Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிளாஸ்ரிக் சேர்ஜரி பிரபாகரன் மாண்டார்; தேசிய தலைவருக்கு உயிராபத்து இல்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆக்கிரமிப்புப் படையினர் 1987 - 90 காலப்பகுதிகளில் தமிழீழ தேசத்தை முற்றாக ஆக்கிரமித்து நின்ற வேளை 1988/89 இல் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இந்திய அரசால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அச் செய்தியை அன்று விடுதலைப்புலிகள் மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. இறுதியில் 1990 ம் ஆண்டு கடைசிப் பகுதியில் தேசிய தலைவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி 3 ஆண்டு கால மர்மத்தை முடித்து வைத்தார்.

அன்று அந்த மர்மமே அவரை எதிரிகளிமிருந்து காத்தது. தேசிய தலைவரின் இருப்பிடத்தை அறிய சுற்றித் திரிந்த இந்திய ஜவான்கள் இறுதியில் விடுதலைப்புலிகள் மதிநுட்ப நகர்வால் அன்று தோற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேபோல், அன்று இந்திய அரசு தமிழ் மக்களைக் குழப்பி.. அவர்களை தன்னிடம் பணிய வைக்கச் செய்த பரப்புரைக்கு ஒத்த பரப்புரை ஒன்றை சிறீலங்கா சிங்கள அரசு இன்று முடுக்கிவிட்டுள்ளது.

praba1.jpg

//பிளாஸ்ரிக் சேர்ஜரி மூலம் சோடிக்கப்பட்ட முகம்.//

prabaharan2004.jpg

//உண்மை முகம்.//

(படங்கள்: மற்றும் இது தொடர்பான இன்னொரு ஆக்கம் http://veltharma.blogspot.com)

அதற்கு அமைய பிளாஸ்ரி சேர்ஜரி (plastic surgery) மூலம் தத்துரூபமாக முகமளவில் பிரபாகரனை ஒத்து உருவாக்கப்பட்ட ஒரு உடலை பிரபாகரனின் உடல் என்று வீடியோ எடுத்துக் காட்டி உலகெங்கும் வாழும் மக்களை ஏமாற்றி வருகிறது. இது ஒருவகையில் தமிழ் மக்களை பாதிக்கும் விடயமாக இருப்பினும் இன்னொரு புறத்தில் இறந்தவராக சொல்லப்படுபவர் அப்படியே இறந்ததாக இருப்பது அவரின் பாதுகாப்பிற்கு உதவலாம். இந்தியப் படையினர் காலத்தில் இறந்தவர் இறந்தவராக இருந்த படியால் தான் எம்மால் அவரை பின்னர் காண முடிந்தது. அதேபோல்.. இப்போது இறந்ததாகச் சொல்லப்படும் தலைவர் இறந்ததாகவே இருக்கட்டும்.

தலைவர் பற்றிய காணொளிகள் சில எதிரிகளால் திட்டமிட்டு மக்களைக் குழப்ப என்றே வெளியிடப்பட்டுள்ளன. அவருடைய முகம் போன்ற ஒன்றை உடலம் ஒன்றின் மீது போலியாக பிளாஸ்ரி சேர்ஜரி முறையில் செய்து ஒட்டிவிட்டுக் காண்பிக்கிறார்கள். பிளாஸ்ரிக் சேர்ஜரியை மறைக்க.. யூனிபோமும்.. தலையில் துணியும்.. பாதி உடலும் என்று காணொளிக் காட்சிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. தலைவரின் இருப்பிடம் தெரியாமல் தவிக்கும் தமிழ் மக்களின் உலக எதிரிகள் அதைக் கண்டறிய பல மாயாஜாலங்களைப் புரிகின்றனர். இன்னும் புரிவர். இதனை இட்டு மக்கள் குழப்பமடையாமல் எதிரியின் தமிழின அழிப்புத் திட்டத்தை முறியடிக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய முன் வர வேண்டும். உலகத்தமிழினமும் இதற்காக ஈழத்தமிழர்களுடன் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

அதுமட்டுமன்றி நேற்று, நேற்று முன் தினம் எல்லாம் இறந்ததாகச் சொல்லப்பட்ட தலைவர்.. டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய தலைவரின் உடலம்.. இன்று (19 -05- 2009) தான் மீட்கப்பட்டதாம் என்று சிறீலங்கா சிங்கள இராணுவப் பேச்சாளர் நாணயக்கார கூறியுள்ளார். செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் நேற்று பிரபாகரன் இறந்ததாக தாம் (சிறீலங்கா) ஒரு அறிக்கையும் விடவில்லை என்று முழுப் பொய்யைக் கூறியுள்ளார். இந்த எதிரியின் குழப்பமும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

எதிரிகள் தேசிய தலைவரின் இழப்பு எத்தகைய பாதிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் சர்வதேசத்தின் (குறிப்பாக நோர்வே அல்லது மேற்குலக நாடுகள் சிலவற்றின்) தலையீட்டை எப்படித் தடுக்கும் என்பதை கணித்துவிட்டு.. இப்போ திட்டமிட்டு இந்தப் பரப்புரையை செய்கின்றனர். அதற்கு நாணயக்காரவின் இந்த குழப்பம் நல்ல சான்று.

தலைவரின் உடல் என்று ஒரு பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்த உடலை சிங்கள மக்களுக்கு நேரடியாகக் காட்சிப்படுத்தினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. எமக்கு அது அல்ல இப்போ முக்கியம்.

தமிழ் மக்களாகிய எம்மைப் பொறுத்தவரை எமது தமிழீழ போராட்டத்தை ஓய்வின்றி எல்லா வகையிலும் மக்களாகிய நாம் முன்னெடுத்துச் செல்லவதே இன்றைய இக்கட்டான இந்நிலையில் ஸ்திரமான முடிவாக இருக்க வேண்டும். அதற்கான செயற்பாடுகளும் திட்டமிடல்களுமே அவசியம். சிறீலங்கா சிங்கள அரசின், சர்வதேச அரசுகளின் மனித உரிமை மீறல்களை, அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததை.. அப்பாவித் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுவதை.. வெளிக்கொணர்ந்து எமது விடுதலைக் கோரிக்கையின் நியாயத்தை உலகம் ஏற்கச் செய்யவும் வேண்டும். அதுவே எமது இன்றைய தலையாய கடமை. அதன் மூலமே எமது தேசத்தின் விடுதலையை... எமக்கான அரசியல் உரிமையை நாம் எமது சொந்த பூமியில் நிலை நிறுத்த முடியும்.

தமிழீழ விடுதலைப் போராளிகளினதும் மக்களினதும் இலட்சியத்தை சுமந்து கொண்டு எமது இனத்தின் தேச விடுதலையை பெறுவதற்கான சாத்தியமான வழிமுறைகளில் எல்லாம் உலகெங்கும் ஓய்வின்றி போராடிக் கொண்டிருப்பது மட்டுமே இன்றைய எமது சிந்தனையில் இருக்க வேண்டிய முக்கிய விடயம்.

நிச்சயம் தேவையான பொழுதில் தேசிய தலைவர் மக்கள் முன் வருவார். ஆனால் அதற்கான பொழுதை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனிடமும் இருக்கிறது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்..!

மூலம்: http://kundumani.blogspot.com/

படங்கள்: http://veltharma.blogspot.com

Edited by nedukkalapoovan

  • Replies 56
  • Views 14.4k
  • Created
  • Last Reply

இணைப்பிற்கு நன்றி.

அவ்வை சண்முகி, தசாவதாரம் போன்ற திரைப்படங்களைப் பார்த்த தமிழ் மக்கள் இந்த ஒப்பனைப் பிரசாரத்தை நன்கு புரிந்து கொள்வார்கள்.

இப்பொழுது தேவை நெடுக்ஸ் குறிப்பிட்டது போல...

தமிழ் மக்களாகிய எம்மைப் பொறுத்தவரை எமது தமிழீழ போராட்டத்தை ஓய்வின்றி எல்லா வகையிலும் மக்களாகிய நாம் முன்னெடுத்துச் செல்லவதே இன்றைய இக்கட்டான இந்நிலையில் ஸ்திரமான முடிவாக இருக்க வேண்டும். அதற்கான செயற்பாடுகளும் திட்டமிடல்களுமே அவசியம். சிறீலங்கா சிங்கள அரசின்இ சர்வதேச அரசுகளின் மனித உரிமை மீறல்களைஇ அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததை.. அப்பாவித் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுவதை.. வெளிக்கொணர்ந்து எமது விடுதலைக் கோரிக்கையின் நியாயத்தை உலகம் ஏற்கச் செய்யவும் வேண்டும். அதுவே எமது இன்றைய தலையாய கடமை. அதன் மூலமே எமது தேசத்தின் விடுதலையை... எமக்கான அரசியல் உரிமையை நாம் எமது சொந்த பூமியில் நிலை நிறுத்த முடியும்.

நன்றி குறுக்கால போவான்.... இளந்திரையன் அண்ணா வானொளியில் வருமுன்னரே முனேற்பாடுகள் முடிந்திருக்கும்.

காலம் கனியும்போது தலைவர் எம்முன் தோன்றுவார். அந்த நாளை விரைவு படுத்தவேண்டியது எங்கள் பணியே.

இது பணிமாத்திரமில்லை அங்கு இறந்த மக்களுக்கும் வீரமரணமான போராளிகளுக்கும் நாம் செய்யும் பணி.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்வது போல இறந்த செய்தி இப்போதைக்கு நல்லதே அதுவே அதுவே தலைவரின் பாதுகாப்புக்கும் நல்லது

எத்தனை தடவை நம் தலைவரை கொன்றுவிட்டார்கள் ஆனால் என்ன நடந்தது அது போலத்தான் என்றும் புரியாத புதிர் நம் தலைவன்

சரித்திரம் படைக்க நினைப்பவர்கள் எழிதில் சாவதில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடு நன்றி இனைப்புக்கு

சிங்களம் எம்மை பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு இனப்படுகொலை செய்துள்ளது, செய்து கொண்டு இருக்கின்றது. இந்த விடயத்தை கையில் எடுத்து போராடி எமது தாயகத்தின் விடுதலையை வென்றெடுக்கலாம். சிங்களவன் பலம்பெயர்ந்து வாழும் மக்களின் எழிச்சியை அடக்குவதற்கு படம் காட்டுகின்றான்.

எல்லாமே நல்லதுக்குதான் .எங்களுக்கு முன்னுள்ள கடமை மாவீரர்கள் கனவை நனவாக்குவதே. இ்தனை மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்க உழைப்போம்.

பலர் தங்கள் சுயஉருவத்தை காண்பிக்க ஆரம்பிக்கின்றனர். புலிகளின் தலைகள் இழப்புகளுக்காக சில கணங்கள்தான் குனிந்தன. அடுத்த கணமே தங்கள் கடமைகளை செய்தனர். எந்த இழப்புக்களையும் நாமும் ஏற்றுக்கொண்டு அதே வேகத்தில் ஈழத்துக்காக போராடுவோம்.

நன்றி நெடுக்கண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

பொய்மை நீண்டகாலம் நிலைக்காது ......உண்மை நீண்டகாலம் உறங்காது ..........நம்புங்கள் தமிழ் ஈழம் பிறக்கும்.

முல்லைத்தீவு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முன்பு ராணுவம் கூறியதைப் போல தப்பி ஓட முயலவில்லை என்று பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் லட்சுமண் ஹலகலே கூறியுள்ளார்.

ஒரே நாளில் ராணுவம் இப்படி மாற்றிக் கூறியுள்ளதால், பிரபாகரன் எந்தச் சூழ்நிலையில் கொல்லப்பட்டார், யார் அவரை சுட்டுக் கொன்றது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவின்படி விடுதலைப் புலிகள் இயக்க சீருடையில் கம்பீரமாக காணப்படும் பிரபாகரனின் தலையில் குண்டுகள் பாய்ந்துள்ளன.

முதலில் கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரன் ஆம்புலன்ஸ் வேனில் தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது ராணுவம் அவரை சுட்டுக் கொன்றதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்திருந்தது.

ஆனால் நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில் குண்டுக் காயம் உள்ளது. அதைக் காட்டாமல் மறைக்க துணியை வைத்து ராணுவம் மறைத்துவிட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

சயனைட் அருந்தி இறந்த பின் சுடப்பட்டாரா?:

மேலும், தப்பி ஓட முயன்றபோது சுட்டுக் கொன்றதாக முன்பு கூறப்பட்டதை இலங்கை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஹலகலே இன்று மறுத்துள்ளார். இதனால் பிரபாகரன் கொல்லப்பட்ட விதம் தொடர்பாக பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மிகவும் நெருக்கத்தில் இருந்து பிரபாகரன் சுடப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

அவர் சயனடை அருந்தி தற்கொலை செய்த பின்னர் உடலை எடுத்து வந்து தலையில் சுட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும் அவரது உடல் கிடந்த இடம் என்று ராணுவம் கூறுவது பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்ட பகுதியாகும். அங்கு எப்படி அவர் கொல்லப்பட்டார் என்றும் தெரியவில்லை.

ஒரே நாளில் நடந்த டி.என்.ஏ சோதனை!:

இறந்தது பிரபாகரன் தான் என்றும், டி.என்.ஏ. சோதனைகள் அதை உறுதி செய்துள்ளதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. 24 மணி நேரத்துக்குள் டி.என்.ஏ. சோதனைகள் எப்படி நடத்தப்பட்டன என்பதற்கு விடை இல்லை.

அதே போல பிரபாகரன் ஏன் புலிகள் உடையில் இருந்தார்?, தப்பியோட முயல்பவர் சாதாரண உடையில் இருந்திருக்க மாட்டாரா? என்ற கேள்விகளும், அவரது முகம் சேவ் செய்யப்பட்டுள்ளதே, கடந்த 3 நாட்களாக 500 மீட்டர் தூரத்தில் முடக்கப்பட்டதாகக் கூறப்பட்டவர் சேவ் செய்து கொண்டிருப்பாரா? போன்ற கேள்விகளும் எழுகின்றன.

மொத்தத்தில் பிரபாகரனின் மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் நிலவுகின்றன

  • கருத்துக்கள உறவுகள்

தரமான நியாயமான சந்தேகம் . பெரும்பான்மையினராலேயே கேள்விகள் கேட்கப்படவேண்டும்....ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்லவேண்டும் உண்மை எப்போதும் ஒன்று தான். பொய்க்குஆயுள் குறைவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த 3 நாட்களில் மட்டும் பலமுறை, பலவிதங்களில் பிரபாகரனை கொலை செய்ததாக செய்திகளை வெளியிட்டது சிறீலங்கா மற்றும் இந்திய ஊடகங்கள்.

அவை எவற்றிலும் உண்மையில்லை. பிரபாகரன் ஆம்புலன்சில் தப்பிய போது சுட்டுக்கொன்றதாக பொய்யை சொன்னது. 2 நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டதாக சொன்னார்கள். அடுத்தது டிஎன்ஏ பரிசோதனை நடப்பதாக நேற்று சொன்னார்கள். இன்று செய்தியில் நந்திக்கடலில் கொன்றதாகவும், இன்று உடல் கிடைத்ததாகவும் சொல்கிறார்கள். அதற்காக ஒரு படம், ஒரு ஒளிக்காட்சி!

2 நாட்களுக்கு முன்னர் இறப்புக்குள்ளான உடல்கள் எப்படியிருக்கும் பார்த்திருக்கிறீர்களா? படங்களில் இருக்கும் முகம் அப்படி 2 நாளான உடல் மாதிரியா இருக்கிறது?

பிரபாகரனின் 2008 மாவீரர் உரை படங்களை விடவும் இந்த படத்தில் இருக்கும் முகம் இளமையாக இருப்பது தெரியவில்லையா?

நேற்று டி.என்.ஏ பரிசோதனை செய்த உடலை, இன்று கண்டுபிடித்தார்கள்?

எந்த 'டி.என்.ஏ.மாதிரிகளை' வைத்து பிரபாகரன் என்று டி.என்.ஏயை உறுதிப்படுத்தினார்கள்?

சார்லஸ் ஆன்றனி என்று வந்த படமும் இன்னொரு போராளியுடையது. பிரபாகரன் பற்றி வெளியாகிற இப்போதைய படங்களும், செய்திகளும் பொய்.

நண்பர்களே,

தொழில்நுட்ப உலகின் யுத்தம் உளவியலை பாதிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. பலியாகிவிடாதீர்கள். தமிழர்களின் ஈழத்திற்காக போராட களத்தில் வருவான் பிரபாகரன். இப்போதைக்கு பாதுகாப்பான தளத்தில் தனது முக்கிய தளபதிகளுடன் அவர் இருப்பதை நம்புங்கள்.

சிறீலங்கா செய்துள்ள போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் மறைக்கவும், அழிக்கவும் உளவு அமைப்புகளும், அரசுகளும் நடத்துகிற நாடகங்களுக்கு பலியாகிவிடாதீர்கள். ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதிக்கு நீதி பெற கவனம் செலுத்துங்கள்.

ஈழம் ஒரு போதும் கனவாக முடியாது. நம்புங்கள்! தமிழ் மக்களின் சுதந்திர வேட்கை இன்றைய இழப்புகளால் கலைந்து போகாது.

ஒரு தமிழ்நாட்டு உறவு கூறியது இது

Edited by pepsi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிறாப்பிக் எடிற்றிங் செய்யும்போது மிகவும் துல்லியமாகச் செய்யவேண்டும். இன்றைய பிரபாவிற்கும், அன்றைய பிரபாவிற்கும்

வித்தியாசம் தெரியாதவர்கள். இவர்கள் பாவம் பிரபாகரனை விட்டது சகிக்காமல் அலைகின்றார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் இறக்கவில்லை அல்லது அவருடைய உடம்பு கிடைக்கவில்லை என்பது இதன் மூலம் மிகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணைப்பாருங்கள்

முழித்துக்கொண்டிருந்தாகவேண

கே.பு மக்கள் இவங்கள்

தலைவர் முகத்தில் ஓரு விடயம் கடந்த சில வருடங்களாக மாறுபட்டு இருக்கின்றுது. அதில் கோட்டை விடடுவிட்டார்கள் அதை நான் வெளிப்படையாக கூற விரும்பவில்லை

1. தலையின் பின் பகுதியில் துப்பாக்கி / அல்லது குண்டுத் தாக்குதலின் மூலம் சேதம் ஏற்படின், முகம் மட்டும் சேதமடையாமல் இருக்குமா?

2. இறந்து 3 நாட்களாயின் கை விரல்கள் மட்டும் உப்பி போய் இருக்க கண்கள் இரண்டும் எந்தவித மாற்றமும் இன்றி காணப் படுமா?

3. கொல்லப் படும் போது அருகில் வேறு எவரும் இருக்க வில்லையா....? அவருடன் இருக்க வேண்டிய மெய் பாதுகாவலர் மற்றும் தளபதிகளின் உடல்கள் எங்கே?

4. நந்திக் கடலை கைப்பற்றி கிட்டத் தட்ட 1 வாரம் எனில், இவ்வளவு நாட்களும் கையில் சவரக் கத்தியுடன் தலைவர் கடற்கரையில் தன்னந் தனியாக இருக்கையில் இராணுவம் கடற்கரை மண்ணில் நண்டு பிடித்துக் கொண்டா இருந்தது?

Edited by நிழலி

கே.பு மக்கள் இவங்கள்

தலைவர் முகத்தில் ஓரு விடயம் கடந்த சில வருடங்களாக மாறுபட்டு இருக்கின்றுது. அதில் கோட்டை விடடுவிட்டார்கள் அதை நான் வெளிப்படையாக கூற விரும்பவில்லை

கன்னப்பகுதி கறுப்பாக இருக்குமே அதுதானே.இது வெளிப்படையா எல்லோருக்கும் தெரியும் தானே.இதிலை மறைக்க என்ன இருக்கு?

எல்லா உடலத்தினையும் காயங்களோட திறந்து காட்டுறவை.. இதில மட்டும் தலையை துணியால மூடுறது எதை மறைக்க....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திராவின் படுகொலைக்கு 4000 சீக்கிய ரத்தங்கள் தேவைப்பட்டது ராஜீவ் என்னும் கொலைகாரனுக்கு 40,000 ஈழத்தமிழ் ரத்தம் தேவைப்பட்டது....இல்லை அதற்கும் மேல்...

இனியாவது அஹிம்சை நாடு அமைதியாய் இருக்குமா?!!!....

பொய்யும் பித்தலாட்டமும் செய்தே பிழைக்கின்ற மத்தியும் மகிந்த &கோவும்.

எரிந்து கொண்டிருக்கும் எங்கள் உணர்வலைகளுக்கு எண்ணெய் ஊற்றிவிடும் உங்கள் செயல்கள்.

விழ விழ எழுவோம் விடுதலை பெறுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுக்கே சந்தேகம் வந்து விட்டது. இலங்கையில் DNA test செய்வதற்கான வசதிகள் இல்லையாம். இவ்வளவு விரைவாக எப்படி DNA test எடுக்கப்பட்டது என்று மண்டையை போட்டு உடைக்கிறார்கள். ( DNA மாதிரிகள் தலைவர் இருந்த பங்கர்களில் இருந்து ஒரு கதைக்கு சேகரிக்கப்பட்டது என்று வைத்துக்கொண்டாலும்). தமிழ் நெற்றில் சென்று உண்மையை பார்கலாம் என்றால் பிஸியாக உள்ளது என்றும் பேசி கொள்கிறார்கள்.

இந்த படத்தை பாருங்கள்.

மற்றது தலைவருடைய நாடிப்பகுதி சிறிய பள்ளம் (இரட்டைநாடி) போல் தெரியும் இதில் ஒன்றையும் காணவில்லை.

45794569bodygrab226.jpg

Edited by chozhan

தமிழ்நேசன் இணையத்தளம் தலைவருக்கு அஞ்சலி போட்டிருக்கின்றது. எதன் அடிப்படையில் இதை செய்திருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. செய்தி உறுதிப்படுத்தப்படாத நிலையில் இப்படியான பொறுப்பற்ற செயலை தமிழ்நேசன் இணையம் ஏன் செய்தது?

தமிழ்நேசன் இணையத்துடன் தொடர்பு உள்ளவர்கள் விசாரிக்க முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

praba2-597x447.jpg

இலங்கை ராணுவம் வெளியிட்டிருக்கும் படத்தில் இருப்பது பிரபாகரன் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உற்றுப் பார்த்தால் இது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிரபாகரன் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பின் வெளியுலகுக்கு தன் முகத்தை காட்டிய பிரபாகரன் மீசையை எடுத்திருந்தார். அதன்பிறகு அவர் மீசை வைப்பததாக தெரியவில்லை. ஐம்பதைக் கடந்ததால் முகம் கொஞ்சம் சுருங்கி இருந்ததையும் கவனித்திருக்கலாம். இலங்கை அரசு இப்போது காட்டியிருக்கும் படத்தில் அவ்வாறாக இல்லாமல் மீசையோடு ஜம்மென்று இளமைக்கால பிரபாகரன் இருக்கிறார். பிரபாகரனின் முகத்தை உற்றுப் பார்ப்பவர்கள் முகவாய்க்கட்டின் கீழே வெட்டு போல இருப்பதை கவனிக்கலாம். இலங்கை அரசு தரும் வீடியோவில் அந்த வெட்டு இருப்பதாக தெரியவில்லை.

இலங்கை அரசு கொடுத்துவரும் தகவல்களும் முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கிறது. ஆம்புலன்ஸில் தப்பிச் சென்றபோது கொன்றோம் என்றார்கள். இப்போது ஒரு நதிக்கரை ஓரத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் உடலை ஏற்றுவது போல காட்டுகிறார்கள். டி.என்.ஏ. சோதனையை இரண்டு மணி நேரத்தில் செய்துவிட முடியுமாவென்ற சந்தேகமும் இருக்கிறது. நேற்று இலங்கை அரசு கொடுத்த சார்லஸ் அன்ரனி படத்தில் இருப்பதும் பிரபாகரன் மகனல்ல என்கிறார்கள்.

இலங்கை அரசு சொன்னதுமாதிரி தப்பிச் செல்பவராக இருந்திருந்தால் க்ளீன் ஷேவ் செய்துக் கொண்டு கிளம்பியிருப்பாரா என்பது சந்தேகம். பிரபாகரனின் அடையாள அட்டையை காண்பித்தார்களே என்று கேட்கிறார்கள். ஒபாமாவின் அடையாள அட்டையை கூட, பாஸ்போர்ட்டை கூட கொஞ்சம் நஞ்சம் போட்டோஷாப் தெரிந்தவர்கள் உருவாக்கமுடியும்.

எதுவாக இருந்தாலும் புலிகள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கும் வரை பொறுமையாக இருக்கலாம்.

http://www.paristamil.com/tamilnews/?p=9877

தலைவர் கடந்த மாவீரர் உரையிலும் மீசை வைத்திருக்கின்றார் நண்பரே

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நெருக்கடிக்குள் ஆறுதலாக இருந்து கிளீன் சேவ் எடுத்தவருக்கு மீசையை எப்போதும் போல கட் பண்ண நேரம் இருக்கவில்லை!அட தப்ப நினைப்பவன் தாடி மீசை வைத்து உருமாறி இருக்காமல் புலிச் சீருடையுடன் நான் தான் பிரபாகரன் என்னைச் சுடுங்க என்றது மாதிரி இருக்கிறது.?????????????????????????????????????????????????????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.