Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேரீச்சை பூக்களின் மத்தியில் ஒரு ஆண்டி...(Adults only): நிழலி

Featured Replies

முன்னுரை

....இது ஒரு பயணக் கட்டுரை அல்ல.

..ஏனெனில் பயணம் என்றால் ஒரு வாரம் அல்லது இரு வாரம் மட்டும் ஒரு ஊருக்கு அல்லது நாட்டிற்கு போய் அது பற்றி எழுதுவார்கள். ஆனால் நான் 5 வருடங்களுக்கும் மேலாக வசித்த நாடு ஐக்கிய அரபு இராச்சியம். அதில் டுபாய் எனும் மற்றவர்களால் சொர்க்கபுரி என கருதப் பட்டு என்னால் பாதி நரகமாகவும் பாதி சொர்க்கமாகவும் உணரப் பட்ட ஒரு ஊரிலும் பக்கத்தில் உள்ள சார்ஜா ஊரிலும் (உண்மையில் இவை மாநிலங்கள்: UAE: Semi federal country ) நான் வாழ்ந்த கதை.

சின்ன புள்ளைகள் இதனை வாசித்தால் கெட்டுப் போயிடும் என நினைக்கும் அப்பாமார், அம்மாமார் இந்த தொடரை இரவில் யாருக்கும் தெரியாமல் வாசிக்கவும் (செம build up அப்பு)

இதனை வாசிக்க முன் உங்களுக்கு நிச்சயம் தெரிய வேண்டிய மூன்று சொலவடைகள் / பழமொழிகள்

1. காஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி

2. அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியிலும் (Dubai யில்) குடை பிடிப்பான்

3. பல நாள் திருடன் ஒரு நாளும் மாட்டுப் பட மாட்டான்

இனி அனுபவங்கள்

ஒரு மனுசன் எத்தனை தரம் தான் மற்றவர்களை வெளி நாட்டுக்கு போவதற்காய் air port வரை சென்று வழியனுப்பி விட்டு வருவது? ஒரு முறையேனும் வாழ்க்கையில் plane இல் ஏற மாட்டமா... இது தான் என் 27 வயது வரையான வாழ் நாள் ஏக்கம். வெளி நாட்டுக்கு போக முன் உன்னைத் தான் கட்டுவன் என்று சத்தியம் செய்த மச்சாளும், போனவுடன் கூப்பிடுறன் என்று சொன்ன மாமன் மாரும் கைவிட்ட. ஏஜென்சிக்கு காசு கட்ட முடியாத ஒருவனுக்கு இந்த எண்ணமே கஷ்டமான எண்ணம்.

ஆகக் குறைந்தது யாழ்ப்பாணத்திற்கு plane இல் போக காசில்லாத ஒருவனுக்கு திடீரென காசும் தந்து, டிக்கெட்டும் தந்து, ஒரு மாதம் முழுதும் செலவழிக்க காசும் தந்தால் என்ன செய்வான்?

அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்................... நான் Dubai இல் பிடித்தேன்

(தொடரும்)

தொடரின் அத்தியாயங்களின் இணைப்புகள்

அங்கம் இரண்டு: நாளை இரவு நீ டுபாய் போகிறாய்

அங்கம் 3: தரை இறங்கும் விமானம்

அங்கம் 4: எரிக்காத வெயில்

அங்கம் 5: சிதைவுற்ற ஆளுமைகள்

அங்கம் 6: இந்தியர்கள் Vs நாம்

அங்கம் 7: ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் நீங்கள் தானே?

அங்கம் 8: டுபாய் வீதிகளில் 'அந்த CD' வேட்டை

Edited by நிழலி

  • Replies 72
  • Views 22.9k
  • Created
  • Last Reply

பேரீட்சை பூக்களின் மத்தியில் ஒரு ஆண்டி...(Adults only)
^_^:o

நிலழி அண்ணா, இது உங்கட சொந்த அனுபவமோ...? உங்களுக்கு எழுத்தாற்றல் இருக்கு, நல்ல எழுதுவியல் என்று நினைக்கிறன்... எழுதுங்கோ.... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஆவலை தூண்டி விடீர்கள் ...இன்னும்கொஞ்சம் எழுதுங்கள். நீளமாக ..............ஒவ்வொரு நாளும் வாசிக்க கிடைக்குமா,,,,,,,

பொறுத்த இடத்தில் தொடரும் .........போட்டு விடீங்க்களே.

  • தொடங்கியவர்

அங்கம் 2 (no இரட்டை அர்த்தம்)]: "நாளை இரவு நீ டுபாய் போகிறாய்"

ஒரு நாள் ஒரு call....

மச்சான் உண்ட CV யை அனுப்பு

ஏண்டா

இங்க ஒரு Project இருக்கு....ஆனால் Dubai போய் செய்ய வேண்டும்... உனக்கு விருப்பம் இருந்ததல் CV அனுப்பு

அனுப்புறன்

=================

டுபாயில் இருந்து Call வரும்....பார்த்து கவனமாக பதில் சொல்லு (சொன்னது முஸ்லிம் முகாமையாளர்)

Call வந்தது

ஒரு பெண் பேசினார்

உன் பெயர்

என் பெயரை (உண்மை பெயர்) சொன்னன்

----

----

இது வரை 7 பேரை interview பண்ணி இருக்கிறன்....உன்னை மாதிரி ஒருவனை (ஒரு Stupid) ஐ பார்க்கவில்லை

ஆனால் நீ சொன்ன சில விடயங்கள் சரி...ஆகவே நீ OK

=============

அலுவலகத்தில் முகாமையாளர் "நாளை இரவு நீ டுபாய் போகிறாய்"

உண்மையா...........................................???

யாராவது ஒரு சாத்திரகாரன் வந்து நீ இன்னும் 4 நாளில் டுபாய் போவாய் என்று சொல்லி இருந்தால் அவனின் மூக்கில் இரத்தம் வரும் வரைக்கும் குத்தி இருப்பன்

ஆனால்,

சில வேளைகளில் வாழ்க்கை ஒரு சாத்திரகாரனின் உளரலை விட சுவாரசியமானது

=============

சரியாக 48 மணி நேரத்தில் நான் டுபாய் மண்ணில் இறங்கினேன்

ஆனால்...............

(தொடரும்)

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

அங்கம் 3 ஐ, இரட்டை அர்த்தத்துடன் எதிர் பார்க்கிறேன் . அப்படி வந்தால் தான் வாசிக்கும் போது ..... கொடுப்புக்குள் சிரிக்கலாம். ^_^

  • கருத்துக்கள உறவுகள்

அங்கம் 3 ஐ, இரட்டை அர்த்தத்துடன் எதிர் பார்க்கிறேன் . அப்படி வந்தால் தான் வாசிக்கும் போது ..... கொடுப்புக்குள் சிரிக்கலாம். :lol:

அது உங்களுக்கு ஓகே.. ஆனால் என்னை மாதிரி சின்ன பசங்கள் என்ன செய்யிறது? நிழலி அண்ணா பிறகு வாசிக்க விடமாட்டார். :(

  • கருத்துக்கள உறவுகள்

அது உங்களுக்கு ஓகே.. ஆனால் என்னை மாதிரி சின்ன பசங்கள் என்ன செய்யிறது? நிழலி அண்ணா பிறகு வாசிக்க விடமாட்டார். :(

" பேரீட்சை பூக்களின் மத்தியில் ஒரு ஆண்டி...(Adults only) "

சபேஷ் , தலைப்பே அடல்ற்ஸ் ஒன்லி என்று இருக்கும் போது நீங்கள் இதுக்குள்ளை ஏன் வந்தனீங்கள் . நிழலி அண்ணா கண்டால் பேசப் போறார் . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கம் 3 ஐ, இரட்டை அர்த்தத்துடன் எதிர் பார்க்கிறேன் . அப்படி வந்தால் தான் வாசிக்கும் போது ..... கொடுப்புக்குள் சிரிக்கலாம். :lol:

மேல் அங்கம் ரெட்டையாகத்தான (அர்த்தம்) இருக்குது மச்சான்

நாம இருக்கிற நிலைமைக்கு இப்ப ரெட்டை அர்த்தம் உள்ள கதை ரொம்ப தேவை இதுங்க எப்பவும் உருபடாதுங்க,

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா Adults only என்றுசொல்லி எழுதியிருக்கிறியள்.குழந்தைக

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அடுல்ஸ் ஒன்லி என்று போட்டிருக்கிறீர்கள். இந்தத் தலைப்பிற்காகவே பேரீச்சம் பூக்களோடு நிற்கிற ஆண்டி உச்சத்திற்குப் போயிடுவார். கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போல்.... பார்த்து வீட்டுக்காரி வாசித்தால் நீங்கள் என்ன ஆகுவீர்களோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நிழலி ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  • தொடங்கியவர்

அங்கம் 3: தரை இறங்கும் விமானம்

விமானம் தரை இறங்க தொடங்கின்றது. பயணிகள் அனைவரையிம் பட்டியை இறுக்குமாறு விமானப் பணிப் பெண்கள் வேண்டுகின்றனர். என்னுடன் பயணித்த என் முகாமையாளர் மீண்டும் ஐந்தாவது தடவையாக விமான இருக்கை பட்டியை எனக்கு இறுக்கி விடுகின்றார். அவர் முகத்தில் ஆயிரம் நக்கல் பார்வைகள் தோன்றின போல் எனக்கு இருந்தது. ஒழுங்காக விமான இருக்கை பட்டி அணிய பழக முடியாதவன் எல்லாம் டுபாய் போய் என்னத்தை கிழிக்க போறான் என்ற மாதிரி அவரின் பார்வை இருந்தது. நானோ மனதுக்குள் 'இந்தாள் வந்திருக்காட்டி விமானப் பணிப்பெண் அருகில் வந்து குனிந்து நின்று உதவியிருப்பாள்.. " என்று குமைந்து கொண்டிருந்தன்.

டுபாய் விமான நிலையம் போனவர்களுக்கு அதன் விஸ்தீரனம் புரியும். விமான நிலையத்துக்குள் இரண்டு பெரிய ஊர்களை அடுக்கி விடலாம் போல இருக்கும். உலகின் அதி நவீன வசதிகள் கொண்ட பரந்த விமான நிலையம் அது. ஒரு வாரத்திற்கு 130 விமான நிறுவனங்களின் 5600 விமானங்களை 200 நகரங்களுக்கு இயக்கும் விமான நிலையம் அது. கடந்தத ஆண்டு மட்டும் 3 கோடி 70 இலட்சம் பயணிகள் இந்த விமான நிலலயத்தினூடாக பயணித்துள்ளனர். மொத்தமாக 3 Terminals உம் 2 விமான ஓடு பாதைகளையும் கொண்டது.

dubaiairport1.jpg

dubaiairport.jpg

அப்படிப் பட்ட ஒரு விமான நிலையத்துக்குள் போய் சரியாக 3 ஆவது நிமிடம் என்னுடன் வந்த முகாமையாளரை தவற விட்டு விட்டு இடம் வலம் புரியாமல் நின்று கொண்டு இருந்தேன். ஒரு வழியாக எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சமாளித்து கொண்டு (என் ஆங்கில வாத்தி சிரிக்கும் சத்தம் கேட்டது போல் இருந்தது) பாஸ்போர்ட்டில் விசாவை குத்தி வெளியே வரும் போது என்னை அழைத்து கொண்டு போக என் அலுவலகத்தில் இருந்து வந்து நின்ற வாகன சாரதி கையில் என் பெயர் தாங்கிய அட்டையை தாங்கியவாறு வாழ்க்கை வெறுத்து போய் நின்று கொண்டு இருந்தார்

சாரதி என்னை வலப் பக்கமாக ஏறு என்றார். அதற்கு முதல் ஒரு நாளும் இடப் பக்க வாகன செலுத்தும் (Left hand side driving) முறையை காணாமையால் 'இதென்னடா கூத்து என்னை வலப் பக்கமாக ஏறச் சொல்கின்றார், எனக்கு வாகனம் செலுத்த தெரியாதே' என்று குழம்பியவாறு நின்று கொண்டிருந்தேன். வாகனத்தினை உள்ளே எட்டிப் பார்த்த பின் தான் நிலமை புரிந்தது'

UAE ஒரு அரபு தேசம் என்பதால் எல்லாரும் போத்தி மூடிக்கொண்டு திரிவார்கள் என நினைத்து வந்த எனக்கு அன்று இரவே என் நினைப்பு எந்தளவுக்கு தவறு என புரிந்தது. எனக்கு தங்குமிடம் வசதி செய்து தரப்பட்டிருந்தது ஒரு மூன்று நட்சத்திர விடுதியில். அதற்கு முன் தான் மத்திய கிழக்கு நாடுகளில் மிக புகழ் பெற்ற imperial எனப் படும் இரவு விடுதி இருந்தது, அது பற்றி பிறகு பார்க்கலாம்

(தொடரும்)

Edited by நிழலி

கதை சுவாரசியமாய் நல்லாய் போகிது நிழலி. பேரீட்சை பூக்கள் எண்டுறது டுபாயில இருக்கிற டுபாக்கு பெண்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

மேல் அங்கம் ரெட்டையாகத்தான (அர்த்தம்) இருக்குது மச்சான்

அங்கம் 2 (no இரட்டை அர்த்தம்) என்றவுடன் தொடர்ந்து வாசிக்கவில்லை மச்சான் . ஹிஹீஹீ ..... :huh:

UAE ஒரு அரபு தேசம் என்பதால் எல்லாரும் போத்தி மூடிக்கொண்டு திரிவார்கள் என நினைத்து வந்த எனக்கு அன்று இரவே என் நினைப்பு எந்தளவுக்கு தவறு என புரிந்தது.

உடனே ........ ஆயிரம் கலர் பல்ப்புகள் மனதுக்குள் மின்னி , மின்னி எரிஞ்சிருக்குமே ......... :lol::(:huh:<_<

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கம் 3

விமானம் தரை இறங்க தொடங்கின்றது. பயணிகள் அனைவரையிம் பட்டியை இறுக்குமாறு விமானப் பணிப் பெண்கள் வேண்டுகின்றனர். என்னுடன் பயணித்த என் முகாமையாளர் மீண்டும் ஐந்தாவது தடவையாக விமான இருக்கை பட்டியை எனக்கு இறுக்கி விடுகின்றார். அவர் முகத்தில் ஆயிரம் நக்கல் பார்வைகள் தோன்றின போல் எனக்கு இருந்தது. ஒழுங்காக விமான இருக்கை பட்டி அணிய பழக முடியாதவன் எல்லாம் டுபாய் போய் என்னத்தை கிழிக்க போறான் என்ற மாதிரி அவரின் பார்வை இருந்தது. நானோ மனதுக்குள் 'இந்தாள் வந்திருக்காட்டி விமானப் பணிப்பெண் அருகில் வந்து குனிந்து நின்று உதவியிருப்பாள்.. " என்று குமைந்து கொண்டிருந்தன்.

டுபாய் விமான நிலையம் போனவர்களுக்கு அதன் விஸ்தீரனம் புரியும். விமான நிலையத்துக்குள் இரண்டு பெரிய ஊர்களை அடுக்கி விடலாம் போல இருக்கும். உலகின் அதி நவீன வசதிகள் கொண்ட பரந்த விமான நிலையம் அது. ஒரு வாரத்திற்கு 130 விமான நிறுவனங்களின் 5600 விமானங்களை 200 நகரங்களுக்கு இயக்கும் விமான நிலையம் அது. கடந்தத ஆண்டு மட்டும் 3 கோடி 70 இலட்சம் பயணிகள் இந்த விமான நிலலயத்தினூடாக பயணித்துள்ளனர். மொத்தமாக 3 Terminals உம் 2 விமான ஓடு பாதைகளையும் கொண்டது.

dubaiairport1.jpg

dubaiairport.jpg

அப்படிப் பட்ட ஒரு விமான நிலையத்துக்குள் போய் சரியாக 3 ஆவது நிமிடம் என்னுடன் வந்த முகாமையாளரை தவற விட்டு விட்டு இடம் வலம் புரியாமல் நின்று கொண்டு இருந்தேன். ஒரு வழியாக எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சமாளித்து கொண்டு (என் ஆங்கில வாத்தி சிரிக்கும் சத்தம் கேட்டது போல் இருந்தது) பாஸ்போர்ட்டில் விசாவை குத்தி வெளியே வரும் போது என்னை அழைத்து கொண்டு போக என் அலுவலகத்தில் இருந்து வந்து நின்ற வாகன சாரதி கையில் என் பெயர் தாங்கிய அட்டையை தாங்கியவாறு வாழ்க்கை வெறுத்து போய் நின்று கொண்டு இருந்தார்

சாரதி என்னை வலப் பக்கமாக ஏறு என்றார். அதற்கு முதல் ஒரு நாளும் இடப் பக்க வாகன செலுத்தும் (Left hand side driving) முறையை காணாமையால் 'இதென்னடா கூத்து என்னை வலப் பக்கமாக ஏறச் சொல்கின்றார், எனக்கு வாகனம் செலுத்த தெரியாதே' என்று குழம்பியவாறு நின்று கொண்டிருந்தேன். வாகனத்தினை உள்ளே எட்டிப் பார்த்த பின் தான் நிலமை புரிந்தது'

UAE ஒரு அரபு தேசம் என்பதால் எல்லாரும் போத்தி மூடிக்கொண்டு திரிவார்கள் என நினைத்து வந்த எனக்கு அன்று இரவே என் நினைப்பு எந்தளவுக்கு தவறு என புரிந்தது. எனக்கு தங்குமிடம் வசதி செய்து தரப்பட்டிருந்தது ஒரு மூன்று நட்சத்திர விடுதியில். அதற்கு முன் தான் மத்திய கிழக்கு நாடுகளில் மிக புகழ் பெற்ற imperial எனப் படும் இரவு விடுதி இருந்தது, அது பற்றி பிறகு பார்க்கலாம்

(தொடரும்)

:):) மாஷால்லா.....மாஷால்லா.....!!! :lol::rolleyes:

நல்லாய் போகுது இதுவரைக்கும்....மேலறிய ஆவலாய் உள்ளது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கம் 2 (no இரட்டை அர்த்தம்) என்றவுடன் தொடர்ந்து வாசிக்கவில்லை மச்சான் . ஹிஹீஹீ ..... :lol:

உடனே ........ ஆயிரம் கலர் பல்ப்புகள் மனதுக்குள் மின்னி , மின்னி எரிஞ்சிருக்குமே ......... :lol::):):D

உருவங்கள் எல்லாம் பெரிய மண் அரண்கள் மாதிரி இருக்கும்....கண்ட உடனே ல்ய்ட் பல்ப் எல்லாம் fuse அடிக்காம இருந்தாலே பெரிய விஷயம் சிறி அண்ணா!!

:rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆங்கில வாத்தி சிரிக்கும் சத்தம் கேட்டது போல் இருந்தது
:rolleyes:

நகைசுவையோடான வரிகள் உங்கள் எழுத்தில் இழையோடுகிறது. தொடருங்கள் நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

உருவங்கள் எல்லாம் பெரிய மண் அரண்கள் மாதிரி இருக்கும்....கண்ட உடனே ல்ய்ட் பல்ப் எல்லாம் fuse அடிக்காம இருந்தாலே பெரிய விஷயம் சிறி அண்ணா!!

:rolleyes::lol:

அங்கம் 3

------

dubaiairport1.jpg

dubaiairport.jpg

அப்படிப் பட்ட ஒரு விமான நிலையத்துக்குள் போய் சரியாக 3 ஆவது நிமிடம் என்னுடன் வந்த முகாமையாளரை தவற விட்டு விட்டு இடம் வலம் புரியாமல் நின்று கொண்டு இருந்தேன்.

------

(தொடரும்)

அதுதானே ......... இளையபிள்ளை ,

சிலவேளை நிழலி காஞ்ச மாடு கம்பிலை விழுந்தமாதிரி ரொம்ப அவசரப்பட்டுப் போனாரோ ........

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்மனத்தின் அழியாத சுவடுகள் தொடர் கதையாய் ..நடை போடுகின்றன . உள்ளத்தின் பதிவுகளும் ... சிரிப்புமாய் ......

.தொடருங்கள். காத்திருந்து வாசிக்கிறோம். .

ஐயா நிழலி

ஒரே தடவையில் 5 வசனங்களுக்கு மேல் எழுதுவதில்லை என்று யாருக்காவது சத்தியம் செய்து கொடுத்திருக்கிறீர்களா?

பொறுமையைச் சோதிக்கத் தான் வேண்டும் அதற்காக இப்படியா........

  • கருத்துக்கள உறவுகள்

கதை சுவாரசியமாய் நல்லாய் போகிது நிழலி. பேரீட்சை பூக்கள் எண்டுறது டுபாயில இருக்கிற டுபாக்கு பெண்களோ?

கலைஞனுக்கு வந்த சந்தேகம் எனக்கும் வருகுது ,

அது என்ன டுபாக்கு ......... கற்பு உள்ளவர்களையா குறிப்பது . :lol::):rolleyes:

  • தொடங்கியவர்

அங்கம் 4: எரிக்காத வெயில்

நான் வந்திறங்கிய காலப் பகுதி கடும் வெயில் காலம். வெயில் என்றால் சும்மா வெயில் அல்ல...கிட்டத் தட்ட 55 பாகை செல்சியஸ் வெப்ப நிலை இருக்கும் ஜூன் மாத நடுப் பகுதி. கொடிய Summer காலம். நான் ஏதோ யாழ்ப்பாணத்தில வரும் வெயில் போல இருக்கும் என்ற நினைப்பில் தான் போய் இறங்கினன். போய் இறன்கிய நேரம் ஒரு காலை நேரம் என்பதால் பெரிய அளவில் உணரவில்லை

மதியம் வந்தது...பசியும் வந்தது. 3 நட்சத்திர விடுதியில் உணவு வாங்கி உண்ணும் அளவுக்கு நிதி நிலை இருக்கவில்லை என்பதால் ஷேர்ட்டை மாட்டிக் கொண்டு வெளியே போகத் தொடங்கினேன்.

ஒரு மூன்று நிமிடம் நடந்து இருப்பன். போறணைக்கு பக்கத்தில் நின்றால் உடம்பு சூடாகுவது போல் உடல் முழுக்க சூடு ஏறத் தொடங்கியது. நடு மண்டையில் நச் சென்று சூரியன் வந்து குந்தி இருந்து எகத்தாளமாக சிரிப்பது போல ஒரு உணர்வு. மூன்று நிமிடத்தில் கடந்த தூரத்தை முப்பது செக்கனில் ஓடிக் கடந்து மீண்டும் விடுதிக்கே வந்து விட்டேன்.

UAE வெக்கை இலங்கையில் இருக்கும் வெக்கை போன்றோ அல்லது கனடா summer வெக்கை போன்றோ இல்லை. எவ்வளவு வெயில் வந்தாலும் வியர்க்காது. கச கச என்று இருக்காது. அடுப்புக்கு பக்கத்தில் நிற்பது போல் உஷ்ணக் காற்று அடிக்கும். என்னைப் போன்ற நல்ல தங்க நிறமான ஆக்கள் (யாழ் களத்தில் உள்ள அனேகம் பேரை நிச்சயம் சந்திக்க மாட்டன் என்ற துணிவு இருக்கு...என்னை நேரில் பார்த்தவர்கள் தம் திருவாயை மூடிக் கொள்ளவும்) எவ்வளவு வெயில் அடித்தாலும் கறுக்க மாட்டினம். கையில் முட்டையுடன் போனால், நடு வீதியில் வைத்து பொரியள் செய்து சாப்பிடலாம். 10 நிமிடம் தலையில் தொப்பி அல்லது துண்டு போடாமல் போனால், உச்சம் தலை வெடித்து சாவு வருவது நிச்சயம். தொப்பி போட்டு நடந்தால் 30 நிமிடத்தில் உடலில் உள்ள நீர் முடிவடைந்து dehydrate ஆகி இறக்க நேரிடும். ஆனால் அந்த வெயிலிலும் தலையில் பெரிய துண்டு போட்டுக் கொண்டு கட்டிடங்களின் மீது ஏறி நின்று வேலை செய்யும் கூலித் தொழிலாளிகளை காண முடியும். அவர்களில் அநேகமானோர் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற தென்னாசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான். தொழிலாளிகளின் இரத்ததினை உறிஞ்சி எந்தவிதமான அடிப்படை உரிமையும் கொடுக்காத இரக்கமற்றா நாடுகளில் UAE யும் ஒன்று.

திரும்பி விடுதிக்கு வந்தபின், ஒருவாறு அருகில் உள்ள இலங்கை உணவு விடுதியில் தொலைபேசி இலக்கம் பெற்று ஓர்டர் செய்து சாப்பிட்டேன். நான் தங்கி இருந்த விடுதியில் கிட்டத் தட்ட என் சக அலுவலக ஆட்கள் 30 பேர் வரையில் தங்கி இருந்தனர். அவர்களில் அநேகமானோர் சிங்களவர்கள். ஒரு சிலர் தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள். ஆனால் முதல் நாள் என்பதால் என் முஸ்லிம் நண்பன் ஒருவனைத் தவிர வேறு எவரையும் தெரியாது. எனக்கு தெரிந்த இந்த நண்பன் மூலம் தான் இந்த (கொழும்பு) கம்பனியில் வேலை கிடைத்தது. நாம் இருவரும் ஏற்கனவே வேறு ஒரு கணினி மென் பொருள் தயாரிக்கும் கம்பனியிலும் ஒன்றாக வேலை பார்து இருந்தோம். அவனும் டுபாய் வந்து ஒரு வாரம் தான் ஆகி இருந்தது

நானும் அவனும் சேர்ந்தால் ஒரு பெரிய வங்கியை கூட சத்தமில்லாமல் கொள்ளை அடிக்க கூடியவர்கள் என்பது பலருக்கு தெரியாத விடயம். அப்பாவி முகத்துடன் திரியும் படுபாவிகள் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அந்த ஒரு சிலரில் பலர் பெண்கள் என்ற உண்மையை உங்களுக்கு நான் சொல்லப் போவதில்லை.

அன்றிரவு அந்த நண்பன்..அவனை 'ஷான்' என்றே இனி அழைக்கின்றேன்...என் அறைக்கு வந்து, மச்சான் Balcony க்கு போய் வெளியே பார் என்றான்.

வெளியே அற்புதமான விளக்கு வெளிச்சத்தில் 'இம்பீரியல்' இரவு விடுதியும் அதனை சுற்றி தேவலோகத்தில் இருந்து நேராக வந்து உதித்த போன்ற அழகு மங்கையரும் நின்று கொண்டு இருந்தனர்.

போவோமா என்று கேட்டான்

நான் அதற்கு...

(தொடரும்...)

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா அங்கம் 3 அசத்திட்டு.மிகுதி எப்போ.....? சின்ன ஒரு கவலை அண்ணா உங்கட பேயருக்கு பக்கதில் இருப்பவரைக்காணத்தான் கொஞ்சம் கண் கூசுது . :rolleyes::) அண்ணா.ஆதிகால மனிதரின்ட நினைப்பு வருகிறது.ம்ம்ம்.... :lol::)

யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்

போவோமா என்று கேட்டான்

:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.