Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒப்பரேஷன் "வணங்கா மண்" பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !

Featured Replies

ஒப்பரேஷன் "வணங்கா மண்" பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !

பிரசுரித்த திகதி : 11 Mar 2009

பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் "வணங்கா மண்" எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் "வணங்கா மண்" என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் பிரித்தானியர்களிடம் கோரி நிற்கின்றனர்.

பிரித்தானியாவின் பல பாகங்களில் உணவு சேமிப்பு நிலையங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளது. இங்கு உலர் உணவுப்பொருட்களை மக்கள் சென்று வழங்கமுடியும். உடைகள் மற்றும் இலங்கைத் தயாரிப்பான உணவு வகைகளை தவிர்க்குமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலை நிவாரண கப்பல் என்று கூறாது "வணங்கா மண்" என பெயரிட்டதன் காரணம், உலகநாடுகளால் புறக்கணிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தின் கொடூரமான எறிகணைத் தாக்குதல், வான் தாக்குதலுக்கு உள்ளாகி, மிகமோசமான உணவு தடைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உலகில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டிருந்தும், சிங்கள இனவாதிகளுக்கு தலைவணங்காது நிற்கும் எம் தமிழ் மக்களுக்காக எம்மவர்களால் அனுப்பப்படும் கப்பல் என்பதாலாகும்.

புலம் பெயர் வாழ் தமிழர்களே! விரைந்து செயல்பட்டு உணவுகளை வழங்குங்கள். இந்த கப்பலை வெற்றியாக முல்லை துறைமுகத்திற்கு கொண்டுசெல்ல ஏற்பாட்டாளர்களோடு தோளோடு தோள் நின்று உதவுங்கள், என அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.

இச் சந்தர்ப்பத்தை தவறவிடின் இனி எச் சந்தர்ப்பத்தில் நாம் வன்னி மக்களை காக்கப் போகிறோம்...!

thanks

http://www.athirvu.com/target_news.php?sub...amp;ucat=4&

  • Replies 102
  • Views 9.4k
  • Created
  • Last Reply

பலரும் கூடி பஜனைபாடாமல் ஒரு தீரமான செயலை யெய்ய விளைகிறீகள் உங்களுக்கு என் சிரந்தாழ் வாழ்த்துக்கள்...

என்னால் முடிந்த வரை உங்களுக்கு எனது பங்களிப்பை செய்வேன்.

எனது வலையில் இருப்பவர்களுக்கும் இதை தெரியப்படுத்துவேன்... விழ விழ எழுவதுமாத்திரமில்லை புதுமையையும் செய்யுங்கள்.

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

"வணங்கா மண்" போய் சேருமா இல்ல சர்வதேசக் கடற்பரப்பில் வைச்சே இந்திய - அமெரிக்க - சிறீலங்கா கடற்படைகளின் கூட்டு நடவடிக்கையில் மூழ்கடிக்கப்படுமா..??!

இந்தக் கப்பலுக்கு யார் வழித்துணை வழங்கப் போகினம்..??!

இந்திய - சிறீலங்கா அரசுகளின் அனுமதி இருக்கா..??!

ஐநா அல்லது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பெடுத்து இக்கப்பலை முல்லைத்தீவை நோக்கிக் கொண்டு செல்லுமா அல்லது சிறீலங்காவிடம் ஒப்படைக்குமா..??!

இப்படி இன்னோரென்ன கேள்விகளுக்கு பதில் இல்லாமல்.. கொடுங்கள்.. கொட்டுங்கள் என்றால்..???! இறுதியில் கொடுக்கிறதோட வணங்கா மண் கடலுக்கு அடியில் கொட்டுண்டு போய் கிடக்கும்..! இல்ல சிங்களவனுக்கு புத்தளத்தில அஸ்ரப்பின் பணத்தில் குட்டி போட்டு பெருகிக் கொண்டிருக்கும் சோனிக்கும் போய் சேரும்..! :lol:<_<

Edited by nedukkalapoovan

அனேகமாக தரவிறக்கும் பணிக்கு செஞ்சிலுவை சங்கம் உதவி வழங்கும் எண்று எதிர்பார்க்கிறார்கள்...

மனிதாபிமான பொருட்கள் செல்லும் கப்பல் மூழ்கடிப்பு...?? அதையும் எதிர்பார்க்கலாம்...!! சிங்கள அரசு உதவி செய்யாத போது தமிழர்களே தமிழர்களின் வாழ்வை பலப்படுத்தும் படலம் இது... தனி நாடு போல தமிழர்கள் செயற் படுவதால் அதை கட்டாயம் சிங்கள படைகள் மூழ்கடிப்பார்கள்...

அதன் பின்னரான அரசியல் நடவடிக்கைகளுக்கு தமிழர்கள் ஒட்டு மொத்தமாக இப்போதே தயாராக இருக்க வேண்டும்... மனிதாபிமானம் அற்ற சிங்களவருக்கு எதிராக போராட்டங்கள் இன்னும் வலுவாக வேண்டி இருக்கும்.. தனி நாட்டு கோரிக்கையையும் இதனால் வலுவடையும்..

Edited by தயா

முடிவு மோசமா இருக்குமென்றுதெரியாமலா இருப்பார்கள்?... இருந்தாலும் போராடாமல் இருக்க முடியாது? வெறுமனே எத்தனை நாளைக்குத்தான் உண்ணாவிரதமும் ஊர்வலமும் நடத்துவது. இதுக்கு மேல் தீகுளிக்காமல் கப்பலை அனுப்பலாம்.

தயா சொன்னமாதிரி நாங்கள் தனி தேசமாகி கனகாலமாயிட்டுது.

ஒரு தேச நிர்மாணத்துக்கு முக்கியமாக 5 விடயங்கள் இருக்க வேண்டும் என்கிறார்கள்..

சிறப்பான தலைமை

அரசியல் (கொள்கைகள், சட்டங்கள், கட்டுமானங்கள்)

பொருளாதாரம்

பாதுகாப்பு, படை கட்டுமானம் (பலம்)

புலநாய்வு

இலங்கையில் இருக்கும் சிங்களவர்களை விட தமிழர்கள் புலம்பெயர்ந்தும் கொழும்பிலும் உள்ள தமிழர்கள் பொருளாதாரத்தில் சிங்களவருக்கு சளைத்தவராக இல்லை, ( எங்களின் தேவைகளை நாங்களே பார்க்கும் அளவுக்கு உள்ளார்கள்) என்பதையும் நாங்கள் நிறுவ வேண்டிய தேவையில் இருக்கிறோம்... மிகுதிகளை கைகளில் வைத்திருக்கும் புலிகளை மட்டுமே நாங்கள் நம்புகிறோம், அவர்களே எங்களின் தலைமை என்பதை புரிய வைக்க முயல வேண்டும்.. அதன் பின்னர் தான் உண்மையான விடிவு ஆரம்பிக்கும்...

சிங்கள அரசுகூட தொண்டு நிறுவனங்களின் உதவியைதான் இப்போது வன்னிக்கு அனுப்பி கொண்டு இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம் ஆனால் இதற்கு சர்வதேசத்தின் ஒத்தழைப்பும் ரொம்ப அவசியம்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசு தன்னுடைய உணவையே கொடுக்க விடுகுதில்லை. அதற்குள் இப்படி ஒரு கப்பல் உணவோடு வருகுது என்று தெரிந்தால் ஆயுதம் புலிகளுக்கு போகுது என்றொரு பொய்ச்சாட்டு சொல்லி இந்தியா மூலம் நிற்பாட்ட முயலலாம்.

என்றாலும் எல்லாவற்றையும் ஏற்பாட்டாளர்கள் வெல்ல வாழ்த்துக்கள். எப்படி உதவி செய்வது என யாராவது கூறமுடியுமா? (இங்கிலாந்து வாசிகள்)

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பரேஷன் "வணங்கா மண்" பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !

பிரசுரித்த திகதி : 11 Mar 2009

பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் "வணங்கா மண்" எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் "வணங்கா மண்" என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் பிரித்தானியர்களிடம் கோரி நிற்கின்றனர்.

பெரும் தேசிய அழிவிலிருந்து தமிழினத்தைக் காக்கும் புலம்பெயர் தமிழரின் நடவடிக்கைகளில் காத்திரமான நகர்வுகளின் தொடக்கப் புள்ளியாகவும், அரசியல் ரீதியான கோரிக்கைகள் என்பது மக்களது பாதுகாப்பிற்கும் வாழ்வுக்குமானதேயன்றி வேறெதற்குமல்ல என்பதையும், எம்மினத்தினது நல்வாழ்வில் இருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்துவதாக அமையும். இதனூடாக உலகிலே உள்ள தத்தமது தேசத்து, இனத்து மக்களுக்கு, தவறுதலாக நெருப்புச் சுட்டவிட்டுவிட்டாலே குரல்கொடுக்கும் உரிமை உள்ளதுபோல், எமது உறவுகள் இனப்படுகொலைக்குள்ளாகுவதோடு, திட்டமிட்ட பட்டிணி அவலத்தை தடுக்கும் கடன் எமக்கு உண்டென்பதை தெரிவிப்பதாகவும் அமையும். வெற்றிபெற வாழ்த்துகள். விடியலொன்று மலரட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்பிக்கையே வாழ்க்கை

வணங்கா மண் தன் பணி, பயணத்தில் வெற்றி பெறும்

உயிரையே கொடுக்க மாலுமிகள் தயாராகின்ற போது

வெறும் பொருட்களை மட்டும் கொடுத்துதவ

ஆயிரம் சந்தேகங்கள் ஏன் ?

நாம் இழந்தவை ஏராளம் விலை மதிப்பிட முடியாதவை

நாம் வழங்கப்போகும் உணவு மருந்துப் பொருட்கள் சேர்ந்தாலும்

சேராது விடினும் , வணங்கா மண் ஈழ விடுதலை வரலாற்றில்

கட்டாயம் இடம்பெறும் இடம் பெற வைக்க நாம் அனைவரும்

இணைவோம்

உண்மையிலேயே இது பாராட்டப்பட வேண்டிய விடயம்.இந்த முயற்சியை ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பலத்தின் வெளிப்பாடாக எடுத்துக்காட்ட வேண்டும்.இந்தக் கப்பல் சர்வதேச அமைப்புக்களின் வழித்துணையுடன் முல்லைத் தீவை சென்றடைய வேண்டும் என்பதை நாங்கள் அனைவரும் எந்தெந்தவழிகளில் முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் வலியுறுத்த வேண்டும்.புலம் பெயாந்த தமிழர்கள் தாயகம் நோக்கிய பயணத்துக்கு தாயராக விட்டார்கள் என்ற செய்தி உலகிற்கு தெரிய வேண்டும்.ஐக்கிய இராட்சிய துறைமுகத்திலிருந்து பிரித்தானிய சுங்கத் திணைக்களத்தின் பரிசோதனையின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மனிப்புச் சபை போன்ற அமைப்புக்களின் வழித்துணையுடன் இந்தக் கப்பல் முல்லைத் தீவை நோக்கிய தனது பயணத்தை தொடருவதற்கு நாங்கள் எங்கள் ஒட்டு மொத்த பலத்தையும் கொடுத்து நெருக்குதல் கொடுக்கவேண்டும்.சிறீங்கா அரசு இதை தடுத்தால் இந்தக் கப்பலை அழித்தால் அது சர்வதேச கவனத்தை ஈhக்கும் ஒரு பாரிய சம்பவமாக அமையும்.

இங்கே இப்போதே அப்படி நடக்கும் இப்படி நடக்கும் என்று யாரும் எழுதி தயவு செய்து இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடவேண்டாம்

Edited by athiyan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இப்போதே அப்படி நடக்கும் இப்படி நடக்கும் என்று யாரும் எழுதி தயவு செய்து இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடவேண்டாம்

தயவு செய்து உதவாவிட்டாலும் உபத்திரவம் தாராதீர்

ஒரு கப்பல் அழிந்தால் நாம் முடங்கி விடக்கூடாது.... இதுவே புலத்தவர் போராட்டத்தின் திருப்பு முனையாக்கூட இருக்கலாம். முயற்சி யெய்யாமல் பலன் கிடைக்காது.

போய்ச்சேர்ந்தால் கப்பல் போனா மயிர்... உயிரே போகுதாம் இதில கப்பலென்ன... இனி ஏன் பயம், தயக்கம்?

Edited by Sooravali

நல்ல துணிச்சலான விஷயம்.

ஆனால்

லண்டனிலையிருந்து முல்லைத் தீவு கிட்டத்தட்ட 5500 மைல் அல்லது 8800 கிலோமீட்டர். இவ்வளவு தூரம் ஒரு கப்பலை வாடகைக்கு அமர்த்த எவ்வளவு செலவாகும்? அந்தச் செலவிலை இந்தியாவிலை பொருட்களை வாங்கி அனுப்பினால் பத்துமடங்கு பொருட்களை அனுப்பலாம்.

உணர்ச்சி வசப்படுவது மட்டும் போதாது கொஞ்சம் யோசிக்கவும் வேணும்.

சரி

ஆரம்பித்தாச்சு

இனி கப்பல் போனமாதிரித்தான்???

பரத் அண்ணா இந்தியாவில் சாமான்களை வாங்கி காங்கிரஸ் மற்றும் திமுக அரசுகளின் ஆசியோடு சிங்களவர்களுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் அனுப்பலாம்.நல்ல யோசனை.இந்;தியா என்ன செய்கிறது என்பது உங்களுக்க தெரியாதா?

அந்தச் செலவிலை இந்தியாவிலை பொருட்களை வாங்கி அனுப்பினால் பத்துமடங்கு பொருட்களை அனுப்பலாம்.

அப்படி செய்தால் அதற்கு வேறு பெயர் சூட்டப்பட்டு.. அரசியல் பண்ணப்பட்டு, இழுபறிப்பட்டு, கடைசியல் சிறீலங்கா அரசபயங்கரவாதிகளின் கைகளுக்கு போய் சேரும்.

உணர்ச்சி வசப்படுவது மட்டும் போதாது கொஞ்சம் யோசிக்கவும் வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல துணிச்சலான விஷயம்.

ஆனால்

லண்டனிலையிருந்து முல்லைத் தீவு கிட்டத்தட்ட 5500 மைல் அல்லது 8800 கிலோமீட்டர். இவ்வளவு தூரம் ஒரு கப்பலை வாடகைக்கு அமர்த்த எவ்வளவு செலவாகும்? அந்தச் செலவிலை இந்தியாவிலை பொருட்களை வாங்கி அனுப்பினால் பத்துமடங்கு பொருட்களை அனுப்பலாம்.

உணர்ச்சி வசப்படுவது மட்டும் போதாது கொஞ்சம் யோசிக்கவும் வேணும்.

இந்தியாவை எதுக்கு அப்பு உள்ள கொண்டு வார வேண்டாம் அந்த உதவியும் உணவும்

எம்மவர்களுக்கு எம்மால்தான் உதவ முடியும் :unsure:

அழுதது போதும் தொழுதது போதும். உரமுடன் எழுவோம் கடமையை செய்ய. அக்கப் போர்கள் தேவையில்லை. ஒரு முயற்சி. முயற்சி செய்து பார்ப்போம்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..! எமது விடுதலையை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும்.. யாரையும் கெஞ்சிப் பலனில்லை.! கெஞ்சினாலும், நம்மை நாமே எரித்துக் கொண்டாலும் கூட‌ யாரும் மனம் இரங்கப் போவதில்லை..!

இதற்கு எவ்வாறு உதவலாம் என்பதைத் தெரியப்படுத்துங்கள்..!

இங்கே இப்போதே அப்படி நடக்கும் இப்படி நடக்கும் என்று யாரும் எழுதி தயவு செய்து இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடவேண்டாம்

தயவு செய்து உதவாவிட்டாலும் உபத்திரவம் தாராதீர்

ஒரு கப்பல் அழிந்தால் நாம் முடங்கி விடக்கூடாது.... இதுவே புலத்தவர் போராட்டத்தின் திருப்பு முனையாக்கூட இருக்கலாம். முயற்சி யெய்யாமல் பலன் கிடைக்காது.

போய்ச்சேர்ந்தால் கப்பல் போனா மயிர்... உயிரே போகுதாம் இதில கப்பலென்ன... இனி ஏன் பயம், தயக்கம்?

அழுதது போதும் தொழுதது போதும். உரமுடன் எழுவோம் கடமையை செய்ய. அக்கப் போர்கள் தேவையில்லை. ஒரு முயற்சி. முயற்சி செய்து பார்ப்போம்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து காசு மிச்சம் பிடிக்க யோசனை சொல்லுற ஆக்கள் சிங்களவனுக்கு யோசனை சொல்லுங்கோ. அவன் தான் ஆக்களக் கொல்லுறதில காச வீணாக்கிறான். கப்பலுக்கு செலவாகுமே எண்டு இங்க வந்து அழுது காரியத்தக் கெடுக்காம கொஞ்ச நாளைக்கு மூடிக் கொண்டிருங்கோ! :unsure:

இது ஒரு பரப்புரை யுத்தத்தையும் சிங்கள இலங்கை அரசுக்கு அழுத்தத்தையும் கொடுக்கும்.இந்தியாவில் இருந்து கப்பல் அனுப்ப முடியாது அரசு அனுப்ப அனுமதிக்காது ஆனல் இங்கிலாந்தில் இருந்து அனுப்புவது மிக்க நல்லது.இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முயற்சியும் அறவழிப்போராட்டத்தின் ஒரு அங்கமாகவே கருத முடியும், அதாவது வெளிப்படையான தியாக மனப்பான்மையுடன் செயல்பட்டால் எல்லோராலும் வரவேற்கக்கூடிய துணிவுகரமான ஒரு செயல்.

ஆனால் இதை முன்னின்று செயல்படுபவர்கள் சற்று விபரமாக தெளிவுபடுத்தினால் அதிகளவான ஆதரவைப்பெறமுடியும்.

இதைவைத்து யாராவது அரசியல் இலாபம் பெறமுற்பட்டால் அதன் விளைவும் பாரதூரமாக இருக்கவும் சந்தர்ப்பம் உள்ளது.

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.