Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகிரங்கமான உங்கள் 'தனி ஈழம்' வாக்குறுதி உங்கள் துணிவையும் ஞானத்தையும் காட்டுகின்றது" என உலகத் தமிழர்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் எனக்கு குவிகின்றன: ஜெயலலிதா பெருமிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் நிலை குறித்து எங்களுக்கு இருக்கும் கவலைகளை எல்லாம் போக்குகின்ற வகையில் - ஆக்கபூர்வமாக - துணிச்சலாக - பகிரங்கமாக - அச்சம் இன்றி - ஞானத்தோடு நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று எனக்கு உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் செய்திகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா மீண்டும் பெருமிதம் வெளிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள நீலகிரியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உலகெங்கும் இருந்து கடந்த சில நாட்களாக எனக்கு எண்ணற்ற தொலைபேசி அழைப்புகளும், E-mail எனப்படும் மின்னஞ்சல்களும் செல்லிடப்பேசி வழியிலான குறுந்தகவல்களும் தொலைநகல் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. ’

இலங்கைத் தமிழர் நிலை குறித்து எங்களுக்கு இருக்கும் கவலைகளை எல்லாம் போக்குகின்ற வகையில், ஆக்கப்பூர்வமாக, துணிச்சலாக, பகிரங்கமாக, அச்சம் இன்றி, ஞானத்தோடு நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி என்று எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் செய்திகளை அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள்.

எங்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தருவதாக, உங்கள் ஈழப் பிரகடனம் அமைந்திருக்கிறது", என்று நன்றி சொல்லி, கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள், இப்படி உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும் நிலையில், நம் கைக்கு எட்டிய தூரத்தில், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வாழுகின்ற தமிழர்களைப் பற்றி, சிறிதும் அக்கறை இல்லாத, மத்திய, மாநில அரசுகள், கபட நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

இரண்டு ஆண்டுகளாக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போரில் கொல்லப்படுவதெல்லாம் அப்பாவி பொதுமக்களாக இருக்கிறார்கள். இலங்கை இராணுவத்திற்கு இந்தியா ஆயுதமும், பயிற்சியும் தருவதாக கூறப்படுகிறது. இது அநியாயம்; அக்கிரமம்; நம்முடைய பெருமைக்கு உகந்ததல்ல. இதைச் செய்யாதீர்கள் என்று எத்தனையோ முறை நாம் எடுத்துக் கூறினோம். அதற்கெல்லாம் இந்திய அரசு செவி சாய்க்கவில்லை.

நம்முடைய வரிப் பணத்தில் இவ்வளவு உதவிகளையும் இந்திய அரசு இலங்கைக்குச் செய்தது. அதை தி.மு.க. தயக்கம் இன்றி ஆதரித்தது. தன்னுடைய ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக, காங்கிரசின் அத்தனை நடவடிக்கைகளையும் கருணாநிதி ஆதரித்தார்.

புதுடில்லியில் இருந்து தூதுவர்கள் கொழும்பு நகருக்குச் சென்றார்கள். ராஜபக்சவின் தூதுவர்கள் பல முறை டில்லிக்கு வந்தார்கள். இந்தப் பயணங்கள் எல்லாம் மூடு மந்திரமாகவே இருந்தன.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்களோ தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. செத்து மடிகிறார்கள் தமிழர்கள் அங்கே என்று உலகமே அழுத பொழுது, தந்தி கொடுப்பதும், தொலைபேசியில் பேசுவதும், கடிதம் எழுதுவதுமாக காலத்தைப் போக்கினார் கருணாநிதி.

கருணாநிதியின் முகத்திரை, கிழியும் நேரம் வந்தவுடன், 3 மணி நேர உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். இந்த நிமிடம் வரை போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும்; அதை நிறுத்த வேண்டிய காரணம் இன்னும் வரவில்லை என்றும், இலங்கை அதிபர் ராஜபக்ச அறிவித்திருக்கிறார்.

இலங்கையில் உரிமை குடிமக்களாக தமிழர்கள் வாழ வேண்டும் என்றால், அங்கே தனி ஈழம் அமைவது தான் ஒரே தீர்வு. அதை நான் செய்து முடிப்பேன். வங்காள தேசம் உருவாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியப் படையை இந்திரா காந்தி அனுப்பியது நியாயம் என்றால், எங்கள் தமிழர் நலன் காக்க, இந்திய இராணுவத்தை அனுப்புவதும் நியாயமே, அதை நான் செய்து முடிப்பேன் என்று நான் பிரகடனம் செய்தேன். அதைப் பாராட்டித் தான் உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் எனக்கு நன்றிச் செய்திகளையும், வாழ்த்துகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகிய நான், ஒன்றைச் சொன்னால் அதை செய்து முடிப்பேன் என்று உலகத் தமிழினம் நம்புகிறது. சுவிற்சர்லாந்து நாட்டின் தமிழர் பேரவை எனக்கு அனுப்பி இருக்கும் செய்தியைக் கேளுங்கள்.

"அம்மா, தாய்மை உள்ளம் கொண்ட நீங்கள், கொண்ட கொள்கையில் இருந்து கிஞ்சித்தும் விலகாத, உறுதியான குணமுடையவர் என அறியப்பட்டவர். நீங்கள் கூறும் வார்த்தைகள், உங்கள் உதட்டில் இருந்து அல்லாமல், அடிமனதில் இருந்து வந்தவை என நாங்கள் முழு மனதாக நம்புகிறோம். உங்களின் வார்த்தைகள் மூலம் எங்களுக்கு பெரிய ஆன்ம பலம் கிட்டி இருக்கிறது. தங்களுக்கு சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழத் தமிழர்களின் சார்பாக மனமார்ந்த நன்றி" என்று Confederation of Tamil Diaspora Organizations in Switzerland என்ற அமைப்பு, எனக்கு செய்தி அனுப்பி இருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு, நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, நீங்கள் எனக்கு உதவ வேண்டும். எனக்கு வாக்களித்து உதவ வேண்டும். செய்வீர்களா? உலகத் தமிழர்களுக்கெல்லாம், இருக்கின்ற உணர்வைப் போல, நீங்களும் உணர்வு கொண்டு, எழ வேண்டும். செய்வீர்களா?

இலங்கைத் தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்றால், என் கரத்தை நீங்கள் பலப்படுத்த வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாம் நாடாள வேண்டும். உங்கள் வாக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு வேண்டும், வேண்டும், வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.

http://www.puthinam.com/full.php?2b24OOU4b...2f1eW0cc2mcYAde

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகெங்கும் இருந்து கடந்த சில நாட்களாக எனக்கு எண்ணற்ற தொலைபேசி அழைப்புகளும், E-mail எனப்படும் மின்னஞ்சல்களும் செல்லிடப்பேசி வழியிலான குறுந்தகவல்களும் தொலைநகல் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஜெயலலிதா பெருமிதம்.

அடுத்த அதிரடி நடவடிக்கையாய் பழசு இனி மன்மோடனுக்கும் சொக்கவைக்கும் சோனியாவுக்கும் ஈமெயில் அனுப்ப சொல்லப்போகுது.

அம்மா தாயே!

உங்களால் ஈழத்தமிழர்களுக்கு தனி ஈழம் கிடைக்குமாயின் ஒவ்வொரு ஈழத்தமிழனின் வீட்டிலும் சாமிபடத்திற்குபதிலாக உங்கள் படம் நிலைத்து நிற்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா தாயே!

உங்களால் ஈழத்தமிழர்களுக்கு தனி ஈழம் கிடைக்குமாயின் ஒவ்வொரு ஈழத்தமிழனின் வீட்டிலும் சாமிபடத்திற்குபதிலாக உங்கள் படம் நிலைத்து நிற்கும்.

ஈழத் தமிழர்களுக்கு அளித்த தனி ஈழமே தீர்வு என்ற வாக்குறுதியை நிச்சயம் காப்பேன்: ஜெயலலிதா

[ சனிக்கிழமை, 02 மே 2009, 04:49.15 PM GMT +05:30 ]

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனித் தமிழீழம் மட்டுமே தீர்வு என்றும் அதனை அமைத்தே தீருவேன் என்றும் தான் அளித்த வாக்குறுதியை நிச்சயம் காப்பேன் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து இன்று நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ஈழத் தமிழர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற தனது கூட்டணிக்கு வாக்களித்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தனி ஈழமே தீர்வு என்று தான் கூறியதற்கு உலகத் தமிழர்களிடமிருந்து குவியும் பாராட்டுக் கடிதங்கள் குறித்து இக்கூட்டத்தில் குறிப்பிட்ட ஜெயலலிதா, சுவிட்சர்லாந்து தமிழ் பேரவை அனுப்பியிருந்த கடிதத்தை கூட்டத்தினருக்குப் படித்துக் காட்டினார்.

“இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழமே ஒரே தீர்வு என்று துணிச்சலாக, பகிரங்கமாக, அச்சமின்றி நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி என்று எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் செய்திகளை அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள்.

எங்களுக்கு மிகுந்த ஆறுதல் தருவதாக உங்கள் ஈழப் பிரகடனம் அமைந்திருக்கிறது என்று நன்றி சொல்லி கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் இப்படி உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் வேளையில், நம் கைக்கெட்டிய தூரத்தில், கண்ணுக்கெட்டிய தூரத்தில் வாழுகின்ற தமிழர்களைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாது மத்திய, மாநில அரசுகள் கபட நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. இரண்டு ஆண்டுகளாக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

போரில் கொல்லப்படுவதெல்லாம் அப்பாவி பொதுமக்களாக இருக்கிறார்கள். இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ஆயுதமும், பயிற்சியும் தருவதாகக் கூறப்படுகிறது. இது அநியாயம், அக்கிரமம், நம்முடைய பெருமைக்கு உகந்ததல்ல, இதைச் செய்யாதீர்கள் என்று எத்தனையோ முறை நாம் எடுத்துக் கூறினோம்.

ஆனால் மத்திய அரசும், கருணாநிதியின் மைனாரிட்டி தி.மு.க. அரசும் அரசும் அம்மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் மக்களை ஏமாற்ற ஒவ்வொரு நாளும் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களின் துயரத்திற்கு முடிவு ஏற்பட தனி ஈழம் அமைவதுதான் ஒரே வழி, ஒரே தீர்வு. அதை நான் செய்து முடிப்பேன். வங்காள தேசம் உருவாக பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியப் படையை இந்திரா காந்தி அனுப்பியது நியாயமென்றால், எங்கள் தமிழர் நலன் காக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதும் நியாயமே. அதை நான் செய்து முடிப்பேன் என்று நான் பிரகடனம் செய்தேன். அதைப் பாராட்டித்தான் உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் எனக்கு நன்றி செய்திகளையும், வாழ்த்துகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகிய நான் ஒன்றைச் சொன்னால் அதைச் செய்து முடிப்பேன் என்று உலகத் தமிழனம் நம்புகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டு தமிழர்ப் பேரவை எனக்கு அனுப்பியிருக்கும் செய்தியைக் கேளுங்கள் :

அம்மா, தாய்மை உள்ளம் கொண்ட நீங்கள் கொண்ட கொள்கையில் இருந்து கிஞ்சித்தும் விலகாத உறுதியான குணம் உடையவர் என்று அறியப்பட்டவர். நீங்கள் கூறும் வார்த்தைகள் உங்கள் உதட்டில் இருந்து அல்லாமல், அடிமனதில் இருந்து வந்ததாக நாங்கள் முழுமனதாக நம்புகிறோம். உங்களின் வார்த்தைகள் மூலம் எங்களுக்கு பெரிய ஆன்ம பலம் கிட்டியிருக்கிறது. தங்களுக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி என்று Consortium of Tamil Diaspora Organizations in Switzerland என்ற அமைப்பு எனக்கு செய்தி அனுப்பியிருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற நீங்கள் எனக்கு உதவவேண்டும். அதாவது நீங்கள் எனக்கு வாக்களித்து உதவவேண்டும். உலகத் தமிழர்களுக்கெல்லாம் இருக்கின்ற உணர்வைப் போல நீங்களும் உணர்வு கொண்டு எழவேண்டும்.

இலங்கைத் தமிழர் நலன் காக்கப்பட வேண்டுமென்றால் என் கரத்தை நீங்கள் பலப்படுத்த வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாம் நாடாள வேண்டும். உங்கள் வாக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வேண்டும் வேண்டும் வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜெயலலிதா பேசினார்.

அம்மா தாயே!

உங்களால் ஈழத்தமிழர்களுக்கு தனி ஈழம் கிடைக்குமாயின் ஒவ்வொரு ஈழத்தமிழனின் வீட்டிலும் சாமிபடத்திற்குபதிலாக உங்கள் படம் நிலைத்து நிற்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா வாழ்க!

அம்மா வளர்க!!

அம்மா ஒளிர்க!!!

அம்மா வெற்றி நிச்சயம் உங்களுக்கு. 40 க்கு 40.

  • கருத்துக்கள உறவுகள்

செயலலிதா நேர்மையானவர். சந்தேகம் இல்லை. ஆனால் இம்முறை சொல்வதை செய்வார் என்றால் இல்லை என்பது தான் பதில். தான் வெற்றி பெற தமிழீழம் தவிர வேறு எவ்வழியுமில்லை.நாம் ஏமாந்த சோணகிரிகள் தான் மீண்டும் மீண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை சொல்லி ஆதரவு தேடினால்........அத்தனை தமிழக உறவுகள் நமக்கு ஆதரவாகும்......பின்பு என்னடி மீனாட்சி

(ஜெயா ஆச்சி )சொன்னது என்னாச்சு என்று பாடலாம் ...........

Edited by நிலாமதி

அம்மா தமிழீழம் அமைத்துத் தருவது இருக்கட்டும். ஆனால் கிழட்டுக் களைஞர் தோற்க வேண்டும். அதற்காகவாவது அம்மாவின் கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியே.

'விடியலை தரும் தெய்வ வாக்கு'- ஜெ.வுக்கு இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்பு குழு பாராட்டு

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் பேசியது தங்கள் மத்தியில் விடியலைத் தரும் தெய்வ வாக்காக ஒலிக்கின்றது என இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதம்..

மதிப்பிற்கும் பேரன்புக்குமுரிய அஇஅதிமுக பொதுச் செயலாளர் அன்னை ஜெயலலிதா அவர்கட்கு:

இத்தாலி வாழ் தமிழீழ மக்களின் பணிவான அன்பு வணக்கங்கள்

தங்களுக்கு கண்ணீரோடு நம்பிக்கை கொண்டு எழுதும் மடல்

சாவின் விளிம்பில் நின்று இனவாத இலங்கை அரசின் கொடிய குண்டு மழையில் குளித்தும், எறிகணையில் எரிந்தும், கொத்தணிக் குண்டிலும் நச்சு வாயுவிலும் கொல்லப்படும் ஈழத்தமிழ் மக்களின் அவலநிலைகளையும் அவர்களின் அவலக்குரல்களையும் கேட்டு தொப்புள் கொடி உறவுகளும் உலகத் தமிழினமும் பொங்கி எழுந்து மக்களின் கண்ணீர் துடைக்க வீதியில் இறங்கி, உண்ணாநிலை இருந்து, தீக்குளித்து உரிமைக்குரல் கொடுத்து சர்வதேசத்திடம் நியாயம் கேட்கும் வேளையில் ஈழத்தமிழர்களின் துயர் கண்டு உங்கள் இதயத்தின் கதவுகளைத் திறந்து ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை அமைத்து கொடுப்பேன் என்று உணர்வுடன் விடுத்த உணர்வின் வரிகளும் உரிமைக்குரலும் எங்கள் நெஞ்சத்தை நெருட வைத்துள்ளது.

தாய்த் தமிழகத்திலும், ஈழத்திலும் உள்ள எட்டுக் கோடி தமிழர்களோடு புலம்பெயர்ந்து வாழ்கி்ன்ற தமிழ் மக்களுக்கும் உங்கள் உறுதியான பேச்சு நம்பிக்கை ஓளியை ஏற்றியுள்ளது. ஈழத் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழீழத்தை அமைத்துத் தருவேன் என்ற உங்களின் நம்பிக்கை எம்மக்கள் மீதுள்ள தமிழ்ப்பற்றையும் பாசத்தையும் காட்டி நிற்கின்றது.

தமிழக அரசியல் வரலாற்றில் செய்வதை சொல்லும் புரட்சித்தலைவரின் வழிவந்த புரட்சித்தலைவியாக நீங்கள் ஒருவர் மட்டுமே திகழ்கின்றீர்கள்.

அன்று காலத்தின் கோலத்தோடு சில காட்டமான வார்த்தைகளைப் பகிர்ந்தாலும் இன்றைய ஈழத்தமிழர்களின் கோலத்தையும் அவலத்தையும் கண்டு உங்கள் உள்ளம் இறங்கி ஒரு புதிய ஒளிக்கீற்றை உருவாக்கியிக்கின்றீர்கள்.

ஈழத்தமிழர்களை பகடைக்காய்களாக்கி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளும் நாடகம் ஆடும் அரசியல் கலைஞர்களும் வாழும் தமிழ்நாட்டில் சொல்லிலும் செயலிலும் நேர்மையை நிலை நிறுத்தியவர் நீங்கள்.

தலைமுறை தலைமுறையாக எம்மக்கள் பட்ட சொல்லொணாத் துன்பங்களுக்கும் உறவுகளை இழந்து வாழும் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் தாங்கள் தந்த வாக்கு விடியலைத் தரும் தெய்வ வாக்காக ஒலிக்கின்றது.

வருகின்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி கொடி நாட்டி தமிழர்களின் தலைவியாக வலம் வந்து ஈழத்தமிழ் மக்களின் கனவுகளை நனவாக்கி உலகத்தால் காக்க முடியாத இலட்சக்கணக்கான மக்களை இன அழிப்பில் இருந்து காப்பாற்றிய தாய்மையின் வடிவமாய் தமிழர் வரலாற்றில் தாங்கள் என்றென்றும் வாழ்வீர்கள் என அந்த கடிதத்தல் கூறப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/

பிரான்ஸ் தமிழச் சங்கங்களின் கூட்டமைப்பு செல்வி. ஜெயலலிதாவுக்கு வாழ்த்து.

தமிழீழத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தர தான் முழுமைமயாக போராடப்போவதாக தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச் செயலருமான செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அறிவித்த வண்ணமுள்ளனர்.

அந்த வகையில் பிரான்சின் முக்கிய அமைப்புக்களில் ஒன்றான 63 தமிழ்ச் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரான்ஸ் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பும் தனது வாழ்த்துச் செய்தியை அறிவித்துள்ளது.

tcholi.jpg

http://www.pathivu.com/

செயலலிதா நேர்மையானவர். சந்தேகம் இல்லை. ஆனால் இம்முறை சொல்வதை செய்வார் என்றால் இல்லை என்பது தான் பதில். தான் வெற்றி பெற தமிழீழம் தவிர வேறு எவ்வழியுமில்லை.நாம் ஏமாந்த சோணகிரிகள் தான் மீண்டும் மீண்டும்..

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் அம்மாவின் ஆதரவு. இந்த தேர்தலில் அம்மா ஈழ ஆதரவு நிலை எடுத்து இருக்காவிட்டாலும் வெற்றி பெற்றே இருப்பார் . காரணம் ஏற்கனவே பலமான கட்சிகளின் கூட்டு மற்றும் கலைஞரை தோற்கடிக்க வேண்டும் என்ற அலை . இவரே முன்வந்து எடுத்த நிலைதான் ஈழ ஆதரவு . அதனால் தேவையில்லாமல் சந்தேகம் ?????? . மேலும் இந்தியா சம்மதித்தால் மட்டுமே தனி ஈழம் உருவாகுமோ என்ற நிலையும் இப்போது உள்ளது . பொறுத்திருந்து பார்க்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயே...மிக்க நன்றி.

உன் மீது நம்பிக்கை வைக்கிறோம்

கோடான கோடி தமிழர்களின் தாகம் தனிஈழம் தான்.

பிறகு,

ஈழம் அமைக்க இந்திய படைகளை மேலும் அனுப்ப தேவையில்லை,

இப்போது அங்கு உள்ள இந்திய படைகளையே பயன்படுத்தினால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா வாழும் தெய்வம் .

அம்மாவுக்கு ஈழத்தில் பிரமாண்டமான கோவில் ஒன்று நான் கட்டுவேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா வாழும் தெய்வம் .

அம்மாவுக்கு ஈழத்தில் பிரமாண்டமான கோவில் ஒன்று நான் கட்டுவேன் .

நாங்கள் இரண்டு பேருமாய் சேந்து கட்டுவோம் சிறி அண்ணா.. அம்மாக்கு பெரிய கோயிலாய்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இரண்டு பேருமாய் சேந்து கட்டுவோம் சிறி அண்ணா.. அம்மாக்கு பெரிய கோயிலாய்

நிச்சயமாக குட்டிப்பையா .....

வடக்கில் ஒரு கோவிலும் , கிழக்கில் ஒரு கோவிலும் கட்ட வேண்டும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக குட்டிப்பையா .....

வடக்கில் ஒரு கோவிலும் , கிழக்கில் ஒரு கோவிலும் கட்ட வேண்டும் .

அப்படியே குள்ள நரி கருணாநிதிக்கு கிட்லர் கெட்டப்பில ஒரு சிலையும் வைப்போம்.. வைச்சு போட்டு கீழ எழுதுவோம்.. இத்தாலி எருமையோட சேந்து தமிழ் இனத்தை அழிச்ச கொடியவன் என்று :rolleyes: .. அப்ப தானே எங்களுக்கு பிறக்க போற வாரிசுவளுக்கு தெரியும் அவன் யார் என்று.. :icon_idea:

கருணாநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நண்பர் ஒருவர் சொன்னார் யாராவது தெரிந்தால் உண்மையாகவா என்ற சொல்லுங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான திருச்சி பிரச்சார பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு வந்ததுமே முதல்வருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. நேற்று இரவு முழுவதும் காய்ச்சல் அடித்தது.

இன்று காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள்.

முதல்வர் இன்று வடசென்னை, தென்சென்னை ஆகிய இடங்களில் நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதாக இருந்தார். இவ்விரு கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வது என்பது ரத்து செய்யப்படலாம். மருத்துவர்களின் முடிவிற்கு பிறகே கூட்டம் ரத்து ஆகுமா என்பது தெரியவரும்.

நாளை முதல்வர் மதுரையில் பிரச்சாரம் செய்வதாக இருந்தார். அதுவும் ரத்து ஆகுமா என்பது மருத்துவர்களின் முடிவிற்கு பிறகே தெரியவரும்.

நன்றி நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான திருச்சி பிரச்சார பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு வந்ததுமே முதல்வருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. நேற்று இரவு முழுவதும் காய்ச்சல் அடித்தது.

நாடகத்தின் அடுத்த அத்தியாயம் தொடங்கியாயிற்று... படுத்துக்கொண்டே தேர்தலில் வெற்றி வாகை சூட நினைக்கிறார் போலும். இந்த சித்து வேலைகளுக்கெல்லாம் ஏமாந்த காலம் மாறிவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடகத்தின் அடுத்த அத்தியாயம் தொடங்கியாயிற்று... படுத்துக்கொண்டே தேர்தலில் வெற்றி வாகை சூட நினைக்கிறார் போலும். இந்த சித்து வேலைகளுக்கெல்லாம் ஏமாந்த காலம் மாறிவிட்டது.

தேர்தல் முடியும் வரை கருணாநிதி நலமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி அடுத்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்.ஆனால் ஆப்பு நிச்சயம். திமுக கூட்டணி வெல்லக் கூடாது.ஆகவே தமிழக மக்களே சிந்தித்து வாக்களிப்பீர் என நம்புவோம்.இந்தத் தேர்தல் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் தேர்தலாக இருக்கட்டும்.அம்மா சொல்லில் வேண்டாம் செயலில் காட்டுங்கள். பலரை நம்பி ஏமாந்த அனுபவங்கள் எங்களுக்கு நிறையவே இருக்கிறது.இப்போதைய உங்கள் நிலைப்பாட்டுக்கு நன்றி.எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

அனுதாப அலையை கிளப்ப கிழவன் முற்படுகிறான்.

மொட்டையை வெற்றிக்காக அழகிரி/ஸ்ராலின் போட்டாலும் போட்டு தேர்தலில் வெற்றியை பெற்றால் நல்லது என்றும் நினைக்கலாம்.

என்னத்துக்கும் நாங்கள் இப்பவே செத்த வீட்டுச் செய்திகளை அனுப்ப தயாராவோம்.

தமிழ்மீது சத்தியம்;ஈழத்து திலீபன் கல்லறைக்குப்பக்கத்தில் இருந்திருப்பேன்.------:கலைஞர்

இலங்கை பிரச்சனை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து முதலவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து முதல்வர் கருணாநிதி கடிதம் வடிவிலான அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

’’எல்லோரும் ஒன்றாய்க் கூடி இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு தரும் கூட்டு முயற்சிக்கு இங்கே வேட்டு வைத்தது யார் என்று; திருச்சி கூட்டத்தில் தம்பி திருமாவளவன் அடுக்கடுக்கான ஆதாரங்களை வரிசைப்படுத்தினாரே

1.அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு வர மறுத்தவர் யார்?. 2.மனிதச் சங்கிலிக்கு வர மறுத்தவர் யார்?. 3.டெல்லியில் பிரதமரைச் சந்திக்க வர மறுத்தவர்கள் யார்?.

4. உண்ணாவிரதங்களை கபட நாடகம் என்றுரைத்தவர் யார்?. 5.ஈழ விடுதலைக்காக அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்திய தலைவர் கருணாநிதி அல்லவா? இப்போது நீலிக் கண்ணீர் வடிப்போர் இது வரை ஈழத் தமிழ் சொந்தங்களுக்காக கண்ணீர் வடித்ததுண்டா?

6.இப்போது ஈழம் வாங்கித் தருகிறேன் என்பவர் தேர்தலுக்குப் பிறகு அதைப் பற்றிப் பேசுவாரா?. 7. ஒரு சில இடங்களுக்காகத்தான் அந்த அணியோடு கூட்டணி சேர்ந்தார்களே தவிர, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று நினைத்தா தோழமை கொண்டார்கள்? என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகளைத் தொடுத்தார் திருமாவளவன்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கியவுடன்; இலங்கையில் படையெடுத்து ஈழத்தை அமைப்போம் என்று இன்றைக்கு எக்காளமிடுகிறாரே; இவருடைய கூட்டணிக் கட்சியாம் கம்யூனிஸ்ட் சீனா கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்குமா?

இத்தகையோர் கோமாளி நடவடிக்கைகளுக்கிடையே அங்கே இலங்கையில் போரில் சிக்கி அவதிப்படும் தமிழர்களைக் காத்திட நமது ஒரு உயிர் பயன்பட்டால் என்ன என்று எடுத்த முடிவுதான்- யாருக்கும் தெரிவிக்காமல் நான் மேற்கொண்ட உண்ணா நோன்பு.

வீட்டில் உள்ளவர்களும்-நாட்டில் உள்ள உடன்பிறப்புகளும்-உங்களிடம் அறிவிக்காமல் மேற்கொண்ட இந்த அறப் போருக்காக என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒன்று; அன்று வெற்றி பெற்றதால் இன்று உம்மோடு இருக்கிறேன்.

இல்லையேல் விருதுநகர் சங்கரலிங்க நாடார் கல்லறையின் அருகில் -ஈழத்து திலீபன் கல்லறைக்குப் பக்கத்தில் தான் இருந்திருப்பேன்- இது என்தமிழ் மீது சத்தியம்- அண்ணா, அய்யா மீது ஆணை என்பதை மட்டும் அறிந்திடுக! எல்லாம் ஓரளவு நன்மையாக முடிந்த வரையில் சரி;

அடுத்த கட்ட தொடர் பணி- நாடாளுமன்றத் தேர்தல் தொடர் பணி இருக்கிறதே-திருச்சியில் உன் திருமுகம் கண்டேன். அடுத்து, மதுரையிலும்- கோவையிலும்- மேட்டுப்பாளையத்திலும் என்னுயிரே உன்னைச் சந்திக்கிறேன்.

களைப்பைப் பொருட்படுத்தாமல் காரியமாற்றுக! என் கண்ணல்ல, மணியல்ல; களத்திலேயே இரு-இது ஜனநாயக வெற்றிக்கான களம் என்பதை மறவாதே!’’என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.nakkheeran.in/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.