Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களுக்கு ஓர் அறிவிப்பு - வன்னியிலிருந்து - காணொளியில்

Featured Replies

மக்களுக்கு ஓர் அறிவிப்பு - வன்னியிலிருந்து - காணொளியில்

Edited by suryaa

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு ஓர் அறிவிப்பு - வன்னியிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் - காணொளியில்

காணொளி

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய காணொளி. நன்றி இணைப்புக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

[quote

யாழ் கள நிர்வாகம் உட்பட.. ஒவ்வொரு தமிழனும்.. இன்றைய சூழலில் கேட்க வேண்டிய.. பார்க்க வேண்டிய காணொளி..!

நன்றி தோழரே..! :unsure:

யாழ் கள நிர்வாகம் உட்பட.. ஒவ்வொரு தமிழனும்.. இன்றைய சூழலில் கேட்க வேண்டிய.. பார்க்க வேண்டிய காணொளி..!

நன்றி தோழரே..! :unsure:

எங்கள் நம்பிக்கை குறைவில்லை.... பொறுமைக்கும் எல்லை இல்லை.... ஆனாலும் தமிழர்கள் எதையும் எவரிடமும் இருந்து கேட்ப்பதுமில்லை. தமிழ் ஊடகங்களில் இருந்து வாற செய்திகளை தவிர வேற செய்திகளை நம்புவதுமில்லை. அப்படி இருக்க உண்மைகளை மக்கள் உணரவெண்டுமெண்டா யார் பொய்கூறுவது? தமிழ் ஊடகங்களா?

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய காணொளி. நன்றி இணைப்புக்கு.

பார்த்தால் கேட்டால் அழுதால் மட்டும்போதாது

செயற்படணும்

செய்யணும்

செய்ய வைக்கவேணும்

செய்யத்தூண்டவேணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உண்மையை கூறும் இனைப்புக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி

நம்பிக்கை தான் வாழ்க்கை :)

இணைப்புக்கு நன்றி நண்பரே குறைகூறும் குறுக்காலை போனதுகள்தான் திருந்தவேண்டும். சமயம் பார்த்து களதஇதில் புலிகள்மீது பலர் கல்லெறிகின்றனர். யாழ்நிலவன்கள் வானம்பாடி இன்னும்பலர்.

ஐயா புலிப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50611

2 நாட்களுக்கு முன்னர் வந்த இந்த 11 நிமிடங்கள் 20 வினாடிகள் நீளமான ஒலி கோவையில் 6 நிமிடங்கள் 54 வினாடிகள் பின்னர் வருவனவற்றிற்கு யாரே புலம்பெயர்ந்த நாட்டில கலவை செய்து காணொளியாக்கியிருக்கினம்.

அதுவும் வழமைபோல் மக்களின் அவலங்கள் பற்றிய பகுதிகளைத் தவிர்த்து படி புலிகளின் பினாமிகள் புலிகள் வெளியிட்ட காணொளியாக :)

வன்னியின் இன்றைய நிலை - ஒலிவடிவம் என்று தலையங்கம் இட்டதாலோ என்னவோ 2 நாட்கள் கடந்த பின்னரும் பதிவைப் பார்த்தவர்கள் 634. பதில் எழுதியவர் 1.

மக்களுக்கு ஓர் அறிவிப்பு - வன்னியிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் என்று எழுதியதால் 6 மணத்தியாலங்களும் கடக்கவில்லை 3819 பார்வையாளர்கள் 10 பதில்கள்.

பூ சத்தியரமூர்த்தி ஒரு ஊடகர். ஊடக இல்லத்தில் பணிபுரிபவர். தமிழ்தேசிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ஊடகராக ஆய்வு நிகழ்வுகளில் கண்ணோட்ட நிகழ்வுகளில் பங்குபற்ற வரவழைக்கப்பட்டிருக்கிறார். அவர் குறைந்த பட்சம் தமிழ்தேசிய தொலைக்காட்சியில் கூட பணிபுரிபவர் அல்ல. ஆனால் விடுதலைப்புலிகளின் அறிவிப்பாக இங்கு பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இன்றைய அவலமான வரலாறு காணாத நெருக்கடியான நிலையில் கூட புலம்பெயர்ந்தவர்கள் இப்படி நடந்து கொள்வது எதிரிக்கு ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறது. அதாவது புலிகளை பலவீனமாக்கிவிட்டால் அல்லது முடிந்தால் அழித்து விட்டால் போராட்டம் முடிவிற்கு வந்து விடும். தமிழ்தேசியம் போராட்டம் இன அழிப்பு அடக்குமுறை என்ற கூச்சல்கள் எல்லாம் போலியானவை. இது வெறும் புலிகளையும் பிரபாகரனையும் மைய்யப்படுத்திய ஒரு cult.

அதனால் தான் எதிரிகள்:

புலிகளின் பலத்தை மைய்யப்படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள்

புலிகள் விரைவில் அழிக்கப்படப் போகிறார்கள் என்கிறார்கள்.

பிரபாகரனுக்கு கண்டம் என்கிறார்கள்.

புலிகளின் தலைவர்கள் ஓடித்தப்ப போகிறார்கள் என்கிறார்கள்.

பிரபாகரனுக்கு காயம் என்கிறார்கள் பல தரப்பட்ட வருத்தங்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஏன் என்றால் போராட்டத்திற்கு ஆதரவு அரசியல் தெளிவின் அடிப்படையில் இல்லை. புலிகளையும் பிரபாகரனையும் மய்யப்படுத்திய ஒரு cult என்று மதிப்பீடு செய்கிறார்கள். இதையே தமது தர்க்கத்தின் ஒரு அங்கமாக அரசியல் தீர்வை முன்வை என்று சொல்லும் 3 ஆம் தரப்பிற்கும் சொல்கிறார்கள். இதற்கு தேவை அரசியல் தீர்வல்ல cult இன் தாக்கத்தை இராணு பலத்தின் மூலம் இல்லாது செய்துவிட்டால் கூட்டம் கலைந்து சென்று விடும். போராட்டத்திற்கு ஆதரவு என்பது வேறு எந்த ஆழமான அடிப்படையிலும் இல்லை.

சிங்களம் மற்றும் வேறு சில சக்திகள் கொண்டிருக்கும் இந்த மதிப்பீடு சரி என்று மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாக புலம்பெயர்ந்தவர்களின் நடத்தை இருக்கிறது. இதனால் அவர்களிற்கு தமது மதிப்பீடு சரி என்ற உறுதி அதிகரிக்கிறது. சர்வதேச அளவிலும் அந்த நிலைப்பாட்டிற்கு எதிரப்பு குறைகிறது.

தலைமையை அழித்தால் பிரச்சனைக்கு தீர்வு வந்துவிடும் என்ற வாதத்திற்கு தொடர்ந்து வலுச் சேர்க்கப்படுகிறது. இதனால் தலைமை பாதுகாக்கப்படப் போவதில் மாறாக ஆபத்து தான் அதிகரிக்கிறது.

அதாவது எமது போராட்டத்தை சவாலாக பார்க்கும் எதிரிக்கு (அல்லது எதிரிகளிற்கு) போராட்டத்தின் பலவீனமாக தெரிவது

அரசியல் தெளிவுள்ள தேசிய விடுதலைப் போராட்டமாக இல்லாது புலிகளையும் பிரபாகரனையும் மய்யப்படுத்திய cult பாணியிலான நடத்தை. அந்த பலவீனத்தை மய்யப்படுத்தி பிரச்சாரங்களும் தந்திரோபாயங்களும் வகுக்கப்படுகிறது.

இறுதியாக புலம்பெயர்ந்தவர்கள் ஆரோக்கியமாக செய்ய வேண்டியது பற்றிய சிந்தனையோட்டமும் அற்று இருக்கிறார்கள்.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50611

2 நாட்களுக்கு முன்னர் வந்த இந்த 11 நிமிடங்கள் 20 வினாடிகள் நீளமாக வந்த இந்த ஒலி கோவையில் 6 நிமிடங்கள் 54 வினாடிகள் பின்னர் வருவனவற்றிற்கு யாரே புலம்பெயர்ந்த நாட்டில கலவை செய்து காணொளியாக்கியிருக்கினம்.

அதுவும் வழமைபோல் மக்களின் அவலங்கள் பற்றிய பகுதிகளைத் தவிர்த்து படி புலிகளின் பினாமிகள் புலிகள் வெளியிட்ட காணொளியாக <_<

இவர் பெரிய ஒரு அதிசயத்தை கன்டு பிடிச்சிட்டார் எல்லாரும் ஜோரா கை தட்டுங்கோ :lol: :lol:

அப்படி இவர கை தட்டி புகழ்ந்தா தான் அவர் அடுத்த முறையும் இப்படியான விசயங்கள இங்கை இணைச்சு காட்டுவார் :)

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பெரிய ஒரு அதிசயத்தை கன்டு பிடிச்சிட்டார் எல்லாரும் ஜோரா கை தட்டுங்கோ :lol::o

அப்படி இவர கை தட்டி புகழ்ந்தா தான் அவர் அடுத்த முறையும் இப்படியான விசயங்கள இங்கை இணைச்சு காட்டுவார் :lol:

இவருடைய நிலைப்பாடு என்பது...

1. விடுதலைப்புலிகளால எதுவும் எப்பவும் ஆகாது.

2. மனித உரிமைகளை மையப்படுத்திக் கொண்டு தான் தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் சர்வதேசத்தை அணுகி.. அதன் ஆதரவைப் பெற முடியும் என்பது.

3. புலம்பெயர்ந்த தமிழர்கள்.. விடுதலைப்புலிகள் பற்றி அக்கறை செய்வதிலும்.. மனித உரிமைகள் தொடர்பில் அக்கறை செய்வதே சிறப்பானது.. அவசியமானது..!

4. போரை நிறுத்த வேண்டின்.. சிறீலங்காவுக்கான வரிச்சலுகைகளை சரிக்க வேண்டும்.. அதன் பொருளாதாரத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்பதும் பொதுவான ஒரு நிலைப்பாடு.. அதையும் இவர் கொண்டிருக்கிறார்.

5. விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்களால்.. தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து கவனக் குறைவு ஏற்படுகிறது என்பது இவரின் நிலைப்பாடு.

என்னைப் பொறுத்தவரை.. மனித உரிமை விடயங்கள் மற்றும்.. சிறீலங்காவில் பொருண்மிய பலவீனப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பினும்.. விடுதலைப்புலிகள் தொடர்பில் இவர் வைத்து வரும் விமர்சனங்கள்.. மிக மோசமானவையாக இருக்கின்றன.

மேற்குலக.. அமெரிக்க வல்லாதிக்க சக்திகளும்.. விடுதலைப்புலிகளைத் தவிர்தது ஒரு அணுகுமுறையை தமிழர் பிரச்சனைக்குள் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நிற்கின்றனர். இவரிடமும் அதை வலியுறுத்தும் மறைமுகச் செயற்பாடு இருக்கிறது. :)

ஆனால் விடுதலைப்புலிகள் அற்று ஈழத்தமிழர்களுக்கு நியாயபூர்வமான ஒரு தீர்வு கிடைக்காது என்பது எமது தெளிவான நிலைப்பாடு. தற்கால சூழலில் விடுதலைப்புலிகளை தமிழர்கள் நாமும் அவர்களை தனிமைப்படுத்த முயலும் சக்திகளோடு கூட்டுக்காக தனிமைப்படுத்த முயலின் அது ஆபத்தானதாகவே அமையும். அந்த வகையில்.. எமது அணுகுமுறை என்பது.. விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்த விரும்பும் சக்திகளுக்கு மனித உரிமையை முன்னிலைப்படுத்தும் அதேவேளை.. பொதுவாக விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதையும் வலியுறுத்திக் கொண்டு செல்ல வேண்டும்.

விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்துவதை நோக்காகக் கொண்டே பயங்கரவாத முலாமும்.. தடைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதை நாம் சமாந்திர நகர்வுகளூடு முறியடிக்க வேண்டும். வெறுமனவே மனித உரிமைகளை மையப்படுத்திச் செல்லும்.. ஒரு வழி நகர்வுகள்.. ஆபத்தான சூழலுக்குள் எம்மைத் தள்ளிவிடும். அது விடுதலைப்புலிகளுக்கு எதிராக சமாந்திர நகர்வுகளைச் செய்யும் சக்திகளை பலப்படுத்தும்..!

எமது மக்கள் மனித உரிமைகளை மட்டும் இழக்கவில்லை. சகல அடிப்படை உரிமைகளையும் இழந்து நிற்கின்றனர். அவற்றை மீட்டுக் கொடுக்கக் கூடிய பலம்.. விடுதலைப்புலிகளிடம் மட்டுமே உண்டு. அதற்காகவே அவர்கள் போராடி.. தியாகங்களை செய்து.. கொண்டிருக்கின்றனர். அது இலகுவில் புறக்கணிக்கக் கூடியதும் அல்ல. அவர்களை தமிழ் மக்களிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தி அழிக்க அல்லது பலவீனப்படுத்தி.. தமிழ் மக்களின் மீது எவரும் ஒரு அரைகுறை தீர்வைத் திணிக்க நாம் இடமளிக்கவே கூடாது.

மனித உரிமைகளை தொடர்பில் பேசிக் கொண்டு.. எமது அடிப்படை உரிமைகளை தாரைவார்க்க நாம் தயாரில்லை என்பதையும் உலகுக்குச் சொல்ல வேண்டிய நேரமிது. அதில் விடுதலைப்புலிகள் இன்றிய.. உரிமை என்பது தமிழ் மக்களால் ஏற்புடையதன்று என்பதையும் தெளிவாகச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பமும்.. தற்போதே எழுந்துள்ளது..! <_<

Edited by nedukkalapoovan

">

"புலிகளின் பலத்தை மைய்யப்படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள்

புலிகள் விரைவில் அழிக்கப்படப் போகிறார்கள் என்கிறார்கள்.

பிரபாகரனுக்கு கண்டம் என்கிறார்கள்.

புலிகளின் தலைவர்கள் ஓடித்தப்ப போகிறார்கள் என்கிறார்கள்.

பிரபாகரனுக்கு காயம் என்கிறார்கள் பல தரப்பட்ட வருத்தங்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள்."

நம்பிக்கையான எந்த விடயத்தையும் கவனத்திலெடுக்காத இவர் ஒரு பூடகவியலாளர். தமிழ்த்தேசியத்திலும் தமிழ்த் தேசியத் தலைமையிலும் நம்பி;க்கையற்ற, மற்றவர்களையும் நம்பிக்கையிழக்கவைக்கும் கருத்துக்களையே மிக முக்கியமாக முன்னெடுக்கின்றார்.

அப்பப்போ மனித அவலம் என்று றிவிஸ் விடுவார். ஆனால் அனைத்துமே கபடத்தனமான செய்திகளாகவேயிருக்கும். இவரது செயற்பாட்டை இங்கு சிலர் விடயத்தை விளங்கிக் கொள்ளாமல் அங்கீகரிக்கின்றார்கள். அவரது இணைப்புகளையும் பதில்களையும் தொடர்ச்சியாக அவதானித்தால் அத்தனையும் ஈழத் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானனதே.

உதாரணமாக அவரது பதிலில் இருக்கும் ஒருபகுதியை இங்கு எடுத்துக்காட்டுகின்றேன். அரசு கூறுகிறது என்று சொல்லிக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்தை உங்களுள் விதைக்கிறார்.

அதனை விளங்கிக் கொண்டு பதில் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா

தங்கள் கருத்துடன் நான் உடன்படுகின்றேன்

ஓணாணின் விளையாட்டையும் இவர் இடைக்கிடை விடுவதால்..........???

எம்மில் பலர்.........????

மேலே இனைந்த வீடியோவை புலத்தில் தான் குரல்வடிவாம் கொடுத்து புலத்தில இருக்கிற மக்களை நம்பிக்ககயோடு வைத்து இருகிறோம் என்று மேலும் மேலும் பிரச்சனனயை உருவாக்கிரார்கள் போல் இருக்கு. என்னகு இதை மதியம் பார்த்த போது தோனியது ஆனால் குருக்ஸ் செல்லி விட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50611

2 நாட்களுக்கு முன்னர் வந்த இந்த 11 நிமிடங்கள் 20 வினாடிகள் நீளமான ஒலி கோவையில் 6 நிமிடங்கள் 54 வினாடிகள் பின்னர் வருவனவற்றிற்கு யாரே புலம்பெயர்ந்த நாட்டில கலவை செய்து காணொளியாக்கியிருக்கினம்.

அதுவும் வழமைபோல் மக்களின் அவலங்கள் பற்றிய பகுதிகளைத் தவிர்த்து படி புலிகளின் பினாமிகள் புலிகள் வெளியிட்ட காணொளியாக :)

வன்னியின் இன்றைய நிலை - ஒலிவடிவம் என்று தலையங்கம் இட்டதாலோ என்னவோ 2 நாட்கள் கடந்த பின்னரும் பதிவைப் பார்த்தவர்கள் 634. பதில் எழுதியவர் 1.

மக்களுக்கு ஓர் அறிவிப்பு - வன்னியிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் என்று எழுதியதால் 6 மணத்தியாலங்களும் கடக்கவில்லை 3819 பார்வையாளர்கள் 10 பதில்கள்.

பூ சத்தியரமூர்த்தி ஒரு ஊடகர். ஊடக இல்லத்தில் பணிபுரிபவர். தமிழ்தேசிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ஊடகராக ஆய்வு நிகழ்வுகளில் கண்ணோட்ட நிகழ்வுகளில் பங்குபற்ற வரவழைக்கப்பட்டிருக்கிறார். அவர் குறைந்த பட்சம் தமிழ்தேசிய தொலைக்காட்சியில் கூட பணிபுரிபவர் அல்ல. ஆனால் விடுதலைப்புலிகளின் அறிவிப்பாக இங்கு பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இன்றைய அவலமான வரலாறு காணாத நெருக்கடியான நிலையில் கூட புலம்பெயர்ந்தவர்கள் இப்படி நடந்து கொள்வது எதிரிக்கு ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறது. அதாவது புலிகளை பலவீனமாக்கிவிட்டால் அல்லது முடிந்தால் அழித்து விட்டால் போராட்டம் முடிவிற்கு வந்து விடும். தமிழ்தேசியம் போராட்டம் இன அழிப்பு அடக்குமுறை என்ற கூச்சல்கள் எல்லாம் போலியானவை. இது வெறும் புலிகளையும் பிரபாகரனையும் மைய்யப்படுத்திய ஒரு cult.

அதனால் தான் எதிரிகள்:

புலிகளின் பலத்தை மைய்யப்படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள்

புலிகள் விரைவில் அழிக்கப்படப் போகிறார்கள் என்கிறார்கள்.

பிரபாகரனுக்கு கண்டம் என்கிறார்கள்.

புலிகளின் தலைவர்கள் ஓடித்தப்ப போகிறார்கள் என்கிறார்கள்.

பிரபாகரனுக்கு காயம் என்கிறார்கள் பல தரப்பட்ட வருத்தங்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஏன் என்றால் போராட்டத்திற்கு ஆதரவு அரசியல் தெளிவின் அடிப்படையில் இல்லை. புலிகளையும் பிரபாகரனையும் மய்யப்படுத்திய ஒரு cult என்று மதிப்பீடு செய்கிறார்கள். இதையே தமது தர்க்கத்தின் ஒரு அங்கமாக அரசியல் தீர்வை முன்வை என்று சொல்லும் 3 ஆம் தரப்பிற்கும் சொல்கிறார்கள். இதற்கு தேவை அரசியல் தீர்வல்ல cult இன் தாக்கத்தை இராணு பலத்தின் மூலம் இல்லாது செய்துவிட்டால் கூட்டம் கலைந்து சென்று விடும். போராட்டத்திற்கு ஆதரவு என்பது வேறு எந்த ஆழமான அடிப்படையிலும் இல்லை.

சிங்களம் மற்றும் வேறு சில சக்திகள் கொண்டிருக்கும் இந்த மதிப்பீடு சரி என்று மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாக புலம்பெயர்ந்தவர்களின் நடத்தை இருக்கிறது. இதனால் அவர்களிற்கு தமது மதிப்பீடு சரி என்ற உறுதி அதிகரிக்கிறது. சர்வதேச அளவிலும் அந்த நிலைப்பாட்டிற்கு எதிரப்பு குறைகிறது.

தலைமையை அழித்தால் பிரச்சனைக்கு தீர்வு வந்துவிடும் என்ற வாதத்திற்கு தொடர்ந்து வலுச் சேர்க்கப்படுகிறது. இதனால் தலைமை பாதுகாக்கப்படப் போவதில் மாறாக ஆபத்து தான் அதிகரிக்கிறது.

அதாவது எமது போராட்டத்தை சவாலாக பார்க்கும் எதிரிக்கு (அல்லது எதிரிகளிற்கு) போராட்டத்தின் பலவீனமாக தெரிவது

அரசியல் தெளிவுள்ள தேசிய விடுதலைப் போராட்டமாக இல்லாது புலிகளையும் பிரபாகரனையும் மய்யப்படுத்திய cult பாணியிலான நடத்தை. அந்த பலவீனத்தை மய்யப்படுத்தி பிரச்சாரங்களும் தந்திரோபாயங்களும் வகுக்கப்படுகிறது.

இறுதியாக புலம்பெயர்ந்தவர்கள் ஆரோக்கியமாக செய்ய வேண்டியது பற்றிய சிந்தனையோட்டமும் அற்று இருக்கிறார்கள்.

யாழ்களத்தில பண்ணி எரு கொட்டிவிட்ட மாதிரி இருக்குதல்லோ?

நான் குறுக்ஸ் இதில் கூறிய அனேக கருத்துகளுடன் ஒத்து போகின்றேன்

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் புலிகளுக்கு கொடுத்து கொண்டு இருக்கும் வள ரீதியான ஆதரவு குறைவடைகின்ற ஒரு மோசமான நிலை இன்னமும் வரவில்லை, தவிர பெருமளவில் எம் மக்கள் கொல்லப் படுகையிலும், சிறுவர்கள் பலியிடப் படுகையிலும் எமக்குள் எழும் ஆத்திரம் புலிகளுக்கு வள ரீதியான ஆதரவினை மேலும் மேலும் கொடுக்கின்ற மனநிலையினைத்தான் ஏற்படுத்தும்

ஆனால் அதற்கான முன் நிபந்தனையாக புலம் பெயர் சமூகம் போராளிகளிடம் வைப்பது இராணுவ வெற்றிகளும் அதனை ஒட்டிய நில மீட்புகளும் தான். இராணுவ ரீதியில் மிகவும் இக்கட்டான, பலவீனமான ஒரு நிலைக்கு புலிகள் போய்விட்டால் இந்த வள ரீதியான ஆதரவு மிகவும் குறைந்து போய்விடும் மிக துர்பாக்கியமான யதார்த்தமே எம் முன் இருக்கின்றது.

ஆனால் அப்படி ஒரு மனநிலையினை வளர விட வேண்டும் என்கின்றீர்களா?

மேற்குலகம் நம்புவது போன்று புலிகள் இராணுவ ரீதியில் தோற்றாலும், அல்லது இந்தியா விரும்புவது போன்று இப்போது இருக்கும் அதன் புலிகளின் தலைமை அழிக்கப் பட்டாலும் கூட எம்மால், புலம் பெயர்ந்த சமூகத்தால் எம் போராட்டத்திற்கான வேள்வியை அணைய விடாமல் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றதல்லவா?

நாம் ஒரு தேசிய இனம். எமது தாயகம் என்று அடையாளப் படுத்தக் கூடிய பாரம் பரிய நிலப் பரப்பும், அதற்குரிய மொழியும், தனித்துவ கலாச்சார அடையாளங்களும் கொண்டு, சுயநிர்ணய உரிமை கொண்ட தேசிய இனம் (ஐ.நா வின் வரைவிலக்கணத்திற்குட்பட்ட) என்பதனை உற்று உணர்ந்தே எமது சுதந்திரத்திற்கான அவா பெருக வேண்டும்.

இன்று மனித அவலம் பாரியளவில் இருக்கும் போது அதனை முன்னிலைப் படுத்தி நாம் செய்ய வேண்டியது 'தம் தாயக நிலப் பரப்பில் வாழ உரிமை உள்ள மக்கள் மீது' இலங்கை ஆக்கிரமிப்பு அரசு நடாத்தும் கொடிய அழிப்பை முன் கொண்டு வருவதே. புலிகள் இந்த தாயக கோட்பாட்டின் படி, தமக்கான சுயநிர்ணய கோட்பாடு கேட்டு போராடுகின்றார்கள் என்பதே. அவ் கோட்பாட்டை ஏற்க விரும்ப்பாத இலங்கை அரசு புலிகளையும் அவ் தாயக மண்ணில் வாழும் மக்களையும் அழிக்கின்றார்கள் என்பதனையே நாம் உலகுக்கு மீண்டும் மீண்டும் உரைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழுமையான காணொளியை இங்கு இணைத்திருக்கிறேன். சத்தியமூர்த்தி ஒரு ஊடகவியலாளர். ஐரோப்பிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை அங்கிருந்து தயாரிக்கிறார். அதே நேரம் விடுதலைபுலிகளின் ஆதரவு இன்றி இச்செய்தியினை அதற்குரிய வழிமுறைகளில் அனுப்பவும் முடியாது. எதுவோ.. இது களத்தில் உள்ள ஒரு ஊடகவியலாளரின் செய்தி..

இதனை மக்களுக்கு புலிகள் அறிவிப்பு என சொல்லமுடியாது. ஆனால் நிலவரம் என சொல்லமுடியும்.

http://blog.sajeek.com/?p=493

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுவும் வழமைபோல் மக்களின் அவலங்கள் பற்றிய பகுதிகளைத் தவிர்த்து படி புலிகளின் பினாமிகள் புலிகள் வெளியிட்ட காணொளியாக//

குறுக்கை வாசித்த பிறகுதான் ஒலிக்கு காணொளி கலந்திருக்க வாய்ப்புண்டு என நினைக்கின்றேன். ஆனால் மக்கள் அவலங்களையும் இணைத்துத்தான் கலந்திருக்கிறார்கள். தேவையானோர் தமக்கு தேவைப்படுவதை மட்டும் வெட்டியெடுத்து கொள்கிறார்கள் :)

நான் குறுக்ஸ் இதில் கூறிய அனேக கருத்துகளுடன் ஒத்து போகின்றேன்

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் புலிகளுக்கு கொடுத்து கொண்டு இருக்கும் வள ரீதியான ஆதரவு குறைவடைகின்ற ஒரு மோசமான நிலை இன்னமும் வரவில்லை, தவிர பெருமளவில் எம் மக்கள் கொல்லப் படுகையிலும், சிறுவர்கள் பலியிடப் படுகையிலும் எமக்குள் எழும் ஆத்திரம் புலிகளுக்கு வள ரீதியான ஆதரவினை மேலும் மேலும் கொடுக்கின்ற மனநிலையினைத்தான் ஏற்படுத்தும்

ஆனால் அதற்கான முன் நிபந்தனையாக புலம் பெயர் சமூகம் போராளிகளிடம் வைப்பது இராணுவ வெற்றிகளும் அதனை ஒட்டிய நில மீட்புகளும் தான். இராணுவ ரீதியில் மிகவும் இக்கட்டான, பலவீனமான ஒரு நிலைக்கு புலிகள் போய்விட்டால் இந்த வள ரீதியான ஆதரவு மிகவும் குறைந்து போய்விடும் மிக துர்பாக்கியமான யதார்த்தமே எம் முன் இருக்கின்றது.

ஆனால் அப்படி ஒரு மனநிலையினை வளர விட வேண்டும் என்கின்றீர்களா?

அரசியல் தெளிவு இருந்தால் அப்படி ஒரு மனநிலை உருவாகி வளராது. அந்தப் பலவீனம் திருத்தப்படாவிட்டால் அது எதிரியால் உச்சமாகப் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

மேற்குலகம் நம்புவது போன்று புலிகள் இராணுவ ரீதியில் தோற்றாலும், அல்லது இந்தியா விரும்புவது போன்று இப்போது இருக்கும் அதன் புலிகளின் தலைமை அழிக்கப் பட்டாலும் கூட எம்மால், புலம் பெயர்ந்த சமூகத்தால் எம் போராட்டத்திற்கான வேள்வியை அணைய விடாமல் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றதல்லவா?

எங்களின் நடத்தை எங்களுக்கே பிடிக்காது அவ்வப் போது knee jerk reaction ஆக உப்பிடி உச்சரித்தால் போதாது. எமது mood swings, செயற்பாடுகள், செயற்பாடு இன்மை என்பவை எல்லாமே மேற்குறிப்பிட்டதரப்புகளால் அவதானிக்கப்படுகிறது. அவர்களிற்கு அதில் இருந்து தெரியும் அவ்வப் போது உச்சரிப்பது என்ன உள்ளே நம்புவது என்ன என்று.

நாம் ஒரு தேசிய இனம். எமது தாயகம் என்று அடையாளப் படுத்தக் கூடிய பாரம் பரிய நிலப் பரப்பும், அதற்குரிய மொழியும், தனித்துவ கலாச்சார அடையாளங்களும் கொண்டு, சுயநிர்ணய உரிமை கொண்ட தேசிய இனம் (ஐ.நா வின் வரைவிலக்கணத்திற்குட்பட்ட) என்பதனை உற்று உணர்ந்தே எமது சுதந்திரத்திற்கான அவா பெருக வேண்டும்.

இவை உட்பட எமது இனம் நவீன உலகிற்கு செய்த செய்கின்ற பங்களிப்புகள் பற்றி பரப்புரை செய்யப்பட வேண்டும். எமது இனத்தில் ஒரு பெருமை நம்பிக்கை பரந்த அளவில் கட்டியெழுப்பப்பட வேண்டும். எல்லாத்தரப்பையும் உள்வாங்கிய ஒரு modern identity தேவை. இதன் மூலம் தான் பரந்த அளவில் தமிழ்தேசியத்தில் ஆர்வமும் அதன் மூலம் பலமும் திரட்டப்படலாம்.

இன்று மனித அவலம் பாரியளவில் இருக்கும் போது அதனை முன்னிலைப் படுத்தி நாம் செய்ய வேண்டியது 'தம் தாயக நிலப் பரப்பில் வாழ உரிமை உள்ள மக்கள் மீது' இலங்கை ஆக்கிரமிப்பு அரசு நடாத்தும் கொடிய அழிப்பை முன் கொண்டு வருவதே. புலிகள் இந்த தாயக கோட்பாட்டின் படி, தமக்கான சுயநிர்ணய கோட்பாடு கேட்டு போராடுகின்றார்கள் என்பதே. அவ் கோட்பாட்டை ஏற்க விரும்ப்பாத இலங்கை அரசு புலிகளையும் அவ் தாயக மண்ணில் வாழும் மக்களையும் அழிக்கின்றார்கள் என்பதனையே நாம் உலகுக்கு மீண்டும் மீண்டும் உரைக்க வேண்டும்.

நிச்சையமாக செய்யுங்கள். புலிகளை பலமாக காட்ட பிரச்சாரம் செய்வதாக எண்ணி அவர்களிற்கு agressor, antagonists

image அய் கொடுத்து விடாதீர்கள்.

மேற்குலகு புலிகளையும் தமிழர்களையும் அழிக்குது அழிக்குது என்று சொல்லி சொல்லி எமக்கு நாமே வேலி போட்டுக் கொள்கிறோம். மேற்குலகோடு உறவை வளர்ப்பதற்கான சிந்தனைகளை தரமுடியாத மனநிலையை எம்மை அறியாது இப்படியான கருத்துக்கள் எமக்குள் உருவாக்கிறது. எம்மை அழிக்க நிக்கும் உலகோடு எப்படி எமது தரப்பு நியாயத்தை சொல்ல வேண்டும் அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எண்டு சிந்திக்க செயற்பட தூண்டும்?

அடுத்தாக நாம் இந்தக் கோவத்தில் மேற்குலகை எதிரியாக பார்க்கிறமா என்ற சந்தேகத்தை மேற்குலகிற்கு கொடுப்பது பாதகமான விடையம். இது புலம்பெயர்ந்தவர்கள் பற்றி பல நாடுகள் கொண்டிருக்கும் சந்தேகம். அதாவது தாயகத்தில் நிலமை எல்லை மீறி போனால் இங்குள்ள தமிழர்களால் தமது நாட்டிற்கு அதன் குடிமக்களிற்கு இயல்பு வாழ்க்கைக்கு எப்படி ஆபத்துகளை கொண்டு வரும் என்பது. இந்த சந்தேகம் குளப்பம் கலந்த பயம் என்பது எமக்கு ஒரு positive ஆன leverage அல்ல. இப்படி ஒரு பயத்திற்கு அடி பணிந்து அவர்கள் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளப் போவதில்லை அல்லது சிறீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மேலே இனைந்த வீடியோவை புலத்தில் தான் குரல்வடிவாம் கொடுத்து புலத்தில இருக்கிற மக்களை நம்பிக்ககயோடு வைத்து இருகிறோம் என்று மேலும் மேலும் பிரச்சனனயை உருவாக்கிரார்கள் போல் இருக்கு. என்னகு இதை மதியம் பார்த்த போது தோனியது ஆனால் குருக்ஸ் செல்லி விட்டார்.
  • கருத்துக்கள உறவுகள்

"The UN calls on the Tamil Tigers to meet their responsibilities and immediately permit all UN staff and dependents to freely move from this area," a statement said.

"The denial of safe passage is a clear abrogation of their obligations under international humanitarian law."

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7845311.stm

ஐக்கிய நாடுகள் சபை இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. இது சிறீலங்கா அரசு முன்னெடுக்கும் பிரச்சாரத்தை ஒட்டியதாக இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையே.. வன்னியில் இருக்க அனுமதியின்றி.. மக்கள் கதறி அழ அழ அவர்களை கைவிட்டுவிட்டு.. இருக்க முடியாமல்.. ஓடிவிட்டு.. இன்று இவ்வாறு ஒரு அறிக்கை விடுகிறது.

இந்த ஐநா சபை.. செப் 11 தாக்குதலுக்குப் பின்னர்.. அமெரிக்காவில் பாதுகாப்பில்லை என்று அமெரிக்க மக்களை.. அந்த நாட்டை விட்டு வெளியேறக் கேட்குமா..??!

பலஸ்தீன மக்களுக்கு பலஸ்தீனத்தில் பாதுகாப்பில்லை.. கமாஸை அழிப்பதே பிரதானம் என்று சொல்லி.. பலஸ்தீன மக்களை காசாவை விட்டு வெளியேறச் சொல்லுமா இந்த ஐக்கிய நாடுகள் சபை.

ஏன் நாம் ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும் இவ்வாறான பக்கச்சார்ப்பான அறிக்கைகளில் உள்ள பக்கச்சார்புத்தன்மைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டாமல் மெளனம் காக்கிறோம்.

அரச கட்டுப்பாட்டுப்பகுதிகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பாதுகாப்பாகத் தெரியலாம். ஆனால் அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளில் கடத்தல்கள்.. கொலைகள்... கைதுகள் என்பன இடம்பெறும் நிலையில்.. ஐக்கிய நாடுகள் சபை.. வன்னி மக்களுக்கு காட்டும் பாதுகாப்பான பிரதேசம் எது.. அதனை எவ்வாறு அது வரையறுக்கிறது.. என்பன போன்ற கேள்விகளை... அதனை நோக்கி எழுப்ப வேண்டிய நேரத்தில்.. நாம் என்ன செய்கிறோம்...???!

இப்படியான அறிக்கைகள்.. எமது மக்களின் படுகொலைகளை நியாயப்படுத்த முயலும் ஐநாவின் செயலாகவே நோக்கப்பட வேண்டும். ஐநாவை வெளியேற வேண்டாம் என்று தடுத்தும் வெளியேறி விட்டு.. இப்போ அவர்கள் அரசின் இராணுவ நடவடிக்கைக்காக்க.. மக்களை ஒட்டுமொத்தமாக அவர்களின் வாழ்விடங்களை விட்டு.. அகலக் கேட்பது எந்த.. யுத்த விதிக்கமைய நடக்கிறது..???! இதனை ஐநா விளக்க வேண்டும். அதுமட்டுமன்றி இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்

செல்லும் மக்களுக்கு யார் பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது... ஒருவேளை புலிகள் இராணுவ இலக்குகளை தாக்கின்.. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களை ஐநா புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் அனுப்பக் கேட்குமா..??!

இது ஐநாவின் ஒருதலைப்பட்டசமான, பக்கச்சார்பான அறிக்கைதானே.

இப்படி அரச கட்டுப்பாட்டுக்குள் மக்களை இழுக்க அரசுக்கு ஒத்தூதும் ஐநா.. மட்டக்களப்பு.. யாழ்ப்பாணம்.. வவுனியா.. மன்னார்..திருமலை என்று நடக்கும் படுகொலைகளுக்கு பொறுப்பேற்குமா..??! அப்படி ஒரு அறிக்கையை அது விடுமா..??! <_<:lol:

ஏன் நாம் ஐநாவின் அறிக்கைகள் இப்படி வெளிவர இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டு.. எமது மக்களின் அவலங்கள்.. இவ்வாறு மூடிமறைக்கப்பட உதவுகின்றோம். எமக்குள் நாம் துயரைப் பகிர்ந்து கொள்வதால் மட்டும்.. எமது மக்களின் துயர் வெளிப்பட்டிடுமா..???! :):lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.