Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு என்பது கொஞ்சம் இருந்தால் நல்லா இருக்கும்.

அழிஞ்சது யார் என்று பார்த்தால் தெரியும். அப்படியே ராணுவம் இதனைச்செய்திருந்தாலும் புலிகள் எதற்கு வேறு இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டும். wait & see...

என்னத்தப் பொறுத்திருந்து பார்க்கிறது.. இந்த வருடத்தில் மட்டும்.. 250 வரை தமிழ் மக்கள் கொல்லப்பட்டு.. 2000 க்கும் மேற்பட்டோர் காயப்பட்டும்.. இருக்கும் நிலையில்.. எதனைப் பார்க்கிறது. அந்த மக்களின் வலிதான் முதமை பெறுகிறது..! போராளிகளின் இழப்புத்தான் முதன்மை பெறுகிறது..!

  • Replies 105
  • Views 61.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தப் பொறுத்திருந்து பார்க்கிறது.. இந்த வருடத்தில் மட்டும்.. 250 வரை தமிழ் மக்கள் கொல்லப்பட்டு.. 2000 க்கும் மேற்பட்டோர் காயப்பட்டும்.. இருக்கும் நிலையில்.. எதனைப் பார்க்கிறது. அந்த மக்களின் வலிதான் முதமை பெறுகிறது..! போராளிகளின் இழப்புத்தான் முதன்மை பெறுகிறது..!

எதுக்கண்ணை இதுக்கு முன்னைய வருடங்களையும் பட்டியல் போட மறந்திட்டியள்?

ஒவ்வொரு நாளும் அங்க சாப்பிடி சாப்பாடு இல்லாம இருக்கினம். ஒருக்கா நீங்க பட்டினி இருந்து உங்கட சாப்பாட அனுப்புங்களேன். அங்க படிக்க கணணி இல்லாம் நிறைய மாணவர்கள் திண்டாடினம். உங்கடைய குடுத்து விடுங்கோவன்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தப் பொறுத்திருந்து பார்க்கிறது.. இந்த வருடத்தில் மட்டும்.. 250 வரை தமிழ் மக்கள் கொல்லப்பட்டு.. 2000 க்கும் மேற்பட்டோர் காயப்பட்டும்.. இருக்கும் நிலையில்.. எதனைப் பார்க்கிறது. அந்த மக்களின் வலிதான் முதமை பெறுகிறது..! போராளிகளின் இழப்புத்தான் முதன்மை பெறுகிறது..!

மிகச்சரியான கருத்துக்கள்.. ஒவ்வொரு நாளும் எத்தினை பேர் செத்துகொண்டிருகேகை சும்மா இருந்த 'மக்கள்' எல்லாம் இப்ப போன் போட்டு அரசியல் ஆய்வுகள் செயினம்..

இராணுவ இனையதளத்தில் வந்த செய்தி..

2009-01-24 23:00:22

MULLAITTIVU: LTTE terrorists who are beaten up by the Armed Forces in every battle and cornered to a small part in MULLAITTIVU area are now doing everything to stop the advance of the Army further deep into MULLAITTIVU. In such an attempt on Saturday (24) afternoon, the terrorists blasted the KALMADUKULAM tank bund in VISUAMADU area.

As a result of this terrorist act of the LTTE a section of PARANTHAN-POONERYNE A-35 main road was flooded causing severe hardships to the civilian forcefully kept by the terrorists in the area.

In the meantime, small groups of terrorists onboard five small boats to on abortive attempt to infiltrate the area held by 574 brigade troops along the flooded cannels. However troops opened fire and completely destroyed three of the boats and partially damaged the other two.

It is believed that many terrorists were killed in the incident. Remaining Tigers had managed to escape. Search operation in the area were commenced search operation in the area were commenced by the troops.

http://www.army.lk/morenews.php?id=19815

Edited by Yaalpaanathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்மடுக்குளத்தை விடுதலைப்புலிகள் தகர்த்ததாக இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கல்மடுக்குளம் என்ற நீர்ப்பாசனக் குளத்தின் குளக்கட்டினை விடுதலைப் புலிகள் இன்று குண்டு வைத்துத் தகர்த்திருப்பதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விசுவமடு பகுதியை நோக்கி பல முனைகளில் இராணுவம் மேற்கொண்டுள்ள முன்னேற்ற முயற்சிகளைத் தடுப்பதற்காகவே விடுதலைப் புலிகள் இந்த குளக்கட்டினை சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்துத் தகர்த்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சுமத்தியிருக்கின்றது.

ஏ-35 எனப்படும் பரந்தன் – முல்லைத்தீவு வீதியின் ஒரு பகுதியையும், இராமநாதபுரம், தர்மபுரம் மற்றும் விசுவமடு பகுதிகளையும் வெள்ளத்தில் மூழ்கச் செய்வதற்காகவே இந்த குளக்கட்டினை விடுதலைப் புலிகள் தகர்த்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

ஏ-35 வீதியின் தென்பகுதியில் உள்ள கல்மடுக்குளத்தின் வடகிழக்கிலும், நெத்தலியாறு பகுதியிலும் நேற்று வெள்ளிக்கிழமை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும் இதன்போது விடுதலைப்புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டு அந்தப் பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

சுமார் நாலரை சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட கல்மடுக்குளத்தின் கீழ் 500 ஏக்கர் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும், விசுவமடு தேராவில் என்னுமிடத்திலும், உடையார்கட்டு பாடசாலை அமைந்துள்ள பகுதியிலும் இடம்பெற்ற எறிகணை தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 74 பேர் காயமடைந்திருப்பதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடையார்கட்டு மகாவித்தியாலய கட்டிடத்தி்ல் அமைந்துள்ள மருந்தகத்திலும், அதனை அண்டிய பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்த எறிகணைகளினால் 8 பேர் பலியாகியிருப்பதாகவும், 64 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.,

விடிந்ததும் பட்டாசு கொளுத்த வேணும், இனிப்பு வழங்க வேணும்

செய்தியில் ஏதேனும் பிழை இருந்தால்....?

துன்பப்படும் மக்களை நாம் அவமானப்படுத்தியது போல் ஆகிவிடும்.

தயவுசெய்து உண்மை நிலவரத்தை தெரியப்படுத்துங்கள்

நன்றி பல.,

பட்டாசு வெடித்துத் பரவசமாகிப் பகைவன் போல் நாமும் இழிவகை செய்யோம் பெரியார் குயில். பொறுத்திருங்கள். :rolleyes:

எனக்கெண்டா பாதுக்காப்பு இணையத்திலை போட்டிருக்கிற படத்திலை வாற வெள்ளம் பெரிய சுனாமி போல தெரிய இல்லை. அதுக்கை வாகனங்கள் எல்லாம் ஒடி திரியுது. .......சில நேரம் குருவி படத்திலை வாறது மாதிரி வெள்ளத்தை சாட்டி பேய் பிசாசு ஏதும் அடிச்சுதோ??? :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன..வர வர யாழில பக்கங்கள் குறைச்ஞ்சு கொண்டு போகுது??

அன்பான உறவுகளுக்கு,

மோதல்கள் நடைபெறுவதாக அறியப்படுகிற செய்தி ஓரளவு உறுதிப்படுத்தப்படக் கூடியதாக இருப்பினும், மேலதிக விபரங்களோ அல்லது இழப்பு விபரங்களோ எதுவும் நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறப்படவில்லை. "கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்" என்கிற இந்தத் தலைப்பின் கீழ் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகவோ, வாய்வழி பகிரப்பட்ட தகவல்களாகவோ, சில தமிழ் ஊடகங்களின் வழி வெளிவந்த உறுதிப்படுத்தப்படாத செய்திகளாகவோ தான் இருக்கின்றன. இவற்றின் உண்மைத்தன்மையை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஊரில் தொலைத் தொடர்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் உறுதியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது. ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கொழும்புத் தொடர்புகளினூடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.

அது ஒருபுறமிருக்க...

1. உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதையோ, எமது கற்பனைக்கு செய்திகளைப் புனைவதையோ தவிர்ப்பது நல்லது. நம்பத்தகுந்த வட்டங்களிலிருந்தோ, உரியவர்களிடமிருந்தோ உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வரும்வரை பொறுமை காப்பதே சிறந்தது. எமது கற்பனை வளத்துக் கேற்றாற்போல் செய்திகளைத் திரித்தும், மெருகேற்றியும் எழுதி - மக்களை உச்சத்துக்குக் கொண்டுபோய் - இறுதியில் ஏமாற்றத்துள் தள்ளுவதனூடாக - போராளிகள் மீது வெறுப்புணர்வையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்த வழிகோலாதீர்கள். இதுபோன்ற செயற்பாடுகள் உளவியல் ரீதியாக மக்களைப் பாதிக்கும் - அது விடுதலைப் போராட்டத்தையும் பாதிக்கும்.

2. போர்க்களச் செய்திகள் எமக்கு சாதகமாக இருக்கிறபோது நாம் மகிழ்ச்சியடைவது இயல்பானது தான். அதை எம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. வெற்றி தோல்வி நிரந்தரமில்லை. இன்று எம் பக்கம் இருக்கிற வெற்றி, நாளை எதிரியின் பக்கம் போகலாம். ஆனால், வெற்றி வருகிறபோது கொண்டாடுவதும், தோல்வி வருகிறபோது சோர்ந்துபோவதுமாக நாம் இருப்பதை மாற்றியாக வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் எமது பலவீனம் அதுதான். இன்றைய சூழல் தாயக மக்களின் அவலங்களால் நிறைந்தது. அந்த மக்களின் அவலங்களை சர்வதேச சமூகத்தின் முன்னே கொண்டுசெல்வது தான் எமது பணியாக இருக்கவேண்டும். அதனை முன்னிறுத்தி புலம்பெயர்ந்த நாடுகளில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதே எமது தேவை. தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்பு யுத்தத்தை அம்பலப்படுத்தி, சர்வதேசத்தின் தமிழர்கள் மீதான அணுகுமுறையை மாற்றவைக்கும் - அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொண்டாக வேண்டும். போர்க்கள வெற்றிச் செய்திகளைப் பேசுவதற்கு நாம் கொடுக்கிற முக்கியத்துவத்தை - ஏன் மக்களின் அவலங்களைப் பற்றிப் பேசுவதற்கு கொடுக்கிறோமில்லை? 1000 இராணுவம் இறந்ததாக செய்திகேட்டு மகிழ்கிற நாம் ஒன்றை மட்டும் மறந்துவிட்டோம். நாளொன்றுக்கு 10 மக்கள் என்று இதுவரை இறந்த மக்கள் தொகை பற்றி யோசித்திருக்கிறோமா? மக்களின் சாவு தொடர்பாக வருகிற செய்திகளைப் வாசிப்பதையே நாம் தவிர்த்து வருகிறோம் என்பது தான் உண்மை.

எனவே, தயவுசெய்து மக்களின் அவலங்களை வெளியுலகுக்குக் கொண்டுசெல்ல ஆவன செய்யுங்கள். அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். போர்களச் சூழல் எமக்கு சாதகமாக அமைகிறபோது, அதைத் தக்கவைப்பதற்கான அனைத்துப் பங்களிப்புகளும் புலம்பெயர்ந்த எமது கைகளிலேயே உள்ளன என்பதை உணர்ந்து செயற்படுவோம். இனியாவது - செய்திகளையும் கருத்துக்களையும் பொறுப்புணர்வுடன் எழுதுமாறு/இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் உணர்வுகளை நாம் மதிக்கிறோம். அதே நேரத்தில் உண்மைகளை உள்வாங்கி நீங்கள் செயற்படவேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

நன்றி வலைஞன் சார்

என்ன..வர வர யாழில பக்கங்கள் குறைச்ஞ்சு கொண்டு போகுது??

பொயான பக்கங்கள் அழிக்க படுகின்றன ஆனால் தமிழரின் உண்மையான பக்கம் இந்த இனைப்பில் இருக்கின்றன

தயவு செய்து ஒருமுறை பாருங்கள்:http://www.puthinam.com/full.php?2b24OOA4b3dC6Dp34d01VoK2a03O4AKb4d24SmA4e0dM0Mtjce0cf1e02cce4cYU3e

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞன் அவர்களுக்கு நன்றி.

உண்மைதான் !

ஒரு தாக்குதல் அல்லது தடுப்பு நடவடிக்கை என்பது போராட்டத்தில் ஓர் அங்கம். அதனையே முழு விடுதலையாகக் கொள்ள முடியாது. ஆனால் எதிரியின் தந்திரோபாயங்கள் அல்லது நகர்வுகள் முறியடிக்கப்பட்டுள்ளதாகப் பார்க்கலாம். ஆனால் இதன் சரியான தன்மை அறியாது வரும் செய்திகள் எதிர்வினையான கருத்தையும் , ஒரு தேவையற்ற சோர்வையும் ஏற்படுத்தலாம்.

மீண்டும் நன்றிகள். விழிப்புடன் இருப்போம் ! விடுதலையை விரைவு படுத்த உழைப்போம் !

Edited by nochchi

வணக்கம்.,

விடிந்ததும் பட்டாசு கொளுத்த வேணும், இனிப்பு வழங்க வேணும்

செய்தியில் ஏதேனும் பிழை இருந்தால்....?

துன்பப்படும் மக்களை நாம் அவமானப்படுத்தியது போல் ஆகிவிடும்.

தயவுசெய்து உண்மை நிலவரத்தை தெரியப்படுத்துங்கள்

நன்றி பல.,

என்ன செய்கிறோம் எப்படி செய்கிறோம் எண்று சொல்லும் நிலையில் யாரும் இல்லை குயில்... இது உங்களுக்கு புரிய வேண்டும்.... இது ஒண்றும் போட்டி இல்லை , கைதட்டி ஆரவாரிக்க... இன்னல் படும் மக்களின் வேட்க்கை.... மக்கள் இன்னலில் இருந்து முழுவதுமாக மீண்டார்கள் எனும் செய்தி வரும் போது முடிவெடுப்போம்... அந்த நன்னாளுக்காக காத்து இருப்பது தான் நல்லது...

இவ்வளவு காலம் காத்து இருந்த உங்களினால் முடியாததும் அல்ல..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான உறவுகளுக்கு,

மோதல்கள் நடைபெறுவதாக அறியப்படுகிற செய்தி ஓரளவு உறுதிப்படுத்தப்படக் கூடியதாக இருப்பினும், மேலதிக விபரங்களோ அல்லது இழப்பு விபரங்களோ எதுவும் நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறப்படவில்லை. "கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்" என்கிற இந்தத் தலைப்பின் கீழ் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகவோ, வாய்வழி பகிரப்பட்ட தகவல்களாகவோ, சில தமிழ் ஊடகங்களின் வழி வெளிவந்த உறுதிப்படுத்தப்படாத செய்திகளாகவோ தான் இருக்கின்றன. இவற்றின் உண்மைத்தன்மையை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஊரில் தொலைத் தொடர்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் உறுதியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது. ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கொழும்புத் தொடர்புகளினூடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.

அது ஒருபுறமிருக்க...

1. உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதையோ, எமது கற்பனைக்கு செய்திகளைப் புனைவதையோ தவிர்ப்பது நல்லது. நம்பத்தகுந்த வட்டங்களிலிருந்தோ, உரியவர்களிடமிருந்தோ உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வரும்வரை பொறுமை காப்பதே சிறந்தது. எமது கற்பனை வளத்துக் கேற்றாற்போல் செய்திகளைத் திரித்தும், மெருகேற்றியும் எழுதி - மக்களை உச்சத்துக்குக் கொண்டுபோய் - இறுதியில் ஏமாற்றத்துள் தள்ளுவதனூடாக - போராளிகள் மீது வெறுப்புணர்வையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்த வழிகோலாதீர்கள். இதுபோன்ற செயற்பாடுகள் உளவியல் ரீதியாக மக்களைப் பாதிக்கும் - அது விடுதலைப் போராட்டத்தையும் பாதிக்கும்.

2. போர்க்களச் செய்திகள் எமக்கு சாதகமாக இருக்கிறபோது நாம் மகிழ்ச்சியடைவது இயல்பானது தான். அதை எம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. வெற்றி தோல்வி நிரந்தரமில்லை. இன்று எம் பக்கம் இருக்கிற வெற்றி, நாளை எதிரியின் பக்கம் போகலாம். ஆனால், வெற்றி வருகிறபோது கொண்டாடுவதும், தோல்வி வருகிறபோது சோர்ந்துபோவதுமாக நாம் இருப்பதை மாற்றியாக வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் எமது பலவீனம் அதுதான். இன்றைய சூழல் தாயக மக்களின் அவலங்களால் நிறைந்தது. அந்த மக்களின் அவலங்களை சர்வதேச சமூகத்தின் முன்னே கொண்டுசெல்வது தான் எமது பணியாக இருக்கவேண்டும். அதனை முன்னிறுத்தி புலம்பெயர்ந்த நாடுகளில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதே எமது தேவை. தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்பு யுத்தத்தை அம்பலப்படுத்தி, சர்வதேசத்தின் தமிழர்கள் மீதான அணுகுமுறையை மாற்றவைக்கும் - அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொண்டாக வேண்டும். போர்க்கள வெற்றிச் செய்திகளைப் பேசுவதற்கு நாம் கொடுக்கிற முக்கியத்துவத்தை - ஏன் மக்களின் அவலங்களைப் பற்றிப் பேசுவதற்கு கொடுக்கிறோமில்லை? 1000 இராணுவம் இறந்ததாக செய்திகேட்டு மகிழ்கிற நாம் ஒன்றை மட்டும் மறந்துவிட்டோம். நாளொன்றுக்கு 10 மக்கள் என்று இதுவரை இறந்த மக்கள் தொகை பற்றி யோசித்திருக்கிறோமா? மக்களின் சாவு தொடர்பாக வருகிற செய்திகளைப் வாசிப்பதையே நாம் தவிர்த்து வருகிறோம் என்பது தான் உண்மை.

எனவே, தயவுசெய்து மக்களின் அவலங்களை வெளியுலகுக்குக் கொண்டுசெல்ல ஆவன செய்யுங்கள். அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். போர்களச் சூழல் எமக்கு சாதகமாக அமைகிறபோது, அதைத் தக்கவைப்பதற்கான அனைத்துப் பங்களிப்புகளும் புலம்பெயர்ந்த எமது கைகளிலேயே உள்ளன என்பதை உணர்ந்து செயற்படுவோம். இனியாவது - செய்திகளையும் கருத்துக்களையும் பொறுப்புணர்வுடன் எழுதுமாறு/இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் உணர்வுகளை நாம் மதிக்கிறோம். அதே நேரத்தில் உண்மைகளை உள்வாங்கி நீங்கள் செயற்படவேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

வலைஞன் அவர்களுக்கு நன்றி.

உண்மைதான் !

ஒரு தாக்குதல் அல்லது தடுப்பு நடவடிக்கை என்பது போராட்டத்தில் ஓர் அங்கம். அதனையே முழு விடுதலையாகக் கொள்ள முடியாது. ஆனால் எதிரியின் தந்திரோபாயங்கள் அல்லது நகர்வுகள் முறியடிக்கப்பட்டுள்ளதாகப் பார்க்கலாம். ஆனால் இதன் சரியான தன்மை அறியாது வரும் செய்திகள் எதிர்வினையான கருத்தையும் , ஒரு தேவையற்ற சோர்வையும் ஏற்படுத்தலாம்.

மீண்டும் நன்றிகள். விழிப்புடன் இருப்போம் ! விடுதலையை விரைவு படுத்த உழைப்போம் !

இந்தச்செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்பட முடியவில்லை......

எனக்குத் தெரிந்த நம்பகமான இடங்களை எல்லாம் கேட்டுப்பார்த்தேன் யாவரும் பேயறைந்தமாதிரித்தான் உள்ளார்கள் யாருக்கும் இன்னும் உண்மை தெரியாது.

பொப்கோன் திண்டவர்களெல்லாம் வாந்தியா எடுக்க முடியும்?

பொப்கோன் திண்டவர்களெல்லாம் வாந்தியா எடுக்க முடியும்?

:rolleyes:

பொப்கோன் திண்டவர்களெல்லாம் வாந்தியா எடுக்க முடியும்?

வந்த செய்திக்ள் எல்லாம் வதந்திகள் என்றால் வாந்திதான் எடுக்கணும்... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அரசால் வெளியிடப்பட்ட காணொளி

எனக்கு ஒரு கவலையான யோசினை என்வன்றால்:

குருக்கர் சொன்னமாதிரி நாங்களெல்லாம் உண்மையாவே மந்தைகள் தானா? :rolleyes:

நண்பர்களே இறுதியாக என்னதான்; சொல்ல வருகின்றீர்கள்? இங்கு பார்த்தது கேட்டது வாசிச்சது எல்லம் பொய்யா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னவோ இவ்வளவு பொன்னான கருத்துக்களையும் பாக்கேக்கை ஊரிலை லாம்புவெளிச்சத்தைல ஐஞ்சாறு பழசுகள் சுருட்டை பத்தவைச்சுக்கொண்டு கதைச்சமாதிரிகிடக்கு :rolleyes:

நண்பர்களே இறுதியாக என்னதான்; சொல்ல வருகின்றீர்கள்? இங்கு பார்த்தது கேட்டது வாசிச்சது எல்லம் பொய்யா?

கண்ணால் காண்பதும் பொய், காதாற் கேட்பதும் பொய்; உண்மையைத் தீர விசாரிப்பதே மெய்.

எனக்கு ஒரு கவலையான யோசினை என்வன்றால்:

குருக்கர் சொன்னமாதிரி நாங்களெல்லாம் உண்மையாவே மந்தைகள் தானா? :unsure:

இன்னுமா சந்தேகம் அதில்? :D:D:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படையினருக்கு பாதிப்பு: உதய நாணயக்கார

ஜஞாயிற்றுக்கிழமைஇ 25 சனவரி 2009இ 05:28 மு.ப ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ

கல்மடு குளத்தின் அணைக்கட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் தகர்த்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிறிலங்கா படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கல்மடு குளத்தின் அணைக்கட்டு நேற்று சனிக்கிழமை காலை தகர்க்கப்பட்டதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பரந்தன் - முல்லைத்தீவு (ஏ-35) சாலையின் ஒரு பகுதிஇ இராமநாதபுரம்இ தர்மபுரம் மற்றும் விசுவமடு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் வெள்ளம் நான்கு அடி உயரத்திற்கு பாய்ந்துள்ளது. இச்சம்பவத்தினால் படையினரும் பாதிப்படைந்துள்ளனர். எனினும் இழப்புக்கள் தொடர்பான தகவல்கள் தெரியாது.

கல்மடு குளம் 4.5 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டதுடன்இ அது 500 ஏக்கர் நிலப்பரப்புக்கு தேவையான நீர்வளத்தையும் கொண்டுள்ளதாக என்றார் அவர்

இச்செய்தி கேட்டு எதிரிகள் கலங்கினார்களோ, இல்லையோ தெரியாது, செக்கென்ன சிவனென்ன என்று திரிகிற கூட்டங்களுக்கு வயித்திலை புளியைக் கரைத்து விட்டுதாம்!! பாவங்கள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.