Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி ஈழம் கோரிக்கை-உலகத் தமிழகர்களின் தலைவி ஜெயலலிதா திடீர் ஆதரவு

Featured Replies

தனி ஈழம் கோரிக்கை-ஜெயலலிதா திடீர் ஆதரவுதிங்கள்கிழமை,

மார்ச் 9, 2009, 13:25 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற

சென்னை: இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற 'தமிழர் நாடு' வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜெயலலிதா பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதத்தை நடத்துகிறோம். கடந்த ஆண்டு இந்திய அரசு ராணுவ உதவி செய்வதாகவும், ஆயுதங்கள் வழங்கி வருவதாகவும் செய்திகள் வந்தன. இதை மத்திய அரசு மறுக்கவில்லை. இந்திய பாதுகாப்புதுறை உயர் அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் இலங்கை சென்றதாகவும் கூறப்பட்டது. அதையும் மத்திய அரசு மறுக்கவில்லை, திமுகவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மத்தியில் அங்கம் வகிக்கும் திமுக மந்திரிகள் ராஜினாமா செய்வதாக மிரட்டிக் கூட பார்க்கவில்லை. இதுபற்றி கேள்வி கேட்ட என்னை கருணாநிதி கேலி செய்கிறார். இது முழுக்க முழுக்க மத்திய அரசு சம்பந்தப்பட்டது. இது கூட ஜெயலலிதாவுக்கு தெரியவில்லையே என்றார்.

இலங்கை ராணுவ வீரர்களுக்கு ஹரியானா மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதிநவீன சாதனங்களை வைத்து இலங்கை வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்திய அரசு ஒப்புதலுடன் தான் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இலங்கை இனப் படுகொலை மத்திய அரசின் முழு ஒத்துழைப்போடு நடக்கிறது. இந்த இனப் படுகொலையில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும் பெரும் பங்குண்டு. சட்டசபையில் தீர்மானம் போட்டதாக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் கருணாநிதி. தீர்மானங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை என்கிறார். கருணாநிதியின் பாசாங்கு தீர்மானங்களை நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?.

ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு ராணுவ உதவிகள் வழங்குவது வழக்கமான நடைமுறைதான். ஆனால் இந்தியா வழங்கும் ஆயுத உதவியும், பயிற்சியும் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இலங்கைக்கு வழங்கப்படும் முழு ஆயுத பலத்தையும் அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். இலங்கை ராணுவம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறலாம். ஆனால் அங்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்த்தால் புலிகள், போராளிகள் தவிர அப்பாவி மக்களும் பலியாவது தெரிய வருகிறது..

இந்தியா வழங்கிய துப்பாக்கிகளும் தோட்டாக்களும் அப்பாவி தமிழர்களை கொலை செய்ய பயன்படுத்தப்படுகிறது.

இலங்கைப் பிரச்சினையில் திமுக அரசும், மத்திய அரசும் செயல்பட்டு வரும் விதத்தைப் பார்த்து மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

இலங்கையில் அவதிப்பட்டு வரும், அல்லல்பட்டு வரும் அங்குள்ள தமிழர்கள் குறித்து கருணாநிதிக்கு அக்கறை இல்லை. இதுகுறித்து ஏதாவது நடவடிக்கை எடுங்கள் என்று அவரிடம் கேட்டால், மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு மாநில முதல்வரால், என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறார் கருணாநிதி.

தமிழகத்தைச் சேர்ந்த 10 மத்திய மந்திரிகள் உள்ளனர். அவர்கள் இதை ஏன் எதிர்க்கவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் என்ற பிரம்மாஸ்திரத்தை கருணாநிதி பயன்படுத்தமாட்டார். அறிக்கை மட்டும் விடுவார்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம். ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறக்க காரணமான திசை மாறிப்போன ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இலங்கை அதிபருடன் நம் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கு இனப் படுகொலையை உடனடியாக நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று நான் கருணாநிதிக்கு ஆலோசனை கூறினேன். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழக மக்கள் அனைவரும் பிரதமர் அலுவலகத்திற்கு தந்திகள் அனுப்ப வேண்டும் என்றார். பின்னர் பிரதமரை வற்புறுத்த, மத்திய ஆளும் கூட்டணியிலிருந்து விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதையும் செய்யத் தயார் என்று அறிவித்தார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் ராஜினாமா கடிதங்களைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் நாடாளுமன்ற மக்களவை தலைவருக்கோ, அல்லது மாநிலங்களவைத் தலைவருக்கோ அக்கடிதங்களை அனுப்பவில்லை. அதற்கு பதிலாக அவர் நிர்ணயித்த கெடுவான கடைசி தேதியை முடிவுக்கு வரவிட்டு, பின்னர் அந்த ராஜினாமா கடிதங்களை தானே கிழித்து போட்டு விட்டார்.

இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பேசியதாக கூறி இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கருணாநிதி தலைமையில் நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.

எனவே கருணாநிதியின் முழு ஆசி மற்றும் தூண்டுதலின்பேரில்தான் இருவரும் பேசினர். அதுவே அவர்களை சிக்கலில் மாட்டி விட்டு விட்டது.

பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சீமான் மீண்டும் கைது செய்யப்பட்டார், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

உண்மையி்ல் சீமான் என்ன மாதிரியெல்லாம் பேசினாரோ அதையே கருணாநிதியும் பேசியுள்ளார். அவர் என்னென்ன வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தினாரோ அதையெல்லாம் கருணாநிதியும் பயன்படுத்தியுள்ளார்.

எந்த வார்த்தைகள் அவர்களை இன்று சிக்கலில் மாட்டிவிட்டதோ, அவை யாவும் கருணாநிதியின் ஆசியும் ஒப்புதலும் பெற்றவை தான்.

ஆனால் சீமானுக்கு மட்டும் சிறைத் தண்டனை. ஆனால் கருணாநிதியோ தலைமை பீடத்தில் அமர்ந்து கொண்டு அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று நாம் உண்ணாவிரதம் இருப்பதினால், பசியினால் வாடும் இலங்கைத் தமிழர்களின் வயிறு நிரம்பப்போவதில்லை. இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் ஒரு அடையாளமே. இந்த உண்ணாவிரதத்தின் மூலம், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள் குறித்து, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள் என்பதையும், இது போன்ற சம்பவங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்கிற விதம், தமிழக மக்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது என்பதையும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தெரியப்படுத்துகிறோம்.

ஒரு அசட்டு தைரியத்தில் திமுகவும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்துள்ளன. வரும் தேர்தலில் மக்கள் இந்த கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டப் போகிறார்கள் என்றார் ஜெயலலிதா.

http://thatstamil.oneindia.in/news/2009/03...e-standard.html

Edited by வடிவேலு

வெளிப்படையான கூட்டம் ஒண்றில் அறிவித்து இருக்கிறார் என்பது மகிழ்ச்சியே...

ஜெயா முடிவு எடுத்து விட்டால் அதில் இருந்து மாறுவது என்பது குதிரை கொம்பு... உதாரணமாய் நிறைய சொல்ல முடியும்....

ஐயா செய்த பிழைகளை அம்மாவும், அம்மா செய்த பிழைகளை ஐயாவும் வெறும் அறிக்கையாக் கொட்டிக்கொண்டிருக்காமல் அங்க சாகிற சனங்கள காப்பாற்ற ஏதாவது செய்யுங்கோ.

உண்ணாவிரத பந்தலில சும்மாதானே இருக்கிறா? யாராவது ஈழத்தமிழர் ஆதரவாளர் வன்னி மக்கள் படும் பாட்டை அவவுக்கு படம் போட்டுக் காட்டினால் என்ன? ஒரு சொட்டு கண்ணீர் விட்டால் மட்டும் போதாது ஏதாவது செய்யுங்கோ எண்டும் கேப்பம். உணவு, மருந்து வகைகளை சேர்த்து கொண்டு போய் கொடுக்கச் சொல்லலாம்தானே? யாராவது ஈழத் தமிழ் பெண்கள் அமைப்பு அவவோட கதச்சு ஈழப் பெண்கள் படும் அவலத்த விளங்கப் படுத்தலாம். அவவும் ஒரு பெண்தானே?

குண்டு இதை 6 மாதங்களுக்கு முன் சொன்ன போது கண்ணாடி மாங்கொல்லையில் கூட்டம் போட்டு அடக்கிவிட்டது

அப்போது என்ன நடக்குமோ தெரியாது.எமக்கு யார் ஆதரவு தந்தாலும் சரிதான்.ஆனால் தானும் செய்யாமல் மற்றவர்களையும் செய்யவிடாமல் கண்ணாடி தடுக்கிறது.அதை விட குண்டு எதுவானாலும் நேரடியாகவே சொல்லும்.

ராமதாசும் குண்டோடு சேர்ந்து விடுவார் போல் உள்ளது?

கண்ணாடி காங்;கிரசை நம்பி எல்லாவற்றையும் பறிகொடுத்திடும் போல் உள்ளது?

ஐயோ இதையெல்லாம் நீங்கள் நம்புகின்றீர்களா? ஓரிரு தினங்களுக்குள் அம்மையார் விசத்தை கக்கபோகின்றார். அப்போது பாருங்கள். பதவிக்காக அம்மணி என்ன நாடகம் வேண்டுமானாலும் போடுவார். :unsure::lol::o

எல்லாம் குழம்பின குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சி.

தயா மறந்துபோச்சா அம்மணி கொஞ்சநாளுக்கு முன்னர் சொன்னது போரென்று வந்தால் பொது மக்கள் சாவது சாதரணம் என்று. இதையெல்லாம் நீங்களுமா மறந்துவிட்டீர்கள். அப்படியானால் தமிழ் நாட்டிலுள்ள படிக்காத மக்களை நாங்கள் குறை சொல்லமுடியாது.

Edited by chozhan

பாமாகாவை கட்சியில் இழுக்க சதி யாரை நம்பினாலும் அம்மையாரை நம்பாதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இது நான் நேற்று வேறு ஒரு இடத்தில் எழுதியது

இதற்கும் பொருந்துவதனால் இங்கு மீள இணைக்கின்றேன்

உண்மையில் உங்கள் எவரது விமர்சனமும் எமக்கு விளங்கவில்லை

nஐயலலிதா என்பவரை எனக்கு மிகவும் பிடிக்கும்

காரணம்

எதையும் செய்து முடிக்கக்கூடிய அவரது நெஞ்சுரம்

எமக்கு சரியோ பிழையோ

அவரைப்பொறுத்தவரை

இரண்டில் ஒன்று நேரே சொல்பவர்

அப்படிப்பார்க்கையில் கருணாநிதி என்ற பின்னால் குத்தும் துரோகியைவிட

எதிரி என்று என்று நேரே சொல்லும் இவர் மேலானவர்

ஆபத்தற்றவர்

அதேநேரம் இவரை மட்டும் நாம் எம் பக்கம் இழுத்துவிட்டோம் என்றால் இந்தியாவில் எவன் ஆண்டாலும் நாம் கவலை கொள்ளத்தேவையில்லை

ஒரு சொல்லிலேயே ஆட்டிப்படைக்கக்கூடியவர்

அப்படியாயின் இவரை மாற்றி எம்பக்கம் இழுக்கமுடியுமா என்ற கேள்விக்கு என் பதில்

முடியும்

அது எமது பலத்தினால்......

எமது தொடர் வெற்றிகளால்......

இந்தவாரம் வருகின்ற செய்திகள் தொடருமானால்.....

வெற்றிகள் தொடருமானால்.....

சிங்களப்படை தோற்கும் அறிகுறி தென்படுமானால்.....

பிரபாகரனே வீரன் என்று இவர் வாயால் மீண்டும் சொல்வது தவிர்க்கமுடியாததாகிவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறக்க நிலையில் இருக்கும் கரிநாநிதியை விழிப்படைய செய்ய இது போண்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன, இனி பாருங்கள் கரிநாநிதியின் புதிய எழுச்சியை, இதற்குள் அம்மாவை சோமாறி சந்தித்து குழப்பாமல்விட்டால் சரி, முதலும் அவர் இப்படியான ஒரு நிலையை எடுத்த போது சோமாறி குழப்பி விட்டது இல்லாவிடில் இப்போது இருக்கும் நிலையில் அனைத்து இடங்களிலும் அதிமுக இலகுவாக வெண்றிருக்க முடியும், காங்கிரசை வீழ்த்தும் நோக்கில் அம்மா வெண்று இருக்கலாம் , எல்லாம் சோமாறி அனியாயமாக்கிவிட்டது, காலம்கடந்த ஞானம் அமாவிற்கு வந்தாலும் எல்லாம் லேட்தான், காங்கிரசு தோற்க வேண்டும், இனிவரும் மத்திய அரசுகளுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும். வெறும் காங்கிரசின் தோல்வி என்று இயங்குவதை விட , அம்மாவிற்கு ஆதரவு என இயங்குவது, காங்கிரசின் தோல்வியை நிட்சயப்படுத்தும்.

Edited by சித்தன்

எல்லாம் உந்த எலெக்சன் முடியுறவரைக்கும் தான் கண்டீங்களே, அதுக்குப் பிறகு பின்னால ஒரு ஆட்டம் ஒரு நாத்தம் அவ்வளவுதான்...

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம். ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறக்க காரணமான திசை மாறிப்போன ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

ஜெயா சொன்னதை கொஞ்சம் தெளிவாக படியுங்கள்... ஆயுத போராட்டத்துக்கு ஆதரவு இல்லை.. ஆனால் தமிழ் மக்கள் சுய நிர்ணயத்தோடு வாழ வேண்டும் என்பதை ஆதரிக்கிறார்...

கொஞ்சம் விபரமாக பார்த்தால் புரியும்.. புலிகளின் நிலைப்பாடும் அதுதான்...

கையறு நிலையிலேயே ஆயுதம் ஏந்த வேண்டிய நிலையில் தமிழர் இருக்கின்றனர் என்பதை அவருக்கு புரிய வைக்க வேண்டும்...

அய்யா குழம்பாதீர் . ஈழ தமிழரை ஆதரித்தால் வெற்றி தொடரும் என அம்மையாருக்கு தெரிந்து விட்டால் இவர் ஆதரவு நமக்கு தொடரும் . இவரின் முடிவுகள் இரும்பை போன்றது . உலகமே எதிர்த்தாலும் அவ்வப்போது தோல்வி பெறுவோம் என நினைத்தாலும் முடிவை எளிதாக மாற்றிக்கொள்ள மாட்டார் . இவரே நமக்கு இப்போது சரி . இன்னும் ஒரு விஷயம் . திடீரென்று எப்போது எதிர் பல்டி அடிப்பார் என நமது ஆராய்சியாலர்களாலேயே கண்டு பிடிக்க முடியாது . இவரை சோமாறி அண்ட விடாமல் பார்த்துகொண்டால் அதுவே போதும்

அவரையும் கொஞ்ச நாள் அம்மா ஆதிபராசக்தி தெய்வமே என சொல்வதால் என் இனம் காக்க படுமானால் சொல்வதில் தவறு இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது குண்டம்மா எடுத்த முடிவு சரி ஆனால் அதிலே தளராத இருக்கவேண்டும் கருநா ஜயாவைப்போல நீரம் இருந்தால் அவ்வளவுதான்

நண்பர்களே இப்போது தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி இருந்தால் எப்படி இருக்கும் உங்கள் கருத்துக்களை தயவு செய்த பகிர்ந்து கொள்ளுங்கள்

நண்பர்களே இப்போது தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி இருந்தால் எப்படி இருக்கும் உங்கள் கருத்துக்களை தயவு செய்த பகிர்ந்து கொள்ளுங்கள்

நேரடியாம மத்திய அரசு (காங்கிரஸ்) ஆட்ச்சி செய்கிறது எண்று அர்த்தம்... மத்திய அரசின் கையாள்தானே கவர்ணர்..

  • கருத்துக்கள உறவுகள்

இது நான் நேற்று வேறு ஒரு இடத்தில் எழுதியது

இதற்கும் பொருந்துவதனால் இங்கு மீள இணைக்கின்றேன்

உண்மையில் உங்கள் எவரது விமர்சனமும் எமக்கு விளங்கவில்லை

nஐயலலிதா என்பவரை எனக்கு மிகவும் பிடிக்கும்

காரணம்

எதையும் செய்து முடிக்கக்கூடிய அவரது நெஞ்சுரம்

எமக்கு சரியோ பிழையோ

அவரைப்பொறுத்தவரை

இரண்டில் ஒன்று நேரே சொல்பவர்

அப்படிப்பார்க்கையில் கருணாநிதி என்ற பின்னால் குத்தும் துரோகியைவிட

எதிரி என்று என்று நேரே சொல்லும் இவர் மேலானவர்

ஆபத்தற்றவர்

அதேநேரம் இவரை மட்டும் நாம் எம் பக்கம் இழுத்துவிட்டோம் என்றால் இந்தியாவில் எவன் ஆண்டாலும் நாம் கவலை கொள்ளத்தேவையில்லை

ஒரு சொல்லிலேயே ஆட்டிப்படைக்கக்கூடியவர்

அப்படியாயின் இவரை மாற்றி எம்பக்கம் இழுக்கமுடியுமா என்ற கேள்விக்கு என் பதில்

முடியும்

அது எமது பலத்தினால்......

எமது தொடர் வெற்றிகளால்......

இந்தவாரம் வருகின்ற செய்திகள் தொடருமானால்.....

வெற்றிகள் தொடருமானால்.....

சிங்களப்படை தோற்கும் அறிகுறி தென்படுமானால்.....

பிரபாகரனே வீரன் என்று இவர் வாயால் மீண்டும் சொல்வது தவிர்க்கமுடியாததாகிவிடும்.

:unsure:

தற்போதைய எமது நிலையில் இவரை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். "வந்தால் மலை போனால் மயிர் ".

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதம்...சுதந்திரத்திற்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பொடா ,தடா போன்ற சட்டங்கள் கொண்டுவரப்படும் இதனால் இப்ப இருக்கிற ஆதரவுகூட அடக்கப்படும் :unsure::lol:

தன் ஓட்டு பொட்டியை நிரப்ப மக்களுக்கு வீசப்படும் வலை இந்த கருணா நி.........திக்கு முன்பும் இருந்தவ தானே அப்போது இந்த ஈழ தமிழன் கண்ணுக்கு தெரியவில்லை எத்தனை ஈழ இளைஞர்கள் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தார் என்பது யாருக்காவது தெரியுமா .அகதிகள் முகாமில் அடைக்கப்பட்ட அந்த மக்களை கேட்டால் தெரியும் இவா ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நடக்கும் என்பது எனது கருத்து எவன் ஆட்சிக்கு வந்தாலும் எம்மவன் மிதிபட்டு சாகவேண்டும் என்பது நமது தலையெழுத்து :o:(

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:

தற்போதைய எமது நிலையில் இவரை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். "வந்தால் மலை போனால் மயிர் ".

பயன் படுத்தப்படுவார் என்பதுபோல் வைகோ தெரிவித்த கருத்துக்கள் தெரிகின்றன

ஆனால் இவர் உண்மையிலேயே மலைதான்

பயன் படுத்தப்படுவார் என்பதுபோல் வைகோ தெரிவித்த கருத்துக்கள் தெரிகின்றன

ஆனால் இவர் உண்மையிலேயே மலைதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற 'தமிழர் நாடு' வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அம்மா தெளிவாதான் இருக்கிறா................. :unsure::lol::o

ஆரம்பத்தில் இடதுசாரிக் கட்சிகளின் உண்ணாவிரத அறிவிப்பு அதற்கு அம்மாவின் ஆதரவு. பின்னர் கலைஞரின் மனிதச்சங்கிலி. மனிதச்ங்கிலிக்கு பின்னர் இலங்கை படைகள் பெதுமக்களை கொல்வதில்லை என்றும் போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று அம்மாவின் மாற்றம் அதன் பிறகு தமிழக எழுச்சியை ஒடுக்குவதில் குறியாய் நிற்கின்ற கலைஞர். மீண்டும் அம்மா உண்ணாவிரதம். அடுத்து கலைஞரின் காட்சி எப்படி இருக்கும் என்று தெரியாது. இந்த இரண்டுகட்சிகளும் தேர்தலுக்காகவும் ஓட்டுக்காகவும் எப்படி வேண்டுமானாலும் குத்துக்கரணம் அடிக்கும். தேர்தல் வரை காட்சிகள் விரைவாக மாறும். இம்முறையும் வழமைபோல் இந்த இரண்டு கட்சிகளையும் பொறுத்தவரை ஈழத்தமிழர் பிரச்சனை ஓட்டுக்காக குறிவைக்கப்படும். இது தமிழகத்தின் தலைஎழுத்து. இதை மாற்ற முடியாது. ஈழத்தமிழர் பிரச்சனை தேர்தலை நோக்கியாவது முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது சிறு முன்னேற்றம்.

நேரடியாம மத்திய அரசு (காங்கிரஸ்) ஆட்ச்சி செய்கிறது எண்று அர்த்தம்... மத்திய அரசின் கையாள்தானே கவர்ணர்..

தயா இரண்டு மூன்று மாதங்களில் முடியப்போகின்ற மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு அரசு அழுத்தம் கொடுத்தால் அது நடந்துவிடக்கூடிய சந்தர்ப்பம்தான் அதிகம்.

மத்தியிலுள்ள அரசு தன்னுடைய ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது. அவர்களுக்கு இப்போது தி.மு.க எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியும். அப்படி அதிக அழுத்தம் கொடுக்க நினைத்தால் இந்திர காங்கிஸ் தேர்தல் காலத்துக்கு

முன்னரே தேர்தல் நடாத்த நினைக்கும் .மத்திய அரசை கலைத்துவிட்டு காபந்து அரசு அமைத்து தேர்தலை முன்னரே நடத்தும்.

இந்திரகாங்கிரசை முதுகில் சுமப்பதற்கு தமிழ்நாட்டு கட்சிகள் எல்லாமே தயாராக இருக்கின்றது. அதனால் தமிழ்நாடு அரசு கலைக்கப்படுவற்கும் சந்தர்ப்பம் உண்டு.

ஈழத்து பிரச்சனையில் தமிழக கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பதனால்தான் இந்திர (இனிமேல் சோனியா காங்கிரசாகிவிடும்) காங்கிரஸ் தன் இஷ்டப்படி நடந்து கொள்கின்றது.

இப்போது தமிழீழத்தை ஆதரிக்கின்ற அம்மணி தமிழ்நாட்டு அரசு கலைக்கப்பட்டால் வேறுமாதிரி பேச ஆரம்பித்திருப்பா. அவவினுடைய ஆட்சியைவிட தி.மு.க ஆட்சி ஓரளவாவரது சிறந்தது எமக்கு

  • கருத்துக்கள உறவுகள்

jj.jpg

j-1.jpg

jjjjj.jpg

ll-1.jpg

Unavngivetjayaa.jpg

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி பையன் .......நன்றி ..........நீங்க ரொம்ப வேகமாக படம் எல்லாம் காட்டு ரீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என் மனதில் இருந்த அத்தனையையும் அம்மா தெளிவாக, துணிவாக கூறியுள்ளா, இருந்தாலும் அம்மா உறுதியானவ என்பதை மட்டும் என்னால் கூறமுடியாது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அதாவது அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள அத்தனை விபரங்களும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மையான தகவல்கள் என்பது எனது கருத்து.

. அவவினுடைய ஆட்சியைவிட தி.மு.க ஆட்சி ஓரளவாவரது சிறந்தது எமக்கு

உப்பிடி சொல்லி சொல்லி தான் தமிழனின் தலையில் மிளகாய் அரைச்சுக்கொண்டிருக்கீறீர்க

Edited by Subiththiran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.