Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்றுதான் அண்ணா வீட்டில் இருந்து எங்கள் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன் வழியில் செல்லும் பேருந்து நிறுத்தப்பட்டது எல்லோரையும் சோதனையிட்டார்கள் நானும் கொஞ்சம் கறுப்பாக இருப்பதால் என்னையும் கீழ் இறக்கு சோதனையிட்டார்கள் நீ மட்டக்களப்பை சேர்ந்தவன் உனக்கு என்னடா இங்கு வேலை என்று கேட்டு கேட்டு விசாரித்தார்கள் நானும் என் அண்ணனை பார்க்கதான் திருகோணமலை வந்திருக்கிறேன் என்று சொன்னேன் வாடா உன்னை விசாரிக்க வேணும் என்று சொல்லி முகாமுக்குள் கூட்டி சென்றனர் .அங்கு சென்ற எனக்கு கை கால்கள் எல்லாம் உதறியது .யாரோ ஒருவர் முன்னால் நான் நிறுத்தப்பட்டேன் அவருக்கு கண்கள் தெரிய முகங்கள் மறைக்கப்பட்டிருந்தது.

என்னை முன் நிறுத்தி இவனா என்றார்கள் அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை அண்ணனுக்கும் தெரியப்படுத்தவில்லை அப்படிவசதியும் அங்கு இல்லை .நான் அவர் முன்னே நின்று கொண்டிருந்தேன் அப்போது அவர்கள் பேசி கொள்வதை உணர்ந்து கொண்டேன் யாரோ ஒரு பெரிய போலிஸ் அதிகாரியை சுட்டுபோட்டார்களாம் அதுக்காகதான் போல் விசாரிக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன் பின்பு அவர்கள் வந்தார்கள் அந்த பொம்மையானவருக்கு அடித்து கேட்டார்கள் .அவனும் ஒன்றும் சொல்லவில்லை மனதில் இருந்த பயம் போய் விட்டது எங்கோ இவன் அடிதாங்காமல் சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் இருந்தேன் சொல்லவில்லை அவர்கள் என்னை விடுவதாயில்லை கொஞ்ச நேரம் கழிந்த பின் வேறு ஒருத்தன் அந்த பொம்மையானவருக்கு அடித்தான் அவனும் அடிதாங்க முடியாமல் என்னை சும்மா காட்டி கொடுத்துவிட்டான் எதுவுமே செய்யாத நான் அன்று கைதியாக்கப்பட்டேன் .விசாரணை என்று போறவாறவன் எல்லாம் அடித்தான் பின் அங்கிருந்து வேறி இடத்திற்கு கூட்டி சென்றனர் ஆனால் அது எந்த இடம் என்று நான் அறியவில்லை .என்னை கைது பண்ணியது என் வீட்டுக்கும் தெரியாது அண்ணனுக்கும் தெரியாது .

நானும் அடிச்சுப்போட்டு விடுவார்கள் என்று எண்ணியிருதேன் அவர்கள் கூட்டி சென்றது அந்த செத்த போலிஸ்காரனின் தம்பி உள்ள சிறைக்கு அவந்தான் அங்கு உயரதிகாரியாக இருந்தான் என்னை அவன் முன் நிறுத்தினார்கள் சேட்டை கழட்டினார்கள்,ரவுசரையும் யட்டியையும் கழட்டினார்கள் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை அடிக்கதொடங்கினார்கள் ஒரு மணிநேரம் அடித்தார்கள் எனக்கு எதுமே தெரியாமல் இருந்தது பின்பு வாயால் இரத்தம் வழிந்த நான் ஒரு அறைக்குள் கிடப்பதை உணர்தேன் உடம்பில் உயிர் இருந்தும் உறுப்புக்களை அசைக்கமுடியாமல் இருந்தது.கண்ணை முழித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தேன் என்னைப்போல் இரண்டு பேர்கள் உள்ள் இருப்பதை கண்டேன் பேச முடியவில்லை என்னால் அன்று இரவு நாய்க்கு பாண் துண்டு எறிவது போல் பாண் துண்டை எறிந்தார்கள் என்னால் சாப்பிட முடியவில்லை தூங்கிவிட்டேன்

அடுத்தநாள் காலை அவர்களை பார்க்கமுடிந்தது முடிகள் வெட்டவில்லை தாடிகள் வளர்ந்த இளம் வாலிபர்கள் அவர்களும் அம்மணமாக இருந்தார்கள் இவர்களுக்கு என் நிலமைதாம் என்று எண்ணியுருந்தேன் அப்போதும் கூட அவர்கள் என்னுடன் பேசவில்லை காரணம் தெரியவில்லை. நானாக போய் பேச தம்பி பேசாதே பிறகு உனக்கும் எங்களுக்கும் தொடர்பு இருக்கு என்று அடிப்பானுகள் என்று சொன்னார் அழகான வாலிபர்கள் அம்மணக்கட்டையாக ஆளுக்கு ஒருமூலையில் உட்கார்ந்திருந்தோம் எனக்கு அந்த அறையை பார்த்தபின்பே தெரியவந்தது சித்திரவதை முகாமாக இருந்தது அங்குள்ள சுவர்களில் வர்ண பூச்சுக்கு பதிலாக இரத்த பூச்சுக்களாக இருந்தது

எனக்கு அதை பார்த்ததும் வயிற்றை கலக்க அண்ண வெளியில போன வேணும் என்று சொன்னேன் அவரோ என்னை பார்த்துவிட்டு ஒரு போத்தலும் சொப்பின் பையும் கொடுத்தார் எல்லாமே இங்கதான் என்று சொன்னார் யாராவது வந்தால் மட்டும்தான் வெளியில் செல்லலாம் என்றார் எனக்கு வந்ததும் நின்றுவிட்டது அவர்களை பற்றி விசாரிக்க விரும்பினேன் ஆயுதம் கடத்தினோம் என்று உள்ள போட்டதாக சொன்னார்கள் நானும் எனக்கு நடந்ததை சொல்லி ஆறுதல் அடைந்து கொண்டோம் அன்றி இரவு போதையில் வந்த அவர்கள் சிங்களத்தில் திட்டினார்கள் என்னை பார்த்து அவன் எங்கட ஆட்களை சுட்டால் இப்படித்தான் உங்களை சாகடிப்போம் என்று உரக்க கத்தினான் பின்பு என்னை இழுத்துக்கொண்டு போய் கதிரையில் உட்காரவைத்து உரோமம்[முடி] புடுங்கினார்கள் உடம்பில் எங்க முடியிருக்குதோ அங்கெல்லாம் புடுங்கினார்கள் அப்போது நான் என்னை சுட்டுவிடுங்கள் என்று கத்தினேன் விடவில்லை மேசையில் படுக்க போட்டு மண்ணால் நிரப்பப்ட்ட பைப்புகள்[குழாய்] பின் பக்கத்தை பதம் பார்த்தன ஆத்திரம் தீரும் வரை அடித்து விட்டு பின்பு அந்த அறையில் கொண்டு பிணமாக வீசினார்கள்

இப்படி மூன்று மாதங்கள் ஓடின எங்களுக்கு அடித்த காரணத்தினால் என்னவோஅந்த பொறக்கி நாய்க்கு பதவி உயர்வி கிடைக்க வேறு ஒருத்தர் அதிகாரியாக வந்து எங்களுக்கு ஆடை கொடுத்து கைதியாக நடத்தினார் இதுவரை எங்கள் குடும்பத்திற்கு நான் உயிருடன் இருப்பது தெரியாது அவர்களும் தேடியிருப்பார்கள் நினைக்கிறேன் எதுவுமே செய்யாத என்னை போல் இன்னும் எத்தனை தமிழ் இளைஞர்கள் இதே போல் பெயர் தெரியாத வதைமுகாம்களுக்குள்.

சில ஆள்காட்டிகளால் வந்த வினையை எண்ணி வருந்துகிறோம்வதை முகாமிலிருந்து

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வடித்த விதம் நன்று .ச ற்று முன்னிய காலம் என நினைகிறேன்.

தற்போது இதிவிட மோசமாக் நடக்கிறது .தமிழனின் தலை விதி மாறாதா ?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு. கடந்த காலங்கள் மறக்கப்பட முடியாத பல அனுபவங்களை தந்திருக்கின்றன. அவை பதியப்பட வேண்டும் வரலாற்றில்..!

ஊரில வயில் வெளிக்க ஆட்காட்டி குருவி ஒன்று இருப்பதாகச் சொல்வார்கள். அது ஆட்களை (மனிதர்களை) கண்டவுடன் கத்தி ஒலி எழுப்புமாம்.

நான் குட்டிப் பையனா இருக்கேக்க.. ஸ்கூல் போன எங்களை இந்திய ஆமிக்காரன் பிடிச்சு ஆட்காட்டிக்கு (தலையாட்டி என்று தான் ஊரில் சொல்வார்கள்) முன்னால விட்டான். நான் என்ன செய்தன்.. சென்ரில இருந்த அந்த பொந்துக்குள்ளால பூந்து பாத்தன். ஆட்காட்டி பயந்து போய் முகத்தை திருப்பிட்டான். ஆமிக்காரன் சிரிச்சுக் கொண்டே நின்றான். அது பயமறியதாக காலம் என்பதால். அப்படி செய்ய முடிஞ்சுது. இப்ப.. செய்தா ஏறி மிதிப்பான்..!

ஆட்காட்டிகள் யாருமல்ல.. நம்மோட கூட இருந்தே நமக்கே குழிபழிக்கிற நம்ம ஆக்கள் தான்..! :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜீ எவ்வளவு சொகங்கள் எம்மவ்ருக்கு.இப்படி பல சம்பவங்கள் எம்மினத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜீ நீங்கள் இப்படி அடி வாங்கி இருக்குறீர்களா?...நல்ல பதிவு.

பதிவுக்கு நன்றி முனிவர் ஜீ :icon_idea:

சமீபத்தில் ஒருவரை எஸ்-லோன் பைப்பில் சீமெந்து நிரப்பி தசை கிழிய சிங்கள புலநாய்வுத்துறை அடித்ததாக உறவினர் மூலம் அண்மையில் கேள்விப்பட்டேன்... இப்படி எத்தனை ஆயிரம் அப்பாவிகளை வதைத்திருப்பார்கள்... வதைக்கிறார்கள்.... :lol:

உலகில் மிருகங்கள், பறவைகள் வதைப்புக்குக் கூட நீதி நியாயம் பார்த்து தண்டனை குடுக்கிறார்கள்... ஆனால் தமிழர் வதைபடுவதை தான், உலகமே கைகட்டி வாய் பார்க்கிறது...! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையை வடித்த விதம் நன்று .ச ற்று முன்னிய காலம் என நினைகிறேன்.

தற்போது இதிவிட மோசமாக் நடக்கிறது .தமிழனின் தலை விதி மாறாதா ?

நன்றி நிலாமதி அக்கா உங்கள் கருத்திற்கும்[காலம் ஒரு நாள் மாறும்]

nedukkalapoovan Posted Yesterday, 06:15 PM

நல்ல பதிவு. கடந்த காலங்கள் மறக்கப்பட முடியாத பல அனுபவங்களை தந்திருக்கின்றன. அவை பதியப்பட வேண்டும் வரலாற்றில்..!

ஆட்காட்டிகள் யாருமல்ல.. நம்மோட கூட இருந்தே நமக்கே குழிபழிக்கிற நம்ம ஆக்கள் தான்..!

சரியாக சொன்னீர்கள் நெடுக்ஸ் நம்மவர்கள்தானே நமக்கு குழி பறிப்பது[

தலையாட்டிகளாக இருப்பது நம்மவர்கள்தான்]

putthan Posted Yesterday, 08:15 PM

முனிவர் ஜீ எவ்வளவு சொகங்கள் எம்மவ்ருக்கு.இப்படி பல சம்பவங்கள் எம்மினத்திற்கு

என்ன செய்வது புத்தன் அநாதைகளாக பிறந்து விட்டோம் அழிகின்றோம்

[காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் என்ற நம்பிக்கையில்]

ரதி Posted Today, 01:10 AM

முனிவர்ஜீ நீங்கள் இப்படி அடி வாங்கி இருக்குறீர்களா?...நல்ல பதிவு.

ரதி நம் தமிழ் உறவுகளுக்கு நடந்ததை கதையாக கொடுத்தேன்

[சுற்றி வளைப்பின் போது சைக்கிளில் சென்று கொண்டிருந்த நான் இறங்கி நடந்து செல்ல வில்லையாம் என்று போட்டு சாத்தியது மறக்க முடியாதது]

குட்டி Posted Today, 04:01 AM

பதிவுக்கு நன்றி முனிவர் ஜீ

நன்றி குட்டி உங்கள் கருத்துக்கும்

தமிழனை மனிதனாக மதிப்பதில்லை எந்த நாயும் நாமாக உயர்ந்து முன் வந்து எல்லா நாய்களின் கண்களில் விரலை விட்டு ஆட்ட வேண்டும் அப்போது அவனாக வந்து எம்மை சந்திப்பான்

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜீ , ஈழத் தமிழனுக்கு இந்த நூற்றாண்டு பெரும் வேதனைகளையும் ,அவமானங்களையும் , இழப்புக்களையும் தந்து விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனையோ கொடுமையல் தமிழன்ட வாழ்க்கேல நடந்து இருக்கு முனி மாமா....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜீ , ஈழத் தமிழனுக்கு இந்த நூற்றாண்டு பெரும் வேதனைகளையும் ,அவமானங்களையும் , இழப்புக்களையும் தந்து விட்டது .

ஓம் சிறியண்ணை என்ன செய்வது நாம் இந்த ஆண்டு மோசமான ஆண்டுதான் போலகிடக்கு :wub:

kuddipaiyan26 Posted Jul 4 2009, 01:47 PM

இப்படி எத்தனையோ கொடுமையல் தமிழன்ட வாழ்க்கேல நடந்து இருக்கு முனி மாமா....!

ஓமடா குட்டிதம்பி :wub:

பிடி பட்டவரை போல அந்த ஆள்க்காட்டியும் ஒருவக்கையில் பரிதாபமானவர்தான்... ஆனால் இதையும் விட கேவலமானவர்கள் எங்களுக்கு இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை...

  • கருத்துக்கள உறவுகள்

20 வருடத்துக்கு முன் அயலவர் ஒருவர் இப்படி சித்திரவதை கூடத்தில் (பூசாவில்) அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டவர் இன்றும் சில வேளைகளில் இரத்த வாந்தி எடுப்பதாக சொல்கிறார். ஊரை சுற்றி வளைத்து ஆள்காட்டி மூலம் அடையாளம் காட்டப்பட்ட அப்பாவி. இன்று ரொரண்டோவில் வசிக்கிறார். நன்றி முனிவர் உண்மை கதையை தந்தமைக்கு.

Edited by nunavilan

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தயா,நுணாவிலன் உங்கள் கருத்திற்கும்

நம்மவர்கள் திருந்த மாட்டார்கள் :rolleyes:<_<

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனிவர் , எங்கையப்பா இவ்வளவு நாளும் காணேல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனிவர் , எங்கையப்பா இவ்வளவு நாளும் காணேல்லை .

முனிவர் இமயமலைக்கு கடுந்தவம் நோக்கிப் போய்விட்டார் போல :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் இமயமலைக்கு கடுந்தவம் நோக்கிப் போய்விட்டார் போல :icon_idea:

முனிவர் இவ்வளவு நாளும் தவம் செய்யாமல் , ஜில்மால் முனிவராத்தான் இருந்திருக்கிறார் போலை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் இவ்வளவு நாளும் தவம் செய்யாமல் , ஜில்மால் முனிவராத்தான் இருந்திருக்கிறார் போலை. :lol:

இமயமலைவரை கேக்கப்போகுது முனிவர்ஜி பரிவாரங்களோடு வரப்போறார் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனிவர் , எங்கையப்பா இவ்வளவு நாளும் காணேல்லை .

வனவாசம் காண சென்றேன் ஐயா (பெண் பார்க்க சென்றேன் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்ன) :lol:

:lol: என்ன சாந்தி அக்கா சொகமா முனிவர் இப்போது சரியான விசி கொஞ்ச நாளைக்கு பிறகு வாரன் என்ன :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எத்தனை ஆயிரம் அப்பாவிகளை வதைத்திருப்பார்கள்... வதைக்கிறார்கள்.... :unsure:

உலகில் மிருகங்கள், பறவைகள் வதைப்புக்குக் கூட நீதி நியாயம் பார்த்து தண்டனை குடுக்கிறார்கள்... ஆனால் தமிழர் வதைபடுவதை தான், உலகமே கைகட்டி வாய் பார்க்கிறது...! :lol:

உலகமா பாத்து ஏதாவது செய்யவேணும் எண்டு நினைக்கிறோம். ஆனால் நாம் ஏதாவது செய்கின்றோமா? புலம் பெயர் தேசங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஸ்ரீ லங்கா அரசால் சித்திரவதை அனுபவித்து இருப்பார்கள். அவர்களுக்கு நடந்த கொடுமைகளை ஆவணப் பதிவு ஆக்கலாமே? யாராவது வானத்திலிருந்து குதித்து வந்தாவது எமக்காக ஏதேனும் செய்யமாட்டார்களா என நினைக்கின்றோமே தவிர நாமாக ஒரு துரும்பையேனும் அசைக்க நினைக்கிறோமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள முனிவனுக்கு

உங்கள் இந்தக் கதையைப் படித்ததற்குப் பிறகு உங்களைப் பற்றி நான் நிறைய தப்புக் கணக்கு போட்டு வைத்ததை எண்ணி வருந்தினேன்.

இந்தக் கதை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள் என்ற செயல், எமது சமுதாயத்தின் நீங்கள் கொண்டுள்ள கரிசனையின் அளவைக் காட்டுகிறது.கதைக்குள் சென்று பார்க்கையில், இது அனேகமாக உண்மையான அனுபவத்தின் பதிவு போலவே உள்ளது. அப்படி உண்மையான அனுபவத்தின் பதிவாக இருக்கும் பட்சத்தில் இந்தக் கதையின் நாயகன் நாளை விசாரணை முடிந்து விடுதலையாகி வந்த பின் ,அவனின்இயல்பான வாழ்க்கைக்கு அவனது உடல் அவயங்கள் ஒத்துழைக்குமா? அவ்வாறு ஒத்துழைக்காத பட்சத்தில்

அவன் அடையப் போகும் வேதணையின் வலிகளை எண்ணி என் மனசு கனத்ததை, உங்களது கதையின் முடிவில் உணர்ந்தேன்.

பின் குறிப்பு

அவன் வாழ்வு நல்லதாக அமைய யாகம் செய்யுங்கள் முனிவன்ஜீ

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இதே அனுபவம் 2000 ம் ஆண்டளவில் கிழக்கு தலைநகரில் எனக்கும் ஏற்பட்டது ஆனால் என்னை ஒருநாள் முழுக்கு வைத்து துவைச்சு எடுத்தாங்கள் என்னை விடும்போது துவேசம் பிடிச்ச பொறு*****நா** சொன்னான் கொச்சை தமிழில் ”எல்டிடி ஆக்கள்ட மனசுக்குள்ள இருந்து எதையும் லேசில் எடுக்க ஏலாது அவங்கட மனச இரும்புபோல உருக்கி அனுப்பி வைச்சு இருப்பான்கள் எண்டு” அந்த வலி வேதனைகளிலும் எம்மவர் எப்பெருந்தியாகங்களை புரிந்துள்ளார்கள் என்பது என் மனதை நெருடிச்சென்றது.......................

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழைய பரணில் இருந்து தூசு தட்டி எடுத்த புலி குரலுக்கு

 

நன்றி புலி குரல் எமக்குள் இன்னும் கதைகள் இருக்கின்றன

 

எனக்குள் இன்னும் பலகதைகள் அத்திவாரம் இட்டு இருக்கின்ற அதை எழுதுவதற்கு போதிய வசதி இல்லை 

அது கிடைக்கும் போது இன்னும் பல கதைகள் எழுதுகிறேன்

 

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பிரியந்தன்  உங்கள் கருத்துக்கும்

 

யாரை யாரும் மதிப்பிட முடியாது நண்பா  ஒவ்வொருவருக்கும்  எத்தனை முகங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.