Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் பாரிய பின்வாங்கலின் பின்னால்???

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலேசியாவில் தற்காலிகமாக வசிக்கும் என்னிடம், தமிழீழத் தேசியத்தலைவர் மீதும் தமிழ் மீதும் நீங்காத பற்றுக்கொண்ட என் மலேசிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட சில கேள்விகள். விடைதெரிந்தவர்கள் தயவுசெய்து அறியத் தரவும்.

விடுதலைப் புலிகளின் பாரிய பின்வாங்கலின் பின்னால்...

பலமிழந்து விட்டார்களா?

தந்திரோபாயமானதா?

அவர்களின் ஆயுததளபாடங்கள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?)

கடற்புலிகளின் நூற்றுக்கணக்கான படகுகள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?)

அவர்களின் கரும்புலிகள் அணியினர் எங்கே?

நூற்றுக்கணக்கான மோட்டார் உந்துகணை செலுத்திகள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?)

இவற்றில் உண்மை என்ன?

ஆனால் எனது அவதானிப்பின்படி, இறுதிக்கட்ட பின்வாங்கல் வரை புலிகள் தமது ஆளணி மற்றும் ஆயுத தளபாடங்களை கட்டிகாத்தார்களே என்பதே உண்மை. என அவர் என்னிடம் வினவினார்.

இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்தல்ல.

பலரின் எதிர்பார்ப்பு.

நன்றியுடன் புதியவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்குபதில் புலம்பெயர்ந்திருக்கிற ஒருத்தரிடமும் முழுமையான பதில் கிடைக்காது மகனே ஏனென்டால் ஒருத்தருக்கும் ஒண்டும் தெரியாது ஆக்களையாக்கள் குழப்பத்தான் லாயக்கு . இதற்கெல்லாம் பதில் யாருடம் உண்டோ அவரிடம் தான் உண்டு

இதற்குபதில் புலம்பெயர்ந்திருக்கிற ஒருத்தரிடமும் முழுமையான பதில் கிடைக்காது மகனே ஏனென்டால் ஒருத்தருக்கும் ஒண்டும் தெரியாது ஆக்களையாக்கள் குழப்பத்தான் லாயக்கு . இதற்கெல்லாம் பதில் யாருடம் உண்டோ அவரிடம் தான் உண்டு

பதில் தெளிவாக இருக்கு ஆனால் குழப்பமும் அங்குதான் ஆரம்பம்.

வீரத்துடன் இருந்த புலிகளுக்கு சமாதாண காலத்தின் பின் ஆயுதமே போனது இல்லை என்பது கொடுமையான செய்தி.

பதில் தெளிவாக இருக்கு ஆனால் குழப்பமும் அங்குதான் ஆரம்பம்.

வீரத்துடன் இருந்த புலிகளுக்கு சமாதாண காலத்தின் பின் ஆயுதமே போனது இல்லை என்பது கொடுமையான செய்தி.

போனது இல்லை என்று சொல்வதை விட... போய் தரையிறக்க முடியவில்லை என்று சொல்வதே சரியாக இருக்கும். இலங்கையின் தென் மூலையில் பல மாதங்களாக 3 கப்பல்கள் புலிகளுக்கு ஆயுதம் ஏற்றிக் கொண்டு முல்லை அருகே வரமுடியாமல் இருந்ததும், ஈற்றில் அவை மூன்றும் சர்வதேச கடலில் இந்தியாவின் துணையுடன் இலங்கை கடற்படையால் நிர்மூலமாக்கப் பட்டதும் பலருக்கு தெரிந்த ஆனால் ரகசிய விடயம். பிரிதானியாவில் கல்வி கற்று பின் அதில் சென்ற என் நண்பன் உட்பட பல புலமை கொண்ட புலிகள் பலியாகி இருந்தனர்.

எம் தமிழ் இராணுவ ஆய்வாளர்கள் தான், இலங்கை கடற்படை இவ்வாறு 3 கப்பல்களையும் தாக்கி அழித்த செய்தியை அறிவித்த போது கெக்களம் கட்டி சிரித்து னையாண்டி செய்திருந்தனர். இந்தியாவின் மிகப் பெரும் இராணுவ ஒத்துழைப்பு, தரையில் இருக்கவில்ல...அது கடலில் தான் இருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் தற்காலிகமாக வசிக்கும் என்னிடம், தமிழீழத் தேசியத்தலைவர் மீதும் தமிழ் மீதும் நீங்காத பற்றுக்கொண்ட என் மலேசிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட சில கேள்விகள். விடைதெரிந்தவர்கள் தயவுசெய்து அறியத் தரவும்.

விடுதலைப் புலிகளின் பாரிய பின்வாங்கலின் பின்னால்...

பலமிழந்து விட்டார்களா?

தந்திரோபாயமானதா?

அவர்களின் ஆயுததளபாடங்கள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?)

கடற்புலிகளின் நூற்றுக்கணக்கான படகுகள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?)

அவர்களின் கரும்புலிகள் அணியினர் எங்கே?

நூற்றுக்கணக்கான மோட்டார் உந்துகணை செலுத்திகள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?)

இவற்றில் உண்மை என்ன?

ஆனால் எனது அவதானிப்பின்படி, இறுதிக்கட்ட பின்வாங்கல் வரை புலிகள் தமது ஆளணி மற்றும் ஆயுத தளபாடங்களை கட்டிகாத்தார்களே என்பதே உண்மை. என அவர் என்னிடம் வினவினார்.

இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்தல்ல.

பலரின் எதிர்பார்ப்பு.

நன்றியுடன் புதியவன்

போர் முடியாது என்பதை சரத் பொன்சேகா நேற்றே அறிவித்துவிட்டார். விடுதலைப்புலிகள் கெரில்லா தாக்குதலை நடத்தும் ஆற்றலோடே இருக்கிறார்கள் என்பதை அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இதில் உண்மை இருக்கலாம். இருந்தும் போர் முடிந்துவிட்டதாக புலிகள் அழிந்துவிட்டதாக அறிவிக்க சிறீலங்கா அவசரப்பட்டது அமெரிக்க மற்றும் மேற்குலக தலையீட்டைத் தடுக்கவே. அது ஓரளவு சாத்தியப்பட்ட பின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை நீட்டிக்க.. கரந்தடி தாக்குதலை அதுவும் அழிக்கப்பட்ட புலிகள் நடத்தும் ஆற்றலோடு இருக்கிறார்கள் என்று அறிவித்திருக்கிறார்.

சிறீலங்காவில் போர் ஓய்வதை சிறீலங்கா இராணுவம்.. சிங்கள அரசு.. அண்டை நாடுகள் எதுவுமே இதய சுத்தியோடு விரும்பவில்லை. இந்த யுத்தத்தின் மூலம் ஆட்சி அதிகாரங்களைப் பிடித்தோரும்.. கோடி கோடியாக பணம் பார்த்தோரும்.. காட்டிக் கொடுப்பு கூட்டிக் கொடுப்பு அரசியல் செய்தோரும்.. எனி எப்படிப் பிழைப்பது என்று கலங்கி இருந்த வேளையில்... அவர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் சரத் பொன்சேகா என்பதே உண்மை.

விடுதலைப்புலிகளிடம் ஆயுதம் இருக்கலாம். தாக்குதல் திறன் இருக்கலாம். ஆனால் மெளனிக்க வைப்பட்ட ஆயுதங்கள் எனி முழங்காமல் இருப்பதே எதிரி மீது தொடுக்கும் புதிய போரின் புதிய பரிமானத்துக்கு வசதியாக இருக்கும். அந்தப் போரை தமிழ் மக்கள் எவருக்கும் அஞ்சாமல் உலகின் எந்த மூலையில் இருந்தும் முன்னெடுக்கலாம்.

எனவே மெளனித்த ஆயுதங்கள் மெளனித்தனவாகவே இருக்கட்டும். அதுவே எமது அடுத்த போராட்டத்தின் புதிய போர் முறையின் முதல் அடி..! இந்தப் போர் ஆயுதங்களால் பேசாது. அறிவால் இராஜதந்திரத்தால் பேச வேண்டும்..! எனவே இந்த இரும்புகள் பற்றிய கவலைகளை விட்டுவிட்டு.. புதிய போருக்கான அந்த நவீன ஆயுதங்களை தயார் செய்வதைப் பற்றிப் பேசுங்கள் உபயோகமாக இருக்கும். :D

Edited by nedukkalapoovan

கடல் வழி பாதையை மட்டும் நம்பி ஆயுத வரவை காத்தி இருந்து இருப்பார்களா?

அல்லது இதில் வேரு சுழ்சிகள் இருக்காதா?

  • கருத்துக்கள உறவுகள்

கடல் வழி பாதையை மட்டும் நம்பி ஆயுத வரவை காத்தி இருந்து இருப்பார்களா?

அல்லது இதில் வேரு சுழ்சிகள் இருக்காதா?

அண்ண.. பயங்கரவாதிகளாக்கப்பட்ட நாங்கள்.. எந்தளவு பெரிய அணுகுண்டோடு வந்திருந்தாலும்.. உலகம் எம்மை விட்டு வைத்திருக்காது. இது இத்தோடு முடியட்டும். அடுத்த போராட்டப் பரிமானத்தை தீர்மானியுங்கள். கடந்து போனதைப் பற்றி ஆராய்வது தவறல்ல. ஆனால் அவசியமானதை ஆராயலாமே..! எதிர்காலத்துக்கு வழிகாட்டும்..! :D

ஆனால் இங்கு தலைவருக்கு அஞ்சலி செலுத்தியே தீர வேண்டும் அல்லது புதிய மாற்றுத் தலைமை என்று அலையுதே அதை என்ன செய்வது, உருப்படியான ஆதாரம் இல்லமல், என்னைப் பொறுத்த வரையில் இவர்களுக்கு எல்லம் தாம் அடுத்த மாவீரர் தினத்தின் போது அவரின் இடத்தில் இருந்து உரையாற்ற வேண்டும் என்ற ஆசை, தலிவரைப் பற்றிய ஆராய்ச்சியை கை விடுங்கள் என்று கூறிய பின்னரும் சிலர் அதை செய்வதிலேயே ...........................!!!!!!!!!!!!!

அண்ண.. பயங்கரவாதிகளாக்கப்பட்ட நாங்கள்.. எந்தளவு பெரிய அணுகுண்டோடு வந்திருந்தாலும்.. உலகம் எம்மை விட்டு வைத்திருக்காது. இது இத்தோடு முடியட்டும். அடுத்த போராட்டப் பரிமானத்தை தீர்மானியுங்கள். கடந்து போனதைப் பற்றி ஆராய்வது தவறல்ல. ஆனால் அவசியமானதை ஆராயலாமே..! எதிர்காலத்துக்கு வழிகாட்டும்..! :D

உண்மை தான், தலைவர் இறந்து விட்டர் என் அறிவிக்கப்பட்டத்ன் அரசியல் யதார்த்ததை கூட அறியாத முட்டாள்களாகவே பலர் உள்ளனர்.

என்ன நிலைகு நாம் ஆள் ஆக்கப் பட்டோம்?

ஏன் இப்படி?

மக்களுக்கு ஒரு செய்தியும் சொல்லாமலா தலைவர் முடிவு எடுத்து இருப்பார் அல்லது புலம் பெயர் காசு பேய்கள் ஏதும் மறைத்து விட்டதா?

யாருக்குமே எதுவும் தெரியாது.ஆனால் இந்தக்கேள்விகள் நியாயமானதே.

கெலிகொப்டர்(கள்)?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நிலைகு நாம் ஆள் ஆக்கப் பட்டோம்?

ஏன் இப்படி?

மக்களுக்கு ஒரு செய்தியும் சொல்லாமலா தலைவர் முடிவு எடுத்து இருப்பார் அல்லது புலம் பெயர் காசு பேய்கள் ஏதும் மறைத்து விட்டதா?

நாங்கள் ஒன்றும் புதிய நிலைக்கு ஆளாக்கப்படவில்லை. உலகின் 4காவது பெரிய வல்லரசை ஒரு சிறிய ஆயுதக்குழுவாக நின்று எதிர்கொண்டிருக்கிறோம். அதை எப்படிச் சமாளித்தோம். எங்கள் அண்ணாமார் காட்டிய வழிகள் இருக்க நாம் ஏன் கலங்க வேண்டும். அந்த வழிமுறைகளை இன்னும் இன்னும் மெருகூட்டி நாம் இலட்சியத்தை அடைய பாதை வகுக்க வேண்டுமே தவிர.. எம்மை தவிக்க விட்டு விட்டனரே என்பது ஒரு அறிவார்த்தமான கருத்தல்ல.

ஒருவேளை ஒரு இயற்கை அனர்த்தத்தில் இயக்கத்தின் தலைமை கூண்டோடு அழிக்கப்பட்டிருப்பின் என்ன செய்வீர்கள்..??! மனிதனின் இறப்பு யதார்த்தமானது. நாளை நான் கூட இறக்கலாம். அதற்காக இந்த உலகம் அனாதையாகிவிட்டது என்பதல்ல அர்த்தம். நேற்று இறந்த தலைமைக்கு இன்றொரு தலைவன் போல.. நாளை அவனையும் பிரதியீடு செய்ய இன்னொருவன் வருவான். அல்லது மக்கள் ஒட்டுமொத்தமாக தலைமை தாக்கிப் போராடுங்கள். போராடவா மார்க்கமில்லை..!

1987 இலும் ஆயுதங்களை சமாதானம் பேசிப் பறித்தார்கள். பின்னர் போர் செய்து பறித்தார்கள். தலைமையை அழிக்க இயக்கத்தை அழிக்க தமிழ் மக்களின் போராட்டத்தை அழிக்க முயன்றார்கள்.

அப்போதும் துப்பாக்கிகள் மெளனமாகினதான். ஆனால் 3 ஆண்டு காலத்துள் நாம் எப்படி மீண்டு வந்தோம். அந்தப் பெரிய படையை எவ்வாறு வெற்றி கொண்டோம். அனுபவப்பட்ட நாமே இப்படி கலங்குவது அறிவானதும் அல்ல.. போராட்டத்துக்கு உபயோகமானதும் அல்ல.

தலைமை என்பது உறுதியானதல்ல. இலட்சியம் என்பதுதான் அது அடையப்படும் வரை உறுதியானது. தலைமைகள் மாறலாம். ஏன் மக்கள் அனைவருமே போராளியாகிப் போராடலாம். ஆயுதம் அவசியமில்லை. நாம் ஜனநாயகம் பேசும் உலகை அதன் வழியில் எதிர்கொள்வோம். அதன்படி நகர்வோம். இலட்சியத்தை அடைய சாத்தியமான மார்க்கங்களை எல்லாம் நாம் பயன்படுத்தத் தவறக் கூடாது. தவறின் எதிரிக்கு நாம் வெற்றியை சமர்ப்பணம் செய்ததாகவே முடியும்..!

Edited by nedukkalapoovan

நாங்கள் ஒன்றும் புதிய நிலைக்கு ஆளாக்கப்படவில்லை. உலகின் 4காவது பெரிய வல்லரசை ஒரு சிறிய ஆயுதக்குழுவாக நின்று எதிர்கொண்டிருக்கிறோம். அதை எப்படிச் சமாளித்தோம். எங்கள் அண்ணாமார் காட்டிய வழிகள் இருக்க நாம் ஏன் கலங்க வேண்டும். அந்த வழிமுறைகளை இன்னும் இன்னும் மெருகூட்டு நாம் இலட்சியத்தை அடைய பாதை வகுக்க வேண்டுமே தவிர.. எம்மை தவிக்க விட்டு விட்டனரே என்பது ஒரு அறிவார்த்தமாக கருத்தல்ல.

ஒருவேளை ஒரு இயற்கை அனர்த்தத்தில் இயக்கத்தின் தலைமை கூண்டோடு அழிக்கப்பட்டிருப்பின் என்ன செய்வீர்கள்..??! மனிதனின் இறப்பு யதார்த்தமானது. நாளை நான் இறக்கலாம். அதற்காக இந்த உலகம் அனாதையாகிவிட்டது என்பதல்ல அர்த்தம். நேற்று இறந்த தலைமைக்கு இன்றொரு தலைவன் போல.. நாளை அவனையும் பிரதியீடு செய்ய இன்னொருவன் வருவான். அல்லது மக்கள் ஒட்டுமொத்தமாக தலைமை தாக்கிப் போராடுங்கள். போராடவா மார்க்கமில்லை..!

1987 இலும் ஆயுதங்களை சமாதானம் பேசிப் பறித்தார்கள். பின்னர் போர் செய்து பறித்தார்கள். தலைமையை அழிக்க இயக்கத்தை அழிக்க தமிழ் மக்களின் போராட்டத்தை அழிக்க முயன்றார்கள்.

அப்போதும் துப்பாக்கிகள் மெளனமாகினதான். ஆனால் 3 ஆண்டு காலத்துள் நாம் எப்படி மீண்டு வந்தோம். அந்தப் பெரிய படையை எவ்வாறு வெற்றி கொண்டோம். அனுபவப்பட்ட நாமே இப்படி கலங்குவது அறிவானதும் அல்ல.. போராட்டத்துக்கு உபயோகமானதும் அல்ல.

தலைமை என்பது உறுதியானதல்ல. இலட்சியம் என்பதுதான் அது அடையப்படும் வரை உறுதியானது. தலைமைகள் மாறலாம். ஏன் மக்கள் அனைவருமே போராளியாகிப் போராடலாம். ஆயுதம் அவசியமில்லை. நான் ஜனநாயகம் பேசும் உலகை அதன் வழியில் எதிர்கொள்வோம். அதன்படி நகர்வோம். இலட்சியத்தை அடைய சாத்தியமான மார்க்கங்களை எல்லாம் நாம் பயன்படுத்தத் தவறக் கூடாது. தவறின் எதிரிக்கு நாம் வெற்றியை சமர்ப்பணம் செய்ததாகவே முடியும்..!

:D

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் புலிகளின் 5 ஓடுபாதைகளும் கைபற்றபட்பின்னர்தான். கொழும்பு நோக்கி இரண்டு கரும்புலி விமானங்கள் வந்தன. அந்த 6வது ஒடுபாதை மாயமாக இப்போது மறைந்துவிட்டது...... ஒரு ஓடுபாதையே மாயமாக மறைகின்றது என்றால்?

நாம் அதிகம் அலட்டாமல் மறைப்பதற்கு பல விடயங்கள் இருக்கின்றன. சொந்த அறிவுடன் செயற்படங்கள் நண்பர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராட்டத்தை வீச்சோடும் முச்சோடும் மக்கள் எழுச்சி வரை கொண்டு வந்து நிறுத்தி விட்டு ஆயுதங்கள் மௌனமாக்கப் பட்டிருக்கிறது.இனித்தான் சர்வதேசத்தை நோக்கிய எங்கள் போராட்டம் அதே வேகத்தோடு முன்னெடுத்துச் செல்லப்படும்.ஆயுதப் போராட்டததைக் கையிலெடுத்தவர்களுடன் அரசியல் பேசுவதற்கு சர்வ தேசத்திற்கு சில தயக்கங்கள் இருப்பதையே இது வரை நிகழ்வுகள் எமக்குப் புலப்படுத்தியிருக்கின்றன.ஆக

  • கருத்துக்கள உறவுகள்

இது சிந்திக்கவேண்டிய காலம். உன் வாழ்நாளில் இன்னும் 30 வருடங்களை தொலைக்கப் போகிறாயா. ஈழத் தமிழன் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார். இன்று அன்பு - மனிதம் - நியாயம் - நேர்மை - நீதி - தர்மம் எல்லாம் தொலைந்து போனது என்பதை தெரிந்து கொள். இனி ஆயிரம் ஆயிரமாய் புலிகள் எழுவர். நாங்கள் தேடும் தலைவன் நம்முன் தோன்றும் காலம் விரைந்து வரும்.

விடுதலைப்புலிகளின் பாரிய பின்வாங்கலின் பின்னால்???

இதற்கு சரியான பதில் மக்கள் போராட்டமும் மனித உரிமையில் சிறிதளவேனும் கவனம் செலுத்தும் நாடுகளும் தான் என்று என் மண்டைக்கு புரியுது.பொட்டு இருக்கிறார் என்று சொல்லி சொல்லி எவ்வளவை எங்களிடம் புட்டு புட்டு எதிர்பார்கிறான்கள்,ஆனால் போகிற போக்கில் ஒரு நாளைக்கு யாராவது இன்ன இடத்தில் இவர் இருக்கிறார் அவர் நிக்கிறார் என்று இணையம் வழியாக புட்டு வைக்கத்தான் போகிறார்கள் (எங்களை நாங்களே காட்டிகொடுக்கப் போகிறோம் என்பதில் சந்தேகமே இல்லை.)

விடுதலைப் போராட்டத்தை வீச்சோடும் முச்சோடும் மக்கள் எழுச்சி வரை கொண்டு வந்து நிறுத்தி விட்டு ஆயுதங்கள் மௌனமாக்கப் பட்டிருக்கிறது.இனித்தான் சர்வதேசத்தை நோக்கிய எங்கள் போராட்டம் அதே வேகத்தோடு முன்னெடுத்துச் செல்லப்படும்.ஆயுதப் போராட்டததைக் கையிலெடுத்தவர்களுடன் அரசியல் பேசுவதற்கு சர்வ தேசத்திற்கு சில தயக்கங்கள் இருப்பதையே இது வரை நிகழ்வுகள் எமக்குப் புலப்படுத்தியிருக்கின்றன.

ஆக அவர்களுக்குத் தெரிந்த இராஜரீக மொழியில் பேசுவதற்கு நாங்கள் தயாராக வேண்டும்.இன்றைய ரைம்ஸ் நாளிதளிளைப் பார்த்தால் எங்கள் போராட்டக் களம் எவ்வளவு தூரத்திற்கு விரிந்திருக்கிறது என்பது புரியும். தலைப்புச் செய்தி ஆசிரியத் தலையங்கம் உட்பட 5 பக்கங்கள். அவர்கள் என்ன புரிந்திருக்கிறார்கள்.எதைப் புரியாமல் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப காய்களை நகர்த்த வேண்டும்.அதை விட்டு தலைவரப் பற்றிய ஆராய்சிகளை விடுங்கள்.சரியான ஆதாரங்கள் இல்லாமல் முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளால் குழப்பங்கள்தான் அதிகரிக்கும்.தலைவர் எல்லோருடைய நெஞ்சிலும் இருக்கிறார்.

புலவரின் கருத்துக்கள் சரியானதே.

  • கருத்துக்கள உறவுகள்

யாரையோ நம்பி ஏமாந்து விட்டார்கள் அதில் புலம் பெயர்ந்த மக்களாகிய நாங்களும் அடங்குவோம்.

ஓரு வேற்று நாட்டு போராளியுடன் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எமது தலைiயின் இழப்பு பற்றி அரச அறிவித்தல் தன்னை கவலைக்குள்ளாகியதாகவும் ஆனாலும் சோர்ந்து விடவேண்டாம் என்று கூறினார். காரணம் இனித்தான் உங்கள் போராட்டம் வீச்சம் பெறவேண்டும். இதுவரை நாளும் உங்களிற்குள்ளேயே எழுப்பப்பட்ட போராட்டம் இனி உலகளவில் நடாத்தப்பட வேண்டும். இதற்கு ஒரே வழி நீங்கள் வசிக்கும் நாடுகளில் கிராமம் கிராமமாக சென்று உங்கள் போராட்டத்தின் நியாயாத்தை உணர்த்துங்கள். பாமர மக்களிற்கும் தெரிய வேண்டும் அப்போதுதான் உங்களது போராட்டத்திற்கு ஓரு விடிவு கிடைக்கும இல்லையேல் அந்த உன்னத மனிதனது கனவு கனவாகவே போய்விடும் என்று கவலைப்பட்டான். வேற்று நாட்டவனிற்கு பத்திரிகைகள் மூலம் தெரிந்த தலைவரை அவர் வளர்ந்து வாழ்ந்த மண்ணில் பிறந்த நாம் எப்படியெல்லாம் நாக்கு சுழலும் இடமெல்லாம் கதைக்கின்றோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.