Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் நடக்கும்போது தமிழர்கள் கொல்லப்படுவது இயல்பு. ஈழத்தமிழர் என்றுகூட அம்மக்களை அழைப்பது தவறு - ஜெயலலிதா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் தான் என்பதை தாங்கள் நம்பவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் காலவரையற்ற உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பது, அவரும் தமிழக முதல்வர் கருணாநிதியும் இணைந்து நடத்தும் ஒரு நாடகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அப்பாவி இலங்கைத்தமிழர்கள் கொல்லவேண்டும் என்று இலங்கை ராணுவம் கருதவில்லை, மாறாக யுத்தம் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உலகமெங்கும் நடப்பதுதான் என்றார்.

தவிரவும் யுத்தம் நடக்கும் இடங்களில் சிக்கியிருக்கும் தமிழர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயராமல் தடுப்பதே விடுதலைப்புலிகள்தான் என்றும் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார்.வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் ஈழத்தமிழர் என்றுகூட அம்மக்களை அழைப்பது தவறு என்றும் ஏனெனில் ஈழம் என்ற ஒரு நாடும் இப்போது இல்லை எனவே அவர்களை இலங்கைத் தமிழர்கள் என்றுதான் அழைக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிறந்த மாநிலத்தில் அரசியல் செய்ய முடியதவக்கு தமிழ்நாட்டில் என்ன ஆட்டம்...

தமிழ் நாட்டு உறவுகளே இவரது இக்கூற்றுக்கு உங்கள் பதிலென்ன?

இவரை தமிழகத்தில் அரசியல் நடாத்த அனுமதிக்கத்தான் போகின்றீர்களா?

அடுத்த தேர்தலில் மண்கவ்வ வைத்து தமிழகம் வேணாம் என்று ஓட வையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மேலும், அப்பாவி இலங்கைத்தமிழர்கள் கொல்லவேண்டும் என்று இலங்கை ராணுவம் கருதவில்லை, மாறாக யுத்தம் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உலகமெங்கும் நடப்பதுதான் என்றார்.

இந்த பெண்மணி இலங்கை ராணுவத்தை பற்றி தெரிந்து வைத்துள்ளதை பாருங்களேன் .

  • கருத்துக்கள உறவுகள்

"மேலும், அப்பாவி இலங்கைத்தமிழர்கள் கொல்லவேண்டும் என்று இலங்கை ராணுவம் கருதவில்லை, மாறாக யுத்தம் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உலகமெங்கும் நடப்பதுதான் என்றார்...".............

இவ்வளவும் தான் இவவுக்கு தெரிந்ததா ? .......வேறு என்ன கருதினார்கள் என்று இவவுக்கு தெரியுமா ? .நேருக்கு நேர் நின்று மோத தெரியாதவர்கள் எல்லாம் .......செய்வது , பொது ஜன அழிப்பு தான் ? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ..இரத்தமும் சதையுமாய் .

. .சிதறிப்போக . ........

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா ஜீ ஜீ....ராஜராஜ சோழன் காலத்திலேயே ஈழம் என்ற நாடு இருந்து இருக்கிறது .

அம்மா ஜீ ....ஈழத்து புலவரே வருக வருக என்று சிவாஜி சார் (ராஜராஜ சோழனாக நடித்து) டயலாக்கு பேசியுளளார்.அது சரி நீங்கள் தமிழ் படம் பார்க்கமாட்டிங்க ,தமிழ் படத்தில் நடிக்க மட்டும் தான் தெறியும் உங்களுக்கு.

உங்களை செல்வி என்றும் அம்மா என்று சொல்வதும் தவறுதான் !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவவின்ரை இரகசியங்கள் எல்லாம் சிங்களவங்கடைக்குத்தான் வெளிக்கும்.

வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் ஈழத்தமிழர் என்றுகூட அம்மக்களை அழைப்பது தவறு என்றும் ஏனெனில் ஈழம் என்ற ஒரு நாடும் இப்போது இல்லை எனவே அவர்களை இலங்கைத் தமிழர்கள் என்றுதான் அழைக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவர் பெரிய கண்டுபிடிப்பு கண்டுபிடிச்சுட்டார்.......... இரை எல்லாம் ஒரு அரசியல் தலைவி என்று நம்பியிருக்கிற தமிழக தமிழருக்கு எப்ப தான் ஞானம் வருமோ?

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் ஜெயலலிதா பாட்டிக்கு..

நீங்கள் ஈழத்தமிழர்கள் தொடர்பான கீழ் தரப்பட்டுள்ள ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சில விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திருமாவளவன் 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை உங்கள் கூட்டணி கட்சியினரான மதிமுக, சிபிஐ, சிபிஎம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஜெயலலிதா: இலங்கை பிரச்சனையைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனிக்கொள்கை உண்டு. எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் இருந்தால், அவர்கள் அனைவருக்குமே எல்லாப் பிரச்சனையிலும் ஒருமித்த கருத்து இருக்க முடியாது. அவரவருக்கும் ஒரு கொள்கை உண்டு.

இந்த உண்ணாவிரதம் கருணாநிதியும் திருமாவளவனும் பேசி வைத்துக் கொண்டு நடத்தும் நாடகம்.

கேள்வி: இலங்கை விஷயத்தில் உங்கள் கட்சியின் நிலை என்ன? மத்திய அரசு இதில் தலையிட வேண்டுமா? கூடாதா?

ஜெயலலிதா: இதுகுறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மற்ற நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சனையில் எந்த நாடும் தன்னிச்சையாக தலையிட முடியாது. இலங்கை பிரச்சனையைப் பொறுத்த அளவில் அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும். கௌரவமான வாழ்வு அமைய வேண்டும். சிங்கள மக்களைப் போலவே சுதந்திரமான உரிமைகளோடு தமிழ் மக்களும் வாழவேண்டும் என்பது தான். ஆனால் பயங்கரவாதத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இதை பல நாடுகளும் அறிவித்துள்ளன. பல நாடுகளில் தடையும் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கான ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள்தான் என்பதை நாங்கள் நம்பவில்லை.

கேள்வி: போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறார்களே?

ஜெயலலிதா: கருணாநிதியும் திருமாவளவனும் தொடர்ந்து போர் நிறுத்தம் என மக்களை ஏமாற்றுகிறார்கள்.

கேள்வி: 1983ம் ஆண்டில் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளை முழுமையாக ஆதரித்தாரே?

ஜெயலலிதா: அப்போதிருந்த நிலை வேறு. இப்போதுள்ள நிலைமை வேறு.

கேள்வி: ஈழத் தமிழர்கள் அங்கு கொல்லப்பட்டு வருகிறார்களே?

ஜெயலலிதா: ஈழம் என்ற ஒரு நாடே இல்லை. அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள்தான். எங்கு யுத்தம் நடந்தாலும் அங்கு அப்பாவி பொதுமக்கள் சிலர் கொல்லப்படுவார்கள். இலங்கையில் தமிழர்களை கொல்ல ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும் போது அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கு அல்ல. இப்போது இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான இடம் தேடி செல்ல முடியவில்லை. அவர்களை புலிகள் பிடித்து வைத்து, ராணுவத்திற்கு முன் கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே விடுதலைப் புலிகள் நினைத்தால், அப்பாவித்தமிழர்களை சாவிலிருந்து காப்பாற்ற முடியும்.

தகவல் - தட்ஸ்ரமிழ்.கொம்

கர்னாடக மாநிலத்தில் மைசூரில் பிறந்து ஒரு சினிமா நடிகையாக தமிழகத்துக்கு வந்து தமிழனை ஆளும் தகுதியை பெற்ற நீங்கள் தமிழர்களின் வரலாற்றை சரியாக அறிதிருப்பீர்கள் என்று நாம் நம்பவில்லை என்றாலும்.. கர்னாடக மக்களால் நிராகரிக்கப்பட்ட நீங்கள் தமிழர்களால் தங்களுக்கு தலைவியாக்கப்பட்ட கறுமத்துக்காக இதனை எழுதுகின்றோம்.

1. ஈழம் என்ற ஒரு நாடே இல்லை என்று மிக இலகுவாக சொல்லி விட்டீர்கள்.

உங்களுக்கு ஈழம் பற்றிய வரலாறு தெரிந்தா இதைச் சொன்னீர்கள்..?!

ஈழம் தாய் தமிழகத்தின் தென்முனையில் இருக்கும் தமிழர்கள் வாழ்ந்த தீவே ஆகும். அதுவே இன்று ஈழம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு விஜயனின் வாரிசுகளான சிங்களவர்கள் இட்டுள்ள பெயர் சிறீலங்கா ஆகும். ஈழம் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் மொழியப்பட்ட ஒரு சொல் என்று வரலாற்று ஆய்வுகள் கூறி நிற்கின்றன. ஈழத்தில் தமிழர்களின் அரசாட்சிகள் காலம் காலமாக செழிப்புற்றிருந்த வரலாறுகளும் உண்டு.

நீங்கள் இது வரை அந்த வரலாற்றை அறியாது விட்டிருப்பின் எனியாவது அறியுங்கள். அதற்கு இந்த இணைப்பை அழுத்துங்கள்.

2. ஈழம் என்ற ஒரு நாடே இல்லை இலங்கையில் இருப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்றே அழைப்பட வேண்டும் என்றும் கூறி இருக்கிறீர்கள்.

நீங்கள் எத்தனையாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நாம் அறிய முடியவில்லை. உங்களின் மூளையில் மறதி வியாதி.. அல்லது ஏதேனும் வியாதிகள் இல்லை என்று நம்பிக் கொண்டு இதனை எழுதுகின்றோம்.

இலங்கை என்பது சிறீலங்கா எனும் சிங்கள பெளத்த தேசமாகி கிட்டத்தட்ட 30 - 40 வருடங்கள் ஆகப்போகின்றன. ஆனால் நீங்களோ, இன்னும் இலங்கை என்ற பழைய பெயரைக் காவிக் கொண்டு திரிகிறீர்கள். இது நீங்கள் மதிக்கும் சிங்களப் பேரினவாதிகளையும் சிறீலங்காவையும் அவமதிக்கும் செயலாகவே நோக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இப்படி சிறீலங்காவின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையில் இலங்கையில் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று அழைப்பட்ட வேண்டும் என்று அறிக்கை விடாமல் சிறீலங்கா தமிழர்கள் என்று அழைக்க அழைப்பு விடுங்கள்.

மேலும்.. சிறீலங்காவில் வாழும் தமிழர்களில்.. ஈழத்து பண்டைய தேசத் தமிழர்களும் பிரித்தானிய காலனித்துவம் வேலை வாங்க கொத்தடிமைகளாக கடத்தி வந்த தமிழக தாய் உறவுகளும் வாழ்கின்றனர். அவர்கள் இந்தியத் தமிழர்களாகவே இன்று வரை இனங்காணப்பட்டு.. சிறீலங்காவின் எங்கோ ஒரு மூலையில் அபிவிருத்திகள் அற்ற ஒரு நிலையில் தினக்கூலிக்கு உழைக்கும் நிலையில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் இரத்தம் தான் சிறீலங்காவின் "சிலோன் தேயிலை"யின் சிவப்பாகி உங்கள் போன்ற பெருங்குடி மக்களுக்கு சுவையூட்டிக் கொண்டிருக்கின்றது..!

3. யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது ஒன்றும் தவறே அல்ல. சிங்கள பெளத்த தேசமான சிறீலங்காவின் இருப்பைக் காக்க தமிழர்களைக் கொன்று யுத்தம் செய்வது தவிர்க்க முடியாதது. சிங்கள பெளத்த பேரினவாத இராணுவத்துக்கு தமிழர்களைக் கொலை செய்யும் நோக்கம் இல்லை என்று அழகாக உங்களுக்கு சொல்லித்தரப்பட்ட உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள்.

நீங்கள் இன்று ஆட்சி செய்யும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஸ்தாபகரும் முன்னாள் முதல்வரும் தமிழ் மக்களின் இதயங்கள் எங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம் ஜி இராமச்சந்திரன் ஐயா அவர்களே ஈழத்தமிழர்களுக்கு சிறீலங்காவில் சிங்களவர்களால் ஆபத்து என்பதை நன்குணர்ந்துதான் ஈழ விடுதலை ஆயுதப் போராட்டங்களை அங்கீகரித்து நின்றது மட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிகளை அளித்து வந்தார். அவர் இறக்கும் வரை ஈழத்தமிழரின் நலனை சிங்கள இனவெறியர்களின் மற்றும் இந்திய உளவாளிகளின் பணத்துக்காக விட்டுக்கொடுக்கவில்லை.

ஆனால் நீங்களோ உங்களை வாழ வைத்த மக்களின் அபிவிருத்திக்கு பாவிக்கப்பட வேண்டிய பணத்தையே சுருட்டி உலகம் பூரா முதலீடுகளைச் செய்த பெரும் பண முதலை என்பதை நாம் நன்கு அறிவோம். எம் ஜி ஆரை உங்களுக்கு இணையாக வைத்து இக்கருத்தை எழுதுவதே அவரை மிகத் தரந்தாழ்த்துவதாக அமைந்துவிடும் என்பதால் இதற்கு மேல் அவரை இதற்குள் உதாரணமாகக் காட்டி எனி எழுதப்போவதில்லை.

ஈழத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத வெறியர்களால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.பலர் திட்டமிட்டு அவர்களின் வாழ்விடங்களில் இருந்து விரட்டப்பட்டு அவ்விடங்கள் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளன. தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள்.. சிங்கள இராணுவத்தினால் ஆயுத முனையில் பறிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால் நிர்க்கதியான தமிழர்கள் பல இலட்சம் பேராகும். இவை இன்று வரை அதிகரித்துக் கொண்டு தான் வந்து கொண்டிருக்கின்றன. அது புலிகள் இருந்தால் என்ன விட்டால் என்ன நடந்தே இருக்கும்.

1983 ஆம் ஆண்டில் இருந்ததை விட இன்று அதிகமாகவே ஈழத்தில் தமிழர்களின் வாழ்விடங்கள் பகிரங்கமாகவே சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன. அதை சிறீலங்காவின் சிங்கள பேரினவாதிகளின் குரலை செவிமடுக்கும் மக்கள் நன்கு அறிவார்கள். நீங்கள் அவர்களிடம் பெற்ற பணத்துக்காக உங்கள் செவிகளை அடைத்து வைத்திருக்கலாம். அதற்காக உலகமே செவிடாகி விட்டது என்று எண்ணக் கூடாது.

சிங்கள பெளத்த பேரினவாதிகளின் தமிழின அழிப்புப் பற்றிய வரலாறு உங்களுக்கு தெரியாவிட்டால் பின் வரும் இணைப்புக்களைப் படியுங்கள்.

அ. தமிழின அழிப்பு.

ஆ. 1983 யூலைக் கலவரமும் தமிழன அழிப்பும்.

இவை சிங்கள பெளத்த பேரினவாதிகளின் தமிழின அழிப்பு நிகழ்ச்சி நிரலின் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே.

4. தமிழீழ விடுதலைப்புலிகளை ஈழத்தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை அந்த மக்கள் சனநாயகத் தேர்தல் வழி ஏற்றுக் கொண்டுதான் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறீலங்கா நாடாளுமன்றிற்கு தமது உரிமைப் போராட்டம் பற்றி எடுத்துச் சொல்ல அனுப்பி இருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் தமிழ் நாட்டில் அல்லது இந்திய நாட்டில் ஏக பிரதிநிதிகள் என்ற நிலையைக் கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் கருதலாம். கருத்து வெளியிடலாம். ஆனால் ஈழத்தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக அந்த மக்களே விடுதலைப்புலிகளை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் நீங்கள் அவர்கள் சார்ப்பாக கருத்துச் சொல்லத் தகுதியுடையவரா என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருப்பதுடன் உங்களின் விடுதலைப்புலிகள் ஏக பிரதிநிதிகள் அல்ல என்ற குற்றச்சாட்டு தவறும் ஆகும். அதை எப்போதும் ஈழத்தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.சிங்களனப் பேரினவாதிகளிடம் (சந்திரிக்காவிடம் நீங்கள் பெற்ற கூலி உலகறிந்த விடயமாகும். மகிந்த ராஜபக்சவிடம் பெறாமலா இருப்பீர்கள்.!) கூலி பெறும் நீங்கள் அல்ல.

5. தமிழீழ விடுதலைப்புலிகள் வன்னியில் மக்களை அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்களை வெளியேற விடுவதால் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்று தமிழகத்தில் இருந்து கொண்டு நீங்கள் அழகாக அறிக்கை விட்டுவிட்டுருக்கிறீர்கள். உங்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் மீதுதான் காழ்ப்புணர்ச்சி என்றிருந்தோம். ஆனால் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள் மீது காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் மிகுந்திருக்கிறது என்பதை இன்றுதான் அறிந்து கொண்டோம்.

உங்கள் கருத்து வெளிப்பார்வைக்கு சிங்கள பெளத்த பேரினவாதிகளையும் அவர்களின் பயங்கரவாத அரச படைகளினையும்.. பெரும் மனிதாபிமானம் மிக்க உத்தமர்கள் என்று இனங்காட்டப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிகிறது. அது நீங்கள் அவர்களிடம் பெற்றுக் கொண்ட கூலிக்கு செய்யப்பட வேண்டிய காரியம் தான். ஒரு வகையில் நீங்கள் அவர்களுக்காவது நன்றிக்கடனோடு இருக்கிறீர்களே என்று பெருமைப்படத்தான் வேண்டி இருக்கிறது.

சிறீலங்கா அரசு மனித உரிமைகளை என்றும் இல்லாதவாறு மீறி வருவதாக சர்வதே மன்னிப்புச் சபையும், மனித உரிமை அமைப்புக்களும் குற்றம்சாட்டி வருகின்றமை நாளாந்த செய்திகள் என்பதை நீங்கள் சர்வதேச ஊடகங்களை நோக்கின் அறிந்து கொள்வீர்கள். அவை இன்றைய நிகழ்வுகள் என்பதால் அவற்றுக்கு ஆதாரங்களை இங்கு கொண்டு வருவது உங்களை அவமதிப்பது போன்றதாகிவிடும். ஒருவேளை நீங்கள் அவ்வாறான செய்திகளைப் படிப்பதில்லை எனில் ஆதாரங்களை மேற்படி சர்வதேச அமைப்புக்களின் இணையத்தளங்களில் சென்று படித்துக் கொள்ளுங்கள்.

அது மட்டுமன்றி சர்வதேச தொண்டு நிறுவனங்களைக் கூட தமிழர் தேசங்களில் பணி செய்ய அனுமதிக்காது அவர்களின் விருப்புக்குப் புறம்பாக தமிழர் நிலங்களில் குறிப்பாக வன்னியில் இருந்து விரட்டி அடித்தது புலிகள் அல்ல, சிறீலங்கா சிங்கள பெளத்த பேரினவாத அரசாங்கமும் அவர்களுக்கு உதவி வழங்கு இந்திய மத்திய ஆளும் வர்க்கமுமே.

இப்போ அந்த மக்களை நிர்க்கதியாக்கிவிட்டு.. அவர்கள் மீது குண்டு மழை பொழிந்து கொன்று குவித்துக் கொண்டு, அவர்கள் மீது குண்டு வீசும் படைகளிடம் அடைக்கலம் போகச் சொல்வது எந்த வகையில் அம்மா நியாயம்.

உங்கள் சினிமாவில் கூட கற்பழிக்கப்படும் பெண்ணை நாயகன் வந்து காப்பாற்றுவதாகத்தான் காட்டி இருக்கிறீர்கள். ஆனால் இப்போ பாலியல் வல்லுறவு என்ன உலகத்தில் நடக்காத ஒன்றா என்று கற்பழிக்க அனுமதிப்பதோடு கற்பழிப்பவனிடமே அப்பெண்ணை மீண்டும் மீண்டு கற்பழிக்க அனுப்புவது போன்று தத்துவம் பேசுகிறீர்கள். இப்படி ஒரு சினிமாவை தயாரித்து தமிழகத் தியேட்டர்களில் விட்டுப்பாருங்கள். தமிழகப் பெண்களே உங்களை செருப்பால் அடித்து மைசூருக்கு அனுப்பி வைப்பார்கள்.

சமீபத்திய போரை சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசு தானாக வலிந்து ஆரம்பித்த போது.. மனித உரிமை அமைப்புக்கள் வன்னியில் மக்கள் வாழ ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கி, சர்வதேச தொண்டு அமைப்புக்களின் பராமரிப்பு மற்றும் அவற்றின் கண்காணிப்பின் கீழ் அந்தப் பகுதியை யுத்தமற்ற பகுதியாக அறிவிக்கக் கேட்டிருந்தனர்.

விடுதலைப்புலிகள் அதற்கு சிங்கள அரசு உடன்படின் தாமும் உடன்படத்தயார் என்று கூறி இருந்தனர். ஆனால் அன்று சிங்கள அமைச்சன் கெகலிய ரம்புக்வல விட்ட அறிக்கை என்ன தெரியுமா.. வன்னியில் உள்ள குழந்தை கூட புலிதான் என்று. வயது பால் வேறுபாடின்றி பயங்கரவாதிகளாக இனங்காணப்பட்டு வன்னி மக்கள் கொல்லப்பட வேண்டும் என்று அவர் பகிரங்கமாகவே கூறியிருந்தார். அச் செய்திகள் ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன.

அப்படி ஒரு சிங்கள அமைச்சனே சிந்திக்கும் போது போர்க்களத்தில் அடிவாங்கும் சிங்கள இராணுவ வீரன் எப்படி வன்னி மக்களை காப்பாற்றி.. பத்திரமா கவனிப்பான் என்று நீங்கள் உறுதி கூறுகிறீர்கள்..??!

அதுமட்டுமன்றி 1995 இல் இந்தியாவின் பெரும் ஆதரவோடு சிங்களப் பேரினவாதி சந்திரிக்கா யாழ்ப்பாணக் குடாநாட்டை சிங்களப் படைகளை ஏவி ஆக்கிரமித்த பின் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் எத்தனை பேர். செம்மணியில் புதைக்கப்பட்ட மக்கள் எத்தனை பேர். பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட கிருசாந்திகள் எத்தனை பேர். ஒரு வேளை நீங்கள் இன்று சொல்வது போல புலிகள் அவர்களை வன்னிக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்திருப்பின் இன்று அவர்கள் உயிரோடு இருந்திருக்கக் கூடும்.

அதுமட்டுமன்றி 2007இல் விடுவிக்கபட்டதாக சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட பின் மட்டக்களப்பு,திருகோணமலை மற்றும் அம்பாறையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை பல நூறு என்பதை சர்வதேச மன்னிப்புச் சபையே அதன் அறிக்கையில் தெரிவித்திருப்பதோடு அதற்கு சிறீலங்கா அரசையும் கருணா குழுவையும் குற்றம்சாட்டி இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு நிலையில் நீங்கள் புலிகள் மீது சுமத்தும் முற்றச்சாட்டு அபந்தமானது மட்டுமன்றி தமிழ் மக்களை சிங்களப் பேரினவாத பயங்கரவாதப் படைகளிடம் கையளித்து அவர்களை துப்பாக்கி ரவைகளுக்கு இரையாக்கி மகிழ நினைக்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கு உதவவில்லை என்று நீங்கள் கவலைப்படுவதாகவே இது எமக்கு இனங்காட்டுகிறது.

நீங்கள் கள யதார்த்ததிற்கும்.. கடந்து போன வரலாற்றுப் பாடங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றை.. உங்களின் சொந்த நலனுக்காக ஒரு இனத்தின் அழிவைக் கூட பெரிதுபடுத்தாமல் முன்னிலைப்படுத்த விரும்புகிறீர்கள். அதுதான் ஈழத்தமிழர்களின் ஈழம் என்ற பாரம்பரிய அடையாளத்தையும் மறுதலிக்கிறீர்கள்.. அவர்களை சிங்கள இராணுவத்தின் கொலைவெறிக்கு இலக்காக்கவில்லை என்றுகூறி புலிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கொள்கிறீர்கள்.

உண்மையில் நீங்கள் தமிழ் மக்களுக்கு சேவகியா..?! அல்லது சிங்களப் பேரினவாதிகளின் தமிழகப் பிரதிநிதியா...??!

அன்பின் பாட்டிக்கு.. எம்மால் இயன்ற அளவு உங்களுக்கு உங்களின் தவறான நிலைப்பாட்டை உணர்த்த முனைந்திருக்கிறோம். உணர்வதும் விடுவதும் உங்கள் மனநிலை.. மூளையின் சுகத்தன்மையில் தங்கியுள்ளது.

உங்களிற்கு அரசியல் எதிர்காலம் ஒன்று வேண்டின்.. அதுவும் நீங்கள் அழிக்க நினைக்கும் தமிழர்களின் இரத்த உறவுகளால் தான் அமைய வேண்டும் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொண்டு நீங்கள் புலிகளை ஆதரிக்கிறீர்களோ இல்லையோ ஈழத்தமிழர்களை சிங்களப் பேரினவாதிகளிடம் இரையிட்டு அழிக்க நினைப்பதை நிறுத்த தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றோம்.

ஈழத்தில் துயருறும் தமிழ் மக்கள் சார்பில்..!

நன்றி.

http://www.kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

பொய்யான புனை கதைகளுக்கு கூத்து கட்ட வேசம் கட்டிய ஜெயாவுக்கு ஈழத்தமிழரின் இரத்தம் தோய்ந்த வரலாறு தெரிந்து இருக்க வேண்டும் என்பது இல்லை.

ஈழத்தமிழர் விடயம் என்பது கூட பெரும்பாண்மையான தனது நேரத்தை தான் செய்த ஊழல் பிரச்சினைகளை கையாள செலவிடுபவர் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பும் இல்லை.

அடுத்த தேர்தலில் காங்கிரசோடு சேர்ந்து கூட்டணி வைத்து தேர்தலை எதிர் கொள்ள ஜெயா திட்டம் போட்டு காய் நகர்த்துவதும் கூட வெளிப்படை. கலைஞர் ஆட்ச்சியை கலைப்பது கூட இதனால் இலகுவாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க முயற்ச்சிப்பது நன்றாகத் தெரிகிறது.வைக்கோவின் நிலைதான் பரிதாபம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி

நீங்கள் (nஐயலலிதா அல்ல-அவர் தமிழர் அல்ல) இந்தியரா

தமிழரா

இதற்கான பதிலிலேயே நாம்

ஈழத்தவரா

இலங்கையரா என்பதற்கான விடையும் உள்ளது

நீங்கள் தமிழர் என்றால்

அப்படியொரு நாடு எங்குள்ளது என்று எம்மாலும் கேட்கமுடியும்

சிறுவயதில் நான் படித்திருக்கிறேன். ஈழம் வேறு. தமிழீழம் வேறு... விடுதலைப்புலிகள் போராடுவது தமிழீழதிற்காகவே.... ஈழம் என்பது இலங்கைக்கு பண்டைய தமிழ் அரசுகள் அழைத்த பெயர்.... பழைய பாலகர் அரிச்சுவடியில் அ-அம்மா ஆ- ஆடு இ- இட்லி ஈ - ஈழம் என்று படங்களுடன் வெளியான ஒன்றை கண்டிருக்கிறேன். இருந்தாலும் உண்மை தெரியவில்லை...

பிரபாகரன் தமீழீழ தேசியத்தலைவர் என்று தான் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஈழ தேசியத்தலைவர் என்றல்ல..

ஆகவே ஈழத்தமிழர் என்று கூறுவதில் எந்த தவறுமில்லை என்று நினைக்கிறேன்.

அடுத்தது இவர் கூறுவது போல (போரில் பாதிக்கப்பட்டு) இவருக்கும் நடந்தால் பிரச்சனை வராது... தப்புக்கள் இன்னொரு தப்பிற்கு காரணமாக அமையக்கூடாது. இருந்தாலும் இதே தப்பை இவருக்கு புலிகள் செய்தால் அதை ஏற்பாரா???

எதற்கும் ஒரு அளவு வேண்டாமா??? தானாடாவிட்டாலும் தன் தசை ஆடவேண்டாமா???

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் நான் படித்திருக்கிறேன். ஈழம் வேறு. தமிழீழம் வேறு... விடுதலைப்புலிகள் போராடுவது தமிழீழதிற்காகவே.... ஈழம் என்பது இலங்கைக்கு பண்டைய தமிழ் அரசுகள் அழைத்த பெயர்.... பழைய பாலகர் அரிச்சுவடியில் அ-அம்மா ஆ- ஆடு இ- இட்லி ஈ - ஈழம் என்று படங்களுடன் வெளியான ஒன்றை கண்டிருக்கிறேன். இருந்தாலும் உண்மை தெரியவில்லை...

பிரபாகரன் தமீழீழ தேசியத்தலைவர் என்று தான் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஈழ தேசியத்தலைவர் என்றல்ல..

ஆகவே ஈழத்தமிழர் என்று கூறுவதில் எந்த தவறுமில்லை என்று நினைக்கிறேன்.

அடுத்தது இவர் கூறுவது போல (போரில் பாதிக்கப்பட்டு) இவருக்கும் நடந்தால் பிரச்சனை வராது... தப்புக்கள் இன்னொரு தப்பிற்கு காரணமாக அமையக்கூடாது. இருந்தாலும் இதே தப்பை இவருக்கு புலிகள் செய்தால் அதை ஏற்பாரா???

எதற்கும் ஒரு அளவு வேண்டாமா??? தானாடாவிட்டாலும் தன் தசை ஆடவேண்டாமா???

இது உண்மைதான்

எம்மிடையே இருந்த பல இயக்கங்கள் இந்த விடயத்தை குளப்பி அடித்தன

ஈழம் என்றவர்கள் சிலர்

தமிழீழம் என்றவர்கள் சிலர்

இதில் ஈழம் என்று அழைக்கவேண்டும் என்றவர்களின் கருத்து

தமிழ்ஈழம் என்னும்போது அதற்குள் தமிழரல்லாதவர் அடங்கமாட்டார்கள் என்ற கருத்தாகும்

உதாரணமாக முசுலீம்கள்

ஆனால் தமிழீழம் என்பதே சரியானதென முடிவாகி விட்டது

இயக்கங்களின் பெயர்களிலேயே அதனைப்பார்க்கமுடியும்

ஆனால் அவர்களைப்பற்றி மீண்டும் இங்கு ஆராயவிரும்பவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுவயதில் நான் படித்திருக்கிறேன். ஈழம் வேறு. தமிழீழம் வேறு... விடுதலைப்புலிகள் போராடுவது தமிழீழதிற்காகவே.... ஈழம் என்பது இலங்கைக்கு பண்டைய தமிழ் அரசுகள் அழைத்த பெயர்.... பழைய பாலகர் அரிச்சுவடியில் அ-அம்மா ஆ- ஆடு இ- இட்லி ஈ - ஈழம் என்று படங்களுடன் வெளியான ஒன்றை கண்டிருக்கிறேன். இருந்தாலும் உண்மை தெரியவில்லை...

பிரபாகரன் தமீழீழ தேசியத்தலைவர் என்று தான் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஈழ தேசியத்தலைவர் என்றல்ல..

ஆகவே ஈழத்தமிழர் என்று கூறுவதில் எந்த தவறுமில்லை என்று நினைக்கிறேன்.

அடுத்தது இவர் கூறுவது போல (போரில் பாதிக்கப்பட்டு) இவருக்கும் நடந்தால் பிரச்சனை வராது... தப்புக்கள் இன்னொரு தப்பிற்கு காரணமாக அமையக்கூடாது. இருந்தாலும் இதே தப்பை இவருக்கு புலிகள் செய்தால் அதை ஏற்பாரா???

எதற்கும் ஒரு அளவு வேண்டாமா??? தானாடாவிட்டாலும் தன் தசை ஆடவேண்டாமா???

ஆஹா....................

உண்மை உண்மை...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்தேகம்

பாவியர் போகும் இடம் எல்லாம் பள்ளமும் திட்டியும்???

பாவியர் போகும் இடம் எல்லாம் பள்ளமும் புட்டியுமா???

  • கருத்துக்கள உறவுகள்

வசனஆசிரியர் எழுதிக் கொடுப்பதைப் பேசுபவருக்கு தமிழரின் வரலாறு எப்படித் தெரியும்.

ச்சே என்ன மனிதபிறவி இது

  • கருத்துக்கள உறவுகள்

ச்சே என்ன மனிதபிறவி இது

அவ சந்திரிகா பாட்டியின் நண்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

ச்சே என்ன மனிதபிறவி இது

இலங்கைத் தீவிலே இரு தேசங்கள் இருந்தமைக்கான வரலாற்றாதாரங்கள் பல உள்ள நிலையில், புனைவுகளால் பின்னப்பட்ட மகாவம்ச மாயையைத் தழுவியவாறு சிங்கள இனவாத சிறீலங்கா அரசானது, தனது கொலைப் படையான சிங்களப் படைகளை ஏவிவிட்டு மிகப்பெரும் தமிழின அழிப்பை மேற்கொண்டு வருகின்றமை உலகறிந்த விடயம். உலகம் ஏற்க மறுக்கின்ற வெட்கக் கேடான விடயமுமாகும்.

செயலலிதா அம்மையார் ஒன்றும் பெரிய அரசியல்வாதியல்ல. மக்கள் திலகம் அவர்களின் அமரத்துவம்; காரணமாகக் கட்சியைக் கைப்பற்றிக் கொண்டவர். அவரோடு நடித்தவர். அவரிடமும் நடித்தவர். அதை அறிந்து கொண்ட மக்கள் திலகமவர்கள் நடவடிக்கை எடுக்குமுன் நோய்வாயப்பட்டுவிட்டார். துன்பியல் நிகழ்வாகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில்; பொய்மைக்கே சாதகமான சூழ்நிலைகள் அமைந்துவிடுகின்றன. சூழ்நிலைகள் காரணமாக வந்து பெரும் ஊழல் அது இது என்று பெரும் சர்ச்சைக்குரிய இவரிடம் போய் மாற்றம் வருமென்று எதிர்பார்ப்பது எவளவுக்கு பொருத்தம் என்று புரியவில்லை. ஒரு செல்விக்கு குழந்தைகளின் மடல் மூலம் மாற்றம் வருமா? மனிதாபிமானமுள்ளவர்கள் மட்டுமே தமது தவறை திருத்திக் கொள்வர். மனிதாபிமானமென்ன விலை என்போரா….? எந்த ஒரு அரசியல்வாதியும், ஏன் சிங்கள அரசியல்வாதிகள் கூட இப்படிக் கொடுமையானதும், கடுமையானதுமான வார்த்தைப் பிரயோகத்தைப் பாவித்தார்களா ? எம்மைப் பற்றிய கவலை போகட்டும். அ.தி.மு.க உறவுகளே, மக்கள் திலகமவர்களால் வளர்க்கப்பட்ட நீங்கள் அமைதியாக இருப்பதே வேதனையளிக்கிறது. அம்மணி சிங்கள அரசின் கைக் கூலியாக நீண்டகாலமாகச் செயற்படுகிறார் என்பது உலகறிந்ததுதானே. ஆனால் மக்கள் திலகம் அவர்கள் போன்ற ஒரு பெருமனிதரால் உருவாக்கப்பட்ட அவரது கட்சியின் தலைவி என்று சொல்ல அருகதையற்றவரே இந்த அம்மணி. இவரிடம் தமிழினம் இவருக்கு என்ன செய்தது என்று மட்டும் தமிழ் மானம் கொண்ட தன்மானமுள்ள தொண்டர்களே கேட்பீர்களாயின் அது போதும்.

தோழியோடு தோட்டத்திலே கூத்து பங்களாவிலே பட்டையுடன் பாட்டு, பின்னர் அவ்வப்போது மக்களைக் குழப்பிவிடும் அறிக்கை அரசியல், சொகுசு வாழ்வும், தமிழினம் மீது காழ்ப்புணர்வும் கொண்ட இந்த நபரை அ.தி.மு.க தலைவரென்று வைத்திருக்கிறதே! தமிழினத்துக்கே அவமானம்;. மக்கள் திலகமவர்களின் புகழைச் சூறையாடி, அவரது கொள்கைகளை மறுதலிக்கும் தலைவி தேவையா என்று மக்கள் திலகத்தின் அபிமானிகளான தொண்டர்கள் சிந்திக்க வேண்டும். நீங்களும் இந்த அம்மணியோடு சேர்ந்து நின்று, மக்கள் திலகமவர்களின் புகழைச் சிதைக்கும் இவருக்கு உதவாதீர்களென, மக்கள் திலகமவர்களின் பெயரால் வேண்டுகிறோம். தமிழினம் இது போன்ற துரோகங்களைக் கடந்து நிமிரும்.

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.