Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீக்கியனும் நானும்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

jatayu_ravana2.jpg

அன்பார்ந்தவர்களே!

தயவு செய்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ.

என்னோடை கனகாலமாய் ஒரு சீக்கிய நண்பன் வேலை செய்கிறான். அவனுக்கு பொழுது போகாட்டி என்னை கேள்வி கேட்டு குளப்புறதுதான் அவனுக்கு வேலை கண்டியளோ.அதுவும் இலங்கை பிரச்சனையெண்டால் அவனுக்கு உடனை நினவுக்கு வாறது ராமாயணப்பிரச்சனைதான் . எனக்கும் ஒழுங்காய் இராமாயணம் தெரியாதெண்டது வேறை விசயம். :lol:

இந்த ராமாயணத்தை வைச்சு ஆயிரம் கேள்வியள் கேட்டுப்போட்டான் . எல்லாத்துக்கும் ஒருமாதிரி சமாளிச்சுப்போட்டன்.

நாசமறுப்பு இந்தகேள்விக்கு மட்டும் என்னாலை பதில் சொல்லேலாமல் கிடக்கு

அதாவது அவன் என்ன கேட்டவனெண்டால்............... :rolleyes:

சீதையை கடத்தின ராவணன் டச் பண்ணாமல் விட்டவனோ?இல்லாட்டி ஏன் டச்பண்ணாமல் விட்டவன்? :lol: :lol: :D

சத்தியமாய் போனகிழமையும் எனக்கு விசர் ஏத்துறதுக்கெண்டு நேரகாலமில்லாமல் இடைக்கிடை அந்த கெட்டகேள்வியை கேட்டுக்கொண்டிருந்தவன் :lol:

அதோடை என்னை வேறை நக்கலாய்ப்பாக்கிறான். :D

இது கொஞ்சம் வில்லங்கமான கேள்விதான்.எனக்கு விளங்குது. :D

இதை இனி ஆரிட்டை போய் கேக்கிறது?

பக்கத்து வீட்டுக்காரனிட்டை கேக்கேலுமே?

சரி கேட்டாலும் எங்கடை மாப்புவை றோட்டாலை போனவன் கேட்டமாதிரி ஆர் யு ஓகே எண்டு என்னை திருப்பி கேட்டானெண்டால்???????? :D

என்ரை மூஞ்சையை எங்கை கொண்டுபோய் வைக்கிறது?

எனவே ஐயாமாரே! அம்மாமாரே! அண்ணைமாரே! அக்காமாரே! குஞ்சு குருமன்களே! :lol:

உங்களுக்கு தனித்தனியாக வெத்திலைபாக்கு வைச்சு கூப்பிட என்னாலை ஏலாது.

தயவுசெய்து கோபதாபங்களை மறந்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ

jatayu_ravana2.jpg

அன்பார்ந்தவர்களே!

தயவு செய்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ.

என்னோடை கனகாலமாய் ஒரு சீக்கிய நண்பன் வேலை செய்கிறான். அவனுக்கு பொழுது போகாட்டி என்னை கேள்வி கேட்டு குளப்புறதுதான் அவனுக்கு வேலை கண்டியளோ.அதுவும் இலங்கை பிரச்சனையெண்டால் அவனுக்கு உடனை நினவுக்கு வாறது ராமாயணப்பிரச்சனைதான் . எனக்கும் ஒழுங்காய் இராமாயணம் தெரியாதெண்டது வேறை விசயம். :lol:

இந்த ராமாயணத்தை வைச்சு ஆயிரம் கேள்வியள் கேட்டுப்போட்டான் . எல்லாத்துக்கும் ஒருமாதிரி சமாளிச்சுப்போட்டன்.

நாசமறுப்பு இந்தகேள்விக்கு மட்டும் என்னாலை பதில் சொல்லேலாமல் கிடக்கு

அதாவது அவன் என்ன கேட்டவனெண்டால்............... :rolleyes:

சீதையை கடத்தின ராவணன் டச் பண்ணாமல் விட்டவனோ?இல்லாட்டி ஏன் டச்பண்ணாமல் விட்டவன்? :lol: :lol: :D

சத்தியமாய் போனகிழமையும் எனக்கு விசர் ஏத்துறதுக்கெண்டு நேரகாலமில்லாமல் இடைக்கிடை அந்த கெட்டகேள்வியை கேட்டுக்கொண்டிருந்தவன் :lol:

அதோடை என்னை வேறை நக்கலாய்ப்பாக்கிறான். :D

இது கொஞ்சம் வில்லங்கமான கேள்விதான்.எனக்கு விளங்குது. :D

இதை இனி ஆரிட்டை போய் கேக்கிறது?

பக்கத்து வீட்டுக்காரனிட்டை கேக்கேலுமே?

சரி கேட்டாலும் எங்கடை மாப்புவை றோட்டாலை போனவன் கேட்டமாதிரி ஆர் யு ஓகே எண்டு என்னை திருப்பி கேட்டானெண்டால்???????? :D

என்ரை மூஞ்சையை எங்கை கொண்டுபோய் வைக்கிறது?

எனவே ஐயாமாரே! அம்மாமாரே! அண்ணைமாரே! அக்காமாரே! குஞ்சு குருமன்களே! :lol:

உங்களுக்கு தனித்தனியாக வெத்திலைபாக்கு வைச்சு கூப்பிட என்னாலை ஏலாது.

தயவுசெய்து கோபதாபங்களை மறந்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ

குமாரசாமி சிதை என்குறவள் புனிதம் ஆனவள்... சீதை தொட்டால் ராமன் தன்னை உயிரோட விட மாட்டான் என்று இரவணனுக்கு தெரிந்து இருக்கும்.. சும்ம தான் விரம் ஆனவன் என்று காட்ட அவளை துக்கி சென்று இருப்பான்...

உண்மையில் இரவணனின் மகள் சீதை என்றுதான் சிலர் எமக்கு சொன்னார்கள்.. இதில் உண்மை விபரம் எது என்று தெரிய வில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

யார் சீதை ?

சீதை , ராமனுக்கு என்ன முறை ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திற்கு வந்த அமைதிப்படையில் இருந்த சீக்கியர்கள் எத்தனையோ ஈழத்தமிழ் பெண்களை மணபங்கப்படுத்தினார்கள். இது பற்றி அந்தச் சீக்கியரிடம் சொல்ல வில்லையா?

:rolleyes::Dஇராவணன் தான் ஒரு சிவபத்தன், அதாவது அவன் முற்று முழுதாக சிவகோட்பாட்டைக் கடைப்பிடிப்பவன், அதனால் அவன் தமிழன் என்பதோடு மட்டுமில்லாது ஒருத்தனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாட்டோடு வாழ்ந்தவன். உண்மையில் இராவணன் கடத்தியது சீதையை காரணம் இராமன் வடநாட்டிலிருந்து கொண்டு எமது பழம்பெரும் மதமான இந்து மதத்தை உடைக்க நினைத்ததை தடுக்கத்தான்.... கிகிகி அப்படீன்னா இராமனோட அவதாரமா மகிந்த??? அப்ப இண்டைக்கு நேற்று உந்த ஆரிய திராவிட யுத்தம் ஆரம்பிக்கேல்ல... 3500, 4000 ஆண்டுக்கு முன்னால ஆரம்பிச்சிருக்கோ.... அப்ப அண்ணன் தான் இராவணனோ.... சரி சரி ஆகட்டும் ஆகட்டும்... இனியாவது இராமாயணத்தை மாற்றி உண்மையை எழுதி இராவாணாயணம் எண்டு ஒண்டை விடுவம்.... உணமை அழிக்கப்பட்டுள்ளதே.. அத்தோட உந்த ஆரியரான இராமன் வழித்தோன்றலுக்கும் சிங்கள இன வழித்தோன்றலுக்கும் நிறைய தொடர்பிருக்கு கண்டீங்களே???? :lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள் !

மாரீசன்தான் மான் உருவம்கொண்டு வந்துள்ளான் என்ற செய்தி தெரிந்ததும் அந்த மானைப் பிடிக்கச் சீதை தன் கணவனைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறாள்.

லட்சுமணன், 'இராமனுக்கு ஆபத்து வராது. ஆகவே, உன்னைத் தனியேவிட்டுப் போகமாட்டேன்' என்று தடுத்துக் கூறியும் அவனைக் கண்டபடி திட்டிப்பேசி அந்த இடத்தைவிட்டு அகலச் செய்கிறாள். இதன் மர்மம், தான் தனியே இருக்க வேண்டும்; அங்கு இராவணன் வரவேண்டும் என்ற முடிவை முன்கூட்டியே தீர்மானித்துக்கொண்டு தன் கணவனையும் கொழுந்தனையும் துரத்திவிட்டுத் தான் மட்டுமே தனியே இருக்கிறாள்.

இராவணன் காமப்பித்தனைப்போல் சீதையை வர்ணிக்கிறான். உடல் உறுப்புகள் அத்தனையும் ஒன்றையும்விடாது அவைகளுக்கு ஒப்புவமை கூறுகிறான்.

ஆடையினுள் மறைந்திருக்க வேண்டிய அங்கங்களாகிய தொடை, பின்தட்டு, ஸ்தனங்கள் இவைகளுக்கும், அங்க உவமை கூறும் அளவுக்கு அந்த அங்கங்கள் இராவணனுக்குத் தெரிந்திருக்கின்றன!

இத்தனையும் பேசிய இராவணனுடன், 'முறுவல் கொண்டு பேசுகிறாள்; அழுது படைக்கிறாள்; "உள்ளே வாருங்கள், உட்காருங்கள்; சாப்பிடுங்கள்" என்று உபகாரம் செய்கிறாள்.

அவள் அவனுக்கு உபசரிக்கும் பொழுது, "வாயிற் படியின் வழியே தன் கணவனும், கொழுந்தனும் வருகிறார்களா என்று திரும்பிப் திரும்பிப் பாத்துக்கொண்டே உபசரிக்கிறாள்" என்று கூறபப்படுகிறது.

பிறகு இராவணன், வா என்னுடன் என்கிறான்; இவள் சம்மதித்தே அவனுடன் சென்றாள் என்பதற்கு ஆதாரங்கள் பல உண்டு. இவளுக்கும் அவனுக்கும் நடந்த மேற்கண்ட சம்பாஷைணைகளும் காட்சிகளும் மட்டும் அல்ல.

சீதை சம்மதித்துச் சென்றதற்கு ஆதாரம்

தனக்கு எவ்வளவோ மரியாதை செய்து, உபசரித்து, பிரியமாய்ப் பேசிய சீதையிடத்தில் ....... ஆசை மேலிட்டு, 'தன் ரோஹினியைப்பிடிப்பதுபோல் இடது கையால் சீதையின் தலைமயிரையும், வலது கையால் தொடைகளையும் சேர்த்துப்பிடித்தெடுத்தான் (சி.ஆர்.சீனிவாசய்யங்கார். மொழி பெயர்ப்பு, ஆரண்ய காண்டம், சர்க்கம் 49, பக்கம் 151) மேலும் தொடைகளைத் தூக்கிப் பிடித்து எடுத்து ரதத்தில் வைத்தான் என்று 157 ஆம் பக்கத்திலும் மற்றும், சீதையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் ஜடாயுவை அறைந்தான் என்று 165 ஆம் பக்கத்திலும் காணப்படுகிறது.

இவ்விதம் இராவணன் சீதையைத் தொட்டு எடுத்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தொட்டு எடுத்திருப்பானாகில், சீதை இராவணனுக்கு உடன்பட்டவள் என்றே பொருள்படும்.

காரணம், இராவணன் தன்மேல் இஷ்டப்படாத பெண்ணைத் தொடுவானாகில், அவன் தலை சுக்கு நூறாகிவிடும் என்பதாக ஒரு சாபமும், உடம்பு தீப்பற்றி எரிந்துவிடும் என்று மற்றொரு சாபமும் இருக்கின்றன. இந்த சாபங்கள் ஒன்றாகிலும் இராவணனைப் பாதிக்காமல் இருக்குமானால் அவள் இஷ்டப்பட்டாள் என்றுதான் பொருள்படும். இதன் படியே இராவணனுக்குத் தலைவெடிக்கவும் இல்லை, உடல் தீப்பற்றி எரியவும் இல்லை. ஆகவே, சீதை இராவணனுடன் செல்வதற்கு உடன்பட்டாள் என்றே பொருள்.

மேலும், சீதை இராவணனுடன் செல்லுகையில், அவனுடைய மடியின்மேல் இவள் உட்கார்ந்திருக்கையில் அவளுடைய முகம் 'காம்பறுந்த தாமரை மலரைப்போல் இருந்தது. அவளுடைய ஆடைகள் காற்றால் அடிக்கப்பட்டு இராவணன் மேல் - புரண்டன' (பக்கம் 167) என்று கூறப்படுகிறது.

இலங்கைக்குக் கொண்டு சென்றபின், தன் அந்தப் புரத்தில் வைத்தான் (பக்கம் -173) என்று கூறப்படுகிறது.

சீதைக்கும், ராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டது

'விசித்திரமாக அமைக்கப்பட்ட தங்கப் படிக்கட்டுகளில் இராவணன் சீதையுடன் ஏறும்போது, துந்துபி அடிப்பது போல் சப்தம் உண்டாயிற்று.'

(பக்கம் 155, சர்க்கம் 55)

குறிப்பு : எனவே, இருவரும் மாடியில், அந்தப்புரத்திற்கு சென்றடைந்து விட்டனர். அதுவும் இருவரும் மாடியில் 'ஏறும்பொழுது' துந்துபி அடிப்பதைப் போல் இருந்ததாம். இருவர் நடையும், அதாவது இராவணன் எவ்வளவு சந்தோஷமாகவும், ஒய்யாரமாகவும், ஆனந்தமாகவும், கம்பீர நடையுடன் காலடி எடுத்து வைத்தானோ, அதேபோல் சீதையும் ஒய்யார நடையுடன், இருவரும் ஒருவர் தோளின்மேல் ஒருவர் கையைப் பிடித்து அணைத்துக் கொண்டு ஏறி இருக்கவேண்டும். அந்தக் காலடியின் சப்தம் துந்துபி அடிப்பதைப்போல் இருந்திருக்கிறது. அன்றியும், இனியும் மேலே நடப்பதைக் கவனிப்போம்.

இராவணனைப் பார்த்து சீதை, 'பிறகு வருவதைப் பார்த்துக் கொள்வோம். இப்போது கிடைக்கும் சுகமே பெரியதென்று நினைக்கிறாயே' (பக்கம் 171) என்று கேட்கிறாள். இதனால், இராவணன் சீதையிடம் சுகம் அனுபவித்துவிட்டான்! ஆராய்ந்து பார்த்தால் அவளிடம் சுகம் அனுபவிக்கும் நேரத்தில் இவ்வார்த்தைகளைச் சீதை இராவணனிடம் கூறுவது நன்கு தெரியும்.

இதற்கு இராவணன் சமாதானம் கூறுகையில், 'சீதே! அக்கினி சாட்சியாக உன் கையைப் பிடித்த கணவனைக் கைவிடுவது அதர்மமென்றெண்ணி வெட்கப்படுகிறாயோ? நம் இருவருக்கும் நேர்ந்த சம்பந்தம் தெய்வகதியால் ஏற்பட்டது. இது ரிஷிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது' (பக்கம் 177) என்று சமாதானம் கூறுகிறான். சீதை வருத்தப்படுவதாகவோ, ஆத்திரப்படுவதாகவோ கூறவில்லை. வெட்கப்படுகிறாளாம் விருப்பம் இல்லாவிட்டால் வெட்கப்படுவது தான் விருப்பமில்லை என்பதைக் காட்டும் அறிகுறி போலும்! ஆத்திரமோ, கோபமோ கொண்டிருப்பாளாகில் விருப்பம் இல்லை என்று கூறலாம்.

எனவே, சீதையிடம் இராவணன் செய்த காம லீலைகளுக்கும் அவள் உட்பட்டிருக்கிறாள். ஆனால், பெண்களின் இயற்கைக் குணப்படி வெட்கப்பட்டிருக்கிறாள்.

மேலும் ஆரண்யகாண்டம் 55 ஆவது சர்க்கம் 678 ஆவது பக்கத்தில் தாத்தா தேசிகாச்சாரியார். மொழி பெயர்ப்பில் கூறப்படுவதாவது - 'இனி நீ நாணமுறற்க. இதனால் தர்மலோபமொன்றுமிலது. உனக்கும் எனக்கும் இப்பொழுது தெய்வத்தினாலே சேர்க்கை நேர்ந்தமையின் இதுவும் தர்மமேயாகும. இஃது ரிஷிகளாலும் உகுக்கப்பட்டது' என்று கூறப்படுகிறது.

'இனி நீ நாணமுறற்க' இதன் பொருள் என்னவென்றால் இனிமேல் எதற்காக வெட்கப்பட வேண்டும்? உனக்கும் எனக்கும் தெய்வகதியால் சேர்க்கை நேர்ந்துவிட்டது. என்கிறான். அதாவது காரியம் முடிந்துவிட்டது. இனிமேல் வெட்கப்பட்டு என்ன பலன் என்ற கருத்தில் இராவணன் கூறுகிறான். எனவே இருவருக்கும் சேர்க்கை நேர்ந்தது என்பதை இதன்படி உறுதிப்படுத்தலாம்.

மேலும் இராவணன் கூறியதாக அதே மொழி பெயர்ப்பாளர் இந்தச் சம்பவத்திற்குக் குறிப்புத் தருகையில் 'இராவணன் பிராட்டியாரை முன்போலவே தாசனாகச் செய்து கொள்ளும்படி விண்ணப்பம் செய்தான்பூ என்கிறார். அதாவது முன்போலவே என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது இருவருக்கும் சம்பந்தம் ஏற்பட்ட முன் சம்பவத்தைப் போலவே இனி மேலும் இருக்க வேண்டும் என்ற கருத்தில் வேண்டினான் என்கிறார். ஆகவே, மொழி பெயர்ப்பாளரின் ஆராய்ச்சியின் படியும் சீதைக்கும் இராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது என்பது உறுதி.

(கானகத்தில் சீதையை விட்டுப் பிரிந்த இராமன், சீதையை நினைத்துக் காமத்தால் மனம் உருகிப் பேசுகின்றவைகளையும், இலட்சுமணனிடம் கூறும்போது, தான் சீதையுடன் அனுபவித்த இன்பத்தை வெட்கமின்றி விளக்குவதையும் ஆரண்ய காண்டத்தில் கண்டுள்ளவைகளை எடுத்துக் கூறினேன்)

இனி, கிஷ்கிந்தா காண்டத்தில் லட்சுமணனிடம் ராமன் கூறுகின்றான்;

என்னிடம் இன்பங்களை அனுபவித்தாள்!

அவளுடன் சுகித்திருக்க, ஏகாந்தமாய் வந்த இடத்தில் அவளைக் கவர்ந்து சென்றானே! இப்படிப்பட்டவளிடம் போகங்களை அனுபவிப்பார்கள் பாக்கியசாலிகள்!

சீதையுடன் சுகிப்பதே போதும்; ராஜ்யம் தேவையில்லை.

--------தந்தைபெரியார்-நூல்:"இராமாயணக்குறிப்புகள்"

http://thamizhoviya.blogspot.com/2008/03/blog-post_28.html

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னடா வம்பா போச்சு நான் பதில் சொல்ல கத்தி கோடரி எல்லாம் எடுத்து வருவாங்கள் நம்ம அறுத்துனர்கள் :)

இப்படியான கேள்விகளை கேட்கும் கு.சாவை வன்மையாக கண்டிக்கிறேன் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதில் கருத்து சொன்ன சுஜிக்கு நன்றி.

உங்கடை கருத்தையும் சீக்கியனுக்கு பதிலாய் சொல்லிப்பாக்கிறன் :)

  • கருத்துக்கள உறவுகள்

நூனாவிலானின் இனைப்பு அப்படியே பெண்களை அவமதிக்கும் விதமாக உள்ளது.நூனாவிலானிடமிருந்து இதை நான் எதிர் பார்க்கவில்லை இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் முற் பிறப்பில் சாபம் காரணமாகத் தான் சீதையை தொடவில்லை.

இராவணன் பெண்களின் அனுமதி இல்லாமல் அவர்களை தொட முடியாது தொட்டால் சுக்கு நூறாகி விடுவான்.இராவணன் கடைசி வரை சீதையை தொடவில்லை.சீதை பதிவிரதை அதனால் தான் தீக் குளித்த பின் மீண்டும் உயிர்த்து வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி என்னுடைய தனிப்பட்ட கருத்து இல்லை. ஒரு இணையத்தில் போடப்பட்டதை தான் இணைத்தேன். உங்களால் விவாதிக்க முடியுமெனில் வரவேற்கிறேன். அதற்காக பெண்களை அவமதிக்கிறேன் என்ற அனுமானத்துக்கு வரவேண்டாம்.

மற்றது கற்பனை கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சீதையை தொடாரா ? இல்லயா என்பது ராவணனுக்கும் சீதைக்கும் தான் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

நூனாவிலான் மன்னிக்கவும் இதை நீங்கள் எழுதியது என கூறவில்லை இதை நீங்கள் இனைத்தை தான் கண்டிக்கிறேன் என எழுதினேன்[பகுடிக்கு]

எனக்கு இலக்கியம் தெரியாது சீதை ராமனை நினைத்து தான் ஏங்குகிறாள். அதுக்காக தான் சீதையை கவர இராவணன் பல வேடங்கள் எடுத்தான்.சீதைக்கு ஆபத்து எனத் தெரிந்து தான் இலக்குவனன் கோடு போட்டு செல்கிறான் கடைசியில் இராவணன் வயதான கிழவன் வேசம் போட்டு தாகம் என சொல்லி நீர் கேட்டுப் போனதாலேயே சீதை கோட்டை தாண்டி வந்தாளே தவிர இராவணன் மேல் இச்சை கொண்டு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இராவணனுக்கு தலை வெடிக்குதோ இல்லையோ எனக்கு வெடிக்குது.அப்ப கு.சாவுக்கு :)

  • கருத்துக்கள உறவுகள்

நூனாவிலான் மன்னிக்கவும் இதை நீங்கள் எழுதியது என கூறவில்லை இதை நீங்கள் இனைத்தை தான் கண்டிக்கிறேன் என எழுதினேன்[பகுடிக்கு]

எனக்கு இலக்கியம் தெரியாது சீதை ராமனை நினைத்து தான் ஏங்குகிறாள். அதுக்காக தான் சீதையை கவர இராவணன் பல வேடங்கள் எடுத்தான்.சீதைக்கு ஆபத்து எனத் தெரிந்து தான் இலக்குவனன் கோடு போட்டு செல்கிறான் கடைசியில் இராவணன் வயதான கிழவன் வேசம் போட்டு தாகம் என சொல்லி நீர் கேட்டுப் போனதாலேயே சீதை கோட்டை தாண்டி வந்தாளே தவிர இராவணன் மேல் இச்சை கொண்டு இல்லை.

கற்பனை கதைகள் பொதுவாகவே எதிர்கால நோக்கில் வருடபடுபவை. தற்போது வேற்று கிரக மனிதர்களுடன் போர் புரிவது போன்ற கதைகள்தான் வியாபாரத்தில் முன்நிலையில் நிற்கின்றன. பல காலங்கள் கடந்து.... ஒரு வேளை பூமியில் வாழும் மனிதர்கள் செவ்வாய்க்கு சென்று பின்னொருகாலத்தில் செவ்வாய் மனிதர்களுக்கும் புவிமனிதருக்கும் சண்டைநடப்பின்.....

சிலபோர் இல்லை பலபேர் சொல்லுவார்கள் இது புதிதல்ல முன்னைய காலங்களிலேயே இது நடந்திருக்கின்றது என்றும் அதற்கு ஆதாரமாக தற்போதைய கற்பனைகளை கட்விழ்த்து விடுவார்கள். ஆனால் அறிவுடன் அதை நோக்கினால் மட்டுமே உண்மையை புரிய முடியும். தவறின் சீதைக்கும் ராமனுக்கும் கோவில்கட்டி பசியுடன் இருக்கும் கன்றை கட்டிவைத்து மாட்டில் பாலைகறந்து பசியுடன் இருக்கும் குழந்தைக்கும் கொடுக்காது கல்லிலே ஊற்ற வேண்டியதுதான். கேட்டால் கடவுள் என்று கதைவிடவேண்டியதுதானே.

சீதையை இராவணன் தொட்டானோ இல்லையோ ஆனால் இராவணன் விமானத்தில் சீதையை கொண்டுசென்றான் என்பதை இராமாயணம் வலியுறுத்துகின்றது. அந்த விமானம் எந்த ராக இயந்திரத்தை கொண்டுடது என்றால் உண்மையில் இராமாயணம் எழுதியவனுக்கு அதைபற்றி கற்பனை செய்யவே அறிவு இருந்திருக்காது. ஆனாலும் தற்கால ராமர்கள் சும்மா விடுவினமோ? கடலால்தான் கொண்டுசென்றான் ஆனால் விமானம்பறப்பதுபோல் வேகமாக சென்றான் என்றுதான் இராமாயணம் சொல்கிறது என்று கதைவிடலாம். இது நேரத்தை வீணடிக்கும் வீண் விவாதம்.

ரதி,

வான்மீகி ராமாயணம் வேறு, கம்பராமாயணம் வேறு. ராமாயணத்தை கம்பர் தமிழ்படுத்திய போது, பல சம்பவங்களை தமிழ் பண்பாட்டிற்கு ஏற்றபடி மாற்றி விட்டார்.

குமாரசாமி,

உங்களுக்கும் இதுதான் பதில்: சீக்கியனிடம் சொல்லுங்கோ! வான்மீகியில் ராமாயணத்தில் ராவணன் சீதையை தொட்டு விட்டான். சீதையும் அதை விரும்பி விட்டாள். தமிழ் ராமாயணத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

"உம்பி புல்லினால் செய்த சாலையில் இருந்தாள்" என்று அனுமன் ராமனிடம் சொல்கிறான். அதாவது இலக்குமணன் செய்த அந்த பர்ணசாலையை இராவணன் அப்படியே பெயர்த்து எடுத்து வருகின்றான். சீதையை தொடவில்லை.

வான்மீகி இராமாயணத்தின்படி

1.தசரதனின் மனைவிகள் பார்ப்பனர்களுடன் கூடி இராமன், பரதன், லக்குவன், சத்துருக்கனை பெறுகின்றனர். அசுவமேத யாகத்தில் குதிரையின் ....... பிடித்தபடி இருக்கின்றனர்.

2.இராமன் சீதையை வில்லை உடைக்கும் போதே பார்க்கின்றான். முதலிலேயே அண்ணலும் அவளும் நோக்கவில்லை. கண்ணும் கண்ணும் கவ்வவில்லை.

3. ராமன் மேலும் பல பெண்களை திருமணம் செய்து கொண்டான் என்பது போன்றும் சொல்லப்படுகிறது

4. ராமன் மது, மாமிசம் உண்டான்

5. வாலி இறந்த பிறகு வாலியின் மனைவி சுக்ரீவனோடு கூடி கும்மாளம் அடிக்கின்றாள்

இப்படி வான்மீகி இராமாயணத்தில் இருந்த பலவற்றை கம்பர் மாற்றி தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ற முறையில் எழுதினார். இராவணனுக்கும் சீதைக்கும் நடந்த கசமுசா பற்றி வான்மீகி ராமாயணத்தில் இருந்தவைகளையும் கம்பர் மாற்றி விட்டார்.

வான்மீகி ராமாயணம் உண்மையென்றால் சீதை ராவணன் மீது ஆசைப்பட்டு ஓடி வந்திருக்க வேண்டும். பின்பு ராமன் ராவணனைக் கொன்று சீதையைக் கூட்டிக் கொண்டு போய், ஓடிப் போன குற்றத்திற்காக காட்டிற்குள் துரத்தி விடுகின்றான். அவ்வளவுதான்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுங்கோ சீதையிட்ட கேட்டுச்சொல்லுறன் ஆனா நேக்கும் சின்னதா ஒரு டவுட்டுத்தான் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் சீதை ?

சீதை , ராமனுக்கு என்ன முறை ? :icon_idea:

பிறகென்ன எனக்கு புதிசாய் இன்னுமொரு கூட்டு கிடைச்சுட்டுது :huh:

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன எனக்கு புதிசாய் இன்னுமொரு கூட்டு கிடைச்சுட்டுது :icon_idea:

சந்தோசம் குமாரசாமி அண்ணை . :huh:

( விடிய , விடிய ராமாயணம் ....... ) :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்திற்கு வந்த அமைதிப்படையில் இருந்த சீக்கியர்கள் எத்தனையோ ஈழத்தமிழ் பெண்களை மணபங்கப்படுத்தினார்கள். இது பற்றி அந்தச் சீக்கியரிடம் சொல்ல வில்லையா?

66.jpg

ஓம் சொன்னனான்.அவன் சொல்லுறான் தாங்கள் பிந்தரன்வாலேன்ரை ஆக்களாம். :lol:

சீக்கிய ஆக்கள் யாழ்ப்பாணத்திலை செய்தது எல்லாம் கூடாத வேலையெண்டும் சொன்னவன்.

இதைவிட பங்களாதேஷ்சிலை படுமோசமாய் தங்கடை ஆக்கள் அட்டூழியம் செய்தவங்களாம்.

அதோடை தங்கடை ஆக்கள் எல்லாம் காங்கிரசுக்கோ இல்லை ஜனதா கட்சிக்கோ சப்போட் பண்ணுறேல்லையாம் :huh:

அப்பப்ப sing is king எண்டு சவுண்டு வேறை விடுறான் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

66.jpg

ஓம் சொன்னனான்.அவன் சொல்லுறான் தாங்கள் பிந்தரன்வாலேன்ரை ஆக்களாம். :icon_idea:

எனக்கு , தலையை மூடி கட்டிய சிங்குகளையும் ......... ,

இத்தாலி ....ஒடுகாலிகளையும் கண்டால் பிடிக்காது .

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் வான்மூகி இராமயணத்திற்கும் கம்ப இராமயணத்திற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை கம்பர் தமிழுக்காக சில கற்பனைகளை புகுத்தினாரே தவிர இராமயணத்தில் பெரிதாக மாற்றம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்னடா வம்பா போச்சு நான் பதில் சொல்ல கத்தி கோடரி எல்லாம் எடுத்து வருவாங்கள் நம்ம அறுத்துனர்கள் :icon_idea:

இப்படியான கேள்விகளை கேட்கும் கு.சாவை வன்மையாக கண்டிக்கிறேன் :D

இப்ப நான் என்னவில்லங்கமாய் கேட்டுப்போட்டனெண்டு முனி கண்டிக்குது. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இராவணனுக்கு தலை வெடிக்குதோ இல்லையோ எனக்கு வெடிக்குது.அப்ப கு.சாவுக்கு :icon_idea:
அண்ணை :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.