Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

[b]என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்?[/b]

Featured Replies

என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்?

இன்றும் 134 அப்பாவித் தமிழர்களை ஸ்ரீலங்கா அரச படைகள் கொண்றுகுவித்துள்ளன. வன்னியில் அவலப்படும் எமது மக்களுக்காக என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? என்பதுதான் இன்று புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்ற பிரதான கேள்விகள்.

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் மக்களாகிய என் போன்றவர்களை நினைத்து எனது மனதில் எழுந்த சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். மற்றைய நாடுகளில் வாழ்பவர்களும் அவரவர் நாடுகளுக்கேற்றபடி இக்கருத்துகளை பயன்படுத்த முடியும்.

இன்றைய அத்தியாவசிய தேவை என்ன?

• அப்பாவி குடிமக்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் தாக்குதல்கள் உடன் நிறுத்தப்படவேண்டும்.

• சர்வதேச தொண்டு நிறுவனங்களை வன்னியில் செயற்பட அனுமதிக்கவேண்டும். (அவ்வாறு செயற்பட்டால்தான் எமது மக்களை இன அழிப்பிலிருந்து ஓரளவாவது காக்கமுடியும்.)

• சர்வதேச செய்தி நிறுவனங்களை யுத்தப் பிரதேசங்களுக்கு அனுமதிக்கவேண்டும். (சர்வதேச செய்தி நிறுவனங்கள் அங்கு இருந்தால்தான் உண்மை நிலை வெளி உலகிற்கு தெரியவரும்.)

இம் மூன்றும் சாதாரன மனித உரிமைகள். மனிதர்களாகப் பிறந்த எவரும் அனுபவிக்கக்கூடிய உரிமைகள்.

இவற்றை ஸ்ரீலங்காவிடம் கண்டிப்புடன் வலியுறுத்துமாறு பிரித்தானியாவை நாம் கோரலாம். அப்படிக் கோருவதற்கு எமக்கு உரிமை உள்ளது. அதை ஸ்ரீலங்காவிடம் வலியுறுத்துவதற்கு பிரிட்டனுக்கும் உரிமை உள்ளது. அது பிரித்தானியாவின் கடமையும்கூட.

நாம் இலகுவாகச் செய்யக்கூடியவை:

• பெருந்திரளான மக்கள் கார்களில் பதாகைகளையும் சுலோகங்களையும் ஒட்டியபடி (பத்தாயிரக்கணக்கில்) அதிகாலையிலேயே (06:00 அளவில்) மத்திய லண்டனுக்கு சென்று இயல்பு நிலையை செயற்படவிடாது செய்தல். (உங்கள் கார் வீதியில் பயன்படுத்த்தக்கூடியதாகவும் (MOT & Road Tax) அதற்குரிய காப்புறுதியும் (Insurance) சாரதி அனுமதிப்பத்திரம் (driving Licence) இருந்தால் எவரும் சட்டப்படி உங்களைத் தடுத்துநிறுத்தமுடியாது)

• மிச்சிறிய (பொக்கட் ஸைஸ்) பிரசுரங்களை பிரித்தானிய மக்களிடையே வினியோகித்தல்.

• பொப்பி மலர் போன்ற ஏதாவது ஒன்றை (இனப் படுகொலைக்கெதிரான அடையாளமாக) அணிவதற்கு பிரித்தானிய பொதுமக்களைத் தூண்டுதல்.

• ‘இனப் படுகொலை’ என்பதை முதன்மைப்படுத்திய பிரசாரங்களை முடுக்கிவிடுதல்.

• LBC (97.3FM) போன்ற வானொலிகளில் எமது பிரச்சனைகளை கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.

• பெரிய சுவரொட்டிகள் ஒட்டுதல்.

இவ்வாறு பலவற்றை நாம் செய்யலாம். அதனூடாக பிரித்தானிய மக்களின் கவனத்தை இனப்படுகொலைக்கெதிராகத் திரட்டலாம்.

தயவுசெய்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இது அவசர அவசியத் தேவை. நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அங்கே இழப்புகள் பெருகும்.

Edited by bara

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

தயவுசெய்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இது அவசர அவசியத் தேவை. நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அங்கே இழப்புகள் பெருகும்.

  • தொடங்கியவர்

இதுபோன்று பதாகைகளை ஒட்டலாம்.

sample-1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மிக முக்கியமான விடயமாகும். நாங்கள் சில நவீன விளம்பர (display Box) காட்சிப்படுத்துகைக்கானவற்ற

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. பாதுகாப்புசபை இலங்கைக்கு பொருளாதாரத்தடை, ஆயுதத்தடை, போக்குவரத்துத்தடை ஆகியவற்றை விதித்து இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஐ.நா. சபையில் இலங்கை போரை பற்றி விவாதிக்க மெக்சிக்கோ பிரதிநிதி கிளோயுட் ஹெல்லர் முயன்ற போது ரசியா அதை தடுத்துள்ளது. ஒரு வாரத்துககு முதல் நடந்த பாதுகாப்புசபை கூட்டத்தில் இது நடைபெற்றிருக்கிறது. மெக்சிக்கோ மீண்டும் முயற்சிக்க இருக்கிறது. இதற்கு நாம் நிறைந்த அளவு ஆதரவு கொடுக்க வேண்டும். ஆதாரங்களை கொடுக்க வேண்டும். மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணைப்பை பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=52540

ஜூட் அண்ணா ரசியா தனியாக தடுத்ததாக உண்மையில் செய்தி இல்லை... பிரித்தானியா செய்ததாகத்தான் சொல்லப்பட்டது, பின்னர் ரசியாவும் பிரித்தானியாவும் தடுத்தன எண்று சொல்லப்பட்டது...

பிரித்தானியா தான் நேராக தலையிடும் எண்ணம் இருந்ததால் பல்நாட்டு பிரதிநிதிகளை தலையிடாமல் தான் மட்டும் நுளைந்து பலன் அடைய செய்து இருக்கலாம்.... ஆனால் ரசியா தடுத்தது நிச்சயமாக இந்தியாவுக்கு செய்த கைமாறாக இருக்க வேண்டும்....!!

வல்லருசுகளின் போட்டி களமாக ஆகி கொண்டு இருக்கிறது எங்களின் அவலம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட் அண்ணா ரசியா தனியாக தடுத்ததாக உண்மையில் செய்தி இல்லை... பிரித்தானியா செய்ததாகத்தான் சொல்லப்பட்டது, பின்னர் ரசியாவும் பிரித்தானியாவும் தடுத்தன எண்று சொல்லப்பட்டது...

ஐ.நா. பாதுகாப்புசபை பற்றிய விடயங்களை ஆய்வு செய்யும் செய்தியாளரான Inner City Press ஐ சேர்ந்த Matthew Russell Lee (mlee@innercitypress.org) என்பவர் தொடர்ச்சியாக இலங்கை பிரச்சினை பற்றி ஐ.நா. செயற்படவில்லை என்றும், அதற்கான காரணங்களை ஆராய்ந்தும் எழுதிவருகிறார். ரசியா தான் இலங்கை பிரச்சினை நிகழ்ச்சிநிரலில் இல்லை என்றும் இந்தப்பிரச்சினை நிகழ்ச்சிநிரலில் இடம்பெற தேவையில்லை என்றும் கூறிவருவதாக இவர் எழுதியிருக்கிறார்.

இந்த செய்தியாளர் நியுயோர்க் நகரில் ஐ.நா. நிறுவனத்துக்கு சென்று பாதுகாப்புசபை முடிவில் இடம்பெறும் செய்தியாளர் கருத்தரங்கில் பங்குபற்றி கேள்விகள் கேட்டு, பதில்களை வீடியோ பதிவுசெய்து வெளியிட்டிருக்கிறார். முதலில் நீங்கள் சொல்வது போல மற்ற நாடுகளும் இலங்கை பிரச்சினையை ஐ.நா. பாதுகாப்புசபையில் எடுப்பதை தடுக்க இருக்கின்றன என்று எழுதியிருந்தார். ஆனால் பின்னர் பிரித்தானிய பிரதிநிதியிடம் நேரடியாக இதுபற்றி கேட்க, அந்த பிரதிநிதி தாம் இலங்கை பிரச்சினை பற்றி பாதுகாப்புசபை விவாதிப்பதை எதிர்க்க மாட்டோம் என்றும் உண்மையில் ஆதரிப்போம் என்றும் கூறியதாக் தெரிவித்துள்ளார்.

http://www.innercitypress.com/ban5srilanka021309.html

http://www.innercitypress.com/un1srilanka020409.html

Edited by Jude

ஐ.நா. பாதுகாப்புசபை பற்றிய விடயங்களை ஆய்வு செய்யும் செய்தியாளரான Inner City Press ஐ சேர்ந்த Matthew Russell Lee (mlee@innercitypress.org) என்பவர் தொடர்ச்சியாக இலங்கை பிரச்சினை பற்றி ஐ.நா. செயற்படவில்லை என்றும், அதற்கான காரணங்களை ஆராய்ந்தும் எழுதிவருகிறார். ரசியா தான் இலங்கை பிரச்சினை நிகழ்ச்சிநிரலில் இல்லை என்றும் இந்தப்பிரச்சினை நிகழ்ச்சிநிரலில் இடம்பெற தேவையில்லை என்றும் கூறிவருவதாக இவர் எழுதியிருக்கிறார்.

இந்த செய்தியாளர் நியுயோர்க் நகரில் ஐ.நா. நிறுவனத்துக்கு சென்று பாதுகாப்புசபை முடிவில் இடம்பெறும் செய்தியாளர் கருத்தரங்கில் பங்குபற்றி கேள்விகள் கேட்டு, பதில்களை வீடியோ பதிவுசெய்து வெளியிட்டிருக்கிறார். முதலில் நீங்கள் சொல்வது போல மற்ற நாடுகளும் இலங்கை பிரச்சினையை ஐ.நா. பாதுகாப்புசபையில் எடுப்பதை தடுக்க இருக்கின்றன என்று எழுதியிருந்தார். ஆனால் பின்னர் பிரித்தானிய பிரதிநிதியிடம் நேரடியாக இதுபற்றி கேட்க, அந்த பிரதிநிதி தாம் இலங்கை பிரச்சினை பற்றி பாதுகாப்புசபை விவாதிப்பதை எதிர்க்க மாட்டோம் என்றும் உண்மையில் ஆதரிப்போம் என்றும் கூறியதாக் தெரிவித்துள்ளார்.

http://www.innercitypress.com/ban5srilanka021309.html

http://www.innercitypress.com/un1srilanka020409.html

அப்படி எண்றால் வேண்டும் எண்றே ரசியாவின் தலையீட்டை மறைக்க பிரித்தானியா எனும் பதம் பாவிக்க பட்டு பிரச்சாரம் செய்ய பட்டு இருக்கிறது...!!

இதற்கு முன்னும் பல தடவை தமிழர்களுக்கு மட்டும் செய்திகள் வேறு விதமாக போய் சேர வேண்டும் எண்று செயற்பட்டு இருக்கிறார்கள்... பிரித்தானியாவில் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கும் மக்களுக்கும் இளையோருக்கும் இது ஒரு சோர்வை தரும் செய்தியாக அமைந்தது....

அண்மையில் கூட இந்தியா 120 டாங்கிகளை இலங்கைக்கு வழங்கும் முன்னர் சீனா 160 தாங்கிகளை வழங்குக்கிறது எனும் செய்தி பரப்ப பட்டது...

இப்படியான பொய்யானா பரப்புரைகளை தமிழர் மத்தியில் விதைப்பவர்கள் யார்....??? தெரிந்தே செய்கிறார்களா..?? அல்லது ஏமாற்றப்பட்டு செய்கிறார்களா..?? அதாவது விளக்கம் இல்லாமல்...

ஆராய்ந்து வெளிச்சமாக்க படவேண்டிய முக்கிய விடயம்கிறது இது...

Edited by தயா

  • தொடங்கியவர்

தயவுசெய்து தலைப்புக்கு ஏற்ற பின்னூட்டமிடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஊடகங்களுக்கு அனுப்புங்கள்

பொதுவாக வன்னியில் நடைபெறும் நிகழ்வுகள் தமிழ் நெற்றைவிட வேறு ஆங்கில ஊடகங்களில் வருவது குறைவு. சர்வதேச ஊடகங்களிலும் எமது செய்திகளை விட சிங்கள அரசின் பொய்யான செய்திகளே வருகின்றன. எமக்கு சார்பாக வரும் செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வரும் போது சிங்களவர்கள் உடனுக்கு உடன் கண்டனங்களைத் தெரிவிக்கிறார்கள். ஆனால் தமிழர்களில் குறைவான எண்ணிக்கையானவர்களே அதற்கு நன்றிகள் தெரிவிக்கிறார்கள். எமக்கு எதிரான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வரும் போது எங்களில் பெரும்பாலோர் அதற்கு கண்டனம் தெரிவிப்பதில்லை. ஆனால் சிங்களவர்கள் அதற்கு நன்றிகள் தெரிவிக்கிறார்கள். எம்மவர்களின் அவலங்களை உலக ஊடகங்களுக்கு அனுப்பவேண்டியது அனைவரின் கடமையாகும்.

சில ஊடகங்களின் மின்னஞ்சல்கள்

Caff.News@abc.net.au, cardwells@aap.com.au, newsdesk@smh.com.au, news.sydney@aap.com.au, fisherw@aap.com.au, amnestyis@amnesty.org, alertnet@reuters.com, info@ap.org, imrv@humanrights.de, executive-editor@nytimes.com, sg@un.org, secrt@ohchr.org, Press-Info@ohchr.org, hrwpress@hrw.org, cos@sbs.com.au, rcaffaudience@your.abc.net.au, RCaff.Research@abc.net.au, gordon.westcott@sbs.com.au, ADMIN.ACMS@abc.net.au, radio.news@abc.net.au, nsw@theaustralian.com.au, world@theaustralian.com.au, producers@skynews.com.au, boss@crikey.com.au, offtherecord@crikey.com.au, tvnews <tvnews@news.abc.net.au>, news <news@seven.com.au>, news@dailytelegraph.com.au, newsroom@2gb.com, news@2ue.com.au, newsradio.media@your.abc.net.au, tcnnewsroom@nine.com.au, news@networkten.com.au

மேலே நான் இணைத்தவை பெரும்பாலானவை அவுஸ்திரெலியா ஊடகங்கள், அமைப்புக்கள்

சில சர்வதேச ஊடகங்களுக்கு எமது கண்டனங்களை அவ்வூடகங்களின் இணையத்தளத்திற்கு சென்றும் அனுப்பலாம்

bbc -

http://news.bbc.co.uk/newswatch/ukfs/hi/ne...900/3993909.stm

abc - http://www.abc.net.au/contact/contactabc.htm

cnn - http://edition.cnn.com/feedback/tips/newstips.html

&

http://edition.cnn.com/feedback/forms/form11b.html?1

CNN க்கு இரண்டு முறை 'submit form' என்பதை அழுத்தி அனுப்ப வேண்டும்.

நாடளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் அவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டான சிறிலங்காப்பகுதியில் அடைக்கலம் தேடிச் சென்ற 190 ஆண்கள் கொல்லப்பட்டதும், 130 பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டதும் தமிழ் நெற்றைத் தவிர வேறு ஆங்கில ஊடகங்களில் வரவில்லை. இதனை நாங்கள் சர்வதேச ஊடகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

மிக நல்ல முயற்சி பரா.... பொருட்செலவைக் குறைத்துக் கொள்ள தமிழ் அச்சு நிறுவனங்களை நாடி ஆதரவு கேட்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் இது தொடர்பான சில வேலைத்திட்டங்களுக்காக உதவி தேவைப்படுகிறது...

voiturecopie-full;init:.jpg
  • தொடங்கியவர்

தமிழ்!

பிரித்தானியாவில் இவ்வாறான ஒரு கார்கள் அணிவகுப்புக்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. உங்களளுடைய வடிவமைப்புப் பங்களிப்பும் பெரிதும் எதவும் என நினைக்கின்றேன். ஆயத்தங்களைத் தொடங்குங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

genocide%20in%20tamil%20.jpg

stop_genocide in tamil

Edited by tamil92

  • கருத்துக்கள உறவுகள்

நல்லமுயற்சி

அனைவருக்கும் நன்றிகள்

முக்கியமாக திரு.மணி அவர்கட்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-> நாம் நடத்தும் கவனஈர்ப்பு செய்திகளை அல்லது விளம்பரங்களை சர்வதேச தொலைக்காட்சிகள் மறந்தாலும் மற்ற சிறிய ஒளிபரப்பில் (local channels) / FM radio இல் இடம்பெற செய்யலாம்.

-> Bumper stickers

-> கவன ஈர்ப்பு நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களை Indian Grocery கடைகளில் வைக்கலாம்

-> அரசியல் பிரமுகர்களுக்கு அனுப்பும் செய்திகளை மின் அஞ்சலுக்கு பதில் FAX அல்லது Post இல் அனுப்பினால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இனப்படுகொலையை வெளிப்படுத்தும் வசனங்கள் படங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அனைவரும் அணிய வேண்டும். இவ்வாறான உடைகளுடன் எங்கும் நடமாடும் போது அனைவரையும் அது கவர்ந்து இது தொடர்பான தேடல்களுக்கு இட்டுச்செல்லும்.

  • தொடங்கியவர்

பிரித்தானியாவில் பதாகைகள் ஒட்டிய சிற்றுர்ந்துகள் (கார்கள்) பவனி ஒன்றுக்கு மும்முரமாக ஏற்பாடுகள் நடந்துவருவதாக அறிகின்றேன். விபரம் தெரிந்தவர்கள் யாராவது சொன்னால் நல்லது.

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.. தமிழர்கள் இப்போது நன்றாக சிந்தித்து செயல்பட வெளிக்கிட்டார்கள்.. இனி எவரும் தடுக்க முடியாது..

ஏற்கனவே தமிழர் தமிழர் வெளி நாட்டுக்குழுக்கள் பற்றி எழுதி உள்ளேன் அதன் மூலம் ஒவ்வொரு நாட்டின் பிரதினிதிகளைச்சந்திட்த்து ஈழத்தமிழர் வரலாறுகள், இன அழிப்பு நடவடிக்கைகளை ஆதரங்களுடன் நிரூபித்தல், அத்துடன் அரச இனவெறி பயங்கரவாத்தினால் வந்த தற்காப்பே தமிழர்தரப்பு தீவிரவாதம் என்பதை புரியப்பண்ணல்..இது உலகவரலாற்றில் புதியவிடையமல்ல என்பதையும் வலியுருத்த வேண்டும்..

இனப்படுகொலைகளை உலகின் கண்களுக்கு கொண்டு வருதல்..

இலங்கையின் பொய் பிரச்சாரத்தை முறியடித்தல்..

ஒன்றுபடுங்கள் செயல்படுங்கள்.. காலத்தின் உடன் தேவை.. சோரவிடாதீர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இனப் படுகொலைகள் தொடர்பான சுவரொட்டிகள்,சீடிக்கள் என்பவற்றை அந்தந்த நாட்டு மொழியில் தயாரித்து ஒவ்வொருவரும் தங்கள் அருகாமையில் உள்ள வீடு வீடாக சென்று விநியோகிக்கலாம்.

  • தொடங்கியவர்

ஈழத் தமிழரின் இன்றைய அவல நிலை தொடர்பாக விளக்கும் முகமாக லண்டனின் பல நகரங்களிலும் நேற்று முன்நாள் அங்கு வாழும் தமிழர்களால் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின சுத்திகரிப்பை அம்பலப்படுத்தும் காட்சிகள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு வாகனங்களிலும் கால்நடையாகவும் அங்கு வாழும் தமிழர்களால் இக்கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

முற்பகல் 10:00 மணி தொடக்கம் பிற்பகல் 4:00 மணி வரையும் நடைபெற்ற கவனயீர்ப்பில் மத்திய லண்டன் பகுதியை நோக்கி சிறிலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட தாயக மக்களின் படங்களை வாகனங்களில் தாங்கிச் சென்றனர்.

london_20090223001.jpg

இதனை பார்வையிட்ட பலர், இலங்கையில் நடக்கும் தமிழின அழிவு தொடர்பாக கேட்டறிந்ததுடன், தங்களால் இந்த அழிவை தடுக்க எவ்விதமான உதவிகளை செய்யலாம் எனவும், இனி வரும் காலங்களில் தாங்களும் ஒன்று சேர்ந்து இது போன்ற போராட்டங்களில் கலந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

பிரித்தானிய அரசு தனது நலன்களுக்காக சிறிலங்காவின் தமிழின ஒழிப்பை மறைத்து வரும் இந்த வேளையில், பிரித்தானிய மக்கள் மத்தியில் கவனயீர்ப்பு பாரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக பயங்கரவாதத்திற்க்கு எதிரான போரும் ஈழத்தமிழரின் ஐம்பது வருட சுய நிர்ணய உரிமைப் போராட்டமும் என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்தால் என்ன? இதனை பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஏற்பாடு செய்ய பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகை நிருபர்கள், மனித உரிமைவாதிகள் போன்றவர்களை அழைத்து எமது தரப்பு நியாங்களை புரிய வைக்கலாம்.

இதில் எமது இளையவர்கள் தம்மைத் தயார்படுத்தி சொற்பொழிவாக்கலாம்.

எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உரையாற்றலாம்.

அங்கே வன்னி மக்கள் படும் அவலங்களை ஒரு கண்காட்ச்சி மூலம் தெரியப்படுத்தலாம். சிறிலங்கா அரசாங்கம் தடை செய்த போதிலும் துணிவுள்ள நிருபர்கள் மக்கள் அவலங்களை வெளியில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் எனக் கோரலாம். சிம்பாவே போன்ற நாடுகளுக்கு பிபிசி தனது நிருபர்களை கழவாக அனுப்பி நடந்தவற்றை வெளியில் சொல்லவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.