Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிமையும் இனிமையே ..எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையிலே இனிமை காண முடியுமா என அந்தக் காலத்தில் பாட்டு எழுதி வைத்தார்கள். திருமண உறவுதான் ஒரு ஆண் அல்லது பெண்ணின் முழுமை என்பதும் பலமாக நம்பப்பட்டு வந்தது.

ஆனால் இன்றைய நிலைமை என்ன ..? திருமண பந்தத்தை உதறவிட்டு அல்லது மறுத்து விட்டு தனிமை வாழ்க்கையை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

ஆணோ, பெண்ணோ திருமணம் செய்வதற்கு இப்போது அவசரப்படுவதில்லை. காரணம், பற்பல இருக்கலாம்.

சரி, தனிமையில் இனிமையாக இருக்க முடியுமா..? முடியும் என்கிறது ஒரு ஆய்வு. அதற்கு சில காரணங்களையும் அது அடுக்குகிறது.

நமது உடலிலிருந்து அந்தக் காரணங்களை தொடங்குகிறது அந்த ஆய்வு..

திருமணமாகாதவர்களுக்கு உடல் எடை கட்டுக்குள் இருக்குமாம். கார்ன்வெல் பல்கலைக்கழகம் இதுதொடர்பாக நடத்தி சமீபத்திய ஆய்வில், திருமணம் ஆகாத பெண்களுக்கு பொதுவாக எடை அதிகரிப்பதில்லை. ஆனால் திருமணமான பெண்களுக்கு முதல் சில ஆண்டுகளில் ஐந்து முதல் எட்டு பவுன்டு வரை எடை கூடி விடுகிறதாம். முதல் பத்து ஆண்டுகளில் திருமணமான பெண்களின் எடை சராசரியாக 54 பவுன்டுகள் கூடி விடுகிறதாம்.

திருமணமாகாத பெண்களுக்கு தங்களது உடல் அழகு, எடை உள்ளிட்டவற்றில் கூடுதல் அக்கறையும், கவனமும் இருக்கிறதாம். அதேபோல அவர்களின் மனமும் புத்துணர்ச்சியுடன் இருப்பதால் மிகவும் இளமையாக உணர்கிறார்களாம் - வயதானாலும் கூட.

மற்ற பெண்களை விட தாங்கள் எப்போதும் அழகாக காட்சி தர வேண்டும். மற்றவர்களை கவரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் திருமணமாகாத பெண்களுக்கு நிறையவே இருக்கிறதாம். ஆனால் கல்யாணமான பெண்களுக்கு இருக்கும் கவலையே வேறு.

கணவருக்குப் பிடித்த மாதிரியாக தோன்ற வேண்டும். கணவரைக் கவரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற 'குறுகிய' வட்டத்துக்குள் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்களாம். குடும்பக் கவலை உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்ட்ரா விஷயங்களும் சேர்ந்து திருமணமான பெண்களின் மனப்பளுவை அதிகரித்து விடுகிறதாம். இதனால் அவர்களது எடை உயர வாய்ப்பு ஏற்படுகிறதாம்.

2வது காரணமாக கூறப்படுவது சாதனை மனப்பான்மை. எதையாவது சாதிக்க வேண்டும். மற்றவர்களை விட நாம் ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்ற எண்ணம் திருமணமான பெண்களை விட ஆகாத பெண்களுக்கே அதிகம் இருக்கிறதாம். இது ஆண்களுக்கும் கூட பொருந்துமாம்.

திருமணமாகாதவர்களுக்கு குடும்பப் பொறுப்புகள் இருப்பதில்லை. சுதந்திரமாக இருக்கிறார்கள். கட்டுப்பாடு கிடையாது. எனவே சாதிக்கும் ஆர்வம் இவர்களிடம்தான் அதிகம் இருக்கிறதாம்.

இதுகுறித்து லண்டன் பொருளாதாரவியல் மற்றும் அரசியல் விஞ்ஞானப் பள்ளி நடத்திய ஒரு ஆய்வில், கல்யாணமாகாத ஆண் விஞ்ஞானிகள், திருமணமான ஆண் விஞ்ஞானிகளை விட சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது.

திருமணமாகாத விஞ்ஞானிகளின் சிந்தனைத் திறன், கல்யாணமானவர்களை விட அதிகம் இருக்கிறதாம். ஷார்ப் ஆகவும் இருக்கிறதாம்.

கல்யாணமாகாத ஆண்கள் பெரும்பாலும், தங்களது திறமையைப் பயன்படுத்தி பெண்களைக் கவர முயலுகிறார்கள். பெண்களைக் கவர்ந்து அவர்களை காதலித்து மணந்து கொண்ட பின்னர் அவர்களது கிரியேட்டிவிட்டி படிப்படியாக குறைந்து விடுகிறதாம். வழக்கமான சராசரி ஆண்களாகி விடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

மேலும், கல்யாணமாகி, தந்தையும் ஆன பின்னர் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து விடுகிறதாம். இதுதான் சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

3வது காரணம், வீட்டு வேலைகளில் அசமஞ்சமாக இருக்கலாம். திருமணத்தைத் தவிர்த்து தனிமையில் இருப்பவர்களுக்கு வீட்டு வேலைகளில் படு சுதந்திரம் கிடைக்கிறது.

நமக்கு தோன்றினால் மட்டுமே வீட்டைக் கூட்டலாம், பாத்திரங்களைத் துலக்கலாம். துணிகளைத் துவைக்கலாம். நினைத்த நேரத்தி்ற்கு எந்த வேலையையும் செய்யலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது.

தனிமையில் இருக்கும் பெண்களுக்கு இந்த விஷயத்தில் நிறைய சுதந்திரம் கிடைக்கிறது. திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த ஒரு பத்திரிக்கை ஆய்வில், திருமணமான பெண்களை விட திருமணமாகாத பெண்கள்தான் குறைந்த அளவில் வீட்டு வேலை செய்கிறார்களாம்.

ஆனால் ஆண்கள் அப்படியே தலைகீழ். திருமணத்திற்கு முன்புதான் அவர்கள் நிறைய வீட்டு வேலை செய்கிறார்களாம். ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் அப்படியே தலைகீழாக மாறி விடுகிறார்களாம்.

இன்னொரு முக்கியமான சமாச்சாரத்தை இங்கு சொல்லியாக வேண்டும். அது செக்ஸ். இந்த விஷயம் நம்ம ஊருக்கு எந்த அளவுக்குப் பொருந்தும் என்று தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு இந்த விஷயம் சர்வ சாதாரணம்.

அதாவது, கல்யாணமான ஆண், பெண்களை விட சிங்கிள்ஸ் ஆக இருக்கும் ஆண்களும், பெண்களும்தான் செக்ஸில் அதிக நாட்டம் உடையவர்களாக, அதை அதிகம் அனுபவிப்பவர்களாக உள்ளனராம்.

திருமணமானவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 98 முறை செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதாக ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறது (இது கூடவும் இருக்கலாம்). அதேசமயம், தனிமையில் இருப்பவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 49 முறை செக்ஸ் உறவை மேற்கொள்கிறார்களாம் (இதுவும் கூடக் குறைய இருக்கலாம்).

திருமணமானவர்களுக்கு செக்ஸ் என்பது சாதாரணமான விஷயம். கணவனும், மனைவியும் என்றான பின்னர் பரீட்சார்த்தமோ, வித்தியாசமோ அவர்களிடம் இருக்க முடியாது. ஆனால் தனிமையில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு உறவும் வித்தியாசமானதாக, புதுமையானதாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இதுகுறித்து பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற இதழில் கூறுகையில், திருமணமாகாத ஆண், பெண்களுக்கு செக்ஸ் உறவு ஒவ்வொரு முறையும் புதிதாக தோன்றுகிறது. அதை அவர்கள் அனுபவிக்கத் தவறுவதில்லை. இதனால் ஒவ்வொரு உறவும் அவர்களுக்கு முக்கியமானதாக மாறி விடுகிறது என்கிறது அந்த செய்தி.

இத்தாலியின் பிசா நகர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், திருமணமான முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே ஆண் மற்றும் பெண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரான் அளவு அபரிமிதமாக இருக்கிறது. இதனால் அந்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் செக்ஸில் பூரணமாக ஈடுபடுகிறார்கள்.

ஆனால் அதன் பின்னர் டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து, ஆக்ஸிடாசின் போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகரித்து விடுகிறது. இதனால் வேகம் குறைந்து போய் விடுகிறது.

எனவே செக்ஸ் உறவுக்கும், திருமணத்திற்கும் ஏழாம் பொருத்தம் என்று கூடச் சொல்லலாம்.

இதுதவிர மன அழுத்தம் என்ற விவகாரமே சிங்கிள்ஸ் மனிதர்களுக்கு இருப்பதில்லையாம். திருமணமானவர்களுக்கு பல கவலைகள். ஆனால் திருமணமாகாதவர்களுக்கு ஒரே கவலைதான் - அது பொழுதை எப்படியெல்லாம் போக்குவது என்பது. மன அழுத்தம் இவர்களுக்கு மிக மிக குறைவு என்பதால் உடல் ஆரோக்கியமும் தானாகவே சிறப்பாக இருக்கிறதாம்.ட

இப்படி தனிமையில் இருப்பவர்களுக்குத்தான், திருமணமானவர்களை விட நிறைய சந்தோஷமும், நிம்மதியும், சுதந்திரமும் இருக்கிறது என்கின்றன மேற்கண்ட ஆய்வுகள்.

அதற்காக ஒற்றை மரமாகவே இருந்தால்தான் உருப்படுவோம் என்று நாம் கூற வரவில்லை. இனிமைக்கு தனிமை மட்டுமே முக்கியம் என்றில்லை. இனிய காதலும், அருமையான இல்லறமும் கூட இனிப்பான விஷயங்கள்தான், இல்லையா?

thatstamil.com

தனிமையிலே இனிமை காண முடியுமா ....இனிமைக்கு தனிமை மட்டுமே முக்கியம் என்றில்லை. இனிய காதலும், அருமையான இல்லறமும் கூட இனிப்பான விஷயங்கள்தான், இல்லையா?

தனிமையில் வாடுபவர்களை இச்செய்தி ஆற்றும், அருமையான விதத்தில் எழுதியிருக்கின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நெடுக்ஸ்! திருமணமானவர்களுக்கு இதைத் தவிர்ந்த வேறுபல வேலைகள் இருக்கும். மற்றவர்களுக்கு இதுவே வேலையாய் இருக்கும்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிமையில் வாடுபவர்களை இச்செய்தி ஆற்றும், அருமையான விதத்தில் எழுதியிருக்கின்றீர்கள்

நான் எனது சிறுவயதியில் இருந்து தனிய இருந்தது தான் அதிகம். (நண்பர் வட்டம் இருந்ததுதான்.. ஆனால் அதை எப்பவும் நான் அதிகம் நெருங்குவதில்லை..!) ஆனால் எப்பவும் நான் தனிமையில் வாடியதில்லை. ஆனால் பெற்றோர் பிரிவால் சில சந்தர்ப்பங்களில் கவலைப்பட்டிருக்கிறேன்..!

எனக்கு பழகிட்டுது. அந்த வாழ்க்கை. அப்படித்தான் பலருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்..! :icon_idea:

மற்றது இதை நான் எழுதல்ல. தட்ஸ்ரமிழில் எழுதி இருக்காங்க..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை சுகமானது ஆனால் எல்லோருக்கும் திருமணம் ஆன பின்பு தான் தனிமையின் அருமை புரியும்

தனிமை சுகமானதுதான்.. எனக்கு புடித்த விஷயமும் கூட

தனிமையில் இருப்பவர்களுக்குத்தான், திருமணமானவர்களை விட நிறைய சந்தோஷமும், நிம்மதியும், சுதந்திரமும் இருக்கிறது என்கின்றன மேற்கண்ட ஆய்வுகள்.

100 % உண்மை

சந்தோக்ஷம் என்பது தனிப்பட்ட ஒவ்வொருவரின் எதிர்பார்புகளை பொறுத்தது. எனக்கு சந்தோக்ஷமானது மற்றவருக்கு சந்தோக்ஷமாக இருக்காது. தனிமையில் சந்தோக்ஷம் உண்டு அதே போல் இல்லறம் சரியாக அமைந்தால் வாழ்வு மிகவும் சந்தோக்ஷமாகும்.

மனுசன் உயிரோட இருக்கேக்க மாத்திரம்தான் ஆக்களோட சேர்ந்து இருக்கலாம். செத்தாப்பிறகு எப்பிடியோ! எங்கட உயிர் போனாப்பிறகு இந்த உலகம் ஒண்டும் இல்லாத சூனியமோ என்னமோ..! எண்டபடியால கனக்க ஒண்டும் யோசிக்காமல் ஆக்களோட சேர்ந்து வாழ்க்கையை அனுபவியுங்கோ. தனியாகப் பிறந்தம், தனியாக சாகப்போறம். இடையுக்கையாவது இந்தப்பூலோகத்தில ஆக்களோட சேர்ந்து வாழ்க்கையை பகிருவது சுகமான அனுபவம்தானே. இயற்கை ஏற்கனவே எல்லாத்தையும் தனித்தனியாத்தான் பிரிச்சு வச்சு இருக்கிது. இதுக்கும் மேலால நீங்களும் ஏன் ஆளாளுக்கு இதவிடவும் மேலால பிரிஞ்சு போறீங்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனுசன் உயிரோட இருக்கேக்க மாத்திரம்தான் ஆக்களோட சேர்ந்து இருக்கலாம். செத்தாப்பிறகு எப்பிடியோ! எங்கட உயிர் போனாப்பிறகு இந்த உலகம் ஒண்டும் இல்லாத சூனியமோ என்னமோ..! எண்டபடியால கனக்க ஒண்டும் யோசிக்காமல் ஆக்களோட சேர்ந்து வாழ்க்கையை அனுபவியுங்கோ. தனியாகப் பிறந்தம், தனியாக சாகப்போறம். இடையுக்கையாவது இந்தப்பூலோகத்தில ஆக்களோட சேர்ந்து வாழ்க்கையை பகிருவது சுகமான அனுபவம்தானே. இயற்கை ஏற்கனவே எல்லாத்தையும் தனித்தனியாத்தான் பிரிச்சு வச்சு இருக்கிது. இதுக்கும் மேலால நீங்களும் ஏன் ஆளாளுக்கு இதவிடவும் மேலால பிரிஞ்சு போறீங்கள்?

இயற்கையையே பிரிச்சு வைச்சிருப்பதாகச் சொல்லுறீங்க. அப்ப ஏன்.. தேவையில்லாம.. கூட்டம் போட்டு பிரச்சனைகளை வளர்த்து.. இயற்கை அளித்த நிம்மதியை கெடுக்கனும்..! நம்பிக்கைக்குரிய உண்மையான மன மகிழ்வை விரும்புறவங்க கூட பழகலாம். ஆனால் அப்படி யார் இருக்கா இப்ப உலகில..! :o:D

இயற்கையையே பிரிச்சு வைச்சிருப்பதாகச் சொல்லுறீங்க. அப்ப ஏன்.. தேவையில்லாம.. கூட்டம் போட்டு பிரச்சனைகளை வளர்த்து.. இயற்கை அளித்த நிம்மதியை கெடுக்கனும்..! நம்பிக்கைக்குரிய உண்மையான மன மகிழ்வை விரும்புறவங்க கூட பழகலாம். ஆனால் அப்படி யார் இருக்கா இப்ப உலகில..! :o:D

நெடுக்கு நீங்கள் சொல்லுவது உண்மை சில பேர் மனசில ஒன்று வத்து வெளியில ஒன்று சொல்லுவாங்கள்.. எனக்கு எல்லார் கூடையும் சேர்ந்து இருக்க விருப்பம் . ஆனால் பல உண்மையான சந்த்தோசத்துடன் பேசுறது இல்லை.. இதானலே நான் தனிமைய விரும்புறன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை ஒருத்தருக்கு கலியாணப்பொருத்தம் ஒரு இடத்திலையும் சரிவரேல்லை போலை கிடக்கு :D

சில வேளை மனுசன் ஏழில் செவ்வாயாய் இருக்குமோ :o

  • கருத்துக்கள உறவுகள்

. ஆனால் அப்படி யார் இருக்கா இப்ப உலகில..! :o:D

மகிந்த குடும்பமும் ,பொன்சேகா குடும்பமும்

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக ஒற்றை மரமாகவே இருந்தால்தான் உருப்படுவோம் என்று நாம் கூற வரவில்லை. இனிமைக்கு தனிமை மட்டுமே முக்கியம் என்றில்லை. இனிய காதலும், அருமையான இல்லறமும் கூட இனிப்பான விஷயங்கள்தான், இல்லையா?

thatstamil.com

வண்டில் மாடு போல் இருந்தால் உருப்படலாம் என்று சொல்லவாரியளோ?

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையும் இனிமையே ..எப்படி?

நீங்க எப்படி நெடுக்கு தனிமையில் இனிமையா? அல்லது எபபடி எப்படி??????????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை ஒருத்தருக்கு கலியாணப்பொருத்தம் ஒரு இடத்திலையும் சரிவரேல்லை போலை கிடக்கு :unsure:

சில வேளை மனுசன் ஏழில் செவ்வாயாய் இருக்குமோ :rolleyes:

கு.சா கலியாணம் கட்டுறவையிட பொருத்தத்தை பார்த்தாலே தெரியுதே.. கலியாணத்தின்ர இலட்சனம்..! இதில்.. எந்த புத்தியுள்ள மனிதனாவது அந்த தற்கொலையை செய்வானா..?! நீங்கள் செய்திட்டியள் என்பதறாக நிம்மதியா இருக்கிற மற்றவர்களையும் செய்யத் தூண்டக்கூடாது. அது பொறாமை..! :D:lol:

நீங்க எப்படி நெடுக்கு தனிமையில் இனிமையா? அல்லது எப்படி எப்படி??????????????

நானா.. ஸ்கூல் போகேக்க கொஸ்ரலில தனிய. அப்புறம்.. யுனி போகேக்க கொஸ்ரலில.. தனிய. ஆனால் நண்பர்கள் வட்டத்தின் மத்தியில்.. சாதாரணமானவனாய்.. இருக்கிறேன். தனிமை இனிமை என்று சொல்ல முடியாவிட்டாலும்.. தொந்தரவில்லாதது..! சுதந்திரம் கூடியது..! நினைத்ததை செயலாக்கக் கூடியது..! அடுத்தவரின்ர எரிச்சலுக்கு இலக்காகவதை தடுக்கக் கூடியது..! வீண் சோழிகளில் இருந்து விடுதலை தருவது..! செலவை கட்டுப்படுத்தக் கூடியது..! இப்படி நிறைய நன்மைகள் இருக்குது அதால..! :)

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டி திண்ணையில படுக்கும் போது நினைத்து கொள்வதுதான் தனிமை இனியது என்று :rolleyes::rolleyes:

நம்ம கு.சாவும் அப்படித்தான் என்ன அண்ண நான் சொல்லுற சரியா?? :rolleyes::huh:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்! தனிமை இனிமைதான், அதைவிட இனிமை ஒரு துணை!

முனிவர்ஜி! திண்ணையில படுக்கும்போது தனிமை இனிமையாய்த்தான் தோன்றும். ஆனால் அது நிஜமல்ல. காலையில் விழிக்கும்போது உடம்பில் போர்வையும், தலைக்கடியில் தலைகாணியும், பக்கத்தில் செம்பில் தண்ணியையும் பார்த்ததும் இதயம் நெகிழ்ந்து குங்குமத்தைத்தேடுமே, அதுதான் நிஜம் இல்லையா கு. சா!!!

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிமை சாத்தானின் இருப்பிடம் என்ரு சொல்வார்கள்

ஆனால்

தனிமை தான் ஞானத்தை கொடுக்கும்

தனிமை தான் துயர் நிறைந்த மனதை கடந்த நிலையை தரும்

தனிமை தான் ஆன்ம சாந்தியையும் கண்களில் தெளிவையும் கொடுக்கும்.

-ஓஷோ

Edited by anbujaya

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை ஒருத்தருக்கு கலியாணப்பொருத்தம் ஒரு இடத்திலையும் சரிவரேல்லை போலை கிடக்கு :lol:

சில வேளை மனுசன் ஏழில் செவ்வாயாய் இருக்குமோ :lol:

அதே தான் :D

தனிமையிலும் இனிமை இருக்கலாம் .ஆனால் அது நிலைக்காது .உடலும் மனமும்

சோர்ந்து போகும் வயோதிப நிலையில் அருகில் இருந்து ஆற்றுப்படுத்த ஒரு துணை அவசியம் .நல்ல வாழ்க்கை துணை அமைந்தால் காலமெல்லாம்

வாழ்வில் சந்தோசமே ..........

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொருத்தவரை தனிமையில் இனிமை காண முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொருத்தவரை தனிமையில் இனிமை காண முடியாது

ஏன் அக்கா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிமை சுகமானதுதான்.. எனக்கு புடித்த விஷயமும் கூட

நிஜமாவா? :D

அப்படி தெரியலையே? :lol:

Edited by prasaanth

நிஜமாவா? :)

அப்படி தெரியலையே? :(

அப்படி தெரியவில்லையே என்றால் வந்து பார்த்திர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.