Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் டக்ளசும் அமைச்சர் பியசேன கமகேயும் யாழ்ப்பாணத்தில் திருமணம் செய்து கொண்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டக்ளசும் அமைச்சர் பியசேன கமகேயும் யாழ்ப்பாணத்தில் திருமணம் செய்து கொண்டனர்

ministersjaffnavisit1.jpg

ministersjaffnavisit2.jpg

http://www.globaltamilnews.net/tamil_news....11579&cat=1

Edited by nunavilan

யாழ் மாநகர சபைத்தேர்தல் (2009) இல் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள்:

IMG3376-1246942548.jpg

IMG3376-1246942592.jpg

காவடி ஆட்டம்:

mini0607D.jpg

பொற்கிளி, தேர்:

mini0607E.jpg

தகவல் மூலம்: ஈபிடீபி வலைத்தளம், நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அட என்ன முன்னேற்றம்... மாற்றுக்கருத்துக்கள் இல்லை...

மானம் தன் மானம் அதுகும் அடகுக்கடையில்....

ஈ.பி.டி.பி தேசவிரோதக்குழு... ஈழமக்கள் ஜனநாயக்கட்சி....

ஒற்றுமைக்கோசத்தில் எத்தை அசிங்கங்கள் நிறைவேற்றப்போகின்றனவோ!? இத்தனை ஆயிரம் மக்கள் சாவுக்கு சந்தோசம் கொண்டாடியவர்களை முற்றத்தில் வைத்து ஆராத்தி எடுக்கிறNதூ யாழ்?

நீங்கள் வழங்கும் தாரளமயமாக்கல் ஏதோ ஒரு தவறான செய்தியை மக்களுக்கு எடுத்துச் செல்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நக்கிப்பிளைக்கும் சொறிநாய்க்கூட்டமய்யா.

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக் குழந்தைகளையும் கர்ப்பிணிப் பெண்களையும் குண்டு போட்டுக் கொன்றவனுக்கு மாலைபோட்டு அலங்கார மண்டபம் வைத்து வரவேற்பளிக்கும் இழி இனம் என்றால் அது தமிழினம் தான்..!

ஈராக்கியன் புஷ்சுக்கு சூவால எறியுறான். திபெத்தியன் சீனத் தலைவருக்கு சூவால எறியுறான். சீக்கியன் செருப்பால எறியுறான். ஆனால் 150,000 தமிழ் சொந்தங்களைக் கொன்ற சிங்களவனுக்கு தமிழன் பூமாலை சூடுறான்.

யாழ்ப்பாணத்தவர்கள் இன்னும் இன்னும் எவ்வளவு கீழ்த்தரமான அடிமைச் சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. இதைத்தான் தந்தை செல்வா காலத்திலும் ஒரு தரப்பினர் செய்தனர். இப்பவும் செய்கின்றனர். சிங்களவனுக்கு கால் கழுவி மாலை போடுறதில தமிழனுக்கு அவ்வளவு பிரியம். இதைச் செய்ய விடவில்லை என்றுதானே பிரபாகரனை பாசிசத் தலைவன் ஆக்கினாங்கள்..!

இவற்றை பிரசுரித்து துரோகிகளுக்கு நாம் தான் இன்னும் இன்னும் இப்படிச் செய்ய ஊக்குவிப்பும் வழங்கப் போறம்..!

எங்கையோ நரேன்பிட்டியில் பதுங்கிக் கிடந்த டக்கிளஸ் என்ற துரோக எலும்பி பொறுக்கிக்கு வந்த வாழ்வு. கோவில கொள்ளை அடிச்சவனுக்கு பூசாரி பூசை செய்யுறான்..!

உலகிலேயே கேடு கெட்ட இனம் தமிழினம்..அதற்கு இது நல்ல சாட்சி..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.டி.பி வேற்பாளர்கள் அநேகர் சமுகசேவகர்களாக இருக்கினமுங்கோ.என்ன சமுகசேவை செய்தவைகளோ தெரியாது?

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய திருமணங்களுக்கு இந்தியாவில் இருந்த தடையை நீக்கி அனுமதியளித்துவிட்டார்கள். இலங்கையில் எப்போது நீக்கினார்களோ தெரியவில்லை.

. இலங்கையில் எப்போது நீக்கினார்களோ தெரியவில்லை.

அதற்கான முயற்சியில் பீ.பீ.சி டமிழோசை இடுபட்டுள்ளது.கீர்த்தீகா என்ற பெண்மணிமுலம் போராட்டம் நடத்துகிறார்கள்.கடந்தவாரம் அப்பெண்மனியை பேட்டியும் எடுத்தனர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடியல

கே.பி விலை போடிட்டார்.... அவர் தலமையை பறிக்க நினைக்கிறார் என்றெல்லாம் உளத்திய யாழ் கள கருத்தியல் சூரர்களே

இன்று டகிளஸ் வெட்டவிருக்கும் வேள்விக்கு போய் நக்குவோம் வாருங்கோ......

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.டி.பி வேற்பாளர்கள் அநேகர் சமுகசேவகர்களாக இருக்கினமுங்கோ.என்ன சமுகசேவை செய்தவைகளோ தெரியாது?

அப்பப்ப உதயன் பத்திரிகை அலுவலகத்தில் குண்டுகள் வெடிப்பதும். இனம் தெரியாத நபர்களால் பலர் உயிரிழந்ததும் மறந்து பொச்சா உங்களுக்கு????

புலிகள் களம் விட்டு போனதால் இன்னும் எத்தனை கூத்துக்கள் வரும். புலம் பெயர்தமிழரே பிரசரை கூட்டாதீர்கள்.. கண்ணை மூடிகொண்டு இருங்கள்.

கொதித்தாலும் நடக்கப்போவது எதுவும் இல்லை. மீண்டும் தற்கொடை படைதான் வரணும்,

வருமா? பார்ப்பம் காலம் பதில் சொல்லட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது?

சாமத்தியவீட்டு போட்டோ மாதிரிக்கிடக்கு?

நீங்கள் கலியாணவீடு எண்ன்டுறியள்?

இல்லாட்டி கம்பியாய் இருக்குமோ? :icon_idea:

தீக்கோழி தலையை மண்ணுக்குள் புதைத்துவிடுவதால் வெளியில் நடந்துகொண்டு இருப்பது பொய்யாக முடியாது. புலம்பெயர் தீக்கோழிகள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழ்மக்கள் தாங்கள் சொல்வதுபோல் அல்லது விரும்புவதுபோல் வாழ்வார்கள் என்று நப்பாசைகொள்வது மற்றும் அவர்கள்மீது இன்னமும் அசாதாரண நம்பிக்கையை வைத்து இருப்பது எப்படி இருக்கிது என்றால்.. கடைசிநேரம் மட்டும் வெளிநாடுக்காரன்வந்து சனத்தை காப்பாற்றுவான் என்று நினைச்சு ஏமாந்ததுமாதிரி இருக்கிது.

டக்லஸ் தேவானந்தாவின் அரசியல் நகர்வுகள், காய்நகர்த்தல்கள் மிகவும் சாதூர்யமாக இருக்கின்றது. பாருங்கள் கடந்தசில நாட்களில் அவர் எப்படியான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றார் என்று:

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கிழக்கு மக்களின் மீள் குடியேற்றத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை..

அடையாள அட்டை பெறுவதற்குரிய நடமாடும் சேவையொன்றை நடாத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை..

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு இன்று விஐயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மகத்தான வரவேற்பு...

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஐயம்...

வடமாகாண விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு 350 பேர் கொண்ட மூன்றாவது அணி இன்று மன்னார் பயணம்...

பிரதேச வாரியாக மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை..

அரியாலை ஆலயத்திற்கு அமைச்சர் விஜயம்!..

சண்டிலிப்பாய் சங்கானை காரைநகர் பிரதேச வசதியற்ற குடும்பங்களை மேம்படுத்தும் உதவித்திட்டம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பம்!..

யாழ் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம்

தகவல் மூலம்: ஈபீடீபி வலைத்தளம், நன்றி!

அதாவது இங்கு நான் சொல்ல வருவது என்ன என்றால்.. மக்களின் தேவைகளை, குறைகளை போக்க தற்காலிகமாகவேனும் டக்லஸ் தேவானந்தா எடுக்கின்ற முயற்சிகளுக்கு முன்னால் வெளிநாடுகளில் இருந்து நீங்கள் போடுகின்ற கூக்குரல்களை அங்குள்ள மக்கள் பொருட்படுத்தப்போவது இல்லை.

அரசியல்ரீதியாக அங்குள்ள மக்களின் மனங்களை வெற்றிகொள்ளும் முயற்சியில் டக்லஸ் தேவானந்தா சாதூரியமான முறையில் இறங்கி இருக்கின்றார் என்று தெளிவாகத் தெரிகின்றது.

அங்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள், அவதிப்ப்படும் மக்கள் தங்கள் சுயநலன்களிற்காகவேனும் நிச்சயம் டக்லஸ் தேவானந்தாவிற்கு தமது ஆதரவைகொடுத்து இனிவருகின்ற தேர்தல்களில் அமோகவெற்றியை பெற்றுக்கொடுக்கக்கூடும். அதன்பிறகு தமிழ் தேசிய கூட்டணியின் கதி அதோ கதிதான். தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு நடையைக்கட்ட வேண்டியதுதான்.

சும்மா ஓரினச்சேர்க்கை திருமணம் என்று செய்திகள் எழுதி புலம்பெயர்வாழ் தீக்கோழிகளுக்கு உசுப்பேத்தி மகிழ்விக்கின்ற பொறுப்பற்ற ஊடகங்கள் திருந்தாதவரை நாங்கள் அரசியல் ரீதியாக மாபெரும் தோல்வியையே சந்திக்க நேரிடும்.

எங்கள் புலம்பெயர் தமிழீழ அரசு உருவாக்கப்பட்டு செயற்பட முயற்சி செய்யமுன்னரே எத்தனையோ பல விடயங்கள் அரசியல் ரீதியாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவிடப்போகின்றது. அதன்பிறகு உங்களுக்கு சேர்ந்து இருக்க விருப்பமா, பிரிந்துபோக விருப்பமா என்று கேட்டு வாக்கெடுப்பு நடாத்தினால் அதில் வெற்றி கொள்வதே பெரிய போராட்டமாய் போய்விடும்.

எதிரிகளின் பலங்களை சரியாக எடைபோடாமல்.. நக்கல் அடிச்சு அடிச்சு கடைசியில் நடந்தது தமிழர் போராட்டம் நாசமாய்ப்போனதுதான். இப்போது ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில் அரசியல் ரீதியாக போராடி வெல்வதற்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கின்றது. இந்த அரசியல் போராட்டமும் எதிரிகளின் அரசியல் பலங்களை தவறாக எடைபோடுவதாலும், இப்படி புண்ணாக்குத்தனமாக பொறுப்பற்ற முறையில் ஓரினச்சேர்க்கை ஈரினச்சேர்க்கை என்று திருமணம் என்று சொல்லி கிண்டல் அடித்து மகிழ்வதாலும்.. கடைசியில் அரசியல்ரீதியாகவும் நாங்கள் நடுத்தெருவில் நிற்கப்போகின்றோம்.

தமிழ் ஊடகங்கள் இங்குள்ள மக்களை மகிழ்விப்பதை நோக்கமாகக்கொண்டு செய்திகளை, கட்டுரைகளை எழுதாமல், பரப்பாமல்.. இங்குள்ள மக்களிற்கு யதார்த்தம் எது என்று காட்டி.. அவர்களிற்கு எப்படியான பொறுப்புக்கள் உள்ளன என்று கூறும்வகையில்... செயற்பட்டால்.. கடக்கவேண்டிய பாதை எவ்வளவு கடினமானது.. பயணம் எவ்வளவு நீண்டது.. என்பதை உணரக்கூடியவகையில் செயற்பட்டால்.. மீண்டும் அண்மையில் ஏற்பட்டதுபோன்ற அழிவையாவது எதிர்காலத்தில் நாங்கள் தடுக்கமுடியும்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியளா!

இது உண்மையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன் நீங்கள் ரொம்ப உணர்ச்சி வசப்படுறீங்க போல இருக்கு... பார்த்து ...

இங்க இந்த தலைப்பை கொண்டு வந்து கொட்டினது யாருமில்லை. இந்த தலைப்பு வந்ததால் தான் கருத்துக்கள் அப்படி அமைந்திருக்கின்றன. காட்சிகளை பார்த்தால் அவர்கள் கதைத்தில் எந்த தவறும் இருப்பதாய் தெரியவில்லை. இன்று நெருக்கடியான நிலையில் அல்ல அன்று டக்கிளசுக்கு வரி கட்டிக்கொண்டு அவனுக்கு வாக்களித்த பெருமை கேவலம் கெட்ட நம் தமிழினத்துக்கு தான் சேரும். நாங்கள் ஒற்றுமை பற்றி பேசுவம், அரசியலில் போராடுவம் ஆனால் நாங்கள் ஒன்றும் கிளிக்க போறதில்லை.

டக்கிளசு அரசியல் செய்யிறான், தமிழ் நாட்டில கலர் ரிவி போல இவர் கலர் கலரா போஸ்ட் குடுக்கிறார் ஒன்று பட்ட இலங்கைக்குள் "குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவம் டக்கிளசோட சோர்ந்து" டக்கிளஸ் பற்றி செய்திகைள இங்க இணைச்சு அவரை பெரியாளாக காட்டி சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுப்பம்.

பலத்தமிழன் , பலம் பெயர் நாட்டில வாழுற தமிழன் தான் வாழ நாடு கேக்வில்லை. என்றதை எல்லாரும் புரிந்து கொள்ளுங்க.. பலத்தில இருந்து கொண்டு வீதி வீதியாக நாங்கள் இறங்கி போரடினது எங்களுக்கு வேலை வெட்டி இல்லை என்றில்ல. நாங்கள் அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எங்களால் ஏதாவது ஆக வேண்டும் என்றே!

நாங்கள் நினைப்பது அவர்களது நன்மைக்கே ஒழிய மற்றும் படி நாளைக்கு மலரப்போகும் தமிழீழத்திலை எல்லாரும் தங்கள் வாழுற நாடுகளின்ர சிட்டிசனை கிழிச்செறிஞ்சு போட்டு போய் இருக்கிறதுக்கு இல்லை. இதை எல்லாரும் புரிஞ்சு கொள்ளுங்கள்...

நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பம். ஆனால் அது பிரயோசனமில்லை. நாங்கள் என்னதான் கத்தினாலும் நாட்டில இருக்கிற மக்கள் நாங்கள் நினைக்கிறதை நினைக்க மாட்டினம். அவையளும் இப்ப அற்ப சொற்ப சலுகைகளுக்காக மாறிட்டினம்.

நாங்கள் பிறகு யாருக்காக? எதுக்காக? என்ன மண்ணுக்கு போராடனும்? அரசியல் செய்யனும் இங்க இருந்து?

அவர்கள் அங்க இருக்கிற மக்கள் தான் அவர்களது தலைவிதியை தீர்மானிக்க போகின்றனர் என்றால், அவர்கள் அடிமை வாழ்வை தான் தெரிவு செய்ய போகின்றனர் என்றால் பிறகு எதற்க்கு நாம் எமது நேரத்தை வீணாக்க வேண்டும்?

நாங்கள் முடிவெடுத்தால் (புலமபெயர் வாழ் தமிழர்கள்) அது அவர்கள் மீது திணக்கப்படும் தீர்வாக எல்லோரும் நினைத்தால் அது யாரின் தவறு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கிளஸ் ஓர் ஓரின சேர்க்கையாளரா?

அது வேறொன்றும் இல்லை பறவைகள் நான் ஈபீடீபீ அமைப்பில் இணைந்துவிட்டேன். அதுதான் நீங்கள் எங்கள் தலைவர் தோழர் டக்லஸ் தேவானந்தாபற்றி தவறாக கதைக்கும்போது அல்லது தோழரை சீண்டும்போது எனக்கு உணர்ச்சிவசப்பட்ட்டு கோபம் வருகின்றது.

ஓ எங்கடை ஆக்களிண்ட அபிப்பிராயமோ? நாங்கள் பார்த்தமே..! இப்படித்தான் தமிழ்நாடு தேர்தல்வரும்போது தேர்தல் காலத்தில் கலைஞர் கருணாநிதியை தூற்றிக்கொண்டு திரிந்தார்கள். ஆட்சிமாற்றம் வரப்போகின்றது என்றார்கள். ஜெயலலிதா கால்களில் விழுந்தார்கள். நடந்தது என்ன? மீண்டும் கலைஞர், காங்கிரஸ் கூட்டணி வென்றது. சீமானின் பேச்சும், பாரதிராஜாவின் உணர்ச்சிகளும் நடுத்த்தர தமிழ்நாட்டு தமிழனின் கவனத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது போய்விட்டது.

நம்மவர்கள் இப்படித்தான் தொடர்ந்து வசைபாடுவார்கள்.குரைக்கிற நாய் கடிக்காது என்று அவங்களுக்கும் தெரிஞ்சு இருக்கிது போல. புலம்பெயர் தமிழர்கள் குரைக்கிற நாய்கள் மட்டுமே என்று அவர்கள் நினைக்கின்றார்களோ என்னவோ! தொடர்ந்து குரைக்கட்டும். ஈபீடீபி இலகுவாக தேர்தல்களில் வெற்றி பெற்று உத்தியோகபூர்வ அதிகாரங்களை பெற்று சர்வதேசத்தின் கண்களின் முன்பாகவும் தமிழரின் உத்தியோக பிரதிநிதிகள் என்கின்ற ஸ்தானத்தில் வரட்டும். நாங்கள் தொடர்ந்து குரைத்துக்கொண்டு இருப்போம். சர்வதேசத்தையும் திட்டுவோம். சர்வதேசம் ஓரினச்சேர்க்கையாளர்களின் கூட்டம் என்று சொல்லி மகிழ்வோம். அகாசி ஓரினச்சேர்க்கையாளர். கருணாநிதி ஓரினச்சேர்க்கையாளர். சீனர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள். இப்படிச்சொல்லி மகிழ்ந்துகொண்டு இருப்போம்.

கடைசியாக ஒரு விடயம். உங்கள் கிண்டல்களிற்கு தேவையில்லாமல் ஓரினச்சேர்கையாளர்கள் என்று அப்படியானவர்களை இழுக்கமுன்னம் ஓர் தகவல். நாங்கள் புலம்பெயர் நாடுகளில் கால்களில்போய் விழுந்த, விழுகின்ற பல அரசியல்வாதிகள், அமைப்புக்களில் உள்ள பலரில் ஓரினச்சேர்க்கையாளர்களும் இருக்கின்றார்கள். கனடாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் சட்டரீதியாக அங்கீகாரம்பெற்று.. சமூகத்தில் ஓர் தனிப்பட்ட அதிகாரத்தையும் பெற்று இருக்கின்றார்கள். இராணுவம், காவல்துறை உட்பட கனேடிய படைகளில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கணிசமான அளவு காணப்படுகின்றார்கள்.

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.