Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவுக் கப்பல் மீது தாக்குதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்களுக்கு உணவை முற்றாக மறுக்கும் நோக்கோடு அவர்களின் உணவுத் தேவையை அரைகுறையாகவாவது தீர்க்கக் கூடிய உணவு வழங்கலைச் செய்ய முன் வந்த ஐ சி ஆர் சி வழித்துணைக் கப்பல் மீது சிறீலங்கா சிங்கள பேரினவாத பயங்கரவாத இராணுவம் புதுமாத்தளன் பகுதியில் வைத்து ஆட்லறி செல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆனால் விடுதலைப்புலிகள் இக்கப்பலைத் தாக்கியதாக உண்மைச் சம்பவத்தை திரித்துக் கூறி வருகிறது சிங்கள பயங்கரவாத தேசமான சிறீலங்கா.

Food ship attacked in Mulaitivu

The ship ‘Bin Tan’ which transported food supplies to Mulitivu from Trincomalle came under an LTTE artillery attack while it was unloading in Puthumatalan this morning, the army spokesman said.

dailymirror.lk

Edited by nedukkalapoovan

உணவுக்கப்பல் வன்னிக்குச் செல்கிறது என்ற செய்தி அறிந்ததும், அடுத்து இதுதான் நடக்கும் என எண்ணினேன். அதுபோலவே நடந்துவிட்டது. இனி இந்தப் பழியைத் தூக்கி விடுதலைப் புலிகள் மீது சுமத்துவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நாசமா போனவனுகள்ற தொல்லை தாங்க முடியல்ல.எல்லாத்தையும் செய்திட்டு கடைசியில புலிகள்ற தலையில போட்டு விடுறது.என்னத்த சொல்லி என்னத்த கண்டம்

இந்த நாசமா போனவனுகள்ற தொல்லை தாங்க முடியல்ல.எல்லாத்தையும் செய்திட்டு கடைசியில புலிகள்ற தலையில போட்டு விடுறது.என்னத்த சொல்லி என்னத்த கண்டம்

நாங்கள் ஊமையோ?

:unsure:

அவன் இது தான் முதல் தடைவை செய்கிறனோ? தாங்கள் செய்துவிட்டு புலிகள் மீது பலிபோடுவது?

1 மாவிலாற்றில் அனை திரக்க போன கண்காணிப்பு குழு மீது செல் தாக்குதல் 2 வது பூநேகரி பாதை திறக்கலாம என்று பார்க்க போனவர்கள் மீது செல் தாக்குதல்.

அப்போது பதில் கேள்விகள் கேக்க தெரியவில்லையா?

பொது மக்களை சுட்டு கொண்று விட்டு புலிகள் எண்று படம் காட்டும் சிங்கள படைகள்...

உரு மறைப்பு இல்லாத வெள்ளை உடைகளோடு எந்த இராணுவ அமைப்பினரும் சண்டை பிடிக்க போக மாட்டார்கள் எனும் அடிப்படையை கூட மறந்து பிரச்சாரம் செய்ய முயல்கிறார்கள்...

aleqm5ggdrwsjmkyojxxcle.jpg

கப்பலில் சென்றது உணவு மட்டுமல்ல! 48 மணி நேரத்தில் புலிகளின் ஏனைய கட்டுப்பாட்டு பகுதியை பிடிப்போம் என்று மகிந்தர் சும்மா கூறவில்லை. கப்பலில் நூற்றுக்கணக்கான கொமாண்டோ படையினர் ஏறியதாக திருமலை செய்தி ஒன்று தெரிவிக்கறது. உணவு இறக்க ஏன் நூற்றுக்கணக்கான கொமாண்டோக்கள் கப்பலில் செல்ல வேண்டும்? பல கேள்விகள் விடைதான் இல்லை!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

150 போராளிகளின் உடலங்களைக் கைப்பற்றியுள்ளதாக எல்லோ சிங்களவன் சொல்லுறான். படங்களும் போடப்பட்டுள்ளன. சாலையின் தெற்கே போராளிகளின் முயற்சி.. தோற்றுவிட்டது போன்ற அறிகுறியே தெரிகிறது..! :unsure::lol:

முயற்சிகள் என்பது திட்டங்கள் தீட்டப்படாமல் மேற்கொள்ளப்படமாட்டாது, பாரிய பின் தளம் ஒன்றினை வைத்தே பல களம் இருக்கையில் சாலை தீர்மானிக்கப் பட்டிருக்கும், இழப்புக்கள் என்பவை தோல்வி என்பதல்ல. அதே நேரம் தோல்விகள் என்பவை இழப்புக்களால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றன.

150 போராளிகளின் உடலங்களைக் கைப்பற்றியுள்ளதாக எல்லோ சிங்களவன் சொல்லுறான். படங்களும் போடப்பட்டுள்ளன. சாலையின் தெற்கே போராளிகளின் முயற்சி.. தோற்றுவிட்டது போன்ற அறிகுறியே தெரிகிறது..! :unsure::lol:

அப்படித் தான் தெரிகின்றது. ஆனால் இராணுவம் தனது இழப்பினை முற்றாக மூடி மறைப்பதால் ஒரு பாரிய வெற்றியை தான் அடைந்து விட்ட தோற்றத்தினை ஏற்படுத்துகின்றது

போராளிகளின் இந்த முயற்சி உண்மையிலேயே தோல்வியினை எட்டியிருந்தால் அமெரிக்க தலைமையிலான இந்திய அனுசரனையுடன் மேற்கொள்ளப்பட உத்தேசிக்கப் பட்டிருக்கும் வன்னி மக்களை வெளியே எடுக்கும் நடவடிக்கை துரிதமாக்கப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படித் தான் தெரிகின்றது. ஆனால் இராணுவம் தனது இழப்பினை முற்றாக மூடி மறைப்பதால் ஒரு பாரிய வெற்றியை தான் அடைந்து விட்ட தோற்றத்தினை ஏற்படுத்துகின்றது

போராளிகளின் இந்த முயற்சி உண்மையிலேயே தோல்வியினை எட்டியிருந்தால் அமெரிக்க தலைமையிலான இந்திய அனுசரனையுடன் மேற்கொள்ளப்பட உத்தேசிக்கப் பட்டிருக்கும் வன்னி மக்களை வெளியே எடுக்கும் நடவடிக்கை துரிதமாக்கப்படும்.

இராணுவத்தின் செய்திப்படி போராளிகளுக்கு இந்த இழப்பு கடந்த 5ம் திகதியில் இருந்து ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தீவிரமான சண்டைகள் நேற்று முந்தினம் இருந்தே ஆரம்பமாகின. அது குறித்த விபரங்களை இராணுவம் வெளியிடவில்லை. பல் வேறு சம்பவங்களையும் கோர்த்து.. தனக்கு சார்ப்பான ஒரு பார்வையை இராணுவம் வெளியிட்டு வருகிறது..! :unsure:

நிச்சயமாக சில கள முனைகளில் போராளிகளுக்கு சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவர்களின் மொத்த நடவடிக்கையும் அதனால் இழக்கப்பட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது.

போராளிகளின் முயற்சிகள் வெற்றி பெற உதவிகளையும் செய்து கொண்டு வேண்டுதல் நன்று..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரியின் ஊடகப் போரையும் எதிர்கொள்வோம்

என்னத்த சொல்ல........................

150 போராளிகளின் உடலங்களைக் கைப்பற்றியுள்ளதாக எல்லோ சிங்களவன் சொல்லுறான். படங்களும் போடப்பட்டுள்ளன. சாலையின் தெற்கே போராளிகளின் முயற்சி.. தோற்றுவிட்டது போன்ற அறிகுறியே தெரிகிறது..! :unsure::lol:

150 போராளிகளின் படம் எங்கே போடப்பட்டுள்ளது? நெடுக்கலபோவான் எழுதும் போது யோசித்து எழுதவும்.சில போராளிகளின் படங்கள் போடப்படுள்ளன.150 என்பது மிகைப்படுத்திய செய்தி.இராணுவ அதிசயம் நிகழவேண்டும் என்னும் எதிர்ப்பார்ப்பைக் கைவிடுங்கள்.

போரட்டம் என்பது புலத்தில் நாம் தான் செய்ய வேண்டிய ஒன்று அதை விட்டு விட்டு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

150 போராளிகளின் படம் எங்கே போடப்பட்டுள்ளது? நெடுக்கலபோவான் எழுதும் போது யோசித்து எழுதவும்.சில போராளிகளின் படங்கள் போடப்படுள்ளன.150 என்பது மிகைப்படுத்திய செய்தி.இராணுவ அதிசயம் நிகழவேண்டும் என்னும் எதிர்ப்பார்ப்பைக் கைவிடுங்கள்.

போரட்டம் என்பது புலத்தில் நாம் தான் செய்ய வேண்டிய ஒன்று அதை விட்டு விட்டு....

படங்கள் போடப்பட்டுள்ளன. சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் இணையத்தளத்தில்.

டெயிலிமிரரிலும் 130 போராளிகளின் உடலங்கள் கடந்த சில தினங்களில் மீட்கப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாங்கள் எப்போதுமே இராணுவ அதிசயங்கள் நிகழும் என்ற நம்பிக்கையோடில்லை. ஆனால் போராட்டம் இராணுவ மற்றும் அரசியல் இராஜதந்திர ரீதியில் நகர்த்தப்பட்டாலே வெற்றியும் எமது தேசத்தின் விடிவும் கிடைக்கும் என்பதை நம்புபவர்கள்..!

புகலிடத்தில் இருந்து போராடுவதால் மட்டும் நிச்சயம்.. விடிவு வரப்போறதில்லை. புகலிடமும்.. தாயகமும் இணைந்து போராடும் போதே அதில் இராணுவ வெற்றிகளும் அமையும் போதே... விடிவுக்கு வழிபிறக்கும்..! மந்திரத்தில் மாங்காய் பறிக்க முடியாது..! :unsure:

80 more LTTE bodies found

The army today recovered 80 more LTTE bodies following a fierce battle in the Puthukuduirrippu east area, two days after the recovery of another 50 LTTE bodies, the army said.

dailymirror.lk

******

படம் கேட்டதால் போடுகின்றேன்.

Edited by மோகன்
****** படம் நீக்கப்பட்டுள்ளது. - மோகன்

இந்த படத்தில் எங்கே 150 உள்ளது?

எதிரியின் பிரச்சார வலைக்குள் தமிழர்கள் விழுந்து விடாமல் இருப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவைகளில் ஒன்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைப்பற்றப்பட்ட போராளிகளின் வித்துடல்களை ஏன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினூடாக கையளிக்கவில்லை?

சிங்கள பெளத்த ப்யங்கரவாதியை விட நாம் தான் அவங்களுக்காக பிரச்சாரம் செய்கிறோம்.

150 போராளிகளின் படம் எங்கே போடப்பட்டுள்ளது? நெடுக்கலபோவான் எழுதும் போது யோசித்து எழுதவும்.சில போராளிகளின் படங்கள் போடப்படுள்ளன.150 என்பது மிகைப்படுத்திய செய்தி.இராணுவ அதிசயம் நிகழவேண்டும் என்னும் எதிர்ப்பார்ப்பைக் கைவிடுங்கள்.

போரட்டம் என்பது புலத்தில் நாம் தான் செய்ய வேண்டிய ஒன்று அதை விட்டு விட்டு....

காலம் கடந்த ஆலோசனையாக நாரதர் வைக்கும் கருத்துக்கு நீண்ட பதில் எழுதலாம். அவரது கடந்தகால கருத்துகள் கருத்துக்களத்தில் அவரது தற்போதைய நிலைக்கு நேரெதிரானது என்பதும் ஒரு புதிய அரசியல் பரிணாமம்.

காலம் கடந்த ஆலோசனையாக நாரதர் வைக்கும் கருத்துக்கு நீண்ட பதில் எழுதலாம். அவரது கடந்தகால கருத்துகள் கருத்துக்களத்தில் அவரது தற்போதைய நிலைக்கு நேரெதிரானது என்பதும் ஒரு புதிய அரசியல் பரிணாமம்.

காண்டம் இதில் என்ன புதிய அரசியல் பரிணாமம் இருக்கிறது?

உலகத்தில் பலமானவர்களே வெல்வார்கள்.பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தின் மூலம் தமிழர்கள் பலமற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள்.பேச்சுவார்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படங்களில் எனக்கு சில சந்தேகங்களுண்டு

ஆனால் எழுதவிரும்பவில்லை

ஏனெனில் யாருக்கும் அடியெடுத்துக்கொடுக்கவோ

அபாய வழி காட்டவோ விரும்பவில்லை

இது தமிழரது உடலம் என்பது மட்டுமே எனது கருத்து

ஆனால்................???

defence.lk போய் படங்களை saveசெய்து அதன் பின்னர் properties போய் அப் படம் எடுக்கப் பட்ட திகதியையும் நேரத்தையும் பார்க்கவும், நான் பார்த்த படங்களில் அவற்ரைக் காணோம். அது உண்மையாயின் அப்படஙளின் உண்மைத்தண்மை குறித்து சந்தேகம் ஏற்படுகின்றது.

Relief ship "not targeted" - ICRC

The International Committee of the Red Cross (ICRC) says that a ship carrying its flag came close to being hit by artillery shells in north-east Sri Lanka.

ICRC has been assisting the evacuation of civillians injured in the war in addition to providing essential supplies to those caught in the war

After arriving with food supplies and aid for civilians, the ship, anchored off the coast at Puthmatalan, was unloading its cargo on to small boats when, the ICRC said, shells fell two- to three-hundred metres away.

"We have no reason to believe the ship flying the ICRC flag was targeted by shells which were falling around it while trying to unload supplies"

ICRC

Carla Haddad, Deputy Head of communications of ICRC speaking to BBC Sandeshaya from Geneva said that that the ship had unloaded 144 metric tons of essential supplies since it arrived in Puthumatalan on Sunday.

LTTE blamed

Although the Sri Lankan military blamed Tamil Tiger rebels for the incident, the ICRC said it had no reason to believe the ship was targeted.

"We have no reason to believe the ship flying the ICRC flag was targeted by shells which were falling around it while trying to unload supplies," said Carla Haddad.

Ship withdrawn

The ship had to withdraw off the coast of Puthumathalan back to Trincomalee without unloading the whole 500 metric tons of supplies "due to severe weather conditions".

This decision was made in consultation with the Sri Lankan Navy, the ICRC spokesperson added.

  • கருத்துக்கள உறவுகள்

பொது மக்களை சுட்டு கொண்று விட்டு புலிகள் எண்று படம் காட்டும் சிங்கள படைகள்...

உரு மறைப்பு இல்லாத வெள்ளை உடைகளோடு எந்த இராணுவ அமைப்பினரும் சண்டை பிடிக்க போக மாட்டார்கள் எனும் அடிப்படையை கூட மறந்து பிரச்சாரம் செய்ய முயல்கிறார்கள்...

அத்துடன் அண்மையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இராணுவ எறிகணை, வான் தாக்குதல் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காக அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் சென்ற மக்களில் சில இளையோரை இராணுவம் தலையில் சுட்டு புலிகள் என்று பிரச்சாரம் செய்தது - GTV நிகழ்ச்சியில் ஊடகவியலாளார் கனகரவி அவர்கள் சொன்ன தகவல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

150 போராளிகளின் உடலங்களைக் கைப்பற்றியுள்ளதாக எல்லோ சிங்களவன் சொல்லுறான். படங்களும் போடப்பட்டுள்ளன. சாலையின் தெற்கே போராளிகளின் முயற்சி.. தோற்றுவிட்டது போன்ற அறிகுறியே தெரிகிறது..! :icon_idea::lol:

இறந்ததாக காட்டப்படும் போராளிகளின் கால்களில் '' பூட்ஸ் ''கள் எதுவும் அணியப்படவில்லை. எமது போராளிகள் ஒரு முறியடிப்பு தாக்குதலோ அல்லது வலிந்த தாக்குதலுக்கோ செல்லும் போது பலவேறுபட்ட நில அமைப்புக்களினூடாகச் செல்லும் போது நிச்சயம் காலில் பூட்ஸ் அணிவார்கள் அத்துடன் கைப்பற்றதாக காட்டப்படும் ஆயுதங்கள் பல இதரப்பழசாக இருக்கின்றன( கறள் பிடித்தவைகள் கூட), புலி விரர்கள் தங்கள் ஆயுதங்களை தங்கள் உயிரைப்போன்று பாதுகாப்பவர்கள் இப்படியாக இன்னும் பல விடயங்களை ஆராயும் போது இந்தச் சடலங்கள் வேறு எங்கேயோ இருந்து கொண்டுவரப்பட்டு( வவுனியா தங்கு முகாங்கள்லிருந்தோ, கிளி நொச்சி வதை முகாங்களிலிருந்தோ) இராணுவச் சீருடைகள் மாட்டப்பட்டு முழுவதும் பரப்புரைகளின் நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளாகவே இருக்க முடியும். இதற்கு சிறந்த உதாரணம்; சில மாதங்களுக்கு முன்பு புலி வீரர்கள் சரணடைந்ததாக கூறி காணொளியும் காட்டிவிட்டு பின்னர் அது எப்படி எடுக்கப்பட்டது என்று எங்கள் மக்களுக்குத் தெரியவில்லையா...?

இப்படியாக சிங்களவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் தமிழ் மக்களின் உளவுரனை சிதைக்கும் காரியமாக திட்டமிட்டு நடத்தப்படுகிறது எமது மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிரி எவ்வாறு எங்கள் மக்களின் உளவுரனை சிதைக்க முயற்சிக்கிறான் என்பதற்காகவும் அதிலிருந்து நாங்கள் எவ்வளவு அறிந்து அவனை முறியடிக்க நாங்கள் உழைக்கலாம் என்பதற்காகவும் எதிரியின் இணையத்தளங்களில் காட்டப்படும் செய்தியினை பார்ப்பதில் தவறில்லை ஆனால் அதனை நம்பி எங்கள் மன நிலைகள் பாதிப்படைந்து நாங்கள் சோர்வடைந்துவிடக்கூடாது என்பதில் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்... நல்லதொரு விளக்கம் இதைதான் நானும் அந்த படங்களை பார்த்து நினைத்தேன் ஊடறுப்பு சமரில் போராளிகளின் உடலங்கள் எதிரியிடம் கிடைத்து இருக்கலாம் அதை வைத்து அவன் படம் காட்டுகின்றான்.... எதிரியின் பரப்புரைக்கு நாமும் பரப்புரையாலையே பதிலளிக்க வேண்டும் அதைதான் நாம் விரைந்து செய்தல் வேண்டும்.....

உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்மீது புலிகள் ஆட்டிலறித் தாக்குதல் : இராணுவப் பேச்சாளர்

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 'பின் டென்' கப்பல் மீது ஆட்டிலறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புதுமாத்தளன் பகுதியில் வைத்து விடுதலைப்புலிகள் இந்த ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

http://www.swissmurasam.net/

முல்லைத்தீவில் உணவு பொருட்கள் 142 தொன் இறக்கப்பட்ட நிலையில் கப்பல் திருகோணமலை திரும்பியது

வன்னிப்பகுதிக்கு கப்பல் மூலமாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் ஒருபகுதி அன்று மாலையே இறக்கி கரை சேர்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள உணவுப் பொருட்கள் இறக்கப்படாமலே அந்த கப்பல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலைக்கு திரும்பியது.

அந்த கப்பல் மீது விடுதலைப் புலிகள் ஆட்லறி தாக்குதல் நடத்தியதாகவும், அதனாலேயே அந்த கப்பல் உணவுப்பொருட்களை தரையில் இறக்காமல் திருகோணமலைக்கு திரும்பியதாகவும் இலங்கை இராணுவத்தின் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

அதேசமயம் இது குறித்து பேசிய விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுமாத்தளன் பகுதியில் பணிபுரியும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசு அதிபர் கே.பார்த்திபன் அவர்கள், அந்த பகுதியில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகவே அந்த கப்பலில் இருந்த உணவுப் பொருட்கள் இறக்கமுடியாத சூழல் உருவானதாகத் தெரிவித்தார்.

எனினும் கப்பல் போக்குவரத்திற்குப் பொறுப்பாகவுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், முல்லைத்தீவுக்கு உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் கொடி பறக்க விடப்பட்ட கப்பலுக்கு அருகாமையில் ஷெல்கள் வந்து வீழ்ந்தன. ஆனால் கப்பல் மீது அவை விழ வில்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் ஷாபியா றொமானென்ஸ் தெரிவித்திருக்கிறார்.

பொருள்களை இறக்கிக் கொண்டிருந்தபோது காலநிலை மோசமடைந்துகொண்டிருந்ததால் கப்பலை துறைமுகத்துக்குத் திரும்பி வருமாறு கடற்படையினர் உத்தரவிட்டனர்.

சரக்குக் கப்பல் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதை நாம் நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை.

கப்பல் தரித்து நின்ற பகுதி ஒரு மோதல் பிரதேசம். எனவே அப் பகுதியின் எல்லாப் பக்கங்களிலும் ஷெல்கள் வந்து வீழ்ந்தன.

அதனால் ஷெல் வீச்சை யார் நடத்தினார்கள் என்பதை எங்களால் இனங்காண முடியவில்லை. இவ்வாறு ஷோபியா றொமானென்ஸ் மேலும் கூறினார்.

குறிப்பிட்ட கப்பலிலிருந்து 142 மெற்றிக் தொன் உணவுப் பொருள்கள் மட்டுமே இறக்கப்பட்ட நிலையில் கப்பல் திருகோணமலைக்கு திரும்பியுள்ளது.

http://www.tamilwin.org/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.