Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்மநாதனின் அறிக்கை நம்பகத்தன்மையற்றது: பழ.நெடுமாறன் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அவர்கள் தமிழீழ தேசியத்தலைவர் பற்றிய வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

ஜி 2, கீழ்த்தளம், 58, மூன்றாவது முதன்மைச் சாலை, ஆழ்வார் திருநகர் விரிவாக்கம், சென்னை # 600 087.

தொலைபேசி : 91-44-2377 5536 தொலை நகல் : 91-44-2377 5537

பழ.நெடுமாறன்

ஒருங்கிணைப்பாளர்

இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19.05.2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார்.

இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள அரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத் தன்மையற்றது. ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.

பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களும் , போராளிகளும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காக போராடி வருகின்றனர். மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர்வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர்.

பாதுகாக்கப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித்தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப்பரப்பப்படுகின

Edited by விடியல்

தமிழர்கள் உருப்பட மாட்டார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் உருப்பட மாட்டார்கள்!

சபேசன் ஐயா என்னதான் சொல்ல வாறியள்??

தமிழர்கள் உருப்பட மாட்டார்கள்!

பிரபாகரன் எந்த இலட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள்.

சொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழமக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர். எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும்.

இது சபேசன் அண்ணா சொன்ன கருத்து போல் இருக்கு அதை செய்தியாக்கிவிட்டார்களே? :unsure:

Edited by வினித்

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பாநடக்குது.பத்மநாதன் எப்ப அறிக்கை விட்டார்.யாராவது தெளிவாக விளங்கப்படுத்துங்கோ.

அன்பான கள உறவுகளே புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்ட வீச்சை முனை மழுங்கச் செய்வதற்கான சதித்திட்டத்தின் ஒரங்கமே.இந்தச் செய்தியாகும்.இங்கே பலர் விலை போயிருக்கின்றார்கள்.என்னுடை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முப்பதுவருட காலத்தில் இந்தியாவை அல்லது உங்கள் போன்றவர்களை நினைத்து அல்லது நம்பி பலவற்றை அல்லது சிலவற்றை இல்லையேல் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்.

தமிழ்நாட்டின் இன்றைவரைய தீக்குளிப்புகளும் உண்ணாவிரதங்களும் வீரதீர பேச்சுக்களும் வீதிமறிப்பு போராட்டங்களும் எதுவித பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது?கொடூரமரணங்களும் அவலங்களும் தான் மிச்சம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

you are 100% correct. Nobody knows who K.P. is and how he looks like. Besides there are "mimicry artists" who can speak like KP.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி யின் அறிக்கைகள் சிறிலங்கா அரசின் அறிக்கைகள் போல முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கின்றது.யாரும் நம்பியதாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சில கேள்விகள்...........

ஏன் 17 ஆம் தேதி இறந்ததை இன்றுவரை மறைத்திருந்தீர்கள்?

எதற்காக திருப்பித் திருப்பி அவர் உயிருடந்தான் இருக்கிறார் என்று அறிக்கை விட்டீர்கள்?

சர்வதேசப் புலநாய்வுத்துறை பொறுப்பாளர் நேற்று உத்தியோகபூர்வமாகக் கூறி ஒரு நாளின் பின்னர் தலைவர் வீரமரணம் அடைந்ததாக பதமனாதன் சொல்ல வேண்டிய அவசரம் என்ன?

கீதவாணி கனேடிய தமிழ் வானொலியில் பேட்டியளித்த பத்மனாதன் பேட்டி கண்டவரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது வசனங்களைக் கோர்த்துக் கோர்த்து மெதுவாகப் பேட்டியளித்தார். தெளிவான பதில் எதையும் சொல்லவில்லை. அவரது குரலிலும் ஒரு கவலைத் துளியேனும் இருந்ததாக தெரியவில்லை......?இவர் உண்மையில் கவலைப் படுகிறாரா அல்லது சந்தோசப்படுகிறாரா?இவரது நமபகத்தன்மை பற்றிக் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்பவர்கள், கருணா, மாத்தையா, குமரன் பத்மனாதன்(கே.பி) போன்றவர்கள் செய்த துரோகங்களையும் மறந்துவிட்டீர்களா?

இவ்வளவு தமிழ் தேசிய ஊடகங்கள் இருக்கும்போது ஏன் இன்னும் ஒன்றிலும் இந்தத் தகவல் வரவில்லை?

இச்செய்தி உண்மையென்றால் ஏன் தமிழகத் தலைவர்களுக்கோ அல்லது புலிகளின் சர்வதேசப் புலநாய்வுத் தலைவருக்கோ அல்லது நம்பகத்தன்மையான தமிழ்ப் பற்றாளர்களுக்கோ ஏன் முதலில் அறிவிக்கப்பட்டுக் கலந்துரையாடப்படவில்லை?

செய்தி உண்மையென்றுதான் ஒரு கதைக்கு வைத்துக்கொள்வோமே, இப்போது அதை பி.பி.சி யிடம் கூப்பிட்டுச் சொல்ல வேண்டிய தேவை என்ன? இப்படிப் பகிரங்கமாக அறிவித்ததன் நோக்கம் என்ன? இதனால் என்ன பலனைக் கண்டார்கள்?

சர்வதேசமெங்கும் எழுந்துவரும் தமிழ் எழுச்சியை இந்த அறிவிப்பு எந்தளவு தூரத்திற்குப் பாதிக்கப் போகிறது என்பதை இவர்கள் அறிவார்களா? தலைவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையை மட்டுமே மனதில் இருத்தி இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ளும் தமிழ் மக்களின் நம்பிக்கையை குழி தோண்டிப் புதைத்தல்லவா விட்டிருக்கிறார்கள்? இனி எந்த நம்பிக்கையை வைத்து மக்கள் சேர்வார்கள்? தமிழக மக்களின் நம்பிக்கையை இவ்வளவு எளிதாகப் போட்டுடைத்திருக்கிறீர்களே?

இனிவரும் காலங்களில் போராட்டம் வளரவென மக்கள் நம்பியிருந்த ஒரே நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் ஒரே குழியில் வெட்டிப் புதைத்திருக்கிறீர்களே...ஏன்? இதன் மூலம் என்னத்தை அடையாளாம் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

இவர்கள் செய்திருக்க வேண்டியது தலைவர் உயிருடந்தான் இருக்கிறார் என்பதை தொடர்ந்தும் பேணிவந்திருக்க வேண்டியதுதான். அவர்களை இவர்களே கொல்லுவதால் எமக்கு ஏற்படப்போகும் நண்மைகளை விட தீமைகளே அதிகம் என்பதே உண்மை. பலர் என்னுடன் இதில் முரண்படலாம், ஆனால் என்னைப்போன்ற பலருக்கும் இதே கேள்விகள் இருக்கும் என்பது உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

அமிதாப், தீபன், துர்க்கா,நடேசன், புலித்தேவன் போன்ற தலைவர்களின் இழப்புகளையே புலிகள் உத்தியோக பூர்வமாக இதுவரை அறிவிக்காத போது தலைவரின் இழப்பை இப்போது அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

இதன் மூலம் நாம் உலகிற்குக் காட்டியிருப்பது என்னவென்றால் நாம் எமக்குள் பிளவுபட்டுள்ளோம் என்பதைத்தான். சர்வதேச புலநாய்வுப்பொறுப்பாளர் சொல்வதற்கும் சர்வதேச தொடர்பாடல் பொறுப்பாளர் அறிக்கை விடுவதற்கும் இடையில் எத்தினை வேறுபாடு? மக்களின் மொத்த நம்பிக்கையையும் இன்று புலிகளின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் போட்டுடைத்திருக்கிறார்கள். 33 வருடங்கள் இயக்கத்தைக் கட்டிக் காத்து வளர்த்த எமது தலைவர் எங்கே இந்தப் பன்னாடைகள் எங்கே?

இப்போது கூட்டுத்தலமை பற்றி பத்மனாதன் கதை தொடங்கியிருக்கிறார்.......தன்னை

ரகு.

குமரன் பத்மநாதன் வேற இவர் வேறயா?

குமரன் பத்மநாதன் என்ன தூரோகம் செய்தார்?

குழப்பமாக இருக்கு

உடன் பதில்

வினித்

இப்போதும் GTV இல் தலைவருக்கு வீரவணக்கம் ஒளிபரப்பகிகொண்டுள்ளது. GTV செய்தியிலும் சொன்னவை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகு.. ஏதோ நடந்திருக்கிறது எனத்தெரிகிறது. அறிவழகனது கருத்து ஒன்றாகவும்.. பத்மனாதனது கருத்து இன்னொன்றாகவும் இருக்கிறது. அவர் புலிகளின் புலனாய்வு என்கிறார்கள். இவர் சர்வதேசவிவகாரம். ஆனால் இருவருக்குமிடையில் தொடர்பில்லை என்பது புரிகிறது. பத்மநாபனுக்கு வேறும் அறியப்பட்ட தமிழக தலைவர்களோடோ மற்றவர்களோடோ தொடர்பில்லை எனவும் தெரிகிறது. ஆனால் பத்மநாதனை புலிகளின் தலைமையே அறிமுகப்படுத்தியது.

எனது துயர்.. இறுதிநேரத்தில் தலைமைச்செயலக அறிக்கை ஏதாவது அதிகாரபூர்வமாக வந்திருக்கவேண்டும் என்பதுதான். ஒரு நகரமுடியாத இக்கட்டுநிலையில்.. பத்மநாதன் யார் அவர் நல்லவரா கெட்டவரா என்பதை ஆராய்கிற நிலைக்குத்தான் நாம் கொண்டுவரப்பட்டிருக்கிறோம

அம்பாறையில் தாக்குதல் மூன்று படையினர் பலி: விடுதலைப் புலிகள்

திகதி: 24.05.2009 // தமிழீழம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப் பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கஞ்சிக்குடிச்சாறு வனப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடியழிக்கும் பாரிய நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நேற்று சனிக்கிழமை விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கினர்.

இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இதேவேளையில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய பிறிதொரு தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Demonstrate the politics of war

[TamilNet, Sunday, 24 May 2009, 20:32 GMT]

The Tamil national cause cannot afford to be deviated and exploited by others through questions such as whether the LTTE leader V. Pirapaharan is alive or not or whether the armed struggle has to be continued or not. The Tamil diaspora, the only section of the Eezham Tamil community that has the freedom and means to come out with authentic voice, has a historic responsibility in telling the world what they aspire for in no uncertain terms, and in seeing their righteous cause not hijacked by their enemies.

Opinion:TamilNet Editorial Board

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=29444

பத்மநாபன் மேல் நம்பிக்கை இல்லை அவர் கூறிய விடயங்காள் சந்தேகமானவை.

பொட்டு அம்மான் சாவடையவில்லை என்கின்றது இலங்கை.

நாம் குழம்ப வேண்டியதில்லை நம் தலைவன் உள்ளான் .விரைவில் பதில் சொல்வான் எல்லோருக்கும்

என்னத்தை சொல்வது?

இனித்தலைவரே வந்து சொன்னாத்தான் உண்மை வெளிவரும்..

ஆனாலும் தமிழினத்தை இனி யாராலும் மீட்கமுடியாது.

தந்தை செல்வா சொன்னதுபோல் இனி விதி விட்டவழிதான்.

அன்பின் யாழ் கள உறவுகளே!

உங்களுடன் சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். தயவுசெய்து உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இதனைப் பார்க்காது அறிவார்ந்த உணர்வுடன் இதனை ஆராயுங்கள்.

திரு செல்வராஜா பத்மநாதன் அவர்கள் எமது தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பாளராக அதிகாரபூர்வமாக அண்மையில் நியமிக்கப்பட்ட ஒருவர். அவரைப்பற்றிய விமர்சனங்களை பொதுவில் முன்வைப்பதும் எழுந்தமானமாக எழுதுவதும் சரியானதா என்ற கேள்வி எனக்கு எழுகின்றது.

தேசியத் தலைவர் அவர்கள் நலமாக இருக்கவேண்டும் என்பதும் அவர் பாதுகாக்கப்படவேண்டும் என்பதும் எம் எல்லோரதும் அவா, ஆசை, விருப்பம்.

ஆனால் நாம் எமது தேசியத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட அனைத்துலக தொடர்பாளரை விமர்சிப்பதும் குறைகாண்பதும் எவ்வகையில் நியாயம்?

காலத்தின் தேவை கருதி அனைதுலக தொடர்பாளர் சில செய்திகளை வெளியிட்டுருந்தால் அதனை விமர்சிப்பதும் அவரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதும் தகுமா?

அறிவுணர்ச்சியுடன் சிந்தியுங்கள்.

நன்றிகள் பல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் BBCயில் கேட்டேன். அவர் கூறுகிறார், எமது போராளிகள் மக்களோடு மக்களாக உள்ளனராம். ஒரு உயர் பொறுப்பதிகாரி இவ்வாறா சொல்லுவார்?????

கொஞ்சம் சந்தேகம் இருக்கவே செய்கின்றது....

பொறுத்திருந்து பார்ப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்

நான் BBCயில் கேட்டேன். அவர் கூறுகிறார், எமது போராளிகள் மக்களோடு மக்களாக உள்ளனராம். ஒரு உயர் பொறுப்பதிகாரி இவ்வாறா சொல்லுவார்?????

கொஞ்சம் சந்தேகம் இருக்கவே செய்கின்றது....

பொறுத்திருந்து பார்ப்போம்..

நான் முன்னரே கேள்விப்பட்டதும் இப்போது நடைபெறுவதும் பொருந்தி வருகிறது..! :)

அவசரம் வேண்டாம்..! போன மாதம் வரை எந்த அளவு வீச்சுடன் போராட்டங்களை முன்னெடுத்தோமோ, அதை விட இன்னும் கனதியாகச் செய்வோம்..!! தமிழீழம் கனியும் காலம் வெகு தொலைவில் இல்லை..! அவசரப்பட்டு தாழியை உடைத்துவிடாதீர்கள்..! இந்தப் பிரச்சினையை இத்துடன் விட்டுவிடுங்கள், தயவுசெய்து..!! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் இருக்கிறாரா? இல்லையா ? தலைவரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் அது மிகவும் கவலைக்கு உரியது, மீள பெற முடியாத இழப்பு.

ஆனால் தலைவர் எதற்காக போராட்டத்தை தொடங்கினாரோ அது இன்னும் அடையப்படவில்லை. அதை அடைய உழைப்பது தான் முக்கியம். அது தான் தற்போது தேவையும் கூட. எம்மை மனச்சோர்வடைந்து எமது முயற்சியை கைவிட வைக்கவே அனைவரும் முயல்கிறார்கள். நாம் அதில் இருந்து மீழுவதும், எமது இலக்கை அடைய முயல்வதுவுமே எம் முன் உள்ள தேவை.

Demonstrate the politics of war

[TamilNet, Sunday, 24 May 2009, 20:32 GMT]

The Tamil national cause cannot afford to be deviated and exploited by others through questions such as whether the LTTE leader V. Pirapaharan is alive or not or whether the armed struggle has to be continued or not. The Tamil diaspora, the only section of the Eezham Tamil community that has the freedom and means to come out with authentic voice, has a historic responsibility in telling the world what they aspire for in no uncertain terms, and in seeing their righteous cause not hijacked by their enemies.

Opinion:TamilNet Editorial Board

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=29444

சராசரித் தமிழனுக்குள்ள கேள்விகள் தான் என்னிடமும் தொக்கி நிற்கின்றன. சிங்களச் சிறிலங்காவின் "படங்காட்டல்" பற்றி நிறையவே சந்தேகம் இருக்கின்றது. சாதாரண புலி வீரர்களையே "அம்மணமாகப்" போட்டு ஷோக்காட்டிய சிங்கள வெறுப்பு வாதம் புலித் தலைவரின் உடல் கிடைக்கும்போது அவ்வளவு கமுக்கமாக எரித்து கடலில் கரைத்து விடாது.

சிங்களப் படைத் தளபதியினதும் சிங்கள அரசியலாளர்களினதும் முன்னுக்குப் பின்னான வெளிப்படுத்துகைகள் என் சந்தேகத்தை இன்னும் இன்னும் விரித்துச்செல்கின்றன.

ஆனாலும் இன்று பிரபாகரன் சுயமாக இல்லாது "சூழ் நிலை"க் கைதியாக எங்கோ ஒரு இடத்தில் முடக்கப் பட்டிருக்கின்றார். பிரபாகரனின் இறப்பு பற்றி முன்னுக்குப் பின்னாக அறிக்கை விடும் செல்வராஜா பத்மநாதன் தன்னும் சுயமாக இயங்குகின்றாரா? என்பதைப் பரிசீலனை செய்து கொள்வது தமிழீழ அனுதாபிகளுக்கு நன்மை பயக்கும். அவரும் ஒரு சில சக்திகளின் "ஆசையை" முன்மொழியக் கூடும் அல்லது அடிபணியக் கூடிய நிலையில் இருக்கக் கூடும்.

பத்மநாதனின் அறிக்கையையே மறுதலிக்கக் கூடிய அளவிற்கு அறிக்கைகள் விடுமளவிற்கான "தொடர்புகளை" வைகோ மற்றும் நெடுமாறன் கொண்டிருக்கக் கூடும். அப்படியான தொடர்புகளை புலித் தலைமையும் கடைசி வரை பேணவே விரும்பும்.

இவ்வகையான முரண்பாடுகளூடான தகவல்கள் புலித் தலைவர் ஒரு "சூழ்நிலைக்கைதி"யாக இருப்பதான சந்தேகத்தைத் தான் அதிகரித்துச் செல்கின்றது. நம்பக்கூடாத "சக்தி"களை நம்பியதால் புலித் தலைமை இவ்வாறான ஒரு இக்கட்டை அடைந்திருப்பதாக நிறையவே நம்பிக்கை கொள்ளலாம்
.

எது எவ்வாறாக இருந்த போதும் புலித் தலைமையின் உயிர் வாழ்தல் அல்லது இறப்பு அடுத்து வரும் சர்வதேச நாடுகளின் அரசியல் காய் நகர்த்தலிலேயே தங்கியிருக்கின்றது. மேற்கு நாடுகளின் மேலேயே இதற்கான சந்தேகங்கள் குவிந்திருக்கின்றன. மேற்கு நாடுகளின் நலன்களை அனுசரிக்கக் கூடிய அரசியல் முடிவுகளை புலிகள் எதிர்வரும் காலங்களில் எடுப்பது புலித்தலைமையை உயிரோடு மீட்டுவரக்கூடும்.

இன்று வரை புலித்தலைமை உயிருடன் இருக்கின்றது என்பதே என் கணிப்பு. சீனாவுடனான அவர்களின் போராட்டம் சிங்களத்துடனான எமது போராட்டத்துடன் நேர் கோட்டில் இப்போது சந்திக்கின்றன. எதிர்வரும் ஈழப்போர் இந்த நேர் கோட்டில் இருந்தே ஆரம்பிக்கப்படக் கூடும்.

http://thurkai.blogspot.com/2009/05/blog-post_3538.html

Edited by yarlpaadi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊடகங்களின் உளறல்களும், பக்கசார்பான பதற்றங்களும் - இராஜவர்மன்.

தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறார். இருக்க வேண்டும். போராட்டத்தைக் கொண்டு நடத்த வேண்டும் என்ற அவா ஒவ்வொரு தமிழனின் மனதிலும் நிரந்தரமானதாகப் பதிந்ததோடு, பிரார்த்தனையாகவும் அமைந்துவிட்டது. அதுவே எனது பிரார்த்தனையும் கூட. ஆனால் உண்மை அதற்கு மாறுபட்டதாக துரதிஸ்டவசமாக அமைந்துவிட்டால் அதனை அவர் நியமித்த பிரதிநிதியே அறிவிக்கும் போது அதனை நேர்மையாக மக்களிடம் எடுத்துச் செல்வதில் என்ன தயக்கமிருக்கிறது என்பதே எங்களது தற்போதைய கேள்விக்குறி.

தமிழீழத் தேசியத் தலைவரால், தமிழர்களின் தலைமையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட, அதிகாரபூர்வமுள்ள ஒரு தொடர்பாக தற்போது புலம்பெயர் தமிழர்களிற்கு உள்ளவர் திரு. கே.பி. பத்மாநதன். அவ்வாறான ஒருவரின் அறிக்கையின் மீது சேறுபூசுகின்ற அல்லது விமர்சனத்திற்கு உட்படுத்துகின்ற செயலானது எள்ளளவும் பொருத்தமற்றதொன்று என்பதைவிட பத்திரிகா தர்மத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் ஒரு படுபாதகச் செயல் என்பதை நாங்கள் ஏனோ இலகுவாக மறந்து விடுகிறோம்.

தேசியத்தலைவரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒருவரை அவருடைய வார்த்தைகளை உதாசீனப்படுத்துவது என்பது எங்களின் விருப்பு. ஆனால் ஒரு மாபெரும் வீர மரணத்தின் மீது களங்கம் ஏற்படுத்துவது என்பது நாங்கள் இவ்வளவு நாளும் விரும்பியேற்ற தொண்டுக்கு நாங்களே செய்யும் ஒரு வரலாற்றுப் பழி.

ஆகமொத்தம் தமிழீழத் தேசியத்தலைவரின் உத்தியோகபூர்வ நியமனத்தைப் புறந்தள்ளி எதிரிகள் வகுத்த வியூக வலைக்குள் ஒட்டுமொத்த தமிழினத்தையும் தள்ளிச் சிதைக்கும் பணியை நாங்களே செவ்வனே முன்னெடுக்கிறோம்.

ஜெயசிக்குறு உச்சச் சமர் காலகட்டத்தில் கிளிநொச்சி இராணுவ முகாமிற்கும் முறிகண்டியின் வடக்குப் புறமாக இராணுவம் நிலை கொண்டிருந்த இடத்திற்குமிடையே எஞ்சியிருந்த தூரம் வெறும் நான்கு கிலோ மீற்றர்களே…அத் தருணத்தில் போரின் போக்கையே மாற்றத் தேவையான முழுத் தேவைகளையும் செவ்வனே பூர்த்தி செய்யும் செயலை மாத்திரமல்ல கனரக ஆயுதப் பாவனைக்கான விநியோகத்தையும் அதிநவீன ஆயுதங்களையும் களத்திற்கு விநியோகம் செய்தவர் என்று பாராட்டப்பட்டவரை நாங்கள் ஏன் விவாதிக்க வேண்டும்?

34 வருடங்களாக தேசியத் தலைவர் சொன்னவற்றை செய்து கொண்டேயிருக்கும் ஒரு வயதான போராளி என்றுமே மேடைப்பேச்சிற்குப் பழக்கப்பட்டவருமல்ல அல்லது சிலாகித்துச் பேசுதல் அவரது துறையுமல்ல. உள்ளதை உள்ளபடி மக்களிற்கு கூற முற்படுவதை நாங்கள் கிரகிப்பதில் தான் தவறிருக்கிறதே தவிர அவரிடம் எந்தத் தவறையும் நான் காணவில்லை.

வரலாற்றின் முக்கியமான சில சந்தர்ப்பங்களின் சிலர் தங்கள் நேர்மைத்தன்மையை பரிதாபரமாக இழந்து வீண்பழிக்கு ஆளாவதுண்டு. இன்று அவ்வாறான ஒரு துர்ப்பக்கிய நிலைக்கு சில தமிழ்த் தேசியம் சார் ஊடகங்கள் உள்ளாவது மிகவும் ஆபத்தானதொரு நிலைக்கு புலம்பெயர் சமூகத்தையும் தமிழ்த் தேசியத்தையும் இட்டுச் செல்லுவதோடு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரமரணத்தின் மீது சேறு பூசும் கைங்கரியத்தையும் கச்சிதமே செய்து வருகின்றன.

தேசியத் தலைவர் இருந்தால் அவர் தனது இருப்பை நிச்சயம் உறுதி செய்திருப்பார். இது நவீன தொழில்நுட்பக் காலம் ஒரு நிமிட நொடியில் எங்குமே தொடர்பு கொள்ளக் கூடிய வகையிலேயே விடுதலைப்புலிகள், அவர்கள் தலைமை இருந்தார்கள். அவ்வாறானதொரு தொடர்புப் பேணலில் அவர்கள் இருந்தார்கள். எனவே தமிழீழத் தேசியத் தலைவர் இருந்திருந்தால் அவர்கள் அது நிச்சயமாக உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று நம்புவதில் எள்ளளவும் தவறில்லை. ஆனால் அவரின் இறப்பு உண்மையாக இருந்தால் அதற்கான அஞ்சலியைச் செலுத்துவதிலிருந்து மக்களை திசை திருப்புகின்ற, எதிரிகளால் கூடச் செய்ய முடியாத ஒரு துரோகத்தை எமக்குள்ள விடுதலையின் விருப்பின் பேரால் செய்வதென்பது எங்கள் தூக்கத்தை நாங்களே தொலைத்து நிம்மதியற்று உழலும் ஒரு நிலைக்கு, ஒரு பாவ நிலைக்கு எங்களை இட்டு செல்லவே உதவும்.

ஊதியத்திற்கு வேலை செய்யும் கூட்டம் தங்களின் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து எடுத்துச் செல்ல தங்களால் இயன்றவற்றைச் செய்து கொண்டேயிருக்கும். ஆனால் தொண்டு ரீதியில் செயற்பட்ட பத்திரிகா தர்மத்;தைக் கடைப்பிடிக்கும் நாங்களுமா பலியாக வேண்டும்.

இன்று நாங்கள் இழக்க முற்படும் நம்பகத்தன்மையை மீளக் கட்டியெழுப்புவதென்பது மிகவும் சிரமம். அதைவிட தேவையற்ற விதத்தில் செய்திகளின் மீது சத்திரசிகிச்சைகளை செய்ய முனைவது கருணா கூடச் செய்யாத ஒரு மாபெரும் துரோகமாக மாறிவிட்டால் என்ன மகிந்தாவையா ஆதரிக்கப் போகிறோம்? அல்லது ஆனந்தசங்கரியையை முன்பக்கச் செய்தியில் இருத்தப் போகிறோம்?

நாங்கள் மறக்காதிருக்க வேண்டிய ஒரேயொரு விடயம்… வரலாற்றின் முக்கியமான சில சந்தர்ப்பங்களின் சிலர் தங்கள் நேர்மைத்தன்மையை பரிதாபரமாக இழந்து வீண்பழிக்கு ஆளாவதுண்டு. இன்று அவ்வாறான ஒரு துர்ப்பக்கிய நிலைக்கு சில தமிழ்த் தேசியம் சார் ஊடகங்கள் உள்ளாவது மிகவும் ஆபத்தானதொரு நிலைக்கு புலம்பெயர் சமூகத்தையும் தமிழ்த் தேசியத்தையும் இட்டுச் செல்லுவதோடு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரமரணத்தின் மீது சேறு பூசும் கைங்கரியத்தையும் கச்சிதமே செய்து வருகின்றன.

ஏங்களது நிலைப்பாடு பிழையாக இருந்தால் மன்னிப்புக் கேட்டுவிட்டு நாங்கள் மீண்டும் எங்கள் தொடரலாம் என்று நாங்கள் நினைக்கலாம். ஆனால் தேவையில்லாம் ஒரு நிலைப்பாடு எடுக்கும் நிலைக்கு நாங்கள் சென்றதை அதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் தராமல் விடலாம். நாங்கள் தூக்கி வீசப்படலாம். ஏனெனில் நாங்கள் இங்கே புறக்கணிப்பது யதார்த்தத்தை.

மக்களிற்கு உண்மைகளை மறைத்து அவர்களை யதார்த்த்திலிருந்து புறந்தள்ளி வைத்து "ஆய்வாளர்கள்" என்ற போர்வையிலும் "ஊடகங்கள்" என்ற போர்வையிலும் மீண்டும் மீண்டும் மக்களை யதார்த்திலிருந்து புறந்தள்ளி அவர்களை ஒரு மாயவலைக்குள் வைத்திருந்து தாங்கள் தங்களை நலன்களை பாதுகாக்கும் கைங்கரியத்தை செய்வார்கள். ஆனால் யதார்த்த்தை மக்களிற்கு மறைத்து மீண்டும் மீண்டும் அவர்களை மாயையில் வைத்திருக்க விரும்புபவர்களிற்கு நாங்கள் துணை போகக்கூடாது. உண்மையை உள்ளபடி ஏற்கப்பழகும் மனப்பக்குவத்தை பெற்றால் மாத்திரமே நாங்கள் கொண்ட கொள்கையில் வெற்றி பெற முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.