

கொழும்பில் நீங்கள் ஹொலண்டில் நான்?

கொழும்பில் நீங்கள் ஹொலண்டில் நான்?

த(கொ)லைநகரில் உண்ணாவிரதம் செய்வதானால் அதற்கு சாகும் முன் உண்ணாவிரதம் என்றோ அல்லது வெள்ளைவான் வருவரை உண்ணாவிரதம் என்றோதான் பெயரிட வேண்டும்!

1948 இலேயே இதனை செய்து அதன் பெறுபேறும் கிடைக்கப் பெற்றுதானே ஆயுதம் தூக்கினார்கள். ஆனால் அரசை நோக்கியில்லாமல் சிங்கள மக்களை நோக்கி ஏதாவது செய்யவேண்டிய அவசியம் உள்ளது! அதற்கு எதாவது சாத்தியமான திட்டங்கள்?

உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் என்றில்லாமல் அடையாள உண்ணாவிரதங்களாக... திருமாவளவனின் உண்ணாவிரதத்தை உலகறியச் செய்யும் ஒரு நடவடிக்கையாக அமைவது சிறந்தது!

இந்த இறுதி முயற்சியும் தோல்வியடைந்தால் தமிழக எழுச்சி இனி தானே மெல்ல சாகும்!

Edited by சாணக்கியன்

த(கொ)லைநகரில் உண்ணாவிரதம் செய்வதானால் அதற்கு சாகும் முன் உண்ணாவிரதம் என்றோ அல்லது வெள்ளைவான் வருவரை உண்ணாவிரதம் என்றோதான் பெயரிட வேண்டும்!

1948 இலேயே இதனை செய்து அதன் பெறுபேறும் கிடைக்கப் பெற்றுதானே ஆயுதம் தூக்கினார்கள். ஆனால் அரசை நோக்கியில்லாமல் சிங்கள மக்களை நோக்கி ஏதாவது செய்யவேண்டிய அவசியம் உள்ளது! அதற்கு எதாவது சாத்தியமான திட்டங்கள்?

2 வழி இருக்கிறது.

1, சிங்களவர்களுடன் ஓன்றாக இருப்போம் என்று வாக்குறுதி கொடுத்து சேர்ந்து வாழுவது

2 வது, தமிழகளுக்கு இல்லாத நாடு சிங்களவர்ளுக்கும் இருக்க கூடாது என்று அ(ணு)ழிப்பது

சரி இந்த இரண்டில் இரண்டாவதை முதலாவதாக தொடங்கி இப்ப அது இறுதிக்கட்டத்தில் நிற்கிறது. அது சரி வராது என்று உறுதியானவுடன் முதலாவதற்கு போவோம்!

Edited by சாணக்கியன்

திருமாவளனே ஐயா.

பணம் பெற்று பேசுகிறாய் என்று பிதற்றினர் பதர்கள்

பெற்றது கொள்கை வெறியும் குலையா உறுதியும் என சொன்னது அல்லாமல்

செயலிலும் அல்லவா நீ காட்டி நிற்கிறாய்.

உனது பெயர் உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.

வடக்கு வாழ் பேடிகள்

வானரர் என்றா நினைத்தார்கள்.

மனிதச் சங்கிலிகள், மடல் வரைந்தும்

வயதும் பாராமல் ஏறியெழுந்து சென்று மனுக்கொடுத்தும்

மடையர்கள் என்றா எம்மை என்று நினைத்தார்கள்?

கேட்டவுடன் வட்டியில்லாக் கடனும்

உளவு பார்க்க ஆளும் அனுப்பிய இழிந்தவர்கள் - இப்போ

உங்கள் வேண்டுகோளுக்கு இறைமை பார்க்கிறார்.

அனுமதிக்கு இரக்கிறார்கள் ஸ்ரீ-லங்காவிடம் - வேடிக்கை

திருமாவளனே,

உன் உண்ணாவிரதம் பலர் முகமூடிகளைக் கிழிக்கும்

அது நிச்சயம்

..

இந்த இறுதி முயற்சியும் தோல்வியடைந்தால் தமிழக எழுச்சி இனி தானே மெல்ல சாகும்!

அப்படி ஒரேயடியாக சொல்லி விட முடியாது. ஆனால் தக்க நேரத்தில் கிடைக்க வேண்டிய உதவி கிடைக்காமல் போய் விடும்.

திருமாவளவனுக்கு எமது கோடி நன்றிகள்!!

  • கருத்துக்கள உறவுகள்

உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் என்றில்லாமல் அடையாள உண்ணாவிரதங்களாக... திருமாவளவனின் உண்ணாவிரதத்தை உலகறியச் செய்யும் ஒரு நடவடிக்கையாக அமைவது சிறந்தது!

நானும் இக்கருத்தை அமோதிக்கிறேன்.

Our Foreign Secretary Shivshankar Menon is arriving in Colombo today on a two day visit. He is expected to hold deliberations with Sri Lankan President Mahinda Rajapaksa and Foreign Minister Rohitha on the Island Nation’s present war against the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Meanwhile, in order to mount further pressure on the Indian Government, Viduthalai Chiruthaigal Katchi (VCK) President Thol Thirumavalavan, a strong supporter of the Eelam Tamils, today began a fast unto death in Chennai demanding immediate cessation of hostilities and initiate peace process in the strife-torn Sri Lanka. Over one thousand VCK workers, and leaders of various organisations, espousing the cause of Tamils, are attending the fast, being held at Maraimalainagar, about 55 km from city. The aim of the fast, according to Thirumavalavan, is to make the Indian government understand the prevailing ground realities in the Island Nation. He was making this demand ‘on behalf of six and a half crore Tamils’.

Dr. Ramadoss, leader of the PMK and K Veeramani, the DK leader had recently called on Tamil Nadu Chief Minister M Karunanidhi with a request to pressurise the Centre to help the cause of an immediate ceasefire in Sri Lanka. Earlier, the Prime Minister had assured the Karunanidhi-led delegation that Pranab Mukherjee, our Foreign Minister would visit Sri Lanka. Obviously, because of the Mumbai incidents and his subsequent preoccupation with the Pakistan stand, he could not make it so far.

In Colombo, seeking to distinguish between the LTTE and Tamils in the island nation, Sri Lankan President Mahinda Rajapaksa has made it abundantly clear that the government's fight was only against terrorism and that democracy will soon be restored in the embattled North. He said that the state was not against the Tamil people but against terrorists. "We want peace. We are not against the Tamil people. We are against terrorists. You (the media) have all the freedom and the right to support the Tamil people, and any parties or organisations of the Tamils, but please do not support terrorists", the President said.

Sometime back, a Congress spokesman said in New Delhi that it would not be proper for India to interfere in the internal affairs of another sovereign nation. I think one has to agree with this stand. We are all for the welfare and well-being of the Tamils in Sri Lanka. That is a top priority, no doubt. However, I think we should give a chance to the Sri Lankan Government to find a solution to the decade-old problem.

http://www.chennaionline.com/Columns/Daily...ailydose09.aspx

இந்திய அரசு மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை தவிர்க்குமா ? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மவருக்கும் இதே வெறி வரவேண்டும்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகிம்சையால் வென்ற பாரத தேசம் அதே அகிம்சைப் போராட்டத்தை கொன்றது இலங்கை மண்ணில்...

அப்படி அகிம்சையை மதிக்காத இந்திய நடுவன அரசை நம்பி தன் இனத்தைக் காக்க வேண்டி அகிம்சைப் போராட்டத்தில் இறங்கியுள்ள தொல். திருமாவளவன் அண்ணனுக்கு கோடி நன்றிகள்....

அவரின் இந்த தியாகப் போராட்டத்தை உலகறியச் செய்யும் வகையில் சில நண்பர்கள் குறிப்பிட்டதைப் போல அடையாள உண்ணாவிரதங்கள் ஒழுங்கு செய்யப் படுவது மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

தி.க.வீரமணி வேண்டுகோளையும் நிராகரித்து உண்ணாவிரதத்தை தொடர்கிறார் திருமாவளவன்

இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை அருகில் உள்ள மறைமலை நகரில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.

திருமாவளவனின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூ. மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லக்கண்ணு, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், பழ. நெடுமாறன், கவிஞர் அறிவுமதி, கவிஞர் இன்குலாப், இயக்குனர்கள் வி.சி.குகநாதன், தங்கர் பச்சான் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து பேசினர்.

மாலை 6 மணியளவில் உண்ணாவிரதப் போராட்ட மேடைக்கு வந்த தி.க. தலைவர் வீரமணி உண்ணாவிரதத்தை கைவிடும்படி திருமாவளவனிடம் தனியே கேட்டுக்கொண்டார். தன்னுடைய பேச்சிலும் திருமாவளவன் உண்ணாவிரதம் மேற்கொள்வது பெரியார் கொள்கைக்கு ஏற்றதல்ல என்றும் திருமாவளவன் உயிரிழப்பதால் எதிரிகள் வேண்டுமானால் மகிழ்ச்சி அடைவார்கள். போர்க்களத்தில் போர் வாளாக இருக்க வேண்டிய தலைவர்கள் இதைப்போன்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பதில் வேறு வகையான அறப்போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆனால் வீரமணி பேசி முடித்ததும் மைக் முன் வந்த விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சிந்தனைச்செல்வன், உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும் சூழலில் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என அறிவித்தார்.

இரண்டாம் நாள் உண்ணாவிரதத்தில் மேலும் ஆயிரக்கணக்கான கட்சியினர் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கியத்தலைவர்கள் தெரிவித்தனர்.

நக்கீரன்

thiruma_20090115007.jpg

thiruma_20090115008.jpg

thiruma_20090115007.jpg

thiruma_20090115008.jpg

காந்தி தேசமே நீதி இல்லையா?!

நீதி கொன்றிட வெட்கம் இல்லையா??!

Oh! My Land of Gandhi!

Oh! My Land of Virtues!

Are These Words of the Past?

Or Those Gone With the Wind?

Justice Delayed is Justice Denied!!!

Edited by vettri-vel

திருமாவளவனின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் உண்ணாவிரதங்களை ஏன் உலகளாவிய ரீதியில் தமிழர்கள் முன்னெடுக்க கூடாது?

திருமாவிற்கான ஆதரவுப் போராட்டங்கள், தமிழர் வாழ் உலகில் நடத்துவதற்கான சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வலியோர் சிலர் எளியோர் தமை வதையே குறிகுவதா?

மகாராசர்கள் உலகாழுதல் நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!!

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!!!

கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே

குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேறிய தமிழா!

கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே

குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேறிய தமிழா!!

தரையாகிய அறமே புலி சரிமிதியுகுதகுமா??

சமமே ஒரு சனநாயகம் எனவே முரசறைவாய்!

முரசறைவாய்!

முரசறைவாய்!!

முரசறைவாய்!!!

முரசறைவாய்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவிற்கான ஆதரவுப் போராட்டங்கள், தமிழர் வாழ் உலகில் நடத்துவதற்கான சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50251

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவன் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்

on 16-01-2009 04:51

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று ஈடுபட்டுள்ளார்.

இலங்கையி்ல் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும். இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும். தமிழினப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திருமாவளவனில் இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக நீடிக்கிறது.

கிளிநொச்சியை ஆக்கிரமித்து முல்லைத்தீவின் மீது பெரும் போரை ஏவி இருக்கும் சிங்கள இராணுவத்திற்கு எதிராக தமிழகம் கொந்தளித்தாலும் மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து மௌனம் காத்தே வருகின்றன.

மத்திய அரசில் பங்கேற்றிருக்கும் பா.ம.க., தி.மு.க போன்ற கட்சிகள் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கடிதம் மூலமும் நேரிலும் போர் நிறுத்தம் தொடர்பாக வைத்த கோரிக்கைகள் யாவும் இதுவரை பலன் அளிப்பதாக இல்லை.

இந்நிலையில் முல்லைத்தீவில் "அழிவின் விளிம்பில்" சிக்கியிருக்கும் தமது சொந்தக் குடிகளை காக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தமிழக கட்சிகளிடம் பரவாக எழுந்துள்ளது.கட்சி என்ற போர்வைக்குள் சிக்கியிருப்பதால் சிலரால் வெளிப்படையாக குரல் கொடுக்க முடியவில்லை.

பெரியார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஆகியோருடன் ஈழம் தொடர்பாக ஆலோசனை செய்து முதல்வரைச் சந்தித்த தொல். திருமாவளவன் ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை அடுத்து நேற்று அதிகாலை திடீரென சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் திருமாவளவன், தனது கட்சியினர் புடை சூழ உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

உண்ணாவிரதத்தை கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேசினர்.

தான் சாகும் வரை உண்ணாநிலை இருக்கப் போவதாக அறிவித்த தொல்.திருமாவளவன் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் ஏராளாமன விடுதலை சிறுத்தை கட்சியினரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினர் உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்காததால் திருமாவளவன் கைது செய்யப்படலாம் என்ற தகவல் மாநிலம் முழுவதும் பரவி உள்ளது.

"அழிவின் விளிம்பில் ஐந்து லட்சம் தமிழர்கள். இனவெறிப் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்து." என்ற கோரிக்கையை முன்வைத்து தொல். திருமாவளவன் சாகும்வரை இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருப்பதால் தமிழகம் எங்கும் மீண்டும் பரபரப்பாக இருக்கின்றது.

இலங்கையி்ல் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும். இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும். தமிழினப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திருமாவளவன் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.

அதிகாலை

காந்திதேசத்தில் அகிம்சை என்ன விலை என்று கேட்கும் நிலையின்று. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் திருமாவின் உண்ணாவிரதப் போராட்டம். பெரிதாக ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது.

இதைத்தான் தொப்புள்கொடி உறவு என்பதா?

எங்களுக்காய் உங்கள் உயிரையும் கொடுக்க துனிந்த உங்களை எங்கள் வாழ்நாளில் மறவோம்.

உண்ணாவிரதம் நிச்சயம் வெற்றிபெறும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக உயிரையே தரமுனையக்கூடிய ஒரு பெரும் தலைவனை நாம் மீண்டும் இழக்கப்போகின்றோமா?????

மிகவும் கவலையாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

2வது நாளாக திருமாவளவன் உண்ணாவிரதம்

சென்னை: இலங்கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல் செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் இன்று 2வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.

சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் நேற்று காலை தனது சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் திருமாவளவன்.

பெரும் திரளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் புடை சூழ அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தத்தை அமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று அவருடன் வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

தினசரி 3 மாவட்டங்களைச் சேர்ந்த சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவுள்ளனர்.

ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தையும் மத்திய அரசு புறம் தள்ளி விட்டது. இதற்கு தமிழக மக்கள் தக்க சமயத்தில் தக்க பாடம் கற்பிப்பார்கள்.

பிரணாப் முகர்ஜியை அனுப்புங்கள் என்று கூறினால் மேனனை அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார் ராஜபக்சே.

இப்படிப்பட்ட நிலையில்ஐந்து லட்சம் தமிழர்களின் உயிர் அங்கு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையிலும் இந்திய அரசு பெருத்த மெளனம் காப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார் திருமாவளவன்.

thatstamil.com

என்னை கைது செய்தாலும் உண்ணாநிலை போராட்டத்தினை கைவிட மாட்டேன்: திருமாவளவன்.

thiruma_20090116001.jpg

தமிழ்நாடு காவல்துறை என்னை கைது செய்தாலும் உண்ணாநிலை போராட்டத்தினை கைவிட மாட்டேன் என்று இன்று இரண்டாவது நாளாக உண்ணாநிலை போராட்டத்தினை தொடர்ந்து மேற்கொண்டு வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தினை இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக மேற்கொண்டு வரும் திருமாவளவன் தண்ணீரை மட்டுமே அருந்துகின்றார். இதனால் அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.

திருமாவளவனின் உடல்நிலையை இன்று பரிசோதித்த மருத்துவர்கள் குழு இன்சுலின் அளவு சற்று குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இரவு மேடையிலேயே உறங்கினார். அவரது கட்சியின் தொண்டர்கள் விடிய, விடிய விழித்து இருந்தனர்.

தொண்டர்களிடம் அவர், "நீங்கள் யாரும் உண்ணாநிலை இருக்க வேண்டாம். நான் மட்டும் இருக்கிறேன்." என்று கேட்டுக்கொண்டார்.

"இந்த போராட்டம் தி.மு.க.வுக்கு எதிராகவோ, தமிழக அரசுக்கு எதிராகவோ கிடையாது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது.

பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் டெல்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்தினோம். ஆனாலும் போர் நிறுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன் போர் நிறுத்தம் பற்றி பேசமாட்டார். சார்க் மாநாடு பற்றி பேசவே சிறிலங்கா வருகிறார் என்று அந்நாட்டின் அமைச்சர் சொல்கிறார். இதனை மத்திய அரசாங்கமும் மறுக்கவில்லை.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கம். அதனால் என்னை கைது செய்ய நடவடிக்கை எடுத்தாலும் உண்ணாநிலைப் போராட்டத்தினை கைவிட மாட்டேன். அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டாலோ, வேறு நெருக்கடி உண்டானாலோ தொண்டர்கள் அமைதியுடன் கட்டுப்பாடு காக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு கட்டுப்பாட்டை இழந்து விடக்கூடாது என்றும் கூறினார்.

பின்னர் ஊடகவியலாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது:

நாளை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், இலங்கை போர் நிறுத்தத்தை வற்புறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். மகளிர் விடுதலை சிறுத்தைகளும் இதில் ஒருங்கிணைந்து பங்கேற்க வேண்டும்.

காவல்துறையினர் ஒருவேளை என்னை கைது செய்தாலும், இலங்கை போர் நிறுத்தத்தை கைவிட கோரி போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறேன்.

நேற்று என்னை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சந்தித்தார். அப்போது உண்ணாநிலைப் போராட்டத்தினை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராதாஸ் இன்று தொலைபேசி என்னிடம் பேசினார்.

அப்போது, "இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு வேறு முறையில் முயற்சி செய்வோம். எனவே சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் என்பதை கைவிட வேண்டும்'' என்று கூறினார். இது குறித்து எங்கள் அமைப்புடன் கலந்து பேசி முடிவு செய்வேன் என்றார் அவர்.

திரையுலகத்தைச் சேர்ந்த விஜய டி.இராஜேந்தர், இயக்குநர்களான பாரதிராஜா, செல்வமணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம், மூர்த்தி உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.

உண்ணாநிலைப் போராட்ட மேடையில் நடிகர் மன்சூர் அலிகான், நிர்வாகிகள் கலைக் கோட்டுதயம், சிந்தனை செல்வன், திருமாறன், வன்னியரசு, பாவரசு, பாவலன், ஆர்வலன், உஞ்சை அரசன், சேகுவேரா, பார்வேந்தன் உள்பட பலர் அமர்ந்திருந்தனர்.

puthinam.com

Edited by nedukkalapoovan

எமக்காக உயிரையே தரமுனையக்கூடிய ஒரு பெரும் தலைவனை நாம் மீண்டும் இழக்கப்போகின்றோமா?????

மிகவும் கவலையாக உள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.