Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஜெயலலிதா உண்ணாவிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஜெயலலிதா உண்ணாவிரதம்

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் 10ம் தேதி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்.

அரசியல் நாடகம்

தேர்தல் ஜூரம்

சற்று பொறுத்திருந்து பாருங்கள். ஆட்டம் இப்போதுதானே ஆரம்பித்துள்ளது.

இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்கப்போகிறதென்று?

http://www.tamilsweet.com/Tamils/page.php?90 http://www.tamilsweet.com/Tamils/page.php?90

Edited by Maddy

  • Replies 54
  • Views 4.1k
  • Created
  • Last Reply

அம்மா! தாயே! புல்லரிக்கிறது! நன்றி தொடருங்கள் உங்கள் உண்ணவிரதத்தை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது இலங்கையில் போர் நிறுத்தம் கோரி அல்ல..

அவருடைய எடையை குறைக்க மேற்கொள்ளும் டயட்... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடியல சத்தியமா முடியல . ....... ஆனாலும் நன்றிகள் சிறிலங்காவில் தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஏதோ நடக்குது போல என்று நினைத்ததற்கு

இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும், சென்னையில் தனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்குதல் காரணமாக இலங்கையில் வாழும் நமது உடன் பிறப்புகளாகிய தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும், உண்ண உணவு இன்றியும், உரிய மருத்துவ சிகிச்சை இன்றியும், பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத் தடுத்து நிறுத்துவதற்குரிய ஒரே வழி இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.

தமிழினத் தலைவர் என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசின் முதல்வர் கருணாநிதியும், அவர் தாங்கி நிற்கும் மத்திய அரசும் இனப் படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், இலங்கையல் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு நான் தலைமையேற்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்காக நிதி

தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறும் இடங்களில் இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். சென்னை உண்ணாவிரதப் பந்தலில் வைக்கப்படும் உண்டியலில் முதலில் எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்காக நிதியை அளித்து தொடங்கி வைக்க உள்ளேன். அதிமுகவினர் அவரவர் சக்திக்கு ஏற்ப தங்களால் முடிந்த நிதியுதவியை அந்த உண்டியலில் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர்களுக்காக நடைபெறும் இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அதிமுகவினரும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Source Link: http://tamiloosai.com/index.php?option=com...0&Itemid=68

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுக்கு அரோகரா.....உலகதமிழர்களின் தலைவி வாழ்க.......

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உண்டியல் காசு சசிகலா பெயரில் வைப்புச் செய்யப்படும்.

:):)

நான் சாகணும் ஜெயலலிதா வாழனும்... என்னமா பெர்போம் பண்ணுறா... ஸ்ஸ்ஸ்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உண்ணாவிரதப் போராட்டம் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!இப்படியாவது இந்த சனியன் செத்துத் தொலைஞ்சால் தான் !!!அருமையான சந்தர்ப்பம், நழுவ விடக் கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழே அல்லாத ஜெயலலிதா தமிழனை உடன்பிறப்புக்கள் என்று கூறும் அளவுக்கு நடிகிறாள் என்றால், தமிழ் தமிழ் தமிழ் என தமிழின தலைவராக தம்மை காட்டிகொள்ளும் கலைஞர் எவ்வளவு perfomance பண்ணனும்??

தேர்தலுக்காக பெரிய குழியாக கருணாநிதிக்கு வெட்டுகின்றார் போல் உள்ளது? இதனால் கருணாநிதி வாய்திறந்தால் சரி தான்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி ஜயாவின் நாடகம் தொடங்கும், முதலும் அம்மா தொடங்கியதால்தான் ஜயா ஆரம்பித்தார் அம்மா திடீரென் வாபஸ் வாங்கியதும், ஜாயா சோர்ந்து சோரம் போய்விடார், இனி முதலில் இருந்து வருவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழே அல்லாத ஜெயலலிதா தமிழனை உடன்பிறப்புக்கள் என்று கூறும் அளவுக்கு நடிகிறாள் என்றால், தமிழ் தமிழ் தமிழ் என தமிழின தலைவராக தம்மை காட்டிகொள்ளும் கலைஞர் எவ்வளவு perfomance பண்ணனும்??

உண்மை தான்,என்னை மிக யோசிக்க வைத்த கருத்து.

ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது இலங்கையில் போர் நிறுத்தம் கோரி அல்ல..

அவருடைய எடையை குறைக்க மேற்கொள்ளும் டயட்... :o

:lol: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்...

  • கருத்துக்கள உறவுகள்

தேர்த்தல் கிட்ட கிட்ட நாடகங்கள் அரங்கேற தொடங்கி விட்டன. இனி கலைஞரும் தானும் இதுக்கு சளைத்தவன் அல்ல என்று கொஞ்ச நாடகங்களை எடுத்து விடுவார். இம்முறையும் தமிழ் நாட்டு மக்கள் ஏமாறுவார்களா என்பது தான் தொக்கு நிக்கும் கேள்வி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடக்கடவுளே காளமாடும் பால்தருமே

எதிரியை மன்னிக்கலாம் ஆனால் துரோகியை மன்னிக்க கூடாது. கலைஞர் கூட இருந்து துரோகம் செய்யும் துரோகி. கலைஞரோடு ஒப்பிடும் போது அம்மா பரவாயில்லை அது தேர்தலுக்காக என்றாலும் இதன் பின்விளைவு கலைஞரை ஈழத்தமிழர்விடயத்தில் விரும்பியோ விரும்பாமலோ ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யும். பொறுத்திருந்து பாருங்கள் கலைஞருடைய அடுத்த நாடகத்தை. என்ன இருந்தாலும் அம்மாவினுடைய தந்திரமான அரசியல் காய்நகர்த்தல் கலைஞருக்கு ஒரு பேரிடிதான் பாவம் அந்த மனுசன் நொந்திடப் போகுது.கலைஞருடைய குள்ள நரிக்குணத்துக்கு விழுந்த நெத்தியடி.

எந்த விதத்திலாயினும் தி.மு.க + காங்கிரஸ் தமிழின எதிர்ப்பு அணி பாராளுமன்றத்தில் தோல்வியினை தழுவ வேண்டும். அம்மையார் இவ்வாறு செய்வதால் வாக்குகள் சிதறி, அது பலமான ஒரு அணியினை அசைத்து விடும். இந்த விடயத்தில் அம்மையாரின் இம் முயற்சி பலன் தரும்

எதிரியை மன்னிக்கலாம் ஆனால் துரோகியை மன்னிக்க கூடாது. கலைஞர் கூட இருந்து துரோகம் செய்யும் துரோகி. கலைஞரோடு ஒப்பிடும் போது அம்மா பரவாயில்லை அது தேர்தலுக்காக என்றாலும் இதன் பின்விளைவு கலைஞரை ஈழத்தமிழர்விடயத்தில் விரும்பியோ விரும்பாமலோ ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யும். பொறுத்திருந்து பாருங்கள் கலைஞருடைய அடுத்த நாடகத்தை. என்ன இருந்தாலும் அம்மாவினுடைய தந்திரமான அரசியல் காய்நகர்த்தல் கலைஞருக்கு ஒரு பேரிடிதான் பாவம் அந்த மனுசன் நொந்திடப் போகுது.கலைஞருடைய குள்ள நரிக்குணத்துக்கு விழுந்த நெத்தியடி.

சரியான கருத்து

ஈழப் பிரச்சினை விடயத்தில் கருநாநிதி ஆடும் நாடகம் அவரது ஆட்சிக்குத் தான் குழி பறிக்கப் போகிறது. தமிழ் உணர்வுள்ளவர்களின் கோபம் எல்லாம் கருநாநிதிக்கெதிராகவே திரும்பும். அதில் நியாயமும் இருக்கிறது. காரணம் ஆட்சியிலுள்ளவர் கருணாநிதி. அதைவிட மத்தியில் தன் செல்வாக்கைக் காட்டக் கூடிய நிலையிலிருந்தும் வேசம் போடுகிறார். இது ஜெயலலிதாவிற்கு வாய்ப்பாக முடியப் போகிறது. இது எம்மைப் பொறுத்த வரையில் உவப்பான ஒன்றாக இல்லாத போதிலும் தமிழ்நாட்டில் பலமான மாற்று சக்தியாக மூன்றாம் தரப்பொன்று இல்லாத நிலையில் இந்த சங்கீதக் கதிரை தான் நடக்கப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதமா....????

எனது நெஞ்சு இப்போதே பதறுகிறது...... ஒரு வேளை உண்ணாது போனால் அந்த உடம்பு என்னாகும்? ஜெயாக்கா உண்ணாநிலையை ஒருபோதும் செய்ய கூடாது அவ்வாறு செய்ய முனைந்தால் நான் தீக்குளிப்பேன்.

அந்த அகோரத்தை பார்ர்த்து அணு அணுவாக சாவதின்மேல் ஒரேடியாக தீயில் கருகுவதே மேல்.

நடிகர்களை அரசியல்வாதிகளாக்கி அவர்களுக்கு வாக்குபோட்டு முன்னேற்றியே தமிழகமக்காள் அனுபவிக்க இன்னமும் எத்தனையோ உண்டு. நல்ல வேளை வரவேண்டிய நேரம் வந்ததும் வருவேன் என்றவர் வராமலே போனார் அவரும் வந்திருந்தால்...? தமிழக தொலைகாட்சி செய்திகளே திரைபடமாகத்தான் இருந்திருக்கும்.

தமிழ் நாட்டில் நடக்கும் அரசியல் சித்து விளையாட்டுக்கள் எமக்கு முற்று முழுதாக விளங்கப் போவதும் இல்லை. எதிர்க் கருத்துடையவர்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து சும்மா சீண்டிப் பார்ப்பதால் எமது மக்களின் அவலங்கள் நீங்கப் போவதும் இல்லை. ஜெயலலிதா அம்மையார் ஏன் இவ்வளவு நாளும் எங்களை எதிர்த்தார்? ஐயா கருணாநிதி எங்களுக்கு ஆதரவு என வெளியே காட்டிக் கொண்டதால். அதே நேரம் எங்களை எதிர்த்து நிற்க்கிற காங்கிரஸ் ஐயாவை கழற்றி விட்டு தன்னோடு வந்து ஒட்டுவினம் என்றும் அம்மா எதிர் பார்த்தா. அவ எதிர் பார்த்தது எதுவுமே நடக்க ஐயா இடம் தரவில்லை.

அதேநேரம் ஈழத்தமிழர் விடயத்துக்காக காங்கிரசை பகைத்துக்கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை. இந்நேரத்தில் தேர்தல் திகதியும் அறிவிக்கப் பட்டுவிட்டது.

இப்போதும் ஐயாவை முறித்துகொண்டு காங்கிரஸ் தன்னோடு வரும் என்று அம்மா நம்பிப் கொண்டு இருப்பதா? அல்லது தமிழ் நாட்டில் வீசும் ஈழத் தமிழர் அனுதாப அலையை தேர்தலில் வெற்றி பெற தனக்கு சாதகமாக்கிக் கொள்வதா? ஈழத்தமிழர் மீதான திடீர் கரிசனைக்கு இதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். இப்ப நாங்கள் தான் மாற வேணும். ஈழத்தமிழர் கஷ்ரங்கள் தீர்க்க உண்ணாவிரதமிருக்கும் அம்மா வாழ்க என்று அவவை ஊக்குவிக்க வேணும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேணும். தூற்றித் திரிய வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முடியல சத்தியமா முடியல . ....... ஆனாலும் நன்றிகள் சிறிலங்காவில் தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஏதோ நடக்குது போல என்று நினைத்ததற்கு

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க ஒரு ஜனநாயகவாதியலையும் காணேல்ல...?? இல்லடி பெட்டிய கட்டிக்கொண்டு வந்து...அவரை பகைக்க கூடாது இவரை பகைக்க கூடாது எண்டு பழைய ரீல் ஐ திரும்ப திரும்ப சுத்துவினம்...

இது எங்களுக்கு ஒரு நல்ல முனேற்றம்...ஏன் எண்டா முந்தி அம்மா ஒரு அடி பாய ஐயா ஒம்போது அடி பாஞ்சவர் ..இப்ப அம்மா தடி ஊண்டி பாய பாக்கிறா,,,,அப்பா ஐயா என்ன செய்வார்?? முதுகுவலி எல்லாம் பாஞ்சோட ....ஐயாண்ட புது நாடகத்தை விரைவில் பார்க்கலாம்.... இப்ப உதவிக்கு சன்டீவியும் இருக்கு..பிறகென்ன.. சந்டிஇவியில இயக்க பாட்டு போட்டாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்லை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.