Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிசிஸ் தீக்குளித்த முருகதாஸ் வீரமரணம் - மரண சாசனம் உள்ளே இணைக்கப்பட்டுள்ளது

Featured Replies

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

murugathasan.jpg

murugathasan1.jpg

ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலின் முன்பாக திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார்.சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார் .லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாஸ் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார்.

உலகத்தமிழினமே உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகின் மனச்சாட்சியை விழித்தெழவைக்க உலக சமூகத்தின் மனதையும், அறிவையும் வென்றெடுக்க பாடுபடவேண்டும். எமது சுயத்தை நிலைநிறுத்தி எமது உரிமையை வென்றெடுப்பதற்கான வாய்ப்பும் இதுவே - முருகதாசன்

swiss_001.jpg

swiss_002.jpg

swiss_003.jpg

swiss_004.jpg

swiss_005.jpg

swiss_006.jpg

swiss_007.jpg

நன்றி www.tamiloosai.com

Source Link: http://tamiloosai.com/index.php?option=com...8&Itemid=68

Edited by தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழினமே உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகின் மனச்சாட்சியை விழித்தெழவைக்க உலக சமூகத்தின் மனதையும், அறிவையும் வென்றெடுக்க பாடுபடவேண்டும். எமது சுயத்தை நிலைநிறுத்தி எமது உரிமையை வென்றெடுப்பதற்கான வாய்ப்பும் இதுவே - முருகதாசன்

என்ன முருகதாசன் ,

பட்டதாரி பட்டம் பெற்றவரே ....... இப்படி உணர்ச்சி வசப்பட்டு செய்யலாமா ?

உங்களின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

துக்ககரமான முடிவு முருகதாஸ். அநீதியிட்ட போய் நீதியை எதிர்பார்த்து உயிர விட்டா அநீதி.. சிரிச்சுப் போட்டு.. இன்னும் குசியா இருக்கும்..! இந்த உலகை சரிவர படிக்க முதலே நீங்கள் எடுத்த ஒரு முடிவே இது என்று நினைக்கிறேன். இது அநீதியாளர்களின் கண்ணைத் திறக்காட்டிலும் பறுவாயில்லை.. தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி போராட வைச்சாலே போதும்..!

தமிழின விடிவுக்கான எதிர்பார்ப்போடு உயிரை விட்ட தோழனுக்கு இயன்றதை செய்து அவன் ஆத்மா சாந்தியடைய.. தமிழர்கள் சத்தியம் செய்து செயற்பட வேண்டும்.

சிவக்குமாரன் என்ற மாணவன் ஆரம்பித்த தற்கொடை.. மில்லரண்ணா.. திலீபன் அண்ணா என்று இன்று முருகதாஸ் வரை தொடருது. மரணங்கள் தான் பதிவாகியுள்ளனவே தவிர.. தமிழனுக்கு விடிவு தான் இன்னும் இல்லை..! :)

Edited by nedukkalapoovan

"இனத்தின் வாழ்வுக்கான இறப்பு"????? ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!!

தயவு செய்து வேண்டாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முருகதாஸ் ஏன் இந்த முடிவு? ஈழமக்களின் மீது கொண்ட அன்பை இப்படியா காட்டுவது இனியும் ஜநா பார்த்துக்கொண்டுதான் இருக்குமா இருக்கும் அதற்கு என்ன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தீமைக்கு தீயிடுங்கள்" அதைவிட்டு விட்டு.............ஏன் சகோதரர்களே....வேதனையாக இருக்கு.

வீரவணக்கம் முருகதாஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்த சகோதரங்களின் துயரம் கண்டும்,

ஏதும் இயலா புலம்பெயர்ந்தோரின் நிலை கண்டும்

மனம் வெந்ததால்...

உடலை வேகவைத்து விட்டாயா?

என் அன்புத் தோழனே முருகதாஸ்!

உலகத்தின் தூக்கம் பொயானது, அதையுணர்ந்தும் உன் உயிர் நீரை அவர்கள் மீது தெளித்தாய். அவர்கள் தெளிவடைவார்களா? இது அவர்களுக்கு ஒரு புது அநுபவம். உனது உயிர்த்தியாகம் உயர்வடைந்து வெற்றி பெறவேண்டும்.

அறிவு கெட்டவனே! உன்னை மாதிரி படித்தவர்களுக்கு எத்தனை பணிகள் காத்திருக்கின்றன என்று தெரியுமா?

இதுவரை எல்லாத்துக்கங்களும் நெஞ்சுக்குள் அடைத்துக்கிடந்தது இன்று முருகதாசன் என்னும் உன்னதமான இதயம் என் கண்களின் அணைகளை உடைத்து குமுறவைத்துவிட்டது..நிச்சமாக இது கடைசி தற்கொடையாக இருக்கட்டும்.உலகம் விழிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவு கெட்டவனே! உன்னை மாதிரி படித்தவர்களுக்கு எத்தனை பணிகள் காத்திருக்கின்றன என்று தெரியுமா?

பணிகள் பணிகள் என்று சொல்கிறீர்களே தவிர யாரும் இதுவரை என்ன பணி என்றே சொல்கிறீர்கள் இல்லை. காரணம் உங்களுக்கே தெரியாது என்ன வழியில் இந்த உலகத்தை எமக்கு சாதகமாக திருப்பலாமென்று.

உலக அரசுகளின் முன்னால் கடிதம் எழுதி, அழுது ஆர்ப்பாட்டம் செய்வதைத் தவிர எமக்கு தெரிந்த வேறு வழி?

ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழரின் அரசியல் வறுமைநிலை வெளிப்பாட்டின் ஒரு வடிவம் தான் முருகதாசின் மரணம்.

letter-1.jpg

letter-2.jpg

letter-3.jpg

letter-4.jpg

letter-5.jpg

letter-6.jpg

letter-7.jpg

letter-8.jpg

letter-9.jpg

letter-en-1.jpg

Edited by tamil92

அறிவு கெட்டவனே! உன்னை மாதிரி படித்தவர்களுக்கு எத்தனை பணிகள் காத்திருக்கின்றன என்று தெரியுமா?

அவரும் தனது பணியை செய்துள்ளார். அவரின் பாதை வேறானது அவ்வளவுதான். அவரது பாதையை ஏனையவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எமது சமூகத்தின் அறிவுஜீவிகள் எமது சமூகத்துக்கு நேரான பாதை காட்டிய வரலாறு கிடையாது. முடிந்தால் உங்கள் வருத்தத்தை பதிவு செய்யுங்கள் தவிர அறிவுகெட்டவனே என்று விழிப்பதற்கு உரிய அறிவும் உரிமையும் நீங்கள் உட்பட வேறு எவருக்கும் கிடையாது. அறிவாளிகளின் அறிவுகெட்ட தனத்தின் விழைவே இந்த நிகழ்வு. ஒரு செனிவிரத்தினா ஒரு ஜெயசூரியா போன்ற சிங்கள அறிவாளிகள் போல் எமது அடுத்த தலைமுறையை ஆவது நேர்மையுள்ள துணிவுள்ள புத்திஜீவிகளாக மாற்ற முயலுங்கள். வன்னியில் மக்கள் மரணப்படுக்கையில் தவித்துக்கொண்டிருக்கையில் எமது புத்திஜீவிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றனர்? அவர்களுக்காக என்ன செய்கின்றனர்? ஏன் உங்களுக்கு கூட நான் கடவுளுக்கு விமர்சனம் எழுதுவது தான் முக்கியமாய் போனதல்லவா? என்னும் எத்தனையோ பேர் சாதியம் தலித்தியம் மார்க்ஸியம் என்னும் இன்னோரன்ன பூராயங்கள் புடுங்கி கொண்டிருக்கின்றனர். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற அடிப்படை அறிவில்லாத அறிவுள்ளவர்களே எமக்குள் அதிகம். மக்கள் உயிருடன் இருந்தால் தான் எதுவும் என்ற உண்மை புரியாத அறிவுஜீவிகள் நிறைந்த சமூகம் இது. முருகதாஸ் மக்கள் உயிருடன் இருத்தல் என்ற அடிப்படையில் நிற்பவர். நீங்கள் அழைக்கும் பணிகள் எதுவாகினும் அவரின் அடிப்படைக்கு அடுத்த கட்டமே.

தயவுசெய்து யாரும் தீக்குளிப்பை ஊக்குவிக்காதீர்கள்!

முத்துக்குமார் தன்னுடைய உடலை ஆயுதம் ஆக்குவதற்காக தீக்குளித்தார். அவர் பற்ற வைத்த தீயை தமிழ்நாட்டில் பரப்ப வேண்டும். ஆனால் தீக்குளிப்பை உலகம் முழுக்க பரப்பிக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் கடைசியா தீக்குளித்தவரின் பெயரை கேட்டால் உடனடியாக எத்தனை பேரால் சொல்ல முடியும்.

முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்திற்கு ஒரு இலட்சம் பேர் திரண்டார்கள். பின்பு இரண்டாமவருக்கு ஆயிரம் ஆனது. கடைசியாக தீக்குளித்தவருக்கு நூற்றுக் கணக்கு என்றாகி விட்டது.

இது நிற்க,

குர்திஸ் இயக்கம் (பிகேகே) ஜேர்மனியில் தடை செய்யப்பட்ட போது, ஐந்துக்கும் மேற்பட்ட குர்திஸ் மக்கள் ஜேர்மனியில் தீக்குளித்தார்கள். பெண்கள் சிலரும் தீக்குளித்ததாக ஞாபகம். ஆனால் அந்தத் தீக்குளிப்புக்களால் எதையும் சாதிக்க முடியவில்லை.

அன்பான தமிழ் உறவுகளே!

தயவு செய்து இனிமேல் யாரும் தீக்குளிக்காதீர்கள். முருகதாசின் மரணம் கடைசியானதாக இருக்கட்டும். எதிரியோடு போராடி உயிர் நீர்ப்பது வேறு. நீங்களே உங்களை மாய்ப்பது வேறு.

அடுத்தது,

இன்றைய பணி என்பது தமிழீழம் அமைப்பதற்கு பாடுபடுவது. நாளைய பணி தமிழீழத்தை கட்டி எழுப்புவது. இதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ஏலாத்தனத்தின் வெளிப்பாடுதான்

ஆனால்இதனால் ஒன்றும் வராது என்று சொல்லாதீர்கள்

இதை ஊக்குவிப்பது எவ்வாறு தவறோ

அதைவிட தவறானது அவரது செயலின் ஞாயத்தை மறுப்பது????

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து இது தொடரக்கூடாது, தொடரக்கூடாது, முற்றுப்புள்ளியிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு கெட்டவனே! உன்னை மாதிரி படித்தவர்களுக்கு எத்தனை பணிகள் காத்திருக்கின்றன என்று தெரியுமா?

அறிவு கெட்டவனல்ல முருகதாஸ். தன்து மரணம் ஏதாவது தமிழர்களுக்குச் சாதகமாகும் என்ற நம்பிக்கையில் தான் தனது உயிரைக் கொடுத்திருப்பார். அறிவுள்ளவர்கள் எல்லாம் இங்கு புலத்தில் என்னத்தை கிழித்துச் சாதித்துவிட்டார்கள் ? அறிவுள்ளோர் தாமென்று தம்பட்டமடித்ததைத் தவிரவும் செயலில் எதையும் காட்டாமல் சொல்வீரர்களாக இருந்ததை இருப்பதை விட வேறெதைச் செய்தார்கள் ?

இன்னும் நதி மூலம் ரிசி மூலம் பார்த்து தமிழினத்தை படுகுழியில் தள்ளும் அறிவு ஜீவித்தனத்தைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

துயரங்களிலிரந்து விடுபடத்தான் எல்லோருக்கும் விருப்பம். அமைதியான நிம்மதியான வாழ்வு யாருக்கும் தான் பிடிக்காது ? தன்னை அணுவணுவாத் தீயிலிட்டு எரிக்கும் அளவு ஒருவரது மனநிலை மாற்றத்திற்குக் காரணம் எது ? இதையெல்லாம் ஒற்றை வரியில் அறிவு கெட்டது முட்டாள் என்று சொல்லிவிட்டு அறிவாளிகள் அமைதியாகிவிடுகிறார்கள்.

தீக்குளித்தல் தீர்வு இல்லை தமிழருக்கு.

இன்றைய பணி என்பது தமிழீழம் அமைப்பதற்கு பாடுபடுவது. நாளைய பணி தமிழீழத்தை கட்டி எழுப்புவது. இதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

இந்தப் பணியை யார் தெளிவுடன் செய்கிறார்கள் ? அல்லது செயற்படுகின்றார்கள் ? வீடுகளுக்குள் இருந்து கொண்டு பணி செய்யுங்கோ பணி செய்யுங்கோ என சொல்வதுதானோ இன்றைய பணி ? இதைத்தான் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு கெட்டவனே! உன்னை மாதிரி படித்தவர்களுக்கு எத்தனை பணிகள் காத்திருக்கின்றன என்று தெரியுமா?

சபேசன் , இந்த கருத்தை .........

தன்னுடைய , உரிமையுடைய ஆதங்கத்தினால் வெளிப்படுத்தினார் என்று நம்புகின்றேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவுள்ளவர்கள் எல்லாம் இங்கு புலத்தில் என்னத்தை கிழித்துச் சாதித்துவிட்டார்கள் ? அறிவுள்ளோர் தாமென்று தம்பட்டமடித்ததைத் தவிரவும் செயலில் எதையும் காட்டாமல் சொல்வீரர்களாக இருந்ததை இருப்பதை விட வேறெதைச் செய்தார்கள் ?

எங்களுக்கு ஆயிரத்தெட்டு பணிகள் இருக்கு. எல்லாம் இயக்க ரகசியம். சொல்ல மாட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய பணி என்பது தமிழீழம் அமைப்பதற்கு பாடுபடுவது. நாளைய பணி தமிழீழத்தை கட்டி எழுப்புவது. இதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

நீங்கள் ஒரு ஊடகவியலாளர் தானே... அந்த பணிகள் என்னவென்பதை மழுப்பாமல் சொல்லுங்கள் பார்க்கலாம்?

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி தயவு செய்து பணியை செய்யுங்கள்.

எங்கட முதற்தேவை பணி செய்வது. அதனை முழுமூச்சுடன் செய்வோம்

நன்றி தமிழ்சிறி,

ஒரு இறந்து போன மனிதரை தூற்றுகின்ற அளவிற்கு நான் தரம் தாழந்தவன் அல்ல. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. செய்தியைப் படித்தவுடன் மனதில் அழுகையும் ஆத்திரமும் ஒன்றாக வந்தது. அப்பொழுது வெளிப்பட்ட வார்த்தைகள் இவைகள்.

வீர மரணம் என்று எழுதுவதும், மாவீரன் என்று போற்றுவதும் ஒருவகையான ஊக்குவிப்புகளாகவே எனக்குத் தெரிகின்றது.

முருகதாசன் ஆங்கிலத்தில் எழுதியதைப் பார்த்ததும் எனக்கு மீண்டும் கோபம் வருகின்றது.

ஈழப் போராட்டம் குறித்த எத்தனையோ கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டிய நிலையில் ஆட்கள் இன்றி அப்படியே இருக்கின்றன. முருகதாசன் போன்றவர்கள் எமக்கு நிச்சயமாக உயிரோடு வேண்டும்.

அட ஒன்றுமே தேவையில்லை. முருகதாசன் ஒன்றுமே செய்யாமல் வீட்டில் இருந்தபடி மாதம் இருபதோ, முப்பதோ கொடுத்துக் கொண்டிருந்தாலும், அப்பொழுதும் முருகதாசன் வேண்டும். அதுவும் நாட்டுக்கு செய்கின்ற பணிதான்.

அறிவுள்ளவர்களோ, அறிவற்றவர்களோ, படித்தவர்களோ, படிக்காதவர்களோ தயவு செய்து இனியாரும் தீக்குளிக்காதீர்கள்!

நீங்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நாட்டுக்குத் தேவை!

தமிழ்நாட்டிலும் யாரும் தீக்குளிக்காதீர்கள். இந்திய வல்லாதிக்கத்தின் அடையாளங்களை தீ வைத்துக் கொளுத்துங்கள்.

தியாகி முருகதாஸிற்கு வீரவணக்கங்கள்.

இத்தகைய மரணங்கள் எமது மக்களை காக்க முடியாது போன இயலாத்தன்மையின் இறுதி வெளிப்பாடுகள்.

எத்தனையோ வழியில் போராடியும் சர்வதேசம் முன் மண்டியிட்டும் தாயக உறவுகளின் அவலங்களை தடுக்க முடியாமல் போனதால் தான் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

இவ் தற்கொடைகள் தடுக்கப்பட வேண்டுமாயின் எமது மக்களை காப்பதற்கு எம்மால் செய்யக்கூடியது என்ன என்பது பற்றிய தெளிவுபடுத்தல்களை அறிவுள்ளவர்கள் அறிவற்றவர்களுக்கு தெரியப்படுத்தல் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

முருகதாசன் உலகத்தின் மனச்சாட்சியை தட்டிக்கேட்டிருக்கிறார்.இதன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.