Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவனயீர்ப்பு நிகழ்வில் தமிழீழத்தேசியக் கொடி, தலைவரின் படங்கள் பிடிப்பது பற்றி ?

Featured Replies

வன்னியில் தடுப்பு முகாம்களில் பல இளையோர் சித்திரவாதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பல அப்பாவி பெண்கள் பாலியல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் .விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். முதியோர்கள் பலர் உணவு, மருந்து இன்றி இறக்கிறார்கள். சென்ற மாதம் 17ம் திகதிக்கு முன்பு விடுதலைப்புலிகளை ஆயூதம் போட்டுச் சரணடையவும் , சிங்களத்தை யுத்தத்தில் பாரிய கனகரக ஆயூதங்களைப் பாவிக்க வேண்டாம் என்று சொன்ன சர்வதேசம் இப்ப அறிக்கைகள் விடுவதை நிற்பாட்டி விட்டார்கள்.

எமக்கு இப்பொழுது முக்கிய கடமை வன்னியில் தடுப்புமுகாமில் இருக்கும் உறவுகளை எப்படி வெளியே கொண்டுவருவது தான். அண்மையில் இத்தாலியில் நடைபெற்ற கவனயீர்ப்பு படங்களை GTVல் பார்த்தேன். அக்கவனயீர்ப்பு நிகழ்வு வன்னியில் உள்ள தடுப்பு முகாமில் இருக்கும் உறவுகளுக்காகவே நடைபெற்றது. ஆனால் கவனயீர்ப்புப் படங்களில் தமிழீழத்தேசியக் கொடியும், தலைவரின் படங்களும் தான் அதிகளவில் இருந்தன. மக்களின் அவலங்கள் பற்றிய படங்கள் மிகவும் குறைவாக இருந்தன. எங்களுக்குத் தெரியும் எமது போராட்டம் பயங்கரவாதப் போராட்டமல்ல. ஆனால் சர்வதேசத்தில் இப்போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டமாகத்தான் பார்க்கிறார்கள். மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் போராட்டங்களில் தலைவரின் படங்கள், தமிழீழத்தேசியக் கொடிகள் அதிகளவில் கொண்டு செல்ல வேண்டுமா? .

புலம் பெயர்ந்த நாடுகளில் சென்ற மாதம் 17க்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்விற்கு முன்பு கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை தற்பொழுது நடைபெறும் கவனயீர்ப்புகளில் குறைவாக இருக்கிறது. அடுத்தது யூலை5ம் திகதியில் நடைபெறவுள்ள 'உயிர்த்தெழுவோம்' என்ற நிகழ்வு. அதில் அதிகளவு மக்கள் கலந்து கொள்ளவேண்டும்.

அடுத்தது யூலை5ம் திகதியில் நடைபெறவுள்ள 'உயிர்த்தெழுவோம்' என்ற நிகழ்வு. அதில் அதிகளவு மக்கள் கலந்து கொள்ளவேண்டும்.

அதுக்கு முன்னர் சுலோகங்கள் படங்கள் கொடிகள் பற்றி சரியாக சிந்தித்து ஒரு முடிவெடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

கொடி பிடிக்காமல், தலைவர் படம் இல்லாத எந்த போராட்டத்திற்கு உலகம் தலை சாய்த்தது என்று சொல்லுங்கள். இது பற்றிச் சிந்திக்கலாம். யூலை 5ம் திகதி என்னுமொரு வகையில் முக்கியத்துவமான நாள்.

இந்தப் போரைச் சிங்கள அரசு வெற்றி கொண்டு விட்டது. எனவே தமிழ் மக்கள் சிங்கள அரசோடு சேர்ந்து வாழ்வார்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க இடமளிக்காதீர்கள்.

தூயவன்,

கொடி பிடிக்காமல், தலைவர் படம் இல்லாத எந்த போராட்டத்திற்கு எங்கள் சனம் சொல்லுமளவுக்கு குவிந்தது?

சில காலமாகவே சில வெற்று நாடுகள் இதை வெளிக்காட்டின, குறிப்பாக அவர்கள் புலிக்கொடிக்கு கீழ் எந்தப்போராட்டத்தையும்

விரும்புவதாக தெரியவில்லை.

இதுக்கு என்ன காரணம் இதன் பின்னனி என என்பது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இவர்கள் இவ்வாறு கூறுவதுக்கும் எங்கள் மீது இவர்கள் விதித்த தடையே காரணமாகவும் உள்ளது.

நாம் இவர்கள் சொல்வதற்காக எங்கள் போராட்டத்தின் இலக்கை மாற்றவேண்டுமென்றோ விடவேண்டு என்றோ சொல்லவில்லை.

ஆனால் அவர்களாலேயே எங்கள் போராட்டத்தை புறக்கணிக்க முடியாத வகையில் செல்ல வேண்டும்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

அதிகளவு மக்களின் அவலங்களைத் தாங்கும் படங்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

கொடி பிடிக்காமல், தலைவர் படம் இல்லாத எந்த போராட்டத்திற்கு எங்கள் சனம் சொல்லுமளவுக்கு குவிந்தது?

சில காலமாகவே சில வெற்று நாடுகள் இதை வெளிக்காட்டின, குறிப்பாக அவர்கள் புலிக்கொடிக்கு கீழ் எந்தப்போராட்டத்தையும்

விரும்புவதாக தெரியவில்லை.

இதுக்கு என்ன காரணம் இதன் பின்னனி என என்பது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இவர்கள் இவ்வாறு கூறுவதுக்கும் எங்கள் மீது இவர்கள் விதித்த தடையே காரணமாகவும் உள்ளது.

நாம் இவர்கள் சொல்வதற்காக எங்கள் போராட்டத்தின் இலக்கை மாற்றவேண்டுமென்றோ விடவேண்டு என்றோ சொல்லவில்லை.

ஆனால் அவர்களாலேயே எங்கள் போராட்டத்தை புறக்கணிக்க முடியாத வகையில் செல்ல வேண்டும்.

தலைவர் படமில்லாத, தமிழீழக் கொடி இல்லாத நிகழ்வுகளுக்குத் தமிழ் மக்கள் அதிகளவு வந்தார்கள் என்பது சுத்தப்பொய். கனடாவைப் பொறுத்தவரை, இதன் பின்னர் தான் அதிகளவு மக்கள் வந்திருந்தார்கள் எனலாம்.

கடந்த முள்ளிவாய்க்கால் இறுதிப்படுகொலைகளுக்குப் பிறகு, மக்கள் தொகை குறைந்தது என்பது உண்மை தான். அது வெறுப்பு, வலி, என்ற பல விடயங்களே தவிர, இது காரணமல்ல. பெரும்பாலனவர்கள் எனி என்னத்துக்கு என்ற அளவில் வெறுப்படைந்துள்ளார்கள். காலப்போக்கில அவர்கள் திரும்பவும் இணைவார்கள் என நம்பலாம்.

ஒரு விடயம் யாதெனில் மக்கள் சக்தியைத் திரட்டுவது என்பது. சாதரணமல்ல. அதற்காக பலருடைய உழைப்பு, சக்திகளை இதற்குள் வீணாக்குகின்றோம். ஒவ்வொவ்வொரு முறையும் நாங்கள் சின்னச் சின்ன விடயங்களுக்காகப் போராட்டம் செய்வது தூரநோக்கற்ற பார்வையாகும்.

முதலில் வன்னியில் மக்கள் படுகொலைக்கு எதிராகவும், உணவனுப்பவும் செய்தோம். அதன் பின். இப்போ போர் முடிந்து விட்டதே என உலகம் கேட்கின்றது. இப்போ, முகாம்களில் உள்ள மக்களுக்கு, பிறகு சம உரிமைக்கு, பிறகு தனிநாடு கத்தரிக்காய் , புடலங்காய் என்று ஒவ்வாரு மக்களுக்குமாகவா தனித்தனிப் போராட்டம்?? இதனால் புலம்பெயர் மக்களின் சக்தி எவ்வளவு வீணாக்கப்படுகின்றது தெரியுமா?

ஒரு இறுதித்தீர்வோடு போராட வேண்டியது என்பது தான், தனிநாடு, அல்லது அது சார்பானவைகளையும் ஒரே நேரத்தில் வைக்க வேண்டிய தேவை உள்ளது.

இப்படிச் சின்னச் சின்ன விடயங்களுக்காகப் போராடிக் கொண்டிருந்தோமானால் வாழ்நாள் முழுக்க இப்படியே இருக்க வேண்டியது தான்.

உண்மையைச் சொல்லப் போனால், எங்களுடைய தேசியக்கொடியை வைத்து ஒன்றும், உலகம் .இயங்கவில்லை. அவர்கள் தங்களுக்குரிய கால அட்டவணையை வைத்துத் தான் இயங்குகின்றது. அதனால் தான் சாமானகாலத்திலும் தடை விதித்து, எம் வலுவை இழக்கச் செய்தது. ஆயிலும் இந்த உலகத்தில் நாங்கள் எங்களைத் தொடர்ச்சியாக அடையாளம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியக்கொடி இல்லாத ஊர்வலத்துக்கு போவதைவிட வீட்டில் சும்மா படுத்துகிடக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வதைமுகாம்களுக்குள் அடக்கப்பட்டிருக்கும் மக்களின் படங்களை வெளிக் கொணரும் அளவிற்கு தமிழரின் அடையாளங்களையும் உறுதிப்படுத்திக் கொண்டு இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அடையாளப்படுத்தல் இல்லாத பேரணிகள் இதற்காக, இந்த இனத்தால், இந்தக் காலப்பகுதியில் என்பதெல்லாம் அற்றதாக உலகத்தில் எங்கோ ஒரு இடத்தில் அவலமுறும் மக்களுக்காக யாரோ முகவரியில்லாத எந்த இனமென்ற அடையாளமற்ற யாரோ மனிதர்கள் ஏதோ பேரணி நிகழ்த்தினார்கள் என்று முடிந்துவிடும். சில சமயங்களில் தமிழருக்கு எதிரான தரப்பிற்கு செய்திகளைத் திரிபுபடுத்தி உலகை ஏமாற்றும் தன்மைக்கு தாராளமான உதவியாகக்கூடப் போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு இப்பொழுது முக்கிய கடமை வன்னியில் தடுப்புமுகாமில் இருக்கும் உறவுகளை எப்படி வெளியே கொண்டுவருவது தான். அண்மையில் இத்தாலியில் நடைபெற்ற கவனயீர்ப்பு படங்களை GTVல் பார்த்தேன். அக்கவனயீர்ப்பு நிகழ்வு வன்னியில் உள்ள தடுப்பு முகாமில் இருக்கும் உறவுகளுக்காகவே நடைபெற்றது. ஆனால் கவனயீர்ப்புப் படங்களில் தமிழீழத்தேசியக் கொடியும், தலைவரின் படங்களும் தான் அதிகளவில் இருந்தன. மக்களின் அவலங்கள் பற்றிய படங்கள் மிகவும் குறைவாக இருந்தன. எங்களுக்குத் தெரியும் எமது போராட்டம் பயங்கரவாதப் போராட்டமல்ல. ஆனால் சர்வதேசத்தில் இப்போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டமாகத்தான் பார்க்கிறார்கள். மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் போராட்டங்களில் தலைவரின் படங்கள், தமிழீழத்தேசியக் கொடிகள் அதிகளவில் கொண்டு செல்ல வேண்டுமா? .

கொடிகள், தலைவரின் படங்கள் எம்மை யார் என அடையாளம் காட்டுவதற்கு கொண்டு செல்லல் இன்றியமையாதது. லண்டன், கனடா போன்ற நாடுகளில் தமிழீழ தேசிய கொடி அவ்வரசுகளால் அனுமதிக்கப்பட்டது தெரிந்ததே. அதே நேரம் அதிக அளவில் கொடிகளை கொண்டு சென்று பதாகைகளை மறைப்பதன் மூலம் செய்திகளை ஊடகங்களும் வேற்று இனமக்களும் அறிய முடியாமல் போய்விடும். எல்லாவற்றையும் அளவாக(கொடிகள், பதாகைகள்) ஒரு சிறந்த கவனவீர்ப்பு போராட்டமாக மாற்ற கூடியவகையில் அமையவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது தனிப்பட்ட கருத்து.. கனேடிய அரசியலைப் பொறுத்தவரையில், நாம் பிடிப்பது எமது தேசியக் கொடியை.. புலிக்கொடியை அல்ல என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் புலிக்கொடி செங்கொடி என்று பலவாறாக எழுதியும் கதைத்தும் எழுதியும் வந்தார்கள். ஜாக் லேய்ட்டன் கூட தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எமது கொடியை உயர்த்துவது உசிதமானது அல்ல என்று கூறியிருந்தார்.

இவையெல்லாம் நடந்தது புலி உயிருடன் இருந்த காலத்தில். இப்போது சிங்கள்மே சொல்லிவிட்டது புலியின் கதை முடிந்துவிட்டது என்று. இப்போது நாங்கள் கொடியை உயர்த்தாவிட்டால் நாங்கள் முன்னர் தூக்கியது புலிக்கொடியே என்று ஆகிவிடும் அல்லவா?

அதனால் எமது தேசியக்கொடியுடன் சென்று எமது தாகம் தமிழீழத் தாயகமே என்று உரத்துக்கூறும் மனப்பாங்கு எமக்கு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். கொடிபிடிக்காமல் போனால் வன்னி மக்களை விடுவிப்பார்கள் என்றோ அவர்களின் நிலையை உயர்த்துவார்கள் என்றோ நான் கருதவில்லை. மாறாக‌ புலம்பெயர்மக்களின் ராஜதந்திர ரீதியிலான அணுகுமுறைகளே அவற்றைப் பெற்றுத்தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியக்கொடி இல்லாத ஊர்வலத்துக்கு போவதைவிட வீட்டில் சும்மா படுத்துகிடக்கலாம்.

நிற்சயமாக..... நாம் யார் என்பதை அடையாள படத்தபோவது எமது தேசிய கொடியே....... அதேபோல் ஏன் ஆர்பாட்டம் அணிவகுப்பு பேரணிகள் செய்கிறோம் என்பதை வெளிகொணர கூடியது மக்களின் அவலநிலை குறிக்கும் பதாதைகளே. இதை தயவுசெய்து புரிந்துகொண்டு இரண்டு கல்லிலும் மாங்காய் வீழ்த்த தெரியவேண்டும்.

100% உங்கள் கருத்துதான் சரியானது :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது தனிப்பட்ட கருத்து.. கனேடிய அரசியலைப் பொறுத்தவரையில், நாம் பிடிப்பது எமது தேசியக் கொடியை.. புலிக்கொடியை அல்ல என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் புலிக்கொடி செங்கொடி என்று பலவாறாக எழுதியும் கதைத்தும் எழுதியும் வந்தார்கள். ஜாக் லேய்ட்டன் கூட தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எமது கொடியை உயர்த்துவது உசிதமானது அல்ல என்று கூறியிருந்தார்.

இவையெல்லாம் நடந்தது புலி உயிருடன் இருந்த காலத்தில். இப்போது சிங்கள்மே சொல்லிவிட்டது புலியின் கதை முடிந்துவிட்டது என்று. இப்போது நாங்கள் கொடியை உயர்த்தாவிட்டால் நாங்கள் முன்னர் தூக்கியது புலிக்கொடியே என்று ஆகிவிடும் அல்லவா?

அதனால் எமது தேசியக்கொடியுடன் சென்று எமது தாகம் தமிழீழத் தாயகமே என்று உரத்துக்கூறும் மனப்பாங்கு எமக்கு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். கொடிபிடிக்காமல் போனால் வன்னி மக்களை விடுவிப்பார்கள் என்றோ அவர்களின் நிலையை உயர்த்துவார்கள் என்றோ நான் கருதவில்லை. மாறாக‌ புலம்பெயர்மக்களின் ராஜதந்திர ரீதியிலான அணுகுமுறைகளே அவற்றைப் பெற்றுத்தரும்.

உண்மை தான். அத்தோடு இந்தப் போராட்டங்கள் புலிகளைக் காப்பாற்ற எனச் சிங்களப் பேரினவாத வெறியர்கள் பிரச்சாரம் செய்து வந்திருந்தனர். நாங்கள் இந்தப் போராட்டங்களை, தொடர்ந:து கொண்டு செல்லாவிடின், அப்படியான தோற்றப்பாட்டையே இது ஏற்படும்.

எம் மீது சுமத்தப்பட்ட வலிகளால் பலர் சோர்வடைந்து தளர்வடைந்துள்ளோம் என்பது உண்மை தான். ஆயிலும் அதைத் தொடர்ந்து கொண்டு செல்லவேண்டிய தேவை உள்ளது. அனைவரும் இணைந்திடுவீர்..

சிரிலங்காவில் ஒருதேசிய இனம் அடிமைப்படுத்த பட்டு வாழ்கிறது என்று உரத்து கத்துவதற்கு அந்த இன அடையாள தனித்துவம் தேவை.

நாங்கள் ஈழத்தமிழர்கள் எங்கள் தேசியகொடி புலி ச்சின்னம்.

அதை விடுத்து கும்பலில் கோவிந்தா என்று ஊர்வலத்தில் தேசக்கொடி இல்லாமல் போய் கத்துவதில் பிரயோசனம் இல்லை.

தேசக்கொடி நிச்சயம் எங்களை யார் என்று அடையாளப்படுத்தும். இதற்காகதான் 30000 மாவீரர்கள் விதையாக மண்ணில் விதைக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழர்களின் பிரச்சினை மற்றும் அவலங்களை வெளிப்படுத்துவது மக்களின் அவலங்களைக் குறிக்கும் பதாகைகள் எனில், அவற்றிற்கான தீர்வையும், தமிழீழ தேசியத்தின் அடையாளத்தையும் குறிப்பது புலிக்கொடியும்,தேசியத்தலைவர

தமிழ் தேசியக் கொடிக்கும், சிலருக்கும் என்ன பிரச்சனை?? :mellow:

புலம்பெயர் நாடுகளின் அரசாங்கமே அனுமதி குடுத்தப் பிறகும் ஏன் பிடிக்கப் பஞ்சிப் படுறீங்கள்? உசாரகப் பிடிக்க வேண்டியது தானே?? எம்மை நாம் அடையாள படுத்துவதற்கு தேசிய கொடியும், அதேநேரம் எம் மக்களின் அவலங்கள் அடங்கிய பதாகைகளும் கொண்டு செல்லத்தான் வேணும், இரண்டு கைகள் இருக்குத் தானே...இரண்டையும் உசாரா பிடியுங்கோ..

லண்டனில் நடந்த கவனயீர்ப்பு ஊர்வலங்களில், மக்கள் அவலங்களை வெளிப்படுத்தும் பதாகைகள் அதிகமாகவே காணப்பட்டன...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கான தேசம் உருவாக்கப்படவேண்டுமென மனவிருப்பத்தோடு விரும்பினால், தேசியக்கொடியோடும் தேசியத்தலைவரோடும் நில்லுங்கள்.

எமக்கானதை நாமே விட்டுக்கொடுத்தால் எப்படி? புரிந்து தெரிந்து அறிந்து தெளிந்து நில்லுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசிய கொடியும் வேணும். பதாகைகளும் வேணும்.

யாரிட போராட்டம் என்பதும் முக்கியம். ஏன் போராட்டம் என்பதும் முக்கியம்.

இதை அனைவரும் நன்கு அறிந்திருந்தும் ஏன் வில்லங்கம்?!

ஆனால் கவனமாய் கையாள வேண்டிய விடயங்கள் சிலது உண்டு:

- அந்த பதாகைகலால பக்கத்தில நிக்கிறவண்ட கண்ணை கொண்டு போகாம இருப்பது! (எனக்கு நடந்தது :D - ஊர்வலம் முடிந்து வீடு வந்து சேர்ந்த பிறகும் விண்விண் என்றிந்தது கண்ணோரம்!)

கொடியையும் தூக்கி ஒழுங்கா உயர பிடிக்க சொல்லுங்கப்பா .... ஒரு நரகத்து முள்ளு (யார் பெத்த பிள்ளையோ!) ஏதோ ஊரில கமத்துக்கு போறவன் மண்வெட்டியை தோளில காவின மாதிரி தேசியகொடியை கொண்டு போய் முன்னால வந்த ஆளின் முதுகில கொடியை நட பாத்துது!! :lol:

அடுத்ததா ஊர்வலம் என்றால் மெல்லமாய் தான் நகரும் - ஏதோ வயித்தை கலகினவர் ஓடுற மாதிரி நடந்தால் அதுக்கு பெயர் ஊர்வலம் அல்ல :mellow: ! எனக்கு பின்னால வந்த சனத்தில சிலது தங்கட மின்னல் வேகத்தால எண்ட பின்னங் காலை பதம் பார்த்து :lol: .......ஆண்டவா!!!

- இதுக்கெல்லாம் கைநூல் அதுக்காக தயாரிச்சு படிக்க குடுத்து "driving test" மாதிரி பாஸ் பண்ண விட்டுட்டா சனத்தை வர பண்ணுவது.... :wub: ??!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு கைகள் இருக்குத் தானே...இரண்டையும் உசாரா பிடியுங்கோ..

எங்களுக்கான தேசம் உருவாக்கப்படவேண்டுமென மனவிருப்பத்தோடு விரும்பினால், தேசியக்கொடியோடும் தேசியத்தலைவரோடும் நில்லுங்கள்.

தமிழ் தேசியக் கொடிக்கும், சிலருக்கும் என்ன பிரச்சனை?? :mellow:

புலம்பெயர் நாடுகளின் அரசாங்கமே அனுமதி குடுத்தப் பிறகும் ஏன் பிடிக்கப் பஞ்சிப் படுறீங்கள்? உசாரகப் பிடிக்க வேண்டியது தானே?? எம்மை நாம் அடையாள படுத்துவதற்கு தேசிய கொடியும், அதேநேரம் எம் மக்களின் அவலங்கள் அடங்கிய பதாகைகளும் கொண்டு செல்லத்தான் வேணும், இரண்டு கைகள் இருக்குத் தானே...இரண்டையும் உசாரா பிடியுங்கோ..

லண்டனில் நடந்த கவனயீர்ப்பு ஊர்வலங்களில், மக்கள் அவலங்களை வெளிப்படுத்தும் பதாகைகள் அதிகமாகவே காணப்பட்டன...

உண்மைதான்.

லண்டன் ஊர்வலத்தில் தேசியக்கொடி அதிகளவில் எடுத்துச்செல்லப்பட்டாலும் தலைவரின் படம் மிகக் குறைவே.

வழமையாக எமது தலைவர் பிரபாகரன் எனும் கோசம் வானைப்பிழக்கும். ஆனால் இம்முறை ஒலிக்கவேயில்லை. நானும் எனது நண்பர்களும் ஒலித்தபோது மற்றவர்கள் எம்முடன் சேர்ந்து சொல்லவேயில்லை.

இனி அவரை எமது தலைவர் என கூறமுடியாது என்று வாதிடுகின்றனர் சிலர். வேதனையாக உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இந்தப் பிரச்சனை இன்னும் ஓயேல்லையே

இப்ப தூக்கிறதைக் கைவிட்டமோ புலி தோத்துட்டுது அது தான் கைவிட்டுட்டமெண்டு சொல்லும்

இவ்வளவு காலமும் தெருவிலை நிண்டவையை புலி எண்டு சொல்லும்

தமிழீழம் கேட்டது புலி மட்டும் தான் எண்டு சொல்லும்

புலி அழிஞ்சிட்டு தமிழீழமும் தேவையில்லை ஒண்டும் தேவையில்லை எல்லாரும் அடிமையா இருங்கோ எண்டு வெளிநாடே சொல்லும்

இதெல்லாம் உங்களுக்கு சம்மதமோ ஐயா???

நாங்கள் யார் எதுக்கு போராட்டம் என்று எங்களை அடையாளப்படுத்திறதே தேசியக்கொடியும் தலைவரின் படமும் பதாகைகளும் தான்

அதை எல்லாம் விட்டுட்டு என்னய்யா ஏதும் கல்யாண ஊர்வலத்துக்கே போறோம்

  • கருத்துக்கள உறவுகள்

தேசியக் கொடியோடு பேராட்டம் நடத்தினால்தான் அது தமிழர்கள் நடத்தும் போராட்டம் ஆகும்.அது இல்லாவிடில் எந்த இனம் நடத்துகின்ற பேராட்டம் என்பதே பலருக்கு விளங்காமல் போயிடும்.புலிக் கொடி தமிழர்களின் அடையாளம்.

புலிக்கொடி நமது தேசியக்கொடி. அதிமேதகு.பிரபாகரன் எங்கள் இனத்தின் மான்புமிகு தேசியத்தலைவர்.

இதையெல்லாம் விட்டுவிட்டு நீங்கள் போராட்டம் நடத்திறத விட வீட்டிலயே இருக்கிறது மேல்.

உங்களது அடையாளங்களை தொலைக்காதீர்கள்!

நாம் மானத்தைக் காக்க அணியும் ஆடைகளைவிட இவை முக்கியமானவை.

அதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள்!

Edited by நான் அடிமையில்லை

வாழ்க வளர்க யாழ் இணையத்தின் சிறீலங்கா தேசியத்துக்கு வலுச் சொக்கும் செயற்பாடு.தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் உறவுகளே தமிழீழ தேசிக் கொடி என்பது பயங்கரவாதிகளின் கொடி.தேசியத் தலைவர் பயங்கரவாதி.இதை நான் சொல்லவில்லை யாழ் இணையக் கருத்தியல் வாதிகள் சொல்கிறார்கள்.தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்றெல்லாம் நம்பி காலத்தை வீணடிக்காதீர்கள்.மத்தியிலே கூத்தாட்சி.மாநிலத்தில் பிழைப்பாட்சி இது தான் சிறந்த தத்துவம்.இப்போது தேவை நீங்களும் குழம்பி அல்லது குழம்புவது போல் நடித்த மற்றவர்களையும் குழப்புவது.இந்தப் பணிணை கருத்துச் சுதந்திரம் என்ற பேரில் சிறப்பாக செய்யும் யாழ் இணைய நிர்வாகத்துக்கு பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

எங்கே அப்பு தமிழீழக்கொடியைப் பயங்கரவாதிகளின்ட கொடி என்று இங்க கருத்து எழுதியிருக்கினம். சர்வதேசம் தான் சொல்லுது என்று தான் கருத்துச் சொல்லினமே தவிர அவர்கள் அப்படிச் சொல்லவில்லை. அரை குறையாக வாசித்து விட்டு ஆதரவாளர்களையும் துரோகி என்று எழுதிவதை விட்டு அங்க நாட்டில சிறையில இருக்கிற எங்கட உறவுகள், போராளிகளை எப்படி வெளியில கொண்டு வரலாம் என்று யோசித்து கருத்து வையுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.