Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விரைவில் பிரபாகரன் வெளியே வருவார் : பழ.நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் பிரபாகரன் வெளியே வருவார் : பழ.நெடுமாறன்

on 28-05-2009 17:25

நெல்லை, மே 28 : திருமண விழா ஒன்றில் இன்று (மே 28) கலந்து கொண்டு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : எதை கண்டும் கலங்குவது தமிழன் பண்பு அல்ல. கி.ஆ.பே. விசுவநாதம் கூறும் போது, 2 ஆயிரம் ஆண்டு தமிழ் வரலாற்றில் பிரபாகரனைபோல் ஒரு வீரன் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட பிரபாகரனை அழிக்க யாரும் வரவில்லை. பிரபாகரன் நன்றாக இருக்கிறார். நலமுடன் இருக்கிறார். நாம் தமிழர்களுக்கு தோள் கொடுத்து பாதுகாக்க முன் வர வேண்டும்.

வைகோ எம்.பி.யாக வரக்கூடாது என்று முறையற்ற முறையில் செயல்பட்டுள்ளனர். அவர் எம்.பி.யாக இருக்கும்போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ராஜீவ் காந்தியிடமே நேருக்கு நேராக கேள்வி கேட்டு திணறடித்த துணிச்சல் பெற்றவர். தட்டி கேட்கும் குரல் நாடாளுமன்றத்தில் வரக்கூடாது என்பதற்காகத்தான் அவரை தோற்கடித்துள்ளனர்.

கானகத்தில் உள்ள புலி ஆபத்தானது. அடிபட்ட புலி அதை விட ஆபத்தானது. விடுதலைபுலிகளை அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கிறார்கள். அவர்கள் கொரில்லா முறையில் தாக்குவார்கள். விரைவில் பிரபாகரன் வெளியில் வருவார்.

அவர் இறந்து விட்டார் என்பதை உலக தமிழர்கள் நம்பமாட்டார்கள். ஆயுதம் தாங்காத போராளிகளான நாம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்று சேர வேண்டும்.

மன்மோகன்சிங், சோனியாவை இனி ராஜபக்சே மதிக்கமாட்டார். சீனாவின் ஆதிக்கம் அங்கு (இலங்கையில்) வந்து விட்டது. விரைவில் இது அவர்களுக்கு (மத்திய அரசுக்கு) தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

(டிஎன்எஸ்)

Last update : 28-05-2009 17:25

http://www.adhikaalai.com/index.php?option...1&Itemid=52

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் பிரபாகரன் வெளியே வருவார் : பழ.நெடுமாறன்

Last update : 28-05-2009 17:25

http://www.adhikaalai.com/index.php?option...1&Itemid=52

ஐயா சாமிகளே அரசியல் ஞானிகளே ! போதும்.

37வருடம் தன்னை தனது வாழ்வை இழந்து இறுதியில் வஞ்சம் கொன்ற எங்கள் வல்லமைத் தலைவனுக்கு அஞ்சலி செய்ய விடுங்கள்.

உண்மைகளை உணருகிறோம் இல்லை! இன்னும் கனவுலகில் கற்பனைகளுடன் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம்!! ..... ஒருவேளை கனவுகள் கலையும் போது ஈழத்தில் தமிழன் என்று ஒருவன் இருக்க மாட்டான்!!

நாம் எல்லோரையும் நோக்கி சுட்டு விரல் நீட்டி "***" என்றோம். நாளைய சமுதாயமும், வரலாறும் அதே அடைமொழி வைத்து அழைக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறோம்!

எஞ்சியிருக்கும் எம்மவர்களை காப்பாற்றுவோம் ... இல்லையேல் .... வரலாறு எம்மை மன்னிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை உணருகிறோம் இல்லை! இன்னும் கனவுலகில் கற்பனைகளுடன் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம்!! ..... ஒருவேளை கனவுகள் கலையும் போது ஈழத்தில் தமிழன் என்று ஒருவன் இருக்க மாட்டான்!!

நாம் எல்லோரையும் நோக்கி சுட்டு விரல் நீட்டி "***" என்றோம். நாளைய சமுதாயமும், வரலாறும் அதே அடைமொழி வைத்து அழைக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறோம்!

எஞ்சியிருக்கும் எம்மவர்களை காப்பாற்றுவோம் ... இல்லையேல் .... வரலாறு எம்மை மன்னிக்காது.

உங்களது எதிர்பார்ப்பு புரிகிறதப்பா!

ஐயா சாமிகளே அரசியல் ஞானிகளே ! போதும்.

37வருடம் தன்னை தனது வாழ்வை இழந்து இறுதியில் வஞ்சம் கொன்ற எங்கள் வல்லமைத் தலைவனுக்கு அஞ்சலி செய்ய விடுங்கள்.

உங்களுக்கு உறுதியாகத் தெரிந்தால் நீங்கள் மனதுக்குள்ளேயே அஞ்சலி செலுத்திவிட்டு போகவேண்டியதுதானே? எதற்காக திரும்பத் திரும்ப அஞ்சலி செலுத்த வழி இல்லையே என புலம்புகிறீர்கள்? யாருக்காக அஞ்சலி தலைவருக்காகவா அல்லது மற்றவர்களின் கருத்துக்காகவா? அல்லது உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று மற்றவர்களுக்கு காட்டுவதற்காகவா?

இப்படி எழுதுபவர்களை பார்த்தால் வேதனையில் எழுதுபவர்கள் போல தெரியவில்லை. அவர்கள் எழுத்துக்களில் எல்லாம் தமக்கு தெரியும் என்ற தொனி தெரிகிறது!

வேதனை உள்ளவர்கள் இப்படி தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கமாட்டார்கள். இவர்களுக்கு நோக்கம் வேறு நாமும் எம்மை இளந்து இவர்களுக்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி செலுத்த அலைபவர்கள் பொத்திக்கொண்டு மனதுக்குள் செலுத்துங்கள். அஞ்சலி செலுத்துகிறேன் பேர்வழி என்ற போர்வையில் உங்கள் கருத்துக்களை இங்கே திணிக்க வேண்டாம். உங்களின் உண்மையான நோக்கம் அஞ்சலி செலுத்துவதல்ல, மாறாக தலைவர் இறந்துவிட்டார் என்கிற உங்கள் கண்டுபிடிப்பை இங்கேயும் புகுத்துவதுதான். அது உண்மையாக இருந்தாலென்ன அல்லது பொய்யாக இருந்தாலென்ன, உங்களுக்குத் தெரிந்ததை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். இங்கே அப்பாவி வேஷம் போட்டுக்கொண்டு மூக்கைச் சிந்த வேண்டாம்.

எது எப்படியிருந்தாலும் நாம் மேற்கொண்டு முன்னேறிச் செல்வது முக்கியம். அதை விட்டுப்போட்டு அஞ்சலி செலுத்தப்போகிறேன் என்று அழுது வடிந்து கொண்டிருக்கிறீர்கள். அதுக்குப்பிறகு என்ன செய்வீர்கள், கவலைக்கு குவாட்டரும், மட்டனும் சாப்பிடுவீர்களா? செத்தவீட்டுக்குப் பிறகு அதைத்தானே சனம் இவ்வளவு நாளும் செய்துகொண்டு வருகுது?! சும்மா போங்கையா!!!!!!நீங்களும் உங்கட அஞ்சலியும்?!

அஞ்சலி செலுத்த அலைபவர்கள் பொத்திக்கொண்டு மனதுக்குள் செலுத்துங்கள். அஞ்சலி செலுத்துகிறேன் பேர்வழி என்ற போர்வையில் உங்கள் கருத்துக்களை இங்கே திணிக்க வேண்டாம். உங்களின் உண்மையான நோக்கம் அஞ்சலி செலுத்துவதல்ல, மாறாக தலைவர் இறந்துவிட்டார் என்கிற உங்கள் கண்டுபிடிப்பை இங்கேயும் புகுத்துவதுதான். அது உண்மையாக இருந்தாலென்ன அல்லது பொய்யாக இருந்தாலென்ன, உங்களுக்குத் தெரிந்ததை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். இங்கே அப்பாவி வேஷம் போட்டுக்கொண்டு மூக்கைச் சிந்த வேண்டாம்.

எது எப்படியிருந்தாலும் நாம் மேற்கொண்டு முன்னேறிச் செல்வது முக்கியம். அதை விட்டுப்போட்டு அஞ்சலி செலுத்தப்போகிறேன் என்று அழுது வடிந்து கொண்டிருக்கிறீர்கள். அதுக்குப்பிறகு என்ன செய்வீர்கள், கவலைக்கு குவாட்டரும், மட்டனும் சாப்பிடுவீர்களா? செத்தவீட்டுக்குப் பிறகு அதைத்தானே சனம் இவ்வளவு நாளும் செய்துகொண்டு வருகுது?! சும்மா போங்கையா!!!!!!நீங்களும் உங்கட அஞ்சலியும்?!

சுபாஸ் சந்திரபோசும் முன்பு இறந்த போது ,அவர் உயிருடன் இருக்கிறார் என்று பலர் அஞ்சலி செலுத்தாமல் இருந்தார்கள். கடைசியில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 60 வருடங்கள் ஆகி விட்டது. சுபாஸ் சந்திரபோசினை இன்னும் காணவில்லை.

தலைவன் வர வேண்டும் என்பது தான் எல்லோரும் விருப்பம். வீரமரணம் அடைந்த தலைவனுக்கு அஞ்சலி செலுத்தவிடாது பலர் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள். கனடா உலகத்தமிழர் கழகம், தமிழ் நேசன் இணையத்தளம், ஜீரிவி போன்றவை தலைவனின் மறைவு கண்டு அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் பலர் தலைவன் இருக்கிறான் என்று நம்புவதினால் இவ்வூடகங்கள் மீது தொலைபேசியில் மிரட்டினார்கள். தமிழ்த்தேசிய ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த தயாமோகன், பத்மநாதனின் பேட்டிகள் பயம் காரணமாக ஒளிபரப்புச் செய்யவில்லை.

17ம் திகதியே புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள சில பொறுப்பாளர்களுக்கும் இச்செய்தி கிடைத்தது. சனத்துக்கு பயந்து மெளனமாக தங்களுக்குள் அஞ்சலி செலுத்துகிறார்கள். பல புலம் பெயர்ந்தவர்கள் மாவீரர் தினம் அன்று தலைவன் உரையாற்றுவான் என நினைக்கிறார்கள். அன்று தலைவன் வந்தால் சந்தோசம். ஆனால் அன்று வராவிட்டால் ?

போராளிகள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் வீரவணக்கத்தை செலுத்திய நாங்கள், வாழ் நால் முழுவதும் ஈழத்துக்காக தியாகம் செய்த அந்த உயர்ந்த தலைவனுக்கு வீரவணக்கம் செய்யமுடியததற்கு காரணம் சிங்களவனும் எட்டப்பனுமல்ல. நாங்கள் தான்.

தலைவர் இருக்கிறார் வருவார் என்று நம்புபவர்கள் அதிகமாகவும், தலைவர் இல்லை அஞ்சலி செலுத்தவேண்டும் என்பவர் மிகக்குறைவானவர்களாகவும் உள்ளணர். கடந்த காலத்தில் மாற்றுத்தலமை தொடர்பாக கதைத்து திரிந்தவர்கள், நாதனின் படகொலைக்குப்பின் செயற்பாட்டாளர்களாக கொண்டுவரப்பட்டவர்களில் ஒரு பகுதியினர், ஆணையிறவுக்குப்பின் வெற்றியின் விழிம்பில் நின்றபோது செயற்பாட்டாளர்களாக மாறியவர்களில் ஒரு பகுதியினர், கடந்த காலத்தில் செயற்பாட்டாளர்களா இருந்து சமாதானக்கலத்தில் தொடர்ந்து செயற்படுவதற்கு அனுமதிக்கப்படாதவர்கள் என இப்படிப்பட்ட மேலும் சில தரப்பட்டவர்கள் அஞ்சலி செலுத்துவதன் ஊடாக மாற்றுத்தலமையை உருவாக்க முயற்சிக்கின்றார்.

மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியளா!

உண்மையான வேஷத்தை புலப்படுத்த ஆரம்பித்திட்டாங்க, நீங்கள் எல்லாம் யாருக்குப்பின்னாலை நிற்கிறியள் என்றும், இப்படியான சந்தர்ப்பத்தை எப்போ வரும் என்று காத்திருக்கிறியள் என்றும் உங்கள் ஆதங்கத்தில் இருந்து புரிகிறது.

உங்களை துரோகிகள் என்பதை தவிர வேறு எப்படி சொல்ல முடியும்?

இறுதி நாட்களில் தலைவர், தளபதிகளோடு அழித்தொழிக்கப்பட்ட 6000 மாவீரர்களுக்கும், எம்மையே நம்பி எம்மோடு இருந்து அழிந்த எம் மக்களுக்கும் தயவு செய்து அஞ்சலிகளை செலுத்த விடுங்கள்.

நாளைய சமுதாயம் எம்மை துரோகிகள் என்று கூற அனுமதியாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் தளபதிகள் பற்றிய சந்தேகங்களுக்கு என்னால் பதில் சொல்முடியவில்லை

ஆனால் 6000 போராளிகள் இறுதிக்கட்டபோரில் அழிக்கப்பட்டனர் என்பதை.... ஏற்றுக்கொள்ள என் மனம் இடம்தரவில்லை

இது அவர்களை அவமதிக்கும் செயல் என்றே நினைக்கின்றேன்

Edited by விசுகு

எந்த திரியை எடுத்தாலும் தலைவருடைய ஆராட்சியாகவே இருக்கு. நீங்கள் சொல்லுற மாதிரி தலைவர் இல்லாமல் இருந்தால், இதில வந்து வீரவணக்கம் , அஞ்சலிகள் என்று எழுதினால் மட்டும் எல்லாமே சரியாகிடுமா? எங்களால் செய்யவேண்டிய கடமை நிறையவே இருக்கு. அங்கு முகாம்களில் எம்மக்கள் சொல்லணாத்துயரத்திற்க்கு தினம்தினம் ஆளாகிறார்கள் ,அதை தடுக்க வழியின்றி கையாலகத்தனமா இருக்கின்றோம்.. எம்மக்களின் விடிவுக்காக உலகத்தமிழறாகிய நாங்கள் தான் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம். தயவு செய்து அதற்கு ஆவன செய்யுங்கள். அது தான் நாங்கள் தலைவருக்கு செய்யும் நன்றியாகவும்,வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் செய்யும் அஞ்சலியாகும்.

தலைவர் இலலையாம் என்டு ஆட்டமும் பாட்டியும் கூத்துமாக ஒரு கூட்டம் திறியுது. மற்றய கூட்டம் ஒண்று வீர வணக்கம் சொய்ய விடுங்கோ எண்டு திறியுது. இண்னொரு கூட்டம் தலைமை ஒன்றை தெறிவு செய்யணும் என்டு திறியுது. இந்த குழப்பத்தின் மத்தியிள் எண் ஈழ தமிழினம் மட்டும் உருதியாக உள்ளது தலைவர் வருவார் எண்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்குள் துரோகிகளை பார்த்திருக்கிறேன். துரோகிகளுக்குள்ளேயே துரோகிகளை இப்போததான் பார்க்கிறேன். எம்மட்டு ஆசையை வைத்துகொண்டுவாழ்கிறார்கள் இந்த மக்கள்.

தமிழனுக்குள் துரோகிகளை பார்த்திருக்கிறேன். துரோகிகளுக்குள்ளேயே துரோகிகளை இப்போததான் பார்க்கிறேன். எம்மட்டு ஆசையை வைத்துகொண்டுவாழ்கிறார்கள் இந்த மக்கள்.

என்ன கொடுமை இது எல்லாம்?

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கவேன்றும் என்று தலைவர் நினைத்தாரோ அதை நாம் நடத்தாமல் கைகட்டி கதை பேசுவதிலேயே காலத்தை விரயமாக்கின்றோம். தலைவர் செய்வார் செய்வார் என்று சொல்லியே நாம் எதையும் செய்யாமல் எல்லாவற்றையும் அவரின் தலையில் போட்டுவிட்டு நாம் சொகுசாக வாழ்ந்து நாம் எல்லாவற்றையும் அனுபவித்து அவருடைய வாழ்க்கையையும் போராளிகளின் வாழ்க்கைகயும் எந்த வித ஆசா பாசங்களும் இல்லாமல் அழித்துவிட்டோம். இந்தப்போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் புலம்பெயர்ந்த நாம்தான் இதை உணர்ந்தால் அந்த உன்ன மனிதனின் லட்சியத்தை நாம் நாளையே நடாத்திக்காட்டலாம்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கர்நாடக தமிழர் பேரவையின் ஆண்டுவிழா ஊப்ளியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? இருந்தால் எப்போது வெளியே வருவார்?

பிரபாகரன் நலமாக இருக்கிறார். உரிய நேரம் வரும்போது வெளியே வருவார். இதற்கு முன் பல தடவை பிரபாகரன் இறந்து விட்டதாக சிங்கள அரசு செய்திகளை பரப்பியது.

அந்த செய்திகள் எல்லாம் பொய்த்தன. அதேபோல இப்போது சிங்கள அரசு பரப்பும் செய்தியும் பொய்யான செய்தியாகும். தமிழீழ விடுதலை போராட்டத்தை முன்னிலும் வீறுகொண்டு நடத்த பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்.

தமிழீழ இயக்கத்தில் உள்ள சிலரே பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுகிறார்களே. இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் இப்படி பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள். உதாரணமாக பத்மநாதன் என்பவர் ஆயுதம் வாங்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.

அதில் அவர் சில தவறுகளை செய்ததால் அவரை அந்த பொறுப்பில் இருந்து பிரபாகரன் நீக்கி விட்டார். அதன்பிறகு அவர் சர்வதேச செயலகத்தில் ஒரு பொறுப்பாளராக மட்டுமே இருந்தார். இவருக்கு மேல் பல பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். அறிக்கை விடுவதற்கு பத்மநாதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

பிரபாகரனுக்கு ஏதாவது நேர்ந்து இருந்தால் அதை அறிவிக்கும் அதிகாரம் அவருடன் களத்தில் நின்ற தளபதிகளுக்கு மட்டுமே உண்டு.

களத்தில் இல்லாமலும் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வருபவரும் எந்த கட்டத்திலும் தன்னை வெளிப்படுத்த முடியாமல் தலைமறைவாக இருப்பவருமான பத்மநாதனால், களத்தில் நடந்ததை எப்படி அறிந்து கொள்ள முடியும்?

இந்திய ``ரா'' உளவுத்துறை பிடியில் சிக்கி இத்தகைய அறிக்கைகளை அவர் வெளியிடுகிறார். உலக தமிழர்களின் மன உறுதியை குறைக்கவும், தமிழர்களை குழப்பவும் `ரா' உளவுத்துறை அவரை பயன்படுத்துகிறது.

நன்றி: நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் பொய்யை உண்மையாக்கலாம் என்று சிலர் கூறுவார்கள். உண்மையை ஒரு தடவை சொன்னாலே போதும்.ஒரு பொய்யை மறைக்க 9 பொய்கள் சொல்ல வேண்டி வரும் என்று சொல்கிறார்கள்.அதுதான் இப்போது நடக்கிறது.உண்மையிலேயே தலைவரின்மீது பற்றும் பாசமும் உள்ளவர்கள்.அஞ்சலி செலுத்த விரும்பினால் மனதுக்குள் செலுத்தி விட்டு தொடர்ந்து அவரின் கொள்கைகளுக்காக போராடுவார்கள்.அதை விட்டு விட்டு தலைவர் இருக்கிறார் என்று சொல்பவர்களை ஏன் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களுக

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

50000க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டது நன்றாக நடந்ததா? ஆரியனின் கேடு கெட்ட பகவத்கீதையை வாசித்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.

தமிழீழ விடுதலை இயக் கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.

பிறந்தநாள் : 26-11-1954.

பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.

ஜென்ம லக்னம் : கும்பம்.

ஜென்ம ராசி: விருச்சிகம்.

ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.

திதி: பிரதமை திதி.

ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.

பாதசார விவரம்

அனுஷம் 3-ல் சூரியன்.

கேட்டை 1-ல் சந்திரன்.

அவிட்டம் 3-ல் செவ்வாய்.

விசாகம் 2-ல் புதன்.

பூசம் 2-ல் குரு (வக்ரம்).

விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).

விசாகம் 1-ல் சனி.

பூராடம் 1-ல் ராகு.

திருவாதிரை 3-ல் கேது.

மூலம் 3-ல் மாந்தி.

அவிட்டம் 3-ல் லக்னம்.

ஜனன கால மகாதசை - புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.

இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.

தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.

இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.

சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.

கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.

சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.

சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.

07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.

சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-

08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.

17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!

கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.

பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!

இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற - மிகவும் விசேஷமான ஜாதகம்!

பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் "தனித் தமிழீழம்' என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.

பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.

07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்.

நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

அதத்திட்டீங்க போங்க....................!!

QUOTE (3rd Eye @ May 30 2009, 08:14 AM)

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

50000க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டது நன்றாக நடந்ததா? ஆரியனின் கேடு கெட்ட பகவத்கீதையை வாசித்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.

* ஒரு நேரத்தில் சிதறடிக்கப்பட்ட சிங்கள இராணுவத்தை கால அவகாசம் கொடுத்து, மீண்டும் கட்டியெழுப்பச் செய்து, .... அழிந்தோம்!

* நாலுகால் மிருகங்கள் வாழாத கேவலங்கெட்ட நிலையில் எம்மக்கள் இன்று!

*........

*எல்லாவற்றுக்கும் மேலாக பணம், பணம், ................ பணம் என்று ........... உலகிலேயே வாங்கப்பட முடியாதென்றிருந்ததை ............... கூறு போட்டு விற்றோம்!!

எல்லாமே நல்லாக நடந்தது!!!!!!!!!!!!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.