Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைக்கல் ஜாக்சன் காலமாகி விட்டார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை ...(.ஜக்சனுக்கு வீ ர வணக்கம் ) ..தவறுதலாக் சொலியிருந்தால் .........சாணாகியன் என்னும் புனை பெயருள்ளவர் .....களத்தில் தவறை உணர்ந்து மன்னிப்பு கருத்து எழுதுவது தான் பண்பான செய்யல் என எண்ணுகிறேன்.

  • Replies 50
  • Views 8.9k
  • Created
  • Last Reply

வீரவணக்கம் தெரிவிப்பதை பகுதிநேர தொழிலாக கொண்ட, தற்போது வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் வீர செம்மல்(றி)களுக்கு ஒரு வேண்டுகோள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில், 35ஆம் இலக்க விடுதியில், நெஞ்சில் பாய்ந்த குண்டுச்சிதறல்களை அகற்றுவதற்காக வடபகுதி மருத்துவமனை ஒன்றில் இருந்து அனுப்பப்பட்ட ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கும் இவருக்கு தமிழில் மட்டுமே கதைக்கமுடியும். பொலிசாரை தவிர உறவினர் எவரும் இவரை பார்க்க வருவதும் இல்லை. வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவை உண்பதும் இல்லை. நீரை மட்டுமே அருந்தி உயிர்வாழும் இந்த அதிசய மனிதனை அணுகி "ஏதாவது வேணுமா?" என்று கேட்டபோது முதலில் பேசத்தயங்கிய அவர் அடுத்தநாள் அருகில் இருந்த இன்னோரு நோயாளியிடமிருந்த கொக்காகோலா பிளாஸ்டிக் போத்தலைக்காட்டி, "அது வேணும்!" என்றார். உடனடியாக ஒரு புதிய 1.5 லீட்டர் போத்தலை வாங்கிக் கொடுத்த போது, "வெறும் போத்தல்தான் வேணும்! தண்ணீர் பிடித்து வைக்க!" என்றார். சோடா குடித்தால் வயிறு எரிகிறதாம், சாப்பிடவும் முடியவில்லையாம். நீண்டநாள் பட்டினியில் அல்சர் நோய் கண்டிருக்கக் கூடும். நடுச்சாமத்தில் எழும்பி "இராஜபக்சே ஒழிக! பிரபாகரன் வாழ்க!" கோசம் போடும் இவரை, எல்லோரும் "கொட்டியா" என்பதால் தமிழர்கள் கூட இவருடன் பேச்சுவார்த்தை வைப்பதில்லை. சத்திர சிகிச்சையின் பின் வெளியேறும் கழிவு இரத்தத்திற்கான போத்தல் இணைக்கப்பட்டுள்ளதால் இவரால் தனியாக மலசலம் கூடம் போக முடியாது. தாதிகள் முதல் உதவியாளர்கள் வரை எவரும் இவர் இருக்கும் மூலைக்கு போவதும் கிடையாது. படுக்கை விரிப்பு ஒன்றையே பலநாட்களாக சாரமாக அணிந்துள்ள இவர் சில வேளைகளில் வலியால் கதறும் போது உதவியாக இருப்பது, மண்ணிற கோடு போட்ட சாரமும் சட்டையும் அணிந்து பக்கத்துக் கட்டிலில் கிடக்கும் இரு படையினர்தான். ஏனெனில் அவர்களுக்குதான் இவர் கதைப்பது கொஞ்சம் புரிகிறது. அதை விட அவர்களுக்கு கொட்டியாவுடன் சகவாசம் வைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை.

சரி இனி விடையத்திற்கு வருவோம், அதி உன்னத வீரவணக்கத்தை உங்களிடம் இருந்து பெற்று தன் வாழ்வை உன்னதப்படுத்திக் கொள்ளாமல், இப்படி சிங்களவனிடம் தரம்தாழ்ந்து (உங்கள் பாசையில் கூறுவதானால் நக்கித் தின்னும்) இந்த ****க்கு வழமை போல உரிய பட்டத்தை வழங்கி உங்கள் பகுதி நேர கடமையை முழுமை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

அடிமைவாழ்விற்கு அனுகூலம் கூறினோம் என்பதால் அறிஞர் ஆகிறார்கள் பலர். இதை கேட்டு தெரிந்து கொண்டு வாழ பழவேண்டுமாம். மிருககாட்சி சாலைகளில் மிருகங்களை அடைத்து வைத்துவிட்டு வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள். இப்போது தாம் மிருகங்களிலும் விட தாம் பலசாலிகள் என்றும் தம்பட்டம் அடிக்கிறார்கள் சில பார்வையாளர்கள். ஏற்றுத்தான் ஆகவேண்டும் புலியோடு நான் போராடி வெல்வேன் என்று இவர்கள் உறுதி மொழி தந்தாலும் புலிவாழும் ஆபிரிக்கா காடுவரை இவர்களை கூட்டிசெல்ல கூடிய தொகைபணம் என்னிடம் இல்லை..... அதை கடன்பட்டு செய்தாலும். நான் போகும்போது அங்கே காட்டுபுலியும் நிற்கவேண்டுமே???? "நான்தான் கடவுள்" உண்மையைதான் நான் எழுதுகிறேன் ஆனால் எத்தனை பேர் நம்ப போகின்றீர்கள்

வீரவணக்கம் தெரிவிப்பதை பகுதிநேர தொழிலாக கொண்ட, தற்போது வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் வீர செம்மல்(றி)களுக்கு ஒரு வேண்டுகோள்!

வீரர்களை வீரவணக்கம என்று சொல்லி அஞ்சலி செலுத்துவதுதான் மரியாதை போல தெரிகின்றது. இதனாலேயே எங்கள் உறவுகள் தாயகத்தில் யுத்தமுனையில் சண்டையில் மடியும்போது வீரவணக்கம் என்று கூறுகின்றோம். எனனை பொறுத்தவரையில் இப்படி கூறுவது எனக்கு சற்று சங்கடமாக இருந்தது. ஏன் என்றால் ஓர் வீரன் இன்னொரு வீரனுக்கு வீரவணக்கம் என்று கூறுவதுதான் அழகானது. மற்றவர்கள் யுத்தத்தில் ஈடுபடாத உறவுகள் தனியே அஞ்சலிகள் தெரிவிப்பது மட்டுமே சரியாக எனக்கு தெரிந்தது. ஆனாலும்.. பின்பு சிந்தித்து பார்த்ததில் சாதாரண பொதுமக்களும் வீரன் மடியும்போது வீரவணக்கம் என்றுகூறுவது சரியாகவே தெரிந்தது.

மற்றவர்கள் இறக்கவேண்டும் என்று ஒருவரும் விரும்புவது இல்லை. குறிப்பாக போர்புரியும் ஓர் வீரனாக இருந்தாலும் அவன் உயிர்தப்பி நீண்டகாலம் வாழவேண்டும் என்றே உறவுகள் விரும்புவார்கள். ஆனால்.. போர் என்றுவரும்போது எப்படியும் உயிரிழப்புக்கள் வரவே செய்யும். இந்தநிலையில் தமது உயிரை ஆகுதியாக்கியவர்களுக்கு வீரவணக்கம் என்று சொல்லவேண்டிய தேவை இருக்கின்றது. இதை எப்படி பகுதிநேர வேலை என்று சொல்லலாம் என்று விளங்கவில்லை.

இதை எப்படி பகுதிநேர வேலை என்று சொல்லலாம் என்று விளங்கவில்லை.

இப்போது புரியாவிட்டால் பரவாயில்லை, முயற்சி செய்யுங்கள் பின்னராவது புரியும்.

மீனுக்கு கடல்தான் உலகம்! வெளியில் வராதவரை உங்கள் வட்டம்தான் வாழ்க்கை!

"அஞ்சலி', "ஆகுதி", "வீரன்" போன்ற பதங்கள் உங்கள் நிலைமையை நன்கு உணர்த்துகின்றது.

"மற்றவர்கள் இறக்கவேண்டும் என்று ஒருவரும் விரும்புவது இல்லை"...!!!!!! ஆமாம் தேவை ஏற்படாதவரை!

என்னைப் பொறுத்தவரை வீரவணக்கம் "ஒரு முட்டாளின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு புத்திசாலிகளால் செய்யப்பபடும் தந்திரம்"!

நீங்கள் புத்திசாலியாக இல்லாதவிடத்து உங்கள் பெற்றோர்கள் புத்திசாலிகளாக இருக்கின்றனர். அதனால் நீங்கள் அதிர்டசாலியாக இருந்து இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்!

எனவே மைக்கல் ஜக்சனுக்கு இந்தக் கோழையின் வீரவணக்கம்!

(முந்திக் கொண்டு ஒரு மூலையில் தம்மைத்தாமே கோழை என்று அறிவித்து விடுவார்கள் யாழ் கில்லாடிகள்.. அப்போதுதானே "நீ போய் போராடு" போன்ற முட்டாள்தனமான கேள்விகளை எதிர் கொள்ளமுடியும்!... ஆனால் பிறகு "எப்படி ஓரு கோழை விரவணக்கம் செலுத்துவது?", "அதை அந்த வீரனின் ஆத்மா ஏற்றுக்கொள்ளுமா?" என்றெல்லாம் துரோகத்தனமான கேள்விகளையும் கேட்கக் கூடாது! )

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனின் ஒரு கேள்வி நியாயமானது. தம்மை தாயகத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்து மாய்ந்தவர்களுக்கு அவர்கள் மீது குற்றம் சுமத்தி வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து வாங்கியவர்கள் வீரவணக்கம் செய்யத் தகுதி இருக்குதா என்பது நியாயமானதே.

ஆனால் போராட்டத்தில் இணைந்து தாயக விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் முட்டாள்கள் என்பது ஏற்புடையதல்ல. அவர்கள் தாம் வாழா விட்டாலும் பட்டிதொட்டி எங்கும் இருந்து தமிழர்களை கொழும்புக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வாழவாவது வைத்திருக்கிறார்களே அதையிட்டு சாணக்கியன் மகிழ வேண்டும். ஏனெனில் அப்படி ஓடிவந்த தமிழர்களில் அவரும் ஒருவர்.

வீரமரணம் என்பது தம்மை முழுமையாக பொது நோக்கான தமது தாய் மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்து மரணமடைவதால் வருவதாகும். மைக்கல் ஜாக்சன்... பொது மக்களை மகிழ்ச்சிப்படுத்தினார் ஆனால் அவர் தன்னை முழுமையாக மக்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருக்க அர்ப்பணிக்கவில்லை. தனது வாழ்க்கை.. சுயநலம்.. என்று எல்லாத்தையும் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு வீரமரணம் பொருந்தாது.

ஆனால் தமிழர்கள் என்ற மந்தைகளை நம்பி வீரமரணமடைந்த போராளிகள்.. ஒரு வகையில் முட்டாள்கள் தான். ஏனென்றால் எங்கும் எப்படியும் வாழத் தயாரான முழு முட்டாள்களுக்காக அவர்களின் விடுதலைக்காகப் போராடியதும் அதற்காக மாய்ந்ததும்.. அகதி அந்தஸ்துவாங்கிக் கொடுக்க.. சிங்களவனிடம் அடைக்கலம் பெறக் காரணமாய் இருந்ததும்.. அவர்கள் செய்த முட்டாள் தனமே..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனின் ஒரு கேள்வி நியாயமானது. தம்மை தாயகத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்து மாய்ந்தவர்களுக்கு அவர்கள் மீது குற்றம் சுமத்தி வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து வாங்கியவர்கள் வீரவணக்கம் செய்யத் தகுதி இருக்குதா என்பது நியாயமானதே.

ஆனால் போராட்டத்தில் இணைந்து தாயக விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் முட்டாள்கள் என்பது ஏற்புடையதல்ல. அவர்கள் தாம் வாழா விட்டாலும் பட்டிதொட்டி எங்கும் இருந்து தமிழர்களை கொழும்புக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வாழவாவது வைத்திருக்கிறார்களே அதையிட்டு சாணக்கியன் மகிழ வேண்டும். ஏனெனில் அப்படி ஓடிவந்த தமிழர்களில் அவரும் ஒருவர்.

வீரமரணம் என்பது தம்மை முழுமையாக பொது நோக்கான தமது தாய் மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்து மரணமடைவதால் வருவதாகும். மைக்கல் ஜாக்சன்... பொது மக்களை மகிழ்ச்சிப்படுத்தினார் ஆனால் அவர் தன்னை முழுமையாக மக்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருக்க அர்ப்பணிக்கவில்லை. தனது வாழ்க்கை.. சுயநலம்.. என்று எல்லாத்தையும் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு வீரமரணம் பொருந்தாது.

ஆனால் தமிழர்கள் என்ற மந்தைகளை நம்பி வீரமரணமடைந்த போராளிகள்.. ஒரு வகையில் முட்டாள்கள் தான். ஏனென்றால் எங்கும் எப்படியும் வாழத் தயாரான முழு முட்டாள்களுக்காக அவர்களின் விடுதலைக்காகப் போராடியதும் அதற்காக மாய்ந்ததும்.. அகதி அந்தஸ்துவாங்கிக் கொடுக்க.. சிங்களவனிடம் அடைக்கலம் பெறக் காரணமாய் இருந்ததும்.. அவர்கள் செய்த முட்டாள் தனமே..! :icon_mrgreen:

இதை சுருக்கமாக கூறுவதென்றால்.......

கொழும்பில் இருந்து சிங்களவனுக்கு கு... கழுவி சில எலும்புதுண்டை பெறுவதற்கும். மாவீரர்களின் உயிர்தியாகமே முதன்மை காரணம். இல்லாவிடின் எலும்பு வீசி கு..... கழுவுவிக்க வேண்டிய எந்த தேவையும் சிங்களவனுக்கு வந்திருக்காது.

(ஆனால் புத்திசாலிதனமாக பழியை யார்மீதோ போடுகிறார்கள் சில துரோக துணைவர்கள். புரிந்து கொள்ளல் என்பது அவரவர் அறிவை பொறுத்தது)

ஒரு சிறந்த கலைஞனுக்கு கடைசி வணக்கம் செலுத்தும் திரியில் ......

எதைஎதை யோ கதைபதற்கு என்னை மன்னிக்வும். ஆனால் எதையுமே தமது வாழ்விற்காக வித்துவிட துடித்துகொண்டிருக்கும் சிலரை எல்லா எடங்களிலும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தாயையே விற்ற துணிந்தவருக்கு ஒரு கலைஞனின் பெருமையை விற்வதொன்றும் புதிதல்ல......

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலை என்பதை புலிகள் என்கிற அமைப்புக்கு அப்பால் மக்களே முதலில் தெரிவு செய்திருந்தனர். ஆகவே இது மக்கள் கோரிக்கையே தவிர புலிகளின் கோரிக்கை அல்ல. அதை அடைவதற்கு ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தது புலிகள் மட்டுமல்ல.. இன்னபிற இயக்கங்களும்தான். இன்றையை ஜனநாயகவாதி டக்ளஸ் ஐயா கூட ஆயுதத்தில் நம்பிக்கை வைத்துள்ளவர்தான். ஆகவே புலிகள் ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்ததையும் குறை சொல்ல முடியாது.

அப்படியானால் பிழை எங்கே வந்தது? புலிக‌ளாகி போராட‌ப் புற‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ஒருபுற‌ம் என்றால் நாடோடியாகிப் பிழைப்பு ந‌ட‌த்த‌ புற‌ப்ப‌ட்ட‌து இன்னொரு கூட்ட‌ம். அது பெருங்கூட்ட‌ம்..

வெளிநாட்டுக்கு அகதியா ஓடினவன் ஓடினான்..

படிக்க விசா எடுத்து ஓடினவன் ஓடினான்..

வேலைக்கு விசா எடுத்து ஓடினவன் ஓடினான்..

வெளியே ஓட வக்கில்லாதவன் கொழும்புக்கு ஓடினான்..

வெளிநாட்டுக்கு ஓடினவன் பொருளுதவியாவது செய்தான். நடுரோட்டில் இறங்கியும் போராடிப் பார்த்தான்.. ஆனால் செவிட்டில் அறைந்தமாதிரி ஒரு கேள்வி வந்து விழுந்தது ஒட்டுமொத்தத் தமிழனுக்கும்.. கொழும்பில் வாழும் தமிழனைப் போல ஒற்றுமையாக உங்களால் வாழ முடியாதா??

பிறகென்ன‌.. புலிகளைப் பயங்கரவாதிகள் ஆக்க நல்ல ஒரு காரணம்.. புலிகளை தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அல்ல என்று கூற மிக நல்லதொரு காரணம்.. பயங்கரவாதத்துக்கு எதிரான போரை உடனே ஆரம்பித்துவிட வேண்டியதுதானே..?

போராளிகள் மடிந்தார்கள்.. வீரவணக்கங்கள் மலிந்தன..! போராட்டத்தைச் சிதைத்த‌ திருப்தியுடனும் கடல்தாண்ட முடியாத புகைச்சலுடனும் வீரவணக்கம் தெரிவித்தன கொழும்பின் குகைவாழ் கூட்டம்... ஜாக்சனுக்கு..! :icon_mrgreen:

சாணக்கியன் அண்ணை, எனக்குத் தெரிஞ்சு இயக்கத்தில சேர்ந்து போராடச் சென்ற பலரும் சிறீ லங்கா அல்லது இந்திய அரசின் கொடூர செயல்களால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். இவர்களை புத்திசாலிகள் ஒருவரும் உசுப்பேத்தி இயக்கத்தில சேர தூண்டவில்லை.

டங்கு, நல்லா வெட்டியாடுறீங்கள்! வாழ்த்துகள்.

பழியை கொழும்புத்தமிழரில போடுறதால உங்களுக்கு நிம்மதி என்றா சந்தோசம். :icon_mrgreen: ஆனா அது நிலைக்காது. விரைவில உங்களுக்கு வன்னிச்சனம் வைக்கப்போகுது ஆப்பு! பிறகு மட்டக்களப்புச்சனம், தமிழ்நாட்டுச்சனம், கொழும்புச்சனம், யாழ்பாணச்சனம், வன்னிச்சனம் எல்லாம் கெட்டது, நீங்கள் மட்டும் நல்லது என்று கூறி தனிச்சுப்போவியள். காரண காரியம் கொள்கை கோட்பாடு எல்லாம் சரிதான், ஆனா அது யதார்த்தத்தோட பயணிக்க வேணும்.

ஆனால் நிஜம்தான் எப்பவும் வெல்லும். இப்பவும் அதுதான் வென்றது! இனியும் அதுதான் வெல்லும்! நீங்கள் உண்மைகள் கசப்பானவை என்பதால அதை ஒதுக்கிவிட்டு, சுகமான பொய்களை பேசிக் கொண்டு திரியிறீங்கள். பொய்யை வைச்சு எவ்வளவு வெட்டியாடினாலும் கடைசியில அது தோற்கும். காலம் என்கிற கடவுள் உண்மையை உங்களுக்கு திருப்பி திருப்பி படிப்பிக்கும். பிறகு மனஉளைச்சல்தான் மிஞ்சும்.

கலைஞன், இதைப்பற்றி பாதுகாப்பாக வேறதிரியில பிறகு கதைக்கவாறன்? பிறகு நான் கனக்க கதைக்கப் போய் மோகன் கடுப்பானார் என்றால், இலகுவாக தலைப்புக்கு சம்பந்தமில்லை என்று தூக்கிப்போடுவார். பிறகு எனக்கும் தேவையில்லாத மனஉழைச்சல்!

மேல நான் முட்டாள் (அல்லது அப்பாவிகள்) என்று குறிப்பிட்டது - தன்னை சுற்றி பின்னப்பட்டிருக்கிற சதியை புரிஞ்சு கொள்ள முடியாத ஆக்கள். அல்லது புரிஞ்சும் அதிலிருந்து தப்ப ஆற்றலும், வாய்ப்புகளும் கிட்டாத ஆக்கள். அவர்கள் ரொம்பபபபப நல்லவங்கள். அதுதான் அவர்களின் பிரச்சனையே.

அடேயப்பா இதிலயும் புலிஅரசியலா ?மைக்கலின் மரணத்தை கேள்விப்பட்டு சிலர் தற்கொலை செய்துள்ளனராம் அதைப்பற்றியும் என்கன்ட அரசியலில் புகுத்தி கதை விடுவோம்

ஜாக்சனின் கடைசிக் கோலம்-முடி கொட்டி, மூக்கு நசுங்கி, எலும்பும் தோளுமாய் இருந்த பரிதாபம்!

லாஸ் ஏஞ்சலெஸ்:

பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை லீக் ஆகியுள்ளது. முடி கொட்டி வழுக்கைத் தலையுடன், வயிற்றில் எந்தவித உணவுப் பொருளும் இல்லாமல், வெறும் மருந்துகள் மட்டுமே இருந்ததாகவும், மிகப் பரிதாபமான கோலத்தில், வெறும் எலும்புக் கூடாக ஜாக்சன் காணப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த தி சன் பத்திரிக்கை ஜாக்சனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரங்களை கசிய விட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் அதிர்ச்சியூட்டும் வகையி்ல் உள்ளது.

உலகையே தனது ஆட்டத்தாலும், திறமையாலும் கட்டிப் போட்டு வைத்திருந்த ஜாக்சன், கடைசி நாட்களில் எலும்பும் தோளுமாய், எடை குறைந்து போய், தலையில் முடி கொட்டி வழுக்கைத் தலையுடன் பரிதாபமான நிலையில் இருந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரங்கள் ..

கிட்டத்தட்ட ஒரு எலும்புக் கூட்டைப் பார்ப்பது போலவே இருந்தது ஜாக்சனின் உடல். அந்த அளவுக்கு எடை குறைந்து போய் மிகவும் மெலிந்து காணப்பட்டார் ஜாக்சன்.

தலையில் முடி கொட்டி வழுக்கையாக காணப்பட்டது. இதை மறைக்க அவர் விக் அணிந்து வந்துள்ளார். அவரது உடல் முழுக்க ஊசி போட்ட அடையாளங்கள் காணப்பட்டன.

மைக்கேல் ஜாக்சன் இறந்தபோது அவரது உடல் எடை வெறும் 50 கிலோவாக மட்டுமே இருந்தது. அவரது வயிறு காலியாக இருந்தது. அதில் கடைசியாக சாப்பிட்ட சில மாத்திரைகள் மட்டுமே இருந்தன.

ஜாக்சன் தினசரி ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். இதனால்தான் எடை வெகுவாக குறைந்து போய் விட்டது. சில நேரம் சாப்பிடக் கூட மாட்டாராம்.

தினசரி மூன்று வேளை அவர் பெயின் கில்லர்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். இவை ஊக்கமருந்து கலந்தவை. இந்த ஊசியை தானே போட்டுக் கொள்வது வழக்கம் எனத் தெரிகிறது. இதன் காரணமாகவே உடலின் பல இடங்களிலும் ஊசி போடப்பட்ட அடையாளங்கள் தெரிகின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் 13 முறை காஸ்மெட்டிக் அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளார் ஜாக்சன். அவற்றுக்கான அடையாளத் தழும்புகளும் உடலில் உள்ளன.

ஜாக்சனின் உயரம் 180 செமீ ஆகும். கடைசியாக அவர் பயன்படுத்திய பெயின் கில்லர் ஊசி மருந்துதான் மரணத்திற்குக் காரணமாக இருக்கக் கூடும். இதை உறுதி செய்ய டாக்சிகாலஜி சோதனைகள் செய்யப்படவுள்ளன.

பெப்சி விளம்பரத்தின்போது நடந்த சிறிய தீவிபத்தில் அவரது இடது காதுக்கு மேல் பகுதி முடி கருகிப் போய் விட்டது. அதுதொடர்பான அடையாளம் காணப்பட்டது.

ஜாக்சனின் மார்புப் பகுதியில் நான்கு ஊசி போட்ட அடையாளங்கள் உள்ளன. மாரடைப்பு ஏற்பட்டபோது அவருடைய இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க போடப்பட்ட அட்ரீனலின் ஊசியாக அவை இருக்கக் கூடும்.

ஜாக்சன் மாரடைப்பு ஏற்பட்டு துடித்தபோது அவரை பிழைக்க டாக்டர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சியின்போது அவரது விலா எலும்பில் சில முறிந்துள்ளன.

அவரது முழங்கால்கள், கன்னம் ஆகியவற்றில் லேசான காயங்கள் உள்ளன. இவற்றுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. முதுகில் சில வெட்டுக் காயங்களும் காணப்படுகின்றன.

ஜாக்சனின் வலது பக்க மூக்கு கிட்டத்தட்ட நசுங்கிப் போய் விட்டது. மூக்கின் வலது மற்றும் இடது புறங்களை இணைக்கும் எலும்புப் பகுதியையே காணவில்லை.

பிளாஸ்டிக் சர்ஜரியால் வந்த வினை இது என்று கருதப்படுகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஜாக்சன் துடித்ததை நடிப்பு என நினைத்த மகன்..

இதற்கிடையே ஜாக்சன் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து துடித்தபோது, அதை நடிப்பு என நினைத்துள்ளார் அவரது மூத்த மகன் பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்.

இதுகுறித்து ஜாக்சனின் பயோகிராபர் ஸ்டேஸி பிரவுன் கூறுகையில், தனது தந்தை ஏதோ நடிக்கிறார் என்று பிரின்ஸ் நினைத்து விட்டான். அவனுக்கு உண்மை என்னவென்று புரியவில்லை. பிறகு டாக்டர்கள் வந்து பார்த்தபோதுதான் ஏதோ நடக்கிறது என்று அவனுக்குப் புரிந்தது.

அதன் பின்னர் ஜாக்சனுக்கு அருகிலேயே இருந்து அனைத்தையும் கூர்ந்து கவனித்தான் பிரின்ஸ் என்று கூறியுள்ளார்.

ThatsTamil

டங்கு, நல்லா வெட்டியாடுறீங்கள்! வாழ்த்துகள்.

பழியை கொழும்புத்தமிழரில போடுறதால உங்களுக்கு நிம்மதி என்றா சந்தோசம். :icon_mrgreen: ஆனா அது நிலைக்காது. விரைவில உங்களுக்கு வன்னிச்சனம் வைக்கப்போகுது ஆப்பு! பிறகு மட்டக்களப்புச்சனம், தமிழ்நாட்டுச்சனம், கொழும்புச்சனம், யாழ்பாணச்சனம், வன்னிச்சனம் எல்லாம் கெட்டது, நீங்கள் மட்டும் நல்லது என்று கூறி தனிச்சுப்போவியள். காரண காரியம் கொள்கை கோட்பாடு எல்லாம் சரிதான், ஆனா அது யதார்த்தத்தோட பயணிக்க வேணும்.

ஆனால் நிஜம்தான் எப்பவும் வெல்லும். இப்பவும் அதுதான் வென்றது! இனியும் அதுதான் வெல்லும்! நீங்கள் உண்மைகள் கசப்பானவை என்பதால அதை ஒதுக்கிவிட்டு, சுகமான பொய்களை பேசிக் கொண்டு திரியிறீங்கள். பொய்யை வைச்சு எவ்வளவு வெட்டியாடினாலும் கடைசியில அது தோற்கும். காலம் என்கிற கடவுள் உண்மையை உங்களுக்கு திருப்பி திருப்பி படிப்பிக்கும். பிறகு மனஉளைச்சல்தான் மிஞ்சும்.

கலைஞன், இதைப்பற்றி பாதுகாப்பாக வேறதிரியில பிறகு கதைக்கவாறன்? பிறகு நான் கனக்க கதைக்கப் போய் மோகன் கடுப்பானார் என்றால், இலகுவாக தலைப்புக்கு சம்பந்தமில்லை என்று தூக்கிப்போடுவார். பிறகு எனக்கும் தேவையில்லாத மனஉழைச்சல்!

மேல நான் முட்டாள் (அல்லது அப்பாவிகள்) என்று குறிப்பிட்டது - தன்னை சுற்றி பின்னப்பட்டிருக்கிற சதியை புரிஞ்சு கொள்ள முடியாத ஆக்கள். அல்லது புரிஞ்சும் அதிலிருந்து தப்ப ஆற்றலும், வாய்ப்புகளும் கிட்டாத ஆக்கள். அவர்கள் ரொம்பபபபப நல்லவங்கள். அதுதான் அவர்களின் பிரச்சனையே.

எங்கை அடிச்சாலும் நாங்கள் காலை துக்கி போட்டு, வாலை ஆட்டுவம் எண்ட சனம் இருக்கு எண்டதுக்கு நீங்கள் நல்ல உதாரணம்...

வன்னியிலை , யாழ்ப்பாணத்திலை, மட்டக்களப்பிலை, வவுனியாவிலை, திருகோணமலையிலை எண்டு இருக்கிற சனம் எல்லாம் அடைக்க பட்டு வெளியாலை தொடர் இல்லாமல் இருந்தாலும் வாயை திறக்க ஏலாமல் ஒரு வெளிநாட்டு ஊடகவியலாளர் கூட வர முடியாத நிலையிலை இருக்குதுகள்.... ஆனால் கொழும்பிலை தமிழருக்கு உந்த பிரச்சினை இல்லை காரணம் ஏன் எண்டு தெரியுமோ...??

கொஞ்சம் தரவு தாறன் பிடிக்க சுகமா இருக்கும்... சமாதான காலத்திலை இராணுவ கட்டுப்ப்பாட்டு வவுனியாவிலை, மட்டக்களப்பிலை, திருகோணமலையிலை ( சிங்களவன் வாழும் பிரதேசங்கள்) யாழ்ப்பாணத்திலை எல்லாம் சுந்ததிரம் வேண்டும் எண்று சனம் எல்லாம் பொங்குதமிழுக்கு லட்ச்சக்கணக்கிலை கூடி பிரகடனம் செய்தது ஆனால் கொழும்பிலை அப்படி ஒண்டும் நடக்க இல்லை... அதிலையும் கொழும்பிலைதான் 10 லட்ச்சம் தமிழர்கள் இருக்கினம்...

இண்றைய திகதி வரைக்கும் புலிகளின் எஞ்சி இருக்கும் போராளிகள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியிலை மக்களோடை மக்களாக நடமாடுகிறார்கள்... கொழும்பிலை அப்படி முடியுமா..??

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேயப்பா இதிலயும் புலிஅரசியலா ?மைக்கலின் மரணத்தை கேள்விப்பட்டு சிலர் தற்கொலை செய்துள்ளனராம் அதைப்பற்றியும் என்கன்ட அரசியலில் புகுத்தி கதை விடுவோம்

ஊரிலையெல்லாம் நாங்கள் ஒரு செத்தவீட்டுக்கு போனால் அங்கை செத்தவரைப்பற்றி கனக்க கதைக்கமாட்டம்.

அப்புடியிருந்த மனுசன் இப்புடி போட்டுதே எண்டு தொடங்கி ..............................

கடைசியிலை பக்கத்து ஊர் பொட்டைக்கும் பொடியனுக்கும் ஏதோ இதுவாம் எண்டு கதை முடியும்.இல்லாட்டி உண்டாகிட்டுதாம் எண்டும் கதை வரும்?

செத்தவீட்டுக்கு வாற ஒருசிலசனத்துக்கு கடைசியிலை ஒப்பாரி வைக்கேக்கைதான் தெரியும் தாங்கள் செத்த வீட்டிலை நிக்கிறமெண்டு?

அது மாதிரித்தான் இதுவும்.

ஒரு கருத்தாடல் செய்யும் போது பலதும் பத்தும் வரத்தான் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

Debbie Rowe still deciding whether to seek custody of kids she had with Jackson: lawyer

Module body

mickelandhifwife.jpg

By Anthony Mccartney, The Associated Press

LOS ANGELES - An attorney says Deborah Rowe has not reached a final decision on whether to seek custody of the two children she had with Michael Jackson.

Rowe's attorney, Eric M. George, spoke Thursday on a telephone conference call but declined to take questions.

He did not say why a delay in a guardianship hearing had been requested by him and attorneys for Katherine Jackson.

Katherine Jackson has temporary guardianship of her son's three children, who range in ages from seven to 12.

Rowe is the mother of Jackson's two oldest children, 12-year-old Michael Joseph Jr., known as Prince Michael and 11-year-old daughter Paris Michael Katherine

ஜாக்சனின் கடைசிக் கோலம்-முடி கொட்டி, மூக்கு நசுங்கி, எலும்பும் தோளுமாய் இருந்த பரிதாபம்!

லாஸ் ஏஞ்சலெஸ்: ThatsTamil

உங்கள் தகவல்களிற்கு நன்றி சாணக்கியன் அண்ணா. அதாவது நீங்கள் வாழ்க்கையில் போராடியவர் என்கின்ற வகையில் பார்க்கின்றீர்கள் போல இருக்கிறது.

உலகில் குறிப்பிட்ட ஓர் துறையில் அதுவும் இசையில் முதன்நிலைக்கு வருவது அது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. மேலும்... ஜக்சன் அவர்கள் தனது தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. வழக்கு ஒன்றில் குற்றச்சாட்டப்பட்டு தனது ஆயுளை சிறையில் கழிக்கவேண்டிய ஆபத்துக்குகூட அவர் உள்ளாகி இருந்தார்.

இப்படிப் பார்க்கும்போது பலவிதமான இடையூறுகளை எதிர்கொண்டு போராடிய ஜக்சனை ஓர் வீரனாகவும் பார்க்கலாம். அண்மையில் ஓர் செய்திப்பதிவில் இருந்தது மிகச்சிறந்த ஓர் அறிவாளிதான் ஜக்சன் தயாரித்ததுபோன்ற இறப்புக்கு பின் தனது சொத்துக்களை வழங்குவது பற்றிய ஓர் உயிலை தயாரிக்கமுடியும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜக்சன் தனது உயிலை மிகவும் நுணுக்கமாக தயாரித்து இருந்தார் என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நீங்கள் எப்படியான உணர்வுடன் அப்படி எழுதினீர்கள் என்று தெரியாது. ஆனாலும்.. ஜக்சனுக்கு வீரவணக்கம் என்று சொல்லிய உங்கள் கருத்துடன் நானும் உடன்படுகின்றேன்.

செத்த வீட்டிலை சிரிக்கக் கூடாது என்று சொல்வார்கள் .

ஆனாலும் ........ இதை வாசிக்க சிரிப்பு வந்து விட்டது . மன்னிக்கவும் .

ஜக்சன் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு அணுஅணுவாக் வதைக்கப்பட்டதை நீங்கள் பார்த்தீர்களோ தெரியாது. ஆனால்.. நான் அந்த வழக்கை பலகாலமாக தொலைக்காட்சியில் பார்த்து வந்தேன். வழக்கு தீர்ப்பு வழங்கும் நாளில் வட அமெரிக்க தொலைக்காட்சிகள் அனைத்த்தும் நீதிமன்றத்தை நோக்கி முன்னிலைப்படுத்தப்பட்டு இருந்தன. ஜக்சனின் வரலாறு அன்றுடன் இருண்டுவிடப்போகின்றது என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் அவர் ஒருவரும் எதிர்பார்க்காதபடி குற்றம் அற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார்.

அந்தநாள் இங்கு போகும் இடம் வரும் இடமெல்லாம் இதே கதையே இருந்தது. வீரன் என்பவன் வெறும் ஆயுதம் தூக்கி போராடுபவன் மாத்திரம் அல்ல என்று நான் நினைக்கின்றேன். ஜக்சனுக்கு எவ்வளவு புகழ் கிடைத்ததோ அதற்கும் பலமடங்கு மேலாக பல்வேறுவிதமான தொல்லைகள் பலரால் கொடுக்கப்பட்டது. இதற்கான முக்கிய காரணம் அவரது பணத்தை சுருட்டிக்கொள்வதுதுதான். அவர் இறுதியில் நோயாளியாகி மடிந்தால்கூட.. துறைசார் அளவில் போராடி இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

We are the world:

They don't care about us:

Beat it:

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனின் ஒரு கேள்வி நியாயமானது. தம்மை தாயகத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்து மாய்ந்தவர்களுக்கு அவர்கள் மீது குற்றம் சுமத்தி வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து வாங்கியவர்கள் வீரவணக்கம் செய்யத் தகுதி இருக்குதா என்பது நியாயமானதே.

ஆனால் போராட்டத்தில் இணைந்து தாயக விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் முட்டாள்கள் என்பது ஏற்புடையதல்ல. அவர்கள் தாம் வாழா விட்டாலும் பட்டிதொட்டி எங்கும் இருந்து தமிழர்களை கொழும்புக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வாழவாவது வைத்திருக்கிறார்களே அதையிட்டு சாணக்கியன் மகிழ வேண்டும். ஏனெனில் அப்படி ஓடிவந்த தமிழர்களில் அவரும் ஒருவர்.

வீரமரணம் என்பது தம்மை முழுமையாக பொது நோக்கான தமது தாய் மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்து மரணமடைவதால் வருவதாகும். மைக்கல் ஜாக்சன்... பொது மக்களை மகிழ்ச்சிப்படுத்தினார் ஆனால் அவர் தன்னை முழுமையாக மக்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருக்க அர்ப்பணிக்கவில்லை. தனது வாழ்க்கை.. சுயநலம்.. என்று எல்லாத்தையும் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு வீரமரணம் பொருந்தாது.

ஆனால் தமிழர்கள் என்ற மந்தைகளை நம்பி வீரமரணமடைந்த போராளிகள்.. ஒரு வகையில் முட்டாள்கள் தான். ஏனென்றால் எங்கும் எப்படியும் வாழத் தயாரான முழு முட்டாள்களுக்காக அவர்களின் விடுதலைக்காகப் போராடியதும் அதற்காக மாய்ந்ததும்.. அகதி அந்தஸ்துவாங்கிக் கொடுக்க.. சிங்களவனிடம் அடைக்கலம் பெறக் காரணமாய் இருந்ததும்.. அவர்கள் செய்த முட்டாள் தனமே..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜக்சனுக்கு வீரவணக்கம்!

:icon_idea::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சின்ன ரவுடி யாரிட்டையும் பிரச்சனைக்கு போக்க மாட்டான்

பிரச்சனை என்று வந்திட்டா சும்மா விடவும் மாட்டான்

ரவுடி

இவ்வளவு அழிஞ்சபிறகும் ரஜனி ஸ்ரையிலிலை வசனம் வேறை ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு அழிஞ்சபிறகும் ரஜனி ஸ்ரையிலிலை வசனம் வேறை ^_^

என்ன குமாரசாமி அண்ணை இப்படி சொல்லி போட்டியல்..

அவன் படத்தில அம்மா என்று கூப்பிடுவான் நாங்களும் எங்கட அம்மாவை அம்மா என்று கூப்பிட்டா நாங்க என்ன ரஜனி ஸ்ரையிலை பாத்துத் தான் நாங்களும் அம்மா என்று கூப்பிட்டோம் என்று சொல்லுவிங்களா

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாளில் மைக்கல் எலும்பும் தோலுமானது நம்பகூடியதாக இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.