Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் ரிவி, கலைஞர் ரிவியை புறக்கணியுங்கள்!

Featured Replies

சன் ரிவி, கலைஞர் ரிவியை புறக்கணிக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் "தமிழர் விழிப்பு இயக்கம்" விடுக்கும் ஒரு அவசர வேண்டுகோள் இது:

இன்றைக்கு நாம் ஒரு மிகப் பெரும் அவலத்திற்குள் நிற்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தால் எமது உறவுகள் தினம் தினம் கொன்று குவிக்கப்பட்டக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்காது கோரமான கொலைவெறியாட்டத்தை சிங்களப் பேரினவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றது.

எம்மீதான இனப் படுகொலையை எதிர்த்து உலகம் முழுவதும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் உங்களிடம் இந்த நேரத்தில் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம்.

தமிழீழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை வெளிக்கொணரும் கட்டாயமான கடமை தமிழர்களின் ஊடகங்களிற்கு இருக்கின்றது. தமிழினம் என்றுமில்லாதவாறு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இனப் படுகொலையை எதிர்த்தும், தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை ஆதரித்தும் குரல் கொடுக்க வேண்டிய கடமை இந்த ஊடகங்களிற்கு இருக்கின்றது.

ஆனால் சில ஊடகங்கள் இந்தக் கடமையை மறந்ததும் அன்றி, எமது மக்களுக்கு எதிராகவும் செயற்பட்டும் வருகின்றன. சில ஊடகங்கள் எமக்கு ஆதரவு போன்று காட்டிக் கொண்டு, மறைமுகமாக தமிழினத்தின் போராட்டத்தை மழுங்கடிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

எமது மக்கள் படும் இன்னல்களையும,; போராட்டத்திற்கு ஆதரவான செய்திகளையும் இருட்டடிப்புச் செய்தும், எமக்கு எதிரான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், களியாட்ட நிகழ்வுகளை வழங்கி மக்களை திசைதிருப்பியும் வருகின்ற ஊடகங்களை நாம் புறக்கணிக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

எமது மக்களின் அவலங்களை அம்பலப்படுத்தக் கூடிய, தமிழீழ மக்களிற்கு ஆதரவு திரட்டக் கூடிய வலுவும் வசதியும் இருந்தும் சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றன இதற்கு மாறான வகையிலேயே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன என்பதை உங்களுக்கு இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஈழத்தில் நடக்கின்ற அவலங்களை மட்டும் அன்றி, தமிழ்நாட்டில் எமக்கு ஆதரவாக மக்கள் கிளர்ந்து எழுகின்ற செய்திகளைக் கூட இந்தத் தொலைக்காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வருகின்றன. அண்மையில் ஈழத் தமிழர்களுக்காக திரு தொல் திருமாவளவன் அவர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது, அது பற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்தன.

எமக்காக தன்னை நெருப்புக்கு இரையாக்கி தியாகம் செய்த மாவீரன் முத்துக்குமாரன் பற்றிய செய்திகளையும் இருட்டடிப்புச் செய்து, ஊடக தர்மத்தையே காலில் போட்டு மிதித்தன. மாவீரன் முத்துக்குமாரனின் இறுதி நிகழ்விற்கு மக்கள் தன்னெழுச்சியோடு இலட்சக் கணக்கில் திரண்டனர். அரசியல்வாதிகளின் பிறந்த நாள் விழாக்களை முக்கியத்துவம் கொடுத்து செய்தி சொல்லும் சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் மாவீரன் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் பற்றி ஒரு வரி கூடச் சொல்லவில்லை.

அத்தோடு சிங்கள இனவாதத்தோடு கைகோர்த்து நின்று இன அழிப்பில் நேரடியாகப் பங்கெடுத்து வரும் காங்கிரஸ் அரசை நியாயப்படுத்தும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. தமிழின விரோதிகளை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் போன்று சித்தரிக்கும் கைங்கர்யத்தை எந்த வகையிலும் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது.

எமக்காக வீதியில் இறங்கிப் போராடுபவர்களைக் கொச்சைப்படுத்தியும், அவர்களின் போராட்டத்தை இருட்டடிப்புச் செய்தும், சிங்கள இனவாதத்திற்கு முண்டு கொடுப்பவர்களுக்கு வக்காலத்து வாங்கியும் வருகின்ற இந்த தொலைக்காட்சிகளை ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் ஆதரித்துக்கொண்டிருக்க முடியாது. உடனடியாக இந்த தொலைக்காட்சிகளை நாம் புறக்கணிப்போம்

அன்பார்ந்த தமிழ் மக்களே!

ஈழத்தில் உண்ண உணவும் உடுக்க உடையும் இன்றி, சிங்களத்தின் கோர வெறியாட்டத்திற்குள் எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழ்நாட்டிலும் மற்றும் பல நாடுகளிலும் எமக்காக பல துன்பங்களுக்கு மத்தியில் பலர் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பல இளைஞர்கள் தம்மை தீக்கு அர்பணித்து விட்டு நிற்கின்ற இந்த வேளையில், இரண்டு தொலைக்காட்சிகளை தியாகம் செய்வது எமக்கு ஒன்றும் பெரிய விடயம் இல்லை. ஆகவே எவ்வித தயக்கமும் இன்றி இந்தத் தொலைக்காட்சிகளை முற்றாகப் புறக்கணியுங்கள்!

அன்பார்ந்த வர்த்தகர்களே!

தமிழ் மக்களின் போராட்டத்திற்கு பல பங்களிப்புகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். தமிழினத்திற்கு எதிராக செயற்படும் இந்தத் தொலைக்காட்சிகளை புறக்கணிக்கும் போராட்டத்திற்கும் நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உங்கள் வர்த்தக நிறுவனங்களில் இந்தத் தொலைக்காட்சிகளுக்கான அட்டைகளை விற்பதை நிறுத்துங்கள்! நீங்கள் மனது வைத்தால் எமது புறக்கணிப்புப் போராட்டம் விரைவில் வெற்றியடைந்து விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி இரண்டையும் புறக்கணிப்பதோடு, சன் தொலைக்காட்சி தயாரிக்கும் படங்களையும் புறக்கணிக்கும் முடிவை நாம் எடுத்துள்ளோம். அந்த வகையில் சன் தொலைக்காட்சி தயாரிப்பில் வெளிவரும் படங்களை புலம்பெயர் நாடுகளில் இனிமேல் திரையிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது, எதிரியின் செயற்பாடுகளுக்கு துணை போய்க்கொண்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சிகளுக்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கும் வண்ணம் நாம் விடுத்திருக்கும் இந்த போராட்ட அழைப்பை ஏற்று விரைந்து செயற்படும்படி அனைத்துத் தமிழ் மக்களையும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.

"ஒற்றுமையே வலிமை"

"வலிமையே வாழ்வு"

-தமிழர் விழிப்பு இயக்கம்

thamilarvilippuiyakkam2009@gmail.com

ஜெயா ரிவி நிகழ்ச்சிகளை போடும் ரிவிகளுமா?

ஜெயா ரிவி நிகழ்ச்சிகளை போடும் ரிவிகளுமா?

ஜெயா டீவி தமிழர் நலன் கொன்ற டீவி . அதை ஒளிபரப்பிறவங்க தமிழர் அக்கறையில சண் - கலைஞர் எல்லாத்தையும் நிறுத்த திட்டம் போட்டுட்டாங்க போல :blink:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இப்பிடி ஒரு கோரிக்கை வந்து எங்கட மக்கள் "மானாட மயிலாட பாக்காம நாங்கள் என்னண்டு வாழுறது" எண்டு இங்க வந்து ஒப்பாரி வைக்காத குறை. திரும்பவும் அது தான் நடக்கப் போகுது. தலைவன் வந்து துவங்கி வைச்சுட்டேர் பாக்கேல்லயோ?

அது தானாகவே நடக்கும் அவர்கள் தாங்களாகவே விட்டுவிட்டு போவார்கள்.. இன்ரர்நெற் நிசீவர்களின் வருகைக்கு பின் இவர்களிடம் கார்ட்டுகள் வாங்கி பார்ப்பவர்களின் அளவு குறைந்தே வருவதனால். இவர்களுக்கான வருமானம் குறையவே தாங்களாக ஓடுவார்கள். இங்கு சண் ரீவி காட் விக்கும் தமிழர் ஒருவர் தான் இது பற்றி சொன்னார்.

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார்.

எங்களுக்கு மானம் ரோசம் என்று ஒன்றிருந்தால் நிச்சயமாக வன்னி மண்ணில் கொலை செய்யப்பட ஆயிரக்கணக்கான தமிழர்களின் எந்த ஒரு செய்தியையும் ஒலிபரப்பாத சன் ரீவி தொலைக்காட்சியை புறக்கணிப்பதோடு, அவர்களுடைய எந்திரன் திரைப்படத்தையும் பெருமளவு பணம் கொடுத்துப் பார்க்காதிருப்போம் என்று உயிரிழந்த மக்களின் சார்பாகவும் முள்வேலிக்குள் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ஏனையோரின் சார்பாகவும் ஒரு தீர்க்கமான முடிவொன்றினை இன்று எடுத்துகொள்ளுவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலிருந்து சில இரண்டுகால் ஜந்துகள் புலம்பெயர்ந்து வரும்போது தாம் வளர்த்த நான்குகால் ஜந்துகளின் நாகரீகமற்ற குணங்களையும் தங்களுடன் கொண்டுவந்து இங்கு சேர்த்துவிட்டார்கள் இதுகளை எந்தச்சோப்புப் போட்டும் வெள்ளையாக்க முடியாது.

இதுகள் சாப்பிடாமல் கிடந்தாலும் கிடக்குங்களே தவிர இப்படியான நல்ல காரியங்கள் எதுவும் செய்யாதுகள். நான் அறிய புலம்பெயர் தேசத்தில் தங்கள் மனைவிமாரின் முணுமுணுப்பிலிருந்து தப்புவதற்காக நிறையப் பொறுப்பாளர்கள்கூட தங்களது வீட்டில் இந்தமாதிரி அசிங்கங்களை கொண்டுவந்து வைத்திருக்கினம். அதுக்குப் பின்பு சலம்பல் பண்ணுவதிலும் குறைச்சலில்லை.

என்றாலும் முயற்சியில் இருந்துபின்வாங்காது மாற்றாக ஏதாவது செய்தால் நன்று.

தமிழரின்ட இரு கண்கள்,சன் ரிவியும் கலைஞர் ரிவியும்,எழுமென்றால் புடுங்குங்கோவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு மானும் மயிலும் ஆடுறதை பார்க்காமல் இருக்கேலாது,சன் மியுசிக் பார்க்காமல் காலையே விடியாது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிப்பு என்பது எல்லா வழிகளும் அடைபட்ட பின்னர் கடைசியாக‌ செய்யப்படவேண்டியது. உதாரணமாக திரைமறைவில் தொழிலாளர் சங்கங்கள் முதலாளியுடன் பேசி இயலாத கட்டத்தில்தான் வேலை நிறுத்தம் என்கிற கடைசி ஆயுதத்தை எடுக்கின்றனர். இதன் மூலம் முதலாளிக்கு பிரச்சினையை முன்கூட்டியே தீர்ப்பதற்கு ஒரு நியாயமான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

அது போன்றதொரு அடிப்படையில், சன் குழுமத்துக்கும் ஒரு வாய்ப்பை வழங்குவதன் மூலம் சன் குழுமத்தின் மூலம் எமது தரப்பு நியாயங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டனவா?

எமது புலம்பெயர் தமிழர் மூலம் சினிமாவில் பெறப்படும் வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு உள்ளது. ஆனால் புறக்கணிப்பு என்பவர்கள் தமது ஒருங்கிணைந்த பலம் எவ்வளவு என்று சன்குழுமத்துக்கு அறியத்தராத பட்சத்தில், அவர்கள் இந்தக் கோரிக்கையை நிராகரிக்கவே செய்வார்கள். இதற்கு நாம் செய்யக்கூடியது,

1) புறக்கணிப்பு அளவுக்கு செல்லும் முன்னர், எமது கோரிக்கையை அவர்களுக்கு முன் எடுத்து வைப்பது.

2) எமது பலம் என்ன என்பதை நிரூபிப்பது. (இணையத்தளம் ஒன்றின்மூலம், புறக்கணிப்புக்கு ஆதரவான மக்கள் கூட்டத்தைத் திரட்டுவது)

3) இந்த நடவடிக்கையில் ரஜினிகாந்த், வெளிநாட்டு விநியோக உரிமையை வாங்கியவர்கள் யாவரையும் உள்ளடக்குவது.

புறக்கணிப்பு என்பது எப்போதுமே கடைசிக்கட்டமாகத்தான் இருக்க வேண்டும்...

Edited by Danguvaar

  • 4 weeks later...

இணையம் மூலம் சண், ஐங்கரன் தொலைக்காட்சிகளை மக்கள் அவர்களுடைய அட்டைகள் இல்லாது கண்டு களித்ததை தொடர்ந்து மிகப்பெரும் பணச்செலவில் சண் நிறுவனம் தனது சேவையை புதிய தொழிநுட்பத்துக்கு மாற்றியதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். தமிழனா கொக்கா மீண்டும் இவர்களின் புதிய தொழிநுட்பத்தை தகர்த்து இலவசமாக மட்டைகள் இன்றி பார்ப்பதற்கு விடுகின்றனர். ஆக மொத்தம் ஒட்டுண்ணி மாதிரி இருந்து எம் பணங்களை உறிஞ்சுவது மட்டுமல்ல எம் மக்களின் விடுதலை வேட்கைகளையும் சிதைக்கும் இந்த மாதிரி கீழ்த்தனமான தொலைக்காட்சிகள் இங்கிருந்து இல்லாது ஓடும் வரை தாம் இதனை கைவிடுவதில்லை என தெரிவிக்கின்றார். இந்தியர்களின் புதிய MPEG 4 தொழிநுட்பத்தை தகர்த்த ஈழத்தமிழன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இணையம் மூலம் சண், ஐங்கரன் தொலைக்காட்சிகளை மக்கள் அவர்களுடைய அட்டைகள் இல்லாது கண்டு களித்ததை தொடர்ந்து மிகப்பெரும் பணச்செலவில் சண் நிறுவனம் தனது சேவையை புதிய தொழிநுட்பத்துக்கு மாற்றியதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். தமிழனா கொக்கா மீண்டும் இவர்களின் புதிய தொழிநுட்பத்தை தகர்த்து இலவசமாக மட்டைகள் இன்றி பார்ப்பதற்கு விடுகின்றனர். ஆக மொத்தம் ஒட்டுண்ணி மாதிரி இருந்து எம் பணங்களை உறிஞ்சுவது மட்டுமல்ல எம் மக்களின் விடுதலை வேட்கைகளையும் சிதைக்கும் இந்த மாதிரி கீழ்த்தனமான தொலைக்காட்சிகள் இங்கிருந்து இல்லாது ஓடும் வரை தாம் இதனை கைவிடுவதில்லை என தெரிவிக்கின்றார். இந்தியர்களின் புதிய MPEG 4 தொழிநுட்பத்தை தகர்த்த ஈழத்தமிழன்.

:unsure::huh: MPEG 4=hd broadcasting all redey sky hdbroadcasting crack in uk

any one want new cccam hd cline put in your box u can watch free sun and all tamil paytv

c:dns-host.no.ip 12000 sun23 ktv23

c:dns-host.no.ip 12000 sun23 ktv23

or mail i ll give u new cline srilankakilltamill@googlemail.com

srilankakilltamill@googlemail.com

Edited by purmaal

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் வாரிசுகளால் தயாரிக்கும் இப்படங்களை இயன்ற வரை புறக்கணியுங்கள். வேறு வழி இல்லை என்றால் (உ.ம், மனைவி/குழந்தைகளின் நச்சரிப்பு) இருப்பின் தயை கூர்ந்து திருட்டு வி.சி.டி'யில் மட்டும் பார்க்கவும்.

1. வேட்டைக்காரன்

2. எந்திரன்

3. ஆதவன்

  • கருத்துக்கள உறவுகள்

சன் ரிவி, கலைஞர் ரிவியை புறக்கணியுங்கள்

தானாக திருந்தினால்தான்

கந்தப்பு எவன் சொன்னான் தமிழனுக்கு மானம் ரோசம் நாட்டு பற்று பொது நலம் எல்லாம் இருக்கு எண்டு!!!!!!!! :mellow: :mellow: :mellow: :mellow:

கருணாநிதியின் வாரிசுகளால் தயாரிக்கும் இப்படங்களை இயன்ற வரை புறக்கணியுங்கள். வேறு வழி இல்லை என்றால் (உ.ம், மனைவி/குழந்தைகளின் நச்சரிப்பு) இருப்பின் தயை கூர்ந்து திருட்டு வி.சி.டி'யில் மட்டும் பார்க்கவும்.

1. வேட்டைக்காரன்

2. எந்திரன்

3. ஆதவன்

:mellow:அட இதைத் தானா உங்க பாசையில் புறக்கணிப்பு என்று சொல்வது. கேட்கவே புல்லரிக்குது. :mellow:

சண்ணோ, இல்லை கலைஞர் தொலைக்காட்ச்சிகள் எல்லாமே தமிழர்கள் அனைவரும் அறிந்த ஊடகங்கள்... அவர்கள் தமிழர்களை ஒருமிக்க செய்வதில் அவர்களால் நல்ல பங்களிப்பை செய்ய முடியும்...

இந்த புறக்கணிப்புக்களுக்கு முன்னம் செய்ய வேண்டியது தமிழர்களுக்கு ஆதரவாக உலக தமிழர்கள் எல்லாரும் அறியும் வண்ணம் ஒரு பிரபல்யமான தொலைக்காட்ச்சியை தோற்றுவிப்பது....அல்லது இருப்பதில் ஒண்றை கண்டு பிடிப்பது அதை தமிழ்நாட்டில் பிரபல்ய படுத்த வேண்டும்...

பின்னர் தான் எதை புறக்கணித்தாலும் அதற்கான உரிய பலனை அடைய முடியும்...

இதை எங்கட ஆக்களுக்கு நான் சொல்லி செய்வார்கள் எண்டு நினைக்கவே இல்லை... செய்யுறதை செய்யுறியள் விளைவுகளையும் தெரிந்து செய்யுங்கள்...

கந்தப்பு எவன் சொன்னான் தமிழனுக்கு மானம் ரோசம் நாட்டு பற்று பொது நலம் எல்லாம் இருக்கு எண்டு!!!!!!!! :mellow: :mellow: :mellow: :mellow:

நீங்கள் எதை மானம், ரோசம் எண்டு நினைக்கிறியள் எண்டு எனக்குப் புரியவில்லை. ஏனெனில் களத்தில் ஆக்ரோசமாய் இப்படியான புறக்கணிப்புகள் பற்றி கருத்தெழுதும் கள நண்பரொருவர் எனக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருந்தார். தான் எல்லாத் தொலைக்காட்சிகளும் பார்க்கக் கூடியதாக டெக்கோட்டர் ஒன்று விற்பதாகவும் முதலில் 400 Euro கட்ட வேண்டுமாம். பின்பு வருடா வருடம் தனக்கு 200 Euro கட்டினால் இணையத்தின் வழியாக தொடர்ந்து தான் இணைப்புகளை வழங்குவேனென்றும் குறிப்பிட்டார். அப்போ தான் எனக்குப் புரிந்தது இவர் ஏன் புறக்கணிப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பினார் என்று. :mellow: இது தான் உங்களுக்கு மானம், ரோசம் என்றால் ஆளை விடுங்கள் சாமி. :unsure:

ஐயோ கடவுளே...சண் டிவியில் மக்களின் அவலத்தை விளையாட்டு செய்தியில் காட்டினார்கள் பார்க்கலையா...? 50 செலுக்கு 125 மக்கள் பலி என்டு கிரிகெட் ஸ்கோர் மாதிரி சொன்னவர்கள்...மிகவும் அருமையான சேனல்.. அதை புறக்கணிக்காதீங்கள்..

என்னை கேட்டால். இது எல்லாம் சரிவராது..இப்டியே வானத்தை பார்த்து. குரைசுக்கொண்டு இருக்க வேண்டியது தான்....

தலைவர்.. கடைசியில்.. இப்படி நினைத்து தான் .. எல்லாதையும் விட்டுட்டு உயிர்நீத்தார்..

மோட்டு சிங்களவனின் ஒற்றுமை புத்திசாலியான தமிழ்( நீங்களே சொல்றது. உங்களைப்பத்தி ) மக்களிடம் இல்லையே..

வாயிலை வருது. வேண்டாம் எண்டு பார்க்கிறன்...

முதலில் இந்த தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுக்கும் புலம் பெயர் ஈழத்தமிழர் வியாபார நிறுவனங்களை புறக்கணிக்க முன்வரவேண்டும்.

விளம்பரம் இல்லாத தொலைக்காட்சி தானாக நின்று விடும்.

ஜங்கரன் ரி.வி யில் வரும் புலம் பெயர் தமிழரின் கடைகளின் விளம்பரம் மிக அதிகம்.

இதை நிறுத்த பகிரங்கமாக பிரச்சாரம் செய்வோம். நிறுத்துவோம். அதுவே முதல் கடமை.

பிறகு சந்தாதாரரை பற்றி கவனம் எடுப்போம்.

தீபாவளி திருநாளில் எந்த டிவியில் புதுப் படம் போடுகிறார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.